Friday, August 28, 2009

விடைபெறுகின்றேன்.. நன்றி அறிவிப்புடன்.

விடை பெறுகிறேன் என்றதும் குதித்து கும்மாளம் போடுபவர்கள் அமைதியாக முழுவதும் படிக்கவும். இது ஒன்லி சிறு இடைவெளி தான். சீக்கிரமே திரும்ப வந்து விடுவேன். அதனால் நிறைய சந்தோசப்பட வேண்டாம்.. ஹே ஹே ஹே.. :))

சவுதியில் வேலையை விட்டு விட்டு விடைபெறும் நேரம் வந்து விட்டது. மூன்று ஆண்டுகள் இங்க குப்பை கொட்டியாச்சு.. கிட்டத்தட்ட ராஜபோக வாழ்க்கை.. சும்மா இருப்பதற்கு மாசமான சம்பளம் கொடுத்து, ஓசியில் சாப்பாடு போட்டு, சொகுசாக தங்க இடம் கொடுத்து, வருடா வருடம் 2 மாதம் லீவ் கொடுத்து… Thank You Saudi Oger Ltd.

(அதன் விளைவு கொஞ்சம் தொப்பையும், சோம்பேறித்தனமும்... இனி அடுத்தகட்ட பரபரப்பான ஒரு வேலையை நோக்கி தயாராகிக் கொண்டு இருக்கின்றேன். )

முதல் வருடம் செம போர். தமிழ் பேசுபவர்கள் விரல் விட்டு எண்ணி விடக் கூடியவர்களே.. அவர்களும் நம்முடன் பேசும் அளவுக்கு அலைவரிசையில் இல்லை. அடுத்த ஆண்டு தமிழ் இணையம் அறிமுகமானது. மிக மகிழ்ச்சியான வாழ்க்கை.

தமிழ் மணம் வழியாக தமிழ் பதிவுலகில் நுழைந்ததும் புதிய உலகம் ஒன்று தெரிந்தது. வாழ்வு முழுவதும் ஒரு தேடல் பாக்கி இருப்பதாகவே எனக்கு படும். அது என்னவென்று புரியாமல் இருந்ததற்கு விடை….. வாசிப்பு. வாசிப்பின் இன்பமே அலாதி. எதை வாசிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டித் தந்த தமிழ் மணத்திற்கு மிக்க நன்றி!. ஆனால் இன்னும் அதிகப்படியாக வாசிக்க சந்தர்ப்பங்கள் தோதுவாக அமையவில்லை. இனி அமையும் என எதிர்பார்க்கலாம்.

எழுதுவது என்பது என்னை அவ்வளவாக கவரவில்லை. வாசிப்பின் வடிகாலாக எழுதுவதை வைத்திருக்கவே எண்ணினேன். என் எழுத்துக்கள் எதுவும் என்னைக் கவரவில்லையாதலால் வாசிப்புடன் நிறுத்திக் கொள்ளவே ஆசைப்படுகின்றேன்.

தமிழ் இணையத்தில் வழியாக கிடைத்த மிகப் பெரிய சொத்து நண்பர்கள். தனிமையுடன் வாழ்ந்தேன் என்று சொல்வதன் அர்த்தம் நல்ல நண்பர்கள் கிடைக்கவில்லை என்பதோ, அல்லது நண்பர்களை என்னால் தக்கவைக்க இயலவில்லை என்பதோ தான். ஆனால் இணைய வழி நண்பர்களின் உலகம் புதிதாக இருந்தது. முகம் தெரியாதவர்கள், பாலினம் எது என்று உறுதியாக சொல்ல முடியாதவர்கள், ஆனால் தமிழர்கள் என்ற ஒரு பிணைப்பால் மட்டும் கட்டுண்டோம்.

அண்ணனாகவும், தம்பியாகவும், அக்கா, தம்பி, அம்மா,அப்பா என முகம் தெரியாத உறவுகள். அனைவரிடமும் இருக்கும் உண்மையான அன்பு. சாட்டிங் தாண்டி, தொலைபேசி வழியான உரையாடல்களாகவும் மலர்ந்த நேசங்கள். சில பெண் பதிவர்களை நம்பால் போன் பேசி நம்பிய சில தருணங்கள்… ;-)). என் மீது நம்பிக்கை வைத்திருந்த பல பதிவர்கள் மற்றும் புதிய உலகத்தைக் காட்டிய நட்புகளுக்கு ஆனந்தக் கண்ணீருடனான நன்றிகள்.

முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டி விரும்பினேன். பதிவுலக சகோதரி ஒருவருடைய வீட்டில் முக்கியமான விசேசம். போனில் பேசும் போது “ அண்ணா! அந்த நேரத்தில் நீங்களும் இங்க இருந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்” என்று சொன்ன போது சடாரென்று கண்களில் உகுத்த கண்ணீரை மறக்க இயலாது. என் இரத்த உறவுகளில் கூட யாரும் என்னிடம் இப்படி சொல்லிக் கேட்டதில்லை… ;-) நன்றிடா!!

ஓரிரு தினங்களில் இந்தியாவுக்கு கிளம்புகின்றேன். பதிவுகளுக்கு தான் வர முடியாது. வழக்கமான மெயில் மொக்கைகள், போன் மொக்கைகளைத் தொடரலாம். எங்கள் ஊரைச் சுற்றி இருப்பவர்கள் பொழுது போகவில்லையெனில் நேராகவே வந்து மொக்கை போடலாம். (தேனி, மதுரை (எங்க ஏரியா) மற்றும் நெல்லை, குமரி (தங்கமணி ஏரியா) மாவட்டத்துக்கு முன்னுரிமை..ஹிஹிஹி). )

இறைவன் நாடினால் சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது இருந்ததை விட ஒரு சிறந்த வேலையில் சேரவிருக்கின்றேன். என்றும் போல் உங்களது வாழ்த்துக்களுடன்… :)

அதற்குப் பிறகு மீண்டும் பதிவுலகில் சந்திக்கலாம்.

அன்புடன்

தமிழ் பிரியன் @ Jinnah.

dginnah@gmail.com

39 comments:

நட்புடன் ஜமால் said...

இன்ஷா அல்லாஹ்

நல்லபடியாக போய்ட்டு வாங்க

உண்மையில் வலையுலக சொந்தங்கள்

ரொம்ப சந்தோஷமே ...

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லபடியாக போயிட்டுவாங்க ஜின்னா

தேனிதென்றல் காற்றை நலம் விசாரித்ததாக கூறவும்

Unknown said...

நாந்தான் மூனூ.. :))) படிச்சிட்டு வரேன்...

Unknown said...

//சில பெண் பதிவர்களை நம்பால் போன் பேசி நம்பிய சில தருணங்கள்… ;-)). //

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... :)))))

Unknown said...

//போனில் பேசும் போது “ அண்ணா! அந்த நேரத்தில் நீங்களும் இங்க இருந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்” என்று சொன்ன போது சடாரென்று கண்களில் உகுத்த கண்ணீரை மறக்க இயலாது. என் இரத்த உறவுகளில் கூட யாரும் என்னிடம் இப்படி சொல்லிக் கேட்டதில்லை… ;-) நன்றிடா!!//

நோ ஃபீலிங்க்ஸ்.. :(((((((

Unknown said...

பத்திரமா போயிட்டு வாங்க அண்ணா...

ஆயில்யன் said...

பத்திரமா போயிட்டு வாங்க அண்ணா...

தமிழன்-கறுப்பி... said...

தல என்னைய விட்டுட்டு போறிங்கல்ல...:(

இருய்யா உன்னையை இந்தியா வந்து பாக்கறேன்!!!

கண்மணி/kanmani said...

enjoy with family .god bless you

சுசி said...

சந்தோஷமா போய்ட்டு சீக்கிரம் பதிவுலகத்துக்கு திரும்பி வாங்க தமிழ் பிரியன்.
உங்க எதிர்காலம் இன்னும் வளமா அமைய வாழ்த்துக்கள்.. குட்டிப்பயல் கூத்துகளையாவது அப்பப்போ பகிர்ந்துக்குங்க..
//முகம் தெரியாதவர்கள்,ஆனால் தமிழர்கள் என்ற ஒரு பிணைப்பால் மட்டும் கட்டுண்டோம்//
முற்றிலும் உண்மை....

Anonymous said...

//என் இரத்த உறவுகளில் கூட யாரும் என்னிடம் இப்படி சொல்லிக் கேட்டதில்லை… ;-) நன்றிடா!!//

மனம் நெகிழ்ந்து எழுதியிருக்கின்றீர்கள்.

இந்தியாவுக்கா, மீண்டும் சீக்கிரம் எழுத வாருங்கள்.

சந்தனமுல்லை said...

ஹே...வாழ்த்துகள் அண்ணா!!


ஹிஹி..நோ ஃபிலிங்ஸ்!! :-)

சென்ஷி said...

//சில பெண் பதிவர்களை நம்பால் போன் பேசி நம்பிய சில தருணங்கள்… ;-)).//

சொல்ல வந்ததை உருப்படியா சொல்லித் தொலைவே! :))

//போனில் பேசும் போது “ அண்ணா! அந்த நேரத்தில் நீங்களும் இங்க இருந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்” //

அந்தப் புள்ள வுடாம எல்லோர்க்கிட்டயும் ஒரே டயலாக்கை ஒப்பிச்சுருக்குது பாரேன் :)

மீண்டும் சீக்கிரமா வாங்க அண்ணாச்சி.. வெயிட்டிங்க்.

கானா பிரபா said...

பத்திரமா போயிட்டு வாங்க அண்ணா...

சென்ஷி said...

//தமிழன்-கறுப்பி... said...

தல என்னைய விட்டுட்டு போறிங்கல்ல...:(

இருய்யா உன்னையை இந்தியா வந்து பாக்கறேன்!!!//

டேய் மாப்பி! நீயும் அண்ணாச்சி கூடவே பிளைட் ஏறிடலாமுல்ல. பொழுது போகும் :)

anujanya said...

எல்லாப் புது முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துகள் ஜின்னா. திரும்ப வாங்க. உங்களுக்கு தற்காலிக விடுமுறை தான் கொடுக்குறோம் :)

அனுஜன்யா

Unknown said...

நல்லபடியாக போய்ட்டு வாங்க அண்ணன்

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே சென்னை வந்து இறங்கியதும் போன் பண்ணுங்க.

நிஜமா நல்லவன் said...

நோ ஃபீலிங்க்ஸ்:)

நிஜமா நல்லவன் said...

/அந்தப் புள்ள வுடாம எல்லோர்க்கிட்டயும் ஒரே டயலாக்கை ஒப்பிச்சுருக்குது பாரேன் /


:)))))))))))))))))

ஆயில்யன் said...

//சென்ஷி said...

//சில பெண் பதிவர்களை நம்பால் போன் பேசி நம்பிய சில தருணங்கள்… ;-)).//

சொல்ல வந்ததை உருப்படியா சொல்லித் தொலைவே! :))

//போனில் பேசும் போது “ அண்ணா! அந்த நேரத்தில் நீங்களும் இங்க இருந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்” //

அந்தப் புள்ள வுடாம எல்லோர்க்கிட்டயும் ஒரே டயலாக்கை ஒப்பிச்சுருக்குது பாரேன் :)//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!!!! :)))

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

விரைவாக வாருங்கள்... நல்ல வேலை கிடைக்கும் நன்றாக இருங்கள்

Thamiz Priyan said...

///நட்புடன் ஜமால்
பிரியமுடன்...வசந்த்
ஸ்ரீமதி
ஆயில்யன்
கண்மணி
சுசி
சின்ன அம்மிணி
சந்தனமுல்லை
சென்ஷி
தமிழன்-கறுப்பி..
கானா பிரபா
அனுஜன்யா
Mrs.Faizakader
எம்.எம்.அப்துல்லா
நிஜமா நல்லவன்
மதுவதனன் மௌ. / cowboymathu ////

நன்றிகள் நண்பர்களே!

Thamiz Priyan said...

///ஆயில்யன்

சென்ஷி

நிஜமா நல்லவன் said...

//போனில் பேசும் போது “ அண்ணா! அந்த நேரத்தில் நீங்களும் இங்க இருந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்” //

அந்தப் புள்ள வுடாம எல்லோர்க்கிட்டயும் ஒரே டயலாக்கை ஒப்பிச்சுருக்குது பாரேன் :)////


அண்ணன்களே! என் தங்கைக்கு இந்த அளவு பேசக் கூடிய மெச்சூர்ட்டி இருக்குன்னா எனக்கு சந்தோசம் தானே...

”மனசில் இருப்பது தான் வார்த்தையில் வரும்.”

இது நானே கண்டுபிடித்த பிரசித்தமான பொன்மொழி ;-))

மங்களூர் சிவா said...

வாங்க வாங்க சந்தோஷம் மகிழ்ச்சி!

பீர் | Peer said...

புதிய வேலைக்கு வாழ்த்துக்கள்.

தொடர்பில் இருங்கள்.

துளசி கோபால் said...

நல்லதே நடக்கும்.

எங்கிருந்தாலும் வாழ்க.

தொடர்பில் இருங்க.

குசும்பன் said...

அடுத்த வெளிநாடு பயணம் சீக்கிரம் நல்லபடியாக முடிய வாழ்த்துகள்!

Unknown said...

வாழ்த்துகள் அண்ணா. ச்சே ஓவரா பின்னூட்டம் படிச்சதோட வினை.

நல்லபடியா போய்ட்டு வாங்க. முடிஞ்சா நீங்க போற புது நாட்டுக்கும் ஒரு தபா கார்ல ட்ரிப் அடிக்கிறேன் ;-)

மாதேவி said...

எதிர்காலம் சிறப்புற மலர வாழ்த்துக்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழ் பிரியன் ஜின்னா!

பத்திரமா போயிட்டு வாங்கண்ணா!

மாற்றம் இன்றியமையாதது!

ஜொலிப்பதற்கு பட்டை தீட்ட பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

வாழ்த்துகள்!

Thamira said...

அடுத்த முயற்சிகள் வெல்லட்டும், வாழ்த்துகள் தமிழ்பிரியன்.! விரைந்து திரும்புங்கள்.!

தமிழன்-கறுப்பி... said...

hooooooooooooooo!!!

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் தமிழ் பிரியன் :)

இதை விட சூப்பரா வேற வேலை கிடைக்கும்.

துபாய் வந்தாலும் வரலாம் :) வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடுத்த ராஜாதி ராஜயோக வேலைக்கு வாழ்த்துக்கள்..

என்ஜாய்ங்க ஊருல..

தமிழன்-கறுப்பி... said...

தல நாளைக்கு காலைல பிளைட்டுல்ல,....
.....

☼ வெயிலான் said...

எல்லாம் நல்லதே நடக்கும்.

இந்தப்பக்கம் வந்தா கூப்பிடுங்க. இல்லை நான் அந்தப்பக்கம் வந்தா கூப்பிடறேன் :)

கிரி said...

சந்தோசமா போயிட்டு வாங்க

அன்புடன் அருணா said...

கொஞ்சம் லேட்தான்...இருந்தாலும் புது வேலைக்கு வாழ்த்துக்கள்...