Sunday, January 10, 2010

U/A பதிவர் டிப்ஸ் : சுவாரஸ்யமான பதிவு எழுதுவது எப்படி?

ப்ளாக்கை இவ்வளவு நாட்களாக ஒளித்து வைத்து என்னுடன் கண்ணாமூச்சி ஆடிய கூகுளை கண்டித்தும், திரும்பி தந்தததற்கு நன்றி தெரிவித்தும் கூகுளாண்டவருக்கு இப்பதிவை கடும் கோபத்துடன் சமர்ப்பிக்கின்றேன்.. ;-)



இயற்கையான விடயங்களைப் படித்து முகம் சுளிப்பவர்கள் தயவு செய்து இதைப் படிக்க வேண்டாம்.

இந்தப் பதிவு பதிவு எழுத வேண்டுமென்பதற்காக பதிவு எழுதுபவர்களுக்கானது அல்ல.... எழுத வேண்டுமென்பதற்காக பதிவு எழுதுபவர்களுக்கானது.. புரிந்தவர்கள் மேலும் தொடரலாம். இது முதல் கட்டம்.

சுவாரஸ்யமான பதிவு எழுதுவது என்பது ஒரு கலை. மற்றவர்களை வசீகரிக்கும் வண்ணமும், படித்தவுடன் கமெண்ட் போட வேண்டும் என யோசனை வரும் வண்ணம் சுவாரஸ்யமான பதிவுகள் எழுதுவது கொஞ்சம் கஷ்டமான ஒரு விடயம் தான். இது கிட்டத்தட்ட ஒரு சிற்பத்தை செதுக்கும் சிற்பி போலவும், ஓவியம் வரையும் ஓவியன் போலவும் ஒரு நுட்பமான செயல்.

இனி இரண்டாவது கண்டிசன்... இனி உங்களது ப்ளாக்குக்கு செல்லுங்கள். சொந்தமாக 50 இடுகைகளுக்கும் மேல் எழுதி இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது அல்ல...உடனடியாக கிளிக் செய்து நல்லா இருக்கு! குட்! உபயோகமான தகவல் என்ற பின்னூட்டங்களில் ஒன்றையோ :) :))) இதில் ஏதாவது ஸ்மைலியையோ போட்டு விட்டுச் செல்லலாம்

இரண்டாம் கட்டத்தைக் கடந்தும் தொடர்பவர்கள் இனி உன்னிப்பாக கவனிக்கவும். ஒரு பதிவுக்கு முக்கியமானது கரு. நாம் எதைப் பற்றி எழுதப் போகிறோம் என்பது தான் கரு. தமிழ் பதிவுலகில் மொத்தமே 6 கரு தான் உள்ளது. அதைத் தான் மாற்றி மாற்றி எழுத முடியும் என்று சூதாடி சித்தர் கூட சொல்லியுள்ளார். எனவே நமது அனுபவம், பக்கத்து வீட்டில் நடந்தது, அடுத்த தெருவில் நடந்தது, பள்ளி கல்லூரி அனுபவம், எங்காவது படித்தது, ஆங்கில நாவலில், கட்டுரையில் சுட்டது என கதைக்கான கருவை அந்தந்த சந்தர்ப்பங்களில் கண்டுபிடித்து வைத்துக் கொள்ளுங்கள். கரு கிடைத்தவுடன் எப்படி பதிவு எழுத வேண்டுமென்று மட்டும் சிந்திக்காதீர்கள்.

சரி கதை கிடைத்து விட்டது..இனி அதைப் பதிவாகஎழுத வேண்டும். இதில் தான் நிறைய பேர் கோட்டை விடுகின்றனர். கரு கிடைத்தவுடன் New Post கிளிக் செய்து உட்கார்ந்து விடுகின்றோம். இது தவறான அணுகுமுறை. கருவை முதலில் போட்டு ஊற வையுங்கள்.

காலையில் சீக்கிரமாக எழுங்கள். குளித்து நாஸ்தா எல்லாம் முடித்து விட்டு 9 மணி ஆபிஸ் என்றால் 10 நிமிடம் முன்னமே 8:50 க்கே சென்று விடுங்கள். உங்கள் மேலதிகாரி யாராவது வந்து இருந்தால் அவரிடம் சென்று ஒரு விஷ் பண்ணுங்கள். வேறு எங்கும் சென்று அரட்டை அடிக்காமல் உங்கள் இருக்கைக்கு வந்து வேலையைத் துவக்குங்கள். ஆணி இருந்தால் பிடுங்கவும். இல்லையெனில் ஆணி பிடுங்குவது போல் ஆக்ட் கொடுக்கவும். இடையில் மூத்த அதிகாரி யாராவது கிராஸ் செய்தால் சீரியஸாக இருப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு விஷ் பண்ணுங்கள்.

முடிந்தால் 9:15 க்குப் பிறகு உங்கள் மேலதிகாரிகளிடம் சென்று ஏதாவது முக்கிய டவுட் கேப்பது போல் கேளுங்கள். உங்கள் கீழ் அதிகாரிகளிடம் கண்டிப்பாக முடிந்திருக்காது என்று தெரியும் ஏதாவது விஷயத்தை முடிந்து விட்டதாக என்று விசாரியுங்கள். இதை 10 மணி வரைத் தொடருங்கள்.

இனி 10 மணிக்குப் பிறகு . ரீடரில் வேண்டியவர்களின் பதிவு இருந்தால் நல்லா இருக்கு என்றோ.. பதிவில் இருந்து சில வரிகளை கோட் செய்து கிரேட்! சூப்பர் என்று பின்னூட்டம் போடுங்கள். மீ த பர்ஸ்ட், மீ த 20! மீ த 100! மீ த 420! போடுவது சிறப்பானது.பின்னர் தமிழ் மணத்தைத் திறந்து அதில் உங்களுக்கு வழக்கமாக கமெண்ட் போடுபவர்களின் பதிவு இருந்தால் அதிலும் மேற்க்கண்ட கமெண்ட்களைப் போடுங்கள். கண்டிப்பாக எந்த பதிவையும் படிக்காதீர்கள்.

இதற்குள் மணி 10:30 ஆகி இருக்கும் இனி தான் முக்கியமான கட்டம். இப்போது ஆபிஸே அமைதியாக இருக்கும். கணிணித் திரையில் ஏதாவது ஸ்டேட்மெண்ட், கம்பைல் பண்ணாத கோடிங், அக்கவுண்ட்ஸ் இப்படி வைத்துக் கொள்ளுங்கள்.மெல்ல எழுந்து வயிறு சரியில்லாததைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு நேராக டாய்லெட்டுக்கு செல்லுங்கள்.

எதையும் செய்வதற்கு நல்ல இடம் முக்கியம். கலைஞர் கூட கவிதை எழுத கொடைக்கானல் போவதைக் கேள்விப்பட்டு இருப்போம். சினிமா பாடகர்கள் கூட 5 நட்சத்திர ஹோட்டல்களில் ??ட்டிகள் சூழ பாட்டெழுவதாக வதந்தி இருக்கும் முன்னால் எல்லாம்.. அது போல். டாய்லெட்டில் நல்ல WC உள்ள அறைக்கு செல்லுங்கள். ஐரோப்பிய மாடல் WC க்கள் மிகச்சிறப்பானவை. உள்ளே சென்றதும் அறைக் கதவை தாளிட்டு WC ல் வழக்கமாக அமர்வது போல் அமருங்கள்.(வழக்கமாக எப்படி அமர்வது என்ற கேள்வி இந்த இடத்தில் எழுப்பினால் கெட்ட கோவம் வரும்..)

இனி உங்கள் கைகளை உள்ளங்கை தெரிவது போல் முன்னால் நீட்டுங்கள் . இதே நிலையில் சுமார் 2 நிமிடங்கள் அமருங்கள். கிட்டததட்ட யோகாசன நிலை போல் இருக்கும். கண்டிப்பாக பதிவைப் பற்றி யோசிக்கவே கூடாது. (பின் குறிப்பு அ பார்க்க) இரண்டு நிமிடம் முடிந்ததும் அதே நிலையில் அமர்ந்து கொண்டு உங்கள் பதிவுக்கான கருவைப் பற்றி சிந்தியுங்கள். இனி ஆரம்பம் முதல் இறுதி வரை பதிவுக்கான மேட்டர் சரசரவென வந்து மனதில் அமரும்.




ஒரு பொருளை ஒரு இடத்தில் வைக்க வேண்டுமானால் அந்த இடத்தில் வேறு பொருள் இருக்கக் கூடாது என்பது இயற்கையின் நியதி. எனவே இயற்கையாக உங்கள் வயிற்றில் இருந்து ஏதாவது காலியானால் ஆனந்தமாக கழியுங்கள். அந்த சந்தர்ப்பங்களில் இடையிடேயே சேர்ப்பதற்கான விட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நல்ல தலைப்பும் அப்போது தான் கிடைக்கும்.

பதிவு கடைசி வரை இறுதியானதும் வேகமாக கதவைத் திறந்து உங்கள் இருக்கைக்கு விரையுங்கள்.. வெயிட்..வெயிட்.. சுத்தம் வேண்டியது இருந்தால் சுத்தம் செய்து விட்டு செல்லுங்கள். நீங்கள் உள்ளே வந்து வெளியே சென்ற நேரத்தையும் கணக்கில் கொண்டே உங்கள் பதிவு சூடாகும். இதற்கு ஒரு சுலபமான சூத்திரம் இருக்கு.. அதாவது நீங்கள் 15 நிமிடங்கள் இருந்திருந்தால் அது நல்ல பதிவு. அதற்குக் குறைவாக இருந்திருந்தால் சுமாரான பதிவு. 15 நிமிடத்திற்கும் அதிகமாக இருந்தால் அது நிச்சயம் சூப்பர் ஹிட் பதிவு தான்.

இருக்கைக்கு பயர் டிரிலில் ஓடுவது போல் வேகமாக சென்று அமருங்கள். முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு பதிவை தட்டச்சுங்கள். கவனத்தை வேறு பக்கம் சிதற விடாதீர்கள். அவ்வளவு தான்! டன்! இப்போது நீங்கள் எழுதும் பதிவு கண்டிப்பாக சூடாகி விடும். ஹிட்ஸூம் அதிகமாக வரும்.

அந்த கஷ்டமான கணங்களை சுவாரஸ்யமான கணமாக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது. அந்த நேரங்களில் யோசித்தால் உங்களுக்கு பி.ந. சொல்லாலடனுனான பதிவுகள், கர்ண் கொடூர கவுஜைகள், ஆரம்பமும் இறுதியும் புரியாத கட்டுரைகள் எல்லாம் யோசனையில் கிடைக்கும். அதை அப்படியே பதிவாக மாற்றலாம்.

பின் குறிப்பு அ
அந்த நேரத்தில் நயன்தாரா,அசின் , மல்லிகாசெராவத், வித்யா பாலன் (அங்கிள்களுக்கு மட்டும் ) என்று எதையாவது நினைத்தால் அதன் பின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பாகாது.

29 comments:

cheena (சீனா) said...

ஓஓஒ இப்படித்தான் ஸ்வார்ஸ்யமா பதிவு எழுதணுமா - இது கூட ஸ்வார்ஸ்யமாத்தான் இருக்கு

ரசிச்சேன் - சிரிச்சேன்

நல்வாழ்த்துகள்

பீர் | Peer said...

எச்சூச்மீ... முதல் கட்டத்திலேயே வெளியேறினா, எப்படி பின்னூட்டம் போடுவது?

அது தெரியாததால ரெண்டாவது கட்டம் வரை வரவேண்டியதா போச்சு.. ஸாரி.

நல்லா இருக்கு! குட்! உபயோகமான தகவல் என்ற பின்னூட்டங்களில் ஒன்றையோ :) :))) >>> இவற்றில் ஏதாவதொன்றை வைத்துக்கொள்ளவும்.

ஆயில்யன் said...

ப்ளாக்கினை திரும்பி தந்தததற்கு ப்ளாக்கரின் சார்பாக பதிவுலகத்தின் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.! இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் இனி நிகழாது!


ப்ளாக்கர் சார்பாக...

கடை நிலை ஊழியன்

*இயற்கை ராஜி* said...

//ப்ளாக்கினை திரும்பி தந்தததற்கு ப்ளாக்கரின் சார்பாக பதிவுலகத்தின் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.! இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் இனி நிகழாது!

//

Repeat yeee:-)))

gulf-tamilan said...

/ப்ளாக்கினை திரும்பி தந்தததற்கு ப்ளாக்கரின் சார்பாக பதிவுலகத்தின் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.! இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் இனி நிகழாது!

வழிமொழிகிறென் :))))

gulf-tamilan said...

//சூதாடி சித்தர் கூட சொல்லியுள்ளார்.//
யாருங்க அது?எங்குயிருக்கிறார்?

gulf-tamilan said...

//கர்ண் கொடூர கவுஜைகள், ஆரம்பமும் இறுதியும் புரியாத கட்டுரைகள் எல்லாம் யோசனையில் கிடைக்கும். அதை அப்படியே பதிவாக மாற்றலாம்.//
நீங்க இப்படித்தான் பதிவு போடுறிங்களா?
:)))

gulf-tamilan said...

அடுத்து ' A ' பதிவர் டிப்ஸ் போடவும் :)))

பாலா said...

/வழிமொழிகிறென் :))))//////

மீ டூஊஊஊஊஊஊ!!!

பாலா said...

ஸ்மைலி போட மறந்துட்டேன்.!!!

:) :) :) :) :) :) :) :) :)

தமிழன்-கறுப்பி... said...

இதுல கூட சேந்திருக்கிறது வித்யாபாலன் மட்டும்தான்.

நட்புடன் ஜமால் said...

15 நிமிடத்திற்கு மேலே இருந்திய போல ...

அந்த கூகிளை சொ(கொ)ல்லனும்

:) :) :)

ஜெகதீசன் said...

நல்லா இருக்கு! குட்! உபயோகமான தகவல்

:) :)))

ரோஸ்விக் said...

ஆஹா... தல வருசத்துல மொதப் பதிவே "முக்கிய" பதிவா?? :-))))

KULIR NILA said...

imsai arasan 23m pulikesi senjatha apdiye ulda panni solli irukeenga good

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

ப்ளாக்கினை திரும்பி தந்தததற்கு ப்ளாக்கரின் சார்பாக பதிவுலகத்தின் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.! இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் இனி நிகழாது!/

ரிப்பீட்டேய்....

நிஜமா நல்லவன் said...

சூதாடி சித்தரே....திரிகடுகம் மிக்ஸிங் சரி இல்லை போல....அதோட பாதிப்பு தான் இப்படியா???

விமலரூபன் said...

ஆகா......இவ்வளவு விசயம் இருக்கா..அருமையாக இருக்கிறது...........வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

புவாஹா ஹா ஹா புவாஹாஹா, பதிவு போட இப்புட்டு டிப்ஸ் இருக்குதா ஹி ஹி இதோ எல்லாம் டைரியில் நோட் பண்ணி கொள்கிறேன்.. :)))))

ஷாகுல் said...

15நிமிடத்திற்க்கு மேல் உக்காந்திடீங்களா?

அதிவு சூப்பர் ஹிட் அகிடிச்சி

ஹுஸைனம்மா said...

எழுத மேட்டர் இல்லைன்னா இப்படிகூட பதிவு போட்டு ஒப்பேத்தலாமோ?

கூகிளாருக்கு என் கடுமையான கண்டனங்கள்!!

ஆயில்யன், மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது, பிராயசித்தமும் செய்யணும். அதனால, மீண்டும்....

புகழன் said...

15 நிமிடத்திற்கு மேலே இருந்திய போல ...

அந்த கூகிளை சொ(கொ)ல்லனும்

:) :) :)

ரிப்பீட்டு

புகழன் said...

ஆஹா... தல வருசத்துல மொதப் பதிவே "முக்கிய" பதிவா?? :-))))

இதுக்கம் ரிப்பீட்டு

புகழன் said...

ஐ ........... மீ த 25த்து

புகழன் said...

பின்குறிப்பில் குறிப்பிடப்பட்ட விஷயத்தில் தல ரெம்ப கவனமா இருந்ததால நமக்கு ஒரு நல்ல பதிவு )(!) கிடைச்சிருக்கு

கானா பிரபா said...

சுவாரஸ்யமான பதிவு, ஆனா நாங்க எல்லாம் நயந்தாரா காலத்தை கடந்த லேட்டஸ்ட் தமன்னா காலமாச்சே அண்ணா

ராமலக்ஷ்மி said...

உங்களுடைய இடம் திரும்பக் கிடைத்த விடயம் சொல்லவேயில்லையே:)? வாழ்த்துக்கள்!

enrenrum16 said...

[அதாவது நீங்கள் 15 நிமிடங்கள் இருந்திருந்தால் அது நல்ல பதிவு. அதற்குக் குறைவாக இருந்திருந்தால் சுமாரான பதிவு. 15 நிமிடத்திற்கும் அதிகமாக இருந்தால் அது நிச்சயம் சூப்பர் ஹிட் பதிவு தான்.]

ப்ளாக்கில் எழுத மேட்டர் இல்லன்னா சொல்லுங்க பாஸ்...உதவி செய்றோம்..அதாவது மேட்டர் எடுத்து தர்றோம்...ச்சே...அதாவது புது ஐடியா தர்றோம்..அதுக்காக இப்படியா...நல்ல வேளை...இது தொடர்பா எழுதறதுக்கு யாரையும் அழைக்கலை...