.
சமீபத்தில் வலைச்சரம் எழுதிய போது பல மூத்த பதிவர்களின் பதிவுகளுக்கு அறிமுகம் செய்ய இயலாமல் போனது வருத்தம் அளித்தது. அதை ஈடுகட்டும் விதத்தில் இன்று இரு மூத்த பதிவர்களின் சிறப்பு பேட்டி இங்கு வெளியிடப்படுகின்றன. இனி ஓவர் டூ பேட்டி வித் ஆதாம், ஏவாள்...
நாம் : முதலில் இந்த சிறப்பு பேட்டிக்கு ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. முதலில் நீங்கள் இருவரும் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
ஆதாம் : என் பெயர் ஆதாம். இவள்....
ஏவாள் : இருங்க.. உங்களுக்கு சொல்லத் தெரியாது. இவர் பெயர் ஆதாம். என் பெயர் ஏவாள். நாங்க கடந்த 47000 ஆண்டுகளுக்கு முன்னாடியே பதிவு எழுதத் தொடங்கி விட்டோம். உலகிலேயே நான் முதல் முதல் பதிவர் என்பதில் எங்களுக்கு மிக்க பெருமை.... (ஆதாமைப் பார்த்து) அப்படித்தானேங்க...
ஆதாம் : ஆமா! ஆமா!
நாம் : முதலில் நீங்க இரண்டு பேர் தான இருந்திருப்பீர்கள்! உங்க பதிவை யார் வந்து படிப்பாங்க? யார் பின்னூட்டம் போடுவாங்க?
ஆதாம் : அதாவது..
ஏவாள் : இருங்க! நானே சொல்கிறேன். அவருக்கு பதிவும் எழுதத் தெரியாது. ஒரு மண்ணும் தெரியாது. ஒரு விட்ஜெட் போடக் கூடத் தெரியாதுன்னா பாத்துக்கங்க... நான் தான் எல்லாம் சொல்லித் தந்தேன். ஆனாலும் அவர் பதிவை நானும், என் பதிவை அவரும் படித்து பின்னூட்டம் போட்டுக் கொள்வேம். அப்புறம் எனக்கு குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் ஆனதும் எல்லாரும் மாத்தி மாத்தி பின்னூட்டம் போட்டுக்குவோம். அப்படித்தானே?
ஆதாம் : No Mam.. Yes Mam... Sorry Mam
நாம் : உங்க குடும்பத்துக்குள்ளேயே பின்னூட்டம் போடுவதால் அப்ப மட்டுறுத்தலெல்லாம் தேவைப்பட்டிருக்காதே?
ஆதாம் : என் பதிவுக்கு முதலில் மட்டுறுத்தல் செய்யவில்லை? ஆனால்.....
ஏவாள் : கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? நான் சொல்லிக்கிறேன். இவருக்கு ஒரு மொக்கை பதிவோ, இல்லை கும்மி பதிவோ கூடப் போடத் தெரியாது. அதனால் மட்டுறுத்தல் தேவைப்படலை. எனது பதிவுக்கும் முதலில் மட்டுறுத்தல் தேவைப்படவில்லை. ஆனால் ஒருநாள் எனது பதிவுக்கு மொத்தமாக ஒரே நேரத்தில் 100 அசிங்கமா கமெண்ட் இவர் பெயரில் போட்டுட்டாங்க. நானும் இவர் தான் நம்ம மேல உள்ள கோபத்தில் பின்னூட்டம் போட்டு விட்டாரோ என்று கோபத்தில் அடித்து கூட விட்டேன். மண்டையில் தழும்பு கூட இருக்கு... (ஆதாமைப் பார்த்து) காட்டுங்கங்க...
(ஆதாம் பலி ஆடு போல் குனிந்து தலையில் இருக்கும் இரண்டு அங்குல தழும்பைக் காட்டுகிறார்)
ஏவாள் : அப்புறம் எலி குட்டி சோத்னை செய்ததில் அது போலியின் வேலை என்று தெரிந்தது?
நாம் : (அதிர்ச்சியுடன்) என்னது போலியா?
ஆதாம் : ஆமாங்க! அது ஒரு பெரிய கதை..
ஏவாள் : உங்களால வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்க முடியாதா? . (ஆதாம் துண்டை எடுத்து வாய்க்கு முன் வைத்து மூடிக் கொள்கிறார்) அப்புறம் பார்த்தால் அது சாத்தானோட வேலை. இவரோட பேரோடு ஒரு a அதிகமா சேர்த்து பதிவைத் தொடங்கி இருந்திருக்கிறான். அப்புறம் தான் மட்டுறுத்தல் செய்தோம்.
நாம் : சரி! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. வருகிறோம்.
(நாம் தெருமுனையை அடைவதற்கு முன் ஆதாம் ஓடோடி நம்மிடம் வந்தார்.
நாம்: ஏன் என்ன ஆச்சு? ஏன் இப்படி மூச்சு இறைக்க ஓடி வருகிறார்.
ஆதாம் : எங்களை இறைவன் படைத்த நாள் முதலே இவள் தான் பேசிக்கிட்டே இருக்கிறாள். நான் கேட்டுக் கிட்டே இருக்கிறேன். சொர்க்கத்தில் இருக்கும் போது கூட அதே கதை தான். சொர்க்கத்துக் கனியை சாப்பிடாதே என்று சொல்லக் கூட என்னை விடலை. இவளால் தான் நாங்க பூமிக்கே வர வேண்டி வந்தது
நாம் : உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சொர்க்கத்தில் என்ன கனியைச் சாப்பிட்டீர்கள்? ஆப்பிள் என்று எல்லாரும் சொல்கிறார்களே? (அதற்குள் தெருவில் ஏவாள் வருவதைப் பார்த்ததும் ஆதாம் தலை தெறிக்க ஓடுகிறார்)
நாமும் வீட்டில் துவைக்க ஊற வைத்த மனைவியின் ஆடைகளும், துவைக்காவிட்டால் கிடைக்கப் போகும் தண்டனையையும் நினைத்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தோம்.
டிஸ்கி : இந்த பேட்டிக்கு ஏற்பாடு செய்த ஆப்ரகாம், நோவா, மோசே ஆக்யோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புது டிஸ்கி : ஒன்லி மீள் பதிவு
34 comments:
:) வகையில் புனைவு சேர்க்கலப்பா ஹப்பாடா...
நல்லா இருக்குங்க... அப்படியே உங்க குடும்ப விசயத்தையும் சொல்லிபுட்டிங்களே....
/
நாமும் வீட்டில் துவைக்க ஊற வைத்த மனைவியின் ஆடைகளும், துவைக்காவிட்டால் கிடைக்கப் போகும் தண்டனையையும் நினைத்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தோம்.
/
இந்த வாஜிங் மிஜின் எல்லாம் கிடையாதா? நீங்க கைல தான் தொவைக்கிறீங்களா தமிழ்பிரியன்!?!?
சங்கடம்தான்
:)))))))
மொக்கையே போடத்தெரியாதுனு சொல்லீட்டு சூப்பர் மொக்கை போட்டுடீங்களே தமிழ்பிரியன்?
நானும் அந்த ஆதாமையும் ஏவாளையும்
பாக்கணும் அவாள் எங்கேயிருக்காங்கானு சொல்றீங்களா?
//(ஆதாம் துண்டை எடுத்து வாய்க்கு முன் வைத்து மூடிக் கொள்கிறார்) //
ஹா...ஹா..ஹா...
அப்ப யாரும் ஆப்பிள் சாப்பிடக்கூடாதா?????? :)))
நல்லா சிரிச்சேன் :)
//நானானி said...
மொக்கையே போடத்தெரியாதுனு சொல்லீட்டு சூப்பர் மொக்கை போட்டுடீங்களே தமிழ்பிரியன்?
நானும் அந்த ஆதாமையும் ஏவாளையும்
பாக்கணும் அவாள் எங்கேயிருக்காங்கானு சொல்றீங்களா?
/
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))
வலைசரத்தில் விடுபட்ட மூத்த்த்த்த்த்த பதிவர்களின் பேட்டி நன்றாகவே இருந்தது. வாழ்க ! வளர்க ! தொடர்க இம்மாதிரிப் பதிவுகளை !!
aakaa - அடுத்த பதிவு - நானானியும் ஏ(அ)வாளும் - கலக்குங்க -
நீங்க எழுதுறீங்களா - இல்ல - நான் எழுதட்டா ?
எல்லாருமே இப்படி மொக்கையா போட்டா, தமிழ்மணத்த யாருதான் காப்பாத்தறது?
ஐயகோ! என்னே கொடுமை இது!
வை ப்ளட், சேம் ப்ளட் ;) அப்படின்னு ஆதாம் கிட்ட கேக்கனும் மாதிரி இருக்கு.. ;)
//நானானி said...
மொக்கையே போடத்தெரியாதுனு சொல்லீட்டு சூப்பர் மொக்கை போட்டுடீங்களே தமிழ்பிரியன்?
நானும் அந்த ஆதாமையும் ஏவாளையும்
பாக்கணும் அவாள் எங்கேயிருக்காங்கானு சொல்றீங்களா?
/
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))
:-))))))
:))))))
///முத்துலெட்சுமி-கயல்விழி said...
:) வகையில் புனைவு சேர்க்கலப்பா ஹப்பாடா...///
அக்கா! நீங்களுமா..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/// VIKNESHWARAN said...
நல்லா இருக்குங்க... அப்படியே உங்க குடும்ப விசயத்தையும் சொல்லிபுட்டிங்களே..///
என்ன கொல வெறிப்பா உங்களுக்கெல்லாம்... மாட்டி விட்ருவீங்க போல இருக்கே... அவ்வ்வ்
///மங்களூர் சிவா said...
/
நாமும் வீட்டில் துவைக்க ஊற வைத்த மனைவியின் ஆடைகளும், துவைக்காவிட்டால் கிடைக்கப் போகும் தண்டனையையும் நினைத்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தோம்.
/
இந்த வாஜிங் மிஜின் எல்லாம் கிடையாதா? நீங்க கைல தான் தொவைக்கிறீங்களா தமிழ்பிரியன்!?!?
சங்கடம்தான்
:)))))))/////
ஆமாண்ணே! அந்த துண்டைக் கொடுங்க... நானும் கண்ணைத் தொடச்சிக்கிறேன்... :)
///நானானி said...
மொக்கையே போடத்தெரியாதுனு சொல்லீட்டு சூப்பர் மொக்கை போட்டுடீங்களே தமிழ்பிரியன்?
நானும் அந்த ஆதாமையும் ஏவாளையும்
பாக்கணும் அவாள் எங்கேயிருக்காங்கானு சொல்றீங்களா?///
அவாளையெல்லாம் பார்க்க யேலாதும்மா.... வேண்டுமானால் என் அவளை வேண்டுமானால் பார்க்கலாம்...உங்க மாவட்டம் தான்... அட்ரஸ் தர்ரேன் குறிச்சுக்குங்க... :))
/// NewBee said...
//(ஆதாம் துண்டை எடுத்து வாய்க்கு முன் வைத்து மூடிக் கொள்கிறார்) //
ஹா...ஹா..ஹா...
அப்ப யாரும் ஆப்பிள் சாப்பிடக்கூடாதா?????? :)))
நல்லா சிரிச்சேன் :)///
நன்றி அக்கா!
///ஆயில்யன் said...
//நானானி said...
மொக்கையே போடத்தெரியாதுனு சொல்லீட்டு சூப்பர் மொக்கை போட்டுடீங்களே தமிழ்பிரியன்?
நானும் அந்த ஆதாமையும் ஏவாளையும்
பாக்கணும் அவாள் எங்கேயிருக்காங்கானு சொல்றீங்களா?
/
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))///
போதும்ப்பா போதும்... முடியலை... அழுதுடுவேன்...
///cheena (சீனா) said...
வலைசரத்தில் விடுபட்ட மூத்த்த்த்த்த்த பதிவர்களின் பேட்டி நன்றாகவே இருந்தது. வாழ்க ! வளர்க ! தொடர்க இம்மாதிரிப் பதிவுகளை !!///
ஹிஹிஹி அப்பப்ப இப்படியும் வரணும்ல.... ;))
///cheena (சீனா) said...
aakaa - அடுத்த பதிவு - நானானியும் ஏ(அ)வாளும் - கலக்குங்க -
நீங்க எழுதுறீங்களா - இல்ல - நான் எழுதட்டா ?///
ஆகா! எததனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க.... :))
///பரிசல்காரன் said...
எல்லாருமே இப்படி மொக்கையா போட்டா, தமிழ்மணத்த யாருதான் காப்பாத்தறது?
ஐயகோ! என்னே கொடுமை இது!///
ஹிஹிஹி பரிசலாரே! நாம என்ன கருத்து கந்தசாமியா... கருத்து சொல்ல... மனசில வந்தது... கை தட்டச்சு செய்யுது... அம்புட்டு தேன்.. :)
///Natty said...
வை ப்ளட், சேம் ப்ளட் ;) அப்படின்னு ஆதாம் கிட்ட கேக்கனும் மாதிரி இருக்கு.. ;)///
மெய்யாலும்மாப்பா...அவ்வ்வ்வ்வ்வ்வ்
///துளசி கோபால் said...
:-))))))///
டீச்சர்! ஆதாம்கள் கஷ்டப்படுவதைப் பார்த்தால் உங்களுக்கெல்லாம் சிரிப்பா இருக்குமே...ம்ம்ம்ம்... நடத்துங்க... உங்க ராஜ்ஜியம் தானே... :))
///ஜெகதீசன் said...
:))))))///
அண்ணே! எதை நினைச்சிட்டு சிரிக்கிறீங்க.. சொல்லிட்டு சிரிங்க... ஓ... துன்பம் வரும் போது சிரிக்க சொல்லி இருக்காங்கல்ல அதானே,.... :)))
ஆதாம் துண்டெல்லாம் போட்டாரா.
இலையுடைன்னு நினைச்சேனே.:)
இத்தனைக்கும் புனைவு இல்லைன்னு வேற சொல்லிட்டீங்க.!!!
:-))
முன்னாடியே படிச்சுருக்கேன். ஆனா கமெண்ட் போட்டதில்லை. அதனால் இப்ப!
நல்லா வாய் விட்டு சிரிச்சேன். கற்பனை நல்லா இருக்கு
//இந்த வாஜிங் மிஜின் எல்லாம் கிடையாதா? நீங்க கைல தான் தொவைக்கிறீங்களா தமிழ்பிரியன்!?!?
சங்கடம்தான்
//
ரிப்பீட்டிக்கறேன் சிவாவை
மலரும் நினைவுகளா அண்ணே..!
மறுக்கா படிச்சாலும் சூப்பராதான் இருக்கு
செம கலக்கல்ஸ்....ஆனாலும் அந்த ஆதாம் ரொம்ப பாவம்.இப்டியா dominate பண்றது...சோ sad!!!
சரி...நீங்க துணிஎல்லாம் தொவச்சாச்சா?
One of my friends, Sharmila Rajasekaran met with an accident in Huntsville, Alabama and she has suffered severe trauma to her head and right now she is in a coma. The doctors have said that there is nothing much they can do and she has to come out of the coma on her own. By the grace of god so far her condition is stable and that gives hope. So please do remember her and her family in your prayers.
She is right now at the Vanderbilt Medical Center in Nashville, Tennesse.
காஞ்சி சுரேஷ்,
கட்டாயம் அவுங்களுக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
:-)
Post a Comment