Friday, March 7, 2008

அழையா விருந்தாளியாய் சில பாடல்கள்

கண்மணி டீச்சரின் தொடர் விளையாட்டுக்கு நம்மைக் கூப்பிடாவிட்டாலும் நமது பங்குக்கான பாடல்.
எங்களது ஊரில் சிறுமிகள் இரண்டு குழுவாக இணைந்து ஓடி விளையாடுவார். ஒரு அணியில் உள்ள ஒருவரை மற்றொரு அணியைச் சேர்ந்த சிறுமி தொட்டு ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். இரண்டு தரப்பையும் சேர்ந்த இரு சிறுமிகளைத் தேர்ந்தெப்பதற்க்கானப் பாட்டு தான் இது. ஒரு அணியில் அனைவருக்கும் பூக்களின் பெயர்களைக் கொண்டு பேர் இடப்படும். நடுவருக்கும் இது தெரியும். பின்னர் இரு அணியினரும் எதிரெதிரே நின்று கொண்டு தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு கோரசாகப் பாடுவார்கள்.
@ &
@ &
@ &
@ &
@ &


முதல் அணி : பூப்பறிக்க வருகிறோம்! பூப்பறிக்க வருகிறோம்!

இரண் அணி : எந்த மாதம் வருவீர்கள்! எந்த மாதம் வருவீர்கள்!

முதல் அணி : ஆடி மாதம் வருகிறோம்!ஆடி மாதம் வருகிறோம்!

இரண் அணி :எந்தப் பூவைப் பறிப்பீர்கள்!எந்தப் பூவைப் பறிப்பீர்கள்!

முதல் அணி : மல்லிகைப் பூவைப் பறிக்கிறோம்!
மல்லிகைப் பூவைப் பறிக்கிறோம்!


இரண் அணி : யாரை விட்டு அனுப்புவீர்கள்!யாரை விட்டு அனுப்புவீர்கள்!

முதல் அணி : அமுதாவை விட்டு அனுப்புகிறோம்!அமுதாவை விட்டு அனுப்புகிறோம்!

இதில் பூவின் பெயரும், சிறுமியின் பெயரும் மட்டும் மாறும்.

################################################

இது எனது மகனுக்கு மிகவும் பிடித்த பாடல். இதை காக்கா என ஆரம்பித்து @#$%%^&**%$###%%^^&&*(())__*^%$##$% ஏதேதோ சொல்லி வாவா என்று முடிக்கும் அழகே அழகு. :)

காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குருவி கொண்டைக்குப் பூ கொண்டு வா
கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா
கொக்கே கொக்கே குழந்தைக்கு தேன் கொண்டு வா

6 comments:

ஆயில்யன் said...

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பழைய ஞாபகங்களை ஞாபகப்படுத்தியது :)

நன்றி

கண்மணி/kanmani said...

எல்லோருக்குமாக பொது அழைப்பும் வேண்டுகோளும்வ் விடுத்தேன்.பாடல்களுக்கு நன்றி.அடுத்த தொகுப்பில் வரும்

Thamiz Priyan said...

ஆயில்யன், கண்மணி டீச்சர் வருகைக்கு நன்றி!

பாச மலர் / Paasa Malar said...

நல்ல பாட்டு..பூப்பறிக்க வருகிறோம் விளையாடிய ஞாபகம் வருகிறது..

நிஜமா நல்லவன் said...

பாட்டுக்கள் நல்லா இருக்கு. இரண்டு பாடல்களுமே ச்ச்ச்ச்சின்ன வயசுல கேட்டிருக்கேன்.

Divya said...

மலரும் நினைவுகளில் மூழ்கடித்தது உங்கள் பதிவு!!