கேரள மாநிலம் குற்றீச்சலைச் சேர்ந்தவர் ஆசிரியை லலிதா. 1997 ல் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியை தொழில் செய்து வருகிறார். இவர் வேலை செய்யும் இடம் தான் விஷேசம். என்னவென்று கேட்கிறீர்களா? இவர் கல்வி கற்பித்துக் கொடுப்பது மலை வாழ் ஆதிவாசிகளுக்கு. இவர் வேலை செய்யும் இடத்திற்கு பேருந்து வசதி கூட கிடையாது. எனவே இவர் சுமார் 12 கி.மீ தூரம் நடந்து தனது பள்ளிக்கு செல்கிறார். இந்த மலை வாழ் மக்கள் முதல் முதலாக இந்த தலைமுறையில் தான் கல்வி கற்கின்றனர். இந்த ஆசிரியை பாராட்டப்பட வேண்டியவர் தானே?
3 comments:
இப்படிப்பட்ட நல்லாசிரியர்கள் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது. இவரைப் போல நல்ல டாக்டர்கள் யாரேனும் உள்ளனரா?
மலைவாழ் மக்களுக்கு மனமுவந்து மருத்துவம் செய்ய எந்த டாக்டர் முன் வருகிறார்?
//தமிழ்நெஞ்சம் said...
இப்படிப்பட்ட நல்லாசிரியர்கள் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது. இவரைப் போல நல்ல டாக்டர்கள் யாரேனும் உள்ளனரா?
மலைவாழ் மக்களுக்கு மனமுவந்து மருத்துவம் செய்ய எந்த டாக்டர் முன் வருகிறார்?//
வருகைக்கு நன்றி தமிழ் நெஞ்சம். எல்லாம் ஏக்கக் கனவாகவே முடிந்து விடுகின்றனவே?
நிஜமாகவே பாராட்டப்பட வேண்டியவர்தான்...
Post a Comment