Friday, May 21, 2010

மாடு மேய்க்கக் கூட லாயக்கு இல்லியாம்..

மாடு மேய்க்கறதைப் பற்றிப் பார்க்குறதுக்கு முன்னாடி போன பதிவோட சேர்ந்த ஒரு விஷயம்.. இராவணன் படத்துல பாட்டில் கொஞ்சம் தமிழ் தூக்கலாவே அழகா இருக்கு...

உசிரே பாடல் கேட்கும் போது ஒரு குழப்பம்..

”இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல
ஒன்னு ரெண்டு தப்பிப் போகும் ஒழுக்கத்துல
விதி சொல்லி வழிப் போட்ட மனசு புள்ள
விதி விலக்கில்லா விதியுமில்ல..


மேற்க்கண்டதில் விதிவிலக்கில்லாத என்பதைக் கேட்கும் போது ஒரு குழப்பம். பாடுபவர் விதி என்பதை பாடி விட்டு இடைவெளி விட்டு விளக்கில்லாத என்பது போல் கேட்கும்... முதல் இரண்டு முறை புரியல... அப்புறம் தான் புரிஞ்சது.. பாடல் எழுதியவர், இசையமைப்பாளர் இதைக் கொஞ்சம் கவனமா பார்த்து இருக்கலாம்.

இரண்டாவதாக கள்வரே எனத் தொடங்கும் பாடல்.. நல்லா இருக்கும்..

வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே!
வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா! ’

ஆகா.. என்ன இனிமையான வரிகள்.. அதோடு கள்வரே கள்வரே! கள்வரே கள்வரே! என்பதில் மூன்றாவதாக வரும் வார்த்தையைக் கள்வெறிக் கள்வரே என்று மாற்றி இருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்ல..

கள்வரே கள்வரே
கள்வெறி கள்வரே
கண்புகும் கள்வரே

*********************************************************

அடுத்த மாடு மேய்க்கிற மேட்டரு..

என்னடா தலைப்பே இப்படி இருக்கேன்னு யோசிக்காதீங்க... நான் படிச்ச காலங்களில் எங்க வாத்தியார்களில் அதிகமானவர்கள் சொன்னதுக்கு எதிர்ப்பதமாத் தான் சொல்லி இருக்கேன்... எங்க குரூப்பையேப் பார்த்து எங்க வாத்தியார்கள் “நீங்களெல்லாம் மாடு மேய்க்கத் தான் லாயக்கு” என்று சொல்வது வழக்கமான ஒன்று தான்.. நாங்களும் அதை எல்லாம் எருமை மாட்டு மேல மழை பேய்ஞ்ச மாதிரி அசால்ட்டா கண்டுக்காம போய்டுவோம்...

ரொம்ப நாள் கழிச்சு இப்பத் தான் புத்திக்கு உறைக்க ஆரம்பிச்சு இருக்கு... இப்ப வெளிநாட்டில் இருக்கோம்.. ஊருக்கு போனால் என்னவெல்லாம் செய்யலாம்ன்னு ஐடியா போட்டுக்கிட்டு இருக்கோம்... ஏகப்பட்ட ஐடியாக்கள்.. வீடு எல்லாம் சொந்தமா கட்டியாச்சு... இப்போதைக்கு குடி போகலைன்னு வாடகைக்கு விட்டு வச்சு இருக்கு... ஆசை ஆசையாக கட்டின புது வீட்டில் யாரையோ வாடகைக்கு வைக்க கஷ்டமாத் தான் இருக்கு... சரி நாமளே இந்தியாவில் போய் வீட்டில் செட்டில் ஆகிடலாம்ன்னு யோசனை செய்தால் நம்ம நலம்விரும்பிகள் கேட்கும் முதல் கேள்வியே “ஊரில் போயி... ( ஒரு இழுவை வருது.. ;-)) ) என்ன செய்றதா உத்தேசம்? ”

உடனே யோசனை எல்லாம் பலமா வருது.. ஆமா.. ஊருக்கு போய் என்ன செய்ய? நாம இங்க செய்ற வேலைக்கு ஊரில் வேலை கிடையாது... (யாருய்யா அது.. கக்கூஸ் கழுவுற வேலை இங்கயும் இருக்கும்ன்னு சவுண்ட் விடுறது?) சரி வேற ஏதாவது தொழில் செய்யலாம்ன்னா ஒன்னும் தெரியாது.. இல்லைன்னா பட்ஜெட் எல்லாம் எகிறும்.. சரி என்ன தான் செய்யலாம்ன்னு யோசிச்சப்ப தான் எங்க வாத்தியாருக சொன்ன மாடு மேய்க்கத் தான் லாயக்கு வாசகம் நினைப்புக்கு வந்தது. இயற்கையோடு சேர்ந்த தொழில்.. ஏற்கனவே விவசாயம் என்ற பெயரில் 2 ஏக்கர் வாங்கி அவதிப்பட்ட அனுபவம் இருந்தாலும் மீண்டும் ஒரு முயற்சி செய்யலாம் என்று ஒரு நப்பாசை.

ஊரில் தண்ணீர் ஊற்றிய (1:1 அளவாம்.. என்ன கொடுமய்யா இது) பாலே 20 ரூபாயாம்.. பால் வியாபாரி எல்லாம் நல்லா சம்பாதிக்கிறார்களாம்.. வடிவேலு ஸ்டைலில் நாமலும் இதில் இறங்கிட்டா... வீடு கட்டினது போக பாதி இடம் வீட்டை ஒட்டிக் கிடக்கு... அதில் மாட்டுக் கொட்டகை கட்டி 4 பால் மாடு வாங்கிக் கட்டி விட்டா வாத்தியார்களோட ஆசையை தீர்த்த மாதிரியும் இருக்கும்.. வருமானமும் கிடைக்கும்ன்னு ரூம் மோட்டு வளையை பார்த்துக்கிட்டே சிந்தனை செய்தேன்.

சரி... எதுக்கும் வீட்டுக்காரம்மா கிட்ட ரோசனை கேட்கலாம்ன்னு போன் செஞ்சா , வழக்கம் போல் மண்டகப்படி நடக்காத குறை தான்... “மாடு வளர்க்குறதுன்னா லேசுப்பட்ட காரியமா? காலையில் பால் எடுக்கனும், பால் விக்கனும், சாணி அள்ளனும், தீனி போடனும், குளிப்பாட்டனும், மாட்டை மேய்ச்சலுக்கு விடனும், மீண்டும் மாலையில் முதலில் இருந்து ஆரம்பிக்கனும், இது தவிர மாட்டுக்கு நோய் ஏதாவது வந்தா கண்டுபிடிச்சு மருந்து தரனும்” லொட்டு லொசுக்குன்னு பெரிய லிஸ்ட்டே போட்டுட்டு “இதெல்லாம் உங்களுக்கு லாயக்கு இல்லை.... துன்ன தட்டையே நகர்த்தி வைக்கத் தெரியாது. இவரு மாடு வளர்க்கப் போறாராம்” என்று என்னோட திட்டத்தை ஆரம்பித்திலேயே நசுக்கி விட்டார்.

மீண்டும் அதே மோட்டு வளை.. அதே சிந்தனை.. எப்படி எங்க வாத்தியார் இப்படி சொல்லி இருப்பார்.. அப்ப தான் இந்த மறை பொருளின் அர்த்தம் புரிவது போல் இருந்தது... எங்க வாத்தியையும் அவரோடு வாத்தி இதே மாதிரி தான் திட்டி இருப்பார்ன்னு தோணுச்சு.. அதனால் தான் அவர் எங்களை எல்லாம் மேய்க்க வந்து இருந்திருக்காருன்னும் தோணுச்சு.. அப்ப இங்க கத்தாரில் நமக்கு கீழே வேலை செய்பவர்களை கட்டி மேய்ப்பதைத் தான் வாத்தியாரும் சிம்பாலிக்கா சொல்லி இருக்கார்ன்னு நினைச்சிக்கிட்டேன்.

41 comments:

நட்புடன் ஜமால் said...

இலக்கியவியாதி முத்தி போச்சு


-------------------

ஓஹ்! வாத்தியாருங்க அம்பூட்டு தெளிவா இருந்திருக்காங்களா :)

நிஜமா நல்லவன் said...

தல..கண்டதையும் போட்டு குழப்பிக்காம ஊரைப்பார்க்க வாய்யா....நானும் மாடு மேய்க்கலாம்னு இருக்கேன்....ஒரு கம்பெனி கிடைச்ச மாதிரி இருக்கும்:))

நிஜமா நல்லவன் said...

/
நட்புடன் ஜமால் said...

இலக்கியவியாதி முத்தி போச்சு /


உங்களுக்கு கூட பின்னூட்ட வியாதி முத்தி போச்சு....கொஞ்சம் கவனிங்க அண்ணே:)))

தமிழ் பிரியன் said...

@ ஜமால் அண்ணே! எல்லாமே தான் முத்திப் போய் கிடக்கு.. ஹிஹிஹி

நிஜமா நல்லவன் said...

ராட்டி கூட தட்ட தெரியும்......போதுமா?????நல்லா கேக்குறாய்ங்க கேள்வி G டாக்ல:)))

தமிழ் பிரியன் said...

\\\நிஜமா நல்லவன் said...

தல..கண்டதையும் போட்டு குழப்பிக்காம ஊரைப்பார்க்க வாய்யா....நானும் மாடு மேய்க்கலாம்னு இருக்கேன்....ஒரு கம்பெனி கிடைச்ச மாதிரி இருக்கும்:))\\\

யோவ்.. உனக்கு சாணி அள்ளத் தெரியுமா? கழனி கலக்கத் தெரியுமா? கோத்ரேஜ் (மாட்டுத் தீவனம்) அளவு தெரியுமா? பால் பீய்ச்சத் தெரியுமா?... இதெல்லாம் தெரியாம கம்பெனி கொடுக்கிறாராம்.. போய்யா போயி அந்த சைனீஸ் பொண்ணுக்கு நூடுல்ஸ் பண்ணக் கத்துக் கொடு.

தமிழ் பிரியன் said...

\\\நிஜமா நல்லவன் said...

ராட்டி கூட தட்ட தெரியும்......போதுமா?????நல்லா கேக்குறாய்ங்க கேள்வி G டாக்ல:)))\\\
சாணியே அள்ளத் தெரியாது.. வரட்டி தட்டுவாராம்ல... ;-)

நிஜமா நல்லவன் said...

/
தமிழ் பிரியன் said...

\\\நிஜமா நல்லவன் said...

தல..கண்டதையும் போட்டு குழப்பிக்காம ஊரைப்பார்க்க வாய்யா....நானும் மாடு மேய்க்கலாம்னு இருக்கேன்....ஒரு கம்பெனி கிடைச்ச மாதிரி இருக்கும்:))\\\

யோவ்.. உனக்கு சாணி அள்ளத் தெரியுமா? கழனி கலக்கத் தெரியுமா? கோத்ரேஜ் (மாட்டுத் தீவனம்) அளவு தெரியுமா? பால் பீய்ச்சத் தெரியுமா?... இதெல்லாம் தெரியாம கம்பெனி கொடுக்கிறாராம்.. போய்யா போயி அந்த சைனீஸ் பொண்ணுக்கு நூடுல்ஸ் பண்ணக் கத்துக் கொடு./

யோவ்...இதெல்லாம் ஏற்கனவே செஞ்சிட்டு தான் இப்போ நூடுல்ஸ் கத்து கொடுத்திட்டு இருக்கேன்...:))

நிஜமா நல்லவன் said...

சைனீஸ் பொண்ணுக்கு நூடுல்ஸ் கத்து கொடுக்கிறது மட்டும் இல்ல மலாய் பொண்ணுக்கு நாசி லெம்மா கூட கத்து கொடுப்போம்....இதை பற்றி எல்லாம் பேச உமக்கு என்ன தகுதி இருக்கு:))

தமிழ் பிரியன் said...

\\\நிஜமா நல்லவன் said...

சைனீஸ் பொண்ணுக்கு நூடுல்ஸ் கத்து கொடுக்கிறது மட்டும் இல்ல மலாய் பொண்ணுக்கு நாசி லெம்மா கூட கத்து கொடுப்போம்....இதை பற்றி எல்லாம் பேச உமக்கு என்ன தகுதி இருக்கு:))\\
நீ ஊருக்கு வாடி.. அண்ணிகிட்ட சொல்லி மண்டையில் பூசனி உடைக்கச் சொல்றேன்.

நிஜமா நல்லவன் said...

/
தமிழ் பிரியன் said...

\\\நிஜமா நல்லவன் said...

சைனீஸ் பொண்ணுக்கு நூடுல்ஸ் கத்து கொடுக்கிறது மட்டும் இல்ல மலாய் பொண்ணுக்கு நாசி லெம்மா கூட கத்து கொடுப்போம்....இதை பற்றி எல்லாம் பேச உமக்கு என்ன தகுதி இருக்கு:))\\
நீ ஊருக்கு வாடி.. அண்ணிகிட்ட சொல்லி மண்டையில் பூசனி உடைக்கச் சொல்றேன்./

மவனே...எனக்கு ஒரு பூசணின்னா உனக்கு ரெண்டு பூசணி ராசா...ஊருக்கு போறப்போ பார்த்துக்கலாம்:))

தமிழ் பிரியன் said...

யோவ்.. நீதான்ய்யா ஆதாரப் பூர்வமா மாட்டி இருக்க.. நாங்க இல்ல.. நாங்க தப்பு செஞ்சாலும் விட்னஸ் இல்லாம செய்யுற ஆளுங்க.. ;-))

நிஜமா நல்லவன் said...

/
தமிழ் பிரியன் said...

யோவ்.. நீதான்ய்யா ஆதாரப் பூர்வமா மாட்டி இருக்க.. நாங்க இல்ல.. நாங்க தப்பு செஞ்சாலும் விட்னஸ் இல்லாம செய்யுற ஆளுங்க.. ;-))

இது போதும்யா....இதுக்கு மேல என்ன வேணும்....:))

அப்புறம் நாங்க கண்ணு முன்னாடி செஞ்ச தப்பையே மறைக்கிற ஆளுங்க....இதெல்லாம்....ஹிஹிஹிஹி...

நிஜமா நல்லவன் said...

/
உசிரே பாடல் கேட்கும் போது ஒரு குழப்பம்../

முன்னாடி எல்லாம் மணிரத்னம் படமே குழப்பமா இருக்கும்...இப்போ பாட்டு மட்டும் தான் குழப்பமா:))))

நிஜமா நல்லவன் said...

/உசிரே பாடல் கேட்கும் போது ஒரு குழப்பம்../


அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் .... இப்போ தான் புரியுது...நீ மொழி பாஸ்கர் மாதிரியாய்யா....உசிரே படம் வந்து ரொம்ப வருஷம் ஆச்சே...:இப்போ தான் பாட்டு கேக்குறீரு...))))

தமிழ் பிரியன் said...

\\\நிஜமா நல்லவன் said...

/உசிரே பாடல் கேட்கும் போது ஒரு குழப்பம்../


அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் .... இப்போ தான் புரியுது...நீ மொழி பாஸ்கர் மாதிரியாய்யா....உசிரே படம் வந்து ரொம்ப வருஷம் ஆச்சே...:இப்போ தான் பாட்டு கேக்குறீரு...))))\\

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் [புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிஜமா நல்லவன் said...

/ஒன்னு ரெண்டு தப்பிப் போகும் ஒழுக்கத்துல/


ஹா...ஹா...ஹா...ஒன்னு ரெண்டு தப்பி பிழைக்கும் ஒழுக்கத்துலன்னு எழுதி இருக்கணும்:)))

நிஜமா நல்லவன் said...

/ஆகா.. என்ன இனிமையான வரிகள்.. அதோடு கள்வரே கள்வரே! கள்வரே கள்வரே! என்பதில் மூன்றாவதாக வரும் வார்த்தையைக் கள்வெறிக் கள்வரே என்று மாற்றி இருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்ல../

பாடல் வரியை விடுய்யா...கள்ளு குடிச்சப்புறம் ஒரு வெறி வரும்ல....அதை பற்றி சொன்னா குறைஞ்சா போவீரு...இல்ல உமக்கு தான் பழக்கம் இல்லாத ஒண்ணா????

தமிழ் பிரியன் said...

@ நிஜமா நல்லவன்... இதுக்குத் தான் என் இடுகைகளை ஒழுங்கா வழக்கமா படிக்கனும் என்பது.. ஏற்கனவே கள்வெறி பற்றி ஒரு இடுகை எழுதியாச்சு.. தேடிக் கண்டுபிடிய்யா.. ;-)

நிஜமா நல்லவன் said...

/
தமிழ் பிரியன் said...

@ நிஜமா நல்லவன்... இதுக்குத் தான் என் இடுகைகளை ஒழுங்கா வழக்கமா படிக்கனும் என்பது.. ஏற்கனவே கள்வெறி பற்றி ஒரு இடுகை எழுதியாச்சு.. தேடிக் கண்டுபிடிய்யா.. ;-)/

என்ன பெரிய கள்வெறி...உம்ம திரிகடுகம் கூட தெரியும்யா...ஒரு பேச்சுக்கு சொன்னா அப்படியே கிளம்பிட வேண்டியது:)))

மங்குனி அமைச்சர் said...

சார் மாடு வளர்ப்பு பெரிய பிசினஸ் , சாதாரணம் இல்லை

அன்புடன் அருணா said...

நல்லாவே குழம்பிருக்கீங்க!

மஸ்தூக்கா said...

அரபு நாட்டுல ஒட்டகம் மேய்த்த அனுபவம் இருந்தா நம்ம நாட்டுல மாடு மேய்க்கிறது ரொம்ப ஈஸி அங்கேயே கத்துகிட்டு வாங்கோ அப்பாடா நமக்கு துணைக்கு ஆள் கிடைச்சாச்சு எங்கே நாம மட்டும் தனியா மேய்க்கனுமேன்னு கவலைப்பட்டேன்

மஸ்தூக்கா said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

//கள்வரே கள்வரே
கள்வெறி கள்வரே
கண்புகும் கள்வரே//

நாம முணுமுணுத்துக்கலாம்:)

ஹலோ!ராமராஜன் இருக்காருங்களா?

நாஸியா said...

அதான! மாடு மேய்க்கிறது என்ன லேசுபட்ட காரியமா?

எம்.எம்.அப்துல்லா said...

தமிழண்ணே,

எங்க வாத்தியாரு யாரையெல்லாம் மாடுமேக்கத்தான் லாயக்குன்னு சொன்னாரோ அவங்கள்லாம் ரொம்பவே நல்லாருக்கோம்

:)))

ஹுஸைனம்மா said...

//நமக்கு கீழே வேலை செய்பவர்களை கட்டி மேய்ப்பதைத் தான் வாத்தியாரும் சிம்பாலிக்கா சொல்லி இருக்கார்//

உங்க டேமேஜரை, அவர் வாத்தியார் இதைவிட மோசமாத் திட்டிருப்பார்போல!!

SUFFIX said...

ஏன் அந்த இந்த ரோசனை, பேசாம பாட்டு எழுதுப் போனால் என்ன? பாட்டு பாடிக்கிட்டே மாடும் மேய்க்கலாமே?

liyakkath said...

தமிழ் பிரியன் ரொம்ப நல்ல எழுதுறிங்க. உங்களுடைய வலைப்பூவை
என்போழுதும் படிப்ப்பேன்.
வாழ்த்துக்கள்

லியாக்கத்

Rasu said...

அட நானும் 3-வருசமா கத்தாரில்தான் இருக்கிறேன்.

உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா?

அஹமது இர்ஷாத் said...

///அப்ப இங்க கத்தாரில் நமக்கு கீழே வேலை செய்பவர்களை கட்டி மேய்ப்பதைத் தான் வாத்தியாரும் சிம்பாலிக்கா சொல்லி இருக்கார்ன்னு நினைச்சிக்கிட்டேன்///

அது சரி...

கானா பிரபா said...

அடுத்த அடுத்த அடுத்த அடுத்த பதிவுகளிலும் இராவணா பதிப்பு இருக்குமா பாஸ்? (அட ராமா)

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

அஹமது இர்ஷாத் said...

உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..
http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

karthik said...

அது..................

சி. கருணாகரசு said...

என்னையும் எங்க வாத்தியாரு சொல்லியிருக்காரு.... இப்பதான் அதுக்கு அர்த்தம் புரியுதுங்க..... நான் இங்க (சிங்கபூருல) மாடுதான் மேய்க்கிறேன்.

குழப்பம் தீர்ந்து போச்சு.

சி. கருணாகரசு said...

நிஜமா நல்லவன் said...
தல..கண்டதையும் போட்டு குழப்பிக்காம ஊரைப்பார்க்க வாய்யா....நானும் மாடு மேய்க்கலாம்னு இருக்கேன்....ஒரு கம்பெனி கிடைச்ச மாதிரி இருக்கும்:))//

நானும்... சேத்துக்குவிங்களா...???

mangai said...

eenatha solla nalla thane poikittu irrukku

VJR said...

ஐயா தமிழ், தேனிக்கு வந்தா "வணங்காமுடி" பால் பண்ணையக்காட்றேன். ஒரு தெளிவு வரும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நீங்க அங்கிருந்து யோசிக்கிறீங்க.. நாங்க இங்க சென்னையில இருந்தாலும் அதே சிந்தனைதான். இப்ப்டி சிட்டியில குப்பை கொட்டுறதுக்கு (இவுனுங்கக் இட்ட மாரடிக்கிறதுக்கு) ஊருக்குப்போய் மாடே மேய்ச்சுடலாம்னு வரும் சிலநேரம். என்ன பண்றது அதுவும் கஷ்டமாம். எதுக்கும் ஊருக்கு வரும் போது சொல்லுங்க.. மாடோ, ஆடோ, பன்னிக்குட்டியோ ஏதோ ஒண்ணத்தை சேந்து வளப்போம்.!

LinkWithin

Related Posts with Thumbnails