Friday, May 30, 2008
கல்விக்காக டாடாவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் சிறுமிகள்
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
என்று கூறினார் பொய்யாமொழிப் புலவர். அந்த கல்வியைப் பெறுவதற்கு வணிகமயமாகி விட்ட இன்றைய உலகத்தில் ஒவ்வொரு வரும் பலவிதமான இன்னல்களை சந்திக்க வேண்டி வருகின்றது. நன்றாக படிக்கக் கூடிய பலரும் வசதிக் குறைவின் காரணமாக படிப்பை விட வேண்டிய சூழ்நிலை நிலவுகின்றது. இன்னும் சில இடங்களில் வசதி இருந்தும் படிப்பில் போதிய கவனம் செலுத்தாமையால் படிப்பை இழக்க நேரிடுகின்றது. ஆனால் இது ஒரு வித்தியாசமான சம்பவம். தமிழக எல்லையில் கேரளாவில் மூணாறு என்ற அற்புதமான மலைப் பகுதியில் அமைந்துள்ளது மாட்டுப்பட்டி என்ற இடம். இது டாடா டீ கம்பெனியின் ஏகபோக உரிமையுள்ள இடம். (இது எப்படி டாடா குழுமத்தில் கைக்கு வந்தது என்பது ஒரு பெரிய ‘ஆதிக்க' கதை) இங்கு டாடா டீ எஸ்டேட்டினரால் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடம் நடத்தப்படுகின்றது.
இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் படித்தவர்கள் ரோஷ்னா. நான்காம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பிற்கு செல்ல வேண்டியவர். அதே போல் கிரீஷ்மா, ஜோசிபா அஜெய், அபிஷேக் சாமுவேல் ஆகியோரும் கடந்த கல்வி ஆண்டில் ஆரம்ப பள்ளியில் படித்து அடுத்த வகுப்பிற்கு செல்ல வேண்டியவர்கள். இவர்கள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகம் இந்த கல்வி ஆண்டில் இங்கு படிக்க அனுமதி கிடையாது என்று T.C ஐக் கிழித்து கொடுத்து விட்டனர். இவர்கள் அனைவரும் தத்தமது வகுப்பில் ஆண்டுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் அல்லர். ஒழுங்கீனமாக நடந்து கொண்டவர்களும் அல்லர்.
இவர்கள் செய்த பாவம் இவர்களது பெற்றோர்களுக்கு பிள்ளைகளாகப் பிறந்தது தான். ரோஷ்னாவின் தந்தை ஹென்றி ஜோசப் கடந்த 2005 ம் ஆண்டு வரை டாடா டீ நிறுவனத்தில் வேலை செய்து பணி நீக்கம் செய்யப்பட்டவர். அதே போல் கிரீஷ்மாவின் தந்தை கோபகுமாரும், ஜோசிபா அஜெய், அபிஷேக் சாமுவேல் ஆகியோரின் தந்தை ஹென்றிஜேசுதாஸூம் பல்வேறு காரணங்களுக்காக டாடா டீ நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள். இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் காரணம் காட்டி இவர்களது குழந்தைகளி கல்விக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது டாடா நிர்வாகம். இந்த பள்ளியில் டாடா நிறுவனத்தைத் தவிர்த்து ஏனையவர்களில் குழந்தைகளும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதை எதிர்த்து இக்குழந்தைகளில் பெற்றோர்கள் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் இக்குழந்தைகளை நீக்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லையாதலால் இவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆணை பிறப்பித்தது. ஆனால் டாடா நிர்வாகம் இதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்வதில்லை.இதனால் இக்குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி வாயிலில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த ‘டாடா' என்னும் யானைக்கு யார் மணி கட்டுவதோ?.............. :( :(
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
???????
//T.C ஐக் கிழித்து கொடுத்து விட்டனர்//
:((
இதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்த பள்ளி ஆசிரிய சமூகங்களை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது :(
Post a Comment