கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து கல்வியிலேயும் பொருளாதாரத்திலும் பின் தங்கிவருகின்றது. இந்தியாவில் வாழும் அனைத்து பிற்பட்ட சமுகங்களை விட முஸ்லிம்சமுதாயம் பின் தங்கி உள்ளது. தலித் சமுதாயம் மற்றும் மழைவாழ் மக்களை விட முஸ்லிம்சமுதாயம் பின் தங்கியதிற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் கல்வியை பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, கல்வியை மறந்ததால் இந்த சமுகம் கடைசி நிலையில் உள்ளது. 2006-ஆம் ஆண்டு வெளியிட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லிம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள். 8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%, +2 வரை படித்தவர்கள் 7.8%, டிப்ளோமா வரை படித்தவர்கள்4.4%, பட்ட படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே, 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர், கிராமபுற முஸ்லிம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர், பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லிம்கள் தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை (2006 கணக்கு படி), கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.
இதுதான் முஸ்லிம்சமூகத்தின் தற்போதைய நிலை, இது தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லிம்சமுதாயம் மிகவும் பின் தங்கிவிடும். சில பெற்றோர்கள் உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக படிக்கும் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இதன் அபாயத்தை அவர்கள் உணர்வதில்லை, இன்றைக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இடத்தின் மதிப்பும் பலமடங்கு உயர்ந்துள்ளது, இதனால் வீட்டு வாடைகையும் உயர்ந்து வருகின்றது. எதிர்காலத்தில் நாம் சம்பாதிக்கும் 3 ஆயிரம், 5ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமற்றது இதனால் முஸ்லிம்கள் நிரந்தர நரகத்திற்கு அனுப்பும் வட்டியில் சிக்க நேரிடும், மேலும் பொருளாதார தேவையால் சமூக சீர்கேடுகள் அதிகரித்துவிடும்.
கல்வி முன்னேற்றம் என்பது வெறும் அறிவை வளர்க்கும் முயற்சி அல்ல, கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும், அரசு நிர்வாகத்தில் நுழைந்து நமது சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும், சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும்
பெரும்பாலான முஸ்லிம்இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர், இந்தியாவில் வேலை இல்லை என்று இவர்களாக முடிவு செய்து கொண்டு வெளிநாடு சென்று மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகளை பிரிந்து அயல் நாட்டில் கஷ்டப்பட்டு, குடும்பம் என்ற கட்டமைப்பு இல்லாமல் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், கணவன் இருந்தும் இல்லாத நிலையில் வாழும் மனைவி, தந்தை இருந்தும் இல்லாத நிலையில் வளரும் பிள்ளை, இது முஸ்லிம்சமுதாயத்தில் பல்வேறு சமூக சீர்கேடுகளை உருவாக்குகிறது.
ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வளர்த்தால்தான் பிள்ளைகள் அறிவுள்ள, ஆற்றல் உள்ள, ஒழுக்கமுள்ள மார்க்க அறிவுள்ளவர்களாக ஆவார்கள். அந்த பிள்ளைகள் தான் குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றக் கூடியவர்களாக ஆவார்கள்.
குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் முஸ்லிம்இளைஞர்கள் வேலைக்கு செல்வதால் இந்த சமூகம் முதுகெழும்பில்லாத பாதுகாப்பற்ற சமூகமாக மாற வாய்ப்புள்ளது. சமுதாயத்திற்கு ஒரு ஆபத்து, கலவரம் என்று வந்தால் பாதுகாக்க ஆண்கள் அற்ற அவலநிலை உருவாகின்றது, இந்த அபாயத்தை முஸ்லிம்இளைஞர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.
இந்தியாவில் அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன, இந்தியா என்பது நமது நாடு. இந்திய விடுதலைக்காக பெரிதும் பாடுபட்டது முஸ்லிம்சமுதாயம். இங்குள்ள அனைத்து வளங்களும் நமக்கும் சொந்தமானவை, இதை பெறுவதற்கு முறையான கல்வி அவசியம்.
மருத்துவ துறையில் முஸ்லிம்கள் 4.4% தான் உள்ளனர். சங்பரிவாரங்களின் திட்டங்களில் ஒன்று முஸ்லிம்கர்பிணி பெண்களுக்கு தவறான மருந்தை கொடுத்து எதிர்கால முஸ்லிம்சமுதாயத்தை ஊனமுற்ற சமுதாயமாக மாற்ற வேண்டும். மேலும் முஸ்லிம்களுக்கு தவறான மாத்திரைகளை கொடுத்து உடல் ரீதியாக அவர்களை பலவீனபடுத்த வேண்டும் என்று ஒரு இரகசிய சுற்றறிக்கையை இந்தியா முழுவதும் அனுப்பியது . இது சில இடங்களில் நடந்து கொண்டும் இருக்கின்றது. அதிகமான முஸ்லிம்மருத்துவர்களை உருவாக்குவது மிகவும் அவசியமானது.
எனவே முஸ்லிம்களே! விழித்து கொள்ளுங்கள்! இந்த அவலநிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் அனைத்து துறைகளிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு இந்தியாவில் தனிமைபடுத்தப்பட்ட சமூகமாவார்கள். படிப்பறிவு இல்லாமல் ஆரோக்கியம் இல்லாமல், சமூககட்டமைப்பு இல்லாமல், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இந்த சமூகம் வேட்டையாடப்படும் அபாயம் உள்ளது. எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்தி நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
யார் காரணம்?
இந்த அவலநிலைக்கு முஸ்−களை இழுத்து சென்றது எது? யார் இதற்கு காரணம்?
முஸ்லீம் அரசியல் வாதிகள்:-
முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம்அரசியல் வாதிகள் இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கரை இல்லாமல் தங்களுடைய சுய லாபத்திற்காக இந்த சமூகத்தை அரசியல் வாதிகளிடம் அடகுவைத்தனர் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி, இடஓதுகீடு போன்ற சமூக முன்னேற்ற பணிகளில் ஈடுபடாமல் பெரிய அரசியல் கட்சிகளுக்கு புகழ்பாடி தங்களை மட்டும் வளபடுத்திக் கொண்டனர். கடந்த 60 ஆண்டுகளாக இந்த முஸ்லிம்சமுதாயம் கீழ் நிலைக்கு செல்வதை பார்த்துக் கொண்டிருந்து சிறிதளவும் இதன் வளர்ச்சிகாக சிந்திக்கவில்லை. இன்னும் இவர்கள் இதே நிலையில்தான் நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் :-
முஸ்லிம்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக முஸ்லிம்களின் நிதி உதவியால் நடத்தப்படும் மதராஸாகளில் இலவசமாக பயின்ற இந்த ஆலிம்கள் இஸ்லாமிய வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை, சமூக வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை ஜும்ஆ மேடைகளில் அவ்லியாக்களை பற்றியும், தர்ஹா, மவ்லுதுகளை பற்றியும் பேசி தங்களுடைய வயிறுகளை வளர்த்துக்கொண்டார்கள். இன்றளவும் ஆங்கிலம் படிக்க கூடாது, அது ஹராம் என்று வாதிடும் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் உள்ள சில கோமாளிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய முழுநேரத்தையும், ஷிர்க், பித்அத் கொள்கையை பரப்புவதற்காக செலவழித்து, முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் கேட்பதை தடுத்து நிறுத்தி இறந்தவர்களிடம் கேட்கசெய்து அல்லாஹ்விடம் இருந்து கிடைக்கும் ரஹ்மத்திற்கு பதிலாக சாபத்தை பெற உதவினர்.
சமுகத்தில் படித்த கல்வியாளர்கள்
சமுதாயத்தில் படித்து உயர்நிலையில் உள்ள சொற்பமான சிலர் சரியான மார்க்க அறிவில்லாமலும், சமூக வளர்ச்சியில் அக்கரைகாட்டாமலும் சுய நலமாக இருக்கின்றனர், சமூக பணியில் உள்ள கல்வியாளர்களும் தங்களுக்குள் உள்ள போட்டி, பொறாமை, புகழ், பெருமையின் காரணமாக பிளவுண்டு கிடைக்கின்றனர்.
கல்விக் கூடம் நடத்துபவர்கள்
அரசாங்கத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்று கூறி சலுகைகளை பெறும் இவர்கள் முஸ்லிம்மாணவர்களுக்கு எந்த சலுகைகளையும் அளிக்காமல் பகல் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களுடைய நிறுவனங்களில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிப்பதில்லை. ஒரு சில மாணவர்களுக்கு உதவுதாக கணக்குகாட்டி கல்வியை வியாபாரமாக்கி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
பெற்றோர்கள்
உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்பதில்லை, சிறுவயதில் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது என்பது அவர்களின் கை, கால்களை வெட்டி ஊனமாக்குவதற்கு ஒப்பாகும். பிள்ளைகளை சம்பாத்திக்கும் இயந்திரமாக கருதி அவர்களின் கல்வி கற்கும் உரிமையை பரித்து எதிர்காலத்தில் அவர்களை வறுமையிலும், அறியாமையிலும் தள்ளுவது அன்பின் அடையாலமல்ல.
ஊடகங்கள்
முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இந்திய சமூகத்தில் இருந்து முஸ்லிம்களை தனிமை படுத்தி முஸ்லிம்கள் மீது வெறுப்பை இந்த மீடியாக்கள்( பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி) முயன்று வருகின்றன. தொடர்ந்து செய்யப்படும் இந்த பொய் பிரசாரத்தில் முஸ்லிம்கள் மனரீதியாக பலவீனப்படுத்துகின்றனர்.
அதிகாரிகள், அரசியல் வாதிகள்
பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய விரோத போக்கையே கையாளுகின்றனர் இட ஒதுகீட்டை கொடுத்தாலும் கிடைக்காமல் செய்வதற்கான நடைமுறைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறனர். அரசு அதிகாரிகளும் முஸ்லிம்கள் என்றால் ஒரு வெறுப்பு மனப்பாங்கோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
தீர்வு என்ன?
பல்வேறு முஸ்லிம்அறிஞர்களும், கல்வியாளர்களும் ஆய்வு செய்து பல்வேறு தீர்வுகளை வெளியிட்டுள்ளனர். இருந்தும் இந்த சமுதாயம் இன்னும் பின்தங்கி கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத தீர்வுகளை சொல்லவதுதான். முஸ்லிம்இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும், முஸ்லிம்அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் போன்ற தீர்வுகள் உபயோகமற்றது, இப்படி சிலர் முயற்சி செய்து தோல்வியை தழுவி உள்ளனர். தலைவர்களிடம் காணப்படும் பெருமை, ஆதிக்க சிந்தனை, உலக ஆதாயம் போன்றவை ஒன்றுபட விடுவதில்லை.
அனைத்து முஸலி்ம் ஆண்களும், பெண்களும் பட்டம் படிக்க வேண்டும், உயர்கல்வி கற்ற வேண்டும், அரசாங்கம் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று தேர்ச்சி பெறவேண்டும்.
படித்து முடித்தவர்களுக்கு வேலை வாங்கி தரவேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ, மாணவியரை கண்டறிந்து, பணகாரர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று அவர்கள் படிப்பை தொடர உதவி செய்ய வேண்டும்.
பெண்கல்விக்கும், கிராமப்புர மாணவர்களின் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கல்வி உதவி அமைப்புகளை பற்றிய தகவல்களையும் சேகரித்துள்ளோம். உயர்கல்வி கற்க பணம் அவசியம் இல்லை, அதிக அளவு மதிப்பெண் எடுத்தால் எத்தனையோ பேர் நிதிஉதவி செய்யத்தயாராக உள்ளனர். அதிக மதிப்பெண் எடுப்பது மிக எளிதானதே, இதற்கு அதிக பணம் கொடுத்து பெரியபள்ளி கூடங்களில் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அரசு பள்ளிக் கூடங்களில் படித்தே மிகஅதிக மதிப்பெண் எடுக்க முடியும். இதற்கு கல்வியை பற்றியை சில நுணுக்கங்கள் தெரிந்தால் போதும்.
“”எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை .” அல்-குர்ஆன்(8:53)
நன்றி : தஞ்சை தவ்ஹீத் மாநாட்டில் வெளியிடப்பட்ட கட்டுரை
மாநாட்டின் செய்தி
மாநாட்டின் விபரம்
புகைப்படங்கள்
5 comments:
தல என்ன ஆய்வு எல்லாம் செய்து அறிக்கை எல்லாம் போட்டிருக்கிங்க...
மக்களுடைய விழிப்புணர்வுதான் முக்கியம்னு படுது எனக்கு பெரும்பாலும் படிக்கிற இளைய சமுதாயத்தை குடும்ப நிலைமை காரணமாவோ அல்லது கவனமின்மை காரணமாவோ ஊக்குவிக்காம விட்டுடறாங்க நடுத்தர மற்றும் சாதாரண தட்டு மக்கள் அப்படின்னு நினைக்கறேன்
பெரும்பாலும் பாருங்க அரபுநாடுகள்ள இருக்கிற தமிழ் பேசும் முஸ்லிம் இளைஞர்கள்ள அவங்க வீட்டுலயிருந்து இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவங்க இருப்பாங்க பல வீடுகளில் தந்தையும் பல வருசமா இங்கதான் இருப்பார் ஆனா மகனும் படிப்பை முடிக்காம இங்க வந்திருப்பார் இது மக்களோட கவனமின்மை தானே...
மற்றய பிரச்சனைகள் பற்றி எனக்கு தெரிந்ததைவிட தங்களுக்கு தெரிந்திருக்கலாம்...
what you've said is exactly correct.........muslim youths in tn are more intrested in working abroad........they beleive that its a prestige to work in dubai and other places abroad.............they are ready to do whatever work there and tolerate the tortures but they think working there as a prestige symbol.......we can see parents are more ready to give their girls to foreign mappillai......some youths if they are academically developed they lack on the religious ground........many muslim girls shed their hijab after going to college or offices.............very few are balanced academically and religiously...........i'm very happy to find some one who thinks like me brother............
மிக முக்கியமான காரணம் ஒன்றை விட்டு விட்டீர்கள். ஒவ்வொவொரு முஸ்லீம் வீட்டிலும் அறை டஜன், ஒரு டஜன் பிள்ளைகள் இருப்பதும் ஒரு காரணம். ஏற்கனவே ஏழ்மையில் இருப்பவர்களால் எப்படி இத்தனைக் குழந்தைகளை படிக்க வைத்து நல்ல படியாய வளர்க்க முடியும். சில முஸ்லீம் போதகர்கள் கருத்தடை இஸ்லாமுக்கு எதிரானது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உண்மையானால், இஸ்லாமியர்களின் இன்றிய நிலைமைக்கு அவர்களே தான் கராணம். வேறு யாருமல்ல.
நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன். இந்தியாவில் மற்ற சமுதாயத்திற்கு உள்ள எதாவது ஒரு சலுகை இஸ்லாமியார்க்கு மறுக்கப் பட்டிருக்கிறதா? அப்படி இல்லாதபோதும் அவர்களும் சரிசமமாக மற்றவர்களுடன் போட்டி போட்டு முன்னேற வேண்டியதுதானே?
Post a Comment