Thursday, January 15, 2009

பொங்கல் .. ஊர் கோலம்... தெருக் கோலம்



ஊருல இருந்து வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆச்சு.. நிறைய பதிவு எழுத மேட்டர் இருந்தும் ஏனோ எழுத உட்கார்ந்த விரல்கள் தட்டச்ச மறுக்கின்றன..:) Homesick... :) சரி பதிவு ஏதாவது போட வேண்டும் என்பதால் இந்த பதிவு.

சின்ன வயசுல நல்லாவே ஊரைச் சுற்றுவோம். சாப்பாட்டு நேரத்துக்குத் தான் வீட்டுக்கு வருவோம். மற்ற நேரமெல்லாம் தெரு சுற்றுவது தான் வேலையே... அதுவும் விசேச நாட்களில் நிறைய சுற்றுவோம். பொங்கல் நேரங்களில் தெருவில் போடும் கோலங்களைப் பார்ப்பதற்கே சுற்றுவோம். தீபாவளி நேரங்களில் தெருவில் சிதறிக் கிடக்கும் வெடிகளைப் பார்த்து யார் வீட்டில் நிறைய வெடித்துள்ளார்கள் என்பதையும் பார்த்துக் கொள்வோம்.

மாட்டுப் பொங்கல் அன்று, மாடு வைத்து இருப்பவர்கள் மாட்டைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து மஞ்சளெல்லாம் கட்டி வைத்திருப்பார்கள். அதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதிலும் ஒரு ஆனந்தம் இருக்கும்..:)

சரி பழைய கதையை விட்டு விட்டு புதுக் கதைக்கு வரலாம்.. இந்த ஆண்டு பொங்கல் அன்று ஊரில் இருந்தேன். பச்சரிசி வாங்கி சுவையான வெல்லத்தில் ருசியான பொங்கல் செய்து சாப்பிட்டோம். பொங்கல் கரும்பும் விரும்பி சுவைத்தோம். ரேஷன் கடையிலேயே தரமான வெல்லம், அரிசி, எல்லாம் கொடுத்து இருந்தார்கள் இலவசமாகவே... வாழ்க ஜனநாயகம்.

ரொம்ப நாள் கழித்து பொங்கல் அன்று ஊரில் இருந்ததால் மக்களின் கோலம் போடும் பழக்கதைப் பார்க்க கேமராவுடன் கிளம்பி விட்டோம்... மகனையும் அழைத்துக் கொண்டு..:)

சும்மா சொல்லக் கூடாது... ஊர் நகரமாகி, வீடுகளில் அடைக்கப்பட்டுக் கிடந்தாலும் மக்களிடம் இன்னும் கோலம் போடும் பழக்கம் இருக்கத் தான் செய்கின்றது... சில கோலங்கள் உங்கள் பார்வைக்கு... மகன் இருக்கும் முதல் கோலம் எதிர்வீட்டில் போடப்பட்டது. இரண்டாவது கோலத்தில் இருக்கும் தமிழ் உணர்வு நெஞ்சை நிறைத்தது.



















40 comments:

Anonymous said...

உங்க ஊர்(க்)கோலம் நல்லா இருக்கு தமிழ்.

Thamiz Priyan said...

///வடகரை வேலன் said...

உங்க ஊர்(க்)கோலம் நல்லா இருக்கு தமிழ்.///
ஹிஹிஹி அண்ணாச்சி! காமெடி கீமெடி பண்ணலையே?

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே,
முத கோலத்துல நடுவுல இருக்க மஞ்ச பனியன் போட்ட பூ தானே நெம்ப சூப்பரா இருக்குண்ணே.

தமிழன்-கறுப்பி... said...

சரி பழைய கதைய விடுங்க புதுக்கைதயை சொல்லுங்க...

தமிழன்-கறுப்பி... said...

இந்த ஊர் சுத்துற பழக்கம் போகவே மாட்டேங்குதுல்ல..:)

தமிழன்-கறுப்பி... said...

உங்க ஊர் கோலமும்,
உங்கள் ஊர்க்கோலங்களும் நல்லாத்தான் இருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

இப்பவும் இப்படி கோலம்லாம் போடுறாங்க என்பதில் சந்தோசமாய் இருக்கிறது...

தமிழன்-கறுப்பி... said...

அதை விடுங்க உங்களுக்கு கோலம் போடத்தெரியுமா...?

சந்தனமுல்லை said...

ஹை...கோலங்கள் அழகு! நீங்க சொன்னாமாதிரி இரண்டாவது கோலத்தில் தமிழ் உணர்சு தூக்கலாவே இருக்கு..:-)) அப்புறம் ஜின்னா கலக்கரார்!!

அ.மு.செய்யது said...

எல்லா கோலங்களும் அழகு...மண்வாசனை மணக்கிறது பதிவிலும்..

அ.மு.செய்யது said...

//பொங்கல் நேரங்களில் தெருவில் போடும் கோலங்களைப் பார்ப்பதற்கே சுற்றுவோம்//

கோலங்களை மட்டும் தானே அண்ணே !!!!!

Thamiz Priyan said...

//ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே,
முத கோலத்துல நடுவுல இருக்க மஞ்ச பனியன் போட்ட பூ தானே நெம்ப சூப்பரா இருக்குண்ணே.///
அண்ணே! அது என்னோட கம்பெனி புரோடக்ட்.. அதான் என்னை மாதிரி அழகாக்கீது..ஹிஹிஹி

Thamiz Priyan said...

//தமிழன்-கறுப்பி... said...

சரி பழைய கதைய விடுங்க புதுக்கைதயை சொல்லுங்க..///
யோவ்! இது புதுக்கதை தானய்யா...

Thamiz Priyan said...

///தமிழன்-கறுப்பி... said...

இந்த ஊர் சுத்துற பழக்கம் போகவே மாட்டேங்குதுல்ல..:)///
ஹிஹிஹிஹி... ஆமாங்கறென்ன்

Thamiz Priyan said...

///தமிழன்-கறுப்பி... said...

அதை விடுங்க உங்களுக்கு கோலம் போடத்தெரியுமா...?///
சூப்பரா போடுவேனே... ஒரு புள்ளிக் கோலம் ரொம்ப அழகா போடுவேன்....;)

Thamiz Priyan said...

///சந்தனமுல்லை said...

ஹை...கோலங்கள் அழகு! நீங்க சொன்னாமாதிரி இரண்டாவது கோலத்தில் தமிழ் உணர்சு தூக்கலாவே இருக்கு..:-)) அப்புறம் ஜின்னா கலக்கரார்!!///
நன்றிங்கோ சம்பந்தியம்மா!

Thamiz Priyan said...

//அ.மு.செய்யது said...

எல்லா கோலங்களும் அழகு...மண்வாசனை மணக்கிறது பதிவிலும்..///
நன்றிங்ண்ணா!

Thamiz Priyan said...

///அ.மு.செய்யது said...

//பொங்கல் நேரங்களில் தெருவில் போடும் கோலங்களைப் பார்ப்பதற்கே சுற்றுவோம்//

கோலங்களை மட்டும் தானே அண்ணே !!!!!////
ஹிஹிஹி ரகசியத்தையெல்லாம் இப்படி ஊர் நடுவுல போட்டு உடைக்க முடியுமா.. புரிஞ்சுக்க வாணாமா?... ;)

சின்னப் பையன் said...

//மாட்டுப் பொங்கல் அன்று, மாடு வைத்து இருப்பவர்கள் மாட்டைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து மஞ்சளெல்லாம் கட்டி வைத்திருப்பார்கள்//

அப்போ பொங்கல் வைத்திருப்பவர்கள், பொங்கலை குளிப்பாட்டி, பானைக்கு பெயிண்ட் அடித்து, மஞ்சளெல்லாம் போட்டு வைத்திருப்பார்களா அண்ணே????

இப்படிக்கு
நாள் முழுக்க மல்லாக்க படுத்திருப்போர் சங்கம்

cheena (சீனா) said...

aakkaa ஆகா ஆகா - தமிழ்பிரியனின் காமிராவிற்கும் கலைக்கண் இருக்கிறது - சூப்பரா தூள் கெளப்புது - காலைலே வூட்ட வுட்டுக் கிளம்பிட்டார் போல ம்ம்ம்ம்ம்ம்ம் - அவர் கம்பெனி புராடெக்ட்டும் ந்ல்லா இருக்கு

அத்திரி said...

கோலங்கள் எப்பவுமே அழகுதான் ( சீரியலை சொல்லலை)

ஆயில்யன் said...

ullen ayya :))

கார்க்கிபவா said...

/ அத்திரி said...
கோலங்கள் எப்பவுமே அழகுதான் ( சீரியலை சொல்ல//

அதுவும் அழகுதான் சகா..


/சும்மா சொல்லக் கூடாது... ஊர் நகரமாகி, வீடுகளின் அடைக்கப்பட்டு இருந்தாலும் மக்களிடம் இன்னும் கோலம் போடும் பழக்கம் இருக்கத் தான் செய்கின்ற//

ஆமாங்க. சென்னையிலும் பெண்களின் ஆர்வம் அதே மாதிரிதான் இருக்கு..

ராமலக்ஷ்மி said...

ஜோசப் சொன்ன மாதிரி முதல் கோலத்து மேலே அழகாப் பூத்திருக்கு சூரிய காந்தி:)!

இரண்டாவதா சார் நிக்கற படத்தில என்ன சொல்றாருன்னா, ‘எவ்வளவோ அழகாப் போட்டிருக்காங்க கோலத்தை, யாராவது காலை வச்சீங்க, அப்புறம் இருக்கு...’ன்னு! ஸ்மார்ட்டுங்க:)!

எம்.எம்.அப்துல்லா said...

//மற்ற நேரமெல்லாம் தெரு சுற்றுவது தான் வேலையே //

நீங்க நாகரீகமான மனுஷன்னால இப்படி எழுதி இருக்கீங்க! நானா இருந்தா “தெருப் பொறுக்குவதுத்தான்னு” எழுதி இருப்பேன் :)

எம்.எம்.அப்துல்லா said...

//இந்த ஆண்டு பொங்கல் அன்று ஊரில் இருந்தேன் //

நான் சிங்கையில் கோவி அண்ணன் தலைமையிலான நமது சொந்தங்களோடு இருந்தேன்

:))

Thamira said...

நானும் இது மாதிரி படங்களை எடுத்து வந்திருக்கிறேன். போட்டுறலாங்கிறீங்களா?

Unknown said...

கோலத்தையெல்லாம் படம் புடிச்சிப் போட்டிங்க, கோலத்தைப் போட்டவங்களையும் படம் புடிச்சிப் போட்டிருக்கலாம்ல :-(

Thamiz Priyan said...

///ச்சின்னப் பையன் said...

//மாட்டுப் பொங்கல் அன்று, மாடு வைத்து இருப்பவர்கள் மாட்டைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து மஞ்சளெல்லாம் கட்டி வைத்திருப்பார்கள்//

அப்போ பொங்கல் வைத்திருப்பவர்கள், பொங்கலை குளிப்பாட்டி, பானைக்கு பெயிண்ட் அடித்து, மஞ்சளெல்லாம் போட்டு வைத்திருப்பார்களா அண்ணே????

இப்படிக்கு
நாள் முழுக்க மல்லாக்க படுத்திருப்போர் சங்கம்////

நல்லா யோசிக்கிறீங்க என்னை மாதிர்யே... எல்லாம் ஒரே சங்கம் தானே.. ;-)

Thamiz Priyan said...

///cheena (சீனா) said...

aakkaa ஆகா ஆகா - தமிழ்பிரியனின் காமிராவிற்கும் கலைக்கண் இருக்கிறது - சூப்பரா தூள் கெளப்புது - காலைலே வூட்ட வுட்டுக் கிளம்பிட்டார் போல ம்ம்ம்ம்ம்ம்ம் - அவர் கம்பெனி புராடெக்ட்டும் ந்ல்லா இருக்கு////
நன்றி சீனா சார்! கம்பெனி புரோடக்டைத் தான் நேரில் பார்த்தீங்களே.. ;))

Thamiz Priyan said...

// ஸ்ரீமதி said...

:)))))////
சிரிப்புக்கு நன்றிம்மா தங்கச்சி!

Thamiz Priyan said...

/// அத்திரி said...

கோலங்கள் எப்பவுமே அழகுதான் ( சீரியலை சொல்லலை)///
கோலம் எப்பவும் அழகு தானே.. அதுவும் இட வேண்டியவர்கள் இடும் போது.. ;)

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

ullen ayya :))///
ஒத்துக்குறோம்.. நீங்க சங்கத்து ஆளுன்னு ஒத்துக்கிறொம்.

Thamiz Priyan said...

///கார்க்கி said...

/ அத்திரி said...
கோலங்கள் எப்பவுமே அழகுதான் ( சீரியலை சொல்ல//

அதுவும் அழகுதான் சகா..


/சும்மா சொல்லக் கூடாது... ஊர் நகரமாகி, வீடுகளின் அடைக்கப்பட்டு இருந்தாலும் மக்களிடம் இன்னும் கோலம் போடும் பழக்கம் இருக்கத் தான் செய்கின்ற//

ஆமாங்க. சென்னையிலும் பெண்களின் ஆர்வம் அதே மாதிரிதான் இருக்கு..//

கார்க்கி.. எப்பவுமே இது மாதிரி ஏதாவது ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருக்கீங்களே... எங்களூக்கும் சொல்லிக் கொடுங்க.. ;))

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...

ஜோசப் சொன்ன மாதிரி முதல் கோலத்து மேலே அழகாப் பூத்திருக்கு சூரிய காந்தி:)!

இரண்டாவதா சார் நிக்கற படத்தில என்ன சொல்றாருன்னா, ‘எவ்வளவோ அழகாப் போட்டிருக்காங்க கோலத்தை, யாராவது காலை வச்சீங்க, அப்புறம் இருக்கு...’ன்னு! ஸ்மார்ட்டுங்க:)!///

நன்றிங்க அக்கா!

Thamiz Priyan said...

///எம்.எம்.அப்துல்லா said...

//மற்ற நேரமெல்லாம் தெரு சுற்றுவது தான் வேலையே //

நீங்க நாகரீகமான மனுஷன்னால இப்படி எழுதி இருக்கீங்க! நானா இருந்தா “தெருப் பொறுக்குவதுத்தான்னு” எழுதி இருப்பேன் :)////]

உங்களை மாதிரி நாகரீகமான ஆட்களெல்லாம் படிப்பீங்க என்பதால் அப்படி எழுதினேன்.. இல்லைன்னா நாமலும் அதேதானுங்ண்ணா..:)

Thamiz Priyan said...

///தாமிரா said...

நானும் இது மாதிரி படங்களை எடுத்து வந்திருக்கிறேன். போட்டுறலாங்கிறீங்களா?////
போட்டுத் தாக்குங்க தாமிரா.. இதென்ன கேள்வி.. கோலம் இட்டவங்க படமும் இருந்தாலும் போடலாமாம்

Thamiz Priyan said...

///KVR said...

கோலத்தையெல்லாம் படம் புடிச்சிப் போட்டிங்க, கோலத்தைப் போட்டவங்களையும் படம் புடிச்சிப் போட்டிருக்கலாம்ல :-(///

ஹலோ! யாரு அண்ணியா? இங்க பாருங்க அண்ணன் என்னவோ சொல்றாரு? கொஞ்சம் கவனிங்க.. அப்ப தான் சரியாவாரு.. ;))))

Unknown said...

unga ooru kolam azhagu....

Unknown said...

unga ooru kolam azhagu....