இன்றைய உலகில் அடக்குமுறைகளும், மனித நேய மீறல்களும் சாதாரணமாகி விட்டன. மனதன் தனது சக மனிதனை விட எப்படியாவது பெரியவனாகி விட வேண்டுமென்ற உந்துதலில் தவறான வழிமுறைகளைக் கூடக் கையாளுகின்றான். இதனாலேயே இந்த சமூகம் பலவிதமான சோதனைகளைக் காண நேரிடுகின்றது. பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் கூட இதன் அடிப்படையில் இருப்பதைக் காண முடிகின்றது.
இதெற்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பவைகளில் மனிதர்களுக்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகள் தான். ஒரே தெருவில் அதிக பணம் படைத்தவனையும், பரம ஏழையையும் காண முடிகின்றது.இதை எந்தவிதமான தத்துவங்களும் நீக்க இயலவில்லை. அதுமத ரீதியான, அல்லது சமூக ரீதியான தத்துவங்களாக இருந்த போதிலும் சரியே!
இந்த விஷயத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கிப் பிரயாணிப்பதே சமூகத்தின் ஒற்றுமைக்கு வழி வகுக்கும். பணக்காரன் தனது திறமையினால் முன்னேறுகிறான், அதே சமயம் ஏழை திறமை இல்லாததால் தான் முன்னேறாமல் இருக்கிறான் என்று சொல்வது தான் பிரச்சினையின் ஆணி வேராக இருக்கிறது.
ஒரு வீட்டில் பெற்றோர்கல் இருவரும் ஆசிரியர்களாக இருக்கும் போது அந்த வீட்டின் குழந்தை நன்றாக படிப்பதைக் காண முடிகின்றது. அதே சமயம் விவசாய கூலி ஒருவரின் மகனால் இது முடிவதில்லை. எனவே விவசாயியின் மகன் விவசாயம் செய்து பிழைப்பது தான் சரி என்று கூறுவதுதான் அடக்குமுறையாக அமையும். அந்த அடக்குமுறை வெடித்துச் சிதறும் போது சமூகத்தில் பல வித்மான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இவைகளைத் தீர்க்க என்னதான் வழி? பணக்காரர்களிடம் உள்ள பணத்தைப் பிடுங்கி ஏழைகளைப் பணக்காரர்களாக்க முடியுமா? இப்படிப்பட்ட தத்துவங்களுடன் உதித்த சோவியத் இரஷ்யா சிதறியதைக் கண்டுவிட்டோம். வேறு என்ன தான் வழி?
மனிதர்களின் மனதில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் அரசுகளின் திடமான அணுகுமுறைகளே இதற்கு தீர்வாக அமைய முடியும். அந்தஸ்து படைத்தவன் தன்னைவிட எளியவனை அடக்குமுறை செய்யக் கூடாது. மனிதனின் மனத்தில் வஞ்சகம் ஒழிய வேண்டும்.
அரசுகள் ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியக் கூடாது. திறமைக்கு மட்டுமே மதிப்பு என்பது தற்போதைய சமூகத்திற்கு ஏற்புடையதல்ல. திறமையுள்ள சமூகம் முன்னேறிக் கொண்டே செல்லும். ஒடுக்கப்பட்ட சமூகம் ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.பல ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள் சில ஆண்டுகளில் மாற்றம் காண இயலாது. பொருளாதாரத்தை விட மனிதர்களின் மனங்களில் ஏற்படும் மாற்றமே பெரியது. கல்வியறிவு, வேலை வாய்ப்பு போன்றவற்றில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதில் முனைப்புடன் இருக்க வேண்டும். சமூகமும், அரசும் ஒத்துழைத்தால் மட்டுமே மனிதர்களிடேயே ஏற்றத் தாழ்வுகள் நீங்கும்.
3 comments:
///சமூகமும், அரசும் ஒத்துழைத்தால் மட்டுமே மனிதர்களிடேயே ஏற்றத் தாழ்வுகள் நீங்கும்.//
நம் எதிர்கால வாழ்க்கையினை போன்றே இந்த விஷயமும் ஒரு அல்ல பல ????????
நம் எதிர்கால வாழ்க்கையினை போன்றே இந்த விஷயமும் ஒரு அல்ல பல ????????
Post a Comment