ஆம்ப்ளிபயர் டெஸ்டிங்...!!!
ஹலோ!
ஹலோ!
ஹலோ!
ஓகே! சக்ஸஸ்!
ஸ்பீக்கர் டெஸ்டிங்..!!!
ஹலோ!
ஹலோ!
ஹலோ!
ஓகே! சக்ஸஸ்!
மைக் டெஸ்டிங்...!!!
ஹலோ!
ஹலோ!
ஹலோ!
டபுள் ஓகே! சக்ஸஸ்! சக்ஸஸ்!
விடுமுறை எல்லாம் காற்று வேகத்தில் கரைந்து விட மீண்டும் பழையபடி விட்ட இடத்துக்கு திரும்பியாச்சுங்க...
மகிழ்வுடன் கழிந்தன நாட்கள்! வீடு கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பித்தாகி விட்டது! இறைவன் நாடினால் விரைவில் கனவு நிறைவேறலாம்!
நல்ல நண்பர்களின் சந்திப்புகள்! கொஞ்சமா ஊர் சுற்றலுடன் விடுமுறை இறுதிக்கு வந்தது.
கடைசி கட்ட பரபரப்புகளால் நண்பர்களுக்கு தொலை பேச முடியவில்லை. சென்னையில் சிலரை சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்ததும் இயலாமல் போய் விட்டது.
மன்னிப்பு வேண்டிக் கொள்கின்றேன். முன்பை விட இப்போது இணையத்தில் இருப்பதால் நெருக்கமாக இருப்போம் என்பதால் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நம்புகின்றேன்.
கடைசி நேர சிக்கலால் சென்னையில் வாங்க வேண்டி இருந்த சில புத்தகங்கள் வாங்க இயலாமல் போய் விட்டது என்று வருத்தமும் கூட
சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன் மற்றும் சில மலையாளத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டவைகளும் வாங்க இயலாமல் போனவையில்
அடங்கும்...
ஆனாலும் சில புத்தகங்களை வாங்கி வந்துள்ளேன். எழுதுவதை விட வாசிப்பது கஷ்டமாகி விட்டது போல் ஒரு உணர்வு... ராஜேஷ் குமாரையும், கல்கி, சுஜாதாவையும் மட்டும் படித்து பழகியவனுக்கு இது எப்படி அமையும் என தெரியவில்லை.
வாங்கிய புத்தகங்கள்சாரு நிவேதிதா - ராஸ லீலா, ஸீரோ டிகிரி
ஜெயமோகன் - காடு, ஏழாம் உலகம்
ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள்
கலீல் ஜிப்ரான் - முறிந்த சிறகுகள்
ஷோபா சக்தி - ம்
ரமேஷ் பிரேம் - கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள், சொல் என்றொரு சொல்
விகடன் பிரசுரம் - காதல் படிக்கட்டுக்கள், ரொமான்ஸ் ரகசியங்கள்
கோபி கிருஷ்ணன் - டேபிள் டென்னிஸ்
நகுலன் - நவீனன் டைரி
கி.ராஜ நாராயணன் - கோபல்ல கிராம மக்கள்.இவைகளை ஒரு நண்பருக்காக வாங்கி வந்து இருந்தாலும் முதலில் பொறுமையாக படித்து விட்டே அவருக்கு தர வேண்டும்.. ;))
ஜெயமோகனின் ஏழாம் உலகம் முதலில் படிக்க வேண்டுமா? அல்லது
நான் கடவுள் படத்தைப் பார்த்து விட்டு ஏழாம் உலகம் படிக்க வேண்டுமா?
யாராவது உதவுங்கள் நண்பர்களே!
இரண்டு மாதம் பதிவுகளின் வாசிப்பு விடுப்பு விட்டதால் இன்னும் கூகுள் ரீடரைத் திறக்கவில்லை.. பொறுமையாக அனைத்தையும் படிக்க வேண்டும். இன்னும் பதிவர்களின் பதிவுகளைப் படிக்க ஆரம்பிக்கவில்லை.
வீட்டில் அனைவரும் நலம்..... மகன் சீராக வளர்ந்து வருகின்றான்...... ரொம்ப மிஸ் பண்றேன்...
