Thursday, February 26, 2009

ஜெமோவின் ”நான் கடவுள்” - விமர்சனமல்ல - ஸ்தல புராணம்

தமிழ் பதிவுலகில் நான் கடவுள் படத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விமர்சனங்கள் வந்து விட்டன. எனவே இது விமர்சனப் பதிவு அல்ல.. ஆனாலும் ஒரு விடயத்தை மட்டும் தொட்டு விட்டு விட்டு சொல்கின்றேன். பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்கள் மீது ஏதாவது ஒரு முத்திரை குத்தப்பட்டுவது வழக்கம். எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல..

நான் கடவுள் படத்தில் நாயகியைக் கொண்டு செல்ல நாயர் வரும் போது காப்பாற்றப் படுகின்றாள். அப்போது சாமி காப்பாத்துங்க என்று ஓடுகின்றாள். இரண்டாவதாக ஒரு அலங்கோலமானவன் வரும் போது வேறு மத (கிறித்தவ) தெய்வத்தை வேண்டுகின்றாள். அப்போது அவளுக்கு பாதுகாப்பு கிடைக்காமல் சிதைக்கப்படுகின்றாள். இதன் நுண்ணரசியல் பற்றி ஒரு பதிவர் எழுதி இருந்தார்.

இந்த காட்சியைப் பற்றி எழுதும் போது ஜெயமோகன் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

இன்னொன்று சிலகாட்சிகள் வெட்டுபட்டுள்ளன. அம்சவல்லி மதமாற்றம் செய்யப்படுகிறாள். அடுத்த காட்சி வலுவானது. தாண்டவன் அவளை கொடுக்கும்படிக் கோர முப்பது வெள்ளிக்காசுக்கு காட்டிக்கொடுக்க நாங்கள் ஒன்றும் யூதாஸ்கூட்டம் இல்லைஎன்று கன்யாஸ்திரீ சொல்ல அப்படியானால் முப்பதாயிரம் வெள்ளிக்காசு?’ என்பான் தாண்டவன். அடுத்தகாட்சி அவன் இடத்தில் இருக்கும் அம்சவல்லி. அது படத்தில் இல்லை.”

இந்த காட்சி மட்டும் வைக்கப்பட்டிருந்தால் “ஜெயமோகனின் குடுமி அவிழ்ந்து விட்டது.. நன்றாக இழுத்து கட்டிக் கொள்ளுங்கள்” என நாறடித்து இருப்பார்கள் தானே.. சரி.. சரி... நமக்கு இந்த அரசியல் எல்லாம் வேண்டாம். நாம வேற பார்க்கலாம்.

படத்திற்கு நிறைய செலவானதாக படிக்க முடிந்தது. காசி, அந்த கரடு, மற்றும் பள்ளத்தில் இருக்கும் கோவில், குளிக்கும் மற்றும் சண்டை நடக்கும் கும்பக்கரை அருவி என்று நான்கு இடங்களே அதிகமான இடங்களை ஆக்கிரமித்து இருந்தன. இதில் படமாக்குவதற்கா இவ்வளவு செலவானது என்று ஆச்சரியமா இருக்கின்றது... என்னவோ .. இருக்கட்டும் பாலாவுக்கே வெளிச்சம்.

இந்த படத்தை விடுமுறை முடிந்து வந்ததும் வேகமாக பார்த்ததற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு... ஒரு காட்சி எங்கள் கடைக்கு முன் படமாக்கப்பட்டு இருந்தது தான். குருட்டுப் பெண்ணை( நாயகி பூஜா) ஒரு கிழவன் கை பிடித்து பிச்சை எடுக்க அழைத்துச் செல்வது போன்ற காட்சி தான் அது. யாருமே உணராத வண்ணம் அந்த காட்சி தத்ருபமாக எடுக்கப்பட்டது. எடுத்து முடித்ததும் படப்படிப்பு நடந்தது தெரிந்தது. ஆனால் அந்த காட்சி படத்தில் வரவே இல்லை.. ஏமாற்றம்.

காசிக்கு நாம போனதில்லை. அதனால் அது தெரியாது. அந்த பள்ளத்தில் உள்ள கோவில் காஞ்சிபுரம் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் எடுக்கப்பட்டதாம். நன்றாக எடுத்துள்ளார்கள்.

மலையில் உள்ள கோவில் எடுக்கப்பட்ட இடம் நமக்கு ரொம்ப பரிட்சயமான இடம். அதன் அடிவாரத்தில் தான் எங்க தீப்பெட்டி ஆபிஸ் இருந்தது. (சிறு தொழில் வளர்ச்சி வாரியம் அதிகாரிகளின் திருட்டுத் தனத்தால் நஷ்டமடைந்ததெல்லாம் எங்கள் கண்ணீர்க் கதை. இன்றும் குட்டிச்சுவர்களாக கட்டிட எச்சங்கள் இருக்கின்றன.) சின்ன வயசில் அந்த பகுதிகளில் எல்லாம் சுற்றித் திரிந்தோம். எனவே அந்த கோவில் ஒரு புதிய அனுபவத்தைத் தரவில்லை. அந்த கரட்டுக்கு மக்கள் போக்குவரத்து கூட இருக்காது... இப்போது வேண்டுமானால் இருக்கலாம்... ஏனெனில் சினிமா எடுக்கப்பட்ட இடமாக இருப்பதால்..:) அந்த அருவி மற்றும் தண்ணீர்ப் பாறைகளும் அடிக்கடி வழுக்கி விளையாடி இடம் தான்.

டிஸ்கி : இப்போது தான் ஜெயமோகனின் ஏழாம் உலகம் படித்துக் கொண்டு இருக்கின்றேன். இதை மூலமாக வைத்து தான் நான் கடவுள் படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.. படித்து விட்டு மீண்டும் பேசலாம்.

(அடிக்கடி ஏதாவது பதிவு போடனுமாமே.. அதான்.. ;) )

42 comments:

வடகரை வேலன் said...

தமிழ்,

படத்தின் கதைக்களம் பழனிதான். வேறு வழியில்லாமல் அந்த இடத்தில் எடுத்திருக்கிறார்கள்.

ஏழாம் உலகம் தரும் அனுபவத்தைப் படம் ஒருபோதும் தரமுடியாது. கையோடு அவரின் காடு நாவலையும் வாசித்து விடுங்கள்

எம்.எம்.அப்துல்லா said...

//ஏழாம் உலகம் தரும் அனுபவத்தைப் படம் ஒருபோதும் தரமுடியாது. கையோடு அவரின் காடு நாவலையும் வாசித்து விடுங்கள்

//

வலுவா ரிப்பீட்டிக்கிறேன்.

அ.மு.செய்யது said...

அசத்துறீங்க...

இண்ட்ரஸ்டிங்கா இருக்கு உங்க கருத்துக்கள்...

வெயிலான் said...

உங்களுக்கு எந்த ஊர்?

priya said...

எப்படி உங்களால இவ்வளவு லாவகமா வார்த்தைகள எழுத முடியுது? ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்க எழுத்துக்கள். வார்த்தைகள் அப்படியே அருவி மாதிரி கொட்டுது. சும்மா சொல்ல கூடாது எவ்வளவு அழகா, கோர்வையா உங்க கருத்துக்கள் இருக்கு தெரியுமா? எனக்கு அப்படியே மெய் சில்லிர்க்குது. உங்ககிட்ட நிறைய கத்துக்கணும். தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பதிவை, வாழ்த்துக்கள்.

எப்படி உங்களால இவ்வளவு லாவகமா வார்த்தைகள எழுத முடியுது? ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்க எழுத்துக்கள். வார்த்தைகள் அப்படியே அருவி மாதிரி கொட்டுது. சும்மா சொல்ல கூடாது எவ்வளவு அழகா, கோர்வையா உங்க கருத்துக்கள் இருக்கு தெரியுமா? எனக்கு அப்படியே மெய் சிலிர்க்குது. உங்ககிட்ட நிறைய கத்துக்கணும். தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பதிவை, வாழ்த்துக்கள்.

priya said...

எப்படி உங்களால இவ்வளவு லாவகமா வார்த்தைகள எழுத முடியுது? ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்க எழுத்துக்கள். வார்த்தைகள் அப்படியே அருவி மாதிரி கொட்டுது. சும்மா சொல்ல கூடாது எவ்வளவு அழகா, கோர்வையா உங்க கருத்துக்கள் இருக்கு தெரியுமா? எனக்கு அப்படியே மெய் சில்லிர்க்குது. உங்ககிட்ட நிறைய கத்துக்கணும். தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பதிவை, வாழ்த்துக்கள்.

priya said...

கலக்கறிங்க................................ வாங்க வாங்க எத வேனாலும் எழுதுங்க... படிக்க நாங்கலாம் இருக்கும்போது நீங்க எழுதறதுக்கு என்ன? எழுதுங்க எழுதுங்க ..... எழுதிகிட்டே இருங்க......

priya said...

உங்க ரசிகர்கள்ல நானும் சேர்ந்துட்டேன்.

தமிழன்-கறுப்பி... said...

தல படத்தை பாக்காம புத்தகத்தை படிக்க சொன்னேன்...:)

பொறுமை பொறுமை...!

தமிழன்-கறுப்பி... said...

\\
(அடிக்கடி ஏதாவது பதிவு போடனுமாமே.. அதான்.. ;) )
\\

நடத்துங்க நடத்துங்க..:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

அடிக்கடி ஏதாவது பதிவு போடனுமாமே.. அதான்.. ;

சரி சரி, அதோட நீங்க் ஏழாம் உலக்ம் படிக்கறீங்கன்னும் தெரியுது.

நிஜமா நல்லவன் said...

தல என்ன கொடுமை இது?

நிஜமா நல்லவன் said...

வந்ததுமே சூடாகிடுச்சி....

நிஜமா நல்லவன் said...

எங்கயோ போய்ட்டீங்க தல.....

நிஜமா நல்லவன் said...

இனிமே எங்க நினைப்பு எல்லாம் இருக்குமா???

நிஜமா நல்லவன் said...

சரி ... சரி..... நடத்துங்க....நடத்துங்க....

நிஜமா நல்லவன் said...

/ priya said...

உங்க ரசிகர்கள்ல நானும் சேர்ந்துட்டேன்./

தல...நானும் சேர்ந்துக்குறேன்....

நிஜமா நல்லவன் said...

/ அமிர்தவர்ஷினி அம்மா said...

அடிக்கடி ஏதாவது பதிவு போடனுமாமே.. அதான்.. ;

சரி சரி, அதோட நீங்க் ஏழாம் உலக்ம் படிக்கறீங்கன்னும் தெரியுது./

அவரு நிறைய புத்தகங்கள் வாங்கிட்டு போய் இருக்கார்....ஒன்னு ஒண்ணா படிக்கும் போது ஒரு பதிவு போடுவாரு....ஆனா எல்லா பதிவும் சூடாகணும் தல....இல்லைன்னா நடக்கிறதே வேற...ஆமா...சொல்லிட்டேன்...:)

Thooya said...

:)

நிஜமா நல்லவன் said...

/ஏழாம் உலகம்/

பெரிய படிப்பு படிக்குறீங்க....என்கிட்டே ஏழாம் உலகம் பத்தி ஒருத்தர் பேச ஆரம்பிச்சார்....நான் கேட்ட ஒரே கேள்வில என் முகத்தில இனி முழிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டார்....சரி என்ன கேள்வின்னு தானே கேக்குறீங்க....அது வேற ஒன்னும் இல்லைங்க...ஒரு உலகம் இங்க இருக்கு....மிச்ச ஆறு உலகம் எங்க இருக்குன்னு கேட்டேன்....நான் கேட்டது தப்பா ....நீங்களே சொல்லுங்க தல....!

எப்படி உங்களால இவ்வளவு லாவகமா வார்த்தைகள எழுத முடியுது? ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்க எழுத்துக்கள். வார்த்தைகள் அப்படியே அருவி மாதிரி கொட்டுது. சும்மா சொல்ல கூடாது எவ்வளவு அழகா, கோர்வையா உங்க கருத்துக்கள் இருக்கு தெரியுமா? எனக்கு அப்படியே மெய் சில்லிர்க்குது. உங்ககிட்ட நிறைய கத்துக்கணும். தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பதிவை, வாழ்த்துக்கள்./

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

கானா பிரபா said...

தல

ஊருக்கு போய் வந்ததும் வராததுமா சூடான இடுகையா, நடந்துங்க நடந்துங்க. இன்னொருத்தரும் வர இருககார், வந்தா என்னவெல்லாம் ஆகப்போவுதோ ;)

நிஜமா நல்லவன் said...

/ கானா பிரபா said...

தல

ஊருக்கு போய் வந்ததும் வராததுமா சூடான இடுகையா, நடந்துங்க நடந்துங்க. இன்னொருத்தரும் வர இருககார், வந்தா என்னவெல்லாம் ஆகப்போவுதோ ;)/
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

cheena (சீனா) said...

என்ன எழுதுவது ........

தமிழ் பிரியன் said...

///வடகரை வேலன் said...
தமிழ்,
படத்தின் கதைக்களம் பழனிதான். வேறு வழியில்லாமல் அந்த இடத்தில் எடுத்திருக்கிறார்கள்.
ஏழாம் உலகம் தரும் அனுபவத்தைப் படம் ஒருபோதும் தரமுடியாது. கையோடு அவரின் காடு நாவலையும் வாசித்து விடுங்கள்///

ஏழாம் உலகம் இதுவரை வாசிக்காத வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்துள்ளது. காடு படிக்க ஆரம்பித்து விட்டேன்.

தமிழ் பிரியன் said...

///எம்.எம்.அப்துல்லா said...
//ஏழாம் உலகம் தரும் அனுபவத்தைப் படம் ஒருபோதும் தரமுடியாது. கையோடு அவரின் காடு நாவலையும் வாசித்து விடுங்கள்
//
வலுவா ரிப்பீட்டிக்கிறேன்.////
வலுவா படிக்க ஆரம்பிச்சாச்சு அண்ணே!

தமிழ் பிரியன் said...

///அ.மு.செய்யது said...

அசத்துறீங்க...

இண்ட்ரஸ்டிங்கா இருக்கு உங்க கருத்துக்கள்...///
நன்றி செய்யது!

தமிழ் பிரியன் said...

///வெயிலான் said...

உங்களுக்கு எந்த ஊர்?////
பிறந்து வளர்ந்த சொந்த ஊர் பெரியகுளம். தற்சமயம் இடைக்காலமாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் இருக்கின்றோம்.

தமிழ் பிரியன் said...

///priya said...

கலக்கறிங்க................................ வாங்க வாங்க எத வேனாலும் எழுதுங்க... படிக்க நாங்கலாம் இருக்கும்போது நீங்க எழுதறதுக்கு என்ன? எழுதுங்க எழுதுங்க ..... எழுதிகிட்டே இருங்க......////
மிக்க நன்றி பிரியா!

தமிழ் பிரியன் said...

///தமிழன்-கறுப்பி... said...
தல படத்தை பாக்காம புத்தகத்தை படிக்க சொன்னேன்...:)
பொறுமை பொறுமை...!///
]முடியல தல.. அதனால் தான்...ஆனால் முதலில் படம் தான் பார்க்கனும்.. அப்ப தான் ஏழாம் உலகத்தின் மொழி நடை புரியும் என்பது என் கருத்து.

தமிழ் பிரியன் said...

///அமிர்தவர்ஷினி அம்மா said...

அடிக்கடி ஏதாவது பதிவு போடனுமாமே.. அதான்.. ;

சரி சரி, அதோட நீங்க் ஏழாம் உலக்ம் படிக்கறீங்கன்னும் தெரியுது.////
ஹிஹிஹிஹி

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said...

வந்ததுமே சூடாகிடுச்சி....///
தலைப்பு தல... எல்லாம் அதன் மகிமை தானே

தமிழ் பிரியன் said...

///Thooya said...

:)///
நன்றி தூயாக்கா!

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said...

/ஏழாம் உலகம்/

பெரிய படிப்பு படிக்குறீங்க....என்கிட்டே ஏழாம் உலகம் பத்தி ஒருத்தர் பேச ஆரம்பிச்சார்....நான் கேட்ட ஒரே கேள்வில என் முகத்தில இனி முழிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டார்....சரி என்ன கேள்வின்னு தானே கேக்குறீங்க....அது வேற ஒன்னும் இல்லைங்க...ஒரு உலகம் இங்க இருக்கு....மிச்ச ஆறு உலகம் எங்க இருக்குன்னு கேட்டேன்....நான் கேட்டது தப்பா ....நீங்களே சொல்லுங்க தல....!///
எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு தல... நீங்களாவது சொல்லுங்க

தமிழ் பிரியன் said...

///கானா பிரபா said...

தல

ஊருக்கு போய் வந்ததும் வராததுமா சூடான இடுகையா, நடந்துங்க நடந்துங்க. இன்னொருத்தரும் வர இருககார், வந்தா என்னவெல்லாம் ஆகப்போவுதோ ;)////
சின்ன பாண்டி தானே? களத்தில் இறங்கிட்டாரே இப்ப.. ;-))

தமிழ் பிரியன் said...

///cheena (சீனா) said...

என்ன எழுதுவது ........////
அதான் எழுதியாச்சே.. அம்புட்டுத் தேன்... :)))

LinkWithin

Related Posts with Thumbnails