Friday, May 8, 2009

எங்கள் ஓட்டு ‘ஈழத் தாரகை’ அம்மா(ஜெ.)விற்கே!... வாசகர் கடிதம்.

கடந்த சில வாரங்களாக பதிவு ஏதும் எழுதவில்லை. ஏன் பதிவு எழுதவில்லையென்று கேட்டு, விசாரித்து இதுவரை 18 மொழிகளில் 14,28,332 கடிதங்கள் வந்த கடிதங்களைப் பற்றி இங்கு பேச வேண்டிய அவசியம் இல்லா விட்டாலும் 14,28,333 வது கடிதமாக கூட்டுத் தொகை 9 ஆக வந்த ஒரு கடிதத்தை உங்களுக்கு அப்படியே அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

திமுக அடிவருடி தமிழ் பிரியன் அவர்களுக்கு,


வருகின்ற 2009 மே 13 ந்தேதி இந்திய பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள சூழலில் உங்களது பொன்னான வாக்குகளை தமிழக மக்களின் ஒரே இறுதி நம்பிக்கை ஜெ.விற்கு அதிமுக கூட்டணிக்கு ஓட்டுப் போடும்படிகேட்டுக் கொள்கின்றோம்.

அம்மா... இந்த பெயரைச் சொன்னதும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் அம்மா ஜெ. அவர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். அன்றும், இன்றும், என்றும் ஈழ மக்களின் மேல் அக்கறை கொண்டுள்ள அம்மா அவர்கள் தற்போதைய தேர்தலுக்குப் பின் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

அதன்படி தேர்தல் முடிந்ததும் அம்மாவிடம் இருக்கப் போகும் 40 எம்.பி சீட்டுக்களை வைத்து அம்மா இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பார். அம்மாவின் பாசத்திற்குரிய ஒருவர் மட்டுமே இனி இந்தியாவில் பிரதமராக முடியும் என்ற தலையெழுத்து அமையும்.புதிய இந்தியத் தலைமை அம்மாவின் காலடியில் அமைந்ததும், உடனே இந்திய ராணுவம் இலங்கையை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் களம் இறக்கப்படும். முழு இலங்கையும் இந்தியாவிம் காலடியில், அம்மாவின் ஆணைக்காக காத்திருக்கும். அம்மா ஆணையிட்டால் முச்சந்ந்தி முனுசாமி கூட பிரதமர் நாற்காலியில் அமர முடியும்.

அவ்வாறு அம்மாவின் காலடியின் கீழ் மத்திய அரசு அமைந்ததும், அம்மாவின் முதல் செயல்பாடே இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்புவது தான். இலங்கையில் சரிவை சந்தித்து வரும் விடுதலை போராட்ட வீரர்களுடன் இந்திய ராணுவம் இணைந்து முழு இலங்கையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அம்மா ஏற்பாடு செய்வார்கள். ராஜபக்‌ஷே சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டு புழல் சிறையில் அம்மாவால் அடைக்கப்படுவார்கள்.

இலங்கையில் ஜனாதிபதியாக மிஸ்டர் கிளீன் ஓ.பன்னீர்செல்வத்தை அம்மா நியமிக்கப்பார். அம்மாவால் தேசிய தலைவர், இலங்கையின் இராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவார். இளைய தளபதி கருணாவை, ஐரோப்பா கண்டத்திற்கான இலங்கைத் தூதராக நியமித்து எங்கிருந்து அடிவாங்கிக் கொண்டு வந்தாரோ அங்கேயே சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்க அம்மா வழி செய்வார்கள்.

இலங்கையில் கிழக்கு மண்டலத்திற்கு ரவுப் ஹக்கீமையும், வடக்கு மண்டலத்திற்கு பிள்ளையானையும் முதல் மந்திரியாக நியமித்து அம்மா அழகு பார்ப்பார்கள். அம்மாவின் ஆசியால் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வெறும் 50 ரூபாயில் இரயில் பயணம் செய்ய சட்டம் இயற்றப்படும். A9 பாதை வழியாக செல்லும் தமிழர்களுக்கு எந்த சோதனையும் செய்யாமல் அம்மா பார்த்துக் கொள்வார்கள்.மலையக மக்களின் வசதிக்காக அனைத்து போகுவ்ரத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். அங்கு உற்பத்தியாகும் பொருட்களுக்கு முழு வரி விலக்கும், மானியமும் வழங்கப்படும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அம்மா ஏற்படுத்திய ஒற்றுமையைக் குலைக்க அம்மாவின் எதிரி அரசான மைனாடிரிட்டி திமுக அரசு முயற்சி செய்த காரணத்தால் அவ்வாட்சி கலைக்கப்படும். ஏழைகளின் உற்ற தோழி அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும். ஈழம் மற்றும் தமிழக மக்களிடையே உள்ள உறவை பிரிக்கவே சேது சமுத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை அம்மா அவர்கள் உணர்ந்துள்ளார்கள். எனவே மைனாரிட்டி கருணாந்தி அரசால் ஆழம் செய்யப்பட்ட சேது சமுத்திரம் முழுவதும் மணலால் நிரப்பட்டு இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையே பஸ், இரயில் போக்குவரத்து அம்மாவால் விடப்படும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 90 களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கப்படும். அவர்களின் பழைய உடைமையான அவர்களின் வீடு, நிலம், வியாபாரம் அனைத்தும் அம்மாவின் பொற்கரங்களால் மீண்டும் வழங்கப்படும் . ஈழத்தில் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச உரம் போன்றவை அம்மாவின் கட்டளையின் கீழ் வழங்கப்படும். கரும்புக்கு டன்னுக்கு 10,000 ரூபாயும், நெல்லுக்கு கிலோவுக்கு 50 ரூபாயும் அம்மாவின் ஒப்புதலின் கீழ் வழங்கப்படும்.

புலம் பெயர்ந்து வறுமையில் வாடும் ஈழத் தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வர விரும்பினால் இலவசமாக வீடும், 5 ஏக்கர் நிலமும், 10 லட்சம் ரூபாயும் அம்மாவின் கருணையால் வழங்கப்படும்.

இலங்கைக்கான ஐ.நா. தூதராக வைகோவும், இந்தியத் தூதராக ராமதாஸூம் அம்மாவால் நியமிக்கப்படுவார்.

மேற்கண்ட நன்மைகளை செய்ய அம்மா முடிவு செய்து இருப்பதால் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஓட்டுக்களை அதிமுகவின் கூட்டணிக்கு தரும் படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் ஈழத்தில் நீதியை நிலை நாட்டி தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கித் தந்து, ஈழ மக்களின் மனதிலும், சரித்திர புத்தகங்களிலும் நீங்கா இடம் பிடிக்கப் போகும் அம்மாவின் சீரிய பணியைப் பாராட்டி பெரியார் புத்தகங்களின் காவலர், கல்வி நிறுவனங்களின் தளபதி தமிழினத்தின் இளைய தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் அம்மாவுக்கு ஈழத் தாரகை என்ற பட்டத்தை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.

வாழ்க அம்மா! வளர்க அதிமுக! ஓங்குக எம்.ஜி.ஆர் புகழ்!

இவண்
தலையைச் சொறிய எரியும் கொள்ளியைப் பயன்படுத்துவோர் சங்கம்.
Pirates of graveyard Nager AIADMK கிளை
Somalia.

டிஸ்கி 1 : கடிதத்தை படித்து விட்டு இது மண்டபத்தில் எழுதியது என்று பின்னூட்டம் போட்டால், அவர்கள் வைகோ விடம் தேம்பி தேம்பி முந்தானையில் மறைந்து அழுவது எப்படி என பயிற்சி அளிக்க அனுப்பப்படுவார்கள்.

டிஸ்கி 2 : மண்டபம் என்றால் என்ன? இராமேஸ்வரம் பக்கத்தில் இருக்கும் ஊரா? என்று கேட்பவர்கள் சில வினாடிகளில் நிறம் மாறுவது எப்படி என்று பயிற்சி எடுக்க மருத்துவர் ஐயாவிடம் அனுப்பப்படுவார்கள்.

படம் நன்றி : கீற்று இணைய தளம்

17 comments:

Sumathi. said...

ஹாய் தமிழ்,

எப்படிப்பா இப்படிலாம்? அதுக்கு தான் ரொம்ப யோசிக்க வேண்டம் னு சொல்றது. ஆனாலும் சங்கம் பேரு நல்லா இருக்கு.

விஜய் ஆனந்த் said...

:-)))...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

நமிதா..! said...

தமிழ் ஈழத்திற்காக அம்மா அப்பவே பேச்சிவார்த்தை நடத்திய போட்டோ தான் அது :)

ஆயில்யன் said...

தம்பி நலமா?


நல்லாத்தானே இருந்த...?

காட்டு மஸ்தான் said...

உலக நாடுகளைளெல்லாம் ஒன்றிணைத்து அம்மாவை அதிபராக்கிவிட்டு, உலகின் ஒப்பற்ற உயரிய தலைவியாக்கிவிடலாம். ஒரு திராவிடச்சி (சசி தயவால் ஆரியச்சியாக இருந்து திராவிடச்சியாக மத மறியவர்) உலக தலைவராக வந்தால் நமக்கு பெருமைதானே!வாழ்க அம்மா! வளர்க அவர் ஆதிக்க வெறி!

சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...

தம்பி நலமா?


நல்லாத்தானே இருந்த...?//

ரிப்பீட்டு!

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே இது மண்டபத்துல எழுதினதா...?

தமிழன்-கறுப்பி... said...

ஆமா மண்டபம்னா என்ன ?

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் கமன்டுக்கு ரிப்பீட்டு.. :))

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே அரசியல்னா இன்னா...?

:)

கவிதை காதலன் said...

விரிவான அலசல்.. வித்தியாசமா இருக்கு. கீப் இட் அப்

Chill-Peer said...

:)

Sasirekha Ramachandran said...

இதுக்குதான் ரொம்ப யோசிக்கக் கூடாதுங்கறது....சோ sad..பரவா இல்ல.பட் அந்த சங்கம் பேரே கலக்கலா இருக்கே!!!

S.A. நவாஸுதீன் said...

கலக்கலான அலசல். சிரிக்கும்படியும் சிந்திக்கும்படியும் பொழுதுபோக்காக உண்மையை உரசி செதில் நீக்கி சுத்தமாக சொல்லி இருக்கின்றீர்கள். சங்கத்தில் சேர விண்ணப்பம் அனுப்பி வைக்கவும்.

நிஜமா நல்லவன் said...

//ஆயில்யன் said...

தம்பி நலமா?


நல்லாத்தானே இருந்த...?//

ரிப்பீட்டு!

kubesh TNCSC said...

entha mathiri allu erkkum varai jayalalitha ethuvum solva tamilan ellam kena..........than

LinkWithin

Related Posts with Thumbnails