Saturday, August 22, 2009

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஏன்?


இன்று முதல் உலகின் பல பிரதேசங்களில் ரமழான் மாதம் தொடங்கி விட்டது. இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் ரமழான் மாதம் முழுவதும் பகல் முழுவதும் நோன்பு இருந்து, திருக்குர் ஆனை அதிகமான ஓதி, இரவு நேரங்களில் அல்லாஹ்வை வணங்கி இறை தியானத்தில் ஆழ்ந்திருப்பர்!.

நோன்பு என்பதை இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் பின்பற்றுகின்றனர். பொருளாதாரம், சமூக அந்தஸ்து, வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் நோன்பு நோற்கின்றனர். வயதானோர், நோயுள்ளவர்கள், சிறுவர், சிறுமிகள், மாதவிடாய் நேர பெண்கள், சமீபத்தில் பிரசவித்தவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

நோன்பு நோற்பதால் என்ன பயன்? பசியின் அருமையை நோன்பில் உணர்ந்து கொள்வார்கள் என்பதா? அப்படியானால் தினசரி ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாடுபவன் ஏன் நோன்பு நோற்க வேண்டும்.... நோன்பு நோற்க வேண்டியதன் காரணத்தை அல்லாஹ் தெளிவாக எடுத்துரைக்கின்றான்.



يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ


ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் இறையச்சம் உடையோராக ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)


நோன்பு நோற்பதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையோராக (முத்தக்கீன்களாக) மாறலாம் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு என்பது என்னவென்று வரையறுத்தால் ரமழான் மாதம் முழுவதும் காலை முதல் மாலை வரை சுமார் 13 மணி நேரம் உண்பது, குடிப்பதை விட்டு விட வேண்டும். இச்சைகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கெட்ட செயல்களில் இருந்தும், கெட்ட பேச்சுகளில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இறையச்சம் வர இயலுமா? இயலும். மனிதனால் அடக்க இயலாதவைகளில் முக்கிய இடம் வகிப்பவை பசியும், தாகமும், இச்சையும். நோன்பு நேரங்களில் இவைகளை அடக்குவதன் மூலம் மனிதனின் மனம் செம்மைப்படுகின்றது. மனிதனுக்கு அரசோ, சமூக அமைப்புகளோ கட்டுப்பாடுகளை விதிக்கும் போது யாரும் பார்க்காத நிலையில் அவன் கட்டுப்பாடுகளை மீறத் துணிகின்றான். ஆனால் நோன்பு இருக்கும் போது நம்மை அல்லாஹ் எங்கு சென்றாலும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறான் என்ற நினைவிலேயே இருந்து பசி, தாகம், இச்சைகளை அடக்குவதன் மூலம் மனிதன் ஒரு சுய கட்டுப்பாடான நிலைக்கு வருகின்றான்.

இந்த இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் என்ற மாண்பு மனிதனை இறையச்சம் உடையவனாக மாற்றுகின்றது. அதே போல் கெட்ட நடத்தைகள், கெட்ட பேச்சுகளையும் விட்டு விலகி இருக்க வேண்டும் என்ர எண்ணத்தை உருவாக்குவதன் மூலம் மனிதனை செம்மையாக்கி சமூகத்திற்கு தரக் கூடியதாக நோன்பு மாறி விடுகின்றது. கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விடாதவர்கள் நோற்பது நோன்பாகாது. அது வெறும் பட்டினி என்பதிலேயே சாரும்.

இந்த இனிய ரமழான் மாதம், வருடத்திற்கு ஒரு முறை வரும் பயிற்சிக்களம் உன்பதை உணர்ந்து நல்லமுறையில் நோன்பு நோற்று இறைவனின் அருளைப் பெறுவோமாக!


1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

2) எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ, இப்னுமாஜா
3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

அனைவருக்கும் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்!

மீள் பதிவு.


..

56 comments:

ஆயில்யன் said...

ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்
:-)

துளசி கோபால் said...

நோன்பு/விழாக் காலத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள்.

தமிழன்-கறுப்பி... said...

ரமழான் மாத்துக்கான வாழ்த்துக்கள்...

விஜய் ஆனந்த் said...

அனைவருக்கும் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்!!!

Sanjai Gandhi said...

அனைவருக்கும் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்!

வெண்பூ said...

எல்லாருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்.

ஹைதராபாத்தில் இந்த மாதம் முழுக்க ஹலீம் என்ற ஒரு உணவு கிடைக்கும். ஒரு மாதிரியான செமி சாலிட் அளவிற்கு சமைக்கப்பட்ட மட்டன் மற்றும் சிக்கன் கறி. வித்தியாசமான சுவையுடன் இருக்கும்...

சென்னையில் அது எங்காவது கிடைக்குமா மக்கள்ஸ்??

ராமலக்ஷ்மி said...

ரமழான் நல்வாழ்த்துக்கள்!

nagoreismail said...

நோன்பு நோற்று தன்னை தானே தூய்மைபடுத்தும் ரமலான் மாதத்தை சிறப்புகளை மிகவும் அழகாக பதிவிட்டு இருக்கிறீர்கள். உங்கள் பதிவிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள். பின்னூட்டமிட்டு வாழ்த்துகளை சொன்ன சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள்

Unknown said...

//ரமழான் மாதம், வருடத்திற்கு ஒரு முறை வரும் பயிற்சிக்களம் உன்பதை உணர்ந்து நல்லமுறையில் நோன்பு நோற்று இறைவனின் அருளைப் பெறுவோமாக//
ரமதான் கரீம் முபாரக்.

Anonymous said...

நோன்பு நோற்று தன்னை தானே தூய்மைபடுத்தும் ரமலான் மாதத்தை சிறப்புகளை மிகவும் அழகாக பதிவிட்டு இருக்கிறீர்கள்

RAMADAN KAREEM MUBARAK

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்
:-)///
நன்றி ஆயில்யன்!

Thamiz Priyan said...

/// துளசி கோபால் said...

நோன்பு/விழாக் காலத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள்.///
நன்றி டீச்சர்!

Thamiz Priyan said...

///தமிழன்... said...

ரமழான் மாத்துக்கான வாழ்த்துக்கள்../*//
நன்றி தமிழன்!

Thamiz Priyan said...

///விஜய் ஆனந்த் said...

அனைவருக்கும் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்!!!///
நன்றி விஜய்!

Thamiz Priyan said...

///SanJai said...

அனைவருக்கும் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்!///
நன்றி சஞ்சய்!

Thamiz Priyan said...

///வெண்பூ said...

எல்லாருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்.

ஹைதராபாத்தில் இந்த மாதம் முழுக்க ஹலீம் என்ற ஒரு உணவு கிடைக்கும். ஒரு மாதிரியான செமி சாலிட் அளவிற்கு சமைக்கப்பட்ட மட்டன் மற்றும் சிக்கன் கறி. வித்தியாசமான சுவையுடன் இருக்கும்...

சென்னையில் அது எங்காவது கிடைக்குமா மக்கள்ஸ்??///

நன்றி வெண்பூ! நமக்கு தெரியலியே.. :)

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...

ரமழான் நல்வாழ்த்துக்கள்!///
நன்றி அக்கா!

Thamiz Priyan said...

///nagoreismail said...

நோன்பு நோற்று தன்னை தானே தூய்மைபடுத்தும் ரமலான் மாதத்தை சிறப்புகளை மிகவும் அழகாக பதிவிட்டு இருக்கிறீர்கள். உங்கள் பதிவிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள். பின்னூட்டமிட்டு வாழ்த்துகளை சொன்ன சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள்///
நன்றி இஸ்மாயில் பாய்! உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

Thamiz Priyan said...

///சுல்தான் said...

//ரமழான் மாதம், வருடத்திற்கு ஒரு முறை வரும் பயிற்சிக்களம் உன்பதை உணர்ந்து நல்லமுறையில் நோன்பு நோற்று இறைவனின் அருளைப் பெறுவோமாக//
ரமதான் கரீம் முபாரக்.///
நன்றி சுல்தான் பாய்! உங்களுக்கும் ரமதான் வாழ்த்துக்கள்!

Thamiz Priyan said...

/// ABDUL KADER said...

நோன்பு நோற்று தன்னை தானே தூய்மைபடுத்தும் ரமலான் மாதத்தை சிறப்புகளை மிகவும் அழகாக பதிவிட்டு இருக்கிறீர்கள்

RAMADAN KAREEM MUBARAK///
நன்றி காதர் பாய்! RAMADAN KAREEM MUBARAK

Unknown said...

simple explanation about Fasting
Good work

Unknown said...

RAMZAN MUBARAK TO ALL MY IMAN BROTHERS AND SISTERS FROM NADEEM TALAVADI

நிஜமா நல்லவன் said...

ரமலான் நல்வாழ்த்துக்கள்!

துபாய் ராஜா said...

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

Unknown said...

நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் விரிவா எழுதி இருக்கலாம்.

நட்புடன் ஜமால் said...

ரமலான் நல்வாழ்த்துகள்.

*இயற்கை ராஜி* said...

புனித ரமலான் வாழ்த்துக்கள்.

sakthi said...

ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியண்

அனைத்து இசுலாமியச் சகோதரர்களுக்கும் இனிய நோன்புத் திருநாள் நல்வாழ்த்துகள்

பீர் | Peer said...

ரமழான் வாழ்த்துக்கள்,

suvanappiriyan said...

Ramazhan Valtthukkal

கோமதி அரசு said...

ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


நோன்பின் மேன்மை உணரும் திருநாள்.

SUMAZLA/சுமஜ்லா said...

மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் தமிழ்பிரியன்! ரமலான் முபாரக்! ரமலான் வரவேற்பு கவிதை இங்கே: http://sumazla.blogspot.com/2009/08/blog-post_21.html

சந்தனமுல்லை said...

ரம்ஜான் வாழ்த்துகள்!

ஒரு சின்ன சந்தேகம் :
ஏன் எல்லோரும் 'ரமழான்'ன்னு சொல்றாங்க...'ரம்ஜான்'ன்னுதானே சொல்லுவாங்க!!

gulf-tamilan said...

ரமலான் நல்வாழ்த்துக்கள் !!!

Thamiz Priyan said...

///சந்தனமுல்லை said...

ரம்ஜான் வாழ்த்துகள்!

ஒரு சின்ன சந்தேகம் :
ஏன் எல்லோரும் 'ரமழான்'ன்னு சொல்றாங்க...'ரம்ஜான்'ன்னுதானே சொல்லுவாங்க!!///
உங்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள் ஆச்சி!


ரமழான், ரமதான், ரம்ஜான் என்று பலவகைகளிலும் சொல்லப்படுகின்றது. இச்சொல்லின் மூலம் அரபி. எனவே அரபுகளின் உச்சரிப்பிலேயே சொல்வது தான் சரியாக அமையும். முதலில் அரபியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்து பின்னர் தமிழுக்கு மொழி பெயர்க்கும் போது வந்த சொல்லாக ரம்ஜான் என்பதைக் கருதலாம். Ramazan என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். அரபியில் இருக்கு போன்று இருக்கும் ஒரு எழுத்து தமிழிலோ, இந்தியாவில் இருக்கும் மொழிகளிலோ இல்லை. எனவே இந்த குழப்பம் ஏற்படுகின்றது. ஆனாலும் நமக்கும் வரும் உச்சரிப்பில் சொல்வதில் தவறில்லை.

(வாய் மூடிய நிலையில் நாக்கை மொத்தையாக வலது உள் உதடின் மூலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து ஆரம்பித்து சாதாரண நிலைக்கு கொண்டு வர வேண்டும். அப்போது தான் ழ (Zha) என்ற இந்த எழுத்து வரும்.. எங்க டிரைப் பண்ணிப் பாருங்க... :) )

தமிழன்-கறுப்பி... said...

ரமழான் கரீம்...

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே உங்க புரொபைல் பிச்சர்ல் ஒருத்தரு இருக்காரே அவரு யாரண்ணே..?

Unknown said...

நன்றாக விளக்கி உள்ளீர்கள்.

அனைவருக்கும் நோன்புக்கான வாழ்த்துக்கள்.

30 நாட்களும் சிறப்பாக இருக்க இறைவன் அருள் புரியட்டும்.

Unknown said...

ரமலான் நோன்ப்பு பற்றி மிகவும்ம் அழகாக சொல்லியிருக்கிங்க. இந்த புனித மிக்க மாதத்தில் நம் பாவங்களை எல்லாம் இறைவன் மன்னிக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.
இதோடு நான் தரும் அன்பு விருதைஏற்றுக்கொள்ளவும்
http://azurillcrafts.blogspot.com/2009/08/blog-post_23.html

இல்யாஸ் said...

ரமழான் நல்வாழ்த்துக்கள்

இல்யாஸ் said...

ரமழான் நல்வாழ்த்துக்கள்

seik mohamed said...

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

கலாட்டாப்பையன் said...

அன்பின் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளே...!
தயாராகுவோம் நாம்...!
இறைவழிபாட்டில் திளைத்திருப்போம்!
இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்!
வீண் பேச்சுகளை தவிர்ந்திருப்போம்!
வீணாணவைகளை விட்டும் ஒதுங்கியிருப்போம்!
பகல் முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம்!
இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத் தொழுவோம்!
புனித ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம்!
நாளை மறுமையில் பொன்னான வாழ்வை சென்றடைவோம்!
இங்கே நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம்!
ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்!
அல்குர்ஆனின் வழிமுறையில் செல்வோம்!
அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்!
சுன்னத்தைப் பேணி சிறப்பாக வாழ்வோம்!
சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்!
உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

ரமலான் வாழ்த்துக்கள்

சுசி said...

ரமழான் வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.
குட்டிப் பயல் அதுக்குள்ளே இவ்ளோ வளந்துட்டா...னாஆ....

ஆயில்யன் said...

//(வாய் மூடிய நிலையில் நாக்கை மொத்தையாக வலது உள் உதடின் மூலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து ஆரம்பித்து சாதாரண நிலைக்கு கொண்டு வர வேண்டும். அப்போது தான் ழ (Zha) என்ற இந்த எழுத்து வரும்.. எங்க டிரைப் பண்ணிப் பாருங்க... :) )///

இம்புட்டு கஷ்டப்படாமலே எனக்கு “ல” சூப்பரா வருதுண்ணே!


ரமலான் வாழ்த்துக்கள் :))

ஆயில்யன் said...

/சுசி said...

ரமழான் வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.
குட்டிப் பயல் அதுக்குள்ளே இவ்ளோ வளந்துட்டா...னாஆ....//


சின்னபய நல்லாவே வளர்ந்திட்டான் :))))

ஆயில்யன் said...

// தமிழன்-கறுப்பி... said...

அண்ணே உங்க புரொபைல் பிச்சர்ல் ஒருத்தரு இருக்காரே அவரு யாரண்ணே..?//

எலேய்ய்ய்ய்ய்ய்! ரமலான் வாழ்த்து சொல்ல வந்திருக்குற இடத்துல எதுக்கு உமக்குஇந்த டீடெய்லு????

ஆயில்யன் said...

// சந்தனமுல்லை said...

ரம்ஜான் வாழ்த்துகள்!

ஒரு சின்ன சந்தேகம் :
ஏன் எல்லோரும் 'ரமழான்'ன்னு சொல்றாங்க...'ரம்ஜான்'ன்னுதானே சொல்லுவாங்க!!//

பாஸ் இது சந்தேகம் இல்ல ஒரு கொழப்பம் ! ரமலான்னு சொல்லுங்க நல்லா இருக்கும் இல்ல “ழ”போட்டுத்தான் சொல்லணும்ன்னு யாரச்சும் பிடிவாதம் புடிச்சா ஆம்பூர் பிரியாணி கொடுங்க அப்புறமா டிரை பண்றேன் சொல்லிடுங்க பாஸ்!!!

ஆயில்யன் said...

ஹைய்ய்ய்ய்ய மீ த அம்பதேய்ய்ய்ய்ய்ய்ய்!

Jaleela Kamal said...

அனைவருக்கும் ரமலான் முபாரக்

ரமலான் மாதம் ஓதவேண்டியவை

http://allinalljaleela.blogspot.com/2009/08/blog-post_3247.html

R.Ameer Beema said...
This comment has been removed by the author.
R.Ameer Beema said...

entha seyalai thodangum mun bismillah enru sollungal ethuda seyal ethovaga erunthalum vetri ungalai thedeevarum
by R.Ameer Beema

R.Ameer Beema said...
This comment has been removed by the author.
R.Ameer Beema said...
This comment has been removed by the author.