சமீபத்தில் வந்த அங்காடித் தெரு படம் குறித்து பதிவுலகம் முழுவதும் நிறைய பதிவுகள்.. அவைகளை எல்லாம் படித்து விட்டு படம் பார்த்த போது வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.... சமூக அவலங்களை எடுக்கப்பதாக.. அதுவும் மூணு வருடமாம்... சொல்லி ஒரே சோகமயம்... முதன் முறையாக சாரு நிவேதிதாவின் இந்த விமர்சனத்துடன் ஒத்துப் போகின்றது எனது எண்ணங்கள்..
இப்படத்தில் காட்டப்பட்டது தான் துன்பியலின் உச்சமாக இருக்கின்றது போன்ற எண்ணங்களையே பதிவுலகம் காட்டியது... இப்படத்தைப் பார்த்த பின் தான் தெரிந்தது.. இவர்கள் எல்லாம் ஒயிட் காலர் வேலையில் ஏசி கோச்களில் பயணம் செய்யும், சமூகத்தை சீர்தூக்கிப் பார்க்கும் பார்வையாளர்கள் என்று... இவர்கள் உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக துன்பத்திற்கு உள்ளாகும் அடிமட்டத்தைப் பற்றி செவி வழிச் செய்திகளை மட்டுமே கேட்டிருப்பது புலனாகின்றது.
இப்படம் பற்றி முதலாளித்துவ சிந்தனை கொண்ட... ஆனால் பதிவுகளில் அலட்டல் செய்யும் சில பதிவர்களின் பதிவுகளைப் படித்தப் போதே இந்த நெருடல் இருந்தது.. இன்னும் அப்படிப்பட்ட சில பதிவர்கள் எந்த பதிவும் எழுதாததும் சந்தேகத்தை மிகைப்படுத்தியது.
இப்படம் பார்க்கும் அடிமட்ட, அல்லது நடுத்தர மக்களின் மனத்தில் இந்த வியாபார விஷ ஜந்துக்கள் குறித்த நல்ல எண்ணமே உருவாகுமே தவிர வேறு எதும் உருவாகாது என்பது எனது எண்ணம்..
# கடையில் ஒழுங்கா இருக்க வேண்டியது தானே? எதுக்கு சீட்டு எல்லாம் பிடிச்சிக்கிட்டு?
# வேலைக்கு வந்த இடத்தில் எதுக்கு காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டிக்கிடக்கு
# அவ செத்ததுக்கு அண்ணாச்சி என்ன பண்ணுவார் ? நல்லவனா எனத் தெரியாமல் எதுக்கு இவ காதலிச்சா?
# சாப்பாட்டுக்கே வழி இல்லாம தானே அங்க போறாங்க... அண்ணாச்சி தான் நிறைய (?) சாப்பாடு போடுறாரே?
# பிரச்சினை என்றதும் அண்ணாச்சி ரெண்டு பேரையும் தான் வெளியே போகச் சொல்லிட்டாரே?
# படத்துக்கு சம்பந்தம் இல்லாம.. எதுக்கு அந்த உயரம் குறைந்த மனிதனை இகழனும்?
# கால் இழந்த பெண்ணை பெத்த அப்பனே விட்டுட்டு போறான்... அப்புறம் என்ன காதல் எழவு எல்லாம் வேண்டிக்கிடக்கு?
. ஜெ.மோவின் பங்களிப்பு மிக அருமை.. ஆனால் வசனங்களுக்காக மட்டும் படம் ஓட முடியுமென்றால் இந்தியில் நானே பட்டேகரின் படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடி இருக்க வேண்டும்.. ;-) பின்னணி இசை.. வேணாம்.. இதுக்கு மேல கேட்காதீங்கப்பு... :(
இந்த படத்தை ஒரு 15 நிமிட குறும்படமாக எடுத்து இருந்திருக்கலாம். அதுக்கு தான் கதை இருக்கு. இந்த காதலை எல்லாம் பல படங்களில் பார்த்து சீனை பார்வேர்ட் செய்யும் நிலையில் தான் இருக்கு...
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இதைப் படிச்சிட்டு கோபம் வந்தா துபாய் பதிவுலக சிறப்பு பிரதிநிதி வில்பர் சறுக்கனராஜ் துபாய் வந்த வீடியோ பாருங்க
18 comments:
அருமை வில்பர் தொடர்ந்து கலக்குங்கள்
வில்பர் பேரவை
சாரு எப்போது வேண்டுமானாலும் பதிவை காலி செய்து தூக்கலாம்... அல்லது படத்தைக் குறித்து ஆஹோ,ஓஹோவென எழுதலாம் என்பதால் இந்த பதிவு வெளியானதற்கு பிறகு வரும் அவர் எழுதும் எந்த கருத்துக்கும் கொம்பெனியோ, சங்கமோ, குழுமமோ பொறுப்பல்ல... பொறுப்பல்ல... பொறுப்பல்ல...
ஒளிப்பதிவு பதிவினை தவிர்த்து மற்றைய விடயங்கள் தேவையற்ற அலுப்பினையே பார்வையாளனுக்கு/வாசிப்பாளனுக்கு இயல்பாக தந்து செல்கிறது !
தொடர்ந்து ஒளிப்பதிவுபதிவுகளை இட்டுச்செல்லவேண்டுமாய் அன்புடனும் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்
//இந்த பதிவு வெளியானதற்கு பிறகு வரும் அவர் எழுதும் எந்த கருத்துக்கும் கொம்பெனியோ, சங்கமோ, குழுமமோ பொறுப்பல்ல... பொறுப்பல்ல... பொறுப்பல்ல...//
சாமர்த்தியக்காரனுக்கு புத்தி மட்டு :) [தவறாக அனுமானித்துகொண்டால் கம்பெனி பொறுப்பேற்காது]
The music in the video post is irritating, Can I have that video without that music. I forced to stop the video after 2.32 minutes.
// ராம்ஜி_யாஹூ said...
The music in the video post is irritating, Can I have that video without that music. I forced to stop the video after 2.32 minutes.//
அப்ப அங்காடித்தெரு பார்க்க உங்களுக்கு எல்லா திறமையும் இருக்குதுன்னு பதிவோட மையக்கருத்து சொல்லுது.
//இப்படம் பற்றி முதலாளித்துவ சிந்தனை கொண்ட... ஆனால் பதிவுகளில் அலட்டல் செய்யும் சில பதிவர்களின் பதிவுகளைப் படித்தப் போதே இந்த நெருடல் இருந்தது.. //
யாரு மாப்ள அது...???
//தமிழ் பிரியன் said...
சாரு எப்போது வேண்டுமானாலும் பதிவை காலி செய்து தூக்கலாம்... அல்லது படத்தைக் குறித்து ஆஹோ,ஓஹோவென எழுதலாம் என்பதால் இந்த பதிவு வெளியானதற்கு பிறகு வரும் அவர் எழுதும் எந்த கருத்துக்கும் கொம்பெனியோ, சங்கமோ, குழுமமோ பொறுப்பல்ல... பொறுப்பல்ல... பொறுப்பல்ல...//
வாவ்! ரியல்லி ஐ லைக் இட் மேன்.. :)
# கடையில் ஒழுங்கா இருக்க வேண்டியது தானே? எதுக்கு சீட்டு எல்லாம் பிடிச்சிக்கிட்டு?
ஜின்னா, நல்ல அரசாங்க வேலையில் இருப்பவர்கள்கூட அலுவலகத்திலேயே சீட்டுப் பிடிப்பது சகஜம். அது ஒரு கூடுதல் வருவாய். இயலாத தந்தை, பூக்காத தங்கை இருவரையும் காப்பாற்ற கூடுதல் வருவாய் உதவுமே என்ற எண்னம்தான்.
# வேலைக்கு வந்த இடத்தில் எதுக்கு காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டிக்கிடக்கு
காதல் என்பது கணக்குப் பார்த்து வருவதல்ல. மிகவும் நொந்திருக்கும் நேரத்தில் ஆறுதலாகப் பேசினால் வரும் அனுதாபம் காதலாக மாறுதல் இயல்பே. உண்மையில் காதலிப்பவர்களைப் பாருங்கள் உடல் பொருத்தத்தை விட மனப் பொருத்தமே இருக்கும்.
# அவ செத்ததுக்கு அண்ணாச்சி என்ன பண்ணுவார் ? நல்லவனா எனத் தெரியாமல் எதுக்கு இவ காதலிச்சா?
அவ செத்ததுக்கும் அண்ணாச்சிக்கும் சம்பந்தம் இல்லை. ஆனா காதல் ஏதோ தேசியத் துரோகம் மாதிரி அவர் அதை விசாரித்ததும் நடந்து கொண்டதும்தான். எத்தனை அலுவலகத்தில் பார்க்கிறோம்? அங்கேயே காதல் செய்து கல்யாணமும் செய்து வாழ்கிறவர்களை?
# சாப்பாட்டுக்கே வழி இல்லாம தானே அங்க போறாங்க... அண்ணாச்சி தான் நிறைய (?) சாப்பாடு போடுறாரே?
என்ன ஜின்னா இது உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. அப்ப ஜெயில்லையும் சாப்பாடுதானே போடுகிறார்கள். அதுவும் இப்ப எல்லாம் சிக்கனே போடுகிறார்களாம். இவ்வளவு தட்டையாகவா?
# பிரச்சினை என்றதும் அண்ணாச்சி ரெண்டு பேரையும் தான் வெளியே போகச் சொல்லிட்டாரே?
இல்லை.அவனை காவல் நிலைத்தில் அடி பிண்ணுகிறார்கள் அவளை குடோனில் அடைத்து வைத்திருக்கிறார்கள். மீண்டும் பாருங்கள்.
# படத்துக்கு சம்பந்தம் இல்லாம.. எதுக்கு அந்த உயரம் குறைந்த மனிதனை இகழனும்?
இது என்னன்னு எனக்கு விளங்கலை.
# கால் இழந்த பெண்ணை பெத்த அப்பனே விட்டுட்டு போறான்... அப்புறம் என்ன காதல் எழவு எல்லாம் வேண்டிக்கிடக்கு?
அப்ப அவளோட முடிவு அனாதை இல்லம்தானா? ஏன் கதாநாயகன் காப்பாற்றுவதுதானே முறை? உங்கள் கேள்வியிலிருந்து எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஆள் நன்றாக இருந்தால் காதலிக்கலாம் உடல் குறைபாடு வந்தால் கை விட்டுவிடலாம். அப்படி என்றால் அது காதல்லல்ல. கயவாளித்தனம்.
மேலும் அப்பாவை அத்தனை நாட்கள் அவள்தான் போஷித்து வந்திருக்கிறாள். இப்பொழுது முடியாத நிலையில் தான் ஒரு பாரமாக இருக்க வேண்டாம் எனத்தான் விலகுகிறார்.
தியேட்டரில் பார்த்தீர்களா? டவுன்லோடா?
I have seen the film in net (1st 2 files) after that I cant watch.
it is total exaggeration, since I know about udankudi, aarmuganeri, Tiruchedur area, adn also I know about Ranganathan st, saravan stores.
I really go with you, This film is not that great. Its more or less like aayirathil oruvan film, a fantacy movie.
naan ethukkunga kovapadanum, naan ethukkunga antha vediova paakanum.. neenga sonna ellam sarithaan..
//துபாய் பதிவுலக சிறப்பு பிரதிநிதி வில்பர் சறுக்கனராஜ்//
அவரு எப்பங்க சறுக்குனாரு?
அதுவும் சறுக்குனவரை, துபாய் பதிவுலக சிறப்பு பிரதிநிதின்னு சொல்றதப் பாத்தா, பலமான உள்தாக்குதலாத் தெரியுதே?
படத்தைப்பற்றிய உங்கள் கருத்து என்னவென்றே ஒன்றும் புரியவில்லை. ஹூம்.!
(அப்புறம் அந்தாளு சீரியஸா பண்றானா? காமெடி பண்றானா அதுவும் ஒன்னியும் புரியவில்லை. :-)
ஹிஹி.. அந்த வில்லன் அண்ணாச்சிய அறிமுகப்படுத்தும்போது என்ன சொல்லுவான்: "உடன் குடி காரம்லே உசாரா இரு"... எங்க மாப்பி ஊரு அது ;)
அப்புறம் திசையன்விளை எங்க கம்மா (பாட்டி) ஊருக்கு பக்கத்து ஊரு.. அது தான் டவுனே...மருந்து வாங்கனும்டா கூட அங்கத்தான் போவனும்..
எனக்கு படத்த பார்க்கும்போது ஃபைனல் டெஸ்டினேஷன் பார்த்த மாதிரி தான் இருந்துச்சு.. யார் எப்ப, எப்படி மண்டைய போடுவாங்கன்டே தெரியல.. அந்த புள்ளை அண்ணன் வேலை செய்யும் கடையோட களப்பைய கேட்கும்போதும் அதுக்கு எப்படி அடிபட போகுதோன்னு திகிலோட தான் நானும் பார்த்தேன்..
மத்தபடி எனக்கு படம் புடிச்சு தான் இருந்துச்சு.. அவங்கவங்க கஷ்டப்பட்டாதான் அவங்கவங்களுக்கு காசு.. எங்க அப்பா (தாத்தா) கடையிலயும் ஊரு பக்கத்துல இருந்து பசங்க வந்து வேலை செஞ்சாங்க.. அவங்களும் ஞாயித்துக்கிழமை ஒரு நாள் தவிர்த்து எல்லா நாளும் மாடா உழைக்கனும்.. வரும்போது கன்னங்கரேல்னு தான் வருவாங்க.. இரும்பு பட்டரை.. அப்புறம் வீட்டுக்கு வந்தும் ஒரு சமயம் வீட்டு வேலை செய்ய வேண்டி வரும்.. என்ன, அல்லாஹுவுனால நாங்க சாப்பிடும் அதே சாப்பாடு தான் அவங்களுக்கும், நம்ம வீட்டுல ஒருத்தவங்க மாதிரி தான் இருப்பாங்க.. அது ஒண்ணு தான் ஆறுதல்.. பெருநாளைக்குக்கூட ஊருக்கு போவ மாட்டாங்க..
பலர் உயர்த்திச் சொல்லும் அளவிற்கு டெக்னிக்கலாகவும்,ஸ்கிரிப்டிலும் மிஸ்டேக் இல்லாத படமும் அல்ல. அதே நேரத்தில் நீங்கள் சொல்லும் அளவிற்கு மோசமும் இல்லைண்ணே.அந்தப் படத்தில் ஒரே ரூம்ல நெருக்கிக்கிட்டு அம்புட்டுப்பேரும் படுத்திருப்பாங்க. அவர்கள் அத்தனை பேருக்கும் ஒன்றிரண்டு குளியல்,கழிவறைகள்தான் இருக்கும்.இந்தக் கொடுமையை நான் கண்ணால் ரங்கநாதன் தெரு தொழிலாளர்கள் அறையிலும் பார்த்திருக்கிறேன்.துபாய் ஈடிஏ லேபர் கேம்பிலும் பார்த்திருக்கின்றேன். இன்னும் நான் கண்ட எத்தனையோ உண்மைகளை இந்தப் படத்தில் கண்டேன்.
நல்லா கேட்டீங்க.. ஆயிரம் பொண்ணு பசங்க வேலை பாக்கற இடத்தில ஏதாவது தப்பு தண்டா நடந்துச்சுன்னா நாளைக்கு யார குத்தும் சொல்லுவாங்க.. அண்ணாச்சியத்தான.. இவனுங்க எவளையாவது ____ட்டு வயித்த ரொப்பிட்டு போயிருவானுங்க.. அதை கண்டிச்சா காதல் வெங்காயம்னு பேசுவானுங்க..
சோகப்படம்னுதான் இன்னும் அதப்பாக்க மனசு வரலை
நான் இன்னமும் பார்க்கல தமிழ் பிரியன்..
வில்பர் வீடியோ பார்த்தேன்..
ஏன் இந்த கொலைவெறி??
Post a Comment