Friday, May 30, 2008

SSLC தேர்வில் முதலிடம் பெற்றவர்களின் சிறப்பு பேட்டிகள்

தமிழைப் பாடமாக எடுத்து மாநிலத்தில் முதலிடம் பெற்றவர்களின் பேட்டிகள்



மெட்ரிக்குலேசன் முறையில் படித்து மாநிலத்தில் முதலிடம் பெற்றவர்களின் பேட்டிகள்

கல்விக்காக டாடாவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் சிறுமிகள்


கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.
என்று கூறினார் பொய்யாமொழிப் புலவர். அந்த கல்வியைப் பெறுவதற்கு வணிகமயமாகி விட்ட இன்றைய உலகத்தில் ஒவ்வொரு வரும் பலவிதமான இன்னல்களை சந்திக்க வேண்டி வருகின்றது. நன்றாக படிக்கக் கூடிய பலரும் வசதிக் குறைவின் காரணமாக படிப்பை விட வேண்டிய சூழ்நிலை நிலவுகின்றது. இன்னும் சில இடங்களில் வசதி இருந்தும் படிப்பில் போதிய கவனம் செலுத்தாமையால் படிப்பை இழக்க நேரிடுகின்றது. ஆனால் இது ஒரு வித்தியாசமான சம்பவம். தமிழக எல்லையில் கேரளாவில் மூணாறு என்ற அற்புதமான மலைப் பகுதியில் அமைந்துள்ளது மாட்டுப்பட்டி என்ற இடம். இது டாடா டீ கம்பெனியின் ஏகபோக உரிமையுள்ள இடம். (இது எப்படி டாடா குழுமத்தில் கைக்கு வந்தது என்பது ஒரு பெரிய ‘ஆதிக்க' கதை) இங்கு டாடா டீ எஸ்டேட்டினரால் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடம் நடத்தப்படுகின்றது.
இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் படித்தவர்கள் ரோஷ்னா. நான்காம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பிற்கு செல்ல வேண்டியவர். அதே போல் கிரீஷ்மா, ஜோசிபா அஜெய், அபிஷேக் சாமுவேல் ஆகியோரும் கடந்த கல்வி ஆண்டில் ஆரம்ப பள்ளியில் படித்து அடுத்த வகுப்பிற்கு செல்ல வேண்டியவர்கள். இவர்கள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகம் இந்த கல்வி ஆண்டில் இங்கு படிக்க அனுமதி கிடையாது என்று T.C ஐக் கிழித்து கொடுத்து விட்டனர். இவர்கள் அனைவரும் தத்தமது வகுப்பில் ஆண்டுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் அல்லர். ஒழுங்கீனமாக நடந்து கொண்டவர்களும் அல்லர்.
இவர்கள் செய்த பாவம் இவர்களது பெற்றோர்களுக்கு பிள்ளைகளாகப் பிறந்தது தான். ரோஷ்னாவின் தந்தை ஹென்றி ஜோசப் கடந்த 2005 ம் ஆண்டு வரை டாடா டீ நிறுவனத்தில் வேலை செய்து பணி நீக்கம் செய்யப்பட்டவர். அதே போல் கிரீஷ்மாவின் தந்தை கோபகுமாரும், ஜோசிபா அஜெய், அபிஷேக் சாமுவேல் ஆகியோரின் தந்தை ஹென்றிஜேசுதாஸூம் பல்வேறு காரணங்களுக்காக டாடா டீ நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள். இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் காரணம் காட்டி இவர்களது குழந்தைகளி கல்விக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது டாடா நிர்வாகம். இந்த பள்ளியில் டாடா நிறுவனத்தைத் தவிர்த்து ஏனையவர்களில் குழந்தைகளும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதை எதிர்த்து இக்குழந்தைகளில் பெற்றோர்கள் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் இக்குழந்தைகளை நீக்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லையாதலால் இவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆணை பிறப்பித்தது. ஆனால் டாடா நிர்வாகம் இதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்வதில்லை.இதனால் இக்குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி வாயிலில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த ‘டாடா' என்னும் யானைக்கு யார் மணி கட்டுவதோ?.............. :( :(

10ம் வகுப்பு தேர்வு முடிவு: பாளை. மாணவி முதலிடம்

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் பாளையங்கோட்டை மாணவி ராம் அம்பிகை மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு 496 பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்துள்ளார்.

ராம் அம்பிகை புனித இக்னேஷியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவியாவார்.

2வது இடத்தை 2 மாணவர்களும், 2 மாணவிகளும் ஆக மொத்தம் 4 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 494.

493 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தை மொத்தம் 8 பேர் பிடித்துள்ளனர்.

2ம் இடம் பெற்றவர்கள்:

எம். ஜோசப் ஸ்டாலின் - புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, வீரவநல்லூர்.
எஸ். ஜகீமா - சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை.
பி. மருதப்பாண்டியன் - டி ஹன்ஸ்ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.
எஸ். சுவேதா - புனித ரஃபேல்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாந்தோம் சென்னை.

3-ம் இடம் பிடித்தவர்கள்:

என்.ராமஸ்வாதிகா - புனித இக்னேஷியஸ் பள்ளி, பாளையங்கோட்டை.
ஜி.கே. உமாப்ரியா - சவுராஷ்டிரா பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மதுரை.
கே. இந்து - செயின்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம்.
எஸ். செல்வராஜ் - ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி, புலியூர், கரூர்.
ஜி. காயத்ரி - அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி.
எம். ரஃபியா பேகம் - அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாமரங்கோட்டை, பட்டுக்கோட்டை.எம். திருமால் - ஏ.கே.டி நினைவுப் உயர்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி.
வி. எம்லின் மெர்சி - செயின்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெற்ற எஸ்எஸ்எல்சி, மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை மொத்தம் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.

எஸ்எஸ்எல்சி தேர்வில் மொத்த தேர்ச்சி சதவீதம் 80.9 என்றும், இவர்களில் மாணவர்கள் 77.8 சதவீதம் என்றும், மாணவிகள் தேர்ச்சி 83.9 சதவீதம் என்றும் தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறினார்.

கணிதப் பாடத்தில் மொத்தம் 11,605 பேரும், அறிவியல் பாடத்தில் 1,591 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார். சமூக அறிவியல் பாடத்தில் மொத்தம் 272 பேர் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.

வழக்கம்போல் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தி : MSN

Friday, May 16, 2008

முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை - ஒரு ஆய்வு

கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து கல்வியிலேயும் பொருளாதாரத்திலும் பின் தங்கிவருகின்றது. இந்தியாவில் வாழும் அனைத்து பிற்பட்ட சமுகங்களை விட முஸ்லிம்சமுதாயம் பின் தங்கி உள்ளது. தலித் சமுதாயம் மற்றும் மழைவாழ் மக்களை விட முஸ்லிம்சமுதாயம் பின் தங்கியதிற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் கல்வியை பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, கல்வியை மறந்ததால் இந்த சமுகம் கடைசி நிலையில் உள்ளது. 2006-ஆம் ஆண்டு வெளியிட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லிம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள். 8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%, +2 வரை படித்தவர்கள் 7.8%, டிப்ளோமா வரை படித்தவர்கள்4.4%, பட்ட படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே, 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர், கிராமபுற முஸ்லிம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர், பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லிம்கள் தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை (2006 கணக்கு படி), கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.
இதுதான் முஸ்லிம்சமூகத்தின் தற்போதைய நிலை, இது தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லிம்சமுதாயம் மிகவும் பின் தங்கிவிடும். சில பெற்றோர்கள் உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக படிக்கும் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இதன் அபாயத்தை அவர்கள் உணர்வதில்லை, இன்றைக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இடத்தின் மதிப்பும் பலமடங்கு உயர்ந்துள்ளது, இதனால் வீட்டு வாடைகையும் உயர்ந்து வருகின்றது. எதிர்காலத்தில் நாம் சம்பாதிக்கும் 3 ஆயிரம், 5ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமற்றது இதனால் முஸ்லிம்கள் நிரந்தர நரகத்திற்கு அனுப்பும் வட்டியில் சிக்க நேரிடும், மேலும் பொருளாதார தேவையால் சமூக சீர்கேடுகள் அதிகரித்துவிடும்.
கல்வி முன்னேற்றம் என்பது வெறும் அறிவை வளர்க்கும் முயற்சி அல்ல, கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும், அரசு நிர்வாகத்தில் நுழைந்து நமது சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும், சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும்
பெரும்பாலான முஸ்லிம்இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர், இந்தியாவில் வேலை இல்லை என்று இவர்களாக முடிவு செய்து கொண்டு வெளிநாடு சென்று மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகளை பிரிந்து அயல் நாட்டில் கஷ்டப்பட்டு, குடும்பம் என்ற கட்டமைப்பு இல்லாமல் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், கணவன் இருந்தும் இல்லாத நிலையில் வாழும் மனைவி, தந்தை இருந்தும் இல்லாத நிலையில் வளரும் பிள்ளை, இது முஸ்லிம்சமுதாயத்தில் பல்வேறு சமூக சீர்கேடுகளை உருவாக்குகிறது.
ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வளர்த்தால்தான் பிள்ளைகள் அறிவுள்ள, ஆற்றல் உள்ள, ஒழுக்கமுள்ள மார்க்க அறிவுள்ளவர்களாக ஆவார்கள். அந்த பிள்ளைகள் தான் குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றக் கூடியவர்களாக ஆவார்கள்.
குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் முஸ்லிம்இளைஞர்கள் வேலைக்கு செல்வதால் இந்த சமூகம் முதுகெழும்பில்லாத பாதுகாப்பற்ற சமூகமாக மாற வாய்ப்புள்ளது. சமுதாயத்திற்கு ஒரு ஆபத்து, கலவரம் என்று வந்தால் பாதுகாக்க ஆண்கள் அற்ற அவலநிலை உருவாகின்றது, இந்த அபாயத்தை முஸ்லிம்இளைஞர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.
இந்தியாவில் அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன, இந்தியா என்பது நமது நாடு. இந்திய விடுதலைக்காக பெரிதும் பாடுபட்டது முஸ்லிம்சமுதாயம். இங்குள்ள அனைத்து வளங்களும் நமக்கும் சொந்தமானவை, இதை பெறுவதற்கு முறையான கல்வி அவசியம்.
மருத்துவ துறையில் முஸ்லிம்கள் 4.4% தான் உள்ளனர். சங்பரிவாரங்களின் திட்டங்களில் ஒன்று முஸ்லிம்கர்பிணி பெண்களுக்கு தவறான மருந்தை கொடுத்து எதிர்கால முஸ்லிம்சமுதாயத்தை ஊனமுற்ற சமுதாயமாக மாற்ற வேண்டும். மேலும் முஸ்லிம்களுக்கு தவறான மாத்திரைகளை கொடுத்து உடல் ரீதியாக அவர்களை பலவீனபடுத்த வேண்டும் என்று ஒரு இரகசிய சுற்றறிக்கையை இந்தியா முழுவதும் அனுப்பியது . இது சில இடங்களில் நடந்து கொண்டும் இருக்கின்றது. அதிகமான முஸ்லிம்மருத்துவர்களை உருவாக்குவது மிகவும் அவசியமானது.
எனவே முஸ்லிம்களே! விழித்து கொள்ளுங்கள்! இந்த அவலநிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் அனைத்து துறைகளிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு இந்தியாவில் தனிமைபடுத்தப்பட்ட சமூகமாவார்கள். படிப்பறிவு இல்லாமல் ஆரோக்கியம் இல்லாமல், சமூககட்டமைப்பு இல்லாமல், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இந்த சமூகம் வேட்டையாடப்படும் அபாயம் உள்ளது. எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்தி நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
யார் காரணம்?
இந்த அவலநிலைக்கு முஸ்−களை இழுத்து சென்றது எது? யார் இதற்கு காரணம்?
முஸ்லீம் அரசியல் வாதிகள்:-
முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம்அரசியல் வாதிகள் இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கரை இல்லாமல் தங்களுடைய சுய லாபத்திற்காக இந்த சமூகத்தை அரசியல் வாதிகளிடம் அடகுவைத்தனர் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி, இடஓதுகீடு போன்ற சமூக முன்னேற்ற பணிகளில் ஈடுபடாமல் பெரிய அரசியல் கட்சிகளுக்கு புகழ்பாடி தங்களை மட்டும் வளபடுத்திக் கொண்டனர். கடந்த 60 ஆண்டுகளாக இந்த முஸ்லிம்சமுதாயம் கீழ் நிலைக்கு செல்வதை பார்த்துக் கொண்டிருந்து சிறிதளவும் இதன் வளர்ச்சிகாக சிந்திக்கவில்லை. இன்னும் இவர்கள் இதே நிலையில்தான் நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் :-
முஸ்லிம்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக முஸ்லிம்களின் நிதி உதவியால் நடத்தப்படும் மதராஸாகளில் இலவசமாக பயின்ற இந்த ஆலிம்கள் இஸ்லாமிய வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை, சமூக வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை ஜும்ஆ மேடைகளில் அவ்லியாக்களை பற்றியும், தர்ஹா, மவ்லுதுகளை பற்றியும் பேசி தங்களுடைய வயிறுகளை வளர்த்துக்கொண்டார்கள். இன்றளவும் ஆங்கிலம் படிக்க கூடாது, அது ஹராம் என்று வாதிடும் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் உள்ள சில கோமாளிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய முழுநேரத்தையும், ஷிர்க், பித்அத் கொள்கையை பரப்புவதற்காக செலவழித்து, முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் கேட்பதை தடுத்து நிறுத்தி இறந்தவர்களிடம் கேட்கசெய்து அல்லாஹ்விடம் இருந்து கிடைக்கும் ரஹ்மத்திற்கு பதிலாக சாபத்தை பெற உதவினர்.
சமுகத்தில் படித்த கல்வியாளர்கள்
சமுதாயத்தில் படித்து உயர்நிலையில் உள்ள சொற்பமான சிலர் சரியான மார்க்க அறிவில்லாமலும், சமூக வளர்ச்சியில் அக்கரைகாட்டாமலும் சுய நலமாக இருக்கின்றனர், சமூக பணியில் உள்ள கல்வியாளர்களும் தங்களுக்குள் உள்ள போட்டி, பொறாமை, புகழ், பெருமையின் காரணமாக பிளவுண்டு கிடைக்கின்றனர்.
கல்விக் கூடம் நடத்துபவர்கள்
அரசாங்கத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்று கூறி சலுகைகளை பெறும் இவர்கள் முஸ்லிம்மாணவர்களுக்கு எந்த சலுகைகளையும் அளிக்காமல் பகல் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களுடைய நிறுவனங்களில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிப்பதில்லை. ஒரு சில மாணவர்களுக்கு உதவுதாக கணக்குகாட்டி கல்வியை வியாபாரமாக்கி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
பெற்றோர்கள்
உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்பதில்லை, சிறுவயதில் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது என்பது அவர்களின் கை, கால்களை வெட்டி ஊனமாக்குவதற்கு ஒப்பாகும். பிள்ளைகளை சம்பாத்திக்கும் இயந்திரமாக கருதி அவர்களின் கல்வி கற்கும் உரிமையை பரித்து எதிர்காலத்தில் அவர்களை வறுமையிலும், அறியாமையிலும் தள்ளுவது அன்பின் அடையாலமல்ல.
ஊடகங்கள்
முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இந்திய சமூகத்தில் இருந்து முஸ்லிம்களை தனிமை படுத்தி முஸ்லிம்கள் மீது வெறுப்பை இந்த மீடியாக்கள்( பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி) முயன்று வருகின்றன. தொடர்ந்து செய்யப்படும் இந்த பொய் பிரசாரத்தில் முஸ்லிம்கள் மனரீதியாக பலவீனப்படுத்துகின்றனர்.
அதிகாரிகள், அரசியல் வாதிகள்
பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய விரோத போக்கையே கையாளுகின்றனர் இட ஒதுகீட்டை கொடுத்தாலும் கிடைக்காமல் செய்வதற்கான நடைமுறைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறனர். அரசு அதிகாரிகளும் முஸ்லிம்கள் என்றால் ஒரு வெறுப்பு மனப்பாங்கோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
தீர்வு என்ன?
பல்வேறு முஸ்லிம்அறிஞர்களும், கல்வியாளர்களும் ஆய்வு செய்து பல்வேறு தீர்வுகளை வெளியிட்டுள்ளனர். இருந்தும் இந்த சமுதாயம் இன்னும் பின்தங்கி கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத தீர்வுகளை சொல்லவதுதான். முஸ்லிம்இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும், முஸ்லிம்அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் போன்ற தீர்வுகள் உபயோகமற்றது, இப்படி சிலர் முயற்சி செய்து தோல்வியை தழுவி உள்ளனர். தலைவர்களிடம் காணப்படும் பெருமை, ஆதிக்க சிந்தனை, உலக ஆதாயம் போன்றவை ஒன்றுபட விடுவதில்லை.

அனைத்து முஸலி்ம் ஆண்களும், பெண்களும் பட்டம் படிக்க வேண்டும், உயர்கல்வி கற்ற வேண்டும், அரசாங்கம் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று தேர்ச்சி பெறவேண்டும்.
படித்து முடித்தவர்களுக்கு வேலை வாங்கி தரவேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ, மாணவியரை கண்டறிந்து, பணகாரர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று அவர்கள் படிப்பை தொடர உதவி செய்ய வேண்டும்.
பெண்கல்விக்கும், கிராமப்புர மாணவர்களின் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கல்வி உதவி அமைப்புகளை பற்றிய தகவல்களையும் சேகரித்துள்ளோம். உயர்கல்வி கற்க பணம் அவசியம் இல்லை, அதிக அளவு மதிப்பெண் எடுத்தால் எத்தனையோ பேர் நிதிஉதவி செய்யத்தயாராக உள்ளனர். அதிக மதிப்பெண் எடுப்பது மிக எளிதானதே, இதற்கு அதிக பணம் கொடுத்து பெரியபள்ளி கூடங்களில் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அரசு பள்ளிக் கூடங்களில் படித்தே மிகஅதிக மதிப்பெண் எடுக்க முடியும். இதற்கு கல்வியை பற்றியை சில நுணுக்கங்கள் தெரிந்தால் போதும்.

“”எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை .” அல்-குர்ஆன்(8:53)


நன்றி : தஞ்சை தவ்ஹீத் மாநாட்டில் வெளியிடப்பட்ட கட்டுரை

மாநாட்டின் செய்தி
மாநாட்டின் விபரம்
புகைப்படங்கள்

Wednesday, May 14, 2008

Update - தஞ்சை தவ்ஹீத் எழுச்சி மாநாடு - புகைப்படங்கள்

தஞ்சையில் மே 10 மற்றும் 11 ல் TNTJ சார்பில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அதன் புகைப்பட தொகுப்பு.





















மேலும் படங்களுக்கு www.tntj.net

Sunday, May 11, 2008

இனிதே நிறைவுற்ற தஞ்சை தவ்ஹீத் எழுச்சி மாநாடு

தமிழக சட்டசபை முற்றுகை - TNTJ தீர்மானம்
தஞ்சையில் மே 10 மற்றும் 11 ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு நடந்தது. உலகின் பல பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்காக முஸ்லிம்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் TNTJ யின் பல மார்க்க அறிஞர்களும் உரை நிகழ்த்தினர். மற்றும் இஸ்லாத்தை விளக்கும் கண்காட்சிகளும், சமூக முன்னேற்றத்திற்கான அரங்கங்களும் அமைக்கப்பட்டிருந்தன. கடைசி நாளான இன்று அதன் நிறைவாக பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றிய தமிழக அரசு அதை சரி வர நிறைவேற்றாததைக் கண்டித்து சட்டமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் போது சட்டசபை முற்றுகை போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




Friday, May 9, 2008

மே 10,11 - தஞ்சையில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு

இனிதே நிறைவுற்ற தவ்ஹீத் எழுச்சி மாநாடு
தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களிடம் உள்ள மூட பழக்கவழக்கங்களைக் களைந்து, தூய்மையான இஸ்லாத்தின் அடிப்படையில் மக்களை அழைக்கும் அமைப்புகளில் முக்கியமானது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ). இந்த அமைப்பின் சார்பில் வரும் மே 10,11 தேதிகளில் தஞ்சையை அடுத்த வல்லம் என்ற இடத்தில் மாநாடு நடத்தப்பட உள்ளது. முஸ்லீம்களுடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டிற்கு பல லட்சம் முஸ்லிம்கள் வருவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் நிலம் இதற்காக சமப்படுத்தப் பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உள்ள சிறப்புகள்.....

* கல்வி மற்றும் உயர் கல்வி வழிகாட்டுதல் அரங்கம்.
* உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் பற்றி ஆலோசனை அரங்கள்
* சிறு முதலீட்டளார்களுக்கு நிபுணர்கள் மூலம் சுயதொழில் செய்ய ஆலோசனை.
* உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை கொண்டு மக்கள் சட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு மற்றும் ஆலோசனைகள் சொல்லும் அரங்கம்.
* இஸ்லாமிய அடிப்படையில் மணமகன் மணமகள்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள மணமேடை ஆரங்கம்.
* மிக குறைந்த விலையில் நஷ்டங்கள் இல்லாமல் வீடு கட்டுவது பற்றிய சிறந்த பொறியாளர்கள் வழிகாட்டுதலுடன் கனவு இல்லம்.
* மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவது பற்றிய ஆலோசனை அரங்கம்.
* மந்திரமா? தந்திரமா? என்ற போலி மந்திர வாதிகளின் வேஷங்களை தோலுரித்து காட்டுமு; மேஜிக் ஷோ.
* இஸ்லாம் விஞ்ஞானம் பற்றிய புதிய தொழில் நுட்பத்துடன விளக்கும் கண்காட்சி!
* முஸ்லிம் விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புகள் கண்காட்சி.
* சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு கண்காட்சி.
* இஸ்லாம் பற்றி முஸ்லிமல்லாத பேரறிஞர்களின் நற்சான்றுகள் கண்காட்சி
* இராக், ஆப்கானிஸ்தான், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் முஸ்லிம்களின் துயரங்கள் குறித்து விளக்கும் கண்காட்சி
* வளைகுடா நாடு சென்று நம் மக்கள் படும் அவதியையும் அதிலிருந்து மீளும் வழியையும் விளக்கும் கண்காட்சி.
* எந்த நோய்க எங்கே சிகிச்சை பெறலாம்? சிறந்த மருத்துவமனைகள், உதவிபெறும் வழிகளை விளக்கும் கண்காட்சி.
* இரத்த தான முகாம்
* குழந்தைகள் விளையாட்டு ஏற்பாடு.

இஸ்லாமிய அடிப்படையிலான செயல்களுக்கு.....

* தொழுகை, ஜனாஸாவுக்கான சடங்கு செய்முறை விளக்கம்!

* ஹஜ் கிரிகைகள் செய்வது எப்படி என்பது பற்றிய கஃபாவை போன்ற வடிவமைப்பில் பிரம்மாண்டமான செட்.

* பிறப்பு முதல் இறப்புவரை விளக்கும் கண்காட்சி

* மார்க்க விளக்கங்கள் மற்றும் பத்வாக்கள் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு!

* பிரபலமான மற்றும் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் அழைப்புப் பணியின் அவசியத்தை உணர்த்தும் அரங்கம்.

* தர்ஹா மத்ஹப் தவறு என்பதை விளக்கும் கண்காட்சி

* தினமும் மூன்று மணிநேரம் அணைவரும் ஒரே இடத்தில் கூடி சிறப்புரை கேட்கலாம்.

* இரண்டே மணிநேரத்தில் குர்ஆன் வாகிக்கக் கற்றுக் கொடுக்கும் பயிற்சி அரங்கம்.

* நபிமார்கள் வரலாறு ஒளி ஒலி நிகழ்ச்சி

* பெண்களுக்கு பெண் அறிஞர்களைக் கொண்டு சொற்பொழிவு அரங்கம்.

* ஆண்களுக்கு ஆண்களை கொண்டு விளக்கம் கூறும் அரங்கம்.

* ஹிரா குகை, தபுக்குகை பத்ரு, உஹது களங்கள், மஸ்ஜிதுன் நபவி, மஸ்துல் அக்ஸா படங்களும் விளக்கக் குறிப்புகளும்.

* இஸ்லாத்தில் பிறந்து எதிரிகளாகிப் போன தஸ்லீமா, சல்மான் ருஷ்டி பொன்றவர்களின் அறியாமை விளக்கும் கண்காட்சி

Sunday, May 4, 2008

ஆத்தா! ரெண்டாவது ரேங்க் வாங்கிட்டேன்....

”என்னடா முனீர்? எப்படி இருக்க?”
ரொம்ப நாள் கழித்து நண்பனைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடன் ஒன்றாவது முதல் எட்டாம் வகுப்பு வரை படித்தவன் தான் முனீர். பல வருடங்களுக்குப் பிறகு பார்த்தாலோ என்னவோ அவனும் நெகிழ்ச்சியுடன் இருந்தான்.
”நல்லா இருக்கேன்டா! நீ எப்ப துபாயில் இருந்து வந்த?”
“வந்து ஒரு வாரம்தான்டா ஆச்சு! வந்ததில் இருந்து ஒரே அலைச்சல்டா! ஆமா நீ இப்ப என்ன வேலை செய்ற?
“என்னத்தடா சொல்ல... ஒன்பதாம் வகுப்பில் பெயிலானதும் படிப்பையும் விட்டாச்சு.இப்ப ஒரு ஸ்டியோவில் வேலை செய்றேன்.. என்னமோ வாழ்க்கை ஓடுதுடா” சொல்லி முடிப்பதற்குள் அவனது தர்மசங்கடமான நிலை நன்றாக விளங்கியது...
”சரிடா.. கொஞ்சம் அவசர வேலையாய் போறேன்.. அப்புறமா வீட்டுக்கு வர்ரேன்” பதிலுக்கு காத்திருக்காமல் விரைந்தான்....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
நாங்கள் படித்த அந்த காலம் ஒரு வசந்த காலம். நாங்கள் படித்தது ஒரு சிறிய நடுநிலைப்பள்ளி. ஐந்தாம் வகுப்பு வரை, ஒவ்வொரு வகுப்பிற்கும் மொத்தமே நான்கு வகுப்புகள். ஆறு முதல் எட்டு வரை இரண்டு வகுப்புகள் தான்... அதிலும் எட்டாவதில் இரண்டு வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் தான்... மாணவர்களுக்கும். மாணவிகளுக்கும் தனித்தனியாக வருகைப் பதிவேடு இருந்தாலும் ஒன்றாகவே பாடம் நடக்கும். அதுவரை மாணவர்களும், மாணவிகளும் தனித்தனியாக படித்து விட்டு எட்டாவதில் ஒன்றாக படிக்கும் போது பசங்களின் அலட்டல் கரை புரண்டு ஓடும். நானெல்லாம் அப்பொழுதே அப்பாவி. சைட் அடிக்கக் கூடத் தெரியாது. அதனாலோ என்னவோ மாணவிகளின் சப்போர்ட் அதிகம்.. மாணவர்கள் மொத்தமே 18 பேர் தான்... மாணவிகள் 32 பேர் வரை இருந்ததாய் ஞாபகம்.
நானும் முனீரும் ஒன்றாகவே படித்து வந்ததால் அடிக்கடி சண்டைகளும், அதை மீறி ஆழமான நட்பும் இருந்தது. முனீரின் அப்பா வெளிநாட்டில் இருந்தார். அப்போதே அவன் டீசர்ட், ஜீன்ஸ் எல்லாம் அணிவதை ஏக்கத்துடன் பார்த்துக் கொள்வோம்.
இருவரும் நன்றாகவே படிப்போம்... நான் மூன்று ரேங்குக்குள் வந்தால் அவன் 6,7 என்று பிடித்து விடுவான். அது அப்போது தான் எட்டாம் வகுப்பில் சேர்ந்திருந்த நேரம். எட்டாவதில் எங்களது ஆசிரியை முத்துலட்சுமி. பல ஆண்டுகளாக அந்த பள்ளியில் வேலை செய்கிறார். எட்டாவது டீச்சர் என்றால் அந்த ஏரியாவில் அனைவருக்கும் தெரியும்.
எட்டாம் வகுப்பு ஆரம்பமான உடன் டீச்சர் தான் டியூசன் நடத்துவதைக் கூறி விருப்பமுள்ளவர்கள் சேரலாம் என்றார். நமக்கு இந்த டியூசனெல்லாம் படிக்க வீட்டில் டப்பு கிடைக்காது என்பதால் அதைப் பற்றிய கவலையே இல்லை. முனீர் முதல் ஆளாக டியூசனில் சேர்ந்து விட்டான். அவனுடன் இன்னும் சில மாணவர்களும், சில மாணவிகளும் சேர்ந்திருந்தனர்.
அப்போதெல்லாம் மாதத் தேர்வுகள், காலாண்டு, அரையாண்டு, மற்றும் இறுதி ஆண்டுத் தேர்வுகள் இருக்கும். முதல் மாதத் தேர்வுகள் முடிவு வந்தபோது பரபரப்பாக இருந்தது. அனைத்து பாடங்களிலும் முனீருக்கே முதலிடம்... எனக்கு இரண்டாவது ரேங்கே கிடைத்தது. எனக்கு இரண்டாம் இடம் கிடைத்ததில் மகிழ்ச்சிதான் என்றாலும் முனீருக்கு முதலிடம் கிடைத்தில் கொஞ்சம் கோபமும் இருந்தது. அடுத்த தேர்வில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்...அடுத்தடுத்த தேர்வுகளிலும் முனீருக்கு முதல் ரேங்கும் எனக்கு இரண்டாவது ரேங்குமே கிடைத்தது. கல்பனா, ஜெரீனா இருவரும் டீச்சர் முனீருக்கு முதலிலேயே கொஸ்டீன் பேப்பரை தருவதாகக் கூறியது வேறு எனக்கு கோபத்தை அதிகரித்தது. அரையாண்டுத் தேர்வில் மூன்று மதிப்பெண்கள் வித்தியாசத்தில் எனக்கு இரண்டாவது ரேங்க்கே. அதுவும் கணக்குப் பாடத்தில் டிட்டோ(”) போட்டு கணக்கு எழுதியதற்க்கு ஐந்து மார்க் குறைத்திருந்தது வெறுப்பையேத் தந்தது.
ஆண்டு இறுதித் தேர்வுக்கு முன் எங்கள் ஊரில் உள்ள தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ் பாடத்திற்கு மட்டும் சிறப்பு தேர்வு நடக்கும். தமிழ்ச்சங்கத்தினரால் எட்டாம் வகுப்பு பாடத்தில் இருந்து வினாத்தாள் தயாரிக்கப்பட்டு அங்கேயே விடைத்தாளும் திருத்தப்படும். அதில் ஊரில் உள்ள அனைத்து எட்டாம் வகுப்பு மாணவர்களும் பங்கு பெறுவர். எங்கள் பள்ளியில் இருந்தும் அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். அதன் முடிவு வந்தது தான் வித்தியாசமாக இருந்தது. எங்கள் பள்ளியிலேயே சாஜிதா என்ற மாணவிக்கு முதல் மதிப்பெணும், எனக்கு இரண்டாவது மதிப்பெண்ணும் கிடைத்திருந்தது. முனீர் 50க்கும் குறைவான மதிப்பெண்களையே பெற்றான். அப்படியே எட்டாம் வகுப்பு முடிந்து விட மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டோம். முனீரும், நானும் வேறு வேறு வகுப்புகளில் படித்தோம். முனீர் ஒன்பதாம் வகுப்பில் சரிவர மார்க் எடுக்க முடியாமல் பெயிலாகி விட்டான். இப்போது ஸ்டுடியோவில் வேலை செய்கிறான்.... நினைத்துக் கொண்டிருக்கும் போதே கண்ணில் இருந்து கண்ணீர் துளி ஒன்று வெளியேறியதைத் தடுக்க இயலவில்லை.

இது வருத்தப்படாத வாலிபர் சங்க இரண்டாம் ஆண்டு போட்டிக்கு