Tuesday, December 23, 2008

கெளம்புறேங்க......

மக்களே! இரண்டு மகிழ்ச்சியான செய்தி சொல்லப்போகிறேன்.. முதலாவது இன்னும் ஓரிரு நாளில் விடுமுறையில் இந்தியா செல்லவுள்ளேன். இரண்டாவது எனது இரண்டாவது சகோதரனின் குடும்பத்தில் சில நாட்களில் புதிய உறுப்பினர் வருகை இருக்கலாம். சகோதரனின் மனைவி பிரசவத்திற்காக நெல்லையில் தனது தாய் வீட்டில் இருக்கின்றார்கள்.

இனி உங்களுக்கு எனது மொக்கையில் இருந்து விடுதலை தரலாம் என்று நினைக்கிறேன்.... ஒன்லி இடைக்கால விடுதலை தான். இரண்டு மாதத்தில் இந்தியாவில் இருந்து திரும்பியதும் மீண்டும் மொக்கைகளைத் தொடரலாம்..... இறைவன் நாடினால்...:)ஸ்டாப்! ஸ்டாப்! அதுக்குள்ளே மகிழ்ச்சியில் குதிக்காதீங்க... பதிவுக்கு தான் விடுமுறை என்று சொன்னேன்.. அதுக்காக மொக்கையை விட முடியுமா? அது நம் உடன் பிறந்ததாச்சே.. மொக்கையை நேரடியாகவே போடலாம் என்று தீர்மானித்து விட்டேன்.

சென்னை(விமானப் பயண வழி), மதுரை(சொந்தங்கள்), கோவை(சகோதரன்1), நெல்லை(சகோதரனின்(2) வீட்டுப் புதிய உறுப்பினரைப் பார்க்க), நாகர்கோவில் (மாமியார் ஊடு) ஆகிய இடங்களுக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக போக வேண்டி உள்ளது. (சிவராஜ் சித்த வைத்தியசாலை எபெக்ட் வருதோ?.... ;) ).

அங்கு உள்ள பதிவர்கள் என்னை சந்திக்க விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு தங்களுடைய தொலைபேசி எண்ணை அனுப்பி வையுங்கள். நான் தொ(ல்)லை பேசுகின்றேன். வரும் நேரங்களில் மொக்கை போடலாம். dginnah@gmail.comஇது தவிர வத்தலகுண்டை சுற்றிய ஊரில் உள்ளவர்களுக்கு சிறப்பு தரிசனமும் உண்டு. இவைகளைத் தவிர்த்து வேறு ஊர்களுக்கு தமிழ் பிரியனந்தாவின் காலடி பட்டு சுபிட்சம் ஏற்பட வேண்டுமெனில் வண்டி சத்தமும், நல்ல சாப்பாடும் கிடைக்கும்பட்சத்தில் பரிசீலிக்கப்படும்.... ;)

36 comments:

அத்திரி said...

வருக வருக

ராமலக்ஷ்மி said...

நன்று நன்று. பயணம், விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

குடும்பத்துக்கு வரவிருக்கும் புதிய உறுப்பினருக்கும் நல்வாழ்த்துக்கள்.

சென்ற இடமெல்லாம் சிறப்பு பெற்றுத் திரும்புங்கள்:)))!

துளசி கோபால் said...

சந்தோஷமாப் போயிட்டு வாங்க.

நம்ம வத்தலகுண்டு பேரூராட்சித் திடலில் தண்ணீர்த் தொட்டியில் உள்ள சிங்கத்தை நான் ரொம்பக் கேட்டேன்னு சொல்லுங்க.

வீட்டில் அனைவருக்கும் எங்கள் அன்பைச் சொல்லுங்கள்.

குப்பன்_யாஹூ said...

வருக, வருக, விடுமுறை இனிதாக வாழ்த்துக்கள். முடிந்தால் சந்திப்போம் சென்னையில்,

குப்பன்_யாஹூ

கானா பிரபா said...

விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

கிரி said...

//ராமலக்ஷ்மி on December 23, 2008 8:56 AM said...
நன்று நன்று. பயணம், விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

குடும்பத்துக்கு வரவிருக்கும் புதிய உறுப்பினருக்கும் நல்வாழ்த்துக்கள்.

சென்ற இடமெல்லாம் சிறப்பு பெற்றுத் திரும்புங்கள்:)))!//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Thooya said...

Inimaiyana Payanamaaga Amaiya Vazhthukal... :)

Thooya said...

//ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டுங்களேன்//

:P

மதிபாலா said...

உங்கள் பயணம் மிக இனிதே நிறைவுற வாழ்த்துக்கள்.

உங்கள் தரிசனத்தைப் பெறப் போகும் பாக்கியசாலிகளுக்கு பாராட்டுக்கள்.

அருளை அப்பாலிக்கா கொஞ்சம் இங்கிட்டு ரீருட் பண்ணற மாதிரி இருந்தா என் சீடர்கள் சிலரை உங்க தரிசனத்துக்காக அனுப்பி வைப்பேன்...

டீல் ? ஆர் நோ டீல்???

சின்ன அம்மிணி said...

சந்தோசமா போய்ட்டு சந்தோசமா வாங்க :)

திகழ்மிளிர் said...

பயணமும்
விடுமுறையும்
மகிழ்வுடன் அமைய
வாழ்த்துகள்

ஆயில்யன் said...

பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்களுடன்....!

குழலோவியம் said...

சென்ற இடமெல்லாம் சிறப்பு பெற்றுத் திரும்புங்கள்:)))!

ராமலக்ஷ்மி said...

குழலோவியம் said...

//சென்ற இடமெல்லாம் சிறப்பு பெற்றுத் திரும்புங்கள்:)))//

ஆகா, சந்தனைமுல்லை பதிவில் வாக்குக் கொடுத்த மாதிரி குழலோவியத்தை ஆரம்பித்து விட்டீர்களா தமிழ் பிரியன். வாழ்த்துக்கள். ஊரிலிருந்து வந்ததும் எடிட்டர் நாற்காலியில் அமர்ந்து வேலையை ஆரம்பியுங்கள்:)))!

King... said...

இனிய பயணத்துக்கும் விடுமுறைக்கும் வாழ்த்துக்கள்...

நசரேயன் said...

உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

gulf-tamilan said...

இனிய பயணத்துக்கும் விடுமுறைக்கும் வாழ்த்துக்கள் !!!

ச்சின்னப் பையன் said...

பயணம், விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துக்கள்...

கவின் said...

:)விடுதலை,,,,,,,, விடுதலை
கொளம்புங்க பிரதர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

masdooka said...

அப்பாடா இரண்டு மாசம் எங்களுக்கு ஜாலிதான் இப்பவாச்சும் கொஞ்சம் நிம்மதியா இருப்போம்ல..

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன்

வருக வருக தாயகம் வருக - வரவு நல்வரவாகுக

மதுரை மதுரை என்ற ஊரில் சீனா சீனா என்றொருவர் இருக்கிறாராம். அவரைச் சந்திக்க முயலுங்களேன். அங்கு வருகிறீர்களே ! வ.குவில் வந்து பார்க்க வேண்டுமா - வருவதற்கு அவர் தயாராம்

அதிரை ஜமால் said...

நல்ல விஷயம்.

மக்களோடு சந்தோஷமாக இருங்கள்

தாமிரா said...

வாழ்த்துகள் தல.. போயிட்டு வாங்க.. ஸாரி, வந்துட்டு போங்க.! (சென்னையில் மீட்டலாமா?)

வல்லிசிம்ஹன் said...

வருக வருக. சென்னை விஜயத்தில் இந்த அம்மாவையும் மறக்க வேண்டாம்.
பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துகள்.
அதனுடன்,

இனிய புத்தாண்டு வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன் அருணா said...

//இது தவிர வத்தலகுண்டை சுற்றிய ஊரில் உள்ளவர்களுக்கு சிறப்பு தரிசனமும் உண்டு//

தர்ம தரிசனத்துக்கு டிக்கட் எவ்வ்ளோன்னு சொன்னால் முன்னாடியே புக் பண்ண வசதியாக இருக்கும்.
அன்புடன் அருணா

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பர்களே! நான் நல்லபடியாக ஊர் வந்து சேர்ந்தேன். சகோதரனுகும் நெல்லை லெக்ஷ்மி மருத்துவமனையில் நல்ல முறையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மீண்டும் நன்றிகள் நண்பர்களே.

A N A N T H E N said...

பயணம் பாதுகாப்பய் அமைய வேண்டும்

TamilBloggersUnit said...

happy newyear தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது

வண்ணத்துபூச்சியார் said...

சந்தோஷமாப் போயிட்டு உற்சாகமா வாங்க.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் தமிழ்பிரியன்,

இப்பதிவினைப் பார்க்கவும்... :)
//http://blogintamil.blogspot.com/2009/01/blog-post_6945.html

உங்கள் சேவை தொடரட்டும் நண்பரே !

cheena (சீனா) said...

பெரியப்பா ஆனதுக்கு நல்வாழ்த்துகள் - தாயும் சேயும் நலந்தானே ! மழலைக்கு நல்லாசிகள்

முரளிகண்ணன் said...

வாங்க வாங்க, சென்னையில் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்

kajan's said...

சோகமாய் போய் சந்தோசமாய் வாங்க

பாச மலர் said...

வாழ்த்துகள்..சீனா சார் வீட்டிற்கும் போனதாக ஒரு பதிவில் படித்தேன்..விடுமுறை சிறக்க வாழ்த்துகள்..

anna said...

தமிழ் சமையல்
Profiles Planet
Residence Collection
Dotnet Best
Chronicle Time
Cingara Chennai
Free Crackers

நட்புடன் ஜமால் said...

வந்தாச்சு போல

சீக்கிரம் பதிவிடுங்க

தல

LinkWithin

Related Posts with Thumbnails