ஆம்ப்ளிபயர் டெஸ்டிங்...!!!
ஹலோ!
ஹலோ!
ஹலோ!
ஓகே! சக்ஸஸ்!
ஸ்பீக்கர் டெஸ்டிங்..!!!
ஹலோ!
ஹலோ!
ஹலோ!
ஓகே! சக்ஸஸ்!
மைக் டெஸ்டிங்...!!!
ஹலோ!
ஹலோ!
ஹலோ!
டபுள் ஓகே! சக்ஸஸ்! சக்ஸஸ்!
விடுமுறை எல்லாம் காற்று வேகத்தில் கரைந்து விட மீண்டும் பழையபடி விட்ட இடத்துக்கு திரும்பியாச்சுங்க...
மகிழ்வுடன் கழிந்தன நாட்கள்! வீடு கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பித்தாகி விட்டது! இறைவன் நாடினால் விரைவில் கனவு நிறைவேறலாம்!
நல்ல நண்பர்களின் சந்திப்புகள்! கொஞ்சமா ஊர் சுற்றலுடன் விடுமுறை இறுதிக்கு வந்தது.
கடைசி கட்ட பரபரப்புகளால் நண்பர்களுக்கு தொலை பேச முடியவில்லை. சென்னையில் சிலரை சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்ததும் இயலாமல் போய் விட்டது. மன்னிப்பு வேண்டிக் கொள்கின்றேன். முன்பை விட இப்போது இணையத்தில் இருப்பதால் நெருக்கமாக இருப்போம் என்பதால் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நம்புகின்றேன்.
கடைசி நேர சிக்கலால் சென்னையில் வாங்க வேண்டி இருந்த சில புத்தகங்கள் வாங்க இயலாமல் போய் விட்டது என்று வருத்தமும் கூட
சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன் மற்றும் சில மலையாளத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டவைகளும் வாங்க இயலாமல் போனவையில்
அடங்கும்...
ஆனாலும் சில புத்தகங்களை வாங்கி வந்துள்ளேன். எழுதுவதை விட வாசிப்பது கஷ்டமாகி விட்டது போல் ஒரு உணர்வு... ராஜேஷ் குமாரையும், கல்கி, சுஜாதாவையும் மட்டும் படித்து பழகியவனுக்கு இது எப்படி அமையும் என தெரியவில்லை.
வாங்கிய புத்தகங்கள்
சாரு நிவேதிதா - ராஸ லீலா, ஸீரோ டிகிரி
ஜெயமோகன் - காடு, ஏழாம் உலகம்
ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள்
கலீல் ஜிப்ரான் - முறிந்த சிறகுகள்
ஷோபா சக்தி - ம்
ரமேஷ் பிரேம் - கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள், சொல் என்றொரு சொல்
விகடன் பிரசுரம் - காதல் படிக்கட்டுக்கள், ரொமான்ஸ் ரகசியங்கள்
கோபி கிருஷ்ணன் - டேபிள் டென்னிஸ்
நகுலன் - நவீனன் டைரி
கி.ராஜ நாராயணன் - கோபல்ல கிராம மக்கள்.
இவைகளை ஒரு நண்பருக்காக வாங்கி வந்து இருந்தாலும் முதலில் பொறுமையாக படித்து விட்டே அவருக்கு தர வேண்டும்.. ;))
ஜெயமோகனின் ஏழாம் உலகம் முதலில் படிக்க வேண்டுமா? அல்லது நான் கடவுள் படத்தைப் பார்த்து விட்டு ஏழாம் உலகம் படிக்க வேண்டுமா?
யாராவது உதவுங்கள் நண்பர்களே!
இரண்டு மாதம் பதிவுகளின் வாசிப்பு விடுப்பு விட்டதால் இன்னும் கூகுள் ரீடரைத் திறக்கவில்லை.. பொறுமையாக அனைத்தையும் படிக்க வேண்டும். இன்னும் பதிவர்களின் பதிவுகளைப் படிக்க ஆரம்பிக்கவில்லை.
வீட்டில் அனைவரும் நலம்..... மகன் சீராக வளர்ந்து வருகின்றான்...... ரொம்ப மிஸ் பண்றேன்...
99 comments:
வெல்கம் பேக்
உங்க ஜூனியர் கலக்குறார்!
முதலில் நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம்
ரமேஷ் ப்ரேமின்
கனவில் பெய்த மழையை பற்றிய சில இசை குறிப்புகள்
(நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்)
வருக வருக ...:)சூப்பரா இருக்கார் ஜூனியர் சார்..
WELCOME BACK!
படங்களுக்கு நன்றி:)!
வாங்க வாங்க
வாங்க அண்ணாச்சி.............. வருக
ஹாய்,
வாங்கண்ணே வாங்க......
பையன் ரொம்பவே அழகா இருக்கானே ஜாக்கிரதையா பாத்துக்கோங்க,ஏன்னா கால்ம் கெட்டு போயிடுச்சு, இப்பவே பொண்ணுங்கல்லாம் ஃபிக்ஸ் பண்ணிக்கறாங்கலாம் நல்ல பிகராப் பாத்து, அதான் சொன்னேன்.
ஹாய்,
வாங்கண்ணே வாங்க......
பையன் ரொம்பவே அழகா இருக்கானே ஜாக்கிரதையா பாத்துக்கோங்க,ஏன்னா கால்ம் கெட்டு போயிடுச்சு, இப்பவே பொண்ணுங்கல்லாம் ஃபிக்ஸ் பண்ணிக்கறாங்கலாம் நல்ல பிகராப் பாத்து, அதான் சொன்னேன்.
ஹாய்,
படிச்சுகிட்டே படம் பாக்கலாம், படம் பாத்துகிட்டும் படிக்கலாம்......
அட வந்தாச்சா !!அந்த நண்பருக்கு பிறகு கொடுக்கலாம்.இங்கு முதலில் அனுப்பவும்.
WELCOME BACK!
ஸ்மைலி இங்கு :)))
தமிழன் -கறுப்பி எங்கு இருந்தாலும் மேடைக்கு வரவும்.
ஆஹா...
பதிவைப்போட்டிடுச்சுடா சிங்கம்..!
தல...
நான் கொஞ்சம் பிஸி வித் ஸம் பிராப்ளம்...
அதனால அழைக்க முடியாமல் இருக்கு, ஆறுதலா கூப்பிட்டு அறுக்கறேனே...:)
வந்து கொஞ்ச நாளைக்கு 'அதே' பீலிங்கல இருக்கட்டும்னு விட்டுவைக்கிறேன்...;)
வாங்காத புத்தகங்களை பற்றி யோசிக்காதிங்க தல அடுத்த வாட்டி பாத்துக்கலாம்...;)
நம்ம வாழ்க்கை சவுதின்னே ஆயிடுச்சு இன்னும் ஒரு வருசத்துக்கு அசைய முடியாது..
சின்ன தல (மகன்) கலக்கறார் நான் கேட்டேன்னு சொல்லுங்க...
நான் கடவுள் படம் பாக்காம புத்தகத்தை படிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்...
gulf-tamilan said...
\\
ஸ்மைலி இங்கு :)))
தமிழன் -கறுப்பி எங்கு இருந்தாலும் மேடைக்கு வரவும்.
\\
அதான் வந்துட்டம்ல :)
நீரு எங்கய்யா போனீர்...:)!!
தல...
உங்க படம் ஒண்ணு அனுப்புங்க ஊருக்கு போனதுல என்ன வித்தியாசம்னு பார்க்க வேண்டாமா...
:)
என்ன வலையுலகமே ஒரு சிங்கம் திரும்ப வந்திருக்கு என்னோட சேர்ந்து வரவேற்க யாரும் இல்லையா...:)
யாரு அந்த நண்பர் அவருக்கு சனி தலையில உக்காந்துட்டிருக்கார் போல...
சாருவை எல்லாம் படிக்கணும்னு ஆசைப்பட்டிருக்கார்...;)
அப்புறம் டைம் கிடைச்சா
வாறேன் தல...
இப்போதைக்கு பிரேக்!!
me the 25th..
நாந்தான் கடைசியா? வரவேற்புக்கு!
இனிய பயணம்முடிந்து திருப்பிய தமிழ்பிரியனுக்கு நல்வரவு. குறும்புகளை அருகில் இருந்து கண்டு மகிழ வேண்டிய பருவத்தில் மகனின் பிரிவு சிறிது வேதனைதான். அது அவன் எதிர்காலத்துக்கு என்னும் போது
அது ஆறுதல்தான். சரிதானே?
தமிழன் எப்போது ஜெத்தா வருகை!!!
ஹெய் அண்ண வந்துட்டாரு அண்ண வந்துட்டாரு... எல்லோரும் பார்த்துக்குங்க அண்ண வந்துட்டாரு....
வாங்க.. வாங்க.. ஜீனியர் சூப்பர்..
அன்பின் தமிழ்பிரியன்
வருக வருக - வலைப்பூவினிற்கு - இணையத்திற்கு - நல்வரவு
சந்தித்த தினம் பசுமையாக நினைவில் நிற்கிறது - மகனின் குறும்பு ரசிக்கத் தக்கது. இல்லவேலைகள் இனிதே நடைபெற நல்வாழ்த்துகள்
வாங்கண்ணா...குட்டி பையனின் இரண்டாவது படம் கலக்கல் :)
வாங்க தல
எல்லோரும் நலமா
வாங்க தல... குட்டி பையன் போட்டோ கலக்கல்... வாழ்த்துக்கள்...
ஆம்ப்ளிபயர் டெஸ்டிங்...!!!
ஹலோ!
ஹலோ!
ஹலோ!
ஸ்பீக்கர் டெஸ்டிங்..!!!
ஹலோ!
ஹலோ!
ஹலோ!
மைக் டெஸ்டிங்...!!!
ஹலோ!
ஹலோ!
ஹலோ!
டபுள் ஓகே! சக்ஸஸ்! சக்ஸஸ்!
வெல்கம் பேக் அண்ணா.. :)) உங்க பின்னூட்டப் பொட்டி வொர்க் பண்ணுதான்னு டெஸ்ட் பண்ணேன்... (நாங்களும் ரவுடிதான்.. ;)))
//கொஞ்சமா ஊர் சுற்றலுடன் விடுமுறை இறுதிக்கு வந்தது.//
கொஞ்சமாவா?? சரிதான் :)))
//மன்னிப்பு வேண்டிக் கொள்கின்றேன். //
மன்னித்துவிட்டேன் ;)))
குட்டிபையன் ரொம்ப கியூட்... அவன் அத்தை மாதிரியே... :)) (யார் அத்தையா?? நான் தான்.. :)))
வந்த வேலை முடிஞ்சது நான் கிளம்பறேன் :))))
வாய்யா வாய்யா வத்தலகுண்டு வெடிகுண்டு! அவனவன் இங்க பதிவு போட்டு கிட்டு காத்து வாங்கிகிட்டு இருக்கான்யா நீர் இல்லாம!
ஜூனியர் ஜூப்பரு!
சரி நல்ல பிள்ளையா பதிவ போட்டு தாக்குய்யா!
வாங்கப்பு.. ! நலமா இருக்கீயளா? ஊருக்கு வந்துட்டு ஒருபக்கமும் வரக்காணோம்..!
சரி..சரி..குடும்பத்தோட சந்தோசமா இருந்தவரைக்கும் சரி!
வருக வருக!
உங்க ஜூனியர் கலக்குறார்!
படங்களுக்கு நன்றி!
/படிச்சுகிட்டே படம் பாக்கலாம், படம் பாத்துகிட்டும் படிக்கலாம்/
rippeettu..!
/சின்ன தல (மகன்) கலக்கறார் நான் கேட்டேன்னு சொல்லுங்க../
tharamattaaraam...:)
50
வாங்க ஐயா, நல்வரவு
வாய்யா வா வா.
நீ இல்லாம இங்க ஒரு கை குறையுது.
பையன் அம்மா மாதிரி இருக்கதால அழகா இருக்கான்.
welcome back.. உங்க ஜூனியர் கலக்குறார்!
:)
// ஸ்ரீமதி said...
குட்டிபையன் ரொம்ப கியூட்... அவன் அத்தை மாதிரியே... :)) (யார் அத்தையா?? நான் தான்.. :)))//
அட்டகாசம் தாங்க முடியலடா சாமி..
வாங்க வாங்க
அழகு ஃபோட்டோ.
கண்டிப்பா மிஸ் தான் பண்றீங்க.
விரைந்து திரும்பி சங்கத்தில் இணைந்தமைக்கு மகிழ்ச்சி.. ஜூனியரின் சிரிப்பு கொள்ளை அழகு.. வாழ்த்துகள் தமிழ் பிரியன்.!
பெரிய்ய்ய லிஸ்ட் தந்துவிட்டு நண்பரோடதுன்னு ஜகா வாங்கிட்டீங்களே.. நீங்கள் வாங்க விரும்பியவை யாவை? இந்த லிஸ்ட்டில் அனைத்துமே சிறப்பானவைதான் என கருதுகிறேன், சிலவற்றையே படித்திருக்கிறேன்.
வாங்கண்ணே, வாங்கண்ணே, வாங்கண்ணே !
ஊரில் உங்களிடம் இருமுறை தொலைபேசியில் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
நீங்க ஊரில் இருந்த நாட்களில் தொடர்ச்சியாக நான் சுற்றுப் பயணத்தில் இருந்ததால் பார்க்க முடியாமலும், அடிக்கடி பேச முடியாமலும் போனதில் மிகுந்த வருத்தம் எனக்கு. என் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
பையன் செம Cute..
எங்க ஊருக்கு போயிட்டு வந்தத எல்லாம் இதுல சொல்லவே இல்ல... :))
எம்மா நேரம் டெஸ்ட் பண்ணிக்கினே கீற. புது போஸ்ட் போடத்தாவல?
வாங்க வாங்க...
//விகடன் பிரசுரம் - காதல் படிக்கட்டுக்கள், ரொமான்ஸ் ரகசியங்கள்
//
superu :)
//இவைகளை ஒரு நண்பருக்காக வாங்கி வந்து இருந்தாலும் முதலில் பொறுமையாக படித்து விட்டே அவருக்கு தர வேண்டும்.. ;))///
nallavelai en perai sollala :))
methuva padichutu kodunga no probelm :)))
பையன் ரொம்ப அழகா இருக்கான். சுத்தி போடுங்க பாஸ். ஆனந்த விகடன்ல வர உங்க தொகுப்புகள படிச்சிருக்கேன், ரொம்ப நல்லா இருக்கும். ஆனா அதைவிட இங்க நல்லா எழுதறிங்க. Great, Super, Marvellous. Keep it up.
///வால்பையன் said...
வெல்கம் பேக்///
நன்றி வால் பையன்!
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
வருக வருக ...:)சூப்பரா இருக்கார் ஜூனியர் சார்..///
நன்றி அக்கா!
/// ராமலக்ஷ்மி said...
WELCOME BACK!
படங்களுக்கு நன்றி:)!///
நன்றிக்கா!
//முரளிகண்ணன் said...
வாங்க வாங்க//
வந்துட்டோம்ண்ணா!
///அத்திரி said...
வாங்க அண்ணாச்சி.............. வருக///
வந்தாங்குச்சுங்க அண்ணாச்சி!
///Sumathi. said...
ஹாய்,
வாங்கண்ணே வாங்க......
பையன் ரொம்பவே அழகா இருக்கானே ஜாக்கிரதையா பாத்துக்கோங்க,ஏன்னா கால்ம் கெட்டு போயிடுச்சு, இப்பவே பொண்ணுங்கல்லாம் ஃபிக்ஸ் பண்ணிக்கறாங்கலாம் நல்ல பிகராப் பாத்து, அதான் சொன்னேன்.///
அட்வைஸூக்கு நன்றிங்கக்கா! அதெல்லாம் இன்றைய பசங்க காலம் என்ஜாய் பண்ணட்டும்.. நாம தான் பண்ணலை.. ;-)
///gulf-tamilan said...
அட வந்தாச்சா !!அந்த நண்பருக்கு பிறகு கொடுக்கலாம்.இங்கு முதலில் அனுப்பவும்./*//
ஓக்கே! உங்களுக்கு முதலில் கொடுத்துடலாம்!
///தமிழன்-கறுப்பி... said...
சின்ன தல (மகன்) கலக்கறார் நான் கேட்டேன்னு சொல்லுங்க..///
கமெண்..டுகளுக்கு நன்றி தல!
///நானானி said...
நாந்தான் கடைசியா? வரவேற்புக்கு!
இனிய பயணம்முடிந்து திருப்பிய தமிழ்பிரியனுக்கு நல்வரவு. குறும்புகளை அருகில் இருந்து கண்டு மகிழ வேண்டிய பருவத்தில் மகனின் பிரிவு சிறிது வேதனைதான். அது அவன் எதிர்காலத்துக்கு என்னும் போது
அது ஆறுதல்தான். சரிதானே?///
ஆமாம் அம்மா! நம் வாழ்க்கை = அவர்களது எதிர்காலம். நம்மால் இயலாமல் போனது அவர்களால் நடக்கட்டும்,.
///VIKNESHWARAN said...
ஹெய் அண்ண வந்துட்டாரு அண்ண வந்துட்டாரு... எல்லோரும் பார்த்துக்குங்க அண்ண வந்துட்டாரு....///
அதான் வந்திட்டோம்ல... அப்புறம் என்ன வந்துட்டாரு வந்துட்டாருன்னு இழுக்கீக
///வெண்பூ said...
வாங்க.. வாங்க.. ஜீனியர் சூப்பர்..///
வந்தாச்சு.. நன்றி வெண்பூ!
///cheena (சீனா) said...
அன்பின் தமிழ்பிரியன்
வருக வருக - வலைப்பூவினிற்கு - இணையத்திற்கு - நல்வரவு
சந்தித்த தினம் பசுமையாக நினைவில் நிற்கிறது - மகனின் குறும்பு ரசிக்கத் தக்கது. இல்லவேலைகள் இனிதே நடைபெற நல்வாழ்த்துகள்//
நன்றி சீனா சார்! சந்திப்பு எங்களுக்கும் பசுமையாக இருக்கின்றது!
///Thooya said...
வாங்கண்ணா...குட்டி பையனின் இரண்டாவது படம் கலக்கல் :)///
நன்றி தூயாக்கா!
///நட்புடன் ஜமால் said...
வாங்க தல
எல்லோரும் நலமா///
ரொம்ப நலம் ஜமால் அண்ணே!
/// Natty said...
வாங்க தல... குட்டி பையன் போட்டோ கலக்கல்... வாழ்த்துக்கள்...///
நன்றிங்க Natty!
///ஸ்ரீமதி said...
வெல்கம் பேக் அண்ணா.. :)) உங்க பின்னூட்டப் பொட்டி வொர்க் பண்ணுதான்னு டெஸ்ட் பண்ணேன்... (நாங்களும் ரவுடிதான்.. ;)))///
நம்பிட்டோம்மா நம்பிட்டோம். நீங்களும் ரவுடி தான்... ;-)
///ஸ்ரீமதி said...
குட்டிபையன் ரொம்ப கியூட்... அவன் அத்தை மாதிரியே... :)) (யார் அத்தையா?? நான் தான்.. :)))///
இதெல்லாம் ஓவரா இல்லியா?.. அத்தை எங்கே?, மரும்கன் எங்கே?
///அபி அப்பா said...
வாய்யா வாய்யா வத்தலகுண்டு வெடிகுண்டு! அவனவன் இங்க பதிவு போட்டு கிட்டு காத்து வாங்கிகிட்டு இருக்கான்யா நீர் இல்லாம!
ஜூனியர் ஜூப்பரு!
சரி நல்ல பிள்ளையா பதிவ போட்டு தாக்குய்யா!///
நன்றிங்க அபி அப்பா! நல்ல பதிவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
///சுரேகா.. said...
வாங்கப்பு.. ! நலமா இருக்கீயளா? ஊருக்கு வந்துட்டு ஒருபக்கமும் வரக்காணோம்..!
சரி..சரி..குடும்பத்தோட சந்தோசமா இருந்தவரைக்கும் சரி!////
நல்லாவே இருக்கோம் அண்ணே! ஊரில் கொஞ்சம் பிஸியாகியாச்சு..ஹிஹிஹிஹி சாரி
// நிஜமா நல்லவன் said...
வருக வருக!
உங்க ஜூனியர் கலக்குறார்!////
நன்றி அண்ணே~!
//இப்னு ஹம்துன் said...
வாங்க ஐயா, நல்வரவு//
நன்றி இப்னு ஹம்துன்!
///வடகரை வேலன் said...
வாய்யா வா வா.
நீ இல்லாம இங்க ஒரு கை குறையுது.
பையன் அம்மா மாதிரி இருக்கதால அழகா இருக்கான்.///
அண்ணாச்சி.. அப்ப நான் அழகா இல்லியா? அவ்வ்வ்வ்வ்வ் :(
///Saravana Kumar MSK said...
welcome back.. உங்க ஜூனியர் கலக்குறார்!
:)/*///
நன்றிங்க சரவண குமார்!
///அமிர்தவர்ஷினி அம்மா said...
வாங்க வாங்க
அழகு ஃபோட்டோ.
கண்டிப்பா மிஸ் தான் பண்றீங்க.///
ஆமாங்க அமித்து அம்மா! அமித்து நலமா?
///தாமிரா said...
விரைந்து திரும்பி சங்கத்தில் இணைந்தமைக்கு மகிழ்ச்சி.. ஜூனியரின் சிரிப்பு கொள்ளை அழகு.. வாழ்த்துகள் தமிழ் பிரியன்.!///
நன்றி தாமிரா அண்ணே!
///தாமிரா said...
பெரிய்ய்ய லிஸ்ட் தந்துவிட்டு நண்பரோடதுன்னு ஜகா வாங்கிட்டீங்களே.. நீங்கள் வாங்க விரும்பியவை யாவை? இந்த லிஸ்ட்டில் அனைத்துமே சிறப்பானவைதான் என கருதுகிறேன், சிலவற்றையே படித்திருக்கிறேன்.///
உண்மையில் நம்மது ஒன்னும் இல்லை... இதெல்லாம் இலக்கியவாதிகள் பகுதி.. நமக்கும் அதுக்கும் தூரம்.. வாங்கி வந்ததுக்காகப் படிக்கலாம்ன்னு தான்.. :)
///எம்.எம்.அப்துல்லா said...
வாங்கண்ணே, வாங்கண்ணே, வாங்கண்ணே !
ஊரில் உங்களிடம் இருமுறை தொலைபேசியில் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
நீங்க ஊரில் இருந்த நாட்களில் தொடர்ச்சியாக நான் சுற்றுப் பயணத்தில் இருந்ததால் பார்க்க முடியாமலும், அடிக்கடி பேச முடியாமலும் போனதில் மிகுந்த வருத்தம் எனக்கு. என் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.//
ஓக்கேண்ணே! நீங்க தொலை பேசியதுக்கு மகிழ்ந்தோம். அடுத்த தடவை வரும் போது விட்டதைப் பிடிச்சிடலாம்.
//ஜி said...
பையன் செம Cute..///
நன்றிங்க ஜி!
///ஜி said...
எங்க ஊருக்கு போயிட்டு வந்தத எல்லாம் இதுல சொல்லவே இல்ல... :))///
தனிப் பதிவாகவே போட்டுடலாம்!
///வடகரை வேலன் said...
எம்மா நேரம் டெஸ்ட் பண்ணிக்கினே கீற. புது போஸ்ட் போடத்தாவல?///
கொஞ்சம் சோம்பேறித்தனம் அண்ணாச்சி..ஹிஹிஹி பாருங்க இதுக்கு பதில் கூட இம்மா நாள் கழிச்சு தான் போடுறேன்.. ;)
///பாச மலர் said...
வாங்க வாங்க...//
வந்தாச்சுங்க அக்கா!
///ஆயில்யன் said...
//விகடன் பிரசுரம் - காதல் படிக்கட்டுக்கள், ரொமான்ஸ் ரகசியங்கள்
//
superu :)
//இவைகளை ஒரு நண்பருக்காக வாங்கி வந்து இருந்தாலும் முதலில் பொறுமையாக படித்து விட்டே அவருக்கு தர வேண்டும்.. ;))///
nallavelai en perai sollala :))
methuva padichutu kodunga no probelm :)))///
ஹிஹிஹி இப்படித் தான தப்பிச்சிக்கிறது வழக்கம் ... ;-)
///priya said...
பையன் ரொம்ப அழகா இருக்கான். சுத்தி போடுங்க பாஸ். ஆனந்த விகடன்ல வர உங்க தொகுப்புகள படிச்சிருக்கேன், ரொம்ப நல்லா இருக்கும். ஆனா அதைவிட இங்க நல்லா எழுதறிங்க. Great, Super, Marvellous. Keep it up.///
நன்றிங்க அண்ணே!
மீ த 100! ஹிஹிஹி நமக்கு நாமே திட்டம் தான்!
Post a Comment