உயிருள்ள மீன் தொண்டையில் சிக்கி புதுமாப்பிள்ளை சாவு
திருவனந்தபுரம், ஜன. 25-கேரள மாநிலம் ஒற்றப்பாலம் அருகில் உள்ள பெரிந்தால் மண்ணா தாழேக்கோட்டைச் சேர்ந்தவர் முகமது. இவருடைய மகன் அப்துல் காதர் (வயது25). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், திருமணத்திற்காக சில மாதங்களுக்கு முன்பு கேரளா திரும்பினார். கடந்த 6-ந் தேதி, எடைக்கல்லைச் சேர்ந்த கமருன்னிசா என்ற பெண்ணுக்கும் அவருக்கும் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் அப்துல் காதர் தனது நண்பர்கள் 5 பேருடன், மங்கரையில் உள்ள பாரதப்புழை ஆற்றில் மீன் பிடித்தார். அப்போது வலையில் சிக்கிய ஒருமீனை எடுத்து தனது வாயில் பற்களால் கவ்விப்பிடித்தவாறே, மற்றொரு மீனை வலையில் இருந்து எடுக்க முயன்றார்.
அப்போது, வாயில் இருந்த மீன் துடிதுடித்ததால், பிடி நழுவி அது அப்துல் காதரின் வாய்க்குள் சென்றது.அந்த மீன் தொண் டையில் சிக்கி அப்துல் காதருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால்அவர் அதே இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந் தார்.
செய்தி : தினத்தந்தி