Monday, May 11, 2009

”இப்ப நான் எங்க இருக்கேன்?” “where is my shopping bags?"

(வாசிப்பதற்கு முன்..
நீல நிறத்தில் இருப்பது ஆங்கிலத்திலும், கறுப்பு நிறத்தில் இருப்பது தமிழிலும் இருப்பதாக நினைத்துக் கொண்டு வாசிக்கத் துவங்குங்கள்.. இது ஒருவகையான Anti-Post modernism வகையிலான முயற்சி. புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்... ;-)) அன்புடன் தமிழ் பிரியன்.)

ஜானுக்கு என்றைக்கும் இல்லாத ஒரு பரபரப்பு இன்னைக்கு இருந்தது. மதிய வேளைஅலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வேகமாக விரைந்து கொண்டு இருந்தார். வேகமாக நடந்ததால் கொஞ்சம் மூச்சிரைக்க ஆரம்பித்து இருந்தது. குளிரால் அனைவரும் நடுங்கிக் கொண்டே நடந்து கொண்டு இருந்தனர். வயசும் 55 ஐ தாண்டிக் கொண்டு இருக்கிறதே..... khyber pass road போக்குவரத்து வர வர அதிகமாகிக் கொண்டே செல்வதாகவே அவருக்குப் பட்டது. “ஆக்லாந்தின் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது” என முணுமுணுத்துக் கொண்டார். New Market பகுதியில் இருந்த ஒரு கடையில் பேரன் பேத்திகளுக்காக சில விளையாட்டுப் பொருட்களையும், திண்பண்டங்களையும் வாங்கிக் கொண்டார்.

மாயக்காளைக்கு அந்த அதிகாலை வேலையிலும் வேர்த்து ஒழுக ஆரம்பித்து இருந்தது. அக்னி நட்சத்திர வெயில் நேரம் என்பதால் தனது மாட்டு வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு இருந்தார். காலை நேரம் சீக்கிரமே புலர்ந்து கொண்டு இருந்தது. வெயில் வருவதற்குள் உசிலம்பட்டியை அடைந்து விட்டால் கீரைக்கட்டுகளை வேகமாக விற்று விடலாம் என்பது அவரது எண்ணம். கீரை கட்டுகளும், காய்கறிகளும், இரண்டு ஆட்டுக் குட்டிகளும் அவரது மாட்டு வண்டியை நிறைத்திருந்தது. இந்த இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் விற்று விட்டு, மகளுக்கு சீர் செய்து சமாளிக்க வேண்டும் என்பது மாயக்காளையின் எண்ணம்.


ஜானின் நடை Boston road Railway station ஐ நோக்கி விரைவாக இருந்தது... அவருக்கு Avondale அருகில் உள்ள வீட்டிற்கு ரெயிலில் செல்ல வேண்டிய அவசரம். கைகளில் இருந்த Shopping bag களின் கனம் வேறு அவரது நடைக்கு தடையாக இருந்தது. இருந்தாலும் அமெரிக்காவில் வசிக்கும் மகள் பேரன் பேத்திகளுடன் வருகிறாள் என்ற மகிழ்ச்சி அவரது நடையில் ஒரு மிடுக்கையே கூட்டி இருந்தது. சில நாட்களாக பராமரிப்பு வேலைகளால் பொழிவிழந்து இருந்த ரெயில் நிலையம் இப்போது கொஞ்சம் களையாக தெரிந்தது. அதே காரணத்திற்காக ரெயில் நிறுத்தப்பட்டிருந்த போது போது காரில் வந்து, பார்க்கிங்கிற்காக karangahape road க்கு ஓடிய நாட்களை நினைத்துக் கொண்டார்.

மாயக்காளையால் மோசமான ரோட்டால் மாடுகளை வேகமாக செலுத்த இயலவில்லை. வண்டி கன்னாபட்டி, செக்காபட்டியைக் கடந்து போய்க் கொண்டு இருந்தது. ரோடு போட்டால் ஒரே வருடத்தில் பிய்த்துக் கொண்டு போய் விடுகின்றது. எல்லாம் அரசியல்வாதிகளின் கமிஷன் செய்யும் வேலை என நினைத்துக் கொண்ட போது ஆத்திரமே வந்தது. தேர்தல் நேரத்தில் அவர்கள் செய்யும் கூத்தும் அவரின் கோபத்திற்குக் காரணம்.

ஜான் ரெயில் நிலையத்திற்கு அருகில் நெருங்கிக் கொண்டு இருந்த போதுதான் அது நிகழ்ந்ததது.. டமார் என்ற பலத்த சத்தம்.. எங்கிருந்தோ வேகமாக வந்த வண்டி அவரின் மீது மோதி அவரை வீழ்த்தியது.... Oh! My god என்ற அலறல் மட்டும் கேட்டது.
செங்க மங்கலாக காலைப் பொழுது புலர்ந்து கொண்டு இருந்தது. உசிலம்பட்டி ரெயில்வே கேட்டை மாயக்காளையின் மாட்டு வண்டி நெருங்கி இருந்தது. பின்னே கேட்ட ஹார்ன் சத்தத்தால் மீது சென்று கொண்டு இருந்த மாயக்காளை திரும்பிப் பார்த்த போது மிக வேகமாக ஒரு லாரி அவரது வண்டியை நோக்கி வந்து கொண்டு இருந்தது... லாரியின் பிரேக் பெயிலியர் என்பதை புரிந்து கொள்ள சில வினாடிகளே தேவைப்பட்டது. வேகமாக மாடுகளை முடுக்கி விட்டார்.. ஆனாலும் லாரி அதி வேகத்தில் மாட்டு வண்டியின் மீது மோதி வண்டியை தூக்கி விசிறி அடித்தது.. ஐயோ.. அம்மா என்ற அலறலுடன் மாயக்காளை தூக்கி விசிறியடிக்கப்பட்டிருந்தார்.

அவர் அரை மயக்கத்தில் விழித்துப் பார்த்த போது ரெயில்வே கேட்டுக்கு அருகில் கிடந்தார். அவருக்கு அருகில் கீரைக்கட்டுகளும், காய்கறிகளும் சிதறிக் கிடக்க ஆடு ஒன்று காயத்துடன் கதறிக் கொண்டு இருந்தது. அவர் வாழ்க்கையில் கண்டிராத வெயில் அவரைத் தாக்கிக் கொண்டு இருந்தது. வாய் இம்சையில் முணுமுணுத்தது "where am i" “where is my shopping bags?"

குளிரால் அவரது உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது... அவர் இதுவரை கண்டிராத ஒரு இடத்தில் காயங்களுடன் கிடக்க, ஆம்புலன்ஸின் சத்தம் அசரீரியாக கேட்டுக் கொண்டு இருந்தது.. அவரைச் சுற்றி சில பொம்மைகளும், சாக்லெட்களுடம் கிடக்க ஈணஸ்வரத்தில் முனங்கினார்.. “என்னோட மாட்டு வண்டி, ஆடு, மாடு எல்லாம் எங்க போச்சு?.. இப்ப நான் எங்க இருக்கேன்?”.

படங்கள் நன்றி : ப்ளீக்கர் இணையம்.

32 comments:

தமிழ்நெஞ்சம் said...

சூ ப் ப ர்

எந்த நாடாக இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும் - விபத்து என்று வந்துவிட்டால் where is my shopping bags? நான் எங்கே இருக்கேன்னு கேட்டுத்தானே ஆகனும்.

6 மாசத்துக்கு முன்னாடி இதே நிலைமை எனக்கும் ஏற்பட்டது. நானும் இதே கேள்வியைத்தான் கேட்டேன்.

//புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்... ;-))

ஆயில்யன் said...

தம்பி டிபரெண்டா திங்க பண்ணியிருக்கீங்க

வாழ்த்துக்கள் !

மங்களூர் சிவா said...

ரைட்டு!

மங்களூர் சிவா said...

தமிழ்பிரியன் அண்ணே நலமா?

ராமலக்ஷ்மி said...

வித்தியாசமான முயற்சி. அருமையாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள் தமிழ் பிரியன்.

புரிந்தவர்கள் அப்போது வாக்களிக்கக் கூடாதா:( ? நான் அளித்து விட்டேன், ஆனால் புரிந்துதான் புரிந்துதான்!!

புரிந்ததா?

Mrs.Faizakader said...

உங்கள் பதிவுகள் மிகவும் விதியாசமான சிந்தனையில் அருமையாக இருக்கு அண்ணன்

Sasirekha Ramachandran said...

அட.....12B ஸ்டைல்ல எழுதி இருக்கீங்க.but வாசிக்கறதுக்குள்ள கொஞ்சம் தலை சுத்திருச்சு.:(good try!!!:)

ஆயில்யன் said...

//Mrs.Faizakader said...
உங்கள் பதிவுகள் மிகவும் விதியாசமான சிந்தனையில் அருமையாக இருக்கு அண்ணன்
///


நீங்க வேற பதிவுகள் மட்டுமில்ல ஆளை எப்பவும் மோட்டுவளை பார்த்தப்படியேதான் அமர்ந்திருப்பாராம் ! நம்பதகுந்த வட்டார தகவல்
எது எப்படியோ நமக்கு சுவையான பதிவுகள் படிக்க கிடைக்குதுல்ல அது போதும் :))

ஆயில்யன் said...

//புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்... ///


இதில் உள்ள நுண்ணரசியலை மிகவும் ரசித்தேன்!

:))

G3 said...

// ஆயில்யன் said...

//புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்... ///


இதில் உள்ள நுண்ணரசியலை மிகவும் ரசித்தேன்!

:))

//

ரிப்பீட்ட்டே :)))

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//ஆயில்யன் on May 11, 2009 3:55 PM said...

//புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்... ///


இதில் உள்ள நுண்ணரசியலை மிகவும் ரசித்தேன்!

:))
//

அண்ணன் ஆயில்யன் கேட்டுக் கொண்டதற்கிணங்க கன்னாபின்னாவென்று ரிப்பீட்டறேன்.

( ஆயில்ஸ் அந்த லைன் இந்த பதிவுல தானே இருக்கு. வேற யாரோடதுமில்லையே :) )

Jeeves said...

எங்களுக்குப் புரியக்கூடாதென்பதற்காகவே எழுதிவிட்டு இப்படிச் சொல்லிச் செல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தொடரும் பட்சத்தில் சென்ஷிக்கும், கவிதாயினி காயத்ரிக்கும் நடந்தது உங்களுக்கும் நடக்கக் கூடும். ( என்னன்னு தெரியலைன்னா ஆயில்யன கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. )

//புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்... ;-))

ஆயில்யன் said...

// Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//ஆயில்யன் on May 11, 2009 3:55 PM said...

//புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்... ///


இதில் உள்ள நுண்ணரசியலை மிகவும் ரசித்தேன்!

:))
//

அண்ணன் ஆயில்யன் கேட்டுக் கொண்டதற்கிணங்க கன்னாபின்னாவென்று ரிப்பீட்டறேன்.

( ஆயில்ஸ் அந்த லைன் இந்த பதிவுல தானே இருக்கு. வேற யாரோடதுமில்லையே :) )
///

ஏண்ணே ! தம்பி டிபரெண்டா எழுதியிருக்காரே படிங்கன்னு சொல்லி கூப்பிட்டா இங்க வந்துட்டு என்னனமோ சொல்லி போங்க !

உங்க கூட டூக்கா !

ஆயில்யன் said...

//கவிதாயினி காயத்ரிக்கும் நடந்தது உங்களுக்கும் நடக்கக் கூடும். ( என்னன்னு தெரியலைன்னா ஆயில்யன கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க//

அய்யய்யோ ! அண்ணன் ஆவேசப்பட்டுடாரு தம்பி இனி என்ன நடக்கப்போகுதோ....!


இந்த வாரம் முழுசும் நெஞ்சு திக்திக்ன்னு அடிச்சுக்கிட்டு கெடக்கப்போவுது என்னிக்கு பதிவு ரீலிசாகப்போகுதோ.....!

:((

தமிழன்-கறுப்பி... said...

//புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்//


இது புரியுது
இதானேய்யா நடக்குது ரொம்ப காலமா...

தமிழன்-கறுப்பி... said...

ஆமா நீங்க அமெரிக்கா போனிங்க..

தமிழன்-கறுப்பி... said...

anti postmoddernism ?

அப்படின்னா?

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் அண்ணே...!

தமிழன்-கறுப்பி... said...

//புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்//

தேர்தல் டைம்ல எழுதின
இந்த விசயத்துக்காக மட்டுமே உங்களுக்கு அவார்டு குடுக்கலாம் தல.. :)

தமிழன்-கறுப்பி... said...

இன்னும் எழுதுங்க...!

இராம்/Raam said...

:))

சந்தனமுல்லை said...

//ஆயில்யன் on May 11, 2009 3:55 PM said...

//புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்... ///


இதில் உள்ள நுண்ணரசியலை மிகவும் ரசித்தேன்!

:))
//

ரிப்பீட்டு!

ஆதிமூலகிருஷ்ணன் said...

எப்டி இப்டிலாம்.?

நல்லாருந்தது பாஸ்..

ச்சின்னப் பையன் said...

வித்தியாசமான முயற்சி. அருமையாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள் தமிழ் பிரியன்.

ஸ்ரீமதி said...

வித்தியாசமா நல்லா இருக்கு அண்ணா :)))

நிஜமா நல்லவன் said...

அண்ணே டிபரெண்டா திங்க பண்ணியிருக்கீங்க

வாழ்த்துக்கள் !

sumathi said...

ஹலோ தமிழ் ப்ரியா,

ஏன் ஏன் ஏன் இப்படிலாம்? என்னாச்சு?
என்னதான் வெயில் அதிகம்னாலும் இப்படியா?

////புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்... ;-))//

இது தான் சரியா புரியலை. ஹா ஹாஹா ஹாஹா....

//தம்பி டிபரெண்டா திங்க பண்ணியிருக்கீங்க //இதுக்கு ஒரு ரிப்பீட்டேய்...

//நீங்க வேற பதிவுகள் மட்டுமில்ல ஆளை எப்பவும் மோட்டுவளை பார்த்தப்படியேதான் அமர்ந்திருப்பாராம் ! நம்பதகுந்த வட்டார தகவல் /// அடப் பாவமே...

நிஜமா நல்லவன் said...

/( என்னன்னு தெரியலைன்னா ஆயில்யன கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. )/


ஏன்? என்னை கேட்டா சொல்ல மாட்டேனா???

நிஜமா நல்லவன் said...

லாரி மோதியதில் மாயக்காளை அவரோட வண்டியோட ஆக்லாந்தில் போய் விழுந்துட்டாரு.....அந்த வண்டியில் மோதிய ஜான் உசிலம்பட்டியில் வந்து விழுந்துட்டாரு....என்ன கொடுமை அண்ணே இது????

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையாக இருக்கு .. வித்தியாசம் காட்டுனும்ன்னெ யோசிப்பீங்க போல..

நாணல் said...

வித்தியாசமா அழகா இருக்குங்க அண்ணா.. வாழ்த்துக்கள்... :)

தமிழர்ஸ் - Tamilers said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

LinkWithin

Related Posts with Thumbnails