Friday, May 21, 2010

மாடு மேய்க்கக் கூட லாயக்கு இல்லியாம்..

மாடு மேய்க்கறதைப் பற்றிப் பார்க்குறதுக்கு முன்னாடி போன பதிவோட சேர்ந்த ஒரு விஷயம்.. இராவணன் படத்துல பாட்டில் கொஞ்சம் தமிழ் தூக்கலாவே அழகா இருக்கு...

உசிரே பாடல் கேட்கும் போது ஒரு குழப்பம்..

”இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல
ஒன்னு ரெண்டு தப்பிப் போகும் ஒழுக்கத்துல
விதி சொல்லி வழிப் போட்ட மனசு புள்ள
விதி விலக்கில்லா விதியுமில்ல..


மேற்க்கண்டதில் விதிவிலக்கில்லாத என்பதைக் கேட்கும் போது ஒரு குழப்பம். பாடுபவர் விதி என்பதை பாடி விட்டு இடைவெளி விட்டு விளக்கில்லாத என்பது போல் கேட்கும்... முதல் இரண்டு முறை புரியல... அப்புறம் தான் புரிஞ்சது.. பாடல் எழுதியவர், இசையமைப்பாளர் இதைக் கொஞ்சம் கவனமா பார்த்து இருக்கலாம்.

இரண்டாவதாக கள்வரே எனத் தொடங்கும் பாடல்.. நல்லா இருக்கும்..

வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே!
வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா! ’

ஆகா.. என்ன இனிமையான வரிகள்.. அதோடு கள்வரே கள்வரே! கள்வரே கள்வரே! என்பதில் மூன்றாவதாக வரும் வார்த்தையைக் கள்வெறிக் கள்வரே என்று மாற்றி இருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்ல..

கள்வரே கள்வரே
கள்வெறி கள்வரே
கண்புகும் கள்வரே

*********************************************************

அடுத்த மாடு மேய்க்கிற மேட்டரு..

என்னடா தலைப்பே இப்படி இருக்கேன்னு யோசிக்காதீங்க... நான் படிச்ச காலங்களில் எங்க வாத்தியார்களில் அதிகமானவர்கள் சொன்னதுக்கு எதிர்ப்பதமாத் தான் சொல்லி இருக்கேன்... எங்க குரூப்பையேப் பார்த்து எங்க வாத்தியார்கள் “நீங்களெல்லாம் மாடு மேய்க்கத் தான் லாயக்கு” என்று சொல்வது வழக்கமான ஒன்று தான்.. நாங்களும் அதை எல்லாம் எருமை மாட்டு மேல மழை பேய்ஞ்ச மாதிரி அசால்ட்டா கண்டுக்காம போய்டுவோம்...

ரொம்ப நாள் கழிச்சு இப்பத் தான் புத்திக்கு உறைக்க ஆரம்பிச்சு இருக்கு... இப்ப வெளிநாட்டில் இருக்கோம்.. ஊருக்கு போனால் என்னவெல்லாம் செய்யலாம்ன்னு ஐடியா போட்டுக்கிட்டு இருக்கோம்... ஏகப்பட்ட ஐடியாக்கள்.. வீடு எல்லாம் சொந்தமா கட்டியாச்சு... இப்போதைக்கு குடி போகலைன்னு வாடகைக்கு விட்டு வச்சு இருக்கு... ஆசை ஆசையாக கட்டின புது வீட்டில் யாரையோ வாடகைக்கு வைக்க கஷ்டமாத் தான் இருக்கு... சரி நாமளே இந்தியாவில் போய் வீட்டில் செட்டில் ஆகிடலாம்ன்னு யோசனை செய்தால் நம்ம நலம்விரும்பிகள் கேட்கும் முதல் கேள்வியே “ஊரில் போயி... ( ஒரு இழுவை வருது.. ;-)) ) என்ன செய்றதா உத்தேசம்? ”

உடனே யோசனை எல்லாம் பலமா வருது.. ஆமா.. ஊருக்கு போய் என்ன செய்ய? நாம இங்க செய்ற வேலைக்கு ஊரில் வேலை கிடையாது... (யாருய்யா அது.. கக்கூஸ் கழுவுற வேலை இங்கயும் இருக்கும்ன்னு சவுண்ட் விடுறது?) சரி வேற ஏதாவது தொழில் செய்யலாம்ன்னா ஒன்னும் தெரியாது.. இல்லைன்னா பட்ஜெட் எல்லாம் எகிறும்.. சரி என்ன தான் செய்யலாம்ன்னு யோசிச்சப்ப தான் எங்க வாத்தியாருக சொன்ன மாடு மேய்க்கத் தான் லாயக்கு வாசகம் நினைப்புக்கு வந்தது. இயற்கையோடு சேர்ந்த தொழில்.. ஏற்கனவே விவசாயம் என்ற பெயரில் 2 ஏக்கர் வாங்கி அவதிப்பட்ட அனுபவம் இருந்தாலும் மீண்டும் ஒரு முயற்சி செய்யலாம் என்று ஒரு நப்பாசை.

ஊரில் தண்ணீர் ஊற்றிய (1:1 அளவாம்.. என்ன கொடுமய்யா இது) பாலே 20 ரூபாயாம்.. பால் வியாபாரி எல்லாம் நல்லா சம்பாதிக்கிறார்களாம்.. வடிவேலு ஸ்டைலில் நாமலும் இதில் இறங்கிட்டா... வீடு கட்டினது போக பாதி இடம் வீட்டை ஒட்டிக் கிடக்கு... அதில் மாட்டுக் கொட்டகை கட்டி 4 பால் மாடு வாங்கிக் கட்டி விட்டா வாத்தியார்களோட ஆசையை தீர்த்த மாதிரியும் இருக்கும்.. வருமானமும் கிடைக்கும்ன்னு ரூம் மோட்டு வளையை பார்த்துக்கிட்டே சிந்தனை செய்தேன்.

சரி... எதுக்கும் வீட்டுக்காரம்மா கிட்ட ரோசனை கேட்கலாம்ன்னு போன் செஞ்சா , வழக்கம் போல் மண்டகப்படி நடக்காத குறை தான்... “மாடு வளர்க்குறதுன்னா லேசுப்பட்ட காரியமா? காலையில் பால் எடுக்கனும், பால் விக்கனும், சாணி அள்ளனும், தீனி போடனும், குளிப்பாட்டனும், மாட்டை மேய்ச்சலுக்கு விடனும், மீண்டும் மாலையில் முதலில் இருந்து ஆரம்பிக்கனும், இது தவிர மாட்டுக்கு நோய் ஏதாவது வந்தா கண்டுபிடிச்சு மருந்து தரனும்” லொட்டு லொசுக்குன்னு பெரிய லிஸ்ட்டே போட்டுட்டு “இதெல்லாம் உங்களுக்கு லாயக்கு இல்லை.... துன்ன தட்டையே நகர்த்தி வைக்கத் தெரியாது. இவரு மாடு வளர்க்கப் போறாராம்” என்று என்னோட திட்டத்தை ஆரம்பித்திலேயே நசுக்கி விட்டார்.

மீண்டும் அதே மோட்டு வளை.. அதே சிந்தனை.. எப்படி எங்க வாத்தியார் இப்படி சொல்லி இருப்பார்.. அப்ப தான் இந்த மறை பொருளின் அர்த்தம் புரிவது போல் இருந்தது... எங்க வாத்தியையும் அவரோடு வாத்தி இதே மாதிரி தான் திட்டி இருப்பார்ன்னு தோணுச்சு.. அதனால் தான் அவர் எங்களை எல்லாம் மேய்க்க வந்து இருந்திருக்காருன்னும் தோணுச்சு.. அப்ப இங்க கத்தாரில் நமக்கு கீழே வேலை செய்பவர்களை கட்டி மேய்ப்பதைத் தான் வாத்தியாரும் சிம்பாலிக்கா சொல்லி இருக்கார்ன்னு நினைச்சிக்கிட்டேன்.

Thursday, May 20, 2010

ராவணன் - கெடா அறுத்து பந்தி வைக்கலாம்..

ராவணனில் ஒரு பாட்டு.. எல்லாருக்கும் புடிக்குமான்னு தெரியல.. செம பட்டையைக் கெளப்புது.. ஹிந்தி வெர்சனைக் காட்டிலும் தமிழோடு ரொம்ப ஒட்டி இருக்கு.... படிச்சிக்கிட்டே கேட்கலாம் வாங்க


கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடாக் கள்ளு ஊத்து
இச்சான் இச்சான் கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

கூற சேல கொமரி கொவ பழ சிவப்பு
நாவப் பழ கருப்பு நாதாரி பய மவன்
பப்பர பப்ப பப்பர பப்ப மாலை மாத்துடி
அப்புறம் பாப அப்புறம் பாப சேல மாத்துடி

இச்சான் கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மோடா மோடா கள்ளு ஊத்து

இவ கண்ணால பாத்தா சானகி அம்சம்
கட்டில் மேல பாத்தா சூர்ப்பனக வம்சம்

கூற சேல கொமரி கொவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

எலுமிச்சம் பழம் போல இளம் பொண்ணு சிறுசு
வாக்கப்படும் வாழடிக்கு வாய் மட்டும் பெருசு
தகிட தக்க தகிட தக்க தாளம் கிழியட்டும்
கற்பக மொட்டு கற்பக மொட்டு கன்னி கழியட்டும்
வாங்க .. மச்சினங்க கொட புடிக்க மாப்பிள வந்தாச்சு
அடி நாத்தனாரு முந்தி சொமக்க நாயகி வந்தாச்சு
ஏலே நாயனம் என்னாச்சு

கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கல்லு ஊத்து
இச்சான் கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

பட்டு வேட்டி அழகப் பாரு
பாவி மகனுக்கு அட ஒத்த ரூபா சந்தனம் எதுக்கு
ஓணான் முதுகுக்கு... இந்த ஒதவா மூஞ்சிக்கு .. போடா ..

கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சான் கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

மந்தை ஆடு மறுக்கை நூறு சீதனம் தந்தாக
அந்த மந்தை ஆட மேய்க்க தானே மாப்பிள வந்தாக
இந்த மாப்பிள வந்தாங்க
காள மாடும் காராம் பசுவும் கட்டி வெச்சுருக்கோம்
அதுக போட்ட சாணி அள்ளத் தானே பொண்ண புடிச்சுருகோம் ..
இந்த பொண்ண புடிசுருக்கோம் ..

கூற சேல கொமரி கோவப் பழ சிவப்பு
நாவப் பழ கருப்பு நாதாரி பய மவன்
பப்பர பப்ப பப்பர பப்ப மாலை மாத்துடி
அப்புறம் பாப்ப அப்புறம் பாப்ப சேல மாத்துடி

இவ கண்ணால பாத்தா சானகி அம்சம்
கட்டில் மேல பாத சூர்ப்பபனக வம்சம்

கூற சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்

கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மோடா மோடா கள்ளு ஊத்து
இச்சான் கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

கூற சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்
பப்பர பப்ப பப்பர பப்ப மாலை மாத்துடி
அப்புறம் பாப்ப அப்புறம் பாப்ப சேல மாத்துடி

கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மோடா மோடா கள்ளு ஊத்து
இச்சான் கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்துWednesday, May 19, 2010

தாத்தாவின் யூரினும், டாக்டரின் பில்லும் சொல்லும் சேதி


பதிவு எழுதியே ரொம்ப நாள் ஆச்சு.. தமிழில் பதிவு எழுதுவதால் மகிழ்ச்சியா? கஷ்டமா? பதிவு எழுதாமல் இருப்பது மகிழ்ச்சியா? துக்கமா? போன்ற கேள்விகள் எழுந்தாலும் பதிவுகள் எழுதும் போது ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கின்றது.. ( எங்களுக்கு நீ போடுற பிளேடால் கழுத்தில் இரத்தமே வருகின்றது என்ற மைண்ட் வாய்ஸ் இங்க கேக்குது மேன்.. அடக்கி வாசி) எழுதாமல் இருக்கும் போது ஒரு வெறுமை சூழ்ந்து கொள்கின்றது என்னவோ உண்மை. ஒவ்வொரு முறையும் சக பதிவர்களை சந்திக்கும் போதும்\’சாட்’டும் போதும் தினசரி எதாவது ஒரு பதிவு எழுத வேண்டும் என்று பேசிக் கொள்கின்றோம். விழலுக்கு இறைத்த நீர் தான் போல..

சரி விடுங்க.... கடந்த மாதம் IPL, இந்த மாதம் ICC World T20 எல்லாம் நடந்ததால் நல்லா நேரம் போச்சு.... அதனால் எழுத மூடு வரலை.. (இல்லைன்னாலும்... வந்து கிழிச்சுடும்..) இப்ப கலாச்சாரக் காவலர்களுக்கு இந்த போட்டிகள் எல்லாம் முடிந்ததில் பெரும் கவலை.. ஏன்னா இதை எல்லாம் பார்த்து தெண்டமா கெட்டுக் குட்டிச் சுவராய் போய் தமிழ் மக்கள் என்று வாய்ச் சொல்லில் முழம் போடுவதற்கு வாய்ப்பு இன்னும் கொஞ்ச நாள் கழித்து தானே கிடைக்கும். கண்ணைத் துடைச்சுக்கங்க மக்களே.. அடுத்த வருடம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் இந்தியாவில் தான் நடக்கப் போகுது.. இப்ப இருந்தே நிறைய மேட்டர் தேத்தி வச்சுக்கங்க... என்ன.. ஈழத்தை வச்சு நீங்க ஏதும் எழுத்து காமெடி பண்ண முடியாது ஏன்னா அது இப்போதைக்கு சூடான இடுகையா மாறும் கட்டத்தைக் கடந்துருச்சு.

சரி விடுங்க.. நமக்கு எதுக்கு வீண் வம்பு.. பார்வெர்ட் மெயிலில் வந்த ஒரு குட்டிக் கதையைச் சொல்றேன்.. படிச்சிட்டு அப்பீட் ஆகிக்கங்க...

ஒரு 70 வயசு தாத்தாவுக்கு சிறுநீர் கழிப்பதில் சிக்கல்... அடைப்பு மாதிர்ன்னு வச்சுக்கங்க.. மருத்துவரிடம் சென்றால் அவரும் வழக்கம் போல் எல்லா செக்கப்பையும் செய்துட்டு, ஒரு ஆப்ரேஷன் செய்தால் தான் கிளியர் ஆகும்ன்னு சொல்லிட்டார். தாத்தாவும் தான் பட்ட அவதியைக் கருத்தில் வைத்துக் கொண்டு ஆப்ரேஷனுக்கு ஒத்துக்கிட்டார்.. ஆபரேஷனும் வெற்றிகரமா முடிந்தது. டாக்டர் பில்லைக் கொண்டு வந்து நீட்டினார்..

பில்லைப் பார்த்ததும் தாத்தாவின் கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் ஓடுது.. டாக்டர் ரொம்ப நல்ல மாதிரி... அவருக்கு முதலில் ஒன்னும் புரியல.. டாக்டரும் சமாளித்துக் கொண்டு “பரவாயில்லைங்க தாத்தா.. பில் தொகை உங்களால் சமாளிக்க முடியாத மாதிரி இருந்தா... எங்க டிரஸ்ட்டில் பேசி குறைக்க ஏற்பாடு செய்கின்றேன் என்கிறார்... அப்ப தாத்தா “ பில் தொகையைப் பார்த்து நான் கண்ணீர் விடலை.. கடந்த 70 வருடமா என்னைப் படைத்து காத்த இறைவன் நல்ல மாதிரியா சிறுநீர் கழிக்கும் உடலமைப்பைக் கொடுத்து இருந்தான்.. அதுக்காக நான் அவனுக்கு ஏதும் பில் கட்டலை... இப்ப அடைப்பு என்றதும் அது சரி செய்ய இவ்வளவு பெரிய தொகையைக் கட்ட தயாரே இருக்கேனே” அப்படின்னு சொன்னார்.

படம் நன்றி : ப்ளிக்கர் தளம்

LinkWithin

Related Posts with Thumbnails