Sunday, October 14, 2012

Hunt for hint... நன்றிகள்!

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது எப்போது எப்படி இருக்குன்னு சொல்ல முடியாது. இந்த நிமிடம் மகிழ்ச்சியா இருப்பவன் அடுத்த நிமிடம் துன்பப்படலாம்... vice-versa ..

ஆனால் வாழ்க்கையில் உட்சபட்ச மகிழ்ச்சி என்பது எப்போது வரும்ன்னு யாருக்கும் சொல்ல முடியாது.. அப்படியான ஒரு மகிழ்வான கணத்தை ஏற்படுத்திக் கொடுத்த டெரர்கும்மி குழுவினருக்கு என்னுடைய நன்றிகள் பல..

இந்தூர் ஐ.ஐ.எம் நடத்தும் Klueless போன்ற ஒரு முயற்சியை Hunt for Hint என்ற பெயரில் டெரர்கும்மி குழுவினர் முயற்சி செய்து அற்புதமாக வெற்றி அடைந்திருக்கிறார்கள். அதில் ஏனோ சுவாரஸ்யமின்றி தான் கலந்து கொண்டேன். செப்டம்பர் 12 ல் தொடங்கிய போட்டி.. அடுத்த நான்கு நாட்களும் பைத்தியம் பிடிக்காத குறை தான்.. கடைசியில் இரண்டாவதாக வெற்றி பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியை அளக்க கருவியே இல்லை.. :)

அதுவும் நான் இருந்த நிலையில்...
1. மொபைல் இண்டர்நெட் மூலம் மொபைலை மோடமாக பாவித்து இணையத்தில் தொடர்பு
2. எப்போதாவது இருக்கும் மின்சாரம்
3. எப்போது வேண்டுமானாலும் தொடர்பு அறுந்து விடும் இணைய இணைப்பு
 4. கூகுள் திறக்கக் கூட ஒரு நிமிட ஆகும் மொபைல் இணைப்பு
5. பிரவுசரில் ப்டங்கள் வருவதை டிஸேபிள் செய்து தான் பயன்படுத்த இயலும் 6. அடிக்கடி வந்து தொல்லை(?) தரும் கடை வாடிக்கையாளர்கள். (கடையில் தான் கணிணி.. வீட்டில் தடா)

இப்படியெல்லாம் இருக்கும் சூழலில் HFH 2 வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று செக்கை வாங்கி காசும் பார்த்தாகி விட்டது. அந்த அனுபவத்தை உணர அந்த வேளையில் அனுபவத்தால் தான் தெரியும்.


ImageShack.us

HFH 2 குழுவினருக்கு மிக்க நன்றிகள்!

டிஸ்கி : IIM இந்தூர் நடத்தும் Klueless போட்டி வரும் 19 ந்தேதி ஆரம்பமாகின்றதாம்.. அம்மாவினுடைய பொற்கால ஆட்சியில் மின்சாரம் தங்கத்தை விட உயர்வானது.. இதில் கலந்து கொள்வது எல்லாம் கனவில் தான் நடக்கும்.. :-(

Klueless 8 போட்டிக்கான இணைப்பு
IIM Indore முகநூல் பக்கம்


 

4 comments:

ஹுஸைனம்மா said...

//கடையில் தான் கணிணி.. வீட்டில் தடா//

நீங்க அம்புட்டு நல்ல புள்ளையா? இல்ல, வீட்டம்மா அம்புட்டு ஸ்ட்ரிக்டா? :-))))

அப்புறம்... ட்ரீட் எப்போ? :-))))

புதிர்களில் ஆர்வம் உண்டுபோல. அப்படின்னா இதையும் பாருங்க (உங்க ரேஞ்சுக்கு, கொஞ்சம் ஈஸீதான்) :-))

http://yosinga.blogspot.com/
http://muthuputhir.blogspot.com/

ஆயில்யன் said...

வாழ்த்துகள் பாஸ் :)

ஆயில்யன் said...

//பொற்கால ஆட்சியில்//

சோதனைகளை தாண்டினால்தான் சாதனைகளை சாதிக்கமுடியும் ம் எந்திரிங்க பாஸ் ஜெயிச்ச சந்தோஷத்துல இன்னும் என்ன ரெஸ்ட்டு வேண்டிக்கெடக்கு!

செவத்தப்பா said...

வாழ்த்துக்கள்...! மென்மேலும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்று சாதித்து, உச்சகட்ட சந்தோஷத்தை அனுபவியுங்கள்!