ஏஷியாநெட் தொலைக்காட்சியில் ஐடியா ஸ்டார் சிங்கர் 2007 என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. பல விதமான வடிகட்டுதலுக்குப் பிறகு இப்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சென்ற ஏப்ரல் 1 ந்தேதி இறுதிப் போட்டியில் துஷார் என்ற பாடகர் தனது இறுதிச் சுற்றின் பாடல்களைப் பாடினார். மிக அற்புதமான குரல்வளத்துடன் அவர் பாடி முடித்த போது அங்கிருந்த அனைவரின் கண்ணிலும் கண்ணீர். சொல்ல முடியாத நெகிழ்ச்சியில் அனைவரும் உறைந்து விட்டனர்.
நண்பர் உமா கதிரின் வார்த்தையில் சொல்வதானால்
///ஏதோ ஒரு
ராகத்தில் பாட ஆரம்பித்தார். அரங்கமே அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தது
ராகம் தாளம் லயம் தெரியாத நானும் ரசித்துக்கொண்டிருந்தேன். பத்து நிமிடங்களுக்கு
மேலாக அதை பாடிக்கொண்டிருந்தார். உருகி உருகி பாடுவதென்பது அதுவாகத்தான்
இருக்கவேண்டும். அவர் பாடி முடிக்கும்போது உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டே
அழுது விட்டார். அவர் மட்டுமல்ல அங்கு அமர்ந்திருந்த மலையாளத்தின் புகழ்பெற்ற
பாடகர்கள் இரண்டு பேர் (M.G. Sreekumar தமிழில் ஒரே ஒரு பாடல் பாடியிருக்கிறார்
சின்ன சின்ன மழைத்துளிகள் - என் சுவாசக் காற்றே இன்னொருவர் சரத்), ஒரு இசையமைப்பாளர், மற்றும் உஷா உதூப் எனஅனைவர் கண்ணிலும் கண்ணீர்.
பாடினவர் இயல்பு நிலைக்கு திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன. அவர் பாடி
முடித்தவுடன் தான் அரங்கத்தில் உள்ளவர்கள் கூட இயல்பு நிலைக்கு திரும்பினர்.
நடுவர்கள் 96 மதிப்பெண்கள் வழங்கினர்.இதுவரை பெற்ற மதிப்பெண்களில்
அதிகபட்சம் இதுவே./////// பதிவு
தமிழில் வரும் குத்தாட்டங்களுக்கான நேரத்தில் மன மகிழ்வுடன் பார்க்கும் நிகழ்ச்சி........
பாடலை உணர்ச்சி பெருக்குடன் பாடிய போது
Part 1
Part 2
Part 3
கடைசியாக அதைப் பற்றிய விமர்சனமும் மதிப்பெண்களும்
15 comments:
thanks tamil
this midnight i melt with tushar's tremendous perfomance. tks to ur wonderful post and video clips
loving
poyyan
துஷார் மிக அருமையாக - நெடுநாள் பழக்கப்பட்ட கலைஞர் போலப் பாடினார் - பிரம்மிப்பாக இருந்தது.
கீழ் ஸ்தாயிக்கு இறங்கி மீண்டும் மேலே வரும் ஸ்வர சஞ்சாரங்களில் வெகு இலாகவாமாக கையாண்டிருக்கும் திறமை - அருமை. காந்தார சஞ்சாரங்கள் எப்போதும் இனிமை.
தருவித்து தமிழ் நெஞ்சங்களை இசை இன்பத்தினால் நிறைத்தமைக்கு நன்றிகள்.
அருமை அருமை !!.இதை தவிற என்ன சொல்வது என்று தெரியவில்லை......கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது.........நன்றி.:):)
நல்லா இருக்கு :))
:(:(:(:(:(:(
///பொய்யன் said...
thanks tamil
this midnight i melt with tushar's tremendous perfomance. tks to ur wonderful post and video clips
loving
poyyan///
வருகைக்கு நன்றி! பொய்யன்!
(பின்னூட்டம் உண்மைதானே..:))))
///ஜீவா (Jeeva Venkataraman) said...
துஷார் மிக அருமையாக - நெடுநாள் பழக்கப்பட்ட கலைஞர் போலப் பாடினார் - பிரம்மிப்பாக இருந்தது.
கீழ் ஸ்தாயிக்கு இறங்கி மீண்டும் மேலே வரும் ஸ்வர சஞ்சாரங்களில் வெகு இலாகவாமாக கையாண்டிருக்கும் திறமை - அருமை. காந்தார சஞ்சாரங்கள் எப்போதும் இனிமை.
தருவித்து தமிழ் நெஞ்சங்களை இசை இன்பத்தினால் நிறைத்தமைக்கு நன்றிகள்.///
நன்றி ஜீவா ஐயா! நன்றாக ஊன்றிக் கேட்டுள்ளீர்கள்.... :)
///Radha Sriram said...
அருமை அருமை !!.இதை தவிற என்ன சொல்வது என்று தெரியவில்லை......கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது.........நன்றி.:):)///
:)
//ஆயில்யன். said...
நல்லா இருக்கு :))///
நன்றி ஆயில்யன்... :)
///நிஜமா நல்லவன் said...
:(:(:(:(:(:( ///
:) :( :) :(
தாங்களும் துஷாரின் சங்கராபரணத்தைப் பற்றி பதிவு போட்டுள்ளீர்கள் என்பது ஜீவா சொன்ன பிறகுதான் தெரியும். அது தெரியாமல் நானும் பதிவு போட்டுவிட்டேன் மன்னிக்கவும். முடிந்தால் என்பதிவுக்கு வருகை புரியவும்.
தங்களது பதிவில் பார்வையாளர்களின் நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.
துஷாருக்கு 47500 ஸ் எம் ஸ் வந்ததாம் அதில் என்னுடையதும் ஒன்று. நன்றி
எனது பதிவுக்கு வருகைக்கு நன்றி ஐயா! இசையைப் பற்றி ஏதும் அறிவு இல்லாத போதும், சில இசைகளைக் கேட்கும் போது தானாகவே மனத்தை லேசாக்கி ஆக்கிரமித்து விடும். அப்படிப்பட்ட ஒரு இசையைக் கேட்ட போது அதை மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டுமென்ற ஆவலில் தான் அந்த பதிவு.....
பாடலைப் பற்றி நீங்கள் கூறியவை எனக்கு புரிய வாய்ப்பு இல்லையென்றாலும் ஒரு நல்ல பாடலைத் தான் தமிழ்மணத்தில் அறிமுகம் செய்துள்ளோம் என்பது மன நிறைவைத் தருகின்றது... :)
ஆன்மாவைத் தொட்ட பாடல், அருமையான இசை வெள்ளம், இனிமையான பகிர்தல் அனைத்துக்கும் நன்றி,
திரு திராச அவர்களின் பதிவில் இருந்து வந்தேன். மிக்கவும் நன்றி, தங்கள் ரசனைக்கும் வாழ்த்துகள்.
அருமையான பதிவு.துஷாருக்கும்,உங்களுக்கும் நன்றிகள்.
http://blogintamil.blogspot.com/2008/04/blog-post_26.html
Post a Comment