Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Saturday, July 17, 2010

படைப்புக்கும் படைப்பாளிக்குமான தொடர்பு துண்டிக்கப்படுவது எப்போது ?
























முஸ்கி 1: இந்த பதிவுக்கும், எந்த நுண்ணரசியலுக்கும் சம்பந்தமில்லை. இதில் வரும் வசனங்களும், குறிப்புகளும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.

முஸ்கி 2 : இது ஒரு நல்ல சமையல் குறிப்பு. வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு மிக நல்லது. இதை உண்டவர்கள் தங்கள் சொந்த வீடாக இருந்தாலும் அதை இரண்டு நாள் அனுகாமல் இருப்பது மிக நல்லது. ஏனெனில் நீங்கள் விடும் காற்றால் வீட்டுச் சுவரோ, கான்க்ரீட்டோ உடையும் அபாயம் இருக்கலாம் அல்லது உங்கள் நாற்றம் தாங்காமல் உங்கள் மனைவி உங்களை விவாகரத்து செய்து உங்களை தப்பிக்க வைக்கலாம்.

இனி பதிவு..

பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62.0 விழுக்காடும், புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நாச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லிகிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன.

பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. மற்றும் பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.

பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.

நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.

நன்றி : வெப்உலகம்.காம்

இனி பூண்டு குழம்பு செய்வது எப்படி ?

  • 1. பூண்டு - 15 பல்
  • 2. வெங்காயம் - 1 (அ) சின்ன வெங்காயம் - 10
  • 3. தக்காளி - 2
  • 4. புளி தண்ணீர்
  • 5. தேங்காய் பால் - 1 கப்
  • 6. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
  • 7. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  • 8. கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • 9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • 10. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • 11. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
  • 12. உப்பு

  • வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் நறுக்கவும். எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
  • பூண்டு சிவக்க வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
  • இதில் தூள்கள், உப்பு சேர்த்து பிரட்டி தண்ணீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
  • பின் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். இதில் புளி தண்ணீர் விட்டு கெட்டியாக கொதித்ததும் எடுக்கவும்.

Note:

தேங்காய் பாலுக்கு பதிலாக தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.



நன்றி : அறுசுவைடாட்காம்.

டிஸ்கி 1 : பூண்டு குழம்பு செய்து கொண்டு இருக்கும் போதோ, காற்றைப் பிரித்து விடும் போதோ யாராவது உங்களைத் திட்டினால் போடா நாயே என்று அவர்களை திட்டாதீர்கள்.
டிஸ்கி 2 : நாற்றம் தாங்காமல் யாராவது திட்டினால் த்தூ என்று இடப்புறம் ஒரு முறை துப்பி விட்டு சென்று விடுங்கள்.
டிஸ்கி 3 : இந்த பதிவில் நாய், த்தூ போன்ற வார்த்தைகள் இருப்பதால் இதை புனைவு என்றோ, நாய்ப்பதிவு என்றோ, சொற்சித்திரம் என்றோ சொன்னால் அவர்களது வாதம் ஏற்றுக் கொள்ளப்படாது.
டிஸ்கி 4 : மேலே உள்ளவைகளை எழுதி காப்பி\பேஸ்ட் செய்து எழுதி முடித்ததும் அதற்கும் எனக்குமான உறவு முடிந்து விடுகின்றது. இனி படைப்புகளுடன் மட்டும் பேசிக் கொள்ளவும்.
......
....
..
.

Friday, July 9, 2010

நிஜமா நல்லவன் பதிவுக்கு வரிக்கு வரி காரமான எதிர்வினை

\\\\ துளித் துளியாய் சேகரித்து
மெழுகினில் புகுத்தி இனிமை சேர்க்கும்
அழகிய தேன் கூட்டை
சிதறித் தெளிக்கிறது ஒற்றைக் கல்!

உயிர்ப்பச்சை நீர்த்து வாடிய பயிர்களில்
எதிர்பாராமல் சூல் கொள்ளும் மேகங்கள்
இயற்கை இருப்பை நிலை நிறுத்தி
சொட்டு சொட்டாய் நிரம்பும் உயிர் நீர்!

மேகங்களின் நகர்வில் மிதந்திடும் நிலவை
விழியோர புருவங்களால் வளைத்தெடுக்க
குறும்பை கொப்பளிக்கும் இமைகள்
வரைந்திடும் எழிலோவியங்கள் விழித்திரையில்

நிறைவேறா கணங்களின்
நிறங்கள் குழைத்து
சிறகில் தெளித்து
சிறகடிக்கிறது
கனவுப் பறவை!

வண்ணங்கள் களவோடு
எண்ணங்கள் விரிய
நிறங்கள் உமிழ்ந்து
நிறமிழக்கின்றன விழிகள்
விழிநிலையில்!
\\\

பாஸ்.. நீங்க பெரிய கவிஞரா இருக்கலாம்..
ஆனால் இதை எல்லாம் வாசிச்சா
எங்களுக்கு ஒன்னும் புரியல..
கண்ணுல பச்சை மிளகாயை
வச்சு தேய்ச்சு,
மூக்குல மிளகாய்
பொடியை திணிச்சு,
காதுல மிளகாய்
பொடியை நுழைச்சு,
வாயில மல்லிப்
பொடியை அள்ளிக் கொட்டி,
உடம்பு பூரா
புளிய விளாரால் விளாசி
உப்பு வச்சு தேய்ச்சு
விஜயோட மசாலா படம் பார்த்த பீலிங் தான் வருது..
நாங்க இன்னும் இலக்கிய
உலகை கரைச்சுக் குடிக்கல.

டிஸ்கி: இப்ப எல்லாம் எதிர்பதிவு காரமா இருந்தா தான் மவுசாம்.. அதனால் தான் கொஞ்சம் மசாலா தூவி இருக்கோம்.

Wednesday, March 31, 2010

தோஹா சங்கம் : என் சங்கத்து ஆளை அடிச்சவன் எவண்டா பதிவு

முன் டிஸ்கி : அவ்வப்போதைய டிரண்ட்படி பதிவு போடுவது தமிழ் பதிவர்களின் ‘தலை’யாயக் கடமைகளில் ஒன்றாகி விட்டது.. சமீபத்திய நித்தியரஞ்சி விஷயத்தில் எந்த பதிவும் எழுதவில்லை.. இப்போதும் சங்கத்து விஷயத்தில் நம் ‘கருத்தை’ச் சொல்லவில்லையென்றால் தமிழ் கூறும் இணைய உலகம் நம்மை மன்னிக்காது என்பதால் இந்த பதிவை வெளியிடுவது கட்டாயமாகின்றது.




எங்களைப் பற்றி ஒரு அவதூறு தமிழ் இணையத்தில் பரப்பப்பட்டு உள்ளது.. அது குறித்தே இப்பதிவு.. தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமம்(தோ.த.இ.ப.எ.வ.ச.கு) இப்பதிவு பல ஆண்டுகளாக தோஹாவில் இயங்கி வருவது உலகம் பூராவும் இருக்கும் ப்ளாக்கர்களுக்கு எல்லாம் தெரியும்.. ஆனா சமீபத்திய குளறுபடிகளில் நமது சங்கத்தின் பெயரும் அடிபடுவது வருத்தத்தை அளித்துள்ளது.

தோ.த.இ.ப.எ.வ.ச.கு. பல அற்புதமான வேலைகளை தோஹாவில் செய்து வருகின்றது.. அரேபியத் தீபகற்பத்தில் தோஹா இருப்பதால் வெயிலின் கொடுமைக்கு ஆளாக நேர்கின்றதை என்பதைக் கருத்தில் கொண்டு கத்தார் நாட்டை அண்டார்ட்டிக்காவிற்கு அருகில் பெயர்த்து வைக்க உலக அளவில் விடப்பட்ட டெண்டர்களை பரிசீலிக்கும் வேலையை
தோ.த.இ.ப.எ.வ.ச.கு. ஏற்றுள்ளது எங்களது சேவைகளின் மைல் கல்களில் ஒன்று.

தோஹாவில் இருக்கும் கத்தாரிகளைக் கூட தமிழில் ப்ளாக் எழுதச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளையும் விரைவாக செய்து வருகின்றோம்.

தோஹாவில் இருக்கும் தமிழர்களை எல்லாம் இணைத்து தோஹாவிற்குள் தனி நாடு கோரிக்கையையும் கேட்க முடிவு செய்துள்ளோம்.

பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு போண்டாவும், டீயும் வாங்கித் தரும் வழக்கத்தை மாற்றி மினி இட்லியும், பொடி தோசையும், கெட்டிச் சட்னியும் வாங்கித் தரும் ஒரே சங்கக் குழுமம் உலக அளவில் தோ.த.இ.ப.எ.வ.ச.கு. மட்டுமே.

எங்கள் சங்கத்தின் முக்கிய அங்கத்தினர்களான மேதகு திரு மதிப்புமிக்க ஆயில்யன், மற்றும் ஹிஸ் ஹைனஸ் தமிழ் பிரியன் இடையே பகைத் தீயை எரிய வைக்கும் முயற்சியில் துபாயில் இருந்து இயங்கும் சில தீவிரவாதக் குழுக்கள் இறங்கி உள்ளன... தலைவர் பதவிக்கு ஏதோ சண்டை நடப்பது போன்ற மாயத் தோற்றத்தை அவை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாதவைகள் இந்தப் பனங்காட்டு நரிகள்... தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தின் நேற்றைய, இன்றைய, நாளையத் தலைவர் ஆயில்யன் தான் என்பதை இங்கு அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

தோஹாவில் இருந்து ஆயில்யன் சென்று விட்டால் அவர் இருந்த அந்த சீட்டை துடைத்து வைத்து, அதில் அவர் பெயரை எழுதி தலைவர் என்று எழுதி வைப்போம்... எங்கள் தலைவரைத் தவிர புதிதாக எவரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மறுக்கும் அஞ்சா நெஞ்சன் இருக்கும் ஊர்க்காரர்கள் நாங்கள்...

குறிப்பாக பதிவுலகிற்கான வளைகுடா அத்தாரிட்டியாக நாங்கள் நினைக்கும் துபாயில் இருந்து இந்த வதந்தி கிளம்பி இருப்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல கிளைகளாக ஒற்றுமையின்றி பிரிந்து கிடத்தும் துபாய் சங்கத்தவர்கள், ஒற்றுமையுடன் செயல்படும் தோ.த.இ.ப.எ.வ.ச.கு. த்தின் வளர்ச்சியின் மீது ஏற்பட்ட பொறைமையின் விளைவே இந்த வதந்தி என்பதைச் சிந்தனையாளவர்கள் அறிவர்..

ஆகவே மக்களே தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தின் மீது பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதையும் உங்கள் அனைவருக்கும் அன்போடு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

Thursday, March 25, 2010

நைஜீரியாவில் இருந்து ஜெமோவும்., ஸீமமெண்டா என்கோசீயும்

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ ஆயிரத்தின் ஒருவன் ஆண்டிரியா போல் ஒரு பிகருடன் ஜெமோவும் நைஜீரியாவிற்கு புதைப் பொருள் ஆராய்ச்சிக்கு கிளம்பிவிட்டதாக எண்ணி விட வேண்டாம்... இதுவும் அதுபோல் தான்.. ஆனால் ஒரு வித்தியாசமான புதிர்... புதிருக்குப் போகலாமா?

புதிர் : 1
கீழ்க்கண்ட பாராவில் இருக்கும் பின்நவீனத்துவ கூறுகளையும், ஞானமரபின் விளைவுகளையும் இரண்டு பின்னூட்டங்களுக்கு மிகாமல் விளக்கவும்..

ஞாயிற்றுக்கிழமை நகையைக் காணோம்
திங்கட்க்கிழமை திருடன் வந்தான்
செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்கு போனான்
புதன்கிழமை புத்தி வந்தது
வியாழக்கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை வீட்டுக்குப் போனான்
சனிக்கிழமை சாப்பிட்டுப் படுத்தான்

பரிசு: முந்தாநாள் சுட்ட புளித்த இட்லியும், கெட்டி சட்னியும் ஒரு பார்சல்

புதிர் : 2

முதலில் கீழே உள்ள பாராவைக் கவனமாகப் படிக்கவும்.




ஸீமமெண்டா அடிச்சி என்பவர் எழுதிய நைஜீரியா பற்றிக் கட்டுரை உண்மையின் உரைகல் என அனைவரும் போற்றிப் புகழ்ந்தனர். மேலைநாடுகளுக்குரிய தொழில்நுட்பத்தேர்ச்சியுடன் மொழி செம்மைசெய்யப்பட்ட நன்கு தொகுக்கப்பட்டது அது. ஆனால் மிகமிக மேலோட்டமானது. அந்த விவரிப்பு என்பது இம்மாதிரி விடயங்களை வாசிப்பவர்களுக்கு எவ்வகையிலும் புதிதல்ல. அதில் மானுட எழுச்சியோ, உணர்வின் நுண் கணங்களோ இல்லை. போலியான உணர்வெழுச்சிகள் மட்டுமே இருந்தன. ..................
மேலைநாடுகளைப் பொறுத்தவரை எப்போதுமே இதற்கு ஒரு பழகிய வழிமுறை உண்டு. முதலில் பல்கலைக்கழகங்கள் வழியாக ஆய்வேடுகள் உருவாக்கப்படும். அவை தேவையான கருத்தியலை போலி ஆதாரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் சமைக்கும். பின்பு இலக்கியவாதிகள் உருவாக்கப்படுவார்கள். அவர்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுவார்கள். ஸீமமெண்டா அடிச்சி மேல் நாட்டு ஊடகங்களின் தயாரிப்பு. மேற்கத்திய நாடுகளின் ஏடுகளில் சொல்லப்பட்ட, அவர்களுக்கு உகந்த கட்டுக்கதைகளை மட்டுமே வைத்து ஸீமமெண்டா அடிச்சி இதை எழுதியுள்ளார்.. நைஜீரியாவில் உள்ளவர்களே இக்கதைகளைக் கேட்டு நொந்து சிரிக்கும் நிலை தான் இருக்கின்றது.


மேலே உள்ள பாராவில் இருப்பவற்றில் ஸீமமெண்டா அடிச்சி என்ற பெயரை நீக்கி விட்டு அந்த இடங்களில் ஜெமோ என்பதை உள்ளீடு செய்து பின்னூட்டமாக இட வேண்டும். ctrl+f போட்டு கண்டுபிடிக்கக் கூடாது..

பரிசு : ஞானச்சுவடு இதழ் அடுத்த ஒரு வருடத்திற்கு இலவசமாக சந்தா இன்றி அனுப்பப்படும்.

Saturday, February 27, 2010

வெள்ளைத் தோலும், செங்குருதியும்



எந்த நட்சத்திரமும் தெரியாத கான்க்ரீட் வானத்தில்
எதையோ தேடியவனாக
வீட்டுப் படுக்கையில் சயனித்திருந்த போது
ஒரு மூலையில் இருந்து அது வெளியேற ஆரம்பித்து
சின்னதாய்.. வெறும் தோலாய்..
கணிணி மானிட்டரின் மெல்லிய வெளிச்சத்தில்
ராக்கெட் எஞ்சினின் பாதையைக் கணக்கிடும்
விஞ்ஞானி போல அதைப் பின் தொடர்ந்தேன்.

எரிச்சலாக இருந்தது.. வழக்கம் போல்
தமிழ் மணத்தில் F5 தட்டி பார்த்த போது
இன்னும் எரிச்சல் கூடி இருந்தது..
இப்போது மீண்டும் மோட்டு வளையில் பார்வை
எருமையை விட பெரும் பொறுமை தேவைப்பட்டது
மெல்ல மெல்ல அது நகர்ந்தது
என் படுக்கையை ஒட்டி சுவரில் ஊறியது.

ஆங்காங்கே ஒட்டி இருந்த
மாஸ்க்கிங் டேப் தடைகளைக் கடந்து
200 அடித்த சச்சின் போல பொறுமையாக
என் படுக்கைக்கு அருகில் வந்து இருந்தது
ஏனோ சுவாரஸ்யம்.. அதிகமாகி இருந்தது

அதை ஈர்க்க ஏனோ மனம் துடித்தது.
கையை மெதுவாக நகர்த்தி
அழுக்காகி இருந்த சுவற்றின் அருகே வைத்தேன்.
மிக மெதுவாக இறங்கி என் கையை முகர்ந்தது
வெள்ளையாய் இருந்த தோள்களில் சிவப்பு நிறம்
எந்த சிக்கலும் இல்லாமல் இரத்தம் உறிஞ்சுதல்
மகிழ்வில் உடம்பு புடைத்த அந்த அறைவாசி
தன் பாதை வழியே திரும்பிப் போனது.


டிஸ்கி: ஒரு முட்டைப்பூச்சி கடித்ததை கவிதையா எழுத நினைத்தேன்... ஹிஹிஹி இப்படி தான் வருது.. நான் என்னசெய்யட்டும். நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்கன்னா திரும்ப இது மாதிரி நடக்காது.. நல்லா இல்லைன்னு சொன்னா அப்புறம் கரப்பான் பூச்சி, பல்லி, பாச்சான், தேள், பூரான் எல்லாத்தையும் கவிதையில் வர வைக்க வேண்டி இருக்கும். பூனை மட்டும் பி.ந.வாதிகளுக்கானது என்பதால் விட்டு வைப்போம்.

Sunday, January 10, 2010

U/A பதிவர் டிப்ஸ் : சுவாரஸ்யமான பதிவு எழுதுவது எப்படி?

ப்ளாக்கை இவ்வளவு நாட்களாக ஒளித்து வைத்து என்னுடன் கண்ணாமூச்சி ஆடிய கூகுளை கண்டித்தும், திரும்பி தந்தததற்கு நன்றி தெரிவித்தும் கூகுளாண்டவருக்கு இப்பதிவை கடும் கோபத்துடன் சமர்ப்பிக்கின்றேன்.. ;-)



இயற்கையான விடயங்களைப் படித்து முகம் சுளிப்பவர்கள் தயவு செய்து இதைப் படிக்க வேண்டாம்.

இந்தப் பதிவு பதிவு எழுத வேண்டுமென்பதற்காக பதிவு எழுதுபவர்களுக்கானது அல்ல.... எழுத வேண்டுமென்பதற்காக பதிவு எழுதுபவர்களுக்கானது.. புரிந்தவர்கள் மேலும் தொடரலாம். இது முதல் கட்டம்.

சுவாரஸ்யமான பதிவு எழுதுவது என்பது ஒரு கலை. மற்றவர்களை வசீகரிக்கும் வண்ணமும், படித்தவுடன் கமெண்ட் போட வேண்டும் என யோசனை வரும் வண்ணம் சுவாரஸ்யமான பதிவுகள் எழுதுவது கொஞ்சம் கஷ்டமான ஒரு விடயம் தான். இது கிட்டத்தட்ட ஒரு சிற்பத்தை செதுக்கும் சிற்பி போலவும், ஓவியம் வரையும் ஓவியன் போலவும் ஒரு நுட்பமான செயல்.

இனி இரண்டாவது கண்டிசன்... இனி உங்களது ப்ளாக்குக்கு செல்லுங்கள். சொந்தமாக 50 இடுகைகளுக்கும் மேல் எழுதி இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது அல்ல...உடனடியாக கிளிக் செய்து நல்லா இருக்கு! குட்! உபயோகமான தகவல் என்ற பின்னூட்டங்களில் ஒன்றையோ :) :))) இதில் ஏதாவது ஸ்மைலியையோ போட்டு விட்டுச் செல்லலாம்

இரண்டாம் கட்டத்தைக் கடந்தும் தொடர்பவர்கள் இனி உன்னிப்பாக கவனிக்கவும். ஒரு பதிவுக்கு முக்கியமானது கரு. நாம் எதைப் பற்றி எழுதப் போகிறோம் என்பது தான் கரு. தமிழ் பதிவுலகில் மொத்தமே 6 கரு தான் உள்ளது. அதைத் தான் மாற்றி மாற்றி எழுத முடியும் என்று சூதாடி சித்தர் கூட சொல்லியுள்ளார். எனவே நமது அனுபவம், பக்கத்து வீட்டில் நடந்தது, அடுத்த தெருவில் நடந்தது, பள்ளி கல்லூரி அனுபவம், எங்காவது படித்தது, ஆங்கில நாவலில், கட்டுரையில் சுட்டது என கதைக்கான கருவை அந்தந்த சந்தர்ப்பங்களில் கண்டுபிடித்து வைத்துக் கொள்ளுங்கள். கரு கிடைத்தவுடன் எப்படி பதிவு எழுத வேண்டுமென்று மட்டும் சிந்திக்காதீர்கள்.

சரி கதை கிடைத்து விட்டது..இனி அதைப் பதிவாகஎழுத வேண்டும். இதில் தான் நிறைய பேர் கோட்டை விடுகின்றனர். கரு கிடைத்தவுடன் New Post கிளிக் செய்து உட்கார்ந்து விடுகின்றோம். இது தவறான அணுகுமுறை. கருவை முதலில் போட்டு ஊற வையுங்கள்.

காலையில் சீக்கிரமாக எழுங்கள். குளித்து நாஸ்தா எல்லாம் முடித்து விட்டு 9 மணி ஆபிஸ் என்றால் 10 நிமிடம் முன்னமே 8:50 க்கே சென்று விடுங்கள். உங்கள் மேலதிகாரி யாராவது வந்து இருந்தால் அவரிடம் சென்று ஒரு விஷ் பண்ணுங்கள். வேறு எங்கும் சென்று அரட்டை அடிக்காமல் உங்கள் இருக்கைக்கு வந்து வேலையைத் துவக்குங்கள். ஆணி இருந்தால் பிடுங்கவும். இல்லையெனில் ஆணி பிடுங்குவது போல் ஆக்ட் கொடுக்கவும். இடையில் மூத்த அதிகாரி யாராவது கிராஸ் செய்தால் சீரியஸாக இருப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு விஷ் பண்ணுங்கள்.

முடிந்தால் 9:15 க்குப் பிறகு உங்கள் மேலதிகாரிகளிடம் சென்று ஏதாவது முக்கிய டவுட் கேப்பது போல் கேளுங்கள். உங்கள் கீழ் அதிகாரிகளிடம் கண்டிப்பாக முடிந்திருக்காது என்று தெரியும் ஏதாவது விஷயத்தை முடிந்து விட்டதாக என்று விசாரியுங்கள். இதை 10 மணி வரைத் தொடருங்கள்.

இனி 10 மணிக்குப் பிறகு . ரீடரில் வேண்டியவர்களின் பதிவு இருந்தால் நல்லா இருக்கு என்றோ.. பதிவில் இருந்து சில வரிகளை கோட் செய்து கிரேட்! சூப்பர் என்று பின்னூட்டம் போடுங்கள். மீ த பர்ஸ்ட், மீ த 20! மீ த 100! மீ த 420! போடுவது சிறப்பானது.பின்னர் தமிழ் மணத்தைத் திறந்து அதில் உங்களுக்கு வழக்கமாக கமெண்ட் போடுபவர்களின் பதிவு இருந்தால் அதிலும் மேற்க்கண்ட கமெண்ட்களைப் போடுங்கள். கண்டிப்பாக எந்த பதிவையும் படிக்காதீர்கள்.

இதற்குள் மணி 10:30 ஆகி இருக்கும் இனி தான் முக்கியமான கட்டம். இப்போது ஆபிஸே அமைதியாக இருக்கும். கணிணித் திரையில் ஏதாவது ஸ்டேட்மெண்ட், கம்பைல் பண்ணாத கோடிங், அக்கவுண்ட்ஸ் இப்படி வைத்துக் கொள்ளுங்கள்.மெல்ல எழுந்து வயிறு சரியில்லாததைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு நேராக டாய்லெட்டுக்கு செல்லுங்கள்.

எதையும் செய்வதற்கு நல்ல இடம் முக்கியம். கலைஞர் கூட கவிதை எழுத கொடைக்கானல் போவதைக் கேள்விப்பட்டு இருப்போம். சினிமா பாடகர்கள் கூட 5 நட்சத்திர ஹோட்டல்களில் ??ட்டிகள் சூழ பாட்டெழுவதாக வதந்தி இருக்கும் முன்னால் எல்லாம்.. அது போல். டாய்லெட்டில் நல்ல WC உள்ள அறைக்கு செல்லுங்கள். ஐரோப்பிய மாடல் WC க்கள் மிகச்சிறப்பானவை. உள்ளே சென்றதும் அறைக் கதவை தாளிட்டு WC ல் வழக்கமாக அமர்வது போல் அமருங்கள்.(வழக்கமாக எப்படி அமர்வது என்ற கேள்வி இந்த இடத்தில் எழுப்பினால் கெட்ட கோவம் வரும்..)

இனி உங்கள் கைகளை உள்ளங்கை தெரிவது போல் முன்னால் நீட்டுங்கள் . இதே நிலையில் சுமார் 2 நிமிடங்கள் அமருங்கள். கிட்டததட்ட யோகாசன நிலை போல் இருக்கும். கண்டிப்பாக பதிவைப் பற்றி யோசிக்கவே கூடாது. (பின் குறிப்பு அ பார்க்க) இரண்டு நிமிடம் முடிந்ததும் அதே நிலையில் அமர்ந்து கொண்டு உங்கள் பதிவுக்கான கருவைப் பற்றி சிந்தியுங்கள். இனி ஆரம்பம் முதல் இறுதி வரை பதிவுக்கான மேட்டர் சரசரவென வந்து மனதில் அமரும்.




ஒரு பொருளை ஒரு இடத்தில் வைக்க வேண்டுமானால் அந்த இடத்தில் வேறு பொருள் இருக்கக் கூடாது என்பது இயற்கையின் நியதி. எனவே இயற்கையாக உங்கள் வயிற்றில் இருந்து ஏதாவது காலியானால் ஆனந்தமாக கழியுங்கள். அந்த சந்தர்ப்பங்களில் இடையிடேயே சேர்ப்பதற்கான விட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நல்ல தலைப்பும் அப்போது தான் கிடைக்கும்.

பதிவு கடைசி வரை இறுதியானதும் வேகமாக கதவைத் திறந்து உங்கள் இருக்கைக்கு விரையுங்கள்.. வெயிட்..வெயிட்.. சுத்தம் வேண்டியது இருந்தால் சுத்தம் செய்து விட்டு செல்லுங்கள். நீங்கள் உள்ளே வந்து வெளியே சென்ற நேரத்தையும் கணக்கில் கொண்டே உங்கள் பதிவு சூடாகும். இதற்கு ஒரு சுலபமான சூத்திரம் இருக்கு.. அதாவது நீங்கள் 15 நிமிடங்கள் இருந்திருந்தால் அது நல்ல பதிவு. அதற்குக் குறைவாக இருந்திருந்தால் சுமாரான பதிவு. 15 நிமிடத்திற்கும் அதிகமாக இருந்தால் அது நிச்சயம் சூப்பர் ஹிட் பதிவு தான்.

இருக்கைக்கு பயர் டிரிலில் ஓடுவது போல் வேகமாக சென்று அமருங்கள். முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு பதிவை தட்டச்சுங்கள். கவனத்தை வேறு பக்கம் சிதற விடாதீர்கள். அவ்வளவு தான்! டன்! இப்போது நீங்கள் எழுதும் பதிவு கண்டிப்பாக சூடாகி விடும். ஹிட்ஸூம் அதிகமாக வரும்.

அந்த கஷ்டமான கணங்களை சுவாரஸ்யமான கணமாக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது. அந்த நேரங்களில் யோசித்தால் உங்களுக்கு பி.ந. சொல்லாலடனுனான பதிவுகள், கர்ண் கொடூர கவுஜைகள், ஆரம்பமும் இறுதியும் புரியாத கட்டுரைகள் எல்லாம் யோசனையில் கிடைக்கும். அதை அப்படியே பதிவாக மாற்றலாம்.

பின் குறிப்பு அ
அந்த நேரத்தில் நயன்தாரா,அசின் , மல்லிகாசெராவத், வித்யா பாலன் (அங்கிள்களுக்கு மட்டும் ) என்று எதையாவது நினைத்தால் அதன் பின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பாகாது.

Monday, August 24, 2009

"And, Now..."


எப்போது வேண்டுமானாலும் செயின் கழன்று விடும்
சைக்கிள் ஒன்று என்னிடம் இருந்தது.
பெண்கள் பள்ளிக்கு செல்லும் வழியில்
சைக்கிள் செயின் மாட்டும் தோரணையில்
சைக்கிள் கேப்பில் பிகர் வெட்டிக் கொண்டு இருப்பேன்.

வெகு சுவாரஸ்யமாக இருந்தது அந்த வாழ்க்கை!

எப்படியோ செயின் கழன்று விழுவது நின்று போனது ஒரு சுபமுகூர்த்தத்தில்
அன்றே அந்த பிகரும் வேறு ஒருவனை கூட்டிக் கொண்டு
போய் விட்டாள் இந்தியாவை விட்டு

Monday, July 6, 2009

காதல் கறுப்பட்டியும், கறுப்பியும்.. சந்தித்த வேளையில்


ஒரு உருவம் தூரத்தே யாழ்ப்பாணத்தின் தொன்மை வாய்ந்த தெருவில் நடந்து வருவது தெரிகின்றது.. அருகே வர வர அதன் உருவம் நமக்கு விளங்குகின்றது. அடர் நீல நிறத்தில் ஜிப்பா பைஜாமாவுடன் கையில் பிரெஸ்லெட்டுல் மின்னுகின்றது. தங்கத்தின் மின்னலை ஜிப்பாவின் மின்னல் வெட்டுவது நம் கண்ணைக் கூச வைக்கின்றது... கண்களில் பச்சை நிறத்தில் கண்ணாடி அழகைக் கூட்டிக் காட்டுகின்றது. முகம் முழுவதும் முதல்வன் அர்ஜூன் போல பவுடர் கொட்டிக் கிடக்கின்றது. ஒரு கையில் ஒரு சூட்கேஸ், மற்றொரு கையில் ஒரு அட்டைப் பெட்டி.

அந்த உருவம் தெருவை ரசித்துக் கொண்டே வருவது நமக்கு மிக அருகே தெரிகின்றது. பேக் கிரெளண்டில் ஆட்டோகிராபில் வரும் “ஞாபகம் வருதே”க்கு முன்னால் வரும் தீம் மியூசிக் கேக்கின்றது. கேமரா குளோசப்பில் நெருங்கி வருகின்றது.. பார்த்தால் வருவது நம்ம தம்பி காதல் கறுப்பி . (இனி தம்பி என்று வரும்). அதற்கு மேல் குளோசப்பில் காட்டினால் மக்கள் நம்மை அடிக்க வருவார்கள் என்பதால் கேமராவின் கோணம் தம்பியின் பார்வையில் இருந்து விரிகின்றது.

தெரு ரொம்ப பிஸியாக இல்லாமல் அங்கொருவரும் இங்கொருவருமாக நடந்து செல்கின்றனர். தெரிவில் இருக்கும் நாய்கள் எல்லாம் தம்பியைப் பரிதாபமாக பார்க்கின்றனர். தூரத்தே வரும் ஒரு தாத்தா தம்பியின் சட்டையின் ஒளி வெள்ளத்தில் ஆளை சரியாகக் கணிக்க இயலாமல் திணறி நெற்றில் தனது கைகளை வைத்து கண்களைச் சுருக்கி “யாரு?” என்றும் கேட்கிறார்.

முன்னாடி பார்த்தால் சிவப்பு கலர் சுடிதாரில் ஒரு பெண் நடந்து வருகின்றார்.. கொஞ்சம் சுமாரான கலர் தான்.. (இங்கிதம் கருதி வர்ணனை தடை செய்யப்படுகின்றது.) அவர்தான் தம்பியின் கனவுக் காதலி கறுப்பி.
இதுவரை இருந்த தீம் மியூஸிக் மாறி “தந்தன தந்தன தாளம்” தீம் மியூஸிக் இசைக்கின்றது. மீண்டும் தம்பி்யின் முகம் கேமரா கோணத்தில்.. மீண்டும் மியூஸிக்கில் மாற்றம்.. பார்த்த விழி பார்த்தபடி பார்த்திருக்க... (குணா)

பிளந்த வாயை மூடாமல் விழித்துக் கொண்டிருக்கின்றார் தம்பி. கறுப்பியின் செல் பேசி இசைக்கின்றது.

“ஹலோ! யார் கதைக்கிறீயள்”

“ஹலோ அண்ணி! நான் சவுதி அரேபியாவில் இருந்து தமிழ் பிரியன் பேசுறேன்”

“என்னது அண்ணியா? உங்களை எனக்குத் தெரியாதே?”

“உங்களுக்கு என்னைத் தெரியாது.. ஆனா எனக்கு உங்களைத் தெரியும்”

“காதல் கறுப்பி தம்பி ரொம்ப நல்லவருங்க.. அவரு உங்களுக்கு கிடைக்க கொடுத்து வச்சு இருக்கனும்”

“என்னங்க ஒன்னுமே புரியல.. யாருங்க அந்த காதல் கறுப்பி?”

“உங்க முன்னாடியே நிக்கிறாரு பாருங்க.. அவர் தான் காதல் கறுப்பி.. ப்ளீஸ் அவரை லவ் பண்ணுங்க”

“எனக்கு முன்னாடி யாருமில்லயே”

“தலையைக் குனிஞ்சு தரையில் பாருங்க.. ஒரு மூணு அடியில் ஒருத்தர் இருக்காரு பாருங்க அவர் தான்”

போனைக் கட் செய்து விட்டு கீழே குனிந்து பார்க்கிறார்.. சட்டை ஒளியில் கண்கள் கூச உற்றுக் கவனிக்கிறார்.. அதிர்ச்சியடைகிறார் கறுப்பி.

“அடப்பாவி நீயா? மூணு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டு கொடியில் காயப்போட்ட தாவணியைத் திருடி மூணாவது தெரு மல்லிகாகிட்ட மூணு ரூபாய்க்கு வித்துட்டு, துபாய்க்கு ஓடிப் போனவன் தானே நீ?”

தம்பி தனது பழைய காதலியை வெகுநாட்கள் கழித்து சந்தித்த அதிர்ச்சியில் வாயடத்தைக் நிற்க்கிறார். மீண்டும் செல் பேசி இசைக்கின்றது. எண் +0061 ல் தொடங்குகின்றது.

“நான் ஆஸ்திரேலியாவில் இருந்து கானா பிரபா பேசுகிறேன்”

“உங்க முன்னாடி இருக்குற தம்பி ரொம்ப நல்லவரு.. வல்லவரு.. நாலும் தெரிஞ்சவரு.. மலைகளை எல்லாம் நல்லா தெரிஞ்சவரு அந்த நாலு பேரை மலைக்கு கூட்டிக் கொண்டு போன மாதிரி உங்களையும் கூட்டிக் கொண்டு போவார்”

கறுப்பி போனை கட் செய்து விட்டு கோபமா பார்க்கிறார்.

“அடப்பாவி தமிழா.. நீ இப்படியெல்லாமா செஞ்சு இருக்கா?”

தம்பி ஒன்றும் புரியாமல் விழிக்கிறார்.. மீண்டும் செல் அழைக்கிறது.. “ஹலோ நான் சிங்கையில் இருந்து நிஜமா நல்லவன் பேசுறேன்” என ஆரம்பிக்கிறது.. அதை அடுத்து சம்போ சிவசம்போ தீம்(நாடோடிகள் பட சேஸிங்) தீம் மியூஸிக் பிண்ணணியில் கறுப்பி பேசுகிறார்.. பேசுகிறார்.. பேசிக் கொண்டே இருக்கிறார். இடையில் லண்டன், பெர்லின், KL, பாரிஸ், சென்னை, டெல்லி, பெங்களூர் என்று வரிசையாக செல் பேசி அலறுகின்றது.

கறுப்பியை தம்பி காதலுடன் பார்த்துக் கொண்டே இருக்கிறார். கறுப்பியோ டென்சனில் உச்சத்தில் குமுறிக் கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறார்.. இப்போது செல் பேசியை அணைத்து விட்டு, “ஏண்டா படுவா? இப்படி உளறுவாயா இருந்து இருக்கியே.. என் தாவணியை திருடியத்தை தவிர உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. என்னப் பற்றி என்ன என்னவோ எழுதி வச்சு இருக்க நீ.. உன்னை.. ” கோபத்தில் பல்லை நறநறவென கடிக்கும் நேரம் மீண்டும் செல் பேசி அழைக்கிறது.. எண் +974 என்று ஆரம்பிக்கிறது.

“நான் ஆயில்யன் பேசுகிறேனுங்க...”

“ஆயில்யனா?...” கறுப்பியை பேச விடாமல் ஆயில்ஸ் தொடர்ந்து பேசிக் கொண்டே செல்கிறார். கறுப்பி பேசுவதற்கு மைக்ரோ வினாடி நேரம் கூட தராமல் பேசிக் கொண்டே இருக்கிறார்.. களைத்துப் போன கறுப்பி மயங்கி சரிகின்றார்.. தனது உயிர்க்காதலி மயங்குவதைக் கண்ட தம்பி அவரை தனது கரங்களில் சிறு குழந்தையைப் போல வாங்கிகின்றார்... அய்யகோ... கறுப்பியின் கனம் தாளாமல் தம்பி கீழே சரிகிறார். தம்பியின் மேலே கறுப்பி மயங்கி விழுகிறார்.. ஆயிரத்தில் ஒருவன் ஜெயலலிதா மாதிரி தம்பி கீழே கிடக்க .. அவருக்கு மேலே கறுப்பி கிடக்கிறார்.. கறுப்பியை தள்ளி எழ இயலாமல் தம்பி விழி பிதுங்கி கிடக்கிறார்.. பழைய தூர்தசனின் இரவு நேர ரீங்ரீங் மியூசிக் இசைக்கிறது.. கேமரா மெல்ல எழும்பி தூரமாகி கொண்டே செல்கின்றது... தம்பியும் கறுப்பியும் புள்ளியாகத் தெரிகிறார்கள்..

ஸ்கிரீன் ஸ்லைட் வருகிறது.. “ நீண்ட காலத்திற்குப் பின் சந்தித்த காதல் ஜோடிகள் தங்கள் பழைய கதைகளைப் பேசி மகிழட்டும்.. வாருங்கள் நாங்கள் கிளம்பலாம்.. அன்புடன் தமிழ் பிரியன்”

டிஸ்கி 1 : இது காதல் கறுப்பியைக் கலாய்ப்பவர்கள் சங்கத்திற்கான பதிவு.. (கா.க.க.ச)
டிஸ்கி 2 : தம்பியின் புகைப்படத்தை இணைக்க முடிவு செய்த போது, அதைப் பார்க்கும் ரசிகைகள் தம்பியை தொல்லை செய்வார்கள் என்பதால் முகத்தை மட்டும் கொஞ்சம் அழகு குறைந்த கமலின் முகத்தை மாற்றி வைத்துள்ளோம். இதை செய்து கொடுத்த ஆயில்யனுக்கு நன்றிகள்.

Tuesday, June 16, 2009

திருடி நம்பர் ஒன்

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். ஓரளவு இருக்கைகள் நிறைந்து இருந்தன. அரை மணி நேரப் பயணம் தான். மதுரையில் இருந்து வரும் வண்டியில் தான் இருக்கை கிடைக்கும் என்பதால் அந்த தனியார் வண்டியில் ஏறி இருந்தோம். இருவர் அமரும் சீட்டில் மகளை வைத்துக் கொண்டு மனைவி ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்க நான் உள்பகுதியில் அமர்ந்து இருந்தேன். மனைவி, குழந்தையுடன் செல்லும் போது எப்போதுமே கொஞ்சம் கவனமாக இருப்பது வழக்கம்.

வத்தலகுண்டு பேருந்து நிலையத்தை விட்டு வண்டி கிளம்பத் தயாராக இருந்த போது தான் முன் பகுதியில் அந்த பெண்மணி ஏறினாள். வண்டி முழுவதும் இருக்கைகள் நிறைந்து இருந்தன. நேராக என்னிடம் வந்த அவள் பின்னால் இருக்கும் மூவர் இருக்கையில் இருக்கும் ஒரு காலி இடத்தைக் கை காட்டி அங்கே போய் அமரச் சொன்னார். சுற்றும் முற்றும் பார்த்தால் ஒரு பெண் அமர்வது போன்ற இருக்கை ஏதும் காலி இல்லை. அந்த மூவர் இருக்கையில் ஏற்கனவே தடியான இரு ஆண்கள் அமர்ந்து இருந்தனர். வேறு வழி இல்லை.. மனைவியிடம் சொல்லி விட்டு மூவர் இருக்கைக்கு சென்றேன். அங்கிருந்த இருவருக்கும் இடையிலேயே எனக்கு இருக்கை கிடைத்தது.

இப்போது தான் அந்த பெண்மணியை நன்றாக பார்த்தேன். வயது 35 க்குள் இருக்கும். அவளது பார்வையே சரியில்லை. ஏனோ ஒரு திருட்டு முழி இருந்தது. என் மனைவியின் அருகே அமர்ந்தவள் என் மனைவியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்தாள். தெரியாவதவர்களிடம் என் மனைவி பேச மாட்டாள். அந்த பெண்மணி வம்படியாக பேச்சுக் கொடுப்பதாகவே எனக்குப் பட்டது.

அடிமனதில் பய ஓட்டம் ஆரம்பித்து இருந்தது. சென்ற வாரம் மனைவியின் ஊரில் இதே போல் பேருந்தில் அருகே அமர்ந்த பெண்ணிடம் திருடி விட்டு கம்பி நீட்டிய பத்திரிக்கை செய்தி ஏனோ நினைவுக்கு வந்தது. கழுத்தில், காதில் நகை போட்டிருக்கின்றாள். இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக மாற்றப்பட்ட வளையல்களை வேறு போட்டு இருக்கிறாள். அதை நினைத்ததும் இன்னும் டென்சன் அதிகமாக ஆரம்பித்து இருந்தது. நகையின் எடையில் எந்த மாற்றமும் இல்லாமல், மாற்றிக் கொண்டு வந்ததன் மூலம் பல ஆயிரம் ரூபாய்களை விழுங்கி இருந்தவை அந்த வளையல்கள். என் அம்மாவிடம் திட்டு வாங்க முடியாது என்பதால் நெக்லஸை வேறு போட்டுக் கொண்டு வந்து இருக்கிறாள்.

அந்த பெண்ணுடன் என் மனைவி பேச ஆரம்பித்து இருப்பது தெரிந்தது. என்ன இவள்? பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் யாரென்றே தெரியாத பெண்ணுடன் எப்படி பேசிக் கொண்டு இருக்கிறாள். எரிச்சலாக வந்தது. பேருந்து நிலையத்தை விட்டு பேருந்து வெளியேறும் நேரம் 20 பேருக்கு மேல் நின்று கொண்டு வந்தனர். அவர்கள் வேறு பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டு இருந்தனர்.

இடையில் கிடைத்த கேப்பில் பார்த்த போது, இப்போது அந்த பெண்மணியின் மடியில் என் மகள். பஸ்ஸில் அமர்ந்ததும் தூங்கி விடுவாள். எப்படி கொடுத்தாள் இவள்? கோபம் முட்டிக் கொண்டு வந்தது. மகள் கழுத்தில் செயினும், காலில் தங்க கொழுசும் உள்ளது.

வண்டி தேவதானபட்டியைக் கடந்து இருந்தது. ஆட்கள் இன்னும் ஏறி வண்டி நிறைந்து இருந்தது. கொஞ்சம் எழுந்தே பார்க்க முடிந்தது. நான் பார்ப்பதைக் கூட கவனியாமல் இருவரும் முழு அரட்டையில் இருந்தனர். பதற்றம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. என்ன நடக்குமோ என்று .. எதுவாக இருந்தாலும் அந்த பெண் இறங்கும் போது மனைவியிடம் சென்று நகைகளை சரிபார்க்க சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

பெரியகுளம் பேருந்து நிலையத்திற்கு முன் உள்ள நிறுத்தத்திலேயே அந்த பெண் இறங்க நாங்கள் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். வேகமாக அந்த பெண் என்னை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே இறங்கிச் செல்ல என்னை அடுத்த இருந்த ஆளை முட்டித் தள்ளி மனைவியின் இருக்கையை அடைவதற்குள் அந்த பெண் இறங்கி, வண்டியும் கிளம்பி இருந்தது.

காதுக்கு அருகில் சென்று திட்ட ஆரம்பித்து இருந்தேன்.. மனைவியின் முகத்தில் ஒரே சிரிப்பு.. ”என்னங்க நீங்க... அவங்க உங்க அப்பாவோட பிரண்டு பிரான்ஸிஸ் அங்கிள் மகள்.. நம்ம கல்யாணத்து கூட வந்து இருந்தாங்களே? ”

“அப்படியா? நான் கவனிக்கலியே” என்றேன் பரிதாபத்துடன்.. “ ஆமா.. கல்யாணத்து அன்றைக்கு யாரைத் தான் பார்த்தீங்க.. பலி ஆடு மாதிரி தானே முழிச்சுக்கிட்டு இருந்தீங்க..” மனைவி சொல்ல உண்மையில் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டு இருந்தேன்.

Wednesday, May 27, 2009

என்னத்தங்க எழுத..

கொஞ்சநாளா பதிவு எழுதுவதற்கான மனநிலை இல்லை. ஏனோ நம் கருத்தை திணிக்க நினைக்கும் ஒன்றாக பதிவு எழுதுகின்றோமோ என்ற யோசனை வருகின்றது. அவரவர் மன திருப்திக்காக எழுதினாலும், பதிவு போட வேண்டும் என்பதற்காக எழுதுவதற்கும், நம் எழுத்தை வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவும் பதிவு எழுதுவதற்கும் பல மடங்கு வித்தியாசம் இருப்பதாகவே உணர்கின்றேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Fireproof என்று ஒரு படம் பார்க்க நேரிட்டது. ஒரு கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சினைகள் அவர்களை விவாகரத்து வரை இட்டுச் செல்கின்றது. தீயணைப்பு பணியில் இருக்கும் அந்த அவனது தந்தை மகனையும், மருமகளையும் ஒன்றிணைக்க ஒரு 40 நாள் திட்டத்தை சொல்கின்றார்.. அதன் இறுதியில் என்ன ஆனது என்பது தான் அந்த ரம்மியமான கதை. எந்த சினிமாத்தனமும் இல்லாத படம்.

இதைப் பற்றி எழுதலாம் என்று எண்ணி இருந்த நேரத்தில் நம்ம நண்பர் குசும்பன் IMDB பார்த்து கதை எழுதுவது எப்படி என்று பதிவு வேறு போட்டு விட்டதால் அதை அப்படியே விட்டு விடுகின்றேன்... ;-)))


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





பல நாட்களாக பதிவு எழுதாமல் விட்டுள்ளதால் ஹிட்ஸ் கவுண்டர் காற்று வாங்குகின்றது. தினசரி 50 ஹிட்ஸ் வருகின்றது. எல்லாம் பொதுவாக கூகுள் தேடல் மூலம் வருபவர்களே அதிகமாக இருக்கின்றனர். தேடு பொறியின் குறிச் சொற்களைப் பார்த்தால் நமக்கே ஆச்சர்யமாக இருக்கின்றது. நடிகையின் பெயர்களை குறிச் சொல்லாக இட்டு தேடப் பட்டு வருபவையே அதிகமாக இருக்கின்றன.


சில காலத்திற்கு முன் பதிவுலகில் மும்முரமாக இருந்த நேரம் பொன்னியின் செல்வன் பற்றி சில விஷயங்கள் எழுதி இருந்தேன். நந்தினிக்கும், வீர பாண்டியனின் இடையே உள்ள உறவு குறித்து.. இந்த பதிவுக்கும் கூகுள் தேடல் மூலம் ஹிட்ஸ் வருவது அதிகமாக இருக்கின்றது. நம்மளை மாதிரி பொன்னியின் செல்வன் பித்தர்கள் அதிகமாக இருப்பார்கள் போல உள்ளது.. ;-))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நமக்கு நுனிப்புல் மேய்வது என்றால் ரொம்ப பிடிக்கும். அது இலக்கியமா இருந்தாலும் சரி, அரசியலா இருந்தாலும் சரி. எனக்கு இந்த பழக்கம் ரொம்ப நாளா இருக்கு. பதிவைப் படிக்கும் போது முன்னால் உள்ள ஒரு பாராவைப் படித்துவிட்டு கீழே சென்று கமெண்ட்களைப் பார்த்து அதற்குத் தகுந்தாற் போல் கமெண்ட் போட்டு விட்டு சென்று விடுவேன்... நான் மட்டும் தான் இப்படியா? நம் மக்களும் இபப்டியான்னு சந்தேகம் வரும். அவ்வப்போது மக்களை டெஸ்ட் பண்ணி இதைக் கன்பர்ம் பண்ணிக்குவேன்.

முன்பு வடகரை வேலன் அண்ணாச்சி எழுதிய ஒரு கவிதையைப் போட்டு கீழே இது பிரபல பதிவர் எழுதியது என்று எழுதி வைத்து இருந்தேன்.. எல்லாரும் அது என் கவிதை என்று நினைத்து பாராட்டி விட்டு சென்றனர். ஒரு சிறுகதை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதினேன்.... என்னை மாதிரியே எல்லாம் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டுட்டு போய்ட்டாங்க... ;-))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்கு ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன். தீம் ரெடி... கதை எப்ப எழுத முடியும்ன்னு தெரியல... பார்ப்போம்..

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html

படம் இணைப்பு : பிக்காசாவில் கிடைத்த படம்... அழகான இடத்தில் எல்லோரும் நினைவு கூறும் சைக்கிள் பழகும் படம். அழகா இருந்தது.

Monday, May 11, 2009

”இப்ப நான் எங்க இருக்கேன்?” “where is my shopping bags?"

(வாசிப்பதற்கு முன்..
நீல நிறத்தில் இருப்பது ஆங்கிலத்திலும், கறுப்பு நிறத்தில் இருப்பது தமிழிலும் இருப்பதாக நினைத்துக் கொண்டு வாசிக்கத் துவங்குங்கள்.. இது ஒருவகையான Anti-Post modernism வகையிலான முயற்சி. புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்... ;-)) அன்புடன் தமிழ் பிரியன்.)

ஜானுக்கு என்றைக்கும் இல்லாத ஒரு பரபரப்பு இன்னைக்கு இருந்தது. மதிய வேளைஅலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வேகமாக விரைந்து கொண்டு இருந்தார். வேகமாக நடந்ததால் கொஞ்சம் மூச்சிரைக்க ஆரம்பித்து இருந்தது. குளிரால் அனைவரும் நடுங்கிக் கொண்டே நடந்து கொண்டு இருந்தனர். வயசும் 55 ஐ தாண்டிக் கொண்டு இருக்கிறதே..... khyber pass road போக்குவரத்து வர வர அதிகமாகிக் கொண்டே செல்வதாகவே அவருக்குப் பட்டது. “ஆக்லாந்தின் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது” என முணுமுணுத்துக் கொண்டார். New Market பகுதியில் இருந்த ஒரு கடையில் பேரன் பேத்திகளுக்காக சில விளையாட்டுப் பொருட்களையும், திண்பண்டங்களையும் வாங்கிக் கொண்டார்.

மாயக்காளைக்கு அந்த அதிகாலை வேலையிலும் வேர்த்து ஒழுக ஆரம்பித்து இருந்தது. அக்னி நட்சத்திர வெயில் நேரம் என்பதால் தனது மாட்டு வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு இருந்தார். காலை நேரம் சீக்கிரமே புலர்ந்து கொண்டு இருந்தது. வெயில் வருவதற்குள் உசிலம்பட்டியை அடைந்து விட்டால் கீரைக்கட்டுகளை வேகமாக விற்று விடலாம் என்பது அவரது எண்ணம். கீரை கட்டுகளும், காய்கறிகளும், இரண்டு ஆட்டுக் குட்டிகளும் அவரது மாட்டு வண்டியை நிறைத்திருந்தது. இந்த இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் விற்று விட்டு, மகளுக்கு சீர் செய்து சமாளிக்க வேண்டும் என்பது மாயக்காளையின் எண்ணம்.


ஜானின் நடை Boston road Railway station ஐ நோக்கி விரைவாக இருந்தது... அவருக்கு Avondale அருகில் உள்ள வீட்டிற்கு ரெயிலில் செல்ல வேண்டிய அவசரம். கைகளில் இருந்த Shopping bag களின் கனம் வேறு அவரது நடைக்கு தடையாக இருந்தது. இருந்தாலும் அமெரிக்காவில் வசிக்கும் மகள் பேரன் பேத்திகளுடன் வருகிறாள் என்ற மகிழ்ச்சி அவரது நடையில் ஒரு மிடுக்கையே கூட்டி இருந்தது. சில நாட்களாக பராமரிப்பு வேலைகளால் பொழிவிழந்து இருந்த ரெயில் நிலையம் இப்போது கொஞ்சம் களையாக தெரிந்தது. அதே காரணத்திற்காக ரெயில் நிறுத்தப்பட்டிருந்த போது போது காரில் வந்து, பார்க்கிங்கிற்காக karangahape road க்கு ஓடிய நாட்களை நினைத்துக் கொண்டார்.

மாயக்காளையால் மோசமான ரோட்டால் மாடுகளை வேகமாக செலுத்த இயலவில்லை. வண்டி கன்னாபட்டி, செக்காபட்டியைக் கடந்து போய்க் கொண்டு இருந்தது. ரோடு போட்டால் ஒரே வருடத்தில் பிய்த்துக் கொண்டு போய் விடுகின்றது. எல்லாம் அரசியல்வாதிகளின் கமிஷன் செய்யும் வேலை என நினைத்துக் கொண்ட போது ஆத்திரமே வந்தது. தேர்தல் நேரத்தில் அவர்கள் செய்யும் கூத்தும் அவரின் கோபத்திற்குக் காரணம்.

ஜான் ரெயில் நிலையத்திற்கு அருகில் நெருங்கிக் கொண்டு இருந்த போதுதான் அது நிகழ்ந்ததது.. டமார் என்ற பலத்த சத்தம்.. எங்கிருந்தோ வேகமாக வந்த வண்டி அவரின் மீது மோதி அவரை வீழ்த்தியது.... Oh! My god என்ற அலறல் மட்டும் கேட்டது.




செங்க மங்கலாக காலைப் பொழுது புலர்ந்து கொண்டு இருந்தது. உசிலம்பட்டி ரெயில்வே கேட்டை மாயக்காளையின் மாட்டு வண்டி நெருங்கி இருந்தது. பின்னே கேட்ட ஹார்ன் சத்தத்தால் மீது சென்று கொண்டு இருந்த மாயக்காளை திரும்பிப் பார்த்த போது மிக வேகமாக ஒரு லாரி அவரது வண்டியை நோக்கி வந்து கொண்டு இருந்தது... லாரியின் பிரேக் பெயிலியர் என்பதை புரிந்து கொள்ள சில வினாடிகளே தேவைப்பட்டது. வேகமாக மாடுகளை முடுக்கி விட்டார்.. ஆனாலும் லாரி அதி வேகத்தில் மாட்டு வண்டியின் மீது மோதி வண்டியை தூக்கி விசிறி அடித்தது.. ஐயோ.. அம்மா என்ற அலறலுடன் மாயக்காளை தூக்கி விசிறியடிக்கப்பட்டிருந்தார்.

அவர் அரை மயக்கத்தில் விழித்துப் பார்த்த போது ரெயில்வே கேட்டுக்கு அருகில் கிடந்தார். அவருக்கு அருகில் கீரைக்கட்டுகளும், காய்கறிகளும் சிதறிக் கிடக்க ஆடு ஒன்று காயத்துடன் கதறிக் கொண்டு இருந்தது. அவர் வாழ்க்கையில் கண்டிராத வெயில் அவரைத் தாக்கிக் கொண்டு இருந்தது. வாய் இம்சையில் முணுமுணுத்தது "where am i" “where is my shopping bags?"

குளிரால் அவரது உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது... அவர் இதுவரை கண்டிராத ஒரு இடத்தில் காயங்களுடன் கிடக்க, ஆம்புலன்ஸின் சத்தம் அசரீரியாக கேட்டுக் கொண்டு இருந்தது.. அவரைச் சுற்றி சில பொம்மைகளும், சாக்லெட்களுடம் கிடக்க ஈணஸ்வரத்தில் முனங்கினார்.. “என்னோட மாட்டு வண்டி, ஆடு, மாடு எல்லாம் எங்க போச்சு?.. இப்ப நான் எங்க இருக்கேன்?”.

படங்கள் நன்றி : ப்ளீக்கர் இணையம்.

Friday, May 8, 2009

எங்கள் ஓட்டு ‘ஈழத் தாரகை’ அம்மா(ஜெ.)விற்கே!... வாசகர் கடிதம்.

கடந்த சில வாரங்களாக பதிவு ஏதும் எழுதவில்லை. ஏன் பதிவு எழுதவில்லையென்று கேட்டு, விசாரித்து இதுவரை 18 மொழிகளில் 14,28,332 கடிதங்கள் வந்த கடிதங்களைப் பற்றி இங்கு பேச வேண்டிய அவசியம் இல்லா விட்டாலும் 14,28,333 வது கடிதமாக கூட்டுத் தொகை 9 ஆக வந்த ஒரு கடிதத்தை உங்களுக்கு அப்படியே அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

திமுக அடிவருடி தமிழ் பிரியன் அவர்களுக்கு,


வருகின்ற 2009 மே 13 ந்தேதி இந்திய பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள சூழலில் உங்களது பொன்னான வாக்குகளை தமிழக மக்களின் ஒரே இறுதி நம்பிக்கை ஜெ.விற்கு அதிமுக கூட்டணிக்கு ஓட்டுப் போடும்படிகேட்டுக் கொள்கின்றோம்.

அம்மா... இந்த பெயரைச் சொன்னதும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் அம்மா ஜெ. அவர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். அன்றும், இன்றும், என்றும் ஈழ மக்களின் மேல் அக்கறை கொண்டுள்ள அம்மா அவர்கள் தற்போதைய தேர்தலுக்குப் பின் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

அதன்படி தேர்தல் முடிந்ததும் அம்மாவிடம் இருக்கப் போகும் 40 எம்.பி சீட்டுக்களை வைத்து அம்மா இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பார். அம்மாவின் பாசத்திற்குரிய ஒருவர் மட்டுமே இனி இந்தியாவில் பிரதமராக முடியும் என்ற தலையெழுத்து அமையும்.



புதிய இந்தியத் தலைமை அம்மாவின் காலடியில் அமைந்ததும், உடனே இந்திய ராணுவம் இலங்கையை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் களம் இறக்கப்படும். முழு இலங்கையும் இந்தியாவிம் காலடியில், அம்மாவின் ஆணைக்காக காத்திருக்கும். அம்மா ஆணையிட்டால் முச்சந்ந்தி முனுசாமி கூட பிரதமர் நாற்காலியில் அமர முடியும்.

அவ்வாறு அம்மாவின் காலடியின் கீழ் மத்திய அரசு அமைந்ததும், அம்மாவின் முதல் செயல்பாடே இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்புவது தான். இலங்கையில் சரிவை சந்தித்து வரும் விடுதலை போராட்ட வீரர்களுடன் இந்திய ராணுவம் இணைந்து முழு இலங்கையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அம்மா ஏற்பாடு செய்வார்கள். ராஜபக்‌ஷே சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டு புழல் சிறையில் அம்மாவால் அடைக்கப்படுவார்கள்.

இலங்கையில் ஜனாதிபதியாக மிஸ்டர் கிளீன் ஓ.பன்னீர்செல்வத்தை அம்மா நியமிக்கப்பார். அம்மாவால் தேசிய தலைவர், இலங்கையின் இராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவார். இளைய தளபதி கருணாவை, ஐரோப்பா கண்டத்திற்கான இலங்கைத் தூதராக நியமித்து எங்கிருந்து அடிவாங்கிக் கொண்டு வந்தாரோ அங்கேயே சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்க அம்மா வழி செய்வார்கள்.

இலங்கையில் கிழக்கு மண்டலத்திற்கு ரவுப் ஹக்கீமையும், வடக்கு மண்டலத்திற்கு பிள்ளையானையும் முதல் மந்திரியாக நியமித்து அம்மா அழகு பார்ப்பார்கள். அம்மாவின் ஆசியால் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வெறும் 50 ரூபாயில் இரயில் பயணம் செய்ய சட்டம் இயற்றப்படும். A9 பாதை வழியாக செல்லும் தமிழர்களுக்கு எந்த சோதனையும் செய்யாமல் அம்மா பார்த்துக் கொள்வார்கள்.மலையக மக்களின் வசதிக்காக அனைத்து போகுவ்ரத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். அங்கு உற்பத்தியாகும் பொருட்களுக்கு முழு வரி விலக்கும், மானியமும் வழங்கப்படும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அம்மா ஏற்படுத்திய ஒற்றுமையைக் குலைக்க அம்மாவின் எதிரி அரசான மைனாடிரிட்டி திமுக அரசு முயற்சி செய்த காரணத்தால் அவ்வாட்சி கலைக்கப்படும். ஏழைகளின் உற்ற தோழி அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும். ஈழம் மற்றும் தமிழக மக்களிடையே உள்ள உறவை பிரிக்கவே சேது சமுத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை அம்மா அவர்கள் உணர்ந்துள்ளார்கள். எனவே மைனாரிட்டி கருணாந்தி அரசால் ஆழம் செய்யப்பட்ட சேது சமுத்திரம் முழுவதும் மணலால் நிரப்பட்டு இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையே பஸ், இரயில் போக்குவரத்து அம்மாவால் விடப்படும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 90 களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கப்படும். அவர்களின் பழைய உடைமையான அவர்களின் வீடு, நிலம், வியாபாரம் அனைத்தும் அம்மாவின் பொற்கரங்களால் மீண்டும் வழங்கப்படும் . ஈழத்தில் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச உரம் போன்றவை அம்மாவின் கட்டளையின் கீழ் வழங்கப்படும். கரும்புக்கு டன்னுக்கு 10,000 ரூபாயும், நெல்லுக்கு கிலோவுக்கு 50 ரூபாயும் அம்மாவின் ஒப்புதலின் கீழ் வழங்கப்படும்.

புலம் பெயர்ந்து வறுமையில் வாடும் ஈழத் தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வர விரும்பினால் இலவசமாக வீடும், 5 ஏக்கர் நிலமும், 10 லட்சம் ரூபாயும் அம்மாவின் கருணையால் வழங்கப்படும்.

இலங்கைக்கான ஐ.நா. தூதராக வைகோவும், இந்தியத் தூதராக ராமதாஸூம் அம்மாவால் நியமிக்கப்படுவார்.

மேற்கண்ட நன்மைகளை செய்ய அம்மா முடிவு செய்து இருப்பதால் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஓட்டுக்களை அதிமுகவின் கூட்டணிக்கு தரும் படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் ஈழத்தில் நீதியை நிலை நாட்டி தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கித் தந்து, ஈழ மக்களின் மனதிலும், சரித்திர புத்தகங்களிலும் நீங்கா இடம் பிடிக்கப் போகும் அம்மாவின் சீரிய பணியைப் பாராட்டி பெரியார் புத்தகங்களின் காவலர், கல்வி நிறுவனங்களின் தளபதி தமிழினத்தின் இளைய தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் அம்மாவுக்கு ஈழத் தாரகை என்ற பட்டத்தை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.

வாழ்க அம்மா! வளர்க அதிமுக! ஓங்குக எம்.ஜி.ஆர் புகழ்!

இவண்
தலையைச் சொறிய எரியும் கொள்ளியைப் பயன்படுத்துவோர் சங்கம்.
Pirates of graveyard Nager AIADMK கிளை
Somalia.

டிஸ்கி 1 : கடிதத்தை படித்து விட்டு இது மண்டபத்தில் எழுதியது என்று பின்னூட்டம் போட்டால், அவர்கள் வைகோ விடம் தேம்பி தேம்பி முந்தானையில் மறைந்து அழுவது எப்படி என பயிற்சி அளிக்க அனுப்பப்படுவார்கள்.

டிஸ்கி 2 : மண்டபம் என்றால் என்ன? இராமேஸ்வரம் பக்கத்தில் இருக்கும் ஊரா? என்று கேட்பவர்கள் சில வினாடிகளில் நிறம் மாறுவது எப்படி என்று பயிற்சி எடுக்க மருத்துவர் ஐயாவிடம் அனுப்பப்படுவார்கள்.

படம் நன்றி : கீற்று இணைய தளம்

Tuesday, April 28, 2009

விடுபட்ட இரு மூத்த பதிவர்களின் சிறப்பு பேட்டி

.

சமீபத்தில் வலைச்சரம் எழுதிய போது பல மூத்த பதிவர்களின் பதிவுகளுக்கு அறிமுகம் செய்ய இயலாமல் போனது வருத்தம் அளித்தது. அதை ஈடுகட்டும் விதத்தில் இன்று இரு மூத்த பதிவர்களின் சிறப்பு பேட்டி இங்கு வெளியிடப்படுகின்றன. இனி ஓவர் டூ பேட்டி வித் ஆதாம், ஏவாள்...

நாம் : முதலில் இந்த சிறப்பு பேட்டிக்கு ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. முதலில் நீங்கள் இருவரும் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

ஆதாம் : என் பெயர் ஆதாம். இவள்....

ஏவாள் : இருங்க.. உங்களுக்கு சொல்லத் தெரியாது. இவர் பெயர் ஆதாம். என் பெயர் ஏவாள். நாங்க கடந்த 47000 ஆண்டுகளுக்கு முன்னாடியே பதிவு எழுதத் தொடங்கி விட்டோம். உலகிலேயே நான் முதல் முதல் பதிவர் என்பதில் எங்களுக்கு மிக்க பெருமை.... (ஆதாமைப் பார்த்து) அப்படித்தானேங்க...

ஆதாம் : ஆமா! ஆமா!

நாம் : முதலில் நீங்க இரண்டு பேர் தான இருந்திருப்பீர்கள்! உங்க பதிவை யார் வந்து படிப்பாங்க? யார் பின்னூட்டம் போடுவாங்க?

ஆதாம் : அதாவது..

ஏவாள் : இருங்க! நானே சொல்கிறேன். அவருக்கு பதிவும் எழுதத் தெரியாது. ஒரு மண்ணும் தெரியாது. ஒரு விட்ஜெட் போடக் கூடத் தெரியாதுன்னா பாத்துக்கங்க... நான் தான் எல்லாம் சொல்லித் தந்தேன். ஆனாலும் அவர் பதிவை நானும், என் பதிவை அவரும் படித்து பின்னூட்டம் போட்டுக் கொள்வேம். அப்புறம் எனக்கு குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் ஆனதும் எல்லாரும் மாத்தி மாத்தி பின்னூட்டம் போட்டுக்குவோம். அப்படித்தானே?

ஆதாம் : No Mam.. Yes Mam... Sorry Mam

நாம் : உங்க குடும்பத்துக்குள்ளேயே பின்னூட்டம் போடுவதால் அப்ப மட்டுறுத்தலெல்லாம் தேவைப்பட்டிருக்காதே?

ஆதாம் : என் பதிவுக்கு முதலில் மட்டுறுத்தல் செய்யவில்லை? ஆனால்.....

ஏவாள் : கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? நான் சொல்லிக்கிறேன். இவருக்கு ஒரு மொக்கை பதிவோ, இல்லை கும்மி பதிவோ கூடப் போடத் தெரியாது. அதனால் மட்டுறுத்தல் தேவைப்படலை. எனது பதிவுக்கும் முதலில் மட்டுறுத்தல் தேவைப்படவில்லை. ஆனால் ஒருநாள் எனது பதிவுக்கு மொத்தமாக ஒரே நேரத்தில் 100 அசிங்கமா கமெண்ட் இவர் பெயரில் போட்டுட்டாங்க. நானும் இவர் தான் நம்ம மேல உள்ள கோபத்தில் பின்னூட்டம் போட்டு விட்டாரோ என்று கோபத்தில் அடித்து கூட விட்டேன். மண்டையில் தழும்பு கூட இருக்கு... (ஆதாமைப் பார்த்து) காட்டுங்கங்க...

(ஆதாம் பலி ஆடு போல் குனிந்து தலையில் இருக்கும் இரண்டு அங்குல தழும்பைக் காட்டுகிறார்)

ஏவாள் : அப்புறம் எலி குட்டி சோத்னை செய்ததில் அது போலியின் வேலை என்று தெரிந்தது?

நாம் : (அதிர்ச்சியுடன்) என்னது போலியா?

ஆதாம் : ஆமாங்க! அது ஒரு பெரிய கதை..

ஏவாள் : உங்களால வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்க முடியாதா? . (ஆதாம் துண்டை எடுத்து வாய்க்கு முன் வைத்து மூடிக் கொள்கிறார்) அப்புறம் பார்த்தால் அது சாத்தானோட வேலை. இவரோட பேரோடு ஒரு a அதிகமா சேர்த்து பதிவைத் தொடங்கி இருந்திருக்கிறான். அப்புறம் தான் மட்டுறுத்தல் செய்தோம்.

நாம் : சரி! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. வருகிறோம்.

(நாம் தெருமுனையை அடைவதற்கு முன் ஆதாம் ஓடோடி நம்மிடம் வந்தார்.

நாம்: ஏன் என்ன ஆச்சு? ஏன் இப்படி மூச்சு இறைக்க ஓடி வருகிறார்.

ஆதாம் : எங்களை இறைவன் படைத்த நாள் முதலே இவள் தான் பேசிக்கிட்டே இருக்கிறாள். நான் கேட்டுக் கிட்டே இருக்கிறேன். சொர்க்கத்தில் இருக்கும் போது கூட அதே கதை தான். சொர்க்கத்துக் கனியை சாப்பிடாதே என்று சொல்லக் கூட என்னை விடலை. இவளால் தான் நாங்க பூமிக்கே வர வேண்டி வந்தது

நாம் : உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சொர்க்கத்தில் என்ன கனியைச் சாப்பிட்டீர்கள்? ஆப்பிள் என்று எல்லாரும் சொல்கிறார்களே? (அதற்குள் தெருவில் ஏவாள் வருவதைப் பார்த்ததும் ஆதாம் தலை தெறிக்க ஓடுகிறார்)

நாமும் வீட்டில் துவைக்க ஊற வைத்த மனைவியின் ஆடைகளும், துவைக்காவிட்டால் கிடைக்கப் போகும் தண்டனையையும் நினைத்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தோம்.

டிஸ்கி : இந்த பேட்டிக்கு ஏற்பாடு செய்த ஆப்ரகாம், நோவா, மோசே ஆக்யோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புது டிஸ்கி : ஒன்லி மீள் பதிவு

Friday, March 27, 2009

கலவையான சிந்தனைகள் - 27-03-2009

பதிவுகளில் கதையாகவோ, கட்டுரையாகவோ எழுதுவதைக் காட்டிலும் கலந்து கட்டி அடிப்பதில் தான் ஒரு மகிழ்ச்சி இருக்கின்றது. நண்பர்களுடன் பகிந்து கொள்வதைப் போன்ற உணர்வைப் பெற முடிகின்றது... ரொம்ப நாளாய் விட்டுப் போன கலவையான சிந்தனைகள் மீண்டும்...

************************************************************

ஊரில் இருந்து வந்ததில் இருந்து இப்ப தான் பதிவுகளை எழுதும் மனநிலைக்கு வந்து இருக்கேன். அதே சூட்டோடு ஒரு பதிவு எழுதினேன். சுவாரஸ்யமான பதிவுகளை எழுதுவது எப்படி? இதுதான் தலைப்பு. ஆனா அதைப் படித்த நம்ம பதிவுலக அண்ணன் ஒருத்தர் இந்த மாதிரி பதிவைப் போட்ட உன் பக்கமே வர மாட்டேன்னு சொல்லிட்டார். ஒரு பேரிளங் காதலர் கூட தல... ஏனிந்த கொல வெறி பதிவை எடிட் பண்ணுங்க என்று சொல்லி விட்டார். எனவே டிராப்ட்டில் போட்டாச்சு... கொஞ்ச நாள் கழிச்சு அது சாதாரணப் பதிவா தெரியும் போது வெளியிடலாம்.

**************************************************************

இரண்டு சிறுகதைகள் யூத் விகடனில் வந்தது மகிழ்ச்சியளிக்கின்றது. விகடன் தனது முகப்பில் அதற்கான சிறு இடத்தையும் கொடுத்து வைத்திருந்தது ஒரு உற்சாகத்தை அளித்தது. நல்லா இருக்கோ இல்லியோ நமக்கே ஒரு அங்கீகாரம் கிடைக்கின்றது எனும் போது மகிழ்ச்சி தானே.எனவே தொடர்ந்து எழுதி இம்சிப்போம்.

**************************************************************

நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக IPL போட்டிக்கு பாதுகாப்பு தர இயலாத காரணத்தால் போட்டிகள் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு பத்திரிக்கையில் வந்த கார்ட்டூன் துணுக்கை சக பதிவர் ஸ்டேடஸில் போட்டு இருந்தார்..
பொது ஜனம் 1 : IPL போட்டிகளை தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றி விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டதில் இருந்து இரண்டு நாளார் சரியான தூக்கம், சாப்பாடு கூட இல்ல

பொது ஜனம் 2: நாடாளுமன்ற தேர்தல் வருவதால் சரியா பாதுகாப்பு கொடுக்க முடியாது என்பதால் தான் மாத்தி இருக்காங்க

பொது ஜனம் 3 : தேர்தல்ன்னா அரசுக்கு செலவு. IPLன்னா வருமானம் தானே.பேசாம தேர்தலை தென் ஆப்பிரிக்காவுக்கு மாத்திட்டு IPL கிரிக்கெட்டை இந்தியாவில் நடத்தி இருக்கலாம்.

மூலம் : தினமணி

**************************************************************
சமீபத்தில் இங்கு தாயிஃப் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பில் தமிழ்,சிங்கள மக்களின் கலாச்சார ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்து, புத்த, கிறித்தவ, முஸ்லிம் தமிழ் மற்றும் சிங்களம் பேசக் கூடியவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். இஸ்லாம் குறித்த ஒரு அறிமுக உரைக்குப் பின் பலவிதமான போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசளிப்பும் நடைபெற்றது. முகமது லாபிர் உள்ளிட்ட இலங்கையின் தூதரக உயரதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கல்ந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

கயிறு இழுக்கும் போட்டி, உறி அடித்தல், வாலி பால், சாக்கு ஓட்டம், இப்படி பல போட்டிகள் நடந்தன.... திருமணமானவர்கள் Vs திருமணமாகதவர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் திருமணமானவர்களே வெற்றி பெற்றோம். வீடியோ இணைத்துள்ளேன். நான் எங்க இருக்கோம்ன்னு கண்டுபிடிங்க..



http://www.youtube.com/watch?v=4z5oj5B8aFk



**************************************************************
வீட்டில் சினிமா, பாடல்கள், சீரியல் இவைகளுக்கு அனுமதி இல்லை. பாடலைக் கேட்டு டான்ஸ் ஆடினால் மகனுக்கு அடி தான் விழும். அருகில் இருக்கும் அக்கா மகள்கள், எதிர், பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடுவான். மண்ணிலும் தண்ணீரிலும் விளையாடுவது பிடித்தமானது... சில நேரங்களில் ஒரு பாடலை முணுமுணுப்பான்..ரொம்ப நாளாய் புரியவில்லை.. அப்புறம் தான் விளங்கியது.

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ளே
தவளை ரெண்டும் பொந்துக்குள்ளே
ச்சூச்சூ மாரி ச்சூச்சூ மாரி
கொட்டிக் கிடக்குது ஜாங்கிரி
கொல்லைப் பக்கம் போகாதே
ச்சூச்சூ மாரி ச்சூச்சூ மாரி

மகன் பிற குழந்தைகளுடன் விளையாடும் ring a ring a roses.. வீடியோ
http://ibnujinnah.blogspot.com/2009/03/ring-ring-roses.html

Saturday, February 28, 2009

அஹம் பிரம்மாஸ்மி - ஆர்யா போல் தலைகீழ் பயிற்சி செய்வது எப்படி?


சமீபத்தில் வந்த படம் நான் கடவுள். பாலாவின் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கின்றார். இந்த படத்தில் பல காட்சிகளில் ஆர்யா ருத்ரனாக, அகோரியாக தலைகீழாக நிற்பார். இதன் மூலம் இதயத்தில் இருந்து இரத்தம் நேரடியாக மூளைக்கு பாயுமாம். சரி அதெல்லாம் இருக்கட்டும்... இதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது தான்... இந்த பதிவு. வாங்க மேற்கொண்டு பார்க்கலாம்.

இதுக்கு தேவையான முக்கிய பொருட்கள் ஒரு கேமரா மட்டுமே.... முதலில் எங்காவது அமர்ந்து கொண்டு சம்மணமிட்டு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் போட்டோ ஷாப்பில் வைத்து உங்கள் படத்தை மட்டும் தனியாக கட் செய்து வெளியே எடுத்துக் கொண்டு அதை ஏதாவது பாறை, புல் தரையுடன் தலைகீழாக இணைத்து விடுங்கள். இதற்குப் பெயர் தான் சிரசாசனம்.






போஸ் கொடுத்த அம்மணிக்கு நன்றிகள்.

டிஸ்கி 1 : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... மொக்கை போடுவது கூட நமக்கு ரொம்ப கஷ்டமா போச்சுங்க
டிஸ்கி 2: உண்மையில் யாருக்காவது சிரசாசனம் கத்துக்கனும்னா இங்க போய் பார்க்கலாம்.

Friday, November 21, 2008

ஒரு பனியனின் கதையும், இன்னொரு லவ் லெட்டரும்!

என் நண்பன் பரணியைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருக்கேன். அவனைப் பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கு... அவனோட வாழ்க்கையில் எத்தனை காதல்கள் வந்ததுன்னு அவனுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன்.. ஆனால் அவன் தான் காதலித்தானே தவிர, ‘அவள்’கள் காதலித்தார்களா?...... என்று தெரியவில்லை.

நாங்க அப்ப சென்னையின் புறநகரில் ஒரு இடத்தில் தங்கி படித்துக் கொண்டு இருந்தோம். ஒரு வீட்டின் மாடியில் தான் ஹாஸ்டல். கீழ் தளத்தில் வீட்டு உரிமையாளரும், முதல் தளத்திலும், மொட்டை மாடியிலும் நாங்கள் தங்கி இருப்போம்.

பரணியோட ஷெட்யூல் எப்பவுமே டைட்டா இருக்கும். நாங்கள் காலெஜிற்கு கிளம்புவதற்கு முன்பே கிளம்பி விடுவான். எங்களுக்கு கல்லூரி காலை 9:30 க்குத்தான். ஆனால் பரணி மட்டும் 8 மணிக்கே கிளம்பிப் போய் 8:00 To 8:30 மெட்ரிக்குலேசன் பள்ளிகள், 8:30 To 9:00 அரசுப் பள்ளிகள் என்று வழி அனுப்பு நிகழ்ச்சி நடத்தி விட்டு 9:00 To 9:30 எங்கள் கல்லூரி என்று ஷெட்யூல் வைத்திருப்பான். அதே போல் மாலையிலும் தனது ஷெட்யூலை டைட்டாக வைத்திருப்பான்.

பரணியோட எழுத்து அவனோட தலையெழுத்து மாதிரி இல்லாம, அழகாவே இருக்கும். கவிதையும் எழுதுவான். அடிக்கடி லவ் லெட்டகளை எழுதித் தள்ளுவான். ஒவ்வொரு தடவையும் பெறுநர் இடத்தில் ஒரு பெயர் இருக்கும்.

அப்ப மெட்ரிக்குலேசன் படிக்கும் ஒரு பொண்ணை மூன்று மாதமாக சுற்றிக் கொண்டு இருந்தான். அந்த பொண்ணு இவனைக் கண்டு கொள்வதே இல்லை. அந்த பெண்ணின் அப்பா அந்த பகுதியில் ஆளுங்கட்சி பிரமுகர். ஸ்டேசனரி கடை வைத்திருந்தார். வீடு மூன்று மாடி. எங்களது மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் அந்த பெண்ணின் வீடு தெரியும். இங்கிருந்து அந்த வீட்டையை பார்த்துக் கொண்டு இருப்பான். அவ்வப்போது இங்கிருந்தும் அங்கிருந்தும் சிக்னல்கள் பறக்கும்.

ரொம்ப கலக்கலாக ஒரு லவ் லெட்டரை எழுதி அந்த பெண்ணிடம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தான். ஆனா லெட்டரை கொடுக்கும் போது அந்த பொண்ணோட மாமா பையன் பார்த்து விட்டான்.

அப்புறம் என்ன ஒரே களபரம் தான்... நண்பர்கள் சிலர் பரணியை பாதுகாப்பாக ஹாஸ்டலில் ஒளித்து வைத்துக் கொண்டோம். அந்த பெண்ணின் மாமா மகன் சத்தம் போட்டு ஊரையே கூட்டி விட்டான். ஏற்கனவே எங்கள் மேல் காண்டாக இருந்த அந்த பகுதி மக்களும் பெரும் திரளாக ஹாஸ்டல் முன்னால் குவிந்து விட்டனர். அந்த பெண்ணின் அப்பாவும், இன்னும் சில கட்சிக்காரர்களும் ஆஜரானதால் மேட்டர் மேலும் சூடாகி விட்டது. ஹாஸ்டலின் நுழைவு வாயிலில் நாங்கள் நின்று கொண்டு யாரும் உள்ளே வராமல் பார்த்துக் கொண்டோம்.

சத்தம் அதிகமாகிக் கொண்டே போனது. எங்களது ஆதரவளித்த சிலரால் அந்த முழுக் கூட்டத்தையும் சமாளிக்க இயலவில்லை. மாடியில் இருந்த பரணி வேகமாக கீழே இறங்கி வந்தான். அவனைக் கண்டதும் சில இளவட்டங்கள் அடிக்க வர பாதுகாப்பு வளையம் அமைத்துக் கொண்டோம். அவன் அந்த பெண்ணின் அப்பாவிடம் சென்று “ சார், நீங்க இந்த பகுதியில் பெரிய மனிதர். உங்க மேல நாங்களெல்லாம் மதிப்பு வைத்திருக்கிறோம். இவன் வீணா என் மேல பழி போடுறான். இது உங்க மகளோட வாழ்க்கைப் பிரச்சினை. நான் உங்க பெண்ணுக்கு லவ் லெட்டர் ஏதாவது கொடுத்தேனா என்று அந்த பெண்ணிடமே கேட்டு விடலாம். அப்படி ஆமான்னு சொல்லிட்டா எந்த தண்டனையா இருந்தாலும் நான் ஏத்துக்கிறேன்” என்று தடாலடியாக சொல்லி விட்டான்.

எங்களுக்கு எல்லாம் விசுக்கென்று ஆகி விட்டது. சனியனை விலை கொடுத்து வாங்குறானே என்று...... கூட்டம் மொத்தமும் அவருடைய வீட்டிற்கு சென்றது. அந்த பெண் வெளியே வந்து “ இந்த அண்ணனை நான் பார்த்ததே இல்லை...இந்த அண்ணன் எனக்கு லெட்டரெல்லாம் கொடுக்கலை.” என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டது.

அப்புறம் என்ன, பிராது கொடுத்தவனையே கலாட்டா பண்ணி நோகடித்து, மண்டகப்படி நடத்தி விட்டோம். அப்புறம் பரணி அந்த பெண்ணை விட்டு விட்டு வேற ஒரு பெண் பின்னாடி சுற்ற ஆரம்பித்து விட்டான்.




அப்புறம் பனியனின் கதையையும் சொல்லி விடுகிறேன். எங்கள் கல்லூரிக்கு வார விடுமுறை வெள்ளிக் கிழமை தான். (வெள்ளியே தான்) வெள்ளி மதியம் மாணவர்கள் சென்னையில் உள்ள அவரவர் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு சென்று விடுவார்கள். நான், பரணி, மற்றும் சிலருக்கு சென்னையில் யாரும் இல்லை. எனவே ஹாஸ்டலிலேயே இருப்போம். (இரவு சாப்பாடு வெளியே)போரடித்தால் செல்லும் இடம் சென்னை மெரினா பீச்.

கண்ணகி சிலைக்கு அருகில் இருந்து கிளம்பி அண்ணா சமாதி வரை செல்வோம். அப்படியே கடலில் குளிப்போம். ஒருநாள் குளித்து விட்டு பஸ் ஏற அண்ணா சதுக்கம் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது, கடலில் குளித்ததால் ஈரமான பனியனை பரணியிடம் கொடுத்து காயப் போடச் சொன்னேன். பஸ்ஸில் ஏறி சீட் பிடிக்கும் வேலை என்னுது என டீலிங். படுபாவி சைட் அடிக்கும் மும்முரத்தில் பனியனை மறந்து விட்டான்.

அப்புறம் என்ன ஒருவாரத்துக்கு ஒரே அழுகாச்சி... “பனியனைக் காணலைன்னா ஆத்தா வையும்” என்று.... அதற்கு பின் பல வருடங்களாக எப்பப் பார்த்தாலும் பரணி என்னைக் கிண்டல் பண்ணிக் கொண்டே இருப்பான்... ”வாடா! போய் பனியனை அண்ணா சமாதியில் தேடலாம்” என்று... :))))


(எச்சரிக்கை : ஒரு மொக்கை போட்டால் அடுத்து சீரியஸான பதிவு வரும் என்று அர்த்தம் செய்துக்கனும்...)

Wednesday, November 5, 2008

பதிவர் ராப்(rapp) அவர்களுக்கு ஒரு மனந்திறந்த மடல்!

மதிப்பிற்குரிய பதிவர் ராப் அவர்களுக்கு,
அன்புடன் சகோதரன் தமிழ் பிரியன் எழுதிக் கொள்வது, நலம் நலமறிய ஆவல். என்னை உங்களுக்கு அடையாளம் தெரியாது என்றே நினைக்கின்றேன்.... இருந்தாலும் என்னை நானே அறிமுகம் செய்து கொள்கின்றேன். என் பெயர் தமிழ் பிரியன். தமிழில் பதிவுகள் எழுதி வருவதன் மூலம் இங்குள்ளவர்கள் என்னை அறிந்துள்ளனர்.. நிற்க..

நான் உங்களது பெயரை தமிழ் பதிவுகளின் பின்னூட்டப் பக்கங்களில் பாத்து அறிந்து கொண்டேன். அதில் இருந்து தங்களின் ரசிகனாக மாறி விட்டேன். ஆனாலும் என் மனதில் இருக்கும் சில விஷயங்களை சொல்லி விட ஆசைப்படுகின்றேன்.

உங்கள் மீது நான் கடும் வருத்தத்தில் இருக்கேன்.... இதை வருத்தம் என்று சொல்வதை விட ஒரு ஆதங்கம் என்று கூட சொல்லலாம். என்னடா இவனை யார் என்றே தெரியாதே இவன் நம் மீது ஏன் வருத்தப்பட வேண்டும் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.. அப்புறம் தமிழ் கூறும் மொக்கை பதிவுலகம் உங்களை மன்னிக்காது.

தாங்கள் அனைத்து மொக்கை + கும்மி பதிவுகளுக்கும் சென்று மீ த பர்ஸ்ட், மீ த் 25, மீ த 100 எல்லாம் போடுவதை அறிந்துள்ளேன். நான் ஒரு கும்மி மற்றும் மொக்கை பதிவுகள் போடும் பதிவர் என்ற முறையில் என் பதிவுகளுக்கும் வந்து மீ த 50, மீ த 100 போடுவீர்கள் என்று எப்போதும் இலவு காத்த கிளியாக காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் ஒரு மீ த 10 கூட இதுவரைப் போட வில்லை.



இதனால் நான் மிகவும் மன வருத்தத்தில் உள்ளேன். இனியாவது எனது பதிவுகளுக்கு வந்து மீ த டேஸ் டேஸ் போடுவீர்கள் என நம்புகின்றேன்... இப்போது உங்கள் மனதில் சில கேள்விகள் எழலாம்? இவனது பதிவுக்கு நம்மை பின்னூட்டம் போடச் சொல்றாரே நம் பதிவுக்கு எப்போது வந்து பின்னூட்டம் போட்டார் என்று எழலாம். நான் உங்கள் பதிவைத் தமிழ் மணத்தில் பார்த்து பதிவுக்குள் வருவதற்கும் குறைந்தது 40, 50 கமெண்ட் போட்டு விடுகின்றார்கள். அதற்கு பின் நான் பின்னூட்டம் போட்டால் அது கடலில் கரைத்த பெருங்காயமாகவே இருக்கும் என்பதால் இடுவதில்லை.

ஆனால் என் பதிவில் 25,30 கமெண்ட் தேத்துவதற்குள் தாவு தீர்ந்து விடுகின்றது. அதிலும் நிறைய பேருக்கு பதிவு லிங்க் கொடுத்து மிரட்டி உருட்டி (சிலரிடம் இன்னைக்கு கமெண்ட் போட்டா இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவு போட மாட்டேன் என்று ஏமாற்றியும்) கமெண்ட் வாங்க வேண்டி உள்ளது.

அடுத்து தமிழ் பிரியன் ஒரு கும்மி பதிவர் அல்ல... என்று நினைத்து விடாதீர்கள் நான் ஒரு கும்மி + மொக்கை பதிவர் என்பதை என் பதிவில் ஓரத்தில் இரத்தத்தில் ஓடும் வாசகங்களே சொல்லும்.

எனது கடினமான சூழல்களைக் கண்டு இனியாவது எனது பதிவுகளுக்கு வந்து மீ த ??? கமெண்ட்களாவது போடுவீர்கள் என்று நம்புகின்றேன்..

கடைசியாக இதையும் நினைவு படுத்த விரும்புகின்றேன்.... தமிழகத்தின் விடி வெள்ளி, தமிழ் திரையுலகம் கண்ட மகாநடிகர், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நட்சத்திரம், உலக சரித்திரம் கண்ட எட்டாவது வள்ளல், வருங்கால இந்திய பிரதமர், சினிமா உலகின் பிதாமகன், நடிப்புலக சக்க்ரவர்த்தி, அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் MBBS, MS, BE, BL, LLB, PHD, MPhil அவர்களின் பதிவுலக ரசிகர் மன்றத்திலும் ஒரு ஓரத்தில் குப்பை அள்ளும் போஸ்ட்டாவது தருவீர்கள் என்று நம்புகின்றேன். தலைவி என்ற முறையில் உங்களுக்கு இதை எனது வேண்டுகோளாக வைக்கின்றேன்.

இதற்க்காக அப்துல்லா, கார்க்கி, ச்சின்னப் பையன் உள்ளிட்ட சங்கத்துக்கு பொறுப்பாளர்களிடமும் அன்புடன் (கட்டிங் வாங்கிக் கொடுத்து) அப்ளை பண்ணியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்
தங்களது கமெண்ட்களுக்காக ஏங்கும்
அன்பு சகோதரன்
தமிழ் பிரியன்.

வச்சுடாங்கடா ஆப்பு....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நவம்பர் 4 அமெரிக்க அதிபருக்கு நடந்த தேர்தலின் வாக்குகள் என்னும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. ஒபாமா வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்கின்றார்.

கடைசி தகவல் படி ஒபாமா 333 இடங்களிலும் மெக்கெய்ன் 155 இடங்களிலும் நிச்சய வெற்றி பெறுகின்றனர். கலிபோர்னியா மாகாணத்தில் வெற்றி பெற்று 55 இடங்களை ஒபாமா கைப்பற்றியுள்ளார். மெக்கெய்ன் டெக்ஸாஸில் 34 இடங்களை வென்றுள்ளார்.

Ohio, New Mexico and Iowa போன்ற குடியரசு ஆதரவு இடங்களை ஜனநாயகக்கட்சி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒபாமா வென்றவை:
Vermont, New Hampshire, Pennsylvania, Illinois, Delaware, Massachusetts, District of Columbia, Maryland, Connecticut, Maine, New Jersey, Michigan, Minnesota, Wisconsin, New York, Rhode Island, Ohio, New Mexico and Iow.

மெக்கெய்ன் வென்றவை:
Kentucky, South Carolina, Oklahoma, Tennessee, Arkansas, Alabama, Kansas, North Dakota, Wyoming, Georgia, Louisiana, West Virginia, Texas, Mississippi, Utah.

பழைய அரசியல் தகிடுதத்தங்களால் காலத்தைக் கழித்த புஷ் வகையறாக்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்க மக்களுக்கு நன்றிகள்! வருங்காலங்களில் புதிய கொள்கைகளுக்கு ஒத்திசைவாக இருந்து செயல்படுவதன் மூலம் அமெரிக்காவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் அமைதியை எதிர் பார்க்கலாம்.

மெக்கெய்ன் வெற்றி பெற்று இருந்தால் பத்தோடு பதினொன்றாக தான் இருப்பார் என்று கவனிக்காமல் விட்டு விடலாம்.. ஆனால் ஒபாமா மாற்றங்களைக் கொண்டு வருவதாக வாக்களித்துள்ளார். இனி அவரால் உலக, அமெரிக்க அரசியல், பொருளாதாரங்களில் என்ன மாற்றங்களை கொண்டு வர முடியும் என பார்க்கலாம்... அனைத்திற்கும் காலமே பதில் சொல்லும்.