அதே நினைவில் கூகுளில் தேடிய போது வந்து விழுந்த ஒரு கவிதைக் கொத்து. மிகவும் பிடித்து இருந்தது.
இதில் நான் ரசித்த வரிகள்.
You feel the wind and it reminds you,
It happens every time,
You stop and close your eyes,
You can't deny what lives inside you,
Well I know it's hard to see,
What is meant to be,
When yesterday is so far behind you,
The memory will never die,
The love that you gave,
I'll never throw it away,
The memory will never die,
Deep inside your soul knows I'm always there....
It happens every time,
You stop and close your eyes,
You can't deny what lives inside you,
Well I know it's hard to see,
What is meant to be,
When yesterday is so far behind you,
The memory will never die,
The love that you gave,
I'll never throw it away,
The memory will never die,
Deep inside your soul knows I'm always there....
நான் முன்பு எழுதிய ஒரு கவிதையைப் (?) படித்து விட்டு, ஒரு பிரபல பதிவர் எழுதித் தந்த ஒரு அழகிய நினைவுக் கவிதையும் இங்கே.. அதற்குப் பிறகு கவிதை எழுதவே இல்லை.. எனது கவிதை தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.. ;-)))
மழை விட்டும் விடாத தூவானமாய்
இன்னும் உன் நினைவுகள்.
தனித்திருக்கும் பொழுதுகளில்
விழி வழியும் துளி நீரில்
பதிந்திருக்கும் உன் பிம்பம்.
நினைவை விட்டு அகல மறுக்கும்
பூங்காவும், ஆற்றங்கரையும், ஒற்றைக்குடையும்...
அருகருகே அமர்ந்திருந்தும்
பேசாமலேயே கழிந்த மணித்துளிகளும்,
கால் நனைத்து கரையேறியதும்,
கண்களாலே பேசிக் கொண்டதும்,
எதிர்பார்த்த மழையும் நான்
எதிர்பாராத உன் நெருக்கமும்.
பன்னிரண்டு ஆண்டுகள்
பார்க்காமலே ஓடிவிட்டாலும்
என்றேனும் ஒருநாள்
எங்கேனும் உனை சந்திப்பின்
ஒன்று மட்டும்
உறுதியாச் சொல்வேன்
என்னை நீ காதலித்தது போல்
உன்னை நானும் காதலித்தேனென்று.
இன்னும் உன் நினைவுகள்.
தனித்திருக்கும் பொழுதுகளில்
விழி வழியும் துளி நீரில்
பதிந்திருக்கும் உன் பிம்பம்.
நினைவை விட்டு அகல மறுக்கும்
பூங்காவும், ஆற்றங்கரையும், ஒற்றைக்குடையும்...
அருகருகே அமர்ந்திருந்தும்
பேசாமலேயே கழிந்த மணித்துளிகளும்,
கால் நனைத்து கரையேறியதும்,
கண்களாலே பேசிக் கொண்டதும்,
எதிர்பார்த்த மழையும் நான்
எதிர்பாராத உன் நெருக்கமும்.
பன்னிரண்டு ஆண்டுகள்
பார்க்காமலே ஓடிவிட்டாலும்
என்றேனும் ஒருநாள்
எங்கேனும் உனை சந்திப்பின்
ஒன்று மட்டும்
உறுதியாச் சொல்வேன்
என்னை நீ காதலித்தது போல்
உன்னை நானும் காதலித்தேனென்று.
27 comments:
///பன்னிரண்டு ஆண்டுகள்
பார்க்காமலே ஓடிவிட்டாலும்///
இது சென்ற ஆண்டு எழுதியது..இப்போது அதிகப்படியாக ஆண்டு ஒன்று கடந்து விட்டது. எனவே பதின்மூன்று என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள்.
\\மழை விட்டும் விடாத தூவானமாய்\\
அழகான வார்த்தை பிரயோகம்
\\Deep inside your soul knows I'm
always there....\\
really deep words ...
//பதின்மூன்று என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள்.//
பனிரெண்டு முடிந்து எழுதியதையும் படித்து விட்டு வருவதற்குள் வழக்கம் போல் முந்திக் கொண்டார் ஜமால்:)!
கவிதை நன்று.
தொடருங்கள் கவிஞரே.
\\ஒன்று மட்டும்
உறுதியாச் சொல்வேன்
என்னை நீ காதலித்தது போல்
உன்னை நானும் காதலித்தேனென்று.\\
காதலான வரிகள்
தன்னுடைய காதலின் ஆழம் வைத்து அவரும் நம்மை காதலித்திருப்பார் என காதலாக சொல்கிறது ...
இங்கிலீசுல இருந்தது படிக்க கொஞ்சம் கஸடமா இருக்கு தம்பி!
ஆனா
//என்றேனும் ஒருநாள்
எங்கேனும் உனை சந்திப்பின்
ஒன்று மட்டும்
உறுதியாச் சொல்வேன்
என்னை நீ காதலித்தது போல்
உன்னை நானும் காதலித்தேனென்று//
இது என்னமோ டக்குன்னு மனசை டச் பண்ணிடுச்சு !
நிறைய கவிதை - காதல் - எழுதுங்க வாழ்த்துக்கள்
இருஜோடி கால்கள் போட்டோவும் ஜூப்பரா இருக்கு!
//மனிதனுக்கு துன்பங்களின் நேரத்தில் பழைய நினைவுகளே ஆறுதலாக இருக்கும்///
என்ன தம்பி துன்பம் பழைய நினைவுகளுன்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுதீக :(
\\பனிரெண்டு முடிந்து எழுதியதையும் படித்து விட்டு வருவதற்குள் வழக்கம் போல் முந்திக் கொண்டார் ஜமால்:)!\\
நிஜமா படிச்சிட்டு தாங்க வந்தேன்.
//நேற்று வேலை முடித்து விட்டு, வேலை இல்லாமல் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்த போது //
இதுலதான் நீங்க அண்ணனோட மெத்தட் பாலோ பண்ணனும் முடிக்காத மாதிரியே வேலை பாக்கணும்!
வருடங்களின் தொலைவு என்ன செய்யும்
நினைவுகள் நெருக்கத்துல இருக்கயில்..
அதற்கெதுக்கு 12 13 ன்னு கணக்கு பண்ணிட்டு.. உங்களை யாரு எழுதாம இருக்க சொன்னா நல்லா எழுதுங்க..
தூவானம் விடாத கதையையே கவிதையா மாத்தி இருக்கீங்களே அருமை..
//எனது கையெழுத்துக்காக என் நோட்டுப் புத்தகத்தின்
பக்கங்களை கிழித்தது தெரிந்ததும் வெட்கி நின்றாயே?
என் பிறந்த நாளை நான் கொண்டாடாத போதும்
நீ கொண்டாட வேண்டித் தவித்தாயே?//
காதலின் தவிப்பும் வெட்கமும் கவிதையில் அருமை...
//பார்த்தே ஆண்டுகள் பல ஓடிவிட்டாலும்
கண்டிப்பாக சொல்வேன்
நீ என்னைக் காதலித்தது போல்
உன்னை நான் காதலித்தேன் என்று//
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க தமிழ்பிரியன்...இப்போதும் நீங்கள் கவிதை எழுதலாமே...
anna super.. :)))
//அருகருகே அமர்ந்திருந்தும்
பேசாமலேயே கழிந்த மணித்துளிகளும்,
கால் நனைத்து கரையேறியதும்,
கண்களாலே பேசிக் கொண்டதும்,//
மனசு என்னமோ பண்ணுதுங்க...இந்த வரிகள்.
பிரிவு கவிதைகளிலே ஒன் ஆஃப் தி பெஸ்ட்.
ஆயுள் நொடிகளாய் கடக்கும் காதல் நினைவுகளில் ஆண்டுகள் கணக்கில் ஏன்....அள்ளி தெளித்த காதல் வார்த்தகள் அத்தனையும் மொட்டிலேயே வாசம் வீசும் மல்லிகையாய்.......
ஆயுள் நொடிகளாய் கடக்கும் காதல் நினைவுகளில் ஆண்டுகள் கணக்கில் ஏன்....அள்ளி தெளித்த காதல் வார்த்தைகள் அத்தனையும் மொட்டிலேயே வாசம் வீசும் மல்லிகையாய்.......
நீர் ஒரு பிறவிக் கவிஞன் ஐயா...:)
Classic Touch.
தமிழ்பிரியன் இப்பிடில்லாம் எழுதுவாரா????
நல்லாருக்கு...
அன்புடன் அருணா
அந்த போட்டோ சூப்பரப்பு
//நிஜமா நல்லவன் on April 13, 2009 2:38 PM said...
நீர் ஒரு பிறவிக் கவிஞன் ஐயா...:)
//
ரிப்பீட்டு!
என்ன தல நானொரு இங்கிலீஷ் பாட்டு போடலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்க போட்டுட்டிங்க...
:)
அந்தக்கவிதை படிச்சதுதான் ஆனா அதுதான் தல மனசுல நிக்குது
ஆயில்யன் பாபா சொன்னா மாதிரி...
படமும் பாட்டும் நல்லாகீது தல...!
செம்ம ஃபீலிங்ஸ்..
photo, கவிதை ரெண்டுமே சூப்பர்.
Post a Comment