Wednesday, October 28, 2009

புதிய புதிய... எல்லாம் புதியவை
மக்களே எல்லாம் நல்லா இருக்கீங்களா? கணிணிப் பக்கமே வந்து பல நாட்களாச்சு.. புது வேலை, புது இடம், புது மனிதர்கள், புதிய சவால்கள்.. ஆனா ஆள் மட்டும் அதே ஆள் தான்... நல்லபடியா புது வாழ்க்கைப் போய்க் கொண்டு இருக்கின்றது. வீட்டிலும் ஒரு புது மெம்பர்... வழக்கம் போல் இரவில் விழித்து பகலில் தூங்குகின்றாள்.
செல்லிடை பேசியில் ரீடரில் மட்டும் சில பதிவுகளைப் படித்து வருகின்றேன்.. தமிழ் பதிவுகள் படிக்க முடியாத நாட்கள் என்பவை மிகவும் கடினமான நாட்களாக உணர முடிகின்றது. அருகில் இருக்கும் ஆயில் அண்ணனை அவ்வப்போது சென்று சந்திக்க முடிகின்றது. ஊரில் மகனையும், மகளையும், மிஸ் செய்வதை உணர முடிகின்றது. மகள் பிறந்த போது அனைத்து கணங்களிலும் உடன் இருந்தது மறக்க முடியாத நினைவுகள்.


மகள் பிறந்த சில மணித் துளிகளில் மகனின் கையில்

இன்னும் சில தினங்களில் புது சவால்களின் அழுத்தம் குறைந்தது அனைத்தும் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம். சர்வேசனின் நச் கதைப் போட்டிக்கு ஒரு கதை ரெடியாக இருக்கின்றது.. மனதில்... :) எப்போது எழுத முடியும் என்று தெரியவில்லை... அனைத்து நண்பர்களின் வாழ்த்துக்களுக்கு, தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கும் நன்றிகள்.


அன்புடன்
தமிழ் பிரியன்

31 comments:

மங்களூர் சிவா said...

wow nice

welcome back anne!

ஆயில்யன் said...

அட! வாங்க தம்பி நல்லா இருக்கீயளா? :)

வடகரை வேலன் said...

ஜின்னா,

வாழ்த்துக்கள். புதிய முயற்சியிலும் வெற்றியே கிட்டும்.

பீர் | Peer said...

வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

தல களத்துல இறங்கிடுச்சேய்...!!!

:)

தமிழன்-கறுப்பி... said...

வாங்க தல கலக்குங்க...

தமிழன்-கறுப்பி... said...

நீங்க ஜெயிக்கிற மனுசன் அண்ணே, போய்க்கிட்டே இருங்க.

சின்ன அம்மிணி said...

வாங்க வாங்க, குட்டிப்பாப்பா பிறந்ததுக்கு வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

ரோஜாப்பூவின் கையில் ரோஜா மொட்டு அழகு.

புதிய புதிய.. எல்லாப் புதியவற்றுக்கும் வாழ்த்துக்கள்!

ஸ்ரீமதி said...

//மங்களூர் சிவா said...
wow nice

welcome back anna!//

:))) Repeatuuuuuuuu.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொறுப்பா அண்ணன் தங்கச்சிய அப்பவே பாத்துக்க ஆரம்பிச்சிட்டாரா.. நல்லது..:)

cheena (சீனா) said...

அன்பின் தமிழ்பிரியன்

விரைவினில் மகிழ்வுடன் இணையத்தில் வலம் வர நல்வாழ்த்துகள்

அயலகங்கள் போல் தமிழகத்திலும் இப்பொழுது பிறந்த சில மணித்துளிகளில் அண்ணன் கையில் தங்கையினைலக் கொடுக்கும் வழக்கம் வந்து விட்டதா ? நல்ல பழக்கம் ‍ அண்னன் பொறுப்பானவர் ‍ தங்கையினைக் கவனித்துக் கொள்வார்.

இருவருக்கும் ‍ அவர்களது தாய்க்கும் நல்வாழ்த்துகள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நால்வருக்கும் வாழ்த்துகள்.! சீக்கிரம் வாங்கண்ணே.!

(போட்டோ ஆபிஸ்ல தெரியமாட்டேங்குது. :(( வீட்ல போய்தான் பாக்கணும்)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஆயில்யன் said...
அட! வாங்க தம்பி
//

ஆமா, இந்த ஆயில்யனுக்கு என்ன வயசாவுது? உங்களையே தம்பின்னா.? வடகரை வேலன் செட்டா இருக்குமோ.? நா வேற எங்க செட்டா இருக்கும்னுல்லா நினைச்சுக்கிட்டிருக்கேன். :-((

ஹுஸைனம்மா said...

வாங்க ஜின்னா,

புது வரவுக்கும், புது வேலைக்கும் வாழ்த்துக்கள். இப்ப எங்க இருக்கீங்க?

முனைவர்.இரா.குணசீலன் said...

மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்

விவேகானந்தன் said...

cute...!

gulf-tamilan said...

நலமா? வாழ்த்துக்கள் !!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாங்க வாங்க! வாழ்த்துக்கள்

Mrs.Menagasathia said...

புது வேலைக்கும்+குட்டிப் பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்!!

அன்புடன் அருணா said...

புது வேலைக்கும்+குட்டிப் பாப்பாவுக்கும் பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!!

சுசி said...

Congrats.........................
welcome back!!!!!

கண்மணி said...

வாழ்த்துக்கள்

சென்ஷி said...

வாழ்த்துக்கள் மாம்ஸ் :)

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் அண்ணே :)

வெண்பூ said...

வாழ்த்துகள் தமிழ்பிரியன்..

KVR said...

ஆயில்யன் அண்ணனா? ரைட்டு. உங்களுக்கு அண்ணன்னா கண்டிப்பா எனக்கும் அண்ணன் தான்.

வால்பையன் said...

வாங்க தல!

வழக்கம் போல் கலக்குங்க!

ஊர்சுற்றி said...

வாருங்கள் அண்ணா!
வாழ்த்துக்கள். குழந்தை க்யூட். :)

மாதேவி said...

குட்டிச்சூட்டிகளுக்கும் அப்பா அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

வாங்க தல!

LinkWithin

Related Posts with Thumbnails