Thursday, June 11, 2009

32 கடல், மலை தாண்டி பதிவு போடும் முறை


கடைசியில் 32 கேள்விகள் விளையாட்டு நம்மிடமே வந்து விட்டது. .சரி நேரா மேட்டருக்கு போய்டலாம்..

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

முதல் முதலில் இணையத்தில் நுழைந்த போது யூனிகோட் தமிழ், கணிணியில் தெரிய வைக்கத் தெரியாமல் அவதிப்பட்டேன்... பின்னர் தேடுபொறி மூலம் ஒரு தமிழ் கூகுள் குழுமத்தில் நுழைந்த போது புனைப்பெயர் தர வேண்டி வந்தது.. ஏதோ ஒரு மயக்கத்தில் தமிழ் பிரியன் என்று கொடுத்தேன்... இதுவே இன்று நிலைத்து விட்டது. எனது பெயர் எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

கல்யாணத்துக்கு முன்னாடி வரை எத்தனை வருடத்துக்கு முன்னாடி அழுதேன் என்று யோசிப்பேன்... கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்பவே நம்ம உறவுகள் நம்மை அழ வச்சு பழக்கிட்டாங்க.. அதனால் அழுகை எல்லாம் ரொம்ப சாதாரணம் ஆயிடுச்சு .. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் நான் சோகமாக இருக்கும் நேரங்களில் சில குறிப்பிட்ட சோகமான படங்களைப் பார்ப்பேன். அதில் மூழ்கி விடும் போது நம்ம கவலை எல்லாம் பஞ்சு மாதிரி பறந்து பூடும் .... பத்து நாட்களுக்கு முன் தன்மாத்ரா படம் மறுபடியும் பார்த்தேன்.. அப்ப அழுதேன்.


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு ரொம்ப பிடிக்கும்... தமிழ், ஆங்கிலம் இரண்டும்.. படிப்பவர்களுக்கு பிடிக்குமான்னு தெரியல.

4).பிடித்த மதிய உணவு என்ன?
நன்றாக ஆறின சோறு, புளிக்காத தயிர், அதோட ஆட்டுக் கறியில் நெஞ்சுக்கறியை மிளகு சீரகம் போட்டு சுக்கா செய்து கொடுத்தால் சந்தோசமா சாப்பிடுவேன். அப்படியே கொஞ்சம் வெங்காயம், இரண்டு துண்டு எலுமிச்சம் பழமும்... :)


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இந்த கேள்வியை நிறைய பேர் குழப்பி இருக்காங்க.. நான் என்னையே போன்ற ஒருவனுடன் நட்பு வச்சுக்க முடியுமா என்பது தான் இதன் சாராம்சம் என்று நினைக்கின்றேன். Same frequency கிடைக்காம தானே அலைகின்றோம்.. உடனே நட்பு வச்சுக்குவேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
யோசிக்காம பதில் சொல்வேன்.. அருவி தான் என்று.. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உருண்டு பிறண்டு வளர்ந்தவனுக்கு அருவியை விட மனதை மயக்கும் இடம் இருக்குமா என்ன?

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவருடைய தோற்றத்தைத் தான் பார்ப்பதாக நினைக்கிறேன். சில முக்கிய நேரங்களில் கண்களைப் பார்த்துப் பேசும் வழக்கம் இருக்கிறது.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் : தாராள மனம் (ஹிஹிஹி நம்பனும்), நேரந்தவறாமை.
பிடிக்காத விஷயம் : எல்லாரிடமும் ரொம்ப மென்மையாக நடந்து கொள்வது... (மாற்ற முடியலீங்க..)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
பிடித்தது : எந்த சூழலில் பொய் சொல்லாமல் இருப்பது, பாசத்தைக் கொட்டுவது
பிடிக்காதது : அவளிடம் மட்டும் சொல்லி விடுவேன்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
கண்டிப்பாக மனைவி, மகனுடன்.. :)

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளைக் கலர் கை வைத்த பனியன்(புதுசுங்க.. எங்கயும் கிழிய வில்லை இன்னும்), கட்டம் போட்ட லுங்கி.. அறைக்கு வந்ததும் உடை மாற்றி விடுவேன்... :)

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
சில காலமாக “தும்பி வா தும்பக் குடத்தின்” என்ற வாணி விஸ்வநாத் பாடிய மலையாள பாடல் தான் பேவரைட்டாக இருக்கின்றது.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வான நீலம் தான் பிடிக்கும்... ஆனால் அதில் எழுதினால் படிக்க முடியுமான்னு தெரியலியே.. :)

14.பிடித்த மணம்?
மல்லிகைப் பூ மலரும் நேரம் வரும் சுகந்தமான மணம்.. ;-)

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

கண்மணி டீச்சர் - நாலு மாசமா பதிவுலகை விட்டு காணாம போய் இருக்காங்க.. எங்க பதிவுலக குரு.. திரும்ப பதிவு போட ஒரு அழைப்பா இருக்கட்டும்.

காதல் கறுப்பி தமிழன் - இவனுக்குள்ள என்னமோ இருக்குய்யா என்று எப்பவும் நான் யோசிக்கும் நண்பன்(ர் - நல்லா இல்லீங்க.. :) )

நாணல் - நல்ல திறமை உள்ள என் சகோதரி.. வித்தியாசமான படைப்புகளை எப்போதும் இவரிடம் இருந்து எதிர்பார்ப்பேன். அடுத்த கவிதாயினி போஸ்ட்டுக்கு தகுதியானவர்.. இவருக்கு நேரம் கிடைத்தால் சிறப்பான படைப்புகளை எதிர்பார்க்கலாம்.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
நம்ம ஆயில்யன் அண்ணன்... மரியாதைக்குரியவர். இவரது பதிவில் எதை எடுக்க எதை விட... எல்லாமே பொறுப்பான பதிவுகளா இருக்கும். ஈஸ்ட் ஆர் வெஸ்ட் ஆயில் அண்ணா இஸ் த பெஸ்ட் அப்படின்னு எங்க ஆச்சி சொல்லி இருக்காங்க
1ம் இல்லை பதிவுகளில் எல்லாத்தையும் அடக்கி விடுவார்.

17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?
கண்டிப்பா இல்லை.. கண் இன்னும் நல்லா இருக்கு.. :) 6/6

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
பாச உணர்வுகளை எதார்த்தமாக எந்த சினிமாத் தனமும் இல்லாமல் வழங்கும் படங்களை விரும்பிப் பார்ப்பேன். பாடல் காட்சி, சண்டைக் காட்சிகளை கண்டிப்பாக ஸ்கிப் செய்து விடுவேன்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
சென்ற வெள்ளி மாலையில் - Calcutta News - ப்ளஸ்ஸி (Blessy) க்காக பதிவிறக்கிப் பார்த்தேன்... கொஞ்சம் ஏமாற்றம் தான்.. ப்ளஸ்ஸிக்கு எப்பவும் உணர்வுகளை வசனங்களில் இல்லாமல் காட்சிகளாக தருவதில் ஆர்வம் அதிகம். தன்மாத்ரா, கால்ச்சா, பலுங்கு போன்ற படங்களைப் பார்த்தால் தெரியும். கல்கத்தா நியூஸில் கொஞ்சம் சறுக்கல் அவருக்கு...

21.பிடித்த பருவ காலம் எது?
கோடையும் இல்லாமல், குளிரும் இல்லாமல் மிதமாக இருக்கும் சீதோசனம் பிடிக்கும்.. அதோடு கார் காலம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
நம்புவீர்களா என்று தெரியவில்லை.. நவீனன் டைரி - நகுலன் எழுதியது. முதல் தடவை படித்து விட்டு என்ன சொல்ல வருகின்றார் என்பது புரியாததால் இரண்டாவது தடவை படிக்க ஆரம்பித்துள்ளேன்.. இந்த தடவையாவது புரியனும்.. ஆனால் படிக்கும் போது ஒரு வெறி வருகின்றது.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அடிக்கடி மாற்றும் வழக்கம் இல்லை.. எப்பவும் விண்டோஸில் இருக்கும் அடிவானம் தான் இருக்கும்.. சமீபமாக சில நாட்களாக எனக்கு இருப்பது போலவே நெற்றியில் புருவத்திற்கு மேல் சிறு வெட்டுக் காய தழும்பு இருக்கும் ஒரு பெண்ணின் முகம் மட்டும் உள்ளது.. யார் என்பது சஸ்பென்ஸ்.


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
அப்படிப் பிரிக்கத் தெரியவில்லை... அதிக சத்தமுள்ள இயந்திரங்களிலேயே வேலை செய்வதால் பிடிக்காத சத்தம் ஏதுமிருப்பதாக தெரியவில்லை... சில நேரங்களில் மட்டும் ஆஆஆஆஆஆ என்று வாயை முழுவதும் திறந்து கொட்டாவி விடும் சத்தம் எரிச்சலை ஊட்டும்.

பிடித்தது : குழந்தைகளின் மழலை..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
துபாய், சவுதி அரேபியா

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் துறை படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும், அத்துறைகளில் கடந்த பத்து ஆண்டுகளாக வேலை செய்து வருவகின்றேன். எங்களது துறை சார்ந்த மெக்கானிக்கல் இயந்திரங்களுக்கான எலக்ட்ரிக்கல் கண்ட்ரோல்களில் ஏற்படும் நுணுக்கமான பிரச்சினைகளை துரிதமாக சரி செய்யும் ஆற்றலை இறைவன் வழங்கியுள்ளான். அதோடு புதிதாக கண்ட்ரோல் சர்க்யூட்களை டிசைன் செய்து, அதை நானே ஆட்டோகேட் மூலம் வரைந்து, களத்திலும் செயல்வடிவம் கொடுக்க முடிகின்றது என்பதும் வல்ல இறைவனின் கருணை தான்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
புறம் பேசுவதும், கோள் சொல்வதும். :(

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
மற்றவர்களின் குறைகளை அவர்களிடமே சொல்லி விடுவது

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
இன்னும் பார்க்கவில்லை.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாக இருக்கவே ஆசை...

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
ஊரில் இருக்கும் போது கணிணியில் இருப்பது மனைவிக்கு பிடிக்காது. எனவே அதிகப்படியாக செய்யக் கூடியது அதுவாகத் தான் இருக்கனும்...
மனைவி சொல்வது : உங்களுக்கு முதல் மனைவி உங்க கணிணி தானே.. ;-))

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
எல்லா சுதந்திரங்களும், இன்பங்களும், லாகிரி வஸ்துகளும் சுலபமாக கிடைக்கும் போதும், கடும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று எனக்கு நானே போட்டுக் கொள்ளும் கற்பனைக் கோட்டுக்குள் இருப்பது என்று நினைக்கிறேன்.

37 comments:

நட்புடன் ஜமால் said...

ஏதோ ஒரு மயக்கத்தில் தமிழ் பிரியன் என்று கொடுத்தேன்... இதுவே இன்று நிலைத்து விட்டது. எனது பெயர் எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.\\

எங்களுக்கும் பிடிச்சிருக்கு 'தல'

நட்புடன் ஜமால் said...

இந்த கேள்வியை நிறைய பேர் குழப்பி இருக்காங்க.. நான் என்னையே போன்ற ஒருவனுடன் நட்பு வச்சுக்க முடியுமா என்பது தான் இதன் சாராம்சம் என்று நினைக்கின்றேன். Same frequency கிடைக்காம தானே அலைகின்றோம்.. உடனே நட்பு வச்சுக்குவேன்.\\

நல்ல விளக்கம் பாஸ்

நட்புடன் ஜமால் said...

பிடிக்காத விஷயம் : எல்லாரிடமும் ரொம்ப மென்மையாக நடந்து கொள்வது... (மாற்ற முடியலீங்க..)
\\

இது நல்ல விடயம் தானே

ஏன் மாற்றனும்

நட்புடன் ஜமால் said...

\\பாடல் காட்சி, சண்டைக் காட்சிகளை கண்டிப்பாக ஸ்கிப் செய்து விடுவேன்.
\\

என்னை போல் ஒருவர்(இன்னும் பலர் இருப்பாங்கப்பா)

நட்புடன் ஜமால் said...

\\28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
மற்றவர்களின் குறைகளை அவர்களிடமே சொல்லி விடுவது
\\

இதுவும் நல்ல விடயம் தான்

புறம் சொல்லாமல் ...

நட்புடன் ஜமால் said...

\\உங்களுக்கு முதல் மனைவி உங்க கணிணி தானே.. ;-))\\



அட‌ சேம் ப்ள‌ட் ...

ஆயில்யன் said...

நல்லா இருக்குங்க தம்பி


வார்த்தைக்கு கட்டுப்பட்டு 32லயும் கலக்கிட்டீங்க !

ஆயில்யன் said...

//காதல் கறுப்பி தமிழன் - இவனுக்குள்ள என்னமோ இருக்குய்யா என்று எப்பவும் நான் யோசிக்கும் நண்பன்(ர் - நல்லா இல்லீங்க.. :) )//


ர் - ஆமாம் தம்பி

யார் தம்பி நம்ம பய!
ரெண்டு மூணு கெட்டவார்த்தை போட்டுக்கூட கூப்பிடுங்களேன் :))))))))))))

ஆயில்யன் said...

//கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்பவே நம்ம உறவுகள் நம்மை அழ வச்சு பழக்கிட்டாங்க.//

உறவுகள்ன்னாலே அப்படித்தானே!

அதுக்கு நட்புக்கள் கொஞ்சம் தேவலாம்! :)))

ஆயில்யன் said...

//வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் நான் சோகமாக இருக்கும் நேரங்களில் சில குறிப்பிட்ட சோகமான படங்களைப் பார்ப்பேன். ///


கண்ணில் கொஞ்சம் தண்ணீர் வரும் சோகத்தினை பெரும் சோகமாக்கி அதில் நீச்சலடிக்கும் உங்களின் திறமை எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது தம்பி!

ஆயில்யன் said...

//மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உருண்டு பிறண்டு வளர்ந்தவனுக்கு ///


எம் புள்ள ரொம்ப அழிச்சாட்டியம் பண்ணுவான் சின்னபுள்ளையில்ல எதாச்சும் வேணும்னா டப்புன்னு தரையில வுழுந்து புரளுறதே பொழப்பு அவனுக்கு என்று உங்க அம்மா பெருமையா சொன்னது புரிகிறது :)

ஆயில்யன் said...

//எல்லாரிடமும் ரொம்ப மென்மையாக நடந்து கொள்வது... (மாற்ற முடியலீங்க..)//


முடியும்ன்னே முடியும் எதையுமே மாத்த முடியும் !

எங்க என்னிய திட்டுங்க பார்ப்போம்! திட்டாட்டி நான் திட்டுவேன்!

ஆயில்யன் said...

//12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
சில காலமாக “தும்பி வா தும்பக் குடத்தின்” என்ற வாணி விஸ்வநாத் பாடிய மலையாள பாடல் தான் பேவரைட்டாக இருக்கின்றது.///

சேம் சேம் :)

ஆயில்யன் said...

//நாணல் - நல்ல திறமை உள்ள என் சகோதரி.. வித்தியாசமான படைப்புகளை எப்போதும் இவரிடம் இருந்து எதிர்பார்ப்பேன். அடுத்த கவிதாயினி போஸ்ட்டுக்கு தகுதியானவர்..///

உண்மை!

வாழ்த்துகிறேன் :)

ஆயில்யன் said...

/அடிக்கடி மாற்றும் வழக்கம் இல்லை.. எப்பவும் விண்டோஸில் இருக்கும் அடிவானம் தான் இருக்கும்.. சமீபமாக சில நாட்களாக எனக்கு இருப்பது போலவே நெற்றியில் புருவத்திற்கு மேல் சிறு வெட்டுக் காய தழும்பு இருக்கும் ஒரு பெண்ணின் முகம் மட்டும் உள்ளது.. யார் என்பது சஸ்பென்ஸ்.//

படுவா ராஸ்கல் டெஸ்க்டாப்லயா வைச்சுருக்கிறீர்

இருக்கட்டும் !
:)

ஆயில்யன் said...

//நம்ம ஆயில்யன் அண்ணன்... மரியாதைக்குரியவர். இவரது பதிவில் எதை எடுக்க எதை விட... எல்லாமே பொறுப்பான பதிவுகளா இருக்கும். ஈஸ்ட் ஆர் வெஸ்ட் ஆயில் அண்ணா இஸ் த பெஸ்ட் அப்படின்னு எங்க ஆச்சி சொல்லி இருக்காங்க
1ம் இல்லை பதிவுகளில் எல்லாத்தையும் அடக்கி விடுவார்.///

தன்யனானேன் :)

ஆயில்யன் said...

//26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் துறை படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும், அத்துறைகளில் கடந்த பத்து ஆண்டுகளாக வேலை செய்து வருவகின்றேன். எங்களது துறை சார்ந்த மெக்கானிக்கல் இயந்திரங்களுக்கான எலக்ட்ரிக்கல் கண்ட்ரோல்களில் ஏற்படும் நுணுக்கமான பிரச்சினைகளை துரிதமாக சரி செய்யும் ஆற்றலை இறைவன் வழங்கியுள்ளான். அதோடு புதிதாக கண்ட்ரோல் சர்க்யூட்களை டிசைன் செய்து, அதை நானே ஆட்டோகேட் மூலம் வரைந்து, களத்திலும் செயல்வடிவம் கொடுக்க முடிகின்றது என்பதும் வல்ல இறைவனின் கருணை தான்.//


வாழ்த்துக்கள்

தொடர்ந்து திறமையினை மேம்படுத்திக்கொள்ளுங்கள்!

ராமலக்ஷ்மி said...

தனித்திறமை பற்றிய தகவலும்
வாழ்வு பற்றிய வரிகளும் பாராட்டுக்குரியவை தமிழ் பிரியன்!

கண்மணி/kanmani said...

thanks tamilpriyan
e-kalappai no so english
rules regulations enna?same questions or own?
32 compulsory yaa

ஆயில்யன் said...

// கண்மணி said...

thanks tamilpriyan
e-kalappai no so english
rules regulations enna?same questions or own?
32 compulsory yaa

June 11, 2009 11:13 AM///

அட டீச்சரூ!

வாங்க டீச்சர் வாங்க!

S.A. நவாஸுதீன் said...

1. பெயர் விளக்கம் எதார்த்தம்.

4. ஹ்ம்ம். சூப்பர்

5. தெரியும்

8. பிடிக்காதுன்னு சொல்ற விஷயம் கூட நல்ல விசயம்தான்.

10. பாசம் தெரிகிறது.

13. Same Blood

14. நல்ல ரசனை

15. மூவருக்கும் வாழ்த்துக்கள்

22. சந்திக்க வரும்போது எனக்கு ஒரு பிரதி (கிடைத்தால்) கொண்டு வரவும்.

24. நிஜமாவே irritating தாங்க. குழந்தைகளின் மழலை யாருக்குத் தான் பிடிக்காது.

27. அருமை

28. நல்ல விசயம்தானே

30. நல்ல பதில்

pudugaithendral said...

பதில் நல்லா சொல்லியிருக்கீங்க.

தமிழன்-கறுப்பி... said...

பதில் நான் எதிர்பார்த்தது போலவே இருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

எனக்குள்ள என்ன இருக்குங்கறது தண்ணியடிச்சாதான் எனக்கே தெரியுது...

:))

தமிழன்-கறுப்பி... said...

\\
பத்து நாட்களுக்கு முன் தன்மாத்ரா படம் மறுபடியும் பார்த்தேன்.. அப்ப அழுதேன்.
\\
தலக்கு ரொம்ப மெல்லிய மனசுன்னா கேக்குறாங்களா?

தமிழன்-கறுப்பி... said...

//எல்லாரிடமும் ரொம்ப மென்மையாக நடந்து கொள்வது... (மாற்ற முடியலீங்க..)//

இது எனக்கு ரொம்ப புடிச்ச குணம்..
ஏன்னா நான்தானே ரொம்ப தொல்லை குடுக்கிறது... :)

தமிழன்-கறுப்பி... said...

\\நேரந்தவறாமை.\\


தல இந்த பழக்கம் சுட்டு போட்டாலும் எனக்கு வருதில்லை... :(

தமிழன்-கறுப்பி... said...

பதில் சொல்ல முயற்சிக்கிறேன்..

நான் நல்லா கேள்வி மட்டும்தான் கேட்பேன் பதில் சொல்லத்தெரியாது தல..
:))

நன்றி..!

கானா பிரபா said...

யுத்து

டெரரா தான் சொல்லியிருக்கீங்க


♫ நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இந்த கேள்வியை நிறைய பேர் குழப்பி இருக்காங்க.. நான் என்னையே போன்ற ஒருவனுடன் நட்பு வச்சுக்க முடியுமா என்பது தான் இதன் சாராம்சம் என்று நினைக்கின்றேன். Same frequency கிடைக்காம தானே அலைகின்றோம்.. உடனே நட்பு வச்சுக்குவேன்./// ஐ லைக் இட் தமிழ்ஸ் பிரியன்

cheena (சீனா) said...

க்ள்ளமில்லாத உண்மையான பதில்கள் - நல்லாவே இருக்கு தமிழ் பிரியன் - நல்வாழ்த்துகள்

Sanjai Gandhi said...

எல்லா பதிகளும் நல்லா இருக்குண்ணே.. ஒன்னைத் தவிர.. :)
/எல்லா சுதந்திரங்களும், இன்பங்களும், லாகிரி வஸ்துகளும் சுலபமாக கிடைக்கும் போதும், கடும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று எனக்கு நானே போட்டுக் கொள்ளும் கற்பனைக் கோட்டுக்குள் இருப்பது என்று நினைக்கிறேன்//

இதுக்கு ஒரு படம் போட்டு பதில் சொல்லனும்.. படத்தோட கமெண்ட் போட முடியுமா? :)))))))))

தேவன் மாயம் said...

பதிலெல்லாம் தெளிவா இருக்குங்க!!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

//31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
ஊரில் இருக்கும் போது கணிணியில் இருப்பது மனைவிக்கு பிடிக்காது. எனவே அதிகப்படியாக செய்யக் கூடியது அதுவாகத் தான் இருக்கனும்...
மனைவி சொல்வது : உங்களுக்கு முதல் மனைவி உங்க கணிணி தானே.. ;-))//

எனக்கும் என்நண்பர்கள் சொல்வார்கள், "உனக்கு வரப்போற மனைவி கழுத்தில கம்யூட்டர் எண்டு பெரிய போர்டு மாட்டினாத்தான் நீ எதாவது செய்வாய்" எண்டு. :D

சென்ஷி said...

பதில் நல்லா சொல்லியிருக்கீங்க.

நாணல் said...

நல்ல பெயர்...
வைரத்தால் வைரத்தால் அறுக்கும் வித்தை நல்லா இருக்கே....

//சில முக்கிய நேரங்களில் கண்களைப் பார்த்துப் பேசும் வழக்கம் இருக்கிறது.//

மிக முக்கியமானது தான்... :))

உங்கள் தனித்தன்மை மேலும் சிறப்புற வாழ்துக்கள்...

என்னை அழைத்தமைக்கு நன்றி அண்ணா..உங்கள் எதிர்ப்பார்ப்பை முடிந்த வரை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்... :)

நன்றி ஆயில்யன் அண்ணா... :)

சுரேகா.. said...

எல்லா பதில்களிலும் உங்க நேர்மை பளிச்சிடுகிறது நண்பா!

மங்களூர் சிவா said...

எல்லா பதில்களும் மிக அருமை தமிழ்பிரியன் அண்ணே.