Friday, April 10, 2009

என் காதல் தோத்துப் போச்சுங்க

நான் ரொம்ப கவலையில் இருக்கேங்க... என்னோட காதல் தோற்றுப் போய் விட்டதுங்க. என்னைத் தெரியும் தானே உங்களுக்கு.. இப்ப Mcfame Robotics Company யில் அக்கவுண்ட்ஸில் வேலை செய்றேங்க... நேத்து தாங்க என்னோட தெய்வீகக் காதல் தோல்வியில் முடிஞ்சு போச்சு. அதுவும் அந்த சுந்தர் பய என் முன்னாடியே என் காதலியை..வேணாங்க..என்னால ... முடியல.... ... யோசிச்சுப் பாருங்க. அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்து இருக்கும்ன்னு.. இப்பக் கூட என் சிஸ்டத்துல என் காதலே என் காதலே என்னை செய்யப் போகிறாய்? பாடல் தான் ஒலித்துக் கொண்டு இருக்கு.

நான் முழுக்கதையையும் முதலில் இருந்து சொல்கிறென்.. கேளுங்க.. நான் இங்க வந்து முழுசா 3 வருடமாகப் போகுதுங்க.. ஆபிஸில் சுமார் 50 பேர் வேலை செய்கின்றோம். பேக்டரில் 600 பேருக்கு மேல் இருக்காங்க. எனக்கு அக்கவுண்ட் என்பதால் ஆபிஸில் தான் முழு நேரமும் செலவாகும். இங்க 12 லேடீஸ் வேலை செய்றாங்க.. ஆனாலும் யாரையும் ஏறெடுத்துக் கூட பார்த்ததில்லை. ஏன்னா நான் என்னோட கனவு தேவதைக்காக காத்துக் கொண்டு இருந்தேன்.

மூணு மாசத்துக்கு முன்னாடி தான் அந்த கனவு தேவதையை பார்த்தேன். அதுவும் எங்க ஆபிஸிலேயே புதுசா வேலைக்கு வந்து இருக்கா.. பேரு ரேவதி. நான் அழகா ரேச்சின்னு செல்லமா பேர் வச்சு இருக்கேன்.. ரேச்சி எனக்கு நீ மச்சி! நல்லா இருக்குல்ல....நல்லா அழகா இருப்பா.. (சென்சார் செய்யப்பட்ட பகுதியை இங்க நிரப்ப முடியாது... ஆர்) மொத்தத்துல நம்ம அசின், நயன் தாரா, பழைய ஐஸ்வர்யா ராய் எல்லோரையும் சேர்த்து செஞ்ச செப்புச் சிலைன்னு வச்சுக்கங்க

எங்க நிறுவனத்தின் டிசைனிங் செக்சனில் வேலைக்கு சேர்ந்தா.. எங்களுக்கும் டிசைனிங்குக்கும் எந்த டச்சும் இல்லைன்னாலும் இரண்டும் அடுத்ததடுத்த பகுதி என்பதால் அவளை அடிக்கடி பார்க்க முடியும். அவள் வந்த முதல் நாளிலேயே எனக்கு காதல் ஜூரம் ஆரம்பமாகி விட்டது.



ஆனா அவள் என்னை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. எப்போதாவது வழியில் சந்தித்தால் ஒரு ஸ்மைல் மட்டும் கிடைக்கும். நானும் பல தில்லாலங்கடி வேலை பார்த்தும் திரும்பிக் கூட பார்க்கலை. இதுல என்ன கொடுமைன்னா என்னோட அழகுக்கு முன்னாடி நிக்க கூட முடியாத இன்னும் சிலர் ஜொள்ளு வடித்தது தான்.. சேல்ஸ் செக்சனில் இருக்கும் அந்த பேக்கு இருக்கானே.. கேசவன்.. அவன் எப்ப பார்த்தாலும் என் ஆளிடம் போய் இளிக்கிறதே வேலையே இருக்கான்.

அவனாவது பரவாயில்லை... அக்கவுண்ட் செக்சன் ஹெட் இருக்காரே அந்த பாலா.. காலேஜ் படிக்கிற பசங்க இருக்காங்க அவருக்கு..அந்த ஆளும் என் ரேச்சிகிட்ட எப்பப் பார்த்தாலும் ஏதாவது டவுட்டுன்னு போய் நிக்கிறார். இது அவருக்கே ஓவரா இல்லியா? வயசானாலும் இங்கிதம் தெரியலையே?

இது எல்லாத்தையும் விடக் கொடுமை... அட்மின் செக்சனில் இருக்கும் லாரன்ஸ் பண்ணுவது தான்.. பேசுவது மாதிரி பக்கத்தில் போய் உரசுவது, நடந்து வரும் போது இடிச்சிட்டு சாரி சொல்வது..இப்படி டெய்லி தொடருது. அவள் இதை எல்லாம் சாதாரணமா எடுத்துட்டு போய்டுறாரா..ஆனா என்னால் இங்க சும்மா உட்கார முடியல...மூலம் வந்தவன் மாதிரி கேபினில் இருந்து எட்டி எட்டிப் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டி இருக்கு.

எப்படியாவது என் காதலை அவள்கிட்ட சொல்லனும்னு வெயிலில் போட்ட புழு மாதிரி துடிச்சேன். வேலையில் கவனம் செலுத்த முடியல..சாப்பாடு சரியா இறங்கல.. சரி.. நல்லபிள்ளையா அவளோட வீட்ல போய் பொண்ணு கேக்கலாம்ன்னு வேவு வேலையில் இறங்கினேன். அப்ப ஒரு முதல் அதிர்ச்சி காத்து இருந்தது. அவள் எங்க கம்பெனி MD யின் ஸ்பெஷல் காரில் தான் சென்று வருகிறாளாம். டிரைவரை பிடித்து விசாரித்த போது அதைவிட அதிர்ச்சியைக் கொடுத்தான். தினமும் காலையில் பிக்அப் செய்வது மற்றும் டிராப் செய்வது எல்லாம் பேக்டரியை ஒட்டி இருக்கும் கம்பெனி MD யின் கெஸ்ட் அவுஸில் தானாம்.

அவள் முகத்தில் தெரியும் ஒரு வித இறுக்கம் அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதை எனக்கு ஒவ்வொரு கணமும் உணர்த்திக் கொண்டு இருந்தது. அப்பதான் அந்த இறுதி முடிவை எடுத்தேன். என் ரேச்சிக்கு இந்த நரக வாழ்வில் இருந்து அவளுக்கு விடுதலை தருவது தான் அந்த முடிவு.

கம்பெனியின் இண்டர்னல் மெயில் சிஸ்டம் மூலம் அவளுக்கு என் காதலை முழுமையாகச் சொல்லி, விருப்பப்பட்டால் இந்த இயந்திர வாழ்க்கையை விட்டு எங்கள் கிராமத்திற்கு சென்று விடலாம் என்பதை சொல்லி இருந்தேன். மறக்காமல் எங்களது பூர்வீக சொத்தான 50 ஏக்கரில் விவசாயம் செய்து சந்தோசமாக வாழலாம் என்பதையும் சேர்த்து இருந்தேன்.

அன்று ஏனோ அவள் என்னைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை. ஆனால் மறுநாள் கம்பெனி MD என்னைத் தனது தனியறைக்கு அழைத்தார். சதிகாரி.. வசந்த சேனை..வத்தி வைத்து விட்டாள் என்பது மட்டும் புரிந்தது. MD யின் அறைக்கு சென்றால் அங்கே டிசைனிங் செக்சனின் சுந்தரும், மேலும் என் ரேச்சியும் இருந்தனர். இப்பவும் அவளது பார்வையில் எந்த கலங்கமும் இல்லை.

MD தான் விசாரணையைத் துவக்கினார். தயக்கமில்லாமல் எனது காதலை என் ரேச்சியிடம் சொன்னதை ஒத்துக் கொண்டேன். இது பார்வையில் ஆரம்பித்து இதயத்தில் முடியும் காதல் என்பதை விளக்கினேன். சிறிது நேரம் யோசித்து விட்டு அவர் சுந்தரைப் பார்க்க சுந்தர் எழுந்து வந்து என் ரேச்சியிடம் “கொஞ்சம் உன் சுடிதார் டாப்பை உயர்த்து” என்றான். டக்கென்று என் ரேச்சி டாப்பைத் தூக்க என் காதலியின் வயிற்றுப் பகுதியில் கையை செலுத்திய சுந்தர் அங்கிருந்த சிறு பின்னைப் பிடித்து இழுக்க டக்கென்று வயிற்றுப் பகுதி திறந்து கொண்டது.

நான் எட்டிப் பார்க்க உள்ளே அனைத்தும் எலெக்ட்ரானிக் போர்டுகளும் ஒயர்களுமாக இருந்தது. உள்ளே இருந்த சிறு ஸ்விட்சை அழுத்த கையைத் தூக்கியது போலவே ரேவதி நின்று கொண்டு இருந்தாள். சுத்தமான சிலிகான் மற்றும் பல வேதிப் பொருட்களின் கலவை தான் உங்கள் ரேச்சி...இவள் ஒரு ரோபாட் என்று சொன்ன சுந்தர் மீண்டும் ஸ்விட்சை அழுத்த ரேவதி கண் சிமிட்ட ஆரம்பித்து இருந்தாள். MD பெருந்தன்மையுடன் எனது தவறை மன்னிப்பதாகவும், இனி ஒழுங்காக இருக்கும் படி வார்ன் பண்னியும் அனுப்பினார். அந்த புதிய வகை ரோபாட் பெண்ணை எங்கள் கம்பெனியிலேயே டெஸ்டிங்குக்காக வைத்திருப்பதாகவும் கூறி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

தளர்ந்து போய் இருக்கையில் அமரப் போனேன். ஏதோ உந்துதலில் எட்டிப் பார்க்க அங்கே அட்மின் லாரன்ஸ் வேண்டுமென்றே உரசிக் கொண்டு செல்வது தெரிந்தது. எப்போதுமே வயிறு எரிபவன் இன்று வாய்விட்டு சிரித்தேன்.

43 comments:

நட்புடன் ஜமால் said...

காதல் தோற்பதில்லை

இதோ படிச்சிட்டு வாறேன்.

ராமலக்ஷ்மி said...

நல்ல தமாசு:)!

ராமலக்ஷ்மி said...

ஜமால் மெதுவா படிக்கும் முன்னே நான் வேகமாப் படித்து விட்டேன்:)!

தலைப்பு எல்லோரையும் வேகமாய் இழுத்து வ்ரும் ‘எத்தனை தடவைதான் சோகமாய் இதே பாட்டைப் பாடுவாரு’ன்னு:)!

அப்புறம்தான் கதைன்னு பிடிபடும்:))!

ஜமால், இப்போ சொல்லுங்க நீங்க சொல்லியிருப்பது சரிதானா:)?

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

(சர்வ நிச்சையமாய் தலைப்பு பார்த்து ஏமாறவில்லை.)

நட்புடன் ஜமால் said...

\\
ஜமால், இப்போ சொல்லுங்க நீங்க சொல்லியிருப்பது சரிதானா:)?\\

நான் சொன்னது தலைப்பு மட்டுமான கமெண்ட்

இப்படியும் நாங்க செய்வோம்ல.

அன்புடன் அருணா said...

நல்ல ட்விஸ்ட்!!!
அன்புடன் அருணா

கானா பிரபா said...

பாஸ்

நீங்க சுஜாதா ரேஞ்சுக்கு போயிட்டிருக்கீங்க

ஆயில்யன் said...

உள்ளேன் அய்யா!

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
பாஸ்

நீங்க சுஜாதா ரேஞ்சுக்கு போயிட்டிருக்கீங்க
///

தல

தவறு திருத்திக்கொள்ளுங்கள் !

சுஜாதா ரேஞ்சுக்கு போயிக்கிட்டில்ல போயிட்டாரு! :)

Unknown said...

கதை தலைப்பை பார்த்து ஐய்யோ பாவுமே என்று படித்தேன்.
நல்ல நகைச்சுவை கதை.

ஆயில்யன் said...

//நான் ரொம்ப கவலையில் இருக்கேங்க... /

ஏன்ப்பா ராசா இன்னிக்கு வெள்ளிகிழமை பிரியாணி ஸ்பெஷ்ல்தானே பின்னே என்ன கவலை!

ஆயில்யன் said...

//என்னைத் தெரியும் தானே உங்களுக்கு.. /

ம்ம்

தெரியும் !

தெரியும் !!

ஆயில்யன் said...

//நேத்து தாங்க என்னோட தெய்வீகக் காதல் தோல்வியில் முடிஞ்சு போச்சு.//


அய்யய்யோ!!!!!!
:(((

ஆயில்யன் said...

//என் காதலே என் காதலே என்னை செய்யப் போகிறாய்? //

அடிச்சு பல்லு மூஞ்சியெல்லாம் சேதாராம் ஆக்கப்போறேன் :)))

ஆயில்யன் said...

//நான் முழுக்கதையையும் முதலில் இருந்து சொல்கிறென்.. கேளுங்க//

மறுபடியும் முதல்லேர்ந்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

ஆயில்யன் said...

//இங்க 12 லேடீஸ் வேலை செய்றாங்க.. ஆனாலும் யாரையும் ஏறெடுத்துக் கூட பார்த்ததில்லை.//

தவறுகள் திருத்தப்படலாம்

இங்க ”யாரையும்”ங்கறதுக்கு பதில் ”யாரும்” அப்படின்னு வரணும்ங்க!

ஆயில்யன் said...

//மொத்தத்துல நம்ம அசின், நயன் தாரா, பழைய ஐஸ்வர்யா ராய் எல்லோரையும் சேர்த்து செஞ்ச செப்புச் சிலைன்னு வச்சுக்கங்க//

அப்ப கால்ஷீட் கிடைக்கிறது கஷ்ட்மாச்சே....! :((((

ஆயில்யன் said...

//இதுல என்ன கொடுமைன்னா என்னோட அழகுக்கு முன்னாடி நிக்க கூட முடியாத இன்னும் சிலர் ஜொள்ளு வடித்தது தான்//

மிகவும் ரசித்த வரிகள்!

:)))

ஆயில்யன் said...

//எப்படியாவது என் காதலை அவள்கிட்ட வெயிலில் போட்ட புழு மாதிரி சொல்லனும்னு துடிச்சேன்./

அட இது புது மாதிரி டெக்னிகால தெரியுது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பாஸ் இப்படியும் ஒரு வாட்டி டிரைப்பண்ணி பாத்துபுடலாம் :))

ஆயில்யன் said...

//அவள் முகத்தில் தெரியும் ஒரு வித இறுக்கம் அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதை எனக்கு ஒவ்வொரு கணமும் உணர்த்திக் கொண்டு இருந்தது//

கரீக்ட் பாஸ்!!!

இதுதான் சரியான சந்தர்ப்பம் இப்பத்தான் நாம சாரி நீங்க கை கொடுக்க பிளான் பண்ணவேண்டிய டைம் :)))

Raju said...

ஜின்னா அண்ணே! நீங்க எங்கயோ பொயிட்டீங்க..!

ஆயில்யன் said...

//சுத்தமான சிலிகான் மற்றும் பல வேதிப் பொருட்களின் கலவை தான் உங்கள் ரேச்சி...இவள் ஒரு ரோபாட்//

அதனால என்ன பாஸ் நீங்க காதலிச்சு கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கோங்க!

வாழ்த்துக்கள் அட்வான்ஸா :))

லேகா பக்க்ஷே said...

ஹஹஹஹ நான் கதை தொடங்கும் போதே நினைச்சேன், இவரு எங்கேயோ மாட்டிக்கப் போறார்ன்னு.
ஸ்டோரி நல்லா இருக்கு.

Sumathi. said...

ஹாய்,

ஹா ஹா ஹா, //என் காதலே என் காதலே என்னை செய்யப் போகிறாய்? //

அடிச்சு பல்லு மூஞ்சியெல்லாம் சேதாராம் ஆக்கப்போறேன் :)))

//இதுல என்ன கொடுமைன்னா என்னோட அழகுக்கு முன்னாடி நிக்க கூட முடியாத இன்னும் சிலர் ஜொள்ளு வடித்தது தான்//

மிகவும் ரசித்த வரிகள்!

:)))

ஹஹஹஹ நான் கதை தொடங்கும் போதே நினைச்சேன், இவரு எங்கேயோ மாட்டிக்கப் போறார்ன்னு.
ஸ்டோரி நல்லா இருக்கு.

இதெல்லாம் நானும் சொல்ல நினைச்சுது, சோ ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்ஈஆMஸூMஆத்Hஈ

தமிழ் அமுதன் said...

;;))

நிஜமா நல்லவன் said...

:))

வல்லிசிம்ஹன் said...

இது என்ன புது சோகம்னு நினைத்து வந்தேன். அருமையான நகைச்சுவை:)

VIKNESHWARAN ADAKKALAM said...

அசத்தலாக பின்னிட்டிங்க...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) good...

அ.மு.செய்யது said...

சிறுகதை முயற்சி வெற்றி !!!!

அசால்ட் பண்றீங்க தல..


வாழ்த்துக்கள் !!!!!

புதியவன் said...

//Mcfame Robotics Company //

கம்பெனி பெயரை பார்த்ததும் முடிவை யூகிக்க முடிந்தது...

ஆனாலும் கதை முழுதும் சிரிப்பு...வெகு சுவாரசியம்...

Unknown said...

காய்ஞ்சி போன ஊர்ல இருக்கிறப்போ ரோபாட்டா இருந்தா கூட காதலிக்கலாம், அதனால உங்க காதலிய கைவிட்டுடாதிங்க...

நிலவுக்காதலன் said...

sir romba super sir :)

தமிழன்-கறுப்பி... said...

ரேவதி-ரேச்சி ஆஹா என்னமா வைக்கிறிங்க தல பேரு :))

தமிழன்-கறுப்பி... said...

ஆமால்ல ரேச்சி மாதிரி ஒரு பொண்ணுகூட வேலை பாத்தா நல்லா இருக்கும்ல... ;)

தமிழன்-கறுப்பி... said...

கலக்குங்க தல...!

தமிழன்-கறுப்பி... said...

\\"என் காதல் தோத்துப் போச்சுங்க"\\

இது எந்தக்காதல்?
நான் உங்க சொந்தக்கதைன்னு நினைச்சு வந்தேன்.. :)

தமிழன்-கறுப்பி... said...

ஊர்ல எடுத்த படத்தை எனக்கு அனுப்புங்க தல...

பாச மலர் / Paasa Malar said...

ஹா...ஹா...நல்ல ட்விஸ்ட்தான்..

செழியன் said...

அப்பு ஏன் இப்படி

Thamira said...

நடை பிரமாதம்தான், ஆனா டுபாகூர் கதை..

Unknown said...

Anna super.. :))))

Anonymous said...

Nice punch at the end. :D