Saturday, November 28, 2009

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.

பதிவு எழுதி கண நாளாகி விட்டது. அவ்வப்போது பதிவு எழுத வற்புறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி.. நம்மையும் இந்த உலகம் நம்புதேய்யான்னு இருக்கு.. ;-)))


3 நாட்களுக்கு பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாளுக்கான விடுமுறை. இப்போது தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கிறேன். தியாகத் திருநாளில் தங்களால் இயன்றதை இறைவனுக்காக அறுத்து, ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் பங்கு செய்து கொடுக்க வேண்டும். தியாகத் திருநாளின் நாட்களில் மெக்காவில் உள்ள இடங்களில் ஹாஜிகள் தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்ற இருப்பார்கள்.

இவை அனைத்தும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகங்களையும், அவர்களது குடும்பத்தினரின் தியாகங்களையும் நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளவை. ஒரு சராசரி மனிதனால் செய்ய இயலாத தியாகங்களை இப்ராஹீம் நபி அவர்கள் செய்தார்கள்.

இறைவனின் கட்டளைப்படி தனது மனைவியையும், மகன் இஸ்மாயிலையும், பாலைவனத்தில் அமைந்துள்ள, எந்த மனித சஞ்சாரமும் இல்லாத இடத்தில், தண்ணீர்,உணவு வசதிகள் இல்லாத இடத்தில் விட்டு விட்டு வந்து விடுகின்றார். இறைவன் அவரது மனைவியும், தனது குழந்தையுடன் அங்கே தங்க சம்மதித்து கணவனை அனுப்பி விடுகின்றார்.

குழந்தை பசியால் துடிதுடிக்க தாய் தண்ணீர் தேடி அந்த குன்றுகளில் ஓடித் தேடுகின்றார். குழந்தை பசியில் கால்களை உதைத்து அழ அங்கு இறைவனின் அருளால் ஊற்று ஒன்று உருவாகின்றது. இதைக் கண்ட அந்த தாய் அந்த ஊற்றை மண்ணால் அரண் கட்டி ஜம், ஜம் (நில், நில்) என்று சொல்ல அதுவே இன்று ஜம்ஜம் கிணறாகி மாறி தண்ணீரை வாரி வழங்கி வருகின்றது. அந்த தாயின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஹாஜிகள் ஜம்ஜம் தண்ணீர் அருந்துகின்றனர். இரு குன்றுகளுக்கு இடையில் ஓடுகின்றனர்.(ஸயீ)

தண்ணீர் இருக்கும் இடத்தை தேடி பறவைகள் வர, அவைகளைக் கண்டு பிரயாணிகளும் வர அந்த வனாந்திரம் புதிய நகரமாக உருவாகின்றது. அதுதான் மெக்கா. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்ராஹீம் நபி அவ்விடம் வர அங்கு ஒரு ஊரே இருக்கின்றது. ஆண்டுகள் பல கழிந்தாலும் அவர் வந்ததன் நோக்கம் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற... அது என்ன கட்டளை. மகனை நரபலி கொடுக்க வேண்டும் என்பதே.

தனது தந்தை சொன்னதைக் கேட்ட அந்த வாலிப மகன் இஸ்மாயில் உடனே தயாரிகின்றான். ஏனெனில் கட்டளை அனைவரையும் ரட்சிக்கும் இறைவனின் புறத்தில் இருந்து வந்ததாயிற்றே... பலி கொடுக்கும் நேரம் இஸ்மாயிலின் இடத்தில் ஒரு ஆடு பலி கொடுக்கப் படுகின்றது. இறைவன் இப்ராஹீம் (நபி) தனது கட்டளை நிறைவேற்ற துணிந்த சிறந்தவராக ஏற்றுக் கொள்கின்றான்.

இதனால் தான் தியாகத் திருநாளில் பலிப் பிராணி அறுத்து ஏழைகளுக்கு உணவுக்காக அளிக்கப்படுகின்றது. பலி கொடுக்கும் அனைவரும் நிச்சயமாக மனதில் கொள்ள வேண்டியது இதுதான்.
“அல்லாஹ்வை அதன் மாமிசமோ, இரத்தமோ சென்றடையாது. மாறாக உங்களிடம் உள்ள இறையச்சம்தான் சென்றடையும்”
திருக்குர்ஆன் 22:37 வசனம்


அந்த தியாகங்களின் உள் நோக்கம் முற்றிலும் இறை ஆற்றலுக்கு வழிப்பட்டு நடப்பது. இந்த தியாகத் திருநாளிலும் அத்தகைய ஒரு நோக்கத்தை மனதில் கொண்டு இறைவன் நமக்கு அளித்துள்ள அளப்பரிய கிருபைகளுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாக மாற வேண்டும். உலக மக்கள் அனைவரிடமும் நல்ல பண்புடனும், அன்புடன் நடந்து கொள்ளவும் மனிதில் கொள்வோம்.




நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள். தியாகத் திருநாள் மூலம் நல்லவைகளை அடைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

...

Wednesday, October 28, 2009

புதிய புதிய... எல்லாம் புதியவை




மக்களே எல்லாம் நல்லா இருக்கீங்களா? கணிணிப் பக்கமே வந்து பல நாட்களாச்சு.. புது வேலை, புது இடம், புது மனிதர்கள், புதிய சவால்கள்.. ஆனா ஆள் மட்டும் அதே ஆள் தான்... நல்லபடியா புது வாழ்க்கைப் போய்க் கொண்டு இருக்கின்றது. வீட்டிலும் ஒரு புது மெம்பர்... வழக்கம் போல் இரவில் விழித்து பகலில் தூங்குகின்றாள்.




செல்லிடை பேசியில் ரீடரில் மட்டும் சில பதிவுகளைப் படித்து வருகின்றேன்.. தமிழ் பதிவுகள் படிக்க முடியாத நாட்கள் என்பவை மிகவும் கடினமான நாட்களாக உணர முடிகின்றது. அருகில் இருக்கும் ஆயில் அண்ணனை அவ்வப்போது சென்று சந்திக்க முடிகின்றது. ஊரில் மகனையும், மகளையும், மிஸ் செய்வதை உணர முடிகின்றது. மகள் பிறந்த போது அனைத்து கணங்களிலும் உடன் இருந்தது மறக்க முடியாத நினைவுகள்.






மகள் பிறந்த சில மணித் துளிகளில் மகனின் கையில்

இன்னும் சில தினங்களில் புது சவால்களின் அழுத்தம் குறைந்தது அனைத்தும் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம். சர்வேசனின் நச் கதைப் போட்டிக்கு ஒரு கதை ரெடியாக இருக்கின்றது.. மனதில்... :) எப்போது எழுத முடியும் என்று தெரியவில்லை... அனைத்து நண்பர்களின் வாழ்த்துக்களுக்கு, தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கும் நன்றிகள்.


அன்புடன்
தமிழ் பிரியன்

Friday, August 28, 2009

விடைபெறுகின்றேன்.. நன்றி அறிவிப்புடன்.

விடை பெறுகிறேன் என்றதும் குதித்து கும்மாளம் போடுபவர்கள் அமைதியாக முழுவதும் படிக்கவும். இது ஒன்லி சிறு இடைவெளி தான். சீக்கிரமே திரும்ப வந்து விடுவேன். அதனால் நிறைய சந்தோசப்பட வேண்டாம்.. ஹே ஹே ஹே.. :))

சவுதியில் வேலையை விட்டு விட்டு விடைபெறும் நேரம் வந்து விட்டது. மூன்று ஆண்டுகள் இங்க குப்பை கொட்டியாச்சு.. கிட்டத்தட்ட ராஜபோக வாழ்க்கை.. சும்மா இருப்பதற்கு மாசமான சம்பளம் கொடுத்து, ஓசியில் சாப்பாடு போட்டு, சொகுசாக தங்க இடம் கொடுத்து, வருடா வருடம் 2 மாதம் லீவ் கொடுத்து… Thank You Saudi Oger Ltd.

(அதன் விளைவு கொஞ்சம் தொப்பையும், சோம்பேறித்தனமும்... இனி அடுத்தகட்ட பரபரப்பான ஒரு வேலையை நோக்கி தயாராகிக் கொண்டு இருக்கின்றேன். )

முதல் வருடம் செம போர். தமிழ் பேசுபவர்கள் விரல் விட்டு எண்ணி விடக் கூடியவர்களே.. அவர்களும் நம்முடன் பேசும் அளவுக்கு அலைவரிசையில் இல்லை. அடுத்த ஆண்டு தமிழ் இணையம் அறிமுகமானது. மிக மகிழ்ச்சியான வாழ்க்கை.

தமிழ் மணம் வழியாக தமிழ் பதிவுலகில் நுழைந்ததும் புதிய உலகம் ஒன்று தெரிந்தது. வாழ்வு முழுவதும் ஒரு தேடல் பாக்கி இருப்பதாகவே எனக்கு படும். அது என்னவென்று புரியாமல் இருந்ததற்கு விடை….. வாசிப்பு. வாசிப்பின் இன்பமே அலாதி. எதை வாசிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டித் தந்த தமிழ் மணத்திற்கு மிக்க நன்றி!. ஆனால் இன்னும் அதிகப்படியாக வாசிக்க சந்தர்ப்பங்கள் தோதுவாக அமையவில்லை. இனி அமையும் என எதிர்பார்க்கலாம்.

எழுதுவது என்பது என்னை அவ்வளவாக கவரவில்லை. வாசிப்பின் வடிகாலாக எழுதுவதை வைத்திருக்கவே எண்ணினேன். என் எழுத்துக்கள் எதுவும் என்னைக் கவரவில்லையாதலால் வாசிப்புடன் நிறுத்திக் கொள்ளவே ஆசைப்படுகின்றேன்.

தமிழ் இணையத்தில் வழியாக கிடைத்த மிகப் பெரிய சொத்து நண்பர்கள். தனிமையுடன் வாழ்ந்தேன் என்று சொல்வதன் அர்த்தம் நல்ல நண்பர்கள் கிடைக்கவில்லை என்பதோ, அல்லது நண்பர்களை என்னால் தக்கவைக்க இயலவில்லை என்பதோ தான். ஆனால் இணைய வழி நண்பர்களின் உலகம் புதிதாக இருந்தது. முகம் தெரியாதவர்கள், பாலினம் எது என்று உறுதியாக சொல்ல முடியாதவர்கள், ஆனால் தமிழர்கள் என்ற ஒரு பிணைப்பால் மட்டும் கட்டுண்டோம்.

அண்ணனாகவும், தம்பியாகவும், அக்கா, தம்பி, அம்மா,அப்பா என முகம் தெரியாத உறவுகள். அனைவரிடமும் இருக்கும் உண்மையான அன்பு. சாட்டிங் தாண்டி, தொலைபேசி வழியான உரையாடல்களாகவும் மலர்ந்த நேசங்கள். சில பெண் பதிவர்களை நம்பால் போன் பேசி நம்பிய சில தருணங்கள்… ;-)). என் மீது நம்பிக்கை வைத்திருந்த பல பதிவர்கள் மற்றும் புதிய உலகத்தைக் காட்டிய நட்புகளுக்கு ஆனந்தக் கண்ணீருடனான நன்றிகள்.

முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டி விரும்பினேன். பதிவுலக சகோதரி ஒருவருடைய வீட்டில் முக்கியமான விசேசம். போனில் பேசும் போது “ அண்ணா! அந்த நேரத்தில் நீங்களும் இங்க இருந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்” என்று சொன்ன போது சடாரென்று கண்களில் உகுத்த கண்ணீரை மறக்க இயலாது. என் இரத்த உறவுகளில் கூட யாரும் என்னிடம் இப்படி சொல்லிக் கேட்டதில்லை… ;-) நன்றிடா!!

ஓரிரு தினங்களில் இந்தியாவுக்கு கிளம்புகின்றேன். பதிவுகளுக்கு தான் வர முடியாது. வழக்கமான மெயில் மொக்கைகள், போன் மொக்கைகளைத் தொடரலாம். எங்கள் ஊரைச் சுற்றி இருப்பவர்கள் பொழுது போகவில்லையெனில் நேராகவே வந்து மொக்கை போடலாம். (தேனி, மதுரை (எங்க ஏரியா) மற்றும் நெல்லை, குமரி (தங்கமணி ஏரியா) மாவட்டத்துக்கு முன்னுரிமை..ஹிஹிஹி). )

இறைவன் நாடினால் சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது இருந்ததை விட ஒரு சிறந்த வேலையில் சேரவிருக்கின்றேன். என்றும் போல் உங்களது வாழ்த்துக்களுடன்… :)

அதற்குப் பிறகு மீண்டும் பதிவுலகில் சந்திக்கலாம்.

அன்புடன்

தமிழ் பிரியன் @ Jinnah.

dginnah@gmail.com

Monday, August 24, 2009

"And, Now..."


எப்போது வேண்டுமானாலும் செயின் கழன்று விடும்
சைக்கிள் ஒன்று என்னிடம் இருந்தது.
பெண்கள் பள்ளிக்கு செல்லும் வழியில்
சைக்கிள் செயின் மாட்டும் தோரணையில்
சைக்கிள் கேப்பில் பிகர் வெட்டிக் கொண்டு இருப்பேன்.

வெகு சுவாரஸ்யமாக இருந்தது அந்த வாழ்க்கை!

எப்படியோ செயின் கழன்று விழுவது நின்று போனது ஒரு சுபமுகூர்த்தத்தில்
அன்றே அந்த பிகரும் வேறு ஒருவனை கூட்டிக் கொண்டு
போய் விட்டாள் இந்தியாவை விட்டு

Saturday, August 22, 2009

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஏன்?


இன்று முதல் உலகின் பல பிரதேசங்களில் ரமழான் மாதம் தொடங்கி விட்டது. இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் ரமழான் மாதம் முழுவதும் பகல் முழுவதும் நோன்பு இருந்து, திருக்குர் ஆனை அதிகமான ஓதி, இரவு நேரங்களில் அல்லாஹ்வை வணங்கி இறை தியானத்தில் ஆழ்ந்திருப்பர்!.

நோன்பு என்பதை இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் பின்பற்றுகின்றனர். பொருளாதாரம், சமூக அந்தஸ்து, வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் நோன்பு நோற்கின்றனர். வயதானோர், நோயுள்ளவர்கள், சிறுவர், சிறுமிகள், மாதவிடாய் நேர பெண்கள், சமீபத்தில் பிரசவித்தவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

நோன்பு நோற்பதால் என்ன பயன்? பசியின் அருமையை நோன்பில் உணர்ந்து கொள்வார்கள் என்பதா? அப்படியானால் தினசரி ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாடுபவன் ஏன் நோன்பு நோற்க வேண்டும்.... நோன்பு நோற்க வேண்டியதன் காரணத்தை அல்லாஹ் தெளிவாக எடுத்துரைக்கின்றான்.



يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ


ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் இறையச்சம் உடையோராக ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)


நோன்பு நோற்பதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையோராக (முத்தக்கீன்களாக) மாறலாம் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு என்பது என்னவென்று வரையறுத்தால் ரமழான் மாதம் முழுவதும் காலை முதல் மாலை வரை சுமார் 13 மணி நேரம் உண்பது, குடிப்பதை விட்டு விட வேண்டும். இச்சைகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கெட்ட செயல்களில் இருந்தும், கெட்ட பேச்சுகளில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இறையச்சம் வர இயலுமா? இயலும். மனிதனால் அடக்க இயலாதவைகளில் முக்கிய இடம் வகிப்பவை பசியும், தாகமும், இச்சையும். நோன்பு நேரங்களில் இவைகளை அடக்குவதன் மூலம் மனிதனின் மனம் செம்மைப்படுகின்றது. மனிதனுக்கு அரசோ, சமூக அமைப்புகளோ கட்டுப்பாடுகளை விதிக்கும் போது யாரும் பார்க்காத நிலையில் அவன் கட்டுப்பாடுகளை மீறத் துணிகின்றான். ஆனால் நோன்பு இருக்கும் போது நம்மை அல்லாஹ் எங்கு சென்றாலும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறான் என்ற நினைவிலேயே இருந்து பசி, தாகம், இச்சைகளை அடக்குவதன் மூலம் மனிதன் ஒரு சுய கட்டுப்பாடான நிலைக்கு வருகின்றான்.

இந்த இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் என்ற மாண்பு மனிதனை இறையச்சம் உடையவனாக மாற்றுகின்றது. அதே போல் கெட்ட நடத்தைகள், கெட்ட பேச்சுகளையும் விட்டு விலகி இருக்க வேண்டும் என்ர எண்ணத்தை உருவாக்குவதன் மூலம் மனிதனை செம்மையாக்கி சமூகத்திற்கு தரக் கூடியதாக நோன்பு மாறி விடுகின்றது. கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விடாதவர்கள் நோற்பது நோன்பாகாது. அது வெறும் பட்டினி என்பதிலேயே சாரும்.

இந்த இனிய ரமழான் மாதம், வருடத்திற்கு ஒரு முறை வரும் பயிற்சிக்களம் உன்பதை உணர்ந்து நல்லமுறையில் நோன்பு நோற்று இறைவனின் அருளைப் பெறுவோமாக!


1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

2) எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ, இப்னுமாஜா
3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

அனைவருக்கும் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்!

மீள் பதிவு.


..

Tuesday, August 11, 2009

பாரி ஒரு நிஜமான வள்ளலா? பா.கே.ப

கேட்டது:

இரண்டு நண்பர்களின் விவாதத்தைக் கேட்க நேர்ந்தது. விவாதம் WI-FI எனப்படும் கம்பி இல்லாத இணைய தொடர்பு பற்றியது. இங்கு WI-FI தொழில்நுட்பம் பெருமளவு பயன்படுத்தப் படுகின்றது. இப்போது கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான DSL மோடம்களில் ஒயர்லெஸ் வசதியும் இணைந்தே இருக்கின்றது.

WI-FI மூலம் பெரிய ஹோட்டல்களில், ஷாப்பிங் மால்களில், விமான நிலையங்களில் இலவசமாக இணைய இணைப்பு வழங்குவது அதிகரித்து வருகின்றது. அதே நேரம் ஒயர்லெஸ் வசதியுள்ள மோடம்களை வாங்கி பயன்படுத்தும் சாமானியர்களில் இணைய வசதியும் வெளியே கசிகின்றது. இதன் அலைநீளம் அவர்களை சுற்றி சில மீட்டர்கள் தூரம் வரை செல்கின்றது. இதை தடை செய்வது பற்றி விவரம் குறைவானவர்களில் இணைய வசதியை அவரது வீட்டைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

விவாதம் பெரிய அளவில் WI-FI வசதியை அளிப்பதைப் பயன்படுத்துவதைப் பற்றி அல்ல. தனது சுய பயன்பாட்டுக்கு மற்றவர்கள் வைத்து இருக்கும் இணையத்தை அவருக்குத் தெரியாமல் பயன்படுத்துவது குறித்து தான். ஒருவர் “இலவசமாக நம்மைத் தேடி காற்றில் வருகின்றதைத் தான் பயன்படுத்துகின்றோம். ஊரில் கசியும் கேபிள் டீவி சிக்னலை பயன்படுத்திக் கொள்வது போல் தான். இதில் தவறேதுமில்லை” என்கின்றார்.

மற்றவர் “இது சரியாகாது. அவர்களது இணைய இணைப்பிற்கு அவர் பணம் செலுத்துகின்றார். அவரது இணைய பயன்பாட்டு அளவில் கணிசமானதை நீங்கள் பயன்படுத்திக் கொள்கின்றீர்கள். நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அவரது இணைய இணைப்பின் வேகமும் பாதிக்கபடும்.” என்று விவாதம் செய்தார்.

இரண்டாமவர் சொல்லும் கருத்தோடு நான் ஒத்துப் போனேன். மற்றவர்களில் இணைய Bandwith ஐ அவருக்கு தெரியாமல் பயன்படுத்துவது, வீடு திறந்திருக்கின்றது என்பதற்காக அதனுள் நுழைந்து திருடுவது போன்றது.

படித்தது….

சீரியஸா அதை யோசிச்சுக்கிட்டே இருங்க… நான் உங்களை ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்கின்றேன். வினாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் என்னோடு கற்பனைக் குதிரையில் பிரயாணித்து பின்னோக்கி வாருங்கள். (நன்றி:கல்கி) நாம் இப்போது ஒரு மலையடிவாரத்தில் இருக்கின்றோம். மலை தெரிகின்றதா? கரடு முரடான மலை. அங்காங்கே தேனடைகள் தெரிகின்றதா? நாம் இருக்கும் இடம் பறம்பு மலை என்று சொல்லப்படும் பிரான்மலை. மேலே தெரிகின்றதே அந்த கோட்டையில் தான் பாரி என்று சொல்லப்படும் கடையேழு வள்ளல்களில் ஒருவர் இருக்கின்றார்.

மலையேறி அவரைப் பார்க்க முடியாது நம்மால.. எப்படியும் 7, 8 மி.மீ தூரம் நடக்கனும். அதெல்லாம் கவைக்கு உதவாது... இருங்க.. ஏதோ சத்தம் கேட்கிறதே.. என்னது? அட ஆமா.. குதிரைகளின் கனைத்தல்களும், யானைகளின் கேட்கின்றனவா? பாரியின் இந்த பறம்பு மலையை மூவேந்தர்களும் முற்றுகை இட்டு இருக்கின்றார்கள். அவர்களுக்குள் ஏதோ ஒரு பகை. பாரியை முற்றுகை இட்டு, எந்த உணவுப் பொருளும் மேலே செல்ல விடாமல் அக் குறிஞ்சி நில மக்களை பட்டினியால் அடக்க நினைக்கின்றனர்.

சரி.. மலையைப் பார்த்தது போதும். வாங்க நிகழ்காலத்திற்கு செல்லலாம். நம்ம கணிணியை திறந்து இணையத்திற்குள் தேடலாம். இது பற்றி.. நம்ம கூடல் குமரன் ஐயாவோட உடுக்கை இழந்தவன் கை என்ற பாரியின் கதையைப் படிக்கலாம். இது புறநானூற்றின் ஒளியில் எழுதப்பட்டுள்ளது. அதில் கபிலர் இதைப் பற்றி என்ன சொல்றாருன்னா…

அளிதோ தானே பாரியது பறம்பே
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே


இன்னா சொல்ல வருகிறார்ன்னா.. நீங்க மூவேந்தரும் என்ன செஞ்சாலும் இந்த மலையில் இருந்து அவர்களை கீழே வர வைக்க முடியாது. அதே போல் நீங்களும் இந்த மலை மேல ஏறிப் போய் போரிடவும் முடியாது. மலை முற்றுகை பட்டினிக்கும் வழி வகுக்காது. ஏன்னா இந்த மலையில் உழவர்களால் உழாமலேயே கிடைக்கக் கூடிய நான்கு உணவுப் பொருள் சுலபமா கிடைக்குது. 1. சிறிய இலையை உடைய மூங்கில் மரத்தில் வளர்க்கப்படும் நெல் 2. பலாப் பழங்கள் 3. வள்ளிக் கிழங்கு 4. தேன்.

இத்தோட முடிச்சிக்கலாம்… இப்ப என்ன பிரச்சினைன்னா வேற சில மேற்கோள்களில் முற்றுகையின் போது கபிலர் பழக்கப்படுத்த கிளிகளைப் பயன்படுத்தி விவசாய நிலங்களில் இருந்து தானியங்களை கொய்து வரச் செய்து, உணவு உண்டாதாக வருது. நிறைய இடங்களில் இது மாதிரி படித்து இருக்கேன். கபிலரே தெளிவாக சொல்லி இருக்கிறார். இந்த நான்கு வகை உணவுகளை வைத்து வாழ்கிறோம் என்று..

பாரி அள்ளி அள்ளித் தரும் வள்ளல். அவன் தனது கோட்டை மக்களுக்கு கிளிகள் திருடி வரும் உணவை எப்படி வழங்கி இருப்பான்? லாஜிக் உதைக்குதே… கபிலர் சொன்னது சரின்னா… இந்த கிளி மேட்டரு தப்பு. கிளி மேட்டரும் சரின்னா பாரி செய்தது ஏமாற்று வேலை அல்லது திருட்டுத்தனம். (கிளி மேட்டருக்கு தரவு இருந்தா கொடுங்க மக்களே)

கிளிகள் திருடி வருவது பாரியின் ஆளுகைக்கு உட்பட்ட நிலம்ன்னு யாரும் ஜால்ஜாப்பு சொல்ல முடியாது. ஏன்ன அது பற்றி கபிலர் இப்படிச் சொல்கிறார்.

கடந்தடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினர் செலினே"


அவனது ஆளுகையில் இருந்த 300 ஊர்களையும் ஏற்கனவே பரிசிலர்களுக்கு பாரி தானமாக வழங்கி விட்டான். மிச்சம் இருப்பது இந்த மலையும், நானும், பாரியும் தான் என்கிறார் கபிலர்.

கிளி மேட்டர் பலர் மேற்கோள் காட்ட படித்து இருக்கிறேன். இணையத்தில் தேடியதில் கிடைத்ததில் எடுத்துக்காட்டு இரண்டு.

http://www.nilacharal.com/tamil/research/tamil_literature_233.asp


http://www.dinamalar.com/siruvarmalar/smrjuly_0407/minithodar.asp


இது குறித்து தெரிந்தவர்கள் விளக்குங்கள்...

பார்த்தது:

லக்! (Luck)செம லக்குங்க.. உலகத்தில் சிலருக்கு தான் அதிர்ஷ்டக் காத்து எப்பவுமே அடிக்கும். அப்படிப்பட்ட சிலரை தேர்ந்தெடுத்து மோத விடுவது தான் படம். சும்மா ஜெட் வேகத்தில் போகுது. வழக்கம் போல நம்ம சஞ்சூ பாபா கலக்கி இருக்கார். சிக்ஸ் பேக், செவன் பேக் எல்லாம் காட்டல.. ஆனா கலக்குறார். சும்மா குர்தா, பைஜாமா, கோட் போட்டுக்கிட்டு நடந்து வருவதைக் காண கண் கோடி வேண்டும்.



இம்ரான் கானுக்கு பதிலா வேற யாருக்கு அந்த கதாபாத்திரத்தைக் கொடுத்து இருக்கலாம். சொதப்பிட்டார். ஸ்ருதி ஹாசன். நம்ம கமல் பொண்ணு. முக சாயலைத் தவிர வேற ஒன்னும் கமலிடம் இருந்து வரவில்லை. முக்கியமா நடிப்பு.

ஸ்ருதி நீச்சல் குளத்தில் இருந்து வரும் போதும், இன்னும் சில காட்சிகளிலும் பார்க்கும் போது ஏனோ பரிதாப உணர்ச்சி தான் வந்தது. வேற ஏதும் தோணலை.

லக்கியின் விமர்சனத்தையும் படிக்கலாம்.

Sunday, August 9, 2009

அரைக் கிறுக்கன் - உயிரோடைக்காக எழுத நினைத்தது.

இச்சிறுகதை உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுத வேண்டியது. ஏதோ ஒரு இங்கிதத் தடை(?) அல்லது கூச்ச அச்சம் இதை வெளியிட தடை செய்தது. போட்டிக்கான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில் சில வெட்டுக்களுக்குப் பிறகு இதை வெளியிட முடிவு செய்து விட்டேன். கவிதையோடு முழுதாக ஒத்துப் போகாததும் ஒரு காரணம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ப்பொழுதெல்லாம் என்னைக் கண்டதும் அவன் தன் முகத்தைத் திருப்பிக் கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. மார்க்கெட் போய் வரும் வழியில் தான் அவன் வேலை செய்யும் மளிகைக் கடை இருக்கின்றது. மூட்டைகளை அடுக்கி வைப்பது, அட்டைப் பெட்டிகளை கட்டி வைப்பது, கடைக்கு முன்னால் பெருக்குவது என்று ஏதாவது செய்து கொண்டு இருப்பான். நல்ல ஆடைகளும் உடுத்தி இருக்கின்றான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் சில நேரங்களில் பரிதாபமும், இன்னும் சில நேரங்களில் பெருமிதமும் ஏற்படுகின்றது.


தூரத்தில் வரும் போது என்னைப் பார்க்கும் அவன் அருகில் வந்ததும் எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு, ஏதாவது வேலை செய்ய ஆரம்பித்து விடுகின்றான். இன்று வரை அவனுக்கு என்ன பெயர் என்பது தெரியவில்லை. எல்லோரும் அவனை அரைக் கிறுக்கு என்றே கூப்பிடுகின்றனர்.

அவனை முதன் முதலில் சந்தித்த அந்த நாள் இன்றும் நினைவில் உள்ளது. இப்பொழுது இருப்பது போல் இல்லை அன்று அவன். கிழிந்த சட்டையும், பின்பக்கம் கிழிந்திருந்த டவுசருமாக உடல் முழுவதும் அழுக்காக, பரட்டைத் தலையுடன் வீட்டு கேட்டருகே நின்று கொண்டிருந்தான். சில சிறுவர்கள் கல்லை எடுத்துக் கொண்டு அவனைத் துரத்தில் என் வீட்டுக் காம்பவுண்டிற்குள் நுழைந்து இருக்கின்றான். பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தான்.

கொஞ்சம் இருங்கள்…. தெருவைக் கடப்பதற்கு முன் இந்த பகுதியைப் பற்றி சொல்லி விட்டு அவனைப் பற்றி பார்க்கலாம். இந்த தெருவில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்களாம். எதிர் வீட்டில் இருக்கும் ஒரு பத்தினி ஒருநாள் என் வீட்டு முன் நின்று கத்திக் கொண்டு இருந்த போது கூறியது இது. நான் தெருவில் செல்லும் போது ஜொள்ளு வடிப்பது ஆண்களுக்கும், பொறாமையில் முகத்தை தோள்ப்பட்டையில் இடித்துக் கொள்வது பெண்களுக்கும் வழக்கமான ஒன்றாகி விட்டது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டியது என் நிலைமையாகி விட்டது.

நான்… என்னைப் பற்றி என்ன சொல்ல?… பாலியல் தொழிலாளி என்று சொல்லவா? அல்லது தெருவில் பேசுவது போல் அசிங்கமான வார்த்தைகளில் சொல்லவா? ஒரு காஸ்ட்லியான விபச்சாரி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். இடமும், சுற்றுப்புறமும் மட்டும் தான் வேறு மற்றபடி எல்லாம் ஒன்றுதான்.

கோபம், தாபம், காமம், குரோதம், அகங்காரம், சோகம், விருப்பம், வெறுப்பு, தவிப்பு என பல மனநிலையில் வருபவர்களை இங்கு காணலாம். மனிதர்களில் பல வகை. சிலருக்கு அவசரத்திற்கு, சிலருக்கு கோபத்தைக் காட்ட, சிலருக்கு வெறுப்பை வெளிப்படுத்த, இன்னும் சிலருக்கு தங்களை பரீட்சார்த்த முயற்சிகளை சோதித்துப் பார்க்க… சரி போதும் அவனைப் பற்றிப் பார்க்கலாம்.

சிறுவர்களை விரட்டி விட்டு அவனைப் பார்த்தேன். ஓடி வந்ததால் மூச்சிரைத்துக் கொண்டு இருந்தான். சிறுவர்கள் அரைக் கிறுக்கன் என்று கத்திக் கொண்டு சென்றதில் தவறில்லையோ என்று தோன்றும் உருவம். தண்ணீர் என்று மெதுவாக முனங்குவது கேட்டது. வீட்டில் இருந்து சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். இங்கு வருபவர்களை இவன் நல்லவனாகத் தான் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

தண்ணீரை நெஞ்சில் சிந்த சிந்தக் குடித்தான். கொஞ்ச நேரம் இருந்து விட்டு சென்று விட்டான். அடுத்த இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. மூன்றாம் நாள் வந்து விட்டான். அதே கோலத்தில்.. இப்போது பசிக்குது பசிக்குது என்றான். சாப்பாடு போட்டேன். அன்று முதல் என் வீட்டின் முன் அமர்ந்து விட்டான். என் வீட்டிற்கு இரவில் வந்து செல்பவர்களை மலங்க மலங்கப் பார்த்தபடி அமர்ந்து இருப்பான்.சில நேரங்களில் மீதமான உணவைப் போடுவேன். எவனோ வந்து விட்டுவிட்டுப் போன வேட்டி சட்டையையும் கொடுத்தேன். சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு வேட்டியை அவன் உட்காரும் இடத்தில் விரித்து வைத்துக் கொண்டான்.

என்னிடம் வந்து விட்டு செல்லும் சிலர் அவனுக்கு 10, 20 என்று கொடுப்பார்கள். இங்கு வந்து செல்பவர்கள் தர்ம பிரபுக்களாக மாறி விடுகின்றனர். அவனைப் பற்றி கூறும் போது அச்சுதனைப் பற்றி கூறியே ஆக வேண்டும். அச்சுதனுக்கு 50,55 வயது இருக்கும். ஆலந்தூர் பக்கம் இரும்புக் கடை வைத்திருக்கிறார். கேரளாவின் ஒரு மூலையில் குடும்பம் இருக்கின்றது. எப்போது சென்று வருவார் என்று தெரியாது. ஆனால் என் வீட்டிற்கு வாரத்திற்கு இரண்டு முறையாவது இரவுகளில் வருவார்.

வித்தியாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் மனித ஜந்துக்களில் ஒருவர். அச்சுதன் வரும் போதெல்லாம் அவனுடம் ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவன் ஏதும் பதில் சொல்லாமல் அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பான். மற்றவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கும் அவன் அச்சுதன் கொடுப்பதை மட்டும் வாங்கவே மாட்டான்.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவர் பதற்றமடைவதைக் காண முடியும். சில நேரங்களில் வரும் போது பிரியாணி பொட்டலம் வாங்கி வந்து அவனுக்கு தருவார். அவர் திரும்பும் போது எதிரில் இருக்கும் குப்பைத் தொட்டியில் பிரிக்கப்படாத பிரியாணி பொட்டலம் கிடைக்கும். அச்சுதனை அவன் மிகவும் அழுத்தமாகப் பாதித்து இருந்தான். எப்படியாவது அவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்பது அச்சுதனுடைய ஆசை.

அன்று அச்சுதன் என்னிடம் உன்னுடன் அவனைப் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னதைக் கேட்டதும் என்னால் அதிர்ச்சி தாங்க இயலவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வந்து தினசரி அமைதியாக அமர்ந்து கொண்டு இதையே சொல்லிக் கொண்டு இருந்தார். முதலில் கோபமாக இருந்தாலும், சில நாட்களில் அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

அன்று அச்சுதன் வரும் போதே அவனை வீட்டிற்குள் அழைத்து வந்திருந்தார். அச்சுதன் பேச்சைக் கேட்டு வீட்டுக்குள் வரை வந்தது ஆச்சர்யமாக இருந்தது. அடுத்த பல நிமிடங்கள் நிறைய காரியங்களை செய்ய வேண்டி இருந்தது. அவன் வீட்டிற்குள் வந்த 55 வது நிமிடம் என் மீது சீராக இயங்கிக் கொண்டு இருந்தான். அச்சுதன் சிறிது தூரத்தில் நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நான் உச்சத்தை அடைந்து இருந்தேன். அவனது இயக்கம் வேகமாகி இருந்தது. அச்சுதனை பார்த்த போது கைகால்கள் நடுங்க உட்கார்ந்து இருந்தார். முகம் முழுவதும் வெளிறிப் போய் இருந்தது. உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டி இருந்தது. சிறிது நேரத்தில் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து இருந்தார். இதை எதையும் கவனிக்காமல் அவன் தனது எல்லையை அடைந்து இருந்தார்.

சில வினாடிகள் கண்களை மூடி இருந்த அவன் வேகமாக என்னை விட்டு எழுந்து வெளியேறினான். ஜன்னல் வழியே பார்த்த போது வேட்டியை இடுப்பில் கட்டிக் கொண்டு அவன் வெளியேறுவது தெரிந்தது. அச்சுதனும் வேகமாக வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அன்றைக்குப் பிறகு அவர்கள் இருவருமே என் வீட்டிற்கு வருவதே இல்லை. எங்காவது என்னைக் காண நேர்ந்தாலும் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர்..... ஒரு வித நடுக்கத்துடன்.

Tuesday, July 28, 2009

Tribute to Mohammed Rafi

பொதுவா எங்க வீட்டில் தமிழ் சினிமா தவிர மற்றவைகளைப் பார்க்க மாட்டோம். ஏனெனில் எங்க வீட்டில் தமிழ் தவிர வேற மொழி தெரியாது. அதுவும் வீட்டில் இருப்பவர்களுக்கு ஹிந்தி படம், பாட்டு என்றால் வேப்பங்காய் தான். நான் இந்தியாவில் பார்த்த ஒரே ஹிந்தி படம் ஹம் ஆப் கே ஹைன் கெளன். அதுவும் என் நண்பர் வற்புறுத்தி அழைத்துச் சென்றான். தேனி சுந்தரம் தியேட்டரில் பார்த்தேன் என்று நினைக்கின்றேன்.

நான் அப்ப துபாயில் வேலை செய்ய சென்றிருந்த நேரம். நான் தங்கி இருந்த கட்டிடத்தின் இரவுக் காவலாளி ஒரு பங்களாதேஷி. ஒருநாள் என்னிடம் வந்து நான் வைத்திருந்த டேப் ரிக்காடர்ரைக் கடனாகக் கேட்டார். ஏன் என்று கேட்டதற்கு அன்று இரவு லோக்கல் எஃப்.எம்மில் வரும் சில பாடல்களை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டார்.

அப்போது துபாயில் ஒரே ஹிந்தி FM ரேடியோ தான். 106.2 HUM FM. ஷோபியா கான், சிக்கந்தர் போன்ற சிறந்த காம்பியர்களை உள்ளடக்கியது. வாகனத்தில் செல்லும் போது FM கேட்டுக் கொண்டே செல்வது எங்களது பொழுது போக்கு. மாலையில் 5:20 க்கு மட்டும் நம்ம ஆசிப் அண்ணாச்சி ஏஷியாநெட்டில் ரேடியோவில் வருவார்கள். ... பதிவை விட்டு ரொம்ப வெளியே போயாச்சு. திரும்ப விட்ட இடத்துக்கு வரலாம்.

அந்த பங்களாதேஷி பதிவு செய்தவை முகமது ரஃபியின் பாடல்கள். அன்று ரஃபியின் நினைவு நாள் என்பதால் சிறப்பு ஒளிபரப்பாக, இசையமைப்பாளர் நெளசாத், ரஃபி குறித்த நினைவுகளை பேசினார்கள். மறுநாள் அந்த கேசட்டைக் கேட்ட போது மெய்மறந்து விட்டேன்.

முகமது ரஃபி! இந்திய சினிமா பாடல்களை அறிந்தவர்களின் வார்த்தைகளில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர். 1950 களில் ஆரம்பித்து 70 கள் வரை இந்திய சினிமாவை தனது காந்தக் குரலில் கட்டிப் போட்டவர். இசையமைப்பாளர் நெளசாத் அவர்களால் ஹிந்தி திரைவுலகில் அறிமுகம் செய்யப்பட்ட ரஃபி சுமார் 25 வருடங்கள் வரை கொடி கட்டிப் பறந்தார் என்றால் அது மிகையாகாது.

அன்னாருடைய 29 வது நினைவு தினம் வருகிற ஜூலை 31ந் தேதி வருகிறது (மறைந்த ஆண்டு 1980). அவரின் நினைவுகளை அசை போடவே இந்த பதிவு.

ரஃபி பற்றி தனித் தகவல்களை சக பதிவர் ஒருவர் பதிவாக எழுதியுள்ளார். அன்று நெளசாத் அவர்கள் பேட்டி அளித்ததில் இருந்து என் நினைவில் இருப்பவைகளை எழுதுகின்றேன்.




நெளசாத் அவர்களிடம் ஒரு சிபாரிசு கடிதத்துடம் முதன் முதலில் வந்தார் ரஃபி. அதைக் குறித்து நெளசாத் கூறிய வரிகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

* एक दिन एक नौजवान गायक मुझे आया नज़र !
जिसने रौशन कर दिए संगीत के शामो सहर !
जिक्र किसका कर रहा हूँ रफ़ी था उसका नाम !

ஒருநாள் ஒரு இளைய பாடகன் என் பார்வைக்கு வந்தான்
இசை உலகை பிரகாசிக்க வைத்தான் அவன்
நான் குறிப்பிடும் அந்த நபரின் பெயர் ரஃபி.

* ரஃபி காலத்திற்கு வருவதில் மிகவும் கவனம் செலுத்தக் கூடியவர்.

* ஒரு முறை ஒரு பாடல் பதிவு நடைபெற்றது. பகலில் பாடல் பதிவு முடிந்த திருப்தியில் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். நெளசாத் அவர்களின் வீட்டிற்கு இரவு ரஃபி வந்துள்ளார்கள்.

ரஃபி : இன்று பாடிய பாடலை மீண்டும் பாடிப் பதிவு செய்ய வேண்டும்.

நெளசாத் : ஏன்? நன்றாகத் தானே இருந்தது. இதைச் சொல்லவா இரவில் கிளம்பி வந்தீர்கள்?

ரஃபி : ஆம்.. எனக்கு பாடியதில் திருப்தி வரவில்லை. உங்களுக்குத் தேவையான உணர்வை என்னால் அப்பாடலில் தர இயலவில்லை.(जस्बात ला न सका !)எனவே மீண்டும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும்.

பிறகு திரும்பவும் அப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாம்.

* ஒரு கர்நாட்டிக் இசையுடன் கூடிய கொஞ்சம் கடினமாக பாடல் ஒன்று இருந்தது. (Madhuban Me Radhika )அதை வேறு ஒரு பாடகரை வைத்துப் பாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ரஃபி விடாப்பிடியாக அதை கேட்டு வாங்கிப் பாடினாராம்.

அவரது பாடல்கள் என்றும் இந்திய இசையில் நீங்கா இடத்தைப் பெற்று என்றும் வாழும்.

அவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்கள்.. உங்களுக்காக.











இதில் கிடைக்காமல் போனது.... பீதே தினோம் கி யாத் சதாதி ஹை ஆஜ் பீ .. ஓ தின் பிர் கபி வாபஸ் ந ஆயேகி.. தமாம் உம்ர யோகி ரோயே ஜாயெங்கே.. என்ற பாடல். கிடைத்தால் எனக்கு லிங்க் தாருங்கள்.

...
...

Sunday, July 26, 2009

வாழ்த்துக்கள் அகிலா!

அச்சில் நம் எழுத்துக்கள் வருவது என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். இந்த வார தினமலர் - வாரமலரில் சுட்டும் விழி என்ற பெயரில் எப்பவாவது (ஹிஹிஹி) எழுதும் சக பதிவர் சகோதரி அகிலா அவர்களின் கவிதை வெளி வந்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள்!


சின்ன, சின்ன
தயக்கங்களுடன்
கலைந்து கிடந்த
என் நெற்றிப் பொட்டை
நீ சரி செய்த நாளில்
துவங்கிற்று
உனக்கும், எனக்குமான
பெயரிடப்படாத உறவு!


சரியா, தவறா...
நெறியா, பிழையா
எனும் எல்லா குழப்பங்களையும்
விழுங்கியது
உன் கள்ளமற்ற சிரிப்பு!

நியாமற்றதாய்
தோன்றினும்
நீண்டு கொண்டே
போகிறது

நம் நேசம்
வான் வெளி போல்...
காட்சிப் பிழை இது
கானல் சுகமென
உலகம் மறுப்பினும்
வானும் சுகமே!

உன்னோடு என்
வாழ்வும் சுகமே!


க. அகிலா, சென்னை.

நன்றி : வாரமலர்

Saturday, July 25, 2009

பார்த்தது, கேட்டது,படித்தது.

சின்ன வயசில் வாரமலரில் வரும் பாகேப விரும்பி படிப்பேன். இப்ப அதை விட சுவாரஸ்யமாக பதிவுலகில் வருவதால் இதுவே இனிமையா இருக்கு..அந்த ஸ்டைலில் இன்னைக்கு ஒரு பார்த்தது, கேட்டது,படித்தது.

கேட்டது:



நண்பர் ஒருவர் ஒரு கதை சொன்னார்.. ஒரு இளைஞன் கண் தெரியாத ஒரு இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்டான். அவள் மீது அளவில்லாத அன்பு செலுத்தினான். கண் தெரியாதவள் என்றாலும் அழகானவள். காதலன் அவளிடம் திருமணம் பற்றிப் பேசிய போது அவள் தனக்கு கண் தெரிந்தால் தான் அவனை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி விடுகின்றாள்.

காதலன் யோசித்து, பல சிரமங்களுக்கு இடையில் அவளுக்கு கண் கிடைக்க ஏற்பாடு செய்கின்றான். கண் பார்வை கிடைத்தவுடன் முதன் முதலாக காதலனைக் காண அவள் விரும்புகின்றாள். அவனைப் பார்த்த அவளுக்கு அதிர்ச்சி. ஏனெனில் அவன் குருடாக இருக்கின்றான். அவனைக் திருமணம் செய்ய மறுத்து விடுகின்றாள். காதலன் சோகத்துடன் ஏதும் பேசாமல் திரும்பிச் செல்கின்றான். அப்போது அவன் நினைத்துக் கொண்டதைக் கடைசியில் சொல்கின்றேன்.

பார்த்தது:
ஒரு விளம்பரம்.. எங்க முன்னாள் பேவரைட் சோப்பான லைப்பாய்க்கு ஒரு விளம்பரம். இரண்டு பில்டிங்கில் இருக்கும் குழந்தைகளின் சோப்பை மாற்றியதால், சுகாதாரமானதாக இருந்ததாக வரும். ஒரு பில்டிங்கில் இருக்கும் குடும்பம் பழைய சோப்பை தொடர்ந்ததாகவும், அடுத்த பில்டிங் முழுவதும் லைப்பாய்க்கு மாறியதாகவும் சொல்லி விட்டு, இறுதி முடிவில் லைப்பாய் பயன்படுத்திய பில்டிங்கில் இருக்கும் குழந்தைகள் 40 சதவீதம் அதிகமாக பள்ளிக்கு சென்றதாக சொல்கிறார்கள்.

சுத்தமான லாஜிக் ஓட்டைகள், நடைமுறைக்கு முரணாக இருக்கின்றது என்றாலும், லைப்பாய் பயன்படுத்தியதை சொல்லும் போது தினமும் ஐந்து முறை லைப்பாய் பயன்படுத்தியதாக கீழே குறிப்பு வருகின்றது. அடப்பாவிகளா? லைப்பாய் சோப்பு போட்டு வாரத்துல இரண்டு தடவை குளிப்பதே கஷ்டம்.. இதுல டெய்லி 5 முறையாம்.. ஓவரா இல்லியா?


படித்தது:
திரு. நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய தென் இந்திய வரலாறு என்று நூல் சமீபத்தில் படிக்கக் கிடைத்தது. கொஞ்சமா புரட்டியதில் சில சேதிகள். சங்ககாலத்தில் தொடங்கி, கிபி 17 ஆம் நூற்றாண்டு வரை உள்ள வரலாறுகளைத் தொகுக்க பல சிரமங்களை 1950 களில் முயன்று உள்ளார். தென் இந்தியாவிலும், வட இந்தியாவிலும் பொதுவான அகத்திய முனிவர் பற்றிய சில மரபுக் கதைகள் சுவாரஸ்யமா இருக்கு.

ஒரு சந்தர்ப்பத்தில் அகத்திய முனிவர் செல்வத்தின் தேவை காரணமாக மணிமதி என்ற நாட்டை ஆண்ட தைத்திரிய மன்னனாகிய இல்வலனிடன் சென்றார்.இல்வலன் பிராமணர்களிடம் விரோதம் கொண்டவன். அவனுக்கு ஒரு தம்பியும் இருந்தான். அவன் பெயர் வாதாபி. இல்வலன் வாதாபியை ஆட்டுக் கிடாயாக மாற்றி, அறுத்து சமையல் செய்து பிராமணர்களுக்கு உணவளிப்பான். பிராமணர்கள் உண்டதும் இல்வலன் தனது தம்பியை பெயர் கூறி அழைப்பான். உடனே வாதாபி பிராமணர்களின் வயிற்றைக் கிளித்து வெளியேறி அவனது பழைய உடலை அடைந்து விடுவான். இது மாதிரி பல பிராமணர்களை வில்வலன் கொன்றான்.

அகத்தியர் அவனிடம் வந்ததும் அவனும் அதே போல் தம்பியை சமைத்துக் கொடுத்தான். அகத்தியர் உணவருந்தியதும் தம்பியை அழைக்க தம்பி வரவில்லை. அகத்தியரின் வயிற்றில் செரிமானமாகி விட்டான். வேறு வழி இல்லாமல் பெரும் செல்வத்தைக் கொடுத்து, தனது தம்பியை அகத்தியரிடம் இருந்து மீட்டதாக கதை செல்கின்றது.. நல்லா இருக்குல்ல.. கதை!

அடுத்து இன்னொரு வித்தியாசமான விஷயம்.. தமிழர்களின் வரலாறு. சங்க காலத்துக்கு முன்னால் இருந்த தமிழக வரலாறு பற்றி ஏதும் தெரியவில்லை என நீலகண்ட சாஸ்திரிகள் கூறுகின்றார்கள். மேலும் சில நூற்றாண்டுகள் தமிழகத்தில் என்ன நடந்தது என்பதே தெரியவில்லை என்றும் கூறுகின்றார். (நான் பள்ளி படிக்கும் காலங்களில் ஆ.வி .. ஹாய் மதன் இது பற்றி சொல்லி ஏதோ சர்ச்சையில் சிக்கிக் கொண்டது நினைவுக்கு வருகின்றது)
கன்னியாகுமரி வரையிலான தமிழகம் உருவான பரசுராமன் கதையைச் சொன்னால் அடிக்க வருவீர்கள் என்பதால் அதை விட்டு விடுகின்றேன்.

எங்க பாண்டிய நாடு பற்றிய ஒரு சுவையான செய்தி. கிறிஸ்து பிறப்பதற்கு முன் ஹெர்குலிஸ் மன்னர்களின் காலத்தில் தென்னிந்தியப் பகுதிகள் ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாக மெகஸ்தனீஸ் கூறுகின்றார். கிமு 3 ஆம் நூற்றாண்டுக்காலம். ஹெர்குலிஸின் மகளான ‘பாண்டையா’ என்பவருக்கு தமிழகத்தின் பகுதிகளை ஆட்சி செய்யக் கொடுத்ததாகவும், அதனால் பாண்டியர்கள் என்ற மரபு வந்ததாகவும் குறிப்பாகச் சொல்கின்றார். ரோம்பப்பேரரசரின் கடற்படைகள் தென்னிந்தியக் கடல் பகுதியில் வந்து கைப்பற்றியதாகவும் சொல்கின்றார்.

நேரம் கிடைக்கும் போது அதில் இருக்கும் இன்னும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

கேட்டதின் விடை:
உனக்கு கண் தெரிய வேண்டும் என்பதற்காக என் இரு கண்களையும் தானம் செய்தேன் என்பதை உனக்கு சொல்ல விரும்பவில்லை.

Thursday, July 23, 2009

துர்காவுக்கு திருமண வாழ்த்துக்களும், எனக்கு வந்த சில விருதுகளும்...


முதலில் துர்கா விஸ்வநாத்துக்கு இனிமையான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். துர்கா விஸ்வநாத்?? யாருன்னு புரியாம இருப்பவர்களுக்கு ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.. சில ஆண்டுகளுக்கு முன் ஏஷியாநெட் தொலைக்காட்சியில் ஐடியா ஸ்டார் சிங்கர் என்ற பாடகர்களுக்கான போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பாடகர்களில் ஒருவர் தான் துர்கா விஸ்வநாத். போட்டியின் இறுதியில் இவரால் வெற்றி பெற முடியா விட்டாலும் தனது அழகிய கொஞ்சும் குரலில் பல பாடல்களைப் பாடி அசர வைத்தவர்.

அப்போட்டியில் இவர் என்னிஷ்டம் என விருப்பப் பாடலாக பாடிய “தும்பி வா தும்பக் குடத்தின்” பாடல் எனது விருப்பப்பட்டியலில் முதலில் உள்ள பாடல். என் செல்பேசியில் இருக்கும் இப்பாடல் மகிழ்ச்சியான, துக்கமான, எரிச்சலான, குழப்பமான எல்லா கணங்களில் என்னை வருடிச் சென்று இருக்கின்றது. சமீபத்தில் துர்கா விஸ்வநாத்துக்கு திருமணம் முடிந்து இருக்கின்றது. அவரது குரல் போலவே வாழ்வும் இனிமையாக அமைய வாழ்த்துகிறேன்.

தும்பி வா பாடல் யூ டியூபில் இருந்து...





இப்பாடலை செல்பேசியில் கேட்க 3GP பார்மேட்டில் பதிவிறக்க

இவர் பாடியவைகளை யூடியூபில் தேட இங்கு செல்லலாம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அடுத்து விருதுகள் நமக்கு வழங்கி கெளரவித்தவர்களுக்கு நன்றி நவிலல். இந்த பட்டாம்பூச்சி விருது சில மாதங்களுக்கு முன்னால் வலையுலகில் பிரபலமா இருந்தது. நிறைய பேர் தங்கள் பதிவிலும் ஓரங்களில் போட்டுக் கொண்டார்கள்.. ஆனா நமக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கல.. ஏன் கரப்பான் பூச்சி விருது கூட கிடைக்கல.. அதனால் சீச்சீ இந்த பழம் புளிக்கும்ன்னு விட்டாச்சு.. ஆனா இப்ப எங்க ஸ்வீடன் சுசி அக்கா அந்த விருதை நமக்கு கொடுத்து கெளரவிச்சு இருக்காங்க... நன்றி சுசி அக்கா!

அதே போல் இப்ப வலம் வரும் சுவாரஸ்யமான பதிவர் விருதை சகோதரி ஃபாயிஷா கொடுத்து இருக்காங்க.. நன்றி ஃபாயிஷா! இப்ப இந்த விருதை நாமலும் ஐந்து பேருக்கு தந்துடலாமுன்னு இருக்கேன். காசு, பண முடிப்பெல்லாம் தர முடியாது.. ஒன்லி பாசம் மட்டுமே விருது.



1. தேனியார் என்ற விஜயராஜா.. எங்க மாவட்டத்துக்காரர். அருமையா எழுதுவார். இப்ப ஆப்பிரிக்கா காட்டுக்குள் எங்கேயோ இருக்கார்ன்னு நினைக்கிறேன். இணைய தொடர்பு இல்லாததால் எழுதாம இருக்கார் போல... நல்ல சுவாரஸ்யமான எழுத்தாளர். அவருக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்கின்றேன்.

2. தமிழ் மகன்.. இணையத்தில் எழுதி வரும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான தமிழ் மகனுக்கு இவ்விருதை அளிக்கின்றேன். அழகான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டுவதில் சிறந்தவர். கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவுக்கு சொந்தக்காரர்.

3. விக்னேஷ்வரன் - மலேசியாவில் இருந்து வலை பதியும் சகோதரர் விக்கி.. நல்ல தேர்ச்சியடைந்துள்ளார். ஒரு பதிவுக்கு அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை ஆச்சர்யப்பட வைக்கின்றது.

4. ஆயில்யன்... நம்ம சாதிசனம்.. கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் தொடர்ந்து செயலாற்றி வருகின்றார். இவரை வெறும் ஆயில்யன் என்பதை விட கவிஞர் ஆயில்யன் என்று அழைக்கலாமா என்று எங்கள் சங்கம் ஆய்வு செய்து வருகின்றது. ஏன்னு கேள்வி கேட்கக் கூடாது.. அப்படிக் கேட்டா எங்க மச்சான் கிரிதரன் சாப்பிடும் ஸ்ரீமதி சமைத்த சாப்பாட்டை சாப்பிடும் தண்டனைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம். (தங்கச்சியைக் கொடுத்து இருக்கோம்ல.. எங்க கலாய்த்தலை கேட்டுத் தான் ஆகோனும்.. ;-) )

5. தமிழன் கறுப்பி வழக்கம் போல் தம்பிக்கு ஒரு விருது கொடுத்தாச்சு... அசட்டையாக எழுதுவார். ஒரு இரவு முழுவதும் கடற்கரையில் நாங்கள் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டே இருக்கனும் என்பது என் கனவு. அம்புட்டு சுவாரஸ்யமான ஆளு.. ஆனா முடியுமான்னு தெரியல.

இந்த பட்டியலில் மகளிருக்கு இடம் இல்லாமப் போனது வருத்தமே.. சுவாரஸ்யமான பலர் இருந்தாலும், அவர்களுக்கு ஏற்கனவே இதை யாராவது கொடுத்து இருக்காங்க.. அதனால் யாருக்கும் கொடுக்காமப் போக முடியாது என்பதால் பதிவுலகை விட்டுக் காணாமல் போன கோகிலவாணி, மற்றும் வித்யா கலைவாணி ஆகிய இரு சுவாரஸ்யமான பதிவர்களுக்கும் இவ்விருதை கொடுக்கின்றேன்.

Monday, July 20, 2009

பணம் இனிது! பொருள் இனிது! என்றோம் மழலைச் சொல் கேளாமல்...


மகனுக்கு வயசு 3 ஆக இன்னும் சில மாதங்கள் இருக்கு.. சேட்டையும் பேச்சும் அதிகமா இருக்காம்... :) இன்னும் ஸ்கூலுக்கு அனுப்பலை. இப்ப அவங்க அம்மாவோட நெல்லை மாவட்டத்தின் ஒரு கடைக் கோடியில் இருக்கான். கொஞ்ச நாள் கழிச்சு பிரிகேஜி மாதிரி அனுப்பலாமா? இல்ல மொத்தமா வரும் 2010 ஜூனில் எல்கேஜியில் சேர்க்கலான்னு யோசனையில் இருக்கோம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அங்க வீட்டுக்கு பக்கத்தில் மசூதி இருக்கு.. காலையும், மாலையும் அங்கே அரபிப் பாடம்(மதரஸா) நடக்கும். தினமும் சும்மாவாச்சியும் போய்ட்டு வருகிறான். சில நேரங்களில் போக அடம் பிடிக்கின்றான்.. அப்படித் தான் ஒரு மதரஸாவுக்கு போகாத நாளில் மதரஸாவில் பாடம் சொல்லித் தருபவர் (ஹஜரத்) தெருவில் இவனைப் பார்த்து “ஏன், காலையில் மதரஸாவுக்கு வரல.. நாளைக்கு வரல அடி பிச்சிடுவேன்” என்று சொல்லி இருக்கிறார்.. இவன் முழிச்சு இருக்கான். “நாளைக்கு ஒழுங்கா வரனும் என்ன?” என்று அவர் சொல்ல இவன் “ எங்க மாமாகிட்ட சொல்லி, உங்க தோலை உரிச்சு, ஜன்னலில் கட்டி தொங்கப் போட்ருவேன்” என்று சொல்லி இருக்கான்... :( ஹஜரத் வீட்டில் வந்து (ஜாலியாக) கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கார். மற்றவர்கள் சொல்வதை புரிந்து அதே பாணியில் பதில் சொல்லும் பழக்கம் அதிகமாகி விட்டது.. கொஞ்சம் பெரிதானால் புரியும் என்று நினைக்கிறேன்.

*******************************************************************

ஒருநாள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து மழைத் தண்ணீர் விழும் பைப்பில் இருந்து தண்ணீர் கொட்டி இருக்கு.... மேலே போய் பார்த்தால், மேல்நிலைத் தொட்டியின் மூடியைத் திறந்து அதனுள் ஒரு PVC ஹோசைப் போட்டு, தண்ணீரை உறிஞ்சி மொட்டை மாடிக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டு இருந்தானாம்... இதே போல் ஒருநாள் வீட்டில் நின்ற பைக்கில் பெட்ரோல் டேங்கைத் திறந்து அதிலும் ஹோசை நுழைக்க முயலும் போது கையும் களவுமாக பிடிபட்டு இருக்கிறான்.

**********************************************************************

பாட்டி(அவனது அம்மம்மா) தண்ணீர் அள்ளிக் (எங்க ஊரில் மெத்தி) கொடுக்கச் சொன்னால் நீங்களே போய் தண்ணி அள்ளிக்கங்க என்று சொல்கிறானாம்.
“ஒரு உதவி கூட செய்ய மாட்டியா” என்று கேட்டால் “என்னை செரப் படுத்தாதீங்க” என்று சொல்கின்றானாம். (செரப்படுத்ததல் என்றால் தங்கமணி ஊரில் கஷ்டப்படுத்துதல்) இதே போல் சாப்பாடு ஊட்டும் போது அவரை கஷ்டப்படுத்தக் கூடாதாம்.

இவையெல்லாம் அவ்வப்போது வரும் புகார்களின் தொகுப்பு.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அங்கு ஆடு வளர்க்கிறார்கள்.. மதிய வேளைகளில் ஆடுகள் தண்ணீர் குடிக்க வீட்டுக்கு வரும். வழக்கமாக வரும் வளவு(எங்க ஊரில்கொல்லைப் புறம்)க்கான பாதை மூடி இருக்கும் என்பதால் வீட்டுக்கு வெளியே நின்று கத்தும்.. உடனே இவன் வெளியே போய் “கத்தக் கூடாது .. அப்பா இப்ப வந்துடுவாங்க.. வந்து உங்களுக்கு கஞ்சி வைப்பாங்க” என்று ஆடுகளுடன் பேசிக் கொண்டு இருப்பானாம். (அப்பா என்பது தாத்தா)

**************************************************************

சமீபத்தில் தங்கமணிக்கும் மகனுக்கும் நடந்த உரையாடல்

மகன் : அம்மா, வயிறு ஏன் பெரிசா இருக்கு?

தங்கமணி : வயித்துக்குள்ள நம்ம குட்டி பாப்பா இருக்கு.

மகன் : குட்டிப்பாப்பா எப்பமா வெளியே வரும்?

தங்கமணி : இப்பதானே வளருது.. சீக்கிரமா வந்து உன்னோட விளையாடும்

மகன்: நான் வேணா வயித்துக்குள்ள போய் பாப்பா எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரவா?


**********************************************************************

மொழி வழக்கும் அவனுக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.. தங்கமணியின் பேச்சு வழக்கம் நெல்லை, நாஞ்சில் வழக்குகளின் கலவை. நாங்க வழக்கம் போல தேனி, மருத ஸ்லாங்கு.. பாண்டிய மண்ணின் மைந்தர்கள். கரிசல்காட்டுக்கு சொந்தக்காரர்கள்... ;-))
இதனால் தங்கமணியிடம் அடிக்கடி திட்டு வாங்க வைக்கும் ஒரு விடயம்.. எனது சித்தப்பா, அத்தை, அக்கா, அண்ணனை எல்லாம் ஒருமையில் கூப்பிடும் பழக்கம்.. மாற்ற முடியல.. :( அவர்களது ஊரில் இது ரொம்ப வித்தியாசமா பார்க்கப்படுகிறது.

Friday, July 17, 2009

இளமைக் காலங்கள் தொடர்கின்றன....



மக்களே நல்லா இருக்கீங்களா? நேரம் இல்லாம திணறிக்கிட்டு இருக்கேன்..நைட்டு லேட்டா வேலையில் இருந்து வந்து கொஞ்சமா யார்கிட்டயாவது மொக்கையைப் போட்டுட்டு தூங்கப் போயிடுறேன்... நேத்து மட்டும் சீக்கிரம் வந்து ஒரு ப்டம் பார்த்தாச்சு.. அதைப் பற்றி எழுதியாச்சு..ஆனாலும் நம்ம சுசி அக்கா ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு விட்டுட்டாங்க.. அக்கா சொல்லைத் தட்டக் கூடாதுன்னு காலையில் எழுந்து பதிவு எழுதி போட்டாச்சு..:)

இனி விடயத்திற்குப் போகலாம்... நாம படிச்சது ஒரு அரசு நடுநிலைப்பள்ளி.. அப்ப எங்க ஏரியாவுக்குள் எல்கேஜி, யூகேஜி எல்லாம் தெரியாது.. முதலில் அரைக் கிளாஸ் தான்.. முதல் வகுப்பில் முதல் வகுப்புப் பசங்களுடன் அடுத்த ஆண்டுக்கான பசங்க உட்கார்ந்து இருப்பாங்க... முதன் முதலில் போன அந்த நாள் நினைவில் இருக்கு.

எங்க சித்தப்பா தான் என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றது.. ஒரே அடம் பிடிச்சு அழுகை.. என்னோட முதல் வகுப்பு ஆசிரியை திருமதி.ஞானம்மாள் டீச்சர். அழுகையை நிப்பாட்ட கையில் சாக்பீஸ் கொடுத்து உட்கார வச்சாங்க.. அங்கயே அரை கிளாஸ், ஒண்ணாப்பு படிச்சாச்சு... ஒரு ஆசிரியையிடன் இரண்டு ஆண்டுகள் படிச்சது அவங்க ஒருவரிடம் தான்...:) யார் கேட்டாலும் ஒண்ணாப்பு D செக்சன் என்று சொல்வேன்.
என்னோட சதீஸ், அப்பாஸ்,கமல், கோபால், வீரர் எல்லாம் படிச்சாங்க... முதல் வகுப்பில் 500 க்கு 500 மார்க் வாங்கியது இன்னும் நினைவில் இருக்கு..:))

இரண்டாவதுக்கு திருமதி.மும்தாஜ் டீச்சர்.. அது மட்டும் தான் நினைவில் இருக்கு. மத்தபடி இந்த முறை கூட ஊரில் இருக்கும் போது அவர்களை பார்த்தேன்.

மூன்றாம் வகுப்புக்கு திரு.கோபாலகிருஷ்ணன் சார்... ஆட்டோகிராபில் ஒரு வாத்தியார் வருவாரே அது மாதிரி ஆனா.. ரொம்ப நல்ல டைப்.. கோபம் வந்தா அடி பிச்சுடுவார்..:) என்னோட பிரண்டு காமராஜ் (அவனுக்கு பட்டப் பெயர் கொல்லைப்பீ) கொண்டு வந்த புளியங்காய்களைப் பிடுங்கி கிளாஸூக்கு வெளியே விட்டு எறிந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நினைவில் இருக்கு.

நாலாப்புக்கு திருமதி.சந்திரா டீச்சர்... நல்ல டீச்சர்.. நாலாப்பு படிக்கும் போது நல்ல மழையில் மரம் சாய்ந்து கிளாஸின் மீது விழுந்து சுவர் எல்லாம் இடிந்து கிளாஸ் எல்லாம் ஒரே மழைத் தண்ணீர்..

ஐந்தாம் வகுப்புக்கு த கிரேட் திரு.தனுஷ்கோடி. தனுஷ்கோடி ஆசிரியரைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. இங்கு அதீத திறமைசாலியான ஆசிரியர்.

இந்த ஆண்டைப் பற்றி நிறைய நினைவில் இருக்கு... எங்க அப்பா அப்பொழுது திண்டுக்கல் - கம்பம் பஸ்ஸில் நடத்துனர்.. (பாத்திமா ரோடு வேஸ்). இந்த இரண்டு ஊருக்கும் இடையில் எங்க ஊர்.. நைட் 7:30 மணிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பஸ் ஸ்டாண்டில் எங்க தாத்தாவோட போவோம். அங்கேயே பஸ் வரும் வரை விளையாடிக்கிட்டு இருப்பது இன்னும் நினைவில் இருக்கு.

அப்புறம் ஒரு முக்கியமான, யாருக்கும் சொல்லாத அழியாமல் உறுத்திக் கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வும் இருக்கு... சொல்லிடவா? ம்ம் சொல்லிடலாம். அஞ்சாப்பு படிக்கும் போது எங்கள் ஆசிரியர் போட்டி எல்லாம் வைத்து பரிசளிப்பார். குறிப்பா கட்டுரைப் போட்டியில் எழுத்து அழகா இருக்கனும்.. நமக்கு தான் எழுத்து செம டேமேஜா இருக்குமே.. அதனால் பிரைஸ் கிடைக்காது.. ஆனாலும் தேர்வுகளில் நல்ல ரேங்க் வாங்கிடுவேன்..

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது மட்டும் நான்கு, ஐந்து மாதங்கள் டியூசன் படிச்சேன்.. அதுக்கே வீட்டில் செம சண்டை போட்டாச்சு.. மாதம் 5 ரூபாய் என்று நினைக்கிறேன்.. அதற்குப் பிறகு படிச்சி கிழிச்சது போதும்ன்னு நிப்பாட்டியாச்சு.

அப்படித் தான் காலாண்டுத் தேர்வில் இரண்டாம் ரேங்க் வாங்கியாச்சு.. ஒரு அழகான வெள்ளைக் கலர் பேனா பரிசாவும் கிடைச்சது.. அதை வாங்கிக் கொண்டு நான் டியூசன் படிக்கும் ஆசிரியையிடம் காட்டி பாராட்டும் வாங்கியாச்சு.. அவங்க பேர் திருமதி.ஆனி இளங்கோ. அவங்க வேற “உன் எழுத்து மட்டும் அழகா இருந்தா நீதான் முதல் ரேங்க் வாங்குவ” என்று சூட்டேத்தி விட்டுட்டாங்க..

ஆங்கிலத்துக்கு நான்கு கோடு போட்ட நோட்டும், தமிழுக்கும் இரண்டு கோடு போட்ட நோட்டும் வாங்கிக் கொண்டு வரும்படி கூறி விட்டார்கள்.. இரண்டும் வாங்கக் குறைந்தது 5 ரூபாயவது வேணும்.. வீட்டில் வழக்கம் போல பணம் தான் hurdle..

அன்றைக்கு ஆயுத பூஜை நாள்... வழக்கம் போல் ஊரைச் சுத்திக்கிட்டு இருக்கும் போது ஒரு பேக்கரி(PNC) அருகில் 10 ரூபாய் நோட்டு ரோட்டில் கிடக்கு.. நைசா எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்து விட்டேன்.. அப்புறமென்ன வீட்டில் பஞ்சாயத்து பேசி 5 ரூபாய்க்கு இரண்டு நோட்டும்.. மீதி 5 ரூபாய்க்கு ஆயுத பூஜையைக் கொண்டாட பொரி, கடலை எல்லாம் வாங்கிக் கொண்டாடினோம்..

இப்ப நினைச்சாலும் கண்ணில் நீர் துளிர்க்கும்.. இப்ப பர்ஸ் நிறைய பணம் இருக்கு... ஆனா வாங்கத் தேவையான பொருள் ஏதும் இந்த உலகில் இல்லை.

அப்புறம் எங்க ஆனந்தி அக்கா பற்றியும் சொன்னால் நிறைய சொல்லலாம். இங்கேயே அவங்களைப் பற்றி சொல்லி இருக்கேன். இப்ப கெங்குவார்பட்டியில் வேலை செய்கிறார்கள்.



சரி இனி மேட்டருக்கு வரலாம்.. இது தொடர் பதிவு என்பதால் இன்னும் மூணு பேரை அழைக்கனுமாம்..:)

விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தாங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும்

இனி நான் அழைப்பது

கயல்விழி முத்துலட்சுமி அக்கா : எங்களோட பாசக்கார குடும்பத்து அக்கா... நல்லா சுவாரஸ்யமா எழுதுவாங்க.. ஜூனியர் துளசி டீச்சர்.. :)

சென்ஷி : அண்ணனைப் பற்றி சொல்ல வேண்டியதில்ல... புனைவு நிறைய எழுதுவார்ன்னு நினைக்கிறேன். உண்மையைச் சொன்னா இவரோட எழுத்துக்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இன்னும் அறிவு வளரலை..:)

காதல் கறுப்பி : தம்பி சுவாரஸ்யங்களுக்குச் சொந்தக்காரர்.. ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..:) பேய் மாதிரியான தேவதைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பவர்.

வாங்க மக்களே. எழுதுங்க... :)

Thursday, July 16, 2009

கையொப்பு - நம்மை நாமாக அறிய

"நம்மைப் போன்ற பலி மிருகங்களுக்கு
அவர்கள்
கடைசி உணவைப்
பரிமாறுகிறார்கள்
இரவு முடியும்போது

கொலைக்கத்தியின் கூர்மையில்

சூரியக்கதிர்கள் வெளிப்படுகையில்

துடித்துச் சாக நாமிருக்கக் கூடாது

எனது காதலே!

நாமிந்த இரவின் மறைவில்

பரஸ்பரம்
கொம்புகளால்
குத்திக்கொண்டு
சாகலாம் "

மொழி பெயர்ப்பு : ஆசிப் மீரான்

கையொப்பு.. ஒரு அழகான கவிதையை படமாக்கி இருக்கிறார்கள். வழி நெடுக உயிரோட்டமான காட்சி அமைப்பு.. என்ன சொல்ல.. படம் பார்த்தேன். முடிவின் மிரட்சியில் சில நிமிடங்கள் செயலற்று போக மட்டுமே முடிந்தது.




அறிமுகம் செய்த ஆசிப் மீரான் அண்ணாச்சிக்கு நன்னிகள். அவரது படம் பற்றிய கருத்து இங்கு

எனக்காக வாழ வேண்டும் என்ற ஆசையையும், பரிதவிப்பையும் இன்னும் அதிகமாக்கி விட்டது என்று மட்டும் சொல்ல முடிகின்றது.

நாளைக்கு ப்ளஸ்ஸி(Blessy)யின் இயக்கத்தில் மோகன்லால் நடித்த bhramaram படம் பார்க்கப் போகின்றேன். இவர்களது கூட்டணியில் வந்த தன்மாத்ரா என்னுடைய ஆல் டைம் பேவரைட்... நாளைக்கு எப்படி மூடு இருக்கும் என்பது தெரியாததால் உடனடிப் பதிவு இது.

கையொப்பு டிவிடி பிரிண்ட்டில் பார்த்தேன்.. இங்கிருந்து 1.36 GB அளவு.

Saturday, July 11, 2009

இலையில் சோறு போட்டு...



"ஏண்டி.. மெல்லமா நடந்து வரத் தெரியாதா?”
மாலதியின் பேச்சைக் கேட்கக் கூடியவள் இல்லை சின்னு. நடந்து வராமல் தாவித் தாவிக் குதித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். கூடவே அவளது குட்டி நாயான டைகரும். டைகர் அவர்களது குப்பத்தில் இருந்த ஒரு நாய் போட்ட குட்டி... குட்டியிலேயே எடுத்து வந்து பாலூட்டி வளர்த்து இப்போது கறி தின்னும் அளவுக்கு வளர்ந்து விட்டது. சின்னு எங்கே சென்றாலும் கூடவே அதுவும் திரியும்.

இன்று சின்னுவின் மகிழ்ச்சிக்குக் காரணம் அவர்கள் செல்லுமிடம். மாலதி, சின்னுவின் அம்மா அந்த பகுதி கவுன்சிலர் வீட்டில் வேலை செய்கின்றார். இன்று கவுன்சிலரின் ஒரே மகனுக்கு பிறந்தநாள். அதனால் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். சின்னுவின் அம்மா அங்கேயே வேலைக்கு இருப்பதால் அவளது பிள்ளைகளையும் கவுன்சிலர் மனைவி சாப்பிட வரச் சொல்லி இருந்தாள்.

சின்னு அம்மா எப்போதுமே மிச்சம் மீதிகளை கட்டிக் கொண்டு வந்து தனது பிள்ளைகளுக்கு சாப்பிடத் தருவாள். இன்று அங்கேயே சுடான சாப்பாடு கிடைக்கும் என்பதால் சின்னுவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சின்னு மூன்றாம் வகுப்பு படிக்கும் சுட்டியான மாணவி. மாலதி ஆறாம் வகுப்பு படிப்பவர். இப்போது தான் கொஞ்சம் கொஞ்மாக அவளிடம் வெட்கம் குடி கொள்ள ஆரம்பித்து இருக்கின்றது.

வானம் மேக மூட்டமாக இருந்தது. கவுன்சிலரின் வீடு கலகலப்பாக இருந்தது. மாலதியும், சின்னுவுன் வீட்டுக்கு வெளியே இருந்த முற்றத்தில் அமர்ந்து இருந்தனர். இவர்களைப் போலவே இன்னும் சில சிறுவர், சிறுமிகளும், வயதானவர்களும் அங்கே இருந்தனர். விருந்தினர்கள் எல்லாம் வீட்டிற்கும் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்தனர். சின்னுவின் அம்மா அவ்வப்போது வீட்டினுள் இருந்து மகள்களை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். சின்னு நைசாக வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது பிரியாணி அங்கே பரிமாறப்பட்டுக் கொண்டு இருப்பது தெரிந்ததால் சின்னு அவ்வப்போது மூச்சை இழுத்து வாசம் பிடித்துக் கொண்டு இருந்தாள்.

இப்போது முற்றம் பரபரப்பாக இருந்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் வரிசையாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். மாலதியும், சின்னுவின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர். டைகரை அங்கிருந்த குரோட்டன்ஸ் செடி மறைவில் ஒளிந்து இருக்கச் செய்து இருந்தாள் சின்னு. மாலதிக்கு சின்னுவின் மீது கோபம்.. நாயைக் கூட்டி வந்தது கவுன்சிலர் மனைவிக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று.. சின்னுவிற்கு அதைப் பற்றிய கவலை இல்லை.. தனக்கு கிடைக்கும் சாப்பாட்டில் கொஞ்சம் டைகருக்கு தரப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

வரிசையாக உட்கார்ந்து இருந்தவர்களுக்கு முன் இலை போடப் பட்டு இருந்தது. இலை போட வந்தவரிடம் நைச்சியமாக பேசி ஒரு கிழிந்த இலையை டைகருக்காக சின்னு வாங்கி வைத்து இருந்தாள். அவளுக்கும் உள்ளூர பயம் இருந்தது. அம்மா டைகரைப் பார்த்தால் கூட அடி பின்னி விடுவாள் என்று.. ஆனாலும் டைகர் ஒளிந்து இருக்கும் தைரியத்தில் இருந்தாள். எல்லாருக்கும் முன் இலை போடப்பட்டு இருந்தது.

அப்போது தான் பரபரப்பு நிகழ்ந்தது. அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழாவுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி அது. கவுன்சிலரின் கைத் தடிகள் முற்றத்தில் இலை போட்டு அமர்ந்து இருந்தவர்களை விரட்டிக் கொண்டு இருந்தார்கள். அனைவரும் எழுந்து ஓரமாக நின்று கொண்டிருந்தனர். சின்னு தனது இரண்டு இலையையும் எடுத்துக் கொண்டு ஓரமாக நின்று கொண்டு இருந்தாள். அவள் கவனம் முழுவதும் டைகரின் மீதே இருந்தது. டைகர் அமைதியாக செடி மறைவிற்குள்ளேயே இருந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் இடத்தைக் காலி செய்ய மீண்டும் முற்றத்தில் அவரவர் இடத்தைப் பிடித்துக் கொண்டு அனைவரும் அமர்ந்தனர். அனைவரும் முன்னும் இலை இருந்தது. ஆனால் சாப்பாடு போட யாரையும் காணவில்லை. கவுன்சிலரின் மகனே வந்து தனது கையால் சாப்பாடு போட வேண்டுமாம்... இதனை வீடியோவாக எடுக்க கேமரா மேன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார்..

சின்னுவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கேமராமேன் வேறு ஏதோ ஒயரில் பிரச்சினை என்று இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருந்தான். அவனது கேமரா தயாரானால் தான் சாப்பாடு போட ஆரம்பமாகுமாம். அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கேமரா தயாராகி இருந்தது. கவுன்சிலரின் மகன் தனது சின்னக் கரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக பிரியாணியை இலையில் வைத்துக் கொண்டிருந்தான். மாலதி, சின்னு இருந்த மூலைக்கு எதிர் மூலையில் இருந்து சாப்பாடு போடும் படலம் ஆரம்பமாகி இருந்தது. சின்னு அவ்வப்போது டைகரை தனது கைகளை வைத்து குரோட்டன்ஸ் செடிக்குள் தள்ளிக் கொண்டு இருந்தாள். டைகருக்கும் பிரியாணி வாசம் வந்து விட்டது போல் இருந்தது.

மாலதிக்கு ஏனோ அங்கே இருப்பது வெட்கமாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை. இடையில் எழ முடியாது. கவுன்சிலர் மனைவி பார்த்தால் அவ்வளவு தான் பத்ரகாளியாகி விடுவாள். சின்னுவின் இலைக்கு சாப்பாடு வருவதற்கும் நகரவே நகராத 15 நிமிடங்கள் கடந்து இருந்தது. சின்னுவோடு வரிசை முடிந்ததால் கேமராமேன் அதோடு நிறுத்திக் கொண்டு திரும்ப கேமராவோடு மக்கள் கூட்டமும் திரும்பி இருந்தது.

சின்னு வேகமாக செடிக்கு அருகில் கிழிந்த இலையைப் போட்டு தனது இலையில் இருந்த பிரியாணியில் பாதியை- டைகருக்காக வைத்து இருந்தாள். டைகர் அதை முகரத் துவங்கி இருந்தது. சின்னு தனது இலையில் இருந்து ஒரு கவளம் தான் எடுத்து வாயில் வைத்து இருப்பாள். திடீரென இடித்த இடி அவளை அதிர்ச்சிக்குள் ஆக்கியது. அதோடு சடசடவென மழை கொட்ட ஆரம்பித்து இருந்தது. மழையில் தனது டைகரைக் காக்க அதை இழுத்துக் கொண்டு வீட்டு ஓரம் இருந்த சன்சேடுக்கு கீழே ஓடிக் கொண்டு இருந்தாள் சின்னு. சில வினாடிகளில் பிரியாணியும், கறியும், இலையும் மழை நீரில் மிதந்து கொண்டு சின்னுவின் காலடியில் வந்து கொண்டு இருந்தன.

டிஸ்கி : மேலே இருக்கும் படத்தில் இருப்பவர்களின் முகங்களில் தெரியும் அதீதமான உணர்வின் பாதிப்பில் எழுதியது.. :(

Wednesday, July 8, 2009

நாடோடிகளும், காதல் ஓடிகளும்


சமீபத்தில் பார்த்த படம் ‘நாடோடிகள்’. பலரும் பல கோணங்களில் யோசித்து இருக்கலாம். கதையின் முக்கிய அம்சங்களில் ஒன்று காதலுக்காக நண்பர்கள் செய்யும் தியாகம். பலத்த இழப்புகளுக்குப் பிறகு நண்பனின் காதலை ஒன்று சேர்த்து வைக்கிறார்கள் நண்பர்கள். பார்க்க அழகாகத் தான் இருக்கிறது.

காதல் என்பது அற்புதமான உணர்வு. காதல் என்ற வார்த்தைக்கு இன்றைக்கு சமூகம் கொடுத்துள்ள வியாக்கியானத்தில் நமக்கு உடன்பாடில்லை.

அது கல்யாணத்தில் முடிந்தால் தான் வெற்றி என்பதில் அர்த்தமில்லை. காதல் என்பதை வரையறுத்துக் கட்டமைக்கும் வேலையை தமிழ் சினிமாவிற்கு நாம் கொடுத்து பல காலமாகி விட்டது. அது தனது தேவைக்குத் தகுந்தாற் போல் மாற்றி மாற்றித் தருவதை நாமும் பே என்று ஏற்றுக் கொண்டு வருகின்றோம்.

உண்மையான நண்பனின் கடமை இதுவா? காதல் என்ற வியாதி வந்ததும் பெற்றோர், உடன் பிறந்தோர், உறவுகள் யாரும் தேவையில்லையா? நண்பர்கள் உதவியதும் கூட்டிக் கொண்டு ஓடுவது தான் உண்மையான காதலா? உயிரைக் கொடுத்தாவது உங்களை சேர்த்து வைப்பேன் என்று குருட்டாம் போக்கா உண்மையான நண்பன் எவனும் சொல்ல மாட்டான்.

காதல் என்பது இன்றைய சினிமாக்களில் டீன் ஏஜ் பருவத்தில் ஏதோ சிறுநீர் கழிப்பது போல் கட்டாயமாகிப் போய் விட்டது. பள்ளி மாணவன் முதல் கொண்டு தனது ஆள் என்று யாரையாவது அடையாளம் காட்ட வேண்டியது இன்றைய கெளரவப் பிரச்சினைகளில் ஒன்றாகிப் போய் விட்டது. இந்த சூழலில் நாடோடிகள் போன்ற படங்கள் ஓடிப் போகும் கலாச்சாரத்தை வழியுறுத்துகின்றது போன்ற பார்வையை ஏற்படுத்துகின்றது.

காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. காதலர்களுக்கு மூளையும் இருப்பதில்லை. ஆம் காதலிக்கும் போது காதலன்/லி யின் பலவீனங்கள் எதுவும் கண்களுக்குத் தெரிவதில்லை. தெரிவதெல்லாம் நல்லவை மட்டுமே.. திருமணத்திற்குப் பின் வாழ்வின் அத்தியாசவசிய தேவைகளில் சிக்குண்டு திணறும் போதுதான் பலவீனங்கள் வெளிப்பட்டு காதல் என்ற நீர்க்குமிழி உடையும் போது வாழ்வும் சீர்கெடுகின்றது.

உண்மையான நண்பன் காதலர்களின் சமூக, பொருளாதார, மனோரீதியிலான விடயங்களை ஆராய்ந்து அவர்களால் மேற்கொண்டு எழும் சவால்களை எதிர்கொள்ள இயலுமா என்று சிந்திக்க வேண்டும். எந்த சவாலையும் சந்திக்க திறமில்லாதவர்களை உசுப்பேத்தி, உசுப்பேத்தி உடம்பை புண்ணாக்குவதை விட நண்பனின் இந்த காதல் என்னும் இனக்கவர்ச்சியை விட்டு அவர்களை விலக்க முயற்சி செய்வதே சாலச் சிறந்தது.

பொதுவாக தமிழ் சினிமாக்களில் வாழ்வின் ஒரு பகுதி தான் வழக்கமாகக் காட்டப்படும். காதல் படம் என்றால் காதலர்கள் இணைவது வரை மட்டுமே.. அதற்கு மேல் காட்ட இயலாது. அப்படியே காட்டுவதானாலும் அது ஹீரோயிச படமாகவோ, வி.சேகர், விசு வகை படங்களாகவோ தான் இருக்கும்.. இன்றைய வயதான ஹீரோக்கள் கூட அப்பா கேரக்டர்களில் நடிக்க விரும்புவதில்லை..

எனவே தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் மாயை ஒரு கானல் நீர் போலத் தான். உண்மையில் காதல் என்னும் அற்புதம் நமது வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்க திருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் காதலியுங்கள். அதில் தான் சுகமே உள்ளது. அப்படியே டீன் ஏஜில் காதல் வர வேண்டும் என்றால் உங்கள் மதத்தில், உங்கள் ஜாதியில், உங்கள் வசதிக்குத் தகுந்தாற் போல் காதலியுங்கள்.

ஆங்ங்ங்.. படத்தைப் பற்றி சொல்லலியே.. படம் எடுக்கப்பட்ட விதம் மிக அருமை.. ஒவ்வொரு கட்டமும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. காதல், பாசம், அன்பு, பெற்றோர் என அனைத்தும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

காதல் செய்ய நினைப்பவர்களும், காதலிப்பவர்களும், காதல் செய்யும் வயதில் அல்லது அந்த வயதுக்கு வரப் போகும் குழந்தைகள் வைத்திருப்பவர்களும் பார்க்க வேண்டிய படம்.

Monday, July 6, 2009

காதல் கறுப்பட்டியும், கறுப்பியும்.. சந்தித்த வேளையில்


ஒரு உருவம் தூரத்தே யாழ்ப்பாணத்தின் தொன்மை வாய்ந்த தெருவில் நடந்து வருவது தெரிகின்றது.. அருகே வர வர அதன் உருவம் நமக்கு விளங்குகின்றது. அடர் நீல நிறத்தில் ஜிப்பா பைஜாமாவுடன் கையில் பிரெஸ்லெட்டுல் மின்னுகின்றது. தங்கத்தின் மின்னலை ஜிப்பாவின் மின்னல் வெட்டுவது நம் கண்ணைக் கூச வைக்கின்றது... கண்களில் பச்சை நிறத்தில் கண்ணாடி அழகைக் கூட்டிக் காட்டுகின்றது. முகம் முழுவதும் முதல்வன் அர்ஜூன் போல பவுடர் கொட்டிக் கிடக்கின்றது. ஒரு கையில் ஒரு சூட்கேஸ், மற்றொரு கையில் ஒரு அட்டைப் பெட்டி.

அந்த உருவம் தெருவை ரசித்துக் கொண்டே வருவது நமக்கு மிக அருகே தெரிகின்றது. பேக் கிரெளண்டில் ஆட்டோகிராபில் வரும் “ஞாபகம் வருதே”க்கு முன்னால் வரும் தீம் மியூசிக் கேக்கின்றது. கேமரா குளோசப்பில் நெருங்கி வருகின்றது.. பார்த்தால் வருவது நம்ம தம்பி காதல் கறுப்பி . (இனி தம்பி என்று வரும்). அதற்கு மேல் குளோசப்பில் காட்டினால் மக்கள் நம்மை அடிக்க வருவார்கள் என்பதால் கேமராவின் கோணம் தம்பியின் பார்வையில் இருந்து விரிகின்றது.

தெரு ரொம்ப பிஸியாக இல்லாமல் அங்கொருவரும் இங்கொருவருமாக நடந்து செல்கின்றனர். தெரிவில் இருக்கும் நாய்கள் எல்லாம் தம்பியைப் பரிதாபமாக பார்க்கின்றனர். தூரத்தே வரும் ஒரு தாத்தா தம்பியின் சட்டையின் ஒளி வெள்ளத்தில் ஆளை சரியாகக் கணிக்க இயலாமல் திணறி நெற்றில் தனது கைகளை வைத்து கண்களைச் சுருக்கி “யாரு?” என்றும் கேட்கிறார்.

முன்னாடி பார்த்தால் சிவப்பு கலர் சுடிதாரில் ஒரு பெண் நடந்து வருகின்றார்.. கொஞ்சம் சுமாரான கலர் தான்.. (இங்கிதம் கருதி வர்ணனை தடை செய்யப்படுகின்றது.) அவர்தான் தம்பியின் கனவுக் காதலி கறுப்பி.
இதுவரை இருந்த தீம் மியூஸிக் மாறி “தந்தன தந்தன தாளம்” தீம் மியூஸிக் இசைக்கின்றது. மீண்டும் தம்பி்யின் முகம் கேமரா கோணத்தில்.. மீண்டும் மியூஸிக்கில் மாற்றம்.. பார்த்த விழி பார்த்தபடி பார்த்திருக்க... (குணா)

பிளந்த வாயை மூடாமல் விழித்துக் கொண்டிருக்கின்றார் தம்பி. கறுப்பியின் செல் பேசி இசைக்கின்றது.

“ஹலோ! யார் கதைக்கிறீயள்”

“ஹலோ அண்ணி! நான் சவுதி அரேபியாவில் இருந்து தமிழ் பிரியன் பேசுறேன்”

“என்னது அண்ணியா? உங்களை எனக்குத் தெரியாதே?”

“உங்களுக்கு என்னைத் தெரியாது.. ஆனா எனக்கு உங்களைத் தெரியும்”

“காதல் கறுப்பி தம்பி ரொம்ப நல்லவருங்க.. அவரு உங்களுக்கு கிடைக்க கொடுத்து வச்சு இருக்கனும்”

“என்னங்க ஒன்னுமே புரியல.. யாருங்க அந்த காதல் கறுப்பி?”

“உங்க முன்னாடியே நிக்கிறாரு பாருங்க.. அவர் தான் காதல் கறுப்பி.. ப்ளீஸ் அவரை லவ் பண்ணுங்க”

“எனக்கு முன்னாடி யாருமில்லயே”

“தலையைக் குனிஞ்சு தரையில் பாருங்க.. ஒரு மூணு அடியில் ஒருத்தர் இருக்காரு பாருங்க அவர் தான்”

போனைக் கட் செய்து விட்டு கீழே குனிந்து பார்க்கிறார்.. சட்டை ஒளியில் கண்கள் கூச உற்றுக் கவனிக்கிறார்.. அதிர்ச்சியடைகிறார் கறுப்பி.

“அடப்பாவி நீயா? மூணு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டு கொடியில் காயப்போட்ட தாவணியைத் திருடி மூணாவது தெரு மல்லிகாகிட்ட மூணு ரூபாய்க்கு வித்துட்டு, துபாய்க்கு ஓடிப் போனவன் தானே நீ?”

தம்பி தனது பழைய காதலியை வெகுநாட்கள் கழித்து சந்தித்த அதிர்ச்சியில் வாயடத்தைக் நிற்க்கிறார். மீண்டும் செல் பேசி இசைக்கின்றது. எண் +0061 ல் தொடங்குகின்றது.

“நான் ஆஸ்திரேலியாவில் இருந்து கானா பிரபா பேசுகிறேன்”

“உங்க முன்னாடி இருக்குற தம்பி ரொம்ப நல்லவரு.. வல்லவரு.. நாலும் தெரிஞ்சவரு.. மலைகளை எல்லாம் நல்லா தெரிஞ்சவரு அந்த நாலு பேரை மலைக்கு கூட்டிக் கொண்டு போன மாதிரி உங்களையும் கூட்டிக் கொண்டு போவார்”

கறுப்பி போனை கட் செய்து விட்டு கோபமா பார்க்கிறார்.

“அடப்பாவி தமிழா.. நீ இப்படியெல்லாமா செஞ்சு இருக்கா?”

தம்பி ஒன்றும் புரியாமல் விழிக்கிறார்.. மீண்டும் செல் அழைக்கிறது.. “ஹலோ நான் சிங்கையில் இருந்து நிஜமா நல்லவன் பேசுறேன்” என ஆரம்பிக்கிறது.. அதை அடுத்து சம்போ சிவசம்போ தீம்(நாடோடிகள் பட சேஸிங்) தீம் மியூஸிக் பிண்ணணியில் கறுப்பி பேசுகிறார்.. பேசுகிறார்.. பேசிக் கொண்டே இருக்கிறார். இடையில் லண்டன், பெர்லின், KL, பாரிஸ், சென்னை, டெல்லி, பெங்களூர் என்று வரிசையாக செல் பேசி அலறுகின்றது.

கறுப்பியை தம்பி காதலுடன் பார்த்துக் கொண்டே இருக்கிறார். கறுப்பியோ டென்சனில் உச்சத்தில் குமுறிக் கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறார்.. இப்போது செல் பேசியை அணைத்து விட்டு, “ஏண்டா படுவா? இப்படி உளறுவாயா இருந்து இருக்கியே.. என் தாவணியை திருடியத்தை தவிர உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. என்னப் பற்றி என்ன என்னவோ எழுதி வச்சு இருக்க நீ.. உன்னை.. ” கோபத்தில் பல்லை நறநறவென கடிக்கும் நேரம் மீண்டும் செல் பேசி அழைக்கிறது.. எண் +974 என்று ஆரம்பிக்கிறது.

“நான் ஆயில்யன் பேசுகிறேனுங்க...”

“ஆயில்யனா?...” கறுப்பியை பேச விடாமல் ஆயில்ஸ் தொடர்ந்து பேசிக் கொண்டே செல்கிறார். கறுப்பி பேசுவதற்கு மைக்ரோ வினாடி நேரம் கூட தராமல் பேசிக் கொண்டே இருக்கிறார்.. களைத்துப் போன கறுப்பி மயங்கி சரிகின்றார்.. தனது உயிர்க்காதலி மயங்குவதைக் கண்ட தம்பி அவரை தனது கரங்களில் சிறு குழந்தையைப் போல வாங்கிகின்றார்... அய்யகோ... கறுப்பியின் கனம் தாளாமல் தம்பி கீழே சரிகிறார். தம்பியின் மேலே கறுப்பி மயங்கி விழுகிறார்.. ஆயிரத்தில் ஒருவன் ஜெயலலிதா மாதிரி தம்பி கீழே கிடக்க .. அவருக்கு மேலே கறுப்பி கிடக்கிறார்.. கறுப்பியை தள்ளி எழ இயலாமல் தம்பி விழி பிதுங்கி கிடக்கிறார்.. பழைய தூர்தசனின் இரவு நேர ரீங்ரீங் மியூசிக் இசைக்கிறது.. கேமரா மெல்ல எழும்பி தூரமாகி கொண்டே செல்கின்றது... தம்பியும் கறுப்பியும் புள்ளியாகத் தெரிகிறார்கள்..

ஸ்கிரீன் ஸ்லைட் வருகிறது.. “ நீண்ட காலத்திற்குப் பின் சந்தித்த காதல் ஜோடிகள் தங்கள் பழைய கதைகளைப் பேசி மகிழட்டும்.. வாருங்கள் நாங்கள் கிளம்பலாம்.. அன்புடன் தமிழ் பிரியன்”

டிஸ்கி 1 : இது காதல் கறுப்பியைக் கலாய்ப்பவர்கள் சங்கத்திற்கான பதிவு.. (கா.க.க.ச)
டிஸ்கி 2 : தம்பியின் புகைப்படத்தை இணைக்க முடிவு செய்த போது, அதைப் பார்க்கும் ரசிகைகள் தம்பியை தொல்லை செய்வார்கள் என்பதால் முகத்தை மட்டும் கொஞ்சம் அழகு குறைந்த கமலின் முகத்தை மாற்றி வைத்துள்ளோம். இதை செய்து கொடுத்த ஆயில்யனுக்கு நன்றிகள்.

Thursday, June 18, 2009

‘ஸ்பிரிங், சம்மர், ஃபால், வின்டர்... அண்ட் ஸ்பிரிங்’

சமீபத்தில் சென்னையில் பதிவர்களுக்காக சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்ட கொரிய திரைப்படம் 2003 ல் வந்த கிம்-கி-டுக் இயக்கிய Spring, Summer, Fall, Winter and Spring. சென்னை பதிவர்கள் மட்டும் தான் பார்க்கனுமா... நாமலும் பாத்தாச்சு.

சிம்பிளான கதை : சாதாரண சீடன் குருவாக மாறும் கதை.. அவ்வளவு தான்.. படம் சுமார் 1:45 மணி நேரம் ஓடுகின்றது. படத்தில் பிரமிக்க வைத்தது ஒளிப்பதிவு. படத்தின் தலைப்புக்கு தகுந்தாற் போல் நான்கு கால நிலையிலும் படமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கால நிலையும் கச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளது. ஆச்சர்யமான விஷயம்.. ஒவ்வொரு சீனுக்கும் அதற்குத் தகுந்தாற் போல் வெளிச்சம் வரும் வரை காத்துக் கொண்டு இருந்து எடுக்கப்பட்ட விதம்.. அற்புதம்.

படம் குறித்து நண்பர் பைத்தியக்காரன் @ சிவராமன் எழுதிய பதிவைப் படித்தால் கதையைப் புரிந்து கொள்ளலாம்.
http://naayakan.blogspot.com/2008/02/blog-post.html

கிம்-கி-டுக் குறித்து லக்கிலுக் எழுதிய பதிவு.

http://www.luckylookonline.com/2009/05/blog-post_6571.html

படத்தின் வசனம் ரொம்ப கம்மி. கடைசியில் அரை மணி நேரத்திற்கு படத்தில் வசனமே தேவையில்லை. கடைசியில் முழு வசனத்தையும் கொடுத்துள்ளேன். பொறுமையுள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.







படத்தின் முழு வசனங்கள்.
Spring, Summer, Fall, Winter...And Spring...

00:01:13
Spring Wake up - Master! - Yes, my boy? Where do you want to go? I want to pick herbs for medicine Then let us go. Come along I'm going to pick herbs now, Master. Watch out for snakes. - Wait for me, Master. - Yes I've picked a lot of herbs, Master. Really? You've picked a lot? Careful! Stop! Throw this away, my child. Why? It looks the same, Even though it looks the same, this is a deadly plant. The other one can save lives. It still looks the same. How can I know? look closely. Here at the tip
you can see a white line. If you ate this plant, you'd die. You mustn't pick this sort of plant next time. - Is this one alright to eat? - Yes, this one is good. Master, there is a stone on my back. Please take it off. - Does it torment you? - Yes, Master Didn't you also do it to the fish? Yes, Master. Didn't you also do it to the frog?Yes, Master. Didn't you also do it to the snake? Yes, Master. Stand up! Walk around! I can't walk, it's too heavy. How do you think the fish, the frog and the snake endured it? It was wrong to do it, Go and find all the animals. and release them from the stones. Then I will release you too. But if any of the animals, the fish, the frog or the snake is dead, you will carry the stone in your heart, for the rest of your life.

00:21:05
Summer You look so very healthy. This tree is over years old. You will become as healthy as this tree. Greetings. Come in. Will she recover, wise one? I believe that her soul is suffering. When she finds peace in her soul, her body will return to health. Please take care of her! Excuse me! You are not allowed to sit on that. The master will be angry with you. Why are you praying all of a sudden? Would you like to come along? Softly! It must prepared with a true heart. Drink!It will clear your head. The boat is floating away! Stop it!
Stop it! Have you recovered now? Yes, I have completely recovered. Strange. When I can't see you, I go insane. What is wrong with me? Cold! It's cold! What shall I do? I did wrong, Master. Forgive me. That happens by itself. It is just nature. Are you still sick?No! Then it was the right medicine. Now that you have recovered, you can leave this place. No, Master! She can't! Lust awakens the desire to possess. And that awakens the intent to murder. Get in

00:51:23
Fall
That was tiring, huh?MAN, 30, FLEES AFTER MURDERING WIFE. You have grown a lot! Get in! So? Have you led a happy life up till now? Tell me something interesting about your life. The world of men has grown. agonizing for you, hasn't it? Leave alone, Master. Can you not see that I am suffering? What causes you to suffer? My only sin was to love. I wanted nothing except her. So? She went with another man. Ah, that was it. How can that be? She said that she'd love only me. - And then? - I couldn't bear it any more Didn't you know beforehand. how the world of men is? Sometimes we have to let go of things we like.
What you like, others will also like! But still, how could she do that? The bitch! - Is it so unbearable for you?- Yes!Master! Master! Young fool! Young fool!Though you can so easily kill, you yourself cannot be easily killed. Carve out all of these characters with the knife And while you cut out each one, drive out the anger from your heart. Holy one! Holy one!We've come to investigate something- Drop the knife! - Otherwise I'll shoot!What are you doing?
Continue cutting!Prajnaparamita Sutra. It helps restore inner peace. Please let him finish
How long will it take? Until tomorrow morning. - No connection b- No? It's quite a deep valley, isn't it? What?They make white paint from these mussels Stand up. It's time to go
Detective Choi, let's go as we are. Detective Chi, the boat won't go forwards. Ah, now it's moving

01:18:59
Winter


01:38:42
And Spring

Tuesday, June 16, 2009

திருடி நம்பர் ஒன்

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். ஓரளவு இருக்கைகள் நிறைந்து இருந்தன. அரை மணி நேரப் பயணம் தான். மதுரையில் இருந்து வரும் வண்டியில் தான் இருக்கை கிடைக்கும் என்பதால் அந்த தனியார் வண்டியில் ஏறி இருந்தோம். இருவர் அமரும் சீட்டில் மகளை வைத்துக் கொண்டு மனைவி ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்க நான் உள்பகுதியில் அமர்ந்து இருந்தேன். மனைவி, குழந்தையுடன் செல்லும் போது எப்போதுமே கொஞ்சம் கவனமாக இருப்பது வழக்கம்.

வத்தலகுண்டு பேருந்து நிலையத்தை விட்டு வண்டி கிளம்பத் தயாராக இருந்த போது தான் முன் பகுதியில் அந்த பெண்மணி ஏறினாள். வண்டி முழுவதும் இருக்கைகள் நிறைந்து இருந்தன. நேராக என்னிடம் வந்த அவள் பின்னால் இருக்கும் மூவர் இருக்கையில் இருக்கும் ஒரு காலி இடத்தைக் கை காட்டி அங்கே போய் அமரச் சொன்னார். சுற்றும் முற்றும் பார்த்தால் ஒரு பெண் அமர்வது போன்ற இருக்கை ஏதும் காலி இல்லை. அந்த மூவர் இருக்கையில் ஏற்கனவே தடியான இரு ஆண்கள் அமர்ந்து இருந்தனர். வேறு வழி இல்லை.. மனைவியிடம் சொல்லி விட்டு மூவர் இருக்கைக்கு சென்றேன். அங்கிருந்த இருவருக்கும் இடையிலேயே எனக்கு இருக்கை கிடைத்தது.

இப்போது தான் அந்த பெண்மணியை நன்றாக பார்த்தேன். வயது 35 க்குள் இருக்கும். அவளது பார்வையே சரியில்லை. ஏனோ ஒரு திருட்டு முழி இருந்தது. என் மனைவியின் அருகே அமர்ந்தவள் என் மனைவியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்தாள். தெரியாவதவர்களிடம் என் மனைவி பேச மாட்டாள். அந்த பெண்மணி வம்படியாக பேச்சுக் கொடுப்பதாகவே எனக்குப் பட்டது.

அடிமனதில் பய ஓட்டம் ஆரம்பித்து இருந்தது. சென்ற வாரம் மனைவியின் ஊரில் இதே போல் பேருந்தில் அருகே அமர்ந்த பெண்ணிடம் திருடி விட்டு கம்பி நீட்டிய பத்திரிக்கை செய்தி ஏனோ நினைவுக்கு வந்தது. கழுத்தில், காதில் நகை போட்டிருக்கின்றாள். இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக மாற்றப்பட்ட வளையல்களை வேறு போட்டு இருக்கிறாள். அதை நினைத்ததும் இன்னும் டென்சன் அதிகமாக ஆரம்பித்து இருந்தது. நகையின் எடையில் எந்த மாற்றமும் இல்லாமல், மாற்றிக் கொண்டு வந்ததன் மூலம் பல ஆயிரம் ரூபாய்களை விழுங்கி இருந்தவை அந்த வளையல்கள். என் அம்மாவிடம் திட்டு வாங்க முடியாது என்பதால் நெக்லஸை வேறு போட்டுக் கொண்டு வந்து இருக்கிறாள்.

அந்த பெண்ணுடன் என் மனைவி பேச ஆரம்பித்து இருப்பது தெரிந்தது. என்ன இவள்? பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் யாரென்றே தெரியாத பெண்ணுடன் எப்படி பேசிக் கொண்டு இருக்கிறாள். எரிச்சலாக வந்தது. பேருந்து நிலையத்தை விட்டு பேருந்து வெளியேறும் நேரம் 20 பேருக்கு மேல் நின்று கொண்டு வந்தனர். அவர்கள் வேறு பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டு இருந்தனர்.

இடையில் கிடைத்த கேப்பில் பார்த்த போது, இப்போது அந்த பெண்மணியின் மடியில் என் மகள். பஸ்ஸில் அமர்ந்ததும் தூங்கி விடுவாள். எப்படி கொடுத்தாள் இவள்? கோபம் முட்டிக் கொண்டு வந்தது. மகள் கழுத்தில் செயினும், காலில் தங்க கொழுசும் உள்ளது.

வண்டி தேவதானபட்டியைக் கடந்து இருந்தது. ஆட்கள் இன்னும் ஏறி வண்டி நிறைந்து இருந்தது. கொஞ்சம் எழுந்தே பார்க்க முடிந்தது. நான் பார்ப்பதைக் கூட கவனியாமல் இருவரும் முழு அரட்டையில் இருந்தனர். பதற்றம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. என்ன நடக்குமோ என்று .. எதுவாக இருந்தாலும் அந்த பெண் இறங்கும் போது மனைவியிடம் சென்று நகைகளை சரிபார்க்க சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

பெரியகுளம் பேருந்து நிலையத்திற்கு முன் உள்ள நிறுத்தத்திலேயே அந்த பெண் இறங்க நாங்கள் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். வேகமாக அந்த பெண் என்னை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே இறங்கிச் செல்ல என்னை அடுத்த இருந்த ஆளை முட்டித் தள்ளி மனைவியின் இருக்கையை அடைவதற்குள் அந்த பெண் இறங்கி, வண்டியும் கிளம்பி இருந்தது.

காதுக்கு அருகில் சென்று திட்ட ஆரம்பித்து இருந்தேன்.. மனைவியின் முகத்தில் ஒரே சிரிப்பு.. ”என்னங்க நீங்க... அவங்க உங்க அப்பாவோட பிரண்டு பிரான்ஸிஸ் அங்கிள் மகள்.. நம்ம கல்யாணத்து கூட வந்து இருந்தாங்களே? ”

“அப்படியா? நான் கவனிக்கலியே” என்றேன் பரிதாபத்துடன்.. “ ஆமா.. கல்யாணத்து அன்றைக்கு யாரைத் தான் பார்த்தீங்க.. பலி ஆடு மாதிரி தானே முழிச்சுக்கிட்டு இருந்தீங்க..” மனைவி சொல்ல உண்மையில் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டு இருந்தேன்.

Friday, June 12, 2009

அறுபதாம் கல்யாணத்திற்கு வாங்க ( உரையாடல் போட்டிக்கான கதை)

"வாய்யா ! வா! என்ன திடீர்னு இந்த பக்கம்.. எப்பவுமே கூட இருக்கிற ஆளு தானே.. ஸ்பெஷலா வெளியே இருந்து வந்து உட்கார்ந்து இருக்க”

“ஒரு அழைப்பு கொடுக்க வந்தேன் ... நீங்க ரொம்ப முக்கியமான ஆளாச்சே.. அதான் ஸ்பெஷலா கூப்பிடலாமுன்னு”

“அதுவும் சரி தான்... சொல்லு.. என்ன விஷயம்?”

“எனக்கு அடுத்த வாரம் சஷ்டியப்த பூர்த்தி விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்க... எனக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லைன்னாலும் என்னோட பசங்க, பேரக் குழந்தைகளுக்காக இதையெல்லாம் ஒத்துக்க வேண்டி இருக்கே.... என்னோட கனவு வாழ்க்கையில் அடுத்த மாதத்தோடு 60 வயசு முடியுது..கண்டிப்பா வரனும்”

“என்னோட நெற்றியில் ஏதாவது இருக்கா பாருங்க..”

“நெற்றியில்.....ம்ம்ம் ஒன்றுமில்லை.. புருவத்திற்கு மேல் ஒரு சிறு தழும்பு மட்டும் உள்ளது”

“அதில்லை... நெற்றியில் இளிச்சவாயன், ஏமாளி இப்படி ஏதாவது எழுதி இருக்கா?

“என்ன இப்படி சொல்றீங்க?”

“ஆமா.. நீ பிறந்தது முதல் 30 வருடமா என்னிடமே இருக்குற மனசாட்சி நீ.. என்னிடமே அறுபதாம் கல்யாணம் என்கிறாயே?”


“ம்ம்ம் அதுவும் உண்மை தான். உங்களுக்கு தெரியாதது இல்ல..”

“இருந்தாலும் நீயே சொல்லு என்ன விஷயம்ன்னு”

“எல்லாமே ஒரு கனவு வாழ்க்கையா இருக்கு.. இன்றைக்கும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கு. அவளை சந்தித்த அந்த முதல் கணங்கள்.. இந்தி தேர்வுகள் பிப், ஆகஸ்ட் இரண்டாம் சனி, ஞாயிறில் தான் நடக்கும்.. அப்படியான ஒரு 1991 ஆகஸ்ட் 11 ந்தேதி.. ஞாயிற்றுக் கிழமை தான் அவளைப் பார்த்தேன். என்னோட பிரவேசிகா தேர்வுக்கான நேரம். நான் தேர்வு எழுதும் இடத்தில் தான் அவளும் தேர்வு எழுதினாள். முதலில் பார்த்ததுமே ஏனோ ஒரு பிடிப்பு ஏற்ப்பட்டு விட்டு இருந்தது.”

“ம்”

“முதலில் கூப்பிட்டதே ‘அண்ணா’ என்று தான்.. இப்போதும் பேசும் போது சொல்லி கிண்டல் செய்வாள். Viva தேர்வுக்கு எனக்கு அடுத்து அவளது பெயர். சீக்கிரம் போக வேண்டுமென்பதற்காக என்னிடம் வந்து அவள் முதலில் போக அனுமதி கேட்டாள்.. விடலையே நானு.. ஆண் வர்க்க திமிர் அப்பமே..”

“தெரிந்தது தானே.. மேலே சொல்”

“1979 ல் பிறந்த எனக்கு அப்ப என்ன வயசு இருக்கும்ன்னு நீங்களே பார்த்துக்கங்க.. அடுத்த விசாரத் வகுப்பு போகும் போது பார்த்தால் அவளும் எங்க வகுப்பிலேயே சேர்ந்து இருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி... அப்போது ஆரம்பித்தது அந்த பிணைப்பு. கண்களால் கவிதைகளைப் பகிர்ந்து கொண்ட நேரம். அடுத்த இரண்டு ஆண்டுகள் இறக்கைகளைக் கட்டிக் கொண்டு பறந்து கொண்டு இருந்த காலம். அவளது சிரிப்பும், முகமும் என்னை அவளை நோக்கி மேலும் மேலும் இழுத்துச் சென்றது. சொல்லாமலேயே இருமனங்கள் இணைந்தன. வாழ்க்கையின் ஏதோ புரியாத எல்லைகளை அடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டேன்.. அவள் பிரிந்து செல்லும் வரை.”

“நல்லவேளை... அந்த பொண்ணு தப்பிச்சிட்டா”

“ஆமா.. பிரவீன் முடிந்ததும் அவள் பறந்து விட்டாள். 1993 ஆகஸ்ட்டுக்குப் பிறகு இன்று வரை அவளைக் காணும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. எங்கோ மாயமாகி விட்டாள். அவளது சதை, இரத்தம், எலும்பாலான உடல் மட்டுமே என்னை விட்டுப் பிரிந்து இருந்தது. ஆனால் அவளுடனான எனது கனவு வாழ்வுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. ஒரு மானசீக உறவாக, நல்ல நிலத்தில் இடப்பட்ட விதையாக, அந்த நினைவுகள் ஒரு விருட்சமாக மாறி இருந்தன. அவ்விருட்சம் நிலத்தில் ஆழப் புதையப் போகும் ஒரு பரந்து விரிந்த ஆலமரமாக ஊன்றப் போவதை அறியாமலேயே இருந்தேன்.”

“ம்ம்ம் சுவாரஸ்யமாகத் தான் இருக்கு.. மேல சொல்லு”

“அவளுடைய கண்களோடு பேசிக் கொண்டு இருந்த அந்த நாட்களை நினைவில் வைத்துக் கொண்டே எனது வாழ்வு கழிந்தது. ரம்மியமான வாழ்க்கை. அவளுடனான எனது பிணைப்பை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்த பல மொழிகளிலும் அதற்கான வார்த்தையைத் தேடி களைத்துப் போய் விட்டேன். காதல், பாசம், நேசம் போன்ற வார்த்தைகள் எல்லாம் ஏதோ குறைவுடையவையாகவே எனக்கு தோன்றுகின்றது.”

“அந்த உறவு விருட்சம் மெல்ல மெல்ல வளர்ந்து செடியாகி, மரமாகி, பூத்துக் குலுங்க ஆரம்பித்து இருந்தது. இலையுதிர்காலமும், வசந்தகாலமும் மாறி மாறி வரத் துவங்கி இருந்தன. எப்போது எப்படி எங்கு துவங்கியது என்று சொல்லத் தெரியவில்லை. அவளை நினைக்காத கணங்கள் கடினமானதாக இருந்தன. அவளது நினைவுகள் என்னை விட்டு அகலாமல் இருக்க எனது கணிணியில் கடவுச்சொல்லாகவே அவளது பெயர் மாறி இருந்தது.”

“என்ன இழவோ.. இலக்கியம் மாதிரி என்னவோ பின்னாத்தற.. நேரா மேட்டருக்கு வா”

“வேலை நிமித்தம் 1998 ல் துபாயில் போய் இறங்கினேன் என் கனவு வாழ்க்கையையும் மனதில் நிறைத்தபடி.. பெற்றோர்களின் தீவிர எதிர்ப்பை முறியடித்து.. அவர்கள் முழு சம்மதத்துடன் திருமணம், பின்னர் குழந்தைகள் என கண ஜோராக வாழ்க்கை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்ந்தது. என்னவளின் விருப்பத்திற்குத் தகுந்தாற் போல் இழைத்து இழைத்து கட்டப்பட்ட வீடு.. வீட்டின் முன் தோட்டம், மொட்டை மாடி ஊஞ்சல்கள் என நினைவுகளில் மறக்காதவை.”

“நான் வேலையில் இருந்து களைத்துப் போய் வரும் போது வியர்வையை அவள் துடைத்து விடும் தருணங்கள், மழையில் வேண்டுமென்றே நனைந்து கொண்டு வந்து அவளது முந்தானையில் துடைத்துக் கொள்வதற்காக ஒளிந்து கொள்ளும் தருணங்கள், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தாலும் அவளிடம் செல்லமான திட்டு வாங்கிக் கொண்டே எழ வேண்டுமென்பதற்காக போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கணங்கள் என பெட்ரோலும், ஆயில் வாசனையுமான எனது கணங்கள் அவளது நினைவில் மல்லிகை, ரோஜாவின் நறுமணங்களுடன் கனவில் நகர்ந்தன.”

“வெயிட்..வெயிட்... இதெல்லாம் என்னது? கற்பனையிலேயே இம்புட்டு வாழ்க்கையா வாழ்ந்த?”

“ஆமாம்.. தனிமையாக இருக்கும் நேரங்களில் எல்லாம் நான் தனிமையை சிறிது கூட உணரவில்லை. இருவரும் இணைந்து சுற்றிய ஊர்கள், ஜாலியாக சுற்றிய வெளிநாடுகள் என அசை போட வைக்கும் நினைவுகள். அவளது மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு தொலைகாட்சி பார்க்கும் அந்த கணங்களும், அவளது கை விரல்களின் கோதுதல்களில் லயித்து உறங்கி விடும் பொழுதுகளும், அவ்வாறு தூங்கிப் போய் எழும் போது அவள் காட்டும் பொய்க் கோபமும், மொட்டை மாடி மழைத் தூறல் நனைதல்களும், அதீத உணர்ச்சிகளுடனான மதிய நேர கூடல்களும் நெஞ்சை நிறைத்து இருக்கின்றன.”

“எனக்கே ஒரு மாதிரி இருக்குய்யா... மேல சொல்லு”

“இரண்டு குழந்தைகள்.. ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக.. குழலினிது யாழ் இனிது என்பர் குழந்தைகளின் மழலைச் சொல் கேளாதவர் என்பது நம் மூத்தோர் சொன்னது. முற்றிலும் உண்மை. நான் குழந்தைகளை கண்டிக்கும் போது அவளும், அவள் குழந்தைகளைக் கண்டிக்கும் போது நானும் குழந்தைகளுக்காக பரிந்து பேசுவதும், பின்னர் ரகசியமாக சமிக்ஞை செய்து கொள்வதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் சில உணர்வுகள்.”

“ம்”

“உடல் ரீதியான எந்த தேவைகளும், நினைவுகளும் அற்றதாகவே அந்த வாழ்க்கை இருந்தது. அவளுக்கு பிடிக்காதவைகளை நான் செய்வதில்லை. எனக்குப் பிடிக்காதவைகளை அவள் செய்வதில்லை. புகை, மது, சூது,பிற மாது போன்றவை அவளுக்கு முற்றிலும் விருப்பமில்லாதவை. அவளுக்கு பிடிக்காது என்பதற்காக இவைகளை விட்டும் முற்றிலும் விலகி இருந்தேன். எனது கனவு வாழ்வில் மட்டும் இன்றி நிஜத்திலும் அவளுக்காக இவைகளை விட்டும் தள்ளியே இருந்தேன். ஒரு அறிஞன் கூறுவான் “ ஒருவன் தவறு செய்யவில்லை என்று கூறினால், அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பொருள்”. ஆனால் மேற்சொன்னவைகளுக்கு வாய்ப்புகள் தானாகவே வந்த போதும் எந்த சிறு குழப்பமும் இல்லாமல் அவைகளை உதறித் தள்ளினேன்.. எல்லாம் எனது கண்ணம்மாவிற்காக.. ஆங்.. சொல்ல மறந்து விட்டேன்.. என்னவளை செல்லமாக கண்ணம்மா என்று தான் கூப்பிடுவேன். எனக்கும், அவளுக்கும் பாரதியை மிகவும் பிடிக்கும்.”

“பாரதியின் அடிமையா நீ.. அதான் இப்படி கற்பனையில மிதக்குற”

“ஆம்.. இருவருக்கும் இடையே அவ்வப்போது நடக்கும் ஊடல்களுடன் சண்டை நடக்கும். எனக்கு அவளுக்கு பிடித்த மாதிரி வாங்கித் தரும் சட்டைகளும், அவளுக்கு பிடிக்காத கலரில் எனக்கு பிடித்த மாதிரி வாங்கித் தரும் நீல நிற சேலைகளும் சண்டைகளை வளர்க்கும்.. ஒரு விதமான இன்ப அனுபவங்களோடு.. எனக்காக அவள் வாங்கி வந்த கல்கி, அசோகமித்திரன், JK, சுந்தர ராமசாமி, முதல் கொண்டு சுஜாதா, வைரமுத்து வரையிலானவைகளும், அவளுக்காக நான் வாங்கிய Mills & Boon, Ayn Rand, Jeffery Archer, Sidney Sheldon, J._K.Rowling போன்றவை எங்களது வீட்டை நிறைத்து வைத்திருக்கும்.”

“வாவ்... ரசனையான தம்பதிகளா இருந்து இருக்கீங்களே..”

“இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்தி திருமணமும் செய்து கொடுத்தாகி விட்டது. இருவரின் மூலமும் எங்களுக்கு பேரக் குழந்தைகள் உள்ளனர். வாழ்க்கை இன்பகரமாக சென்று கொண்டு இருந்தது.. 2005 வரை..”

“ஏன்? என்னாச்சு?”

“அப்போது தான் நிகழ்காலம் உறைக்க ஆரம்பித்தது. உலக வாழ்க்கையும், கனவு வாழ்க்கையும் இணையாதாமே... வீட்டில் எனக்கு பெண் பார்க்கத் துவங்கி இருந்தனர். அவர்களிடம் சொல்லவா முடியும்.. எனது கனவு வாழ்க்கையில் பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று.. இந்த ஜென்மத்தில் அவளை மறக்க முடியும் என்று தோன்றவில்லை.. அவள் எங்கிருக்கின்றாள் என்று தெரிந்திருந்தாலும் பார்க்க வேண்டுமென்றோ, பேச வேண்டுமென்றோ தோன்றாத அளவில் அவள் என்னுள் தொடச்சியான கணங்களில் நிறைந்து இருக்கின்றாள்”

“திருமணமும் நடந்தது. நிஜ வாழ்க்கைத் திருமணம் என்னை ஏமாற்றிடவில்லை. அன்பான கணவனாக மனைவிக்கும், பாசமுள்ள தந்தையாக மகனுக்கும் வாழ்கின்றேன்.”

“அடப்பாவி.. நல்லவேளை அப்பவாவது நிகழ்காலத்திற்கு வந்தியே”

“அதே நேரத்தில் கனவு வாழ்க்கை எந்த குறையும் இலலாமல் இன்று சஷ்டியப்த பூர்த்தி வரை வந்து விட்டது. கண்டிப்பாக அதற்கு வந்து விடுங்கள்”

“நான் இல்லாமலா.. கண்டிப்பா உன் கூடவே எப்போதும் போல் இருப்பேன்.. ஜமாய்!.. வாழ்த்துக்கள்.. உன்னிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றது”

“சொல்லுங்களேன்”

“நகுலனின் டைரியில் இருந்து..
27-12-73
வரிகள்

எப்பொழுதும் உன் நினைவு - நீ எங்கேயோ இருக்கிறாய் - நான் எங்கேயோ இருக்கிறேன் - நீ மணமானவள் - நான் மணமாகாதவன் - நான் உன்னைக் காதலித்தேன் என்பதில் தவறில்லை.. (இப்போதும் காதலிக்கிறேன் - என்று சொல்வதில் பொய்யில்லை) -அதைப் போலவே நீ என்னைக் காதலிக்கவில்லை, என்னிடம் அன்பு காட்டவில்லை, அலக்ஷியம் செய்கிறாய் என்று சொல்வதும் தவறு. நம்மிடையே உள்ள உறவு தான் என்ன?...
என்றோ ஒருநாள் உன்னை நான் பார்த்தேன். அன்று என் கதை முடிந்தது.”

முற்றும்.

(உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

Thursday, June 11, 2009

32 கடல், மலை தாண்டி பதிவு போடும் முறை


கடைசியில் 32 கேள்விகள் விளையாட்டு நம்மிடமே வந்து விட்டது. .சரி நேரா மேட்டருக்கு போய்டலாம்..

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

முதல் முதலில் இணையத்தில் நுழைந்த போது யூனிகோட் தமிழ், கணிணியில் தெரிய வைக்கத் தெரியாமல் அவதிப்பட்டேன்... பின்னர் தேடுபொறி மூலம் ஒரு தமிழ் கூகுள் குழுமத்தில் நுழைந்த போது புனைப்பெயர் தர வேண்டி வந்தது.. ஏதோ ஒரு மயக்கத்தில் தமிழ் பிரியன் என்று கொடுத்தேன்... இதுவே இன்று நிலைத்து விட்டது. எனது பெயர் எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

கல்யாணத்துக்கு முன்னாடி வரை எத்தனை வருடத்துக்கு முன்னாடி அழுதேன் என்று யோசிப்பேன்... கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்பவே நம்ம உறவுகள் நம்மை அழ வச்சு பழக்கிட்டாங்க.. அதனால் அழுகை எல்லாம் ரொம்ப சாதாரணம் ஆயிடுச்சு .. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் நான் சோகமாக இருக்கும் நேரங்களில் சில குறிப்பிட்ட சோகமான படங்களைப் பார்ப்பேன். அதில் மூழ்கி விடும் போது நம்ம கவலை எல்லாம் பஞ்சு மாதிரி பறந்து பூடும் .... பத்து நாட்களுக்கு முன் தன்மாத்ரா படம் மறுபடியும் பார்த்தேன்.. அப்ப அழுதேன்.


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு ரொம்ப பிடிக்கும்... தமிழ், ஆங்கிலம் இரண்டும்.. படிப்பவர்களுக்கு பிடிக்குமான்னு தெரியல.

4).பிடித்த மதிய உணவு என்ன?
நன்றாக ஆறின சோறு, புளிக்காத தயிர், அதோட ஆட்டுக் கறியில் நெஞ்சுக்கறியை மிளகு சீரகம் போட்டு சுக்கா செய்து கொடுத்தால் சந்தோசமா சாப்பிடுவேன். அப்படியே கொஞ்சம் வெங்காயம், இரண்டு துண்டு எலுமிச்சம் பழமும்... :)


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இந்த கேள்வியை நிறைய பேர் குழப்பி இருக்காங்க.. நான் என்னையே போன்ற ஒருவனுடன் நட்பு வச்சுக்க முடியுமா என்பது தான் இதன் சாராம்சம் என்று நினைக்கின்றேன். Same frequency கிடைக்காம தானே அலைகின்றோம்.. உடனே நட்பு வச்சுக்குவேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
யோசிக்காம பதில் சொல்வேன்.. அருவி தான் என்று.. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உருண்டு பிறண்டு வளர்ந்தவனுக்கு அருவியை விட மனதை மயக்கும் இடம் இருக்குமா என்ன?

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவருடைய தோற்றத்தைத் தான் பார்ப்பதாக நினைக்கிறேன். சில முக்கிய நேரங்களில் கண்களைப் பார்த்துப் பேசும் வழக்கம் இருக்கிறது.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் : தாராள மனம் (ஹிஹிஹி நம்பனும்), நேரந்தவறாமை.
பிடிக்காத விஷயம் : எல்லாரிடமும் ரொம்ப மென்மையாக நடந்து கொள்வது... (மாற்ற முடியலீங்க..)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
பிடித்தது : எந்த சூழலில் பொய் சொல்லாமல் இருப்பது, பாசத்தைக் கொட்டுவது
பிடிக்காதது : அவளிடம் மட்டும் சொல்லி விடுவேன்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
கண்டிப்பாக மனைவி, மகனுடன்.. :)

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளைக் கலர் கை வைத்த பனியன்(புதுசுங்க.. எங்கயும் கிழிய வில்லை இன்னும்), கட்டம் போட்ட லுங்கி.. அறைக்கு வந்ததும் உடை மாற்றி விடுவேன்... :)

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
சில காலமாக “தும்பி வா தும்பக் குடத்தின்” என்ற வாணி விஸ்வநாத் பாடிய மலையாள பாடல் தான் பேவரைட்டாக இருக்கின்றது.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வான நீலம் தான் பிடிக்கும்... ஆனால் அதில் எழுதினால் படிக்க முடியுமான்னு தெரியலியே.. :)

14.பிடித்த மணம்?
மல்லிகைப் பூ மலரும் நேரம் வரும் சுகந்தமான மணம்.. ;-)

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

கண்மணி டீச்சர் - நாலு மாசமா பதிவுலகை விட்டு காணாம போய் இருக்காங்க.. எங்க பதிவுலக குரு.. திரும்ப பதிவு போட ஒரு அழைப்பா இருக்கட்டும்.

காதல் கறுப்பி தமிழன் - இவனுக்குள்ள என்னமோ இருக்குய்யா என்று எப்பவும் நான் யோசிக்கும் நண்பன்(ர் - நல்லா இல்லீங்க.. :) )

நாணல் - நல்ல திறமை உள்ள என் சகோதரி.. வித்தியாசமான படைப்புகளை எப்போதும் இவரிடம் இருந்து எதிர்பார்ப்பேன். அடுத்த கவிதாயினி போஸ்ட்டுக்கு தகுதியானவர்.. இவருக்கு நேரம் கிடைத்தால் சிறப்பான படைப்புகளை எதிர்பார்க்கலாம்.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
நம்ம ஆயில்யன் அண்ணன்... மரியாதைக்குரியவர். இவரது பதிவில் எதை எடுக்க எதை விட... எல்லாமே பொறுப்பான பதிவுகளா இருக்கும். ஈஸ்ட் ஆர் வெஸ்ட் ஆயில் அண்ணா இஸ் த பெஸ்ட் அப்படின்னு எங்க ஆச்சி சொல்லி இருக்காங்க
1ம் இல்லை பதிவுகளில் எல்லாத்தையும் அடக்கி விடுவார்.

17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?
கண்டிப்பா இல்லை.. கண் இன்னும் நல்லா இருக்கு.. :) 6/6

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
பாச உணர்வுகளை எதார்த்தமாக எந்த சினிமாத் தனமும் இல்லாமல் வழங்கும் படங்களை விரும்பிப் பார்ப்பேன். பாடல் காட்சி, சண்டைக் காட்சிகளை கண்டிப்பாக ஸ்கிப் செய்து விடுவேன்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
சென்ற வெள்ளி மாலையில் - Calcutta News - ப்ளஸ்ஸி (Blessy) க்காக பதிவிறக்கிப் பார்த்தேன்... கொஞ்சம் ஏமாற்றம் தான்.. ப்ளஸ்ஸிக்கு எப்பவும் உணர்வுகளை வசனங்களில் இல்லாமல் காட்சிகளாக தருவதில் ஆர்வம் அதிகம். தன்மாத்ரா, கால்ச்சா, பலுங்கு போன்ற படங்களைப் பார்த்தால் தெரியும். கல்கத்தா நியூஸில் கொஞ்சம் சறுக்கல் அவருக்கு...

21.பிடித்த பருவ காலம் எது?
கோடையும் இல்லாமல், குளிரும் இல்லாமல் மிதமாக இருக்கும் சீதோசனம் பிடிக்கும்.. அதோடு கார் காலம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
நம்புவீர்களா என்று தெரியவில்லை.. நவீனன் டைரி - நகுலன் எழுதியது. முதல் தடவை படித்து விட்டு என்ன சொல்ல வருகின்றார் என்பது புரியாததால் இரண்டாவது தடவை படிக்க ஆரம்பித்துள்ளேன்.. இந்த தடவையாவது புரியனும்.. ஆனால் படிக்கும் போது ஒரு வெறி வருகின்றது.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அடிக்கடி மாற்றும் வழக்கம் இல்லை.. எப்பவும் விண்டோஸில் இருக்கும் அடிவானம் தான் இருக்கும்.. சமீபமாக சில நாட்களாக எனக்கு இருப்பது போலவே நெற்றியில் புருவத்திற்கு மேல் சிறு வெட்டுக் காய தழும்பு இருக்கும் ஒரு பெண்ணின் முகம் மட்டும் உள்ளது.. யார் என்பது சஸ்பென்ஸ்.


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
அப்படிப் பிரிக்கத் தெரியவில்லை... அதிக சத்தமுள்ள இயந்திரங்களிலேயே வேலை செய்வதால் பிடிக்காத சத்தம் ஏதுமிருப்பதாக தெரியவில்லை... சில நேரங்களில் மட்டும் ஆஆஆஆஆஆ என்று வாயை முழுவதும் திறந்து கொட்டாவி விடும் சத்தம் எரிச்சலை ஊட்டும்.

பிடித்தது : குழந்தைகளின் மழலை..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
துபாய், சவுதி அரேபியா

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் துறை படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும், அத்துறைகளில் கடந்த பத்து ஆண்டுகளாக வேலை செய்து வருவகின்றேன். எங்களது துறை சார்ந்த மெக்கானிக்கல் இயந்திரங்களுக்கான எலக்ட்ரிக்கல் கண்ட்ரோல்களில் ஏற்படும் நுணுக்கமான பிரச்சினைகளை துரிதமாக சரி செய்யும் ஆற்றலை இறைவன் வழங்கியுள்ளான். அதோடு புதிதாக கண்ட்ரோல் சர்க்யூட்களை டிசைன் செய்து, அதை நானே ஆட்டோகேட் மூலம் வரைந்து, களத்திலும் செயல்வடிவம் கொடுக்க முடிகின்றது என்பதும் வல்ல இறைவனின் கருணை தான்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
புறம் பேசுவதும், கோள் சொல்வதும். :(

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
மற்றவர்களின் குறைகளை அவர்களிடமே சொல்லி விடுவது

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
இன்னும் பார்க்கவில்லை.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாக இருக்கவே ஆசை...

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
ஊரில் இருக்கும் போது கணிணியில் இருப்பது மனைவிக்கு பிடிக்காது. எனவே அதிகப்படியாக செய்யக் கூடியது அதுவாகத் தான் இருக்கனும்...
மனைவி சொல்வது : உங்களுக்கு முதல் மனைவி உங்க கணிணி தானே.. ;-))

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
எல்லா சுதந்திரங்களும், இன்பங்களும், லாகிரி வஸ்துகளும் சுலபமாக கிடைக்கும் போதும், கடும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று எனக்கு நானே போட்டுக் கொள்ளும் கற்பனைக் கோட்டுக்குள் இருப்பது என்று நினைக்கிறேன்.