ராவணன் - ரொம்ப எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம்... கதைக்காக மணிரத்னம் ரொம்ப மெனக்கெடவில்லை... ராமாயணத்தின் கதை தான்.... ராமன் (?) = பிருத்விராஜ், ராவணன்(?) = விக்ரம், சீதை(?) = ஐஸ்வர்யா, அனுமார்(?) = கார்த்திக், இப்படியும் எடுத்துக்கலாம்.
காவல்துறை உயர் அதிகாரியான பிருத்விராஜின் மனைவியான ஐஸ்வர்யாராயை விக்ரம் கடத்துவதுடன் படம் தொடங்குகின்றது.. அதில் நனைய ஆரம்பித்த ஐஸ் அதற்கு அடுத்து படம் முழுவதும் நீரில் நனைந்து கொண்டே இருக்கின்றார்... மணிரத்னத்தின் இருட்டுக்குப் பதில் மழை இந்த படத்தில்.
ஏன் ஐஸ்வர்யாவை விக்ரம் கடத்த வேண்டும்.... அதே ராமாயணக் கதைப் படி தங்கை(சூர்ப்பனகை = பிரியாமணி)க்கு ஏற்ப்பட்ட களங்கத்துக்கு பழிவாங்க... ஐஸைக் கடத்திய விக்ரமுக்கு ஐஸ் மீது ஒரு ஈர்ப்பு உருவாக.. கடைசியில் ஐஸை விடுவிக்கிறார் விக்ரம்.. விடுதலையான ஐஸின் நடத்தைக் குறித்து பிருத்விராஜ் சந்தேகம் எழுப்ப ஐஸ் கணவனைப் பிரிந்து விக்ரமைத் தேடி வருகின்றார்.... இறுதியில் என்ன நடந்தது என்பதே டிவிஸ்ட்.
படத்தின் கதை ஓட்டம் குறித்து முன்பே அனுமானிக்க முடிந்து இருப்பதால் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் படம் ஆரம்பிக்கின்றது.. ஜெட் வேகம்.. படம் போவதே தெரியவில்லை. நல்ல இயக்கம். ( ஒருவேளை எங்க கல்ஃப் சினிமா ஆப்ரேட்டர் ‘கை’ தேர்ந்தவரோ? படம் 2 மணி நேரத்தில் முடிந்ததால் டவுட்டு.. ;-) )..
படம் முழுவதும் காட்டில் தான்.. அழகான இடங்கள்.. நல்ல ஒளிப்பதிவு. கண்ணுக்குள் குளுமை நிற்கின்றது.. காட்சிகளில் வன்முறைக் காட்சிகள் மிகக் குறைவே.. நீர்வீழ்ச்சி காட்சிகள், பாலத்தில் கடைசி சண்டைக் காட்சி, மலை உச்சி பிரமிக்க வைக்கின்றது.
விக்ரம்.. இது போல் நரம்பு புடைக்க கத்தி நடிப்பதை பல படங்களில் பார்த்தாச்சு.. அவரே சொன்னது போல் பல படங்களில் அவர் நடித்ததின் கலவை.. ஆனாலும் நிறைய உழைத்து இருக்கின்றார்.
பிருத்விராஜ்.. போலிஸ் அதிகாரி... குழந்தைத் தனமான முகத்தில் இதுவரைப் பார்த்து வந்த நமக்கு இந்த கடுமை புதுசு.. எல்லாரும் இவரை இந்த வேடத்தில் ஏற்றுக் கொள்வார்களா எனத் தெரியவில்லை.
கார்த்திக் காமெடியாக ஆரம்பித்தாலும் நல்லவேலையாக காமெடி ரோல் செய்யவில்லை. சிம்பிளாக கலக்குகின்றார். பிரியாமணி அதே கிராமத்து கில்லி... வழக்கம் போல் வண்புணர்வு செய்யப்படுகின்றார்.
பிரபு குண்டாக வருகின்றார்.. ஆரம்ப பில்டப்புகள் மட்டுமே.. ரஞ்சிதா சீனுக்கு வந்ததுமே ஒரே சத்தம் தியேட்டரில்.. அதுக்கு அப்புறம் வேலையே இல்லை... வையாபுரி பெண் வேடத்தில்... ம்ஹூம்.
சொல்ல வேண்டியவர்கள் இன்னும் இருவர்.. ஒன்று ஐஸ்வர்யா... இத்தனை வயசாகி(?)யும் இன்னும் மிரட்டுகின்றார்.. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போள் இருக்கின்றது.. இரண்டே இரண்டு காட்சிகள் தவிர்த்து மற்ற காட்சிகளில் மேக்கப் இல்லாதது போல் தோற்றம்... காட்டில் கஷ்டப்பட்டும் இடங்களில் நன்றாக நடித்துள்ளார்... இப்போது தான் முதன் முறைய தியேட்டரில் ஐஸைப் பார்ப்பதால் வந்த பிரமிப்பாக இருக்கலாம்.. ஐஸ்வர்யாவிற்கு முன்னால் விக்ரம், பிருத்விராஜ் இருவருக்குமே கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பயாலஜி எதும் வேலை செய்யவில்லை.. ஐஸ் இஸ் கிரேட்.
இரண்டாவது ஏஆர் ரஹ்மான்... இப்போதெல்லாம் நிறைய மலையாள படங்கள் பார்க்கும் வழக்கம் ஆகி விட்டதால், தமிழ் பட அதிரடி பிண்ணனி இசை பயமாகி விட்டது. ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு படத்தை பார்க்கத் துவங்கினேன். சில நிமிடங்களில் அதை நீக்கி விட்டேன்.. இதமான பிண்ணனி இசை.. எந்த கர்ண் கொடூரமும் இல்லை.. விக்ரமின் சத்தம் தவிர
உசிரே பாடல் என்னை ரொம்ப கவர்ந்தது... ஆனால் அழகான அந்த பாடல் வைக்கப்பட்டுள்ள இடம் மட்டும் கொஞ்சம் உறுத்தியது. மற்ற பாடல்களும் ரசிக்கலாம்.. கெடா கறி பாட்டு கலக்கல். எந்த பாட்டுக்கும் யாரும் எழுந்து வெளியே செல்லவில்லை.
விக்ரம் ஏமாற்றினாலும் இந்த படத்தின் இந்தி பதிப்பில் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார்... பிருத்வி வேடத்தில் விக்ரம்... அதில் எப்படி இருக்கின்றது எனக் காண ஆவல்.. விக்ரமை அபிஷேக் முந்தி இருப்பார் என்று நினைக்கின்றேன்.
டிஸ்கி : 1998 க்குப் பிறகு திரையரங்கிற்கு சென்று பார்த்த படம் என்ற பெருமை இந்த படம் தட்டிச் செல்கின்றது.. வரலாறு முக்கியம் அமைச்சரே... கூட வந்தவர் டிவிட்டர்களின் ஆசான் ஆயில்யன் அவர்கள்.
பின் டிஸ்கி : ராம்ஜி யாஹூ என்ற பின்னூட்ட பிதாமகர் மட்டும் இந்த பதிவு குறித்து இங்கு கமெண்ட் போட்டால் அவருக்கு நோபல் பரிசு வாங்கித் தர ஏற்பாடு செய்யப்படும். அதோடு என்னோடு கெட்டிச் சட்னியும், செட் தோசையும் சாப்பிடும் அரும் பெரும் பாக்கியமும் வழங்கப்படும்.
22 comments:
பாஸ் மொத்தமா சொல்லணும்ன்னா
ஐஸ் ஐஸ் ஐஸ்
படத்தை பார்த்துக்கோ தான் :)))))
கண்ணுக்குள்ளும் மனசுக்குள்ளும் தாறுமாறாக தாண்டாவம் ஆடிக்கொண்டிருக்கும் ஐஸின் பெருமைகளை இன்னும் நிறைய பதிவர்கள் போற்றிடும் பதிவுகளை எதிர்பார்த்து....!
ஐஸ் - பிரியனும் பின்னே நானும் :))
12 வருட தவமா !!!
தமிழில் படம் தேறுமா??
\\\ நட்புடன் ஜமால் said...
12 வருட தவமா !!!\\
தவம் என்பதெல்லாம் இல்லை... வெளிநாட்டிலேயே உழன்றதால் செல்லும் நினைப்பே வரவில்லை. படங்கள் பலவற்றை நெட்டில், டிவியில் பார்க்கின்றோமே? இப்போது ஏனோ நேரம் இருந்தது அதனால் தான்.
\\\ gulf-tamilan said...
தமிழில் படம் தேறுமா??\\\
சுறா, பையா, சிங்கம் இத்யாதிகளுக்கு இப்படம் எவ்ளோ பெட்டர் பாஸ்.. உறுத்தால் நகர்கின்றது.
அப்படின்னா படம் பாக்கலாம்னு சொல்லுங்க!
ஐஸ் ஐஸ் அஈச் - புராணம் பாடியாச்சா - ஆயில்ஸ் வேற பிரியன் - பின்னே நான் அப்ப்டீன்றார். சரி சரி பாத்துடுவோம் - அவ்ளோ தானே
நல்வாழ்த்துகள் ஐஸ்பிரியன்
நட்புடன் சீனா
//1998 க்குப் பிறகு திரையரங்கிற்கு சென்று பார்த்த படம் என்ற பெருமை இந்த படம் தட்டிச் செல்கின்றது.. //
அதிலேயே படத்தின் மொத்த சிறப்பும் அடங்கி விட்டது! சரிதானா:)?
தமிழ் பிரியன் - உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க பின்னூட்டம் இட்டு உள்ளேன்.
ஆகையால் எனக்கு ஜோடி தோசையும் கட்டி சட்னியும் உண்டா. தோஹாவில் எந்த உணவகம் உள்ளது, ஆர்யாஸ் அல்லது அசோக் பவன், எனக்கு மறந்து விட்டது.
கார்த்திக் எப்பவுமே சிம்பிளாக கலக்கிற ஆள்தான், நல்ல நடிகன் திரும்பவும் திரைக்கு வந்தது நல்ல விசயம்.
ஐஸ் எப்பவுமே அழகுதான்.. :)
விமர்சனம் கிடக்குது..தலைப்பு வெச்சீங்க பாருங்க சூப்பருங்க...
Pass Pass.....
/( ஒருவேளை எங்க கல்ஃப் சினிமா ஆப்ரேட்டர் ‘கை’ தேர்ந்தவரோ? படம் 2 மணி நேரத்தில் முடிந்ததால் டவுட்டு.. ;-) )../
இருக்கும்...இருக்கும்...இங்க 2H17M
//
டிஸ்கி : 1998 க்குப் பிறகு திரையரங்கிற்கு சென்று பார்த்த படம் என்ற பெருமை இந்த படம் தட்டிச் செல்கின்றது.. வரலாறு முக்கியம் அமைச்சரே... கூட வந்தவர் டிவிட்டர்களின் ஆசான் ஆயில்யன் அவர்கள்.//
தியேட்டர்ல படம் பார்க்காம எம்புட்டு நல்லப்புள்ளையா இருந்திங்க.. அந்த ஆயிலு பயபுள்ளைதான் எல்லா நல்லவங்களையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்குது.
ஆயிலு கூட இனிமே கீப் டிஸ்டென்ஸ்.. கீப் ஆன் டிஸ்டென்ஸ்..
தியேடர்ல படம் பார்த்து 12 வருஷமாச்சா? நீங்க தமிழர்தானா தமிழ்?
(அப்புறம் என்ன திடீர்னு தியேடர்க்குப் போயிட்டீங்க? மழ கிழ பேஞ்சி உங்கூர்ல எண்ணெக் கிணறெல்லாம் வம்பாப்போயிடப்போகுது :-))
//அந்த ஆயிலு பயபுள்ளைதான் எல்லா நல்லவங்களையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்குது//
யாரு நானா? ஹய்யோ ஹய்யோ ! படம் முடிஞ்சு வெளியே வந்ததும் தாவி குதிச்சு ஓடிப்போயி கவுண்டர்ல நின்னு டிக்கெட் எடுத்த்க்கிட்டு அடுத்த ஆட்டம் பாக்க போறேன்னு ஒரே அடம் புடிச்சு இழுத்துட்டு வர நான் பட்ட கஷ்டம் எனக்கில்ல ஓய் தெரியும்!
////இப்போது தான் முதன் முறைய தியேட்டரில் ஐஸைப் பார்ப்பதால் வந்த பிரமிப்பாக இருக்கலாம்..//
:)
கம்பராமாயணத்துலே வரும் ராவணனின் வாழ்க்கை உண்மையிலேயே இப்புடிதானா?
திடீர்னு எதுக்காக ப்ரிதிவிராஜ் வந்து விக்ரமை சுடனும். ஒரு சின்ன ஃபிளாஸ்பேக் கொடுத்திருக்கலாம்..
//ஐஸூக்காகப் பார்க்கலாம்//
தெரிஞ்சதுதானே! படம் வருமுன்னே எல்லோரும் எடுத்த முடிவுதானே!
நாம் மணிரத்னத்துக்காக பார்க்கப் போறேன். சேரியா? அதான் பதிவை முழுதும் படிக்கலை. சா..ரியா!
பாத்துருவோம்
ஒரே...ஐஸ் மயம்.
அதுக்காகவே பார்க்கப்போறேன். அதனாலேயே பதிவைப் படிக்கலை.
மன்னிச்சுக்கோ..மகனே!!
Post a Comment