Wednesday, May 13, 2009

பரிசல், ராமலக்ஷ்மி இன்னும் பலருக்கும் வாழ்த்துக்கள்!

இன்று வலையுலக நண்பரும் எழுத்தாளருமான அண்ணன் பரிசலாருக்கு பிறந்தநாள். அவருக்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வால் பையன் சொன்னது போல் இந்த வயசிலும் இளமையுடன் சுறுசுறுப்பாக இருக்கும் யூத் ஐகான் பரிசலார் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வுடன் திகழ வாழ்த்துக்கின்றோம்... ;-))

*******************************************************

பரிசலாரின் சிறுகதை இந்தவார ஆனந்தவிகடனில் வருகின்றதாம். அதற்கும் ஒரு சிறப்பான வாழ்த்துக்கள்.

*******************************************************


பெங்களூரூவைச் சேர்ந்த கவிஞர் ராமலக்ஷ்மி அக்காவின் முதல் சிறுகதை அச்சு இதழான கலைமகள் மாத இதழில் வெளி வந்துள்ளது. இதுவரை அவரது அழகான கவிதைகள் மட்டுமே அச்சு இதழ்களில் வந்த நிலையில் முதன் முதலாக அவரது சிறுகதை கலைமகள் இதழில் வந்ததில் நாம் அனைவரும் பெருமை அடைகின்றோம். அச் சிறுகதையைப் படிக்கவும் ,வாழ்த்தவும் இங்கே செல்லவும்.
http://tamilamudam.blogspot.com/2009/05/50.html

அவரது முத்துச்சரம் இணையதளம் 50 பதிவுகளை தொட்டுள்ளது. தேர்ந்தடுத்த பதிவுகளால் முத்துக்கள் போல் கோர்க்கப்பட்ட சரமாக இருக்கும் முத்துச்சரம் மேலும் இது போல் பல படைப்புகளைக் காண வாழ்த்துகின்றோம்.

*******************************************************

சக பதிவர்கள் நர்சிம், மற்றும் அதிஷா ஆகியோரின் படைப்புகள் சென்ற வார ஆனந்த விகடனில் வெளி வந்துள்ளது. அவர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்.

*******************************************************

பதிவர்களின் கூட்டங்கள் பொதுவாக இணையம் தொடர்பானதாகவே இருக்கும். முதன் முறையாக ‘நல்ல தொடல்! கெட்ட தொடல்’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்படும் பாலியல் மற்றும் மனோத்துவ ரீதியான பாதிப்புகளைப் பற்றி அலசி ஆராந்து, கலந்துரையாடிய ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் நடைபெற்றது.

ஆரோக்கியமான இந்நிகழ்ச்சிக்கு வித்திட்ட, ஒருங்கிணைத்த, நடத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றிகளும், வாழ்த்துக்களும்... :)

*******************************************************
மேற்க்குறிப்பிட்டவை அனைத்தையும் ஏனோ நாங்களே செய்தது போன்ற பூரிப்பையும், பெருமையையும் தந்தது. கொஞ்சம் இறுமாப்பு என்று கூட சொல்லலாம்... எங்களை எல்லாம் ஒரே நல்ல நேர்கோட்டின் கீழ் இணைய உதவிய இணைய உலகிற்கும், தமிழ் மணத்திற்கும் சிறப்பு நன்றிகள்.

*****************************************************

சரி.. சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. இன்னைக்கு நம்ம ஊர்ல தேர்தல்.ஓட்டுப்ப் போட்டாச்சா? நமக்கு இருக்கும் ஒரே ஜனநாயகக் கடமை அதுதான்.. எல்லாம் போய் எந்த சால்சாப்பும் சொல்லாம ஓட்டுப் போட்டுட்டு வாங்க... நல்லதே நடக்கும். ஓட்டுப் போட்டு விட்டு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

23 comments:

ஆயில்யன் said...

நிறைய இனிப்பான செய்திகள் இந்த பதிவில் சொல்லியிருக்கீங்க!

எல்லாருக்கும் வாழ்த்துக்கள் !

இன்னும் பலர் பதிவுலகிலிருந்துக்கொண்டே அச்சு உலகிலும் அடியெடுத்து வைக்க வாழ்த்துக்கள்!

ஆயில்யன் said...

//ஒரே ஜனநாயகக் கடமை அதுதான்.. எல்லாம் போய் எந்த சால்சாப்பும் சொல்லாம ஓட்டுப் போட்டுட்டு வாங்க... நல்லதே நடக்கும்//


ஹப்பாட்டா தம்பி பொதுநல கருத்தா ஓட்டு போடறதை பத்தி சொல்லியிருக்கு!

தமிழ்மணத்துலயும் தமிழிஸ்லயும்ன்னு தான் ஓட்டு போடுங்கன்னுசொல்லுதோன்னு நான் நினைக்கல :))))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

//ஒரே ஜனநாயகக் கடமை அதுதான்.. எல்லாம் போய் எந்த சால்சாப்பும் சொல்லாம ஓட்டுப் போட்டுட்டு வாங்க... நல்லதே நடக்கும்//


ஹப்பாட்டா தம்பி பொதுநல கருத்தா ஓட்டு போடறதை பத்தி சொல்லியிருக்கு!

தமிழ்மணத்துலயும் தமிழிஸ்லயும்ன்னு தான் ஓட்டு போடுங்கன்னுசொல்லுதோன்னு நான் நினைக்கல :))))///

அட ஆமா.. மறந்துட்டேன்.. எல்லாம் ஒழுங்கா தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டு போட்டுட்டும் போயிடுங்க. நன்றி!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டாச்சு

தமிழ் said...

வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

நன்றி:)! அதிகமாகவே புகழ்ந்து விட்டிருக்கிறீர்கள். கதைகள் மட்டுமின்றி கவிதைகளும் இதுவரை இலக்கியப் பத்திரிகைகளில் மட்டுமே வந்துள்ளன. முயற்சியின் விளைவாக முதன் முறையாக இப்போதுதான் பிரபல பத்திரிகையில். பதிவிட்டு வாழ்த்தி மகிழும் உங்கள் அன்புக்கு மறுபடி நன்றி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்பிரியன் நானும் இங்க வாழ்த்திக்கிறேன் எல்லாரையும்..:)

வால்பையன் said...

என் வாழ்த்துகளையும் இங்கே சேர்த்துகிறேன்!

ஒரே கூட்டமா இருக்கு!
வெயில் வர்றதுகுள்ள ஓட்டு போட்டுட்டு வரணும்

Iyappan Krishnan said...

தமிழ்பிரியன் இங்கயே வாழ்த்திக்கிறேன் எல்லாரையும்..:)

Unknown said...

அண்ணன் பரிசலாருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு என்னால் ஓட்டு போடமுடியவில்லையே அண்ணன்...:-)

cheena (சீனா) said...

அன்பின் பரிசலாருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் - ஆனந்த விகடனில் அவரது சிறு கதை வருவ்வதற்கும் சிறப்பு வாழ்த்துகள்

ராமலக்ஷ்மியின் கதை கலைமகளில் பிரசுரம ஆனதற்கும் நல்வாழ்த்துகள் - 50 வது பதிவிற்கும் நல்வாழ்த்துகள்

நர்சிம்- அதிஷா ஆகியோரின் படைப்புகள் பிரசுரமானதற்கும் நல்வாழ்த்துகள்

நல்ல தொடல் கெட்ட தொடல் - மருத்துவர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் பதிவர்களால் சென்னையில் நடத்தப்பட்டது மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது - அமைப்பாளர்களுக்கு நன்றி

தேர்தலிலும் ஓட்டுப் போட்டு ஜனாநாயகக் கடமையினைச் செய்து விட்டேன் - இங்கும் ஓட்டுப் போடுகிறேன்

நல்வாழ்த்துகள் தமிழ் பிரியன்

பட்டாம்பூச்சி said...

எல்லாருக்கும் வாழ்த்துக்கள் !

Subash said...

என் வாழ்த்துகளையும் இங்கே சேர்த்துகிறேன்!

ராஜ நடராஜன் said...

ஒரே நாள் திருவிழாவா?அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

பரிசல்,ராமலக்ஷ்மிக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

பரிசலுக்கும்,ராமலக்ஷ்மிக்கும் என் வாழ்த்துகளையும் இங்கே சேர்த்துகிறேன்!

Thamira said...

மேற்க்குறிப்பிட்டவை அனைத்தையும் ஏனோ நாங்களே செய்தது போன்ற பூரிப்பையும், பெருமையையும் தந்தது. கொஞ்சம் இறுமாப்பு என்று கூட சொல்லலாம்... //

நிஜம் தமிழ்பிரியன்.!

தமிழன்-கறுப்பி... said...

எல்லாத்துக்குமா சேர்ந்து மொத்தமா ஒரு பெரிய வாழ்த்து!

நல்லாருங்கப்பா...

அமிர்தவர்ஷினி அம்மா said...

எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

ஓட்டு போட்டாச்சு, தமிழ்மணத்துல இல்ல.

geevanathy said...

எல்லாருக்கும் நல்வாழ்த்துக்கள் !

பரிசல்காரன் said...

//மேற்க்குறிப்பிட்டவை அனைத்தையும் ஏனோ நாங்களே செய்தது போன்ற பூரிப்பையும், பெருமையையும் தந்தது.//

பேச வார்த்தைகளில்லை தமிழ்பிரியன். நன்றி சொல்லி அந்நியப்படுத்தவும் விருப்பமில்லை.

என் அன்பு.

தேவன் மாயம் said...

பரிசல்,ராமலக்‌ஷ்மி இருவருக்கும் வாழ்த்துக்கள்!!

நானானி said...

பரிசலாருக்கும் ராமலக்ஷ்மிக்கும் என் வாழ்த்துக்களை இங்கே சொல்லிக்கீறேன்.