Thursday, April 24, 2008

சங்கம்னா இரண்டாமே.... இலக்கியத்தில் ‘இரண்டு'

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு 'இரண்டு” என்பதை மையமாகக் கொண்டு போட்டி நடக்குதாம். நமக்கும் இதில் கலந்து கொள்ள எழுந்த ஆசையில் தேறியது இது தான்....

தமிழ் இலக்கியங்களில் 'இரண்டு'

.... முதலில் திருக்குறள்

தானம் தவம்ரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின். 19

(19. இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்பு ஆகிய இரண்டுக்கும் தடங்கலாகும்(.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப வ்விரண் டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392

(392. எண், எழுத்து எனப்படும் இரண்டு அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர். 393

(393. கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவர்களுக்கு முகத்தில் இருக்கும் இரண்டு் கண்களும் புண் என்றே கருதப்படும்.)

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

ல்லாதாள் பெண்காமுற் றற்று. 402

(402. கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, இரண்டு மார்பகங்களுமே இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.)

மனந்துய்மை செய்வினை துய்மை ரண்டும்

னந்துய்மை துவா வரும். 455

(455. ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனம் செயல் ஆகிய இரண்டும் தூய்மையானவையாக இருக்கும்.)

ஒற்றும் உரைசான்ற நுலும் வையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண். 581

(581. நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றர், நீதியுரைக்கும் அறநூல் ஆகிய இரண்டும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.)

ஊறொரால் உற்றபின் ஒல்காமை வ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662

(662. இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.)

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும். 674

(674. எற்ற செயல், எதிர்கொண்ட பகை ஆகிய இரண்டையும் முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.)

ஒண்பொருள் காழ்ப்ப யற்றியார்க்கு எண்பொருள்

ஏனை ரண்டும் ஒருங்கு. 760

(760. அறம், பொருள், இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழிகளில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் எளிதில் வந்து சேரும்)

தன்துணை ன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்

ன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 875

(875. தனது பகைவர்கள் இரண்டு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்(.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு. 992

(992. அன்புடையவராக இருப்பது மற்றும் , உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பது முதலிய இரண்டும் தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.)

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனரண்டின்

நீள்வினையால் நீளும் குடி. 1022

(1022. ஆழ்ந்த அறிவு, விடாமுயற்சி ஆகிய இரண்டும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.)

காமம் விடுஒன்றோ நாண்வடு நன்னெஞ்சே

யானோ பொறேன்வ் விரண்டு. 1247

(1247. நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செயல்களையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது. )

தமிழ் இலக்கியம் என்று சொல்லி விட்டு புறநானூறை விட்டு விட்டால் எனக்கு மனது ஆறாது. எனவே....

................ புறநானூற்றில் இரண்டு

96. அவன் செல்லும் ஊர்!

பாடியவர்: ஔவையார்.

பாடப்பட்டோன்: அதியமான் மகன் பொகுட்டெழினி.

திணை : பாடாண். துறை: இயன் மொழி.

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்,

திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்கு

இரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே,

பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,

நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே,

விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது,

மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்

கைமான் கொள்ளு மோ? என

உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.

109. மூவேந்தர் முன் கபிலர்!

பாடியவர்: கபிலர்.

பாடப்பட்டோன்: வேள் பாரி.

திணை: நொச்சி. துறை: மகண் மறுத்தல்.

அளிதோ தானே, பாரியது பறம்பே!

நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;

இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே;

நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து,

திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.

வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து

மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,

மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,

புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,

தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;

யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே;

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,

விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர,

ஆடினிர் பாடினிர் செலினே,

நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.

156. இரண்டு நன்கு உடைத்தே!

பாடியவர் : மோசிகீரனார்.

பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.

திணை: பாடாண். துறை: இயன்மொழி.

ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும்

இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;

நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்

தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று

நிறையருந் தானை வேந்தரைத்

திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே.

166. யாமும் செல்வோம்!

பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.

பாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கெணியன் விண்ணந்தாயன்.

திணை: வாகை. துறை: பார்பபன வாகை.

நன் றாய்ந்த நீள் நிமிர்சடை

முது முதல்வன் வாய் போகாது,

ஒன்று புரிந்த ஈரி ரண்டின்,

ஆறுணர்ந்த ஒரு முதுநூல்

இகல் கண்டோர் மிகல் சாய்மார்,

மெய் அன்ன பொய் உணர்ந்து,

பொய் ஓராது மெய் கொளீஇ,

மூவேழ் துறைபும் முட்டின்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக!

வினைக்கு வேண்டி நீ பூண்ட

புலப் புல்வாய்க் கலைப் பச்சை

சுவல் பூண்ஞான் மிசைப் பொலிய;

மறம் கடிந்த அருங் கற்பின்,

அறம் புகழ்ந்த வலை சூடிச்,

சிறு நுதல், பேர் அகல் அல்குல்,

சில சொல்லின் பல கூந்தல், நின்

நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர்

தமக்கு அமைந்த தொழில் கேட்பக்;

காடு என்றா நாடுஎன்று ஆங்கு

ஈரேழின் இடம் முட்டாது,

நீர் நாண நெய் வழங்கியும்,

எண் நாணப் பல வேட்டும்,

மண் நாணப் புகழ் பரப்பியும்,

அருங் கடிப் பெருங் காலை,

விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை,

என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது

பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,

பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்

தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்,

உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்;

செல்வல் அத்தை யானே; செல்லாது,

மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்

கழைவளர் இமயம்போல,

நிலீஇயர் அத்தை, நீ நிலமிசை யானே?

189. உண்பதும் உடுப்பதும்!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

(செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.)

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;

பிறவும் எல்லாம் ஓரொக் குமே;

அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

196. குறுமகள் உள்ளிச் செல்வல்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.

பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.

திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை.

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்

ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,

ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;

ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது

இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;

இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்

புகழ்குறை படூஉம் வாயில் அத்தை

அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்

சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,

நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்,

வெயிலென முனியேன், பனியென மடியேன்,

கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,

நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்

மெல்லியல் குறுமகள் உள்ளிச்

செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே!

260. கேண்மதி பாண!

பாடியவர்: வடமோதங்கிழார்

திணை: கரந்தை (பாடாண் திணையுமாம்) துறை: கையறுநிலை செருவிடை வீழ்தல்;

கையறு நிலையுமாம்; பாண்பாட்டுமாம்; பாடாண் பாட்டுமாம்.

வளரத் தொடினும், வௌவுபு திரிந்து,

விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்

தளரும் நெஞ்சம் தலைஇ; மனையோள்

உளரும் கூந்தல் நோக்கி, களர

கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்

பசிபடு மருங்குலை, கசிபு, கைதொழாஅக்,

காணலென் கொல் ? என வினவினை வரூஉம்

பாண ! கேண்மதி, யாணரது நிலையே;

புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும், இரவுஎழுந்து,

எவ்வம் கொள்வை ஆயினும், இரண்டும்,

கையுள போலும் கடிதுஅண் மையவே;

முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்

நெடுநிரை தழீஇய மீளி யாளர்

விடுகணை நீத்தம் துடிபுணை யாக,

வென்றி தந்து, கொன்றுகோள் விடுத்து,

வையகம் புலம்ப வளைஇய பாம்பின்

வைஎயிற்று உய்ந்த மதியின், மறவர்

கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்

நிரையொடு வந்த உரைய னாகி,

உரிகளை அரவ மானத், தானே

அரிதுசெல் உலகில் சென்றனன் ; உடம்பே,

கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்,

கம்பமொடு துளங்கிய இலக்கம் போல,

அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே;

உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே,

மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி,

இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்,

படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே.

288. மொய்த்தன பருந்தே!

பாடியவர்: கழாத்தலையார்

திணை: தும்பை துறை: மூதின் முல்லை

மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்

அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,

வென்றதன் பச்சை சீவாது போர்த்த

திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க,

ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,

நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,

அருகுகை .. .. .. .. .. .. மன்ற

குருதியொடு துயல்வரும் மார்பின்

முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.

304. எம்முன் தப்பியோன்!

பாடியவர்: அரிசில்கிழார்

திணை: தும்பை துறை : குதிரை மறம்

கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி,

நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி,

வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி

பண்ணற்கு விரைதி, நீயே;நெருநை

எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஓராங்கு

நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்,

புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான்

கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,

வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்

இலங்கு இரும் பாசறை நடுங்கின்று;

இரண்டா காது அவன் கூறியது எனவே.

344. இரண்டினுள் ஒன்று!

பாடியவர்: அடைநெடுங் கல்வியார் பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது.

திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.)

செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை,

செறிவளை மகளிர், பறந்தெழுந்து,

துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு,

நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ;

புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து,

பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ;

இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே,

காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி. . .-

கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே.

புறநானூற்றைக் குறிப்பிட்டாலும் தொல்காப்பியத்தில் தான் எத்த்த்த்த்னை இரண்டு..........

............. தொல் காப்பியத்தில் 'இரண்டு'

ரண்டு றந்து சைக்கும் தொடர்மொழி உளப்பட

மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே. 12

பன்னீர் உயிரும் தம் நிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியின் சைக்கும். 2

அவற்றுள்,

அ ஆ ஆயிரண்டு அங்காந்து யலும். 3

அணரி நுனி நா அண்ணம் ஒற்ற

றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12

நுனி நா அணரி அண்ணம் வருட

ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13

ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்

லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14

மூன்று தலை ட்ட முப்பதிற்று எழுத்தின்

ரண்டு தலை ட்ட முதல் ஆகு ருபஃது

அறு நான்கு ஈறொடு நெறி நின்று யலும்

எல்லா மொழிக்கும் றுதியும் முதலும்

மெய்யே உயிர் என்று ஆயீர் யல. 1

உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயர் என்று

ஆயிரண்டு என்ப பெயர் நிலைச் சுட்டே. 15

புள்ளி றுதியும் உயிர் று கிளவியும்

வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான்

தம்மின் ஆகிய தொழிற்சொல் முன் வரின்

மெய்ம்மை ஆகலும் உறழத் தோன்றலும்

அம் முறை ரண்டும் உரியவை உளவே

வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். 14

பலர் அறி சொல் முன் யாவர் என்னும்

பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை

ஒன்று அறி சொல் முன் யாது என் வினா டை

ஒன்றிய வகரம் வருதலும் ரண்டும்

மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே. 30

தாம் நாம் என்னும் மகர றுதியும்

யாம் என் றுதியும் அதன் ஓரன்ன

ஆ எ ஆகும் யாம் என் றுதி

ஆவயின் யகர மெய் கெடுதல் வேண்டும்

ஏனை ரண்டும் நெடு முதல் குறுகும். 16

வேற்றுமை ஆயின் ஏனை ரண்டும்

தோற்றம் வேண்டும் அக்கு என் சாரியை- 34

தேன் என் கிளவி வல்லெழுத்து யையின்

மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்

ஆ முறை ரண்டும் உரிமையும் உடைத்தே

உண்டு என் கிளவி உண்மை செப்பின்

முந்தை றுதி மெய்யொடும் கெடுதலும்

மேல் நிலை ஒற்றே ளகாரம் ஆதலும்

ஆ முறை ரண்டும் உரிமையும் உடைத்தே

வல்லெழுத்து வரூஉம் காலையான. 25

ஒன்று முதல் ஆக எட்டன் றுதி

எல்லா எண்ணும் பத்தன் முன் வரின்

குற்றியலுகரம் மெய்யொடும் கெடுமே

முற்ற ன் வரூஉம் ரண்டு அலங்கடையே. 28

பத்தன் ஒற்றுக் கெட னகாரம் ரட்டல்

ஒத்தது என்ப ரண்டு வரு காலை. 29

டை நிலை ரகரம் ரண்டு என் எண்ணிற்கு

நடை மருங்கு ன்றே பொருள்வயினான. 34

ரண்டு முதல் ஒன்பான் றுதி முன்னர்

வழங்கு யல் மா என் கிளவி தோன்றின்

மகர அளவொடு நிகரலும் உரித்தே. 74

ஏனை ரண்டும் ஏனை டத்த. 30

ரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம் அவ்

ரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும். 10

தடுமாறு தொழிற்பெயர்க்கு ரண்டும் மூன்றும்

கடி நிலை லவே பொருள்வயினான. 12

அச்சக் கிளவிக்கு ஐந்தும் ரண்டும்

எச்சம் லவே பொருள்வயினான. 17

அன்ன மரபின் ரண்டொடும் தொகை

ஆயெட்டு என்ப தொழில் முதனிலையே. 29

எஞ்சிய ரண்டின் றுதிப் பெயரே

நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும். 27

சொல் எனப்படுப பெயரே வினை என்று

ஆயிரண்டு என்ப அறிந்திசினோரே. 4

நான்கே யற்பெயர் நான்கே சினைப்பெயர்

நான்கு என மொழிமனார் சினைமுதற்பெயரே

முறைப்பெயர்க் கிளவி ரண்டு ஆகும்மே

ஏனைப் பெயரே தம்தம் மரபின. 21

பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் என்று

ஆயிரண்டு என்ப முறைப்பெயர் நிலையே. 25

மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை

அப் பால் ரண்டு என மொழிமனார் புலவர். 14

அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று

ஆயிரண்டு ஆகும் யற்கைத்து என்ப. 19

அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி. 13

கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு. 21

லம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை. 62

அம் மூ டத்தான் வினையினும் குறிப்பினும்

மெய்ம்மையானும் வ் ரண்டு ஆகும்

முதல் எனப்படுவது நிலம் பொழுது ரண்டின்

யல்பு என மொழிப யல்பு உணர்ந்தோரே. 4

பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு

நிறை அருஞ் சிறப்பின் துறை ரண்டு உடைத்தே. 19

நாட்டம் ரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்

கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும். 5

பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப. 13

வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று

ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே. 50

தற் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல்

எத் திறத்தானும் கிழத்திக்கு ல்லை

முற்பட வகுத்த ரண்டு அலங்கடையே. 39

யலசை முதல் ரண்டு ஏனவை உரியசை. 5

மண்டிலம் குட்டம் என்று வை ரண்டும்

செந்தூக்கு யல என்மனார் புலவர். 113

செய்யுள்தாமே ரண்டு என மொழிப. 123

தரவேதானும் நால் அடி ழிபு ஆய்

ஆறு ரண்டு உயர்வும் பிறவும் பெறுமே. 129

குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை

கிழவ அல்ல மக்கட்கண்ணே. 23

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

ரண்டு அறிவதுவே அதனொடு நாவே

கோழி கூகை ஆயிரண்டு அல்லவை

சூழும் காலை அளகு எனல் அமையா. 56

நூல்களுக்கு நன்றி : தமிழ் டாட் நெட்

Friday, April 18, 2008

சுருட்டு சாமியாரும். பத்திரிக்கையும், சமூகமும்...

சமீபத்திய ஹிட் சாமியார்களில் முக்கியமானவர் சுருட்டு சாமியார். சென்னை மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியில் ஆசிரமம் வைத்திருந்தவர் பழனிச்சாமி. இவர் சுருட்டு பிடித்தும், மது அருந்தியும் குறி சொல்லியதால் சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்டார்.
ஏற்கனவே இரண்டு திருமணம் முடித்திருந்த இவர் தன்னிடம் சிஷ்யயையாக வந்த திவ்யா என்ற ஒரு ஹோமியோபதி மருத்துவரை மூன்றாவதாக திருமணம் முடித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமுற்ற திவ்யாவின் தந்தை முகப்பேர் காவல் நிலையத்தில் பழனிச்சாமி மீது புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் பழனிச்சாமியை திவ்யாவைக் கடத்திய, மற்றும் பெண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக போலிசார் கைது செய்தனர். திவ்யா சில ஆசிரமத்திலேயே தங்கி இருந்தார். இந்நிலையில் ஜாமினில் வெளிவந்த பழனிச்சாமி திவ்யாவுடன் சேர்ந்து நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த இருவரையும் தற்கொலைக்கு தள்ளிச் சென்றதில் பரபரப்புக்காக செய்திகளைத் திரித்து வெளியிடும் பத்திரிக்கைகள் முக்கிய பங்காற்றியுள்ளன. அவர்கள் இருவரும் மனம் ஒத்து திருமணம் செய்துள்ளனர். திவ்யாவைக் கடத்தியதாக பழனிச்சாமி கைது செய்யப்பட்ட உடன் திவ்யா தொலைகாட்சியில் அளித்த பேட்டியில் மிகத்தெளிவாக பேசினார். எனக்கு நான் படித்தவர்,இதில் முழு உடன்பாடு உள்ளது என்றும் கூறினார். ஆனாலும் அவர்களைப் பற்றிய பரபரப்பாக பத்திரிக்கைகள் எழுதி தள்ளி விட்டன. இதனால் சமூகத்தில் அவர்களுக்கு கெட்ட பெயரும், அவமானங்களுமே மிஞ்சின. இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். :(

எனக்கு ஏற்படும் சந்தேகங்கள்

1. முதல் மனைவி இருக்கும் போது, முதல் மனைவி பிடிக்காமல் போய் விடும் போது வேறு திருமணம் செய்வது தவறா? அப்படி முதல் மனைவியின் விருப்பத்தின் பேரில் தான் வேறு திருமணம் நடக்க வேண்டுமெனில் முதல் மனைவியின் சம்மதம் கிடைக்க வாய்ப்பில்லை. அப்படியானல் அதுக்கு தீர்வு வழக்கம் போல் ஸடவ் வெடிப்பு தானா?
2. இரண்டு பேர் மனம் ஒத்து திருமணம் செய்து கொள்ளும் போது சமூகம் ஏன் அதை ஒத்துக் கொள்வதில்லை.... இரண்டு. அதற்கு மேல் மனைவி உள்ளவர்களை கடவுள்களாக, தீர்க்கதரிசிகளாக ஏற்றுக் கொண்டுள்ளோர் உள்ள சமூகம் தானே இது...
3. மீடியாக்களுக்கு ஏனிந்த கொல வெறி... ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்விலும் தலையிட்டு அவர்களைத் தொந்தரவு செய்வது. டயானாவைக் கொன்றது இப்படிப்பட்ட அமெச்சுர் புகைப்படக்காரர்கள் தான். பிரேமானந்தா சாமியார் மீது வழக்குப் போட்டு இரட்டை ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டது. அதில் போலிசார் கண்டுபிடித்தை விட மீடியாக்கள் தான் அதிக செய்திகளைத் தந்தன். எந்த பெண்கள் அவருக்கு தண்டனை வாங்கித் தந்தார்களோ அதே பெண்கள் தான் இன்று அவரது ஆசிரமத்தை நடத்தி வருகின்றனர். போலிஸ் தங்களை மிரட்டி வாக்குமூலம் வாங்கியாதாக இன்று பேட்டி கொடுக்கின்றனர்.
4. உண்மையில் தினம் ஒரு பெண்ணுடன் சல்லாபிக்கும் பெரிய மனிதர்கள் தப்பி விடுகின்றனர். ஆனால் மனம் ஒத்து, திருமணம் செய்து வாழ நினைத்த இவர்கள் சாவடிக்கப்பட்டுள்ளனர்.
5. பத்திரிக்கைகளும், நிருபர்களும் பரபரப்புக்காக செய்திகளை அள்ளி விடுகின்றன. அதனால் ஏற்ப்படப் போகும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொண்டே.... நமது சக பதிவர் தமிழ்நதி கூட இதற்கு ஒரு உதாரணம். ஆ.வி. கூடவா என்ற கேள்வியுடன் நம்மை திகைக்க வைக்கிறது. அவரது வருத்ததைக் கூட வெறுமனே போட்டு விட்டு அமைதியாகி விட்டது, தனது வருத்தத்தைத் தெரிவிக்காமல்...
6. கடைசியாக மணிமேகலையின் (இரண்டாம் மனைவி)வீட்டில் பழனிச்சாமியும் திவ்யாவும் உல்லாசமாக இருந்ததை சிலர் வீடியோவில் படமாக்கி விட்டதாகவும், இதுகுறித்த தகவல் பழனிச்சாமிக்கு தெரியவந்ததால் அவர் பெரும் வேதனை அடைந்தார் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. வீடியோ எடுத்த அந்த கும்பல் பழனிச்சாமியிடம் அதைக் கூறி பணம் பறிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் அவரும், திவ்யாவும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வாழ்க ஜனநாயகம்... வளர்க பத்திரிக்கைகளின் சமூகநீதியும், உண்மையின் பிரதிபலிப்பும்.. :(

Friday, April 4, 2008

இசை இன்பம் - இசை ஆர்வலர்களுக்கு மட்டும்

ஏஷியாநெட் தொலைக்காட்சியில் ஐடியா ஸ்டார் சிங்கர் 2007 என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. பல விதமான வடிகட்டுதலுக்குப் பிறகு இப்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சென்ற ஏப்ரல் 1 ந்தேதி இறுதிப் போட்டியில் துஷார் என்ற பாடகர் தனது இறுதிச் சுற்றின் பாடல்களைப் பாடினார். மிக அற்புதமான குரல்வளத்துடன் அவர் பாடி முடித்த போது அங்கிருந்த அனைவரின் கண்ணிலும் கண்ணீர். சொல்ல முடியாத நெகிழ்ச்சியில் அனைவரும் உறைந்து விட்டனர்.
நண்பர் உமா கதிரின் வார்த்தையில் சொல்வதானால்
///ஏதோ ஒரு
ராகத்தில் பாட ஆரம்பித்தார். அரங்கமே அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தது
ராகம் தாளம் லயம் தெரியாத நானும் ரசித்துக்கொண்டிருந்தேன். பத்து நிமிடங்களுக்கு
மேலாக அதை பாடிக்கொண்டிருந்தார். உருகி உருகி பாடுவதென்பது அதுவாகத்தான்
இருக்கவேண்டும். அவர் பாடி முடிக்கும்போது உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டே
அழுது விட்டார். அவர் மட்டுமல்ல அங்கு அமர்ந்திருந்த மலையாளத்தின் புகழ்பெற்ற
பாடகர்கள் இரண்டு பேர் (M.G. Sreekumar தமிழில் ஒரே ஒரு பாடல் பாடியிருக்கிறார்
சின்ன சின்ன மழைத்துளிகள் - என் சுவாசக் காற்றே இன்னொருவர் சரத்), ஒரு இசையமைப்பாளர், மற்றும் உஷா உதூப் எனஅனைவர் கண்ணிலும் கண்ணீர்.

பாடினவர் இயல்பு நிலைக்கு திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன. அவர் பாடி
முடித்தவுடன் தான் அரங்கத்தில் உள்ளவர்கள் கூட இயல்பு நிலைக்கு திரும்பினர்.
நடுவர்கள் 96 மதிப்பெண்கள் வழங்கினர்.இதுவரை பெற்ற மதிப்பெண்களில்
அதிகபட்சம் இதுவே./////// பதிவு

தமிழில் வரும் குத்தாட்டங்களுக்கான நேரத்தில் மன மகிழ்வுடன் பார்க்கும் நிகழ்ச்சி........
பாடலை உணர்ச்சி பெருக்குடன் பாடிய போது
Part 1



Part 2


Part 3


கடைசியாக அதைப் பற்றிய விமர்சனமும் மதிப்பெண்களும்

'நச்' - கணிணியின் முன்னால் திருப்பங்களுடன் ஒரு சாட் கதை

கணிணி சம்பந்தமான கதைகள் இன்றைய இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கதை தான் இது. ஒரு இணைய தளத்திற்காக எழுதப்பட்ட கதை. இன்றைய இணையத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக பொய்யான பெயர்களுடன் பலர் உலாவி வருகின்றனர். இதைத் தவறாகக் கொள்ள முடியாது. இந்த கதையின் நாயகன் சாட்டில் சில நண்பர்களைச் சந்திக்கின்றான். அதற்குப் பிறகு சில ஆன்டி கிளைமாக்ஸ்கள் வருகின்ற கதை.....

கதையை பதிவிறக்கிப் படிக்க

அல்லது இங்கே

Wednesday, April 2, 2008

மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் - ஒரு முதல் பார்வை

இன்றைய உலகில் அடக்குமுறைகளும், மனித நேய மீறல்களும் சாதாரணமாகி விட்டன. மனதன் தனது சக மனிதனை விட எப்படியாவது பெரியவனாகி விட வேண்டுமென்ற உந்துதலில் தவறான வழிமுறைகளைக் கூடக் கையாளுகின்றான். இதனாலேயே இந்த சமூகம் பலவிதமான சோதனைகளைக் காண நேரிடுகின்றது. பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் கூட இதன் அடிப்படையில் இருப்பதைக் காண முடிகின்றது.

இதெற்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பவைகளில் மனிதர்களுக்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகள் தான். ஒரே தெருவில் அதிக பணம் படைத்தவனையும், பரம ஏழையையும் காண முடிகின்றது.இதை எந்தவிதமான தத்துவங்களும் நீக்க இயலவில்லை. அதுமத ரீதியான, அல்லது சமூக ரீதியான தத்துவங்களாக இருந்த போதிலும் சரியே!

இந்த விஷயத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கிப் பிரயாணிப்பதே சமூகத்தின் ஒற்றுமைக்கு வழி வகுக்கும். பணக்காரன் தனது திறமையினால் முன்னேறுகிறான், அதே சமயம் ஏழை திறமை இல்லாததால் தான் முன்னேறாமல் இருக்கிறான் என்று சொல்வது தான் பிரச்சினையின் ஆணி வேராக இருக்கிறது.
ஒரு வீட்டில் பெற்றோர்கல் இருவரும் ஆசிரியர்களாக இருக்கும் போது அந்த வீட்டின் குழந்தை நன்றாக படிப்பதைக் காண முடிகின்றது. அதே சமயம் விவசாய கூலி ஒருவரின் மகனால் இது முடிவதில்லை. எனவே விவசாயியின் மகன் விவசாயம் செய்து பிழைப்பது தான் சரி என்று கூறுவதுதான் அடக்குமுறையாக அமையும். அந்த அடக்குமுறை வெடித்துச் சிதறும் போது சமூகத்தில் பல வித்மான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இவைகளைத் தீர்க்க என்னதான் வழி? பணக்காரர்களிடம் உள்ள பணத்தைப் பிடுங்கி ஏழைகளைப் பணக்காரர்களாக்க முடியுமா? இப்படிப்பட்ட தத்துவங்களுடன் உதித்த சோவியத் இரஷ்யா சிதறியதைக் கண்டுவிட்டோம். வேறு என்ன தான் வழி?
மனிதர்களின் மனதில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் அரசுகளின் திடமான அணுகுமுறைகளே இதற்கு தீர்வாக அமைய முடியும். அந்தஸ்து படைத்தவன் தன்னைவிட எளியவனை அடக்குமுறை செய்யக் கூடாது. மனிதனின் மனத்தில் வஞ்சகம் ஒழிய வேண்டும்.
அரசுகள் ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியக் கூடாது. திறமைக்கு மட்டுமே மதிப்பு என்பது தற்போதைய சமூகத்திற்கு ஏற்புடையதல்ல. திறமையுள்ள சமூகம் முன்னேறிக் கொண்டே செல்லும். ஒடுக்கப்பட்ட சமூகம் ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.பல ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள் சில ஆண்டுகளில் மாற்றம் காண இயலாது. பொருளாதாரத்தை விட மனிதர்களின் மனங்களில் ஏற்படும் மாற்றமே பெரியது. கல்வியறிவு, வேலை வாய்ப்பு போன்றவற்றில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதில் முனைப்புடன் இருக்க வேண்டும். சமூகமும், அரசும் ஒத்துழைத்தால் மட்டுமே மனிதர்களிடேயே ஏற்றத் தாழ்வுகள் நீங்கும்.