Friday, January 15, 2010

ஆயிரத்தின் ஒருவன் படத்தில் நானும் ஒருவனாக இருந்திருக்க வேண்டும்,.

பண்டைய தமிழகத்தில் சேர சோழ பாண்டியர்கள் இருந்ததாக வரலாறுகள் சொல்கின்றன. சேரர்களைப் பற்றி அவ்வளவாக நமக்கு தெரியலை. ஆனால் சோழர்களைப் பற்றியும், பாண்டியர்களைப் பற்றியும் நிறைய படிச்சி இருக்கோம்.பள்ளியில் பாடமாகவும், அதற்குப் பிறகு பழைய சினிமா படங்களாகவும், பின்னர் வரலாற்று நாவலாகவும் இவர்களைப் பற்றி தெரிந்து கொண்டோம்.

இப்படி பல வழிகளில் மூவேந்தர்களைப் பற்றிய வரலாறுகளைப் படித்ததில் ஏனோ சில காரணங்களால் பாண்டியர்கள் வில்லன்களாகவே காட்டப்பட்டு இருப்பதாகவே எனக்குப் படுகின்றது. ஒருக்கால் எழுதியவர்கள் சோழ நாட்டினராகவும், சோழ மன்னர்களை மையமாக வைத்தும் எழுதுவதால் இருக்கலாமோ தெரியவில்லை.

எடுத்துக்காட்டுக்காகச் சொன்னால் பொன்னியின் செல்வனில் சோழ நாட்டின் வனப்பைச் சொல்லும் போதெல்லாம் ஒரு விதமாக பொறாமையே வரும். மலையே இல்லாத அந்த நாட்டின் காவிரி பாய்வதால் தான் இவ்வளவு வளமும் என்று இருக்கும். நம் பாண்டிய நாட்டைக் குறித்து இப்படிப் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று எரிச்சலாகக் கூட இருக்கும்.

அதே போல் சோழ மன்னர்களை வீராதிவீரர்களாகவும், பாண்டிய மன்னர்களை ஏதோ ஓடி ஒளியும் சோப்ளாங்கிகளாகவும் காட்டி இருப்பார்கள். இதுவும் எரிச்சலைத் தரும். எங்கள் மன்னன் வீரபாண்டியனை 18 வயசுப் பொடிப்பயல் ஆதித்த கரிகாலன் ஓட ஓட விரட்டிக் கொல்வதாக வரும் பொன்னியின் செல்வன் காட்சிகளில் எல்லாம் என் கோபம் உச்சத்தில் இருக்கும்.

சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் நீதி தவறி கோவலனை தண்டித்து, கண்ணகி மதுரையை எரித்து எல்லாம் எங்களுக்கு எதிராகவே அமையும். எங்கள் கோட்டைக் கொடிகள் கூட கண்ணகி மதுரைக்குள் வரும் போது மதுரைக்குள் வராதே என்பது போல் மறித்து கை காட்டுமாம். என்ன ஒரு துரோக சிந்தனை இளங்கோவுக்கு




மந்தாகினி, நந்தினி வரும் காட்சிகளில் எல்லாம் அவர்கள் மீதான பாசம் பீறிட்டு எழும். அதே போல் வில்லன்களாக காட்டப்பட்டு இருக்கும் ரவிதாசன் மீது எனக்கு என்னவோ எப்போதும் ஒருவித விசுவாசி போன்ற பரிதாபமே இருக்கும். ஆதித்த கரிகாலன் கொல்லப்படும் போது ஏனோ ஒரு குரூர திருப்தி(?) கிடைத்தது என்னவோ உண்மை தான்.

உண்மை வரலாற்றில் பாண்டியர்கள் தோற்று போய் சில காலம் கழிந்து சுந்தரபாண்டியன் காலத்தில் மீண்டும் சோழர்களை வென்றதாக வரலாறு கூறுகின்றது. நம்ம மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் அதைத் தான் காட்டுகிறார்களாம். எம்.ஜி.ஆரின் கடைசிப் படம் அதுதான். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படப்பட்டியலில் வைத்துள்ளேன். இணையத்தில் கிடைக்கவில்லை.

அதே போல் அகிலனின் கயல்விழி நாவலும் இக்கதையைப் பற்றியே பேசுகின்றது என்று சொல்வதால் அதையும் வாங்க ஒரு சோழ நாட்டவரிடமே (ஆயில்யன்..ஹிஹிஹிஹி)சொல்லி அனுப்பியுள்ளேன்.

சமீபத்தில் ரிலீஸான செல்வராகவனின் ’ஆயிரத்தின் ஒருவன்’ படமும் சோழ, பாண்டியர்களின் பிரச்சினையின் நீட்சியாக இருப்பதாக விமர்சனங்கள் மூலம் தெரிகின்றது. வீர பாண்டிய மரபில் பிறந்த ரீமா சென் எஞ்சி இருக்கும் சோழர்களைத் தேடிச் சென்று அழிப்பது தான் கதையாம். அப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டது. விரைவில் கயல்விழி நாவலைப் படிக்க வேண்டும். ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்க்க வேண்டும்.

டிஸ்கி : சோழர்களின் மீது பொறாமை என்றால் சோழ நாட்டு மக்களின் மீதான வெறுப்பல்ல.. ஹிஹிஹி... அமெரிக்கா மீது வெறுப்பு என்பது அமெரிக்க குடிமக்களின் மீதான வெறுப்பல்ல என்பதைப் போன்றது. இதைப் புரிந்து கொள்ளலாம்.

...

53 comments:

நிஜமா நல்லவன் said...

/மந்தாகினி, நந்தினி வரும் காட்சிகளில் எல்லாம் அவர்கள் மீதான பாசம் பீறிட்டு எழும்./

repeattuuuuuuuuuuu

Thamiz Priyan said...

\\\நிஜமா நல்லவன் said...

/மந்தாகினி, நந்தினி வரும் காட்சிகளில் எல்லாம் அவர்கள் மீதான பாசம் பீறிட்டு எழும்./

repeattuuuuuuuuuuu\\\

பாஸ்.. அது வேற மாதிரி நினைக்காதீங்க.. எங்கள் குல விளக்கு என்ற ஒரு பாசம் தான்... ;-))

நிஜமா நல்லவன் said...

பெரிய பழுவேட்டரையர் மேல எனக்கு இன்னும் செம கடுப்பு இருக்கு தல:)

எம்.எம்.அப்துல்லா said...

//அதே போல் அகிலனின் கயல்விழி நாவலும் இக்கதையைப் பற்றியே பேசுகின்றது /

அகிலன் இரண்டு நாடும் சேராத தொண்டைமான் நாட்டுக்காரர்(புதுக்கோட்டைக்காரர்). அதனால் நடுநிலையா எழுதி இருக்கலாம்.

:)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அதே போல் வில்லன்களாக காட்டப்பட்டு இருக்கும் ரவிதாசன் மீது எனக்கு என்னவோ எப்போதும் ஒருவித விசுவாசி போன்ற பரிதாபமே இருக்கும்.//

ரவிதாசன் ஒரு ஹீரோ தலைவரே..,

வந்தியத்தேவனைவிட எனக்கு ரவிதாசனைப் பிடிக்கும்.

நீங்கள் இதைப் படித்து விட்டீர்களா

நட்புடன் ஜமால் said...

முன்பே சொல்லியிருந்தா செல்வ(?)ராகவன்கிட்ட சொல்லியிருக்கலாம்

அதுக்கும் முன்பே சொல்லியிருந்தா நி.ந எம்.ஜீ.ஆ-ரோடு பொட்டு இருப்பாரு

விட்டுட்டு தேடுறீங்களே பாஸூ

நட்புடன் ஜமால் said...

நாட்டுக்காரர்(புதுக்கோட்டைக்காரர்). அதனால் நடுநிலையா எழுதி இருக்கலாம்.]]


ஹா ஹா ஹா


ஆசை யாரை விட்டிச்சி ...

நட்புடன் ஜமால் said...

நிஜமா நல்லவன் said...

பெரிய பழுவேட்டரையர் மேல எனக்கு இன்னும் செம கடுப்பு இருக்கு தல:)]]

கடன் பாக்கி எதுனா இருக்காண்னே!

நட்புடன் ஜமால் said...

அது வேற மாதிரி நினைக்காதீங்க.. ]]

புத பத செவி

நிஜமா நல்லவன் said...

/பாஸ்.. அது வேற மாதிரி நினைக்காதீங்க.. எங்கள் குல விளக்கு என்ற ஒரு பாசம் தான்... ;-))/


நம்பிட்டோம் தல:)

நட்புடன் ஜமால் said...

நம்பிட்டோம் தல:)]]

நான் நம்பலையே நீங்க எப்படிங்க நம்பிட்டோம்ன்னு போடலாம் ...

நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

நிஜமா நல்லவன் said...

பெரிய பழுவேட்டரையர் மேல எனக்கு இன்னும் செம கடுப்பு இருக்கு தல:)]]

கடன் பாக்கி எதுனா இருக்காண்னே!/


அந்த கடன்காரர் தான் அண்ணே நந்தினி தேவியை கல்யாணம் கட்டி கிட்டாரு:)

நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

நம்பிட்டோம் தல:)]]

நான் நம்பலையே நீங்க எப்படிங்க நம்பிட்டோம்ன்னு போடலாம் .../


பதிவு போட்டவரே இன்னும் நம்பலை...இதில நாம வேற எதுக்கு சண்டை போடணும்:))

நட்புடன் ஜமால் said...

அந்த கடன்காரர் தான் அண்ணே நந்தினி தேவியை கல்யாணம் கட்டி கிட்டாரு:)]]

அப்பவே தயாரா இருந்தீங்களா ...

நட்புடன் ஜமால் said...

பதிவு போட்டவரே இன்னும் நம்பலை...:))]]

இது புச்சா இருக்கே ...

நிஜமா நல்லவன் said...

/சேரர்களைப் பற்றி அவ்வளவாக நமக்கு தெரியலை./

கத்தார் ல இருந்திட்டு எப்படி இப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்....எங்க பாஸ் ஆயில்யனுக்கு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவாரு:))

நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

அந்த கடன்காரர் தான் அண்ணே நந்தினி தேவியை கல்யாணம் கட்டி கிட்டாரு:)]]

அப்பவே தயாரா இருந்தீங்களா .../


முன் ஜென்மத்தில் நான் தான் அண்ணே ஆதித்த கரிகாலன்:)

நட்புடன் ஜமால் said...

கத்தார் ல இருந்திட்டு எப்படி இப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்....எங்க பாஸ் ஆயில்யனுக்கு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவாரு:))]]


அவரு இல்லைன்ற தகிரியம் தான் ...

வரட்டும் வரட்டும்

நிஜமா நல்லவன் said...

/ஏனோ சில காரணங்களால் பாண்டியர்கள் வில்லன்களாகவே காட்டப்பட்டு இருப்பதாகவே எனக்குப் படுகின்றது./

அதெல்லாம் நுண் அரசியல் தல ....உங்களுக்கு தெரியாதா????

நட்புடன் ஜமால் said...

அதெல்லாம் நுண் அரசியல் தல ....உங்களுக்கு தெரியாதா????]]


அது என்னா அரசியில்ண்ணே

எத்தனை இருக்குப்பா

பாறேன் இந்த புள்ளைக்கு நிறைய தெரிஞ்சிருக்கு ...

கானா பிரபா said...

மே ஐ கம் இன்?

நிஜமா நல்லவன் said...

/எங்கள் மன்னன் வீரபாண்டியனை 18 வயசுப் பொடிப்பயல் ஆதித்த கரிகாலன் ஓட ஓட விரட்டிக் கொல்வதாக வரும் பொன்னியின் செல்வன் காட்சிகளில் எல்லாம் என் கோபம் உச்சத்தில் இருக்கும்./

தல..சத்தியமா நான் அப்படி எல்லாம் செய்யலை...நம்புங்க:)

நட்புடன் ஜமால் said...

கானா பிரபா said...

மே ஐ கம் இன்?]]

சி.பா இல்லாததால்

பெ.பா வரவேற்கப்படுகிறார்

நிஜமா நல்லவன் said...

/கானா பிரபா said...

மே ஐ கம் இன்?/


நோ...நோ...இது சின்ன புள்ளைங்க இருக்கிற இடம்...இங்க எல்லாம் வரப்பிடாது:)

கானா பிரபா said...

//பாஸ்.. அது வேற மாதிரி நினைக்காதீங்க.. எங்கள் குல விளக்கு என்ற ஒரு பாசம் தான்... //

குத்துவிளக்காக குலமகளாக நீ வந்த நேரம்

சாரி பாஸ் திடீர்னு இந்தப் பாட்டு வந்து தொலைக்குது

நட்புடன் ஜமால் said...

நோ...நோ...இது சின்ன புள்ளைங்க இருக்கிற இடம்...இங்க எல்லாம் வரப்பிடாது:)]]

ஓஹ்! நான் தான் தெரியாம சொல்லிபுட்டனா ...

நிஜமா நல்லவன் said...

பழசெல்லாம் நினைவுக்கு வர ஆரம்பிச்சிடுச்சி தல....கந்தன்மாறன் அரண்மனை கண்ணு முன்னால விரியுது.....என்னவோ போங்க...உங்க பதிவை படிச்சி எனக்கு முன் ஜென்மம் எல்லாம் நினைவுக்கு வந்திடுச்சி:)

கானா பிரபா said...

இப்ப நான் எங்கே இருக்கேன், நந்தினி எல்லாம் முன்னால போறாங்களே

நிஜமா நல்லவன் said...

/கானா பிரபா said...

இப்ப நான் எங்கே இருக்கேன், நந்தினி எல்லாம் முன்னால போறாங்களே/


எனக்கு நல்லா நினைவு தெரியுது.....கானா தான் பெரிய பழுவேட்டரையர்....தல உங்களை நான் சும்மா விடப்போறதில்லை:)

நட்புடன் ஜமால் said...

எச்சூச்மீ

இங்கே ஆவிகள் அதிகம் தெரிவதால்

தெரிவதாக தெரிவதால்

தெரியலைப்பா ...

கானா பிரபா said...

நிஜமா நல்லவன் said...

/கானா பிரபா said...

இப்ப நான் எங்கே இருக்கேன், நந்தினி எல்லாம் முன்னால போறாங்களே/


எனக்கு நல்லா நினைவு தெரியுது.....கானா தான் பெரிய பழுவேட்டரையர்....தல உங்களை நான் சும்மா விடப்போறதில்லை:)//

அப்ப சின்ன பழுவேட்டரைர் எங்கே? சேரநாட்டுக்கு ஓடிடுச்சா?

அபி அப்பா said...

ரொம்ப கோவமா இருக்கியலோ:-))

தமிழன்-கறுப்பி... said...

hhahahah :)

தமிழன்-கறுப்பி... said...

அப்ப ரிமாசென் உங்க குலவிளக்கா தல?

:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உணர்வு பூர்வமா நீங்க சரித்திரக்கதைகளைப் படித்த விதம் அருமை..

சோழநாட்டில் வளர்ந்துட்டு எனக்கு அந்த மந்தாகினி , நந்தினி மேல அன்பு பீரிடுதே ஏன்னு நினைச்சுப்பார்த்தேன்.. மதுரையில் பிறந்த காரணம் ந்னு இப்பத்தான் உங்க பதிவு எனக்கு உணர்த்துது.. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாண்டிய மரபில் பிறந்த ரீமா சென் எஞ்சி இருக்கும் சோழர்களைத் தேடிச் சென்று அழிப்பது தான் கதையாம். //

பற்று பாண்டியர்களின் மீதா இல்லை ரீமாசென் மீதா ;)))))))))

பா, சே, சோ இதில் சென்னை எதில் சேரும் பாஸ்?

gulf-tamilan said...

அப்ப ரிமாசென் உங்க குலவிளக்கா தல?

:)
:)))))))))))))))))))))))))

gulf-tamilan said...

அப்ப சென்னையிலிருப்பவர்கள் எந்த வம்சம் பாஸ்??
பல்லவர்களா?? :)))))))

Anonymous said...

நானெல்லாம் சேரதேசம் பாஸ். கூட்டு சேரலாமா?

ஜோசப் பால்ராஜ் said...

சோழ நாடு உம்மேல் போர் தொடுக்கிறது.
கொட்டட்டும் போர் முரசு.

இப்படிக்கு
சோழ நாட்டு பிரதிநிதி.

*இயற்கை ராஜி* said...

//சேரர்களைப் பற்றி அவ்வளவாக நமக்கு தெரியலை./

கத்தார் ல இருந்திட்டு எப்படி இப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்....எங்க பாஸ் ஆயில்யனுக்கு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவாரு:))//

repeatuuu..
:-)))

Kumky said...

தலைப்பை நினைத்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை...

இதைவிட வன்முறை வெறியாட்டத்துடன் ஒரு தமிழ் படம் வந்ததும், வரவும் வாய்ப்பே இல்லை...

வன்முறையின் உச்சகட்டம்...

படத்தினை பார்த்துவிட்டு கொண்டாடும் மனநிலை பிறழ்ந்தவர்களின் பட்டியலில் தயவுசெய்து நீங்களும் சேர்ந்துவிடவேண்டாம்...

குடுகுடுப்பை said...

தமிழ்நாட்டில் இரண்டு பேரரசு, ஒன்று சோழப்பேரரசு மற்றொன்று பல்லவப்பேரரசு.

பாண்டியநாட்டை நாம் என்றும் பேரரசாக ஏற்றுக்கொண்டதில்லை, ஏனென்றால் அது பேரரசு அல்ல.

நன்றி
எல்.கணேசன்
உறுப்பினர் தி.மு.க.

குடுகுடுப்பை said...

சாளுக்கிய சோழர்கள் வந்தபின் பாண்டியர்கள் சோழர்களை வென்றார்கள்.
அதற்கு முன்னர் சோழர்கள் வலிமை வாய்ந்தவர்களே. கரிகாலன் காலம் முதல் சாளுக்கிய சோழர்களின் முன்காலம் வரை.

சிலப்பதிகாரம் சேர நாட்டுக்காரரால் எழுதப்பட்டது, ஒருவேளை சண்டை மூட்டிவிட இருக்குமோ:).

Thamiz Priyan said...

\\\கும்க்கி said...

தலைப்பை நினைத்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை...

இதைவிட வன்முறை வெறியாட்டத்துடன் ஒரு தமிழ் படம் வந்ததும், வரவும் வாய்ப்பே இல்லை...

வன்முறையின் உச்சகட்டம்...

படத்தினை பார்த்துவிட்டு கொண்டாடும் மனநிலை பிறழ்ந்தவர்களின் பட்டியலில் தயவுசெய்து நீங்களும் சேர்ந்துவிடவேண்டாம்...\\\

பாஸ்.. கூல்ல்ல்ல்ல்.... எங்க ரூமில் என்னை திட்டுவார்கள். மூட்டைப் பூச்சியைப் பார்த்தால் பிடித்து நசுக்காமல் பொறுப்பா வெளியே கொண்டு போய் போட்டு விட்டு வருகின்றானே என்று...

படம் இன்னும் பார்க்கவில்லை. நான் சொன்னது ஒருவகையான தாய் நாட்டு உணர்வு. எப்படி கார்க்கில் போரில் வெற்றி என்றவுடன் இந்திய மக்கள் கூக்குரலிட்டார்களோ அது போல... அப்போது எல்லையில் கொல்லப்பட்ட பாக் தீவிரவாதிகளின் உயிர்கள் ஒருவகையில் அநீதியின் அழிவாகப் பார்க்கப்பட்டதல்லவா? அது போல தான். நானும் தாய் மண்ணின் மீது பற்றுள்ள ஒரு சராசரி மனிதன் தான்.

Thamiz Priyan said...

\\\Blogger குடுகுடுப்பை said...

தமிழ்நாட்டில் இரண்டு பேரரசு, ஒன்று சோழப்பேரரசு மற்றொன்று பல்லவப்பேரரசு.

பாண்டியநாட்டை நாம் என்றும் பேரரசாக ஏற்றுக்கொண்டதில்லை, ஏனென்றால் அது பேரரசு அல்ல.

நன்றி
எல்.கணேசன்
உறுப்பினர் தி.மு.க.\\\

இது எப்படி என்று புரியவில்லை. சோழர்களைப் போல, பல்லவர்களைப் போல பட்டயங்கள், கல்வெட்டுக்கள் நிறைய எழுதி வைக்காததால் அவர்களைப் பற்றிய செய்திகள் குறைவாகவே கிடைப்பதாகவே கருதுகின்றேன். இரண்டாவது சோழ, பல்லவர்களின் ஆட்சிப்பகுதிகள் மிகவும் செழிப்பானவை. அதே போல் கடல் தொழிலுக்கும் ஏற்றவையாக இருந்தன. அதனால் அவை செல்வத்தில் இருந்தன. ஆனால் பாண்டிய நாட்டுக்கு ராமநாதபுரம் பகுதிக்கு சென்றால் தான் கடற்கரை.

ஆனாலும் பாண்டியர்களின் தொன்மை சிறப்பு வாய்ந்தது. சோழர்களுடன் போர் புரிந்து அவர்களது தலைநகரை கைப்பற்றும் திறன் பெற்றிருந்ததை வரலாறு கூறுகின்றது.

என்ன இருந்தாலும் எங்கள் பாண்டிய நாடு பேரரசு தான். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தான்.. ;-)))

குடுகுடுப்பை said...

என்ன இருந்தாலும் எங்கள் பாண்டிய நாடு பேரரசு தான். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தான்.. ;-)))

//

எதுக்கும் உங்க கட்சி உறுப்பினருக்கு ஒரு முறை சொல்லிருங்க. அது அவர் தஞ்சையில் பேசியது பொன்.முத்துவையும்,வை.கோவையும் வைத்துக்கொண்டு.கொஞ்சம் அதிகம் பேசுபவர்தான் ஆனால் அவரின் அறிவை குறைத்து மதிப்பிட முடியாது.

கம்பீரமாக சொல்லிக்கொள்ளுங்கள் நான் பாண்டியன் என்று.

Thamiz Priyan said...

@ குடுகுடுப்பை,
என்னோட புரோபைலில் இருக்குமே பாண்டிய மண்ணின் மைந்தன் என்று... ;-)

மாயோன் ! said...

படம் பார்த்தவர்களுக்காக மட்டும் எழுதி இருக்கிறேன்.. பார்த்தவர்கள் மட்டும் மேலே படிக்கவும்..

ஒரு மொக்கை கதையை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்க படக்குழுவினர் அரைகுறைகள் இல்லை..

சொல்லவந்த உருக்கமான உறையவைக்கும் கதையை மேலே மெழுகு தடவி.. விறுவிறுப்பு ஏற்ற சில அம்புலிமாமா டைப் வியுக அலங்காரங்கள் சேர்த்து சொல்லி இருக்கிறார்கள்..

கதை இது தான்..

கடுமையான போரில் தமது மண்ணை இழந்த கூட்டம் ஒன்று என்றாவது தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையை உணவாக்கி கண்காணாத இடத்தில் பதுங்கி கிடக்கிறது.. தாயகம் திரும்ப வேண்டிய வழியை உரைக்க - தூது வரும் - என்றுகாத்துக்கொண்டு தம்மை சுற்றி பாதுகாப்பு அரண் ஏற்படுத்திகொண்டு வாழ்கிறது..

யாரும் சுலபமாக அவர்களை நெருங்கி விட முடியாது.. நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தூது ஒன்று வந்து சேர்கிறது.. அந்த தூது சொல்லவதை நம்பி மறைவிடம் விட்டு வெளியேறியபின் தான் தெரிகிறது -தலைமை துரோகிகளிடம் ஏமாந்துவிட்டது என்று..

அசுர பலமும், சர்வ வல்லமையும் கொண்ட எதிரிகளிடம் நடக்கும் பொருந்தாத போரில் மோதி.. கடைசி வரை போராடுகிறார்கள்.. இழப்பு..இழப்பு.. தாங்கமுடியாத இழப்பு.. இறுதியில் தோற்று சிறை எடுக்கப்பட்டு அவமான படுத்தப்பட்டு.. தலைவன் இறக்கின்றான்.. தலைமை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு அடுத்தகட்ட போராட்டததுக்கான நம்பிக்கை விதைக்கப்படுவதுடன் முடிகிறது கதை..

எல்லோரும் சொல்வது போல அவ்வளவு விறுவிறு முன்பாதி தந்த இயக்குனருக்கு.. பின்பாதி இப்படி தர என்ன அவசியம்?

முதல் பாதி நம்மை ஆயத்தப்படுத்த வரும் விறுவிறு/துருதுரு அட்டைப் படம் / முன்னுரை..
இரண்டாம் பாதி தான் சொல்லவந்த கதை..

பட ஆரம்பைதிலேய சொன்னபடி.. உண்மையான சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இங்கே அவர்கள் வெறும் உவமைகள்..

நிகழ்காலவரலாறு - அதுவே சற்று குழப்பமானது தான் - அதை சற்று படத்தோடு பொருத்தி பாருங்கள் - சொல்லவந்த செய்தி என்னவென்று புரியும்..

Unknown said...

பொன்னியின் செல்வன் நானும் படிக்கிறேனே.. ( நாலாவது முறையா) மற்றபடி அது வந்தியதேவனுக்காக அல்ல அல்ல அல்ல.. ;)))))))))))

Unknown said...

//குடுகுடுப்பை on January 15, 2010 9:29 PM said...
தமிழ்நாட்டில் இரண்டு பேரரசு, ஒன்று சோழப்பேரரசு மற்றொன்று பல்லவப்பேரரசு.

பாண்டியநாட்டை நாம் என்றும் பேரரசாக ஏற்றுக்கொண்டதில்லை, ஏனென்றால் அது பேரரசு அல்ல.

நன்றி
எல்.கணேசன்
உறுப்பினர் தி.மு.க//

இப்படி ஒரு அமிலக் கருத்து சொன்ன எல்.கணேசனையும், அதை மறு வெளியீடு செய்த குடுகுடுப்பையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Unknown said...

// சின்ன அம்மிணி said...
நானெல்லாம் சேரதேசம் பாஸ். கூட்டு சேரலாமா?
//

சேர நாட்டையெல்லாம் நாங்க நாடாவே மதிக்கிறதில்ல.. அதுனால சாரி :)))

Unknown said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
பாண்டிய மரபில் பிறந்த ரீமா சென் எஞ்சி இருக்கும் சோழர்களைத் தேடிச் சென்று அழிப்பது தான் கதையாம். //

பற்று பாண்டியர்களின் மீதா இல்லை ரீமாசென் மீதா ;)))))))))

பா, சே, சோ இதில் சென்னை எதில் சேரும் பாஸ்?
//

சென்னை அப்பிடிங்கிற ஊரு ஹிஸ்டரில இல்லவே இல்ல அமித்து அம்மா. அந்த ஊருக்கு பழைய பெயர் கூவப் பட்டி. அது பல்லவர்களின் பேரரசுக்கீழ வந்த ஒரு சின்ன கிராமம். :))))