Thursday, February 28, 2008

Video - Children of Heaven Full Movie

சில நேரங்களில் அற்புதமான சில திரைப்படங்களையும் பார்க்க வேண்டி வந்து விடுகின்றது. அப்படிப்பார்த்த ஒரு ஈரானியப்படம் தான் Children of Heaven. ஒரு சிறுமி, அவள் மீது அன்பு கொண்ட அவள் சகோதரன் என்று சில அழகான கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம். இதை நீங்களும் பார்த்து விட்டு சொல்லுங்கள். இதன் விமர்சனம் ஆ.விகடனிலோ வேறு எங்கோ பார்த்த ஞாபகம். நான் எழுதும் அளவுக்கு பக்குவம் வரவில்லையாதலால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்,.......................

Part 1 of 9


part 2 of 9


part 3 of 9


part 4 of 9Part 5 of 9


Part 6 of 9


Part 7 of 9


Part 8 Of 9


Part 9 of 9

Sunday, February 24, 2008

இயற்கையாக சில கின்னஸ் சாதனைகள்!

ஜப்பானின் ஹிரோசாகி நகரில் விளைந்த இந்த ஆப்பிள் 1.849 கிலோ எடை இருந்தது. இதை விளைவித்தவர் Chisato Iwasaki
ஆண்டு : 2005 அக்டோபர்


மிக நீண்ட காதுகளை உடைய இந்த முயலின் காதின் நீளம் 79 செ.மீ. அமெரிக்காவைச் சேர்ந்த Waymon and Margaret எனற் தம்பதிகளுக்குச் சொந்தமானது இந்த முயல்இஸ்ரேலைச் சேர்ந்த Aharon Shemoel என்பவரால் விளைவிக்கப்பட்ட இந்த எலுமிச்சம் பழம் 5 கிலோ 265 கிராம் இருந்தது.


உலகத்திலேயே மிகச்சிறிய நாய் இது. இதன் நீளம் மொத்தமே 15.2 செ.மீ தான். இது Paulette Keller என்ற அமெரிக்கருக்குச் சொந்தமானது.

உலகின் நீளம் தங்க மீன் இது தான். Joris Gijsbers என்ற ஆலந்து நாட்டவருக்கு சொந்தமான இந்த மீனின் நீளம் 47.4 செ.மீ.


உலகின் உயரமான நாயான Gibson உடைய உயரம் 107 செ.மீ அதாவது கிட்டத்தட்ட மூன்றரை அடி உயரம் உள்ளது. இது அமெர்க்கர் Sandy Hall க்கு சொந்தமானது.

Friday, February 22, 2008

ஐயோ பாவம் - சென்னையில் அவசரத்திற்கு 'ஒதுங்க'சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். வயது 35. தனியார் நிறுவனத்தில் வேலை. நேற்று இவர் தி.நகர் ரங்கநாதன் தெருவிலுள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடைக்குச் சென்றிருந்தார்.

ஷாப்பிங் முடிந்து, நந்தகுமார் ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் சிறுநீர் கழிக்க முயன்றபோது, மாநகராட்சி கண்காணிப்புக் குழுவினரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார். பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக ஐம்பது ரூபாய் அபராதம் செலுத்தும்படி கண்காணிப்புக் குழுவினர் கூறினார்கள். நந்தகுமார் அதற்கு மறுப்புத் தெரிவித்து வாதம் செய்ததால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது .


இப்படி சில செய்திகள் வரும் ஏப்ரலிலிருந்து நியூஸ்பேப்பர்களில் தென்பட்டால், ஆச்சர்யப்பட வேண்டாம். பொதுஇடங்களில் சிறுநீர், மலம் கழித்தால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்துள்ளது. கோயில், பள்ளிக்கூடம், பஸ் ஸ்டாப் என வித்தியாசம் பார்க்காமல் நாசம் பண்ணும் அசுத்தப் பேர்வழிகளைத் திருத்த இது தேவையான நடவடிக்கை தான். ஆனால் கழிப்பிடங்களில் தான் இயற்கையின் உந்துதலைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என அரசு உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு சென்னையில் போதுமான பொதுக் கழிப்பிடங்கள் இருக்கிறதா?

2007ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னை நகரத்தின் மக்கள்தொகை சுமார் 45 லட்சம். ஆனால் இங்கே 835 பொதுக் கழிப்பிடங்கள்தான் இருக்கின்றன. பத்துப் பேருக்கு ஒரு கழிப்பிடம் தேவை என சில சர்வதேச மருத்துவ இதழ்கள் வலியுறுத்துகின்றன. கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம் அருகிலுள்ள ஒரு பொதுக் கழிப்பிடத்திற்குப் போனோம். நம்பர் 1 என்றால் ஒரு ரூபாய், நம்பர் 2 என்றால் இரண்டு ரூபாய் என வழக்கமான கட்டணம்தான். ஆனால் அவசரத்துக்கு உள்ளே செல்பவர்கள் அடுத்த சில மாதங்களில் மருத்துவ செலவுக்குத் தனியாகப் பணத்தை எடுத்து வைக்கவேண்டியிருக்கும். கழிவுகள் தண்ணீர் ஊற்றி அகற்றப்படவில்லை. கழிப்பறைகளுக்கு கதவுகள் கிடையாது. தொட்டியில் நிரப்பி வைத்திருந்த தண்ணீர் மஞ்சள் நிறத்தில் அலம்பியது. பெண்களுக்கான கழிப்பறை தொடர்ந்து பயன்படுத்தப்படாததால், மூடிக்கிடந்தது. நல்லவேளை, பெண்கள் தப்பிச்சுட்டாங்க!

முகத்தில் அருவருப்பு காட்டியபடி, கழிப்பறையிலிருந்து வெளியேறிய கிருஷ்ணமூர்த்தியிடம் பேச்சுக் கொடுத்தோம். நான் சேல்ஸ்மேனாக வேலை பார்க்கிறேன். தினமும் அமிஞ்சிக் கரையிலிருந்து கோயம்பேடு வரைக்கும் சைக்கிளில் போயாகணும். வழியில் ஒதுங்குறதுக்கு டாய்லட் வசதி இல்லை. மாநகராட்சி அபராதம் விதிச்சா என்னைப் போன்ற ஆட்களுக்குக் கஷ்டம்தான் என்று அவர் அலுப்புடன் சொன்னார். சில புள்ளிவிவரங்களின்படி சென்னை குடிசைப் பகுதிகளில் வாழும் 34 சதவீத குடும்பங்களுக்குக் கழிப்பிடம் இல்லை.


மக்கள் போக்குவரத்தும், வியாபார நடவடிக்கைகளும் மிகுந்த அண்ணாசாலை, பூங்கா நகரம், புரசைவாக்கம், தி.நகர் போன்ற இடங்களில் கழிப்பிடம் என்பது ஆடம்பர சமாச்சாரமாகத்தான் இன்னும் இருக்கிறது. சென்னையிலுள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் இதே அவலம்தான். பளபள டைல்ஸ் தரை, கண்ணைப் பறிக்குற மாதிரி லைட் வெளிச்சம்னு அசத்துற பல கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ்களில் குறைந்தபட்ச கழிப்பிட வசதிகூட இல்லை. டாய்லெட் ரூமை ஏதோ கருவூலம் மாதிரி பூட்டி வச்சுக்குற அடுக்குமாடிக் கட்டடங்கள் நிறைய இருக்குது. இதுபோன்ற இடங்களில் கழிப்பிடங்களைக் கட்டாய மாக்கிட்டு மாநகராட்சி அபராதம் விதிக்குறது நல்லது. பொதுமக்களுக்கும் பொறுப்புணர்வு தேவை. என்று சொல்கிறார் எக்ஸ் னோரா இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் எம்.பி.நிர்மல். கழிப்பிடங்களுக்கான விதிமுறைகளின்படி, அங்கே வருபவர்கள் க்யூவில் காத்திருக்கும் நிலை இருக்கக்கூடாதாம்.

சென்னை மக்களுக்கு மாநகராட்சி முழுமையான கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தும் முன்னரே, அபராதம் விதிக்க முயலும் அவசரம் ஏன்? மாநகராட்சி ஆணையாளர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, அவர் பொறுப்புடன் சொன்ன பதில், மோசமான நிலையில் இருக்கும் 100 கழிப்பிடங்களைத் தற்போது புதுப்பிச்சிட்டிருக்கோம். அண்ணாசாலை, தி.நகர் உட்பட 42 இடங்களில் புதுசாகக் கழிப்பிடம் கட்டப் போகிறோம். டெல்லியிலுள்ள சில நவீனக் கழிப்பிடங்களின் பாணியில், 50 கழிப்பிடங்கள் கட்டும் திட்டமும் இருக்கு. விழிப்புணர்வை ஏற்படுத்தும் எங்கள் நடவடிக்கை நிச்சயம் பொது மக்களுக்குத் தொந்தரவா இருக்காது

மாநகராட்சி தரப்பின் பதிலைக் கேட்டுவிட்டு மாநகராட்சிக் கட்டடத்திலுள்ள கழிப்பறையையும் பார்வையிட்டோம். அங்கே நிலைமை எப்படி? பொதுக்கழிப்பிடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பணியை மாநகராட்சி அங்கிருந்தே ஆரம்பிப்பது நல்லது.

அசுத்தம் என்ன செய்யும்

திறந்த வெளியில் சிறுநீர், மலம் கழிப்பதைப் போல, சுகாதாரமற்ற கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதும் ஆரோக்கியக்கேடுதான். மலக்கழிவுகள் அகற்றப்படாத இடத்தில் அடிக்கடி நடமாடினால், கொக்கிப்புழு உடலுக்குள் ஊடுருவி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும். அடிவயிற்றில் வலி இருக்கும். இந்தத் தொல்லைகள் அதிகமாகி, அமீபியாசிஸ் உண்டாகி, கல்லீரல் பாதிக்கப்படும். சிறுநீரை ரொம்ப நேரம் அடக்கி வைத்தால், சிறுநீரகமும் கர்ப்பப்பையும் பாதிப்புக்குள்ளாகும். என்கிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சரவணகுமார்.
செய்தி : குமுதம்

உலக அளவில் பரிசு பெற்ற சில புகைப்படங்களின் தொகுப்பு

உலக அளவில் புகைப்படப் போட்டிகளில் வெற்றி பெற்ற சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.......

அமீரகத்தில் வெளிவரும் "கல்ப் நியூஸ்"

Thursday, February 21, 2008

BSNL ன் புதிய தானியங்கி சேவை :)

பொதுவாக செல்பேசி சேவையைத் தருபவர்கள் (Bsnl, Airtel, Aircel, Vodafone...etc போன்றவை) நமது செல்பேசி அணைத்து(Off) வைக்கப் பட்டிருந்தால் அதற்கு சில தானியங்கி செய்திகளைத் தருகின்றனர். நீங்கள் தொடர்பு கொள்பவர் அலைவரிசை எல்கைக்குள் இல்லை என்றோ செல்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்றோ சொல்லப்படும். ஆனால் இங்கு வருவது ஒரு வித்தியாசமான செய்தி........நகைச்சுவைக்காக மட்டுமே :))

Wednesday, February 20, 2008

நிழற்படங்களின் தொகுப்பால் ஒரு அற்புதமான அசைப்படம் -

சாதாரணமாக எடுக்கப்பட்ட 400 புகைப்படங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு வீடியோக் காட்சிப்படம். 45 வினாடிகள் மட்டுமே. ரசியுங்கள் நீங்களும் :)

Tuesday, February 19, 2008

பணத்தை திருடிய மாணவனை கண்டுபிடிக்க தன்னைத்தானே பிரம்பால் அடித்த ஆசிரியை

பணத்தை திருடிய மாணவனை கண்டு பிடிக்க
தன்னைத்தானே பிரம்பால் அடித்த மீனாட்சி குட்டி ஆசிரியைக்கு விருது

பொது கல்விதுறை சார்பில் வழங்கப்பட்டது

இடுக்கி,பிப்.19-
பணத்தை திருடிய மாணவனை கண்டுபிடிக்க தன்னைத்தானே பிரம்பால் அடித்த மீனாட்சி குட்டி ஆசிரியைக்கு பொது கல்வி துறை விருது வழங்கியது.
தன்னைத்தானே அடித்த ஆசிரியை
இடுக்கி நகரில் உள்ள அரசு மாடல் ரெசிடன்சி பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருப்பவர் மீனாட்சி குட்டி. இவர் சமீபத்தில், பள்ளிக்கூடத்தில் பணத்தை திருடிய மாணவனை கண்டு பிடிக்க தன்னைத்தானே பிரம்பால் அடித்து கொண்டார். ஆசிரியை தன்னைத்தானே பிரம்பால் அடித்ததை பார்த்த, ஒரு மாணவன் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த மாணவன் ஆசிரியை மீனாட்சி குட்டியிடம் மன்னிப்பு கேட்டார்.
விருது
இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவனை திருத்த ஆசிரியை மீனாட்சி குட்டி கையாண்ட யுத்தி மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு முன் உதாரணமாக கருதப்பட்டது. இந்நிலையில் ஆசிரியை மீனாட்சி குட்டி செயலை பாராட்டி பொதுகல்விதுறை சார்பாக செருதோணி நகரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் பொது கல்வித்துறை இயக்குனர் அனிலாஜார்ஜ் கலந்து கொண்டு ஆசிரியை மீனாட்சி குட்டிக்கு ஸ்டூடன்ஸ் பிரெண்ட்லி டீச்சர் என்ற விருதை வழங்கி கவுரவித்தார். விழாவில் தனக்கு வழங்கிய விருதையும், பாராட்டையும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சமர்ப்பிப்பதாக ஆசிரியை மீனாட்சி குட்டி கூறினார்.
செய்தி : தினத்தந்தி

Tuesday, February 12, 2008

வீடியோ : கோவில் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகள் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி


கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில், கோவில் ஆக்கிரமிப்பை அகற்றிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கார் ஏற்றிக் கொல்ல முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கோவில் தர்மகர்த்தாவின் குடும்பம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே வேர்கிளம்பி உடையார் விளை என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த நாராயணசாமி கோவிலை அகற்ற கடந்த 6ம் தேதி தேசிய நெடுஞ்சாலை துறை தக்கலை இஞ்சினியர்கள் மற்றும் அதிகாரிகள் உடையார்விளை பகுதிக்கு சென்றனர். ஜேபிசி இயந்திரம் மூலம் கோயிலை இடித்தனர்.

அப்போது மிக வேகமாக அங்கு வந்த கார் அதிகாரிகள் மீது மோதியது. இதில் நெடுஞ்சாலைத் துறை என்ஜீனியர்கள் அந்தோணி சேவியர், சுந்தரம் மற்றும் போலீஸகாரர் எட்வின் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.


போலீசார் நடத்திய விசாரணையில் கோயில் நிர்வாகி அர்ஜூனன் மற்றும் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் சிலர்தான் கோயிலை இடித்த ஆத்திரத்தில் அதிகாரிகளை கொல்ல முயன்றது தெரிய வந்தது.

இந்நிலையில் உதவி கோட்ட செயற்பொறியாளர் அந்தோணி சேவியரை காரை ஏற்றி கொல்ல முயன்ற பகீர் காட்சிகள் அடங்கிய சிடியை கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் நேற்று வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஆக்கிரமிப்பு அகற்றுவதை வீடியோவில் பதிவு செய்துள்ளோம். அதில் காரை ஏற்றி கொல்ல முயன்ற காட்சி தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த சிடியை சென்னையில் உள்ள எங்கள் மாநில சங்கம் மூலம் தலைமை பொறியாளருக்கு கொடுக்க உள்ளோம் என்றார்.

அர்ஜூனின் குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(வீடியோ 26 நொடிகள்)

Sunday, February 3, 2008

PIT புகைப்பட போட்டிக்கான வட்ட வட்ட விளக்குகள் பாருங்கள்


PIT யின் இந்த மாத புகைப்படப்போட்டிக்கான படங்கள் இவை. இதில் இரண்டு படத்தை போட்டிக்கு அனுப்ப வேண்டும். எந்த இரண்டு படங்கள் என்று யோசனையா இருக்கு.படம் 1


படம் 2படம் 3

LinkWithin

Related Posts with Thumbnails