Wednesday, May 27, 2009

என்னத்தங்க எழுத..

கொஞ்சநாளா பதிவு எழுதுவதற்கான மனநிலை இல்லை. ஏனோ நம் கருத்தை திணிக்க நினைக்கும் ஒன்றாக பதிவு எழுதுகின்றோமோ என்ற யோசனை வருகின்றது. அவரவர் மன திருப்திக்காக எழுதினாலும், பதிவு போட வேண்டும் என்பதற்காக எழுதுவதற்கும், நம் எழுத்தை வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவும் பதிவு எழுதுவதற்கும் பல மடங்கு வித்தியாசம் இருப்பதாகவே உணர்கின்றேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Fireproof என்று ஒரு படம் பார்க்க நேரிட்டது. ஒரு கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சினைகள் அவர்களை விவாகரத்து வரை இட்டுச் செல்கின்றது. தீயணைப்பு பணியில் இருக்கும் அந்த அவனது தந்தை மகனையும், மருமகளையும் ஒன்றிணைக்க ஒரு 40 நாள் திட்டத்தை சொல்கின்றார்.. அதன் இறுதியில் என்ன ஆனது என்பது தான் அந்த ரம்மியமான கதை. எந்த சினிமாத்தனமும் இல்லாத படம்.

இதைப் பற்றி எழுதலாம் என்று எண்ணி இருந்த நேரத்தில் நம்ம நண்பர் குசும்பன் IMDB பார்த்து கதை எழுதுவது எப்படி என்று பதிவு வேறு போட்டு விட்டதால் அதை அப்படியே விட்டு விடுகின்றேன்... ;-)))


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





பல நாட்களாக பதிவு எழுதாமல் விட்டுள்ளதால் ஹிட்ஸ் கவுண்டர் காற்று வாங்குகின்றது. தினசரி 50 ஹிட்ஸ் வருகின்றது. எல்லாம் பொதுவாக கூகுள் தேடல் மூலம் வருபவர்களே அதிகமாக இருக்கின்றனர். தேடு பொறியின் குறிச் சொற்களைப் பார்த்தால் நமக்கே ஆச்சர்யமாக இருக்கின்றது. நடிகையின் பெயர்களை குறிச் சொல்லாக இட்டு தேடப் பட்டு வருபவையே அதிகமாக இருக்கின்றன.


சில காலத்திற்கு முன் பதிவுலகில் மும்முரமாக இருந்த நேரம் பொன்னியின் செல்வன் பற்றி சில விஷயங்கள் எழுதி இருந்தேன். நந்தினிக்கும், வீர பாண்டியனின் இடையே உள்ள உறவு குறித்து.. இந்த பதிவுக்கும் கூகுள் தேடல் மூலம் ஹிட்ஸ் வருவது அதிகமாக இருக்கின்றது. நம்மளை மாதிரி பொன்னியின் செல்வன் பித்தர்கள் அதிகமாக இருப்பார்கள் போல உள்ளது.. ;-))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நமக்கு நுனிப்புல் மேய்வது என்றால் ரொம்ப பிடிக்கும். அது இலக்கியமா இருந்தாலும் சரி, அரசியலா இருந்தாலும் சரி. எனக்கு இந்த பழக்கம் ரொம்ப நாளா இருக்கு. பதிவைப் படிக்கும் போது முன்னால் உள்ள ஒரு பாராவைப் படித்துவிட்டு கீழே சென்று கமெண்ட்களைப் பார்த்து அதற்குத் தகுந்தாற் போல் கமெண்ட் போட்டு விட்டு சென்று விடுவேன்... நான் மட்டும் தான் இப்படியா? நம் மக்களும் இபப்டியான்னு சந்தேகம் வரும். அவ்வப்போது மக்களை டெஸ்ட் பண்ணி இதைக் கன்பர்ம் பண்ணிக்குவேன்.

முன்பு வடகரை வேலன் அண்ணாச்சி எழுதிய ஒரு கவிதையைப் போட்டு கீழே இது பிரபல பதிவர் எழுதியது என்று எழுதி வைத்து இருந்தேன்.. எல்லாரும் அது என் கவிதை என்று நினைத்து பாராட்டி விட்டு சென்றனர். ஒரு சிறுகதை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதினேன்.... என்னை மாதிரியே எல்லாம் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டுட்டு போய்ட்டாங்க... ;-))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்கு ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன். தீம் ரெடி... கதை எப்ப எழுத முடியும்ன்னு தெரியல... பார்ப்போம்..

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html

படம் இணைப்பு : பிக்காசாவில் கிடைத்த படம்... அழகான இடத்தில் எல்லோரும் நினைவு கூறும் சைக்கிள் பழகும் படம். அழகா இருந்தது.

19 comments:

ஆயில்யன் said...

// பதிவு எழுதுவதற்கான மனநிலை இல்லை. ஏனோ நம் கருத்தை திணிக்க நினைக்கும் ஒன்றாக பதிவு எழுதுகின்றோமோ என்ற யோசனை வருகின்றது.//

ப்ளாக்கிங்க் அப்படிங்கறதே நாம நம்மளை பத்தி,நமக்கு புடிச்ச விசயத்தை பத்தி, எதை பத்தி வேணும்னாலும் எழுதறதுக்குத்தான்! என்ன வாசகர்வட்டம் இருந்துச்சுன்னா பல பேர் படிச்சு பயபுள்ளை என்னிய மாதிரியே ஃபீல்பண்ணியிருக்காண்டான்னு சந்தோஷப்படுவாங்க அவ்ளோதான் !

ஆயில்யன் said...

//பல நாட்களாக பதிவு எழுதாமல் விட்டுள்ளதால் ஹிட்ஸ் கவுண்டர் காற்று வாங்குகின்றது.//

ம்ம்ம் உங்களுக்காச்சும் காற்று வாங்குது சந்தோஷப்பட்டுங்கோங்க :))

ஆயில்யன் said...

//"என்னத்தங்க எழுத.."//

ஒரு வரியில யோசிச்சே நீங்க இம்புட்டு விசயம் எழுதும்போது இன்னும் நிறைய சின்ன சின்ன வார்த்தைகளை வைச்சுக்கிட்டு மோட்டுவளை படிச்சு உக்காந்தீங்கன்னா இன்னும் எவ்ளோ சாதிக்கலாம் பாஸ் !

எந்திரிச்சு வாங்க :))))

சென்ஷி said...

//
முன்பு வடகரை வேலன் அண்ணாச்சி எழுதிய ஒரு கவிதையைப் போட்டு கீழே இது பிரபல பதிவர் எழுதியது என்று எழுதி வைத்து இருந்தேன்.. எல்லாரும் அது என் கவிதை என்று நினைத்து பாராட்டி விட்டு சென்றனர். ஒரு சிறுகதை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதினேன்.... என்னை மாதிரியே எல்லாம் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டுட்டு போய்ட்டாங்க... ;-))//

ஆமாங்க. உங்க கவிதை சூப்பரா இருந்தது. :)

அருண்மொழி said...

அயோத்தி ராமர் கோயில் பற்றி பா.ராகவன் என்ன கூறுகிறார்

http://arunmozhi985.blogspot.com/2009/05/blog-post_27.html

ராமலக்ஷ்மி said...

//பதிவு போட வேண்டும் என்பதற்காக எழுதுவதற்கும்//

முடிந்தவரை நான் தவிர்த்திடுவேன்:)!

//நுனிப்புல் மேய்வது//

நடக்கட்டும் நடக்கட்டும்:))!

//தீம் ரெடி...//

பிறகென்ன?

//கதை எப்ப எழுத முடியும்ன்னு தெரியல...//

இப்படியெல்லாம் கதை விடக் கூடாது:o!

//பார்ப்போம்..//

...இல்லை. எழுதுறீங்க!!!

Tech Shankar said...

இப்படி எங்க கிட்டேயே கேட்டுட்டீங்களே.. என்ன கொ.சா.இ.

//என்னத்தங்க எழுத..

Tech Shankar said...

நான் ஹிட் கவுண்டரே வைத்துக்கொள்வதில்லை - தல.. இ.எ.இ.


////பல நாட்களாக பதிவு எழுதாமல் விட்டுள்ளதால் ஹிட்ஸ் கவுண்டர் காற்று வாங்குகின்றது.//

தேவன் மாயம் said...

கொஞ்சநாளா பதிவு எழுதுவதற்கான மனநிலை இல்லை. ஏனோ நம் கருத்தை திணிக்க நினைக்கும் ஒன்றாக பதிவு எழுதுகின்றோமோ என்ற யோசனை வருகின்றது. ///
அனைத்துப் பதிவர்களுக்கும் இப்படி ஒரு நிலை வரத்தான் செய்கிறது தமிழ்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எத்தனை பதிவெழுதியதில் உங்களுக்கு இந்த ஞானம் வந்ததுன்னு சொல்லுங்க தமிழ்.. :))

Thamira said...

நான் முழுமையாக பதிவையும், பின்னூட்டங்களையும் படிக்காமல் பின்னூட்டமிடுவதில்லை. சமயங்களில் பின்னூட்டங்கள் மிக அதிகமாக இருக்கும் போது மட்டும்தான் பின்னூட்டங்களைப்படிக்காமல் பின்னூட்டமிட நேர்கிறது. இதனால் என் வலைக்கு ரெகுலராக வரும் பல பதிவர்கள் பதிவுக்குக்கூட இதுவரை பின்னூட்டமிட்டதில்லை.. என்ன பண்றது?

மங்களூர் சிவா said...

அண்ணே நலமா??

மங்களூர் சிவா said...

என்னத்த கமெண்ட்ட அப்படின்னு போக முடியுதா கமெண்ட்டறோம்ல அதுமாதிரி எதாச்சும் எழுதுங்க
:))

மங்களூர் சிவா said...

ஓ அந்த படத்துல சைக்கிள் பழகறாங்களா? நான்கூட ராக்கட் விடறாங்கன்னு இல்ல நினைச்சேன்
:)))

அன்புடன் அருணா said...

கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஃப்ரெஷா வாங்க!!! எல்லாம் சரியாயிடும்!!!

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யனோட முதல் கமன்ட்டு சந்தோசமாயிருக்கு அதனால அதுக்கு ரிப்பீட்டு போட்டுக்கறேன்..

தமிழன்-கறுப்பி... said...

படம் பிடித்திருக்கிறது,

பல பழைய நினைவுகளை...

பாச மலர் / Paasa Malar said...

சிறுகதை எழுதியாச்சா...

கீழை ராஸா said...

//"என்னத்தங்க எழுத.."//
அட என்னத்த எழுத என்றே இப்படி ஒரு பதிவெழுதி கலக்கிருக்கீங்களே...?
என்ன எழுத என்று தெரிந்தால்...