இப்போது நான் குறிப்பிடுவது வேறு வகையானது. தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக விமான டிக்கெட், சம்பளத்துடன் விடுமுறை, அலவுன்ஸ் எல்லாம் வழங்கப்படுகின்றது இங்கு.. நான் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் மறைந்த லெபனான் நாட்டின் பிரதமர் ரஃபீக் ஹரீரி அவர்கள். சில ஆண்டுகளுக்கு முன் சிரிய ஆதரவு ஹிஸ்புல்லாஹ் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்குப் பின் அவரது மகனும் எங்கள் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான சாத் ஹரிரி (Saad Hariri) அரசியலைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் வரும் ஜூன் 7 ந்தேதி லெபனானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் சாத் ஹரிரியின் கட்சியும் போட்டியிடுகின்றது. அத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக சவுதி அரேபியா முழுவதும் எங்கள் நிறுவனத்தில் பணி புரியும் லெபனானிகள் லெபனான் செல்கின்றனர். ஒரு வார காலம் விடுமுறை, விமான சீட்டு, Out Station allowance அனைத்தும் வழங்கப்படுகின்றது. அத்தோடு இந்த ஒரு வார காலம் பணியில் இருந்து வேலை நிமித்தம் சென்றதாகவே கணக்கிலும் எடுத்துக் கொள்ளப்படுமாம்.
இத் தேர்தலில் March 14 Movement என்ற பெயரில் (Future Movement கூட்டணி) மேற்கத்திய ஆதரவு அணியில் சாத் ஹரிரியும், March 8 Movement என்ற பெயரில் சிரிய, ஈரானிய ஆதரவு அணியும் போட்டியிடுகின்றன. சிரியாவின் இராணுவ ஆதிக்கத்தில் முற்றிலும் சிதைந்து போய் இருக்கும் அழகான தேசமான லெபனானை மீண்டும் தன் ஆதிக்க்கத்தில் வைக்க சிரியா March 8 அணியை வெற்றி பெற வைக்க சிரியா முயற்சிக்கின்றது.
ஹிஸ்புல்லாஹ் ஆதரவு அர்ஸ்லான் தலால்
March 14 Movement அணி வெற்றி பெற்றால் தான் ஜனநாயகம் தழைக்கும் என்றும், மேலும் லெபனனை மறு புணர் நிர்மானம் செய்ய உலக நாடுகள் உதவியும் செய்யும் என்றும் அமெரிக்கா சூசகமாக அறிவித்துள்ளது.
ரஃபீக் ஹரிரியும், சாத் ஹரிரியும்
Saad Hariri தலைமையிலான March 14 Movement வெற்றி பெறுவது எங்க நிறுவனத்திற்கு நல்ல சாதகாமான நிலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
14 comments:
மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்ய்!
//நான் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் மறைந்த லெபனான் நாட்டின் பிரதமர் ரஃபீக் ஹரீரி அவர்கள்.//
தம்பி நீ பெரிய்ய்ய்ய்ய்ய் ஆளுதான்போல
சர்வதேச லெவல்ல எல்லாம் தலைவர்களோட பழக்கம் இருக்கும்போல எதுக்கும் உம்மை கிட்ட கொஞ்சம் பாசமாத்தான் நடந்துக்கணும்!
ஓட்டுப் போட விமான சீட்டும், பணமும், விடுமுறையும்,
தமிழ்மணத்துக்கு ஓட்டுப்போட்டாவா????
உலகத்துல என்னலாம் நடக்குது...ம்
பெரிய ஆளுதான் தல நீங்க..
ஆமா கள்ள வோட்டு போடலாமா லெபனான்ல.. ;)
உங்க கம்பனிக்கு நல்ல மாற்றம் வருமோ இல்லையோ அந்த கட்சி நல்ல கட்சியா..அதை சொல்லுங்க..?
அமெரிக்கா சொல்லிடுச்சா அப்ப சரிதான்....
;))
oh namma naadu mattum thaan ippadi nu ninachen..namakku potti poda sila naadum irukka...
தமிழ்மணத்துல ஓட்டுப்போட ஏதாவது குடுப்பீங்களா..
//ஓட்டுப் போட விமான சீட்டும்//
இது ஒன்றுதான் இன்னும் நம்ம ஊரில் பாக்கி! நீங்க வேற...!
போய் ஒரு கள்ள் ஓட்டு போட்டு குடுக்குறதெல்லாம் வாங்குற வழிய பாரு ராசா!!!
:)))))))
கம்பெனி செலவுல சூப்பரா ஒரு மினி வெகேசன்.
விலை ரொம்ப அதிகம் கொடுக்கிறாங்க..
நம்மாக்களிட்ட கேட்டா குறைஞ்ச விலையில ஓட்டு வாங்கிக் கொடுப்பாங்களே..
எங்கே உங்களை நம்ம ப்ளாக் பக்கம் அதிகமா காணோம். பிஸியா? அப்புறம் ஒரு மகிழ்ச்சியான செய்தி, அரபு சீமையிலே தொடர், இனி நர்கிஸில் வெளிவரப் போகுது. அதனால்,ப்ளாகில் நிறுத்தி வைத்திருக்கிறேன். நர்கீஸில் வந்த பிறகு அதை போடலாம் என்று இருக்கிறேன்.
Post a Comment