Friday, April 9, 2010

தமன்னாவோடு லுங்கியுடன் பிரியாணி


பையா படம் பார்த்தேன்... கார்த்தி நல்லா தான் நடித்து உள்ளார். இந்த படத்தின் நாயகி தமன்னா.. இவருக்காக தூத்துகுடியில் ரசிகர் மன்றம் அமைக்கப்பட்டு கட்அவுட்டுக்கு பாலாபிசேகம் எல்லாம் நடைபெற்று இருக்கின்றதாம்... சீக்கிரமே கோவில் கட்டுவாங்களான்னு தெரியல.. ;-)) தமன்னா நடித்து நான் பார்த்த முதல் படம் ஆனந்த தாண்டவம்.. குரு சுஜாதாவினுடைய பிரிவோம் சந்திப்போம் நாவலைப் படமாக்கி இருந்தார்கள்.. அப்படத்த்தில் பார்த்த போதே அந்த புள்ளை மீது ஒரு பரிதாபமான லுக் தான் வந்தது.. பையா பார்த்தும் ஏதும் மாற்றமில்லை.

வயாசியிடுச்சோ..;-)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

வளைகுடா நாடுகளில் ஒன்றான அமீரகத்தின் ஷார்ஜாவில் லுங்கி கட்டி வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ளதாம்.. அப்படி சென்றவரை போலிசார் கைது செய்தும் இருக்கிறார்களாம்.. கைலி\லுங்கி என்றாலே வட நாட்டவர்கள் முதல் கொண்டு ஒரு இளக்காரம் தான் இருக்கும்.. ஷார்ஜாவில் இருந்த போது நான் இருந்த இடத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ரோலா தமிழ் பள்ளிக்கு வெள்ளை லிங்கியோடு வரும் வழக்கம் இருந்தது....

மற்ற நாட்டவர்களின் ஆடைகளோடு ஒப்பிடும் போது லுங்கி ஒரு நல்ல ஆடையாகவே இருந்திருக்கின்றது... அது அந்த கலாச்சாரத்திற்கு எப்படி மாற்றமானதாக இருக்கும் என்று தெரியவில்லை... அரபுகள் அணியும் தோப் போன்ற அமைப்பில் தான் லுங்கியும் இருக்கின்றது..

அரை நிர்வாணமாகவும், தொடை தெரியும் சாட்ஸ்களுடன் திரியும் மேற்கத்திய கலாச்சாரவர்களின் ஆடைகளுடன் ஒப்பிடும் போது லுங்கி எவ்வளவோ பெஸ்ட்.

இது தொடர்பான டிபிசிடியின் பழைய சுட்டி ஒன்று.

கல்ஃப்நியூஸ் செய்தி.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பிரியாணி... ஊரில் இருக்கும் போது ருசித்துச் சாப்பிடுவது... வளைகுடா வந்த பிறகு ருசியான சாப்பாடு என்பது எட்டாக்கனியாத் தான் இருக்கும்... சில,பல ஹோட்டல்கள் இருந்தாலும் ஏனோ ஊரின் சமையல் ருசி வருவதே இல்லை... அதனால் சில சமயங்களில் நாமே களத்தில் இறங்கி விடுவது வழக்கம். அப்படித் தான் இரு வாரங்களுக்கு முன்பு களத்தில் இறங்கி வழக்கம் போல் சக பதிவர்களிடம் உதவி கேட்டால் எல்லாரும் பயந்து ஓடி விட்டார்கள்... எல்லாம் பிரியாணி என்ற பெயரில் புளியோதரை செய்து கொடுமை செய்பவர்கள் போல் இருக்கின்றது.. பாவம் தங்க மச்சான்கள்.. .;-)))

நேற்று நானே களத்தில் இறங்கி விட்டேன்... மட்டனை கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு போட்டு குக்கரில் ஏற்றி 8 விசில் வைத்து வேக வைத்துக் கொண்டேன். பின்னர் பட்டை, ஏலம், கிராம்பை சுட்ட எண்ணையில் போட்டு, அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு போட்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மசாலா, உப்பு எல்லாம் சேர்த்து பின்னர் வெறும் கறியை போட்டு, அதில் அரிசியைப் போல் ஒன்றரை மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பின்னர் அரிசியைப் போட்டு (அரிசியை முதலில் வேக வைக்கவில்லை) நன்றாக கிளறி தண்ணீர் வற்றியதும் தம் போட்டோம்.

20 நிமிடங்களுக்கு சிம்மில் வைத்து விட்டு அதற்குப் பிறகு கொஞ்சம் நேரம் கழித்து சாப்பிட்டோம். நல்லா தான் இருந்தது.. முதல் முயற்சி.. தம் போட்ட போட்டோ பாருங்க.. எம்புட்டு டெக்னிக் கைவசம் இருக்கு பாருங்க... ;-))



இரவு பிரியாணி சாப்பிட்ட அனைவரும் இந்த பதிவு போடும் வரை நலமாகவே இருப்பதால் இனி அடிக்கடி பிரியாணி டெஸ்ட்டிங் செய்யலாம் என்று ஐடியா.

Friday, April 2, 2010

அங்காடித் தெரு என்ற பதிவுலக அங்கலாய்ப்பு

சமீபத்தில் வந்த அங்காடித் தெரு படம் குறித்து பதிவுலகம் முழுவதும் நிறைய பதிவுகள்.. அவைகளை எல்லாம் படித்து விட்டு படம் பார்த்த போது வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.... சமூக அவலங்களை எடுக்கப்பதாக.. அதுவும் மூணு வருடமாம்... சொல்லி ஒரே சோகமயம்... முதன் முறையாக சாரு நிவேதிதாவின் இந்த விமர்சனத்துடன் ஒத்துப் போகின்றது எனது எண்ணங்கள்..

இப்படத்தில் காட்டப்பட்டது தான் துன்பியலின் உச்சமாக இருக்கின்றது போன்ற எண்ணங்களையே பதிவுலகம் காட்டியது... இப்படத்தைப் பார்த்த பின் தான் தெரிந்தது.. இவர்கள் எல்லாம் ஒயிட் காலர் வேலையில் ஏசி கோச்களில் பயணம் செய்யும், சமூகத்தை சீர்தூக்கிப் பார்க்கும் பார்வையாளர்கள் என்று... இவர்கள் உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக துன்பத்திற்கு உள்ளாகும் அடிமட்டத்தைப் பற்றி செவி வழிச் செய்திகளை மட்டுமே கேட்டிருப்பது புலனாகின்றது.

இப்படம் பற்றி முதலாளித்துவ சிந்தனை கொண்ட... ஆனால் பதிவுகளில் அலட்டல் செய்யும் சில பதிவர்களின் பதிவுகளைப் படித்தப் போதே இந்த நெருடல் இருந்தது.. இன்னும் அப்படிப்பட்ட சில பதிவர்கள் எந்த பதிவும் எழுதாததும் சந்தேகத்தை மிகைப்படுத்தியது.

இப்படம் பார்க்கும் அடிமட்ட, அல்லது நடுத்தர மக்களின் மனத்தில் இந்த வியாபார விஷ ஜந்துக்கள் குறித்த நல்ல எண்ணமே உருவாகுமே தவிர வேறு எதும் உருவாகாது என்பது எனது எண்ணம்..

# கடையில் ஒழுங்கா இருக்க வேண்டியது தானே? எதுக்கு சீட்டு எல்லாம் பிடிச்சிக்கிட்டு?
# வேலைக்கு வந்த இடத்தில் எதுக்கு காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டிக்கிடக்கு
# அவ செத்ததுக்கு அண்ணாச்சி என்ன பண்ணுவார் ? நல்லவனா எனத் தெரியாமல் எதுக்கு இவ காதலிச்சா?
# சாப்பாட்டுக்கே வழி இல்லாம தானே அங்க போறாங்க... அண்ணாச்சி தான் நிறைய (?) சாப்பாடு போடுறாரே?
# பிரச்சினை என்றதும் அண்ணாச்சி ரெண்டு பேரையும் தான் வெளியே போகச் சொல்லிட்டாரே?
# படத்துக்கு சம்பந்தம் இல்லாம.. எதுக்கு அந்த உயரம் குறைந்த மனிதனை இகழனும்?
# கால் இழந்த பெண்ணை பெத்த அப்பனே விட்டுட்டு போறான்... அப்புறம் என்ன காதல் எழவு எல்லாம் வேண்டிக்கிடக்கு?

. ஜெ.மோவின் பங்களிப்பு மிக அருமை.. ஆனால் வசனங்களுக்காக மட்டும் படம் ஓட முடியுமென்றால் இந்தியில் நானே பட்டேகரின் படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடி இருக்க வேண்டும்.. ;-) பின்னணி இசை.. வேணாம்.. இதுக்கு மேல கேட்காதீங்கப்பு... :(


இந்த படத்தை ஒரு 15 நிமிட குறும்படமாக எடுத்து இருந்திருக்கலாம். அதுக்கு தான் கதை இருக்கு. இந்த காதலை எல்லாம் பல படங்களில் பார்த்து சீனை பார்வேர்ட் செய்யும் நிலையில் தான் இருக்கு...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இதைப் படிச்சிட்டு கோபம் வந்தா துபாய் பதிவுலக சிறப்பு பிரதிநிதி வில்பர் சறுக்கனராஜ் துபாய் வந்த வீடியோ பாருங்க