Friday, April 9, 2010

தமன்னாவோடு லுங்கியுடன் பிரியாணி


பையா படம் பார்த்தேன்... கார்த்தி நல்லா தான் நடித்து உள்ளார். இந்த படத்தின் நாயகி தமன்னா.. இவருக்காக தூத்துகுடியில் ரசிகர் மன்றம் அமைக்கப்பட்டு கட்அவுட்டுக்கு பாலாபிசேகம் எல்லாம் நடைபெற்று இருக்கின்றதாம்... சீக்கிரமே கோவில் கட்டுவாங்களான்னு தெரியல.. ;-)) தமன்னா நடித்து நான் பார்த்த முதல் படம் ஆனந்த தாண்டவம்.. குரு சுஜாதாவினுடைய பிரிவோம் சந்திப்போம் நாவலைப் படமாக்கி இருந்தார்கள்.. அப்படத்த்தில் பார்த்த போதே அந்த புள்ளை மீது ஒரு பரிதாபமான லுக் தான் வந்தது.. பையா பார்த்தும் ஏதும் மாற்றமில்லை.

வயாசியிடுச்சோ..;-)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

வளைகுடா நாடுகளில் ஒன்றான அமீரகத்தின் ஷார்ஜாவில் லுங்கி கட்டி வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ளதாம்.. அப்படி சென்றவரை போலிசார் கைது செய்தும் இருக்கிறார்களாம்.. கைலி\லுங்கி என்றாலே வட நாட்டவர்கள் முதல் கொண்டு ஒரு இளக்காரம் தான் இருக்கும்.. ஷார்ஜாவில் இருந்த போது நான் இருந்த இடத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ரோலா தமிழ் பள்ளிக்கு வெள்ளை லிங்கியோடு வரும் வழக்கம் இருந்தது....

மற்ற நாட்டவர்களின் ஆடைகளோடு ஒப்பிடும் போது லுங்கி ஒரு நல்ல ஆடையாகவே இருந்திருக்கின்றது... அது அந்த கலாச்சாரத்திற்கு எப்படி மாற்றமானதாக இருக்கும் என்று தெரியவில்லை... அரபுகள் அணியும் தோப் போன்ற அமைப்பில் தான் லுங்கியும் இருக்கின்றது..

அரை நிர்வாணமாகவும், தொடை தெரியும் சாட்ஸ்களுடன் திரியும் மேற்கத்திய கலாச்சாரவர்களின் ஆடைகளுடன் ஒப்பிடும் போது லுங்கி எவ்வளவோ பெஸ்ட்.

இது தொடர்பான டிபிசிடியின் பழைய சுட்டி ஒன்று.

கல்ஃப்நியூஸ் செய்தி.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பிரியாணி... ஊரில் இருக்கும் போது ருசித்துச் சாப்பிடுவது... வளைகுடா வந்த பிறகு ருசியான சாப்பாடு என்பது எட்டாக்கனியாத் தான் இருக்கும்... சில,பல ஹோட்டல்கள் இருந்தாலும் ஏனோ ஊரின் சமையல் ருசி வருவதே இல்லை... அதனால் சில சமயங்களில் நாமே களத்தில் இறங்கி விடுவது வழக்கம். அப்படித் தான் இரு வாரங்களுக்கு முன்பு களத்தில் இறங்கி வழக்கம் போல் சக பதிவர்களிடம் உதவி கேட்டால் எல்லாரும் பயந்து ஓடி விட்டார்கள்... எல்லாம் பிரியாணி என்ற பெயரில் புளியோதரை செய்து கொடுமை செய்பவர்கள் போல் இருக்கின்றது.. பாவம் தங்க மச்சான்கள்.. .;-)))

நேற்று நானே களத்தில் இறங்கி விட்டேன்... மட்டனை கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு போட்டு குக்கரில் ஏற்றி 8 விசில் வைத்து வேக வைத்துக் கொண்டேன். பின்னர் பட்டை, ஏலம், கிராம்பை சுட்ட எண்ணையில் போட்டு, அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு போட்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மசாலா, உப்பு எல்லாம் சேர்த்து பின்னர் வெறும் கறியை போட்டு, அதில் அரிசியைப் போல் ஒன்றரை மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பின்னர் அரிசியைப் போட்டு (அரிசியை முதலில் வேக வைக்கவில்லை) நன்றாக கிளறி தண்ணீர் வற்றியதும் தம் போட்டோம்.

20 நிமிடங்களுக்கு சிம்மில் வைத்து விட்டு அதற்குப் பிறகு கொஞ்சம் நேரம் கழித்து சாப்பிட்டோம். நல்லா தான் இருந்தது.. முதல் முயற்சி.. தம் போட்ட போட்டோ பாருங்க.. எம்புட்டு டெக்னிக் கைவசம் இருக்கு பாருங்க... ;-))இரவு பிரியாணி சாப்பிட்ட அனைவரும் இந்த பதிவு போடும் வரை நலமாகவே இருப்பதால் இனி அடிக்கடி பிரியாணி டெஸ்ட்டிங் செய்யலாம் என்று ஐடியா.

36 comments:

ஆயில்யன் said...

கடைசியில தம்மு போடறதுன்னா என்னாது?

படிக்கட்டி வைச்சிருக்கீங்க எதுக்கு அம்புட்டு வெயிட்டு ஆடு ஹாட்டு தாங்காம துள்ளி வெளியே வந்திடுமா?

இது போன்ற அனேக கொஸ்டீன்களுடன்
ஆயில்யன்

ஆயில்யன் said...

டைட்டில் எப்படி யோசிக்கிறீங்க?

தமன்னாவோடு லுங்கி என்று எப்படி ஜொள்ள தோன்றியது?


மீண்டும் இது போன்ற அனேக கொஸ்டீன்களுடன்
ஆயில்யன்

ஆயில்யன் said...

//அந்த புள்ளை மீது ஒரு பரிதாபமான லுக் தான் வந்தது//

ஏன்?

புதுகைத் தென்றல் said...

தம் பிரியாணி டெக்னிக் சூப்பர். கைவசம் இருக்கும் டெக்னிக்குகளை பதிவிட வேண்டுகிறேன்.(நாங்களும் தெரிஞ்சுகிட்டு அசத்தலாம்ல)

சுசி said...

தலைப்ப பாத்து பயந்துட்டேன்.

கடைசில பரிதாப லுக்தானா??

அடுத்த தடவை பிரியாணி செஞ்சுட்டு ஒரு பார்சல் அனுப்புங்க..

மங்களூர் சிவா said...

/

படிக்கட்டி வைச்சிருக்கீங்க எதுக்கு அம்புட்டு வெயிட்டு ஆடு ஹாட்டு தாங்காம துள்ளி வெளியே வந்திடுமா?
/

haa haa
:)))

Mrs.Menagasathia said...

/

படிக்கட்டி வைச்சிருக்கீங்க எதுக்கு அம்புட்டு வெயிட்டு ஆடு ஹாட்டு தாங்காம துள்ளி வெளியே வந்திடுமா?
/
ஹா ஹா...

நசரேயன் said...

தலைப்பை பார்த்து வந்தேன்...

விக்னேஷ்வரி said...

தலைப்புப் பார்த்து என்னவோன்னு நினைச்சுட்டேன். :)

கானா பிரபா said...

லுங்கின்னதும் சின்னப்பாண்டியை சொல்றீரோன்னு நினைச்சேன். அப்புறம் இந்த பிரியாணி மேட்டர் எல்லாம் எதுக்கு இந்த ரிஸ்கு? ஹைதைக்கு ஒரு பிளைட் பிடிச்சிடுக்கலாமே

தமிழ் பிரியன் said...

\\\கானா பிரபா said...

லுங்கின்னதும் சின்னப்பாண்டியை சொல்றீரோன்னு நினைச்சேன். அப்புறம் இந்த பிரியாணி மேட்டர் எல்லாம் எதுக்கு இந்த ரிஸ்கு? ஹைதைக்கு ஒரு பிளைட் பிடிச்சிடுக்கலாமே\\\

பாஸ்.. நாங்க ஒரு தடவை தான் ஏமாறுவோம்.. இப்படித் தான் ஆம்பூர் பிரியாணிக்காரம்மாவும் எல்லாரையும் ஏமாத்துறாங்க... ஆம்பூராவது பரவாயில்லை.. ஹைதைக்கு பிளைட் பிடிச்சி போய் ஏமாற முடியுமா?.. ;-))

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...
//அந்த புள்ளை மீது ஒரு பரிதாபமான லுக் தான் வந்தது//

ஏன்?
/

Repeatttttuuuuuu

கும்க்கி said...

:)))

நல்லா வைக்குறாய்ங்க தலைப்பு....

கும்க்கி said...

நல்லா ப்ராக்டீஸ் எடுத்துட்டு., வரவும்.

அடுத்த தடவை அமீரக ஸ்பெசல் பிரியாணி செய்து அசத்திடுவீங்களாம்..

மங்குனி அமைச்சர் said...

//முதல் முயற்சி.. தம் போட்ட போட்டோ பாருங்க.. எம்புட்டு டெக்னிக் கைவசம் இருக்கு பாருங்க... ;-))///


உங்க ஊர்லயெல்லாம் இப்படியா தம் போடுவிக , எங்க ஊர்லயெல்லாம் வேற மாதிரி (ஹி ஹி ஹி ....)

புதுகைத் தென்றல் said...

ஹைதைக்கு ஃப்ளைட் பிடிச்சு வாங்க. ஏமாத்த மாட்டேன். வூட்டுக்கு பக்கத்துல தான் பாரடைஸ். பிரியாணி, மிர்ச்சிகா சலன் என்ஜாயலமா. :)))

அஹமது இர்ஷாத் said...

//வயாசியிடுச்சோ..;-)//

இதென்ன கேள்வி.. அதானே உண்மை...

அன்புடன் அருணா said...

/முதல் முயற்சி.. தம் போட்ட போட்டோ பாருங்க.. எம்புட்டு டெக்னிக் கைவசம் இருக்கு பாருங்க... ;-))/
அச்சச்சோ இப்புடில்லாம் தம் கட்டணுமா????தெரியாதேப்பா! படத்தைப் பார்த்துச் சிரித்து முடியலை!

சின்ன அம்மிணி said...

தமன்னா நல்லா இருக்காங்க இந்த போட்டோல :)

Jaleela said...

ஹா ஹா இதென்னா சுண்ணாம்பு டப்பாவ தூக்கி மேலே வைத்து இருக்கீங்கள்.ஓ தம்மா....

நல்ல இருக்கு, நல்ல முயற்சி

சென்ஷி said...

:)

தம் போடுறதப் பத்தி என்கிட்ட கேட்டிருந்தா நான் சொல்லியிருப்பேனே மாப்ள...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படிக்கட்டி வைச்சிருக்கீங்க எதுக்கு அம்புட்டு வெயிட்டு ஆடு ஹாட்டு தாங்காம துள்ளி வெளியே வந்திடுமா?
//

அதானே..
\\ஆயில்யன் said...
டைட்டில் எப்படி யோசிக்கிறீங்க?

தமன்னாவோடு லுங்கி என்று எப்படி ஜொள்ள தோன்றியது?//
அதானே.. அதானே..
நல்லா கேட்டீங்க ஆயில்யன்..

:))

தமிழன்-கறுப்பி... said...

நான் ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்யா தமன்னாவுக்கு.

:))

நாஸியா said...

பிரியாணி டெக்னிக் சூப்பரா இருக்கே!!!

ஹுஸைனம்மா said...

/வயாசியிடுச்சோ..;-)//

உங்களுக்குத்தானே?

// நாஸியா said...
பிரியாணி டெக்னிக் சூப்பரா இருக்கே!!!//

ஒரு பிரியாணியே
பிரியாணியைப் பாராட்டுகிறதே
அடடே ஆச்சர்யக்குறி
;-)))))

ராமலக்ஷ்மி said...

தம் பிரியாணி டெக்னிக் ஜம்ஜம்:))!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Satya said...

தமன்னாவோடு லுங்கியுடன் பிரியாணி...டைட்டில் பார்த்ததும் என்ன விவகாரமான விஷயமோனு எட்டி பார்த்தேன்...ஹ ஹ ஹ !! விட்டத்த பார்த்து யோசிப்பிங்களோ !!! லுங்கி மேட்டர் சூப்பர்...US லே லுங்கியுடன் வளம் வர ஒரே ஆண்மகன் நாந்தே...

மின்னல் said...

//மற்ற நாட்டவர்களின் ஆடையை ஒப்பிடும்போது லுங்கி நல்ல ஆடைதான்//
சரி தான்.நம்ப சொன்னா யாருங்க கேக்கிறாங்க??ஒமனிலும் இதே நிலை தான்.

நானானி said...

//முதல் முயற்சி.. தம் போட்ட போட்டோ பாருங்க.. எம்புட்டு டெக்னிக் கைவசம் இருக்கு பாருங்க... ;-))///

நல்லவேளை....ஒரு தம் பிடிச்சு நீங்களே ஏறி உக்காரலை.
ஆமா...கறி வேக எட்டு விசில் எதுக்கு? கூழாயிருக்குமே?

நானானி said...

//வயாசியிடுச்சோ..;-)//

நிச்சயமா!!!!

தமிழ் பிரியன் said...

Test comment.
http://www.raymond.cc/blog/archives/2008/02/22/restrict-or-limit-internet-download-and-upload-transfer-speed/

நிஜமா நல்லவன் said...

என்ன தல...தம்மு படம் போட்டதோட பதிவு நகரவே மாட்டிங்குது....பதிவு போடலாம்னு வந்து ப்ளாக் ஒப்பன் பண்ணினதும் அப்படியே கனவு உலகத்துக்கு போய்டுறீங்க போல...சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க :))

பாச மலர் / Paasa Malar said...

silver foil கொண்டு நன்றாக மூடி அதன் மேல் வேறு மூடி வைத்து மேலே சுடுதண்ணீர் பாத்திரத்தில் வைத்தும் தம் வைக்கலாம்...நம்ம ஊர் தம்மே வேறே..இங்கே இப்படித்தானே
செய்ய வேண்டியுள்ளது..

Priya said...

தம் பிரியாணி... nice!

எப்படிங்க இப்படி எல்லாம் தலைப்பு கண்டு பிடிக்கிறிங்க?!!!!

LinkWithin

Related Posts with Thumbnails