முன் டிஸ்கி : அவ்வப்போதைய டிரண்ட்படி பதிவு போடுவது தமிழ் பதிவர்களின் ‘தலை’யாயக் கடமைகளில் ஒன்றாகி விட்டது.. சமீபத்திய நித்தியரஞ்சி விஷயத்தில் எந்த பதிவும் எழுதவில்லை.. இப்போதும் சங்கத்து விஷயத்தில் நம் ‘கருத்தை’ச் சொல்லவில்லையென்றால் தமிழ் கூறும் இணைய உலகம் நம்மை மன்னிக்காது என்பதால் இந்த பதிவை வெளியிடுவது கட்டாயமாகின்றது.
எங்களைப் பற்றி ஒரு அவதூறு தமிழ் இணையத்தில் பரப்பப்பட்டு உள்ளது.. அது குறித்தே இப்பதிவு.. தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமம்(தோ.த.இ.ப.எ.வ.ச.கு) இப்பதிவு பல ஆண்டுகளாக தோஹாவில் இயங்கி வருவது உலகம் பூராவும் இருக்கும் ப்ளாக்கர்களுக்கு எல்லாம் தெரியும்.. ஆனா சமீபத்திய குளறுபடிகளில் நமது சங்கத்தின் பெயரும் அடிபடுவது வருத்தத்தை அளித்துள்ளது.
தோ.த.இ.ப.எ.வ.ச.கு. பல அற்புதமான வேலைகளை தோஹாவில் செய்து வருகின்றது.. அரேபியத் தீபகற்பத்தில் தோஹா இருப்பதால் வெயிலின் கொடுமைக்கு ஆளாக நேர்கின்றதை என்பதைக் கருத்தில் கொண்டு கத்தார் நாட்டை அண்டார்ட்டிக்காவிற்கு அருகில் பெயர்த்து வைக்க உலக அளவில் விடப்பட்ட டெண்டர்களை பரிசீலிக்கும் வேலையை
தோ.த.இ.ப.எ.வ.ச.கு. ஏற்றுள்ளது எங்களது சேவைகளின் மைல் கல்களில் ஒன்று.
தோஹாவில் இருக்கும் கத்தாரிகளைக் கூட தமிழில் ப்ளாக் எழுதச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளையும் விரைவாக செய்து வருகின்றோம்.
தோஹாவில் இருக்கும் தமிழர்களை எல்லாம் இணைத்து தோஹாவிற்குள் தனி நாடு கோரிக்கையையும் கேட்க முடிவு செய்துள்ளோம்.
பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு போண்டாவும், டீயும் வாங்கித் தரும் வழக்கத்தை மாற்றி மினி இட்லியும், பொடி தோசையும், கெட்டிச் சட்னியும் வாங்கித் தரும் ஒரே சங்கக் குழுமம் உலக அளவில் தோ.த.இ.ப.எ.வ.ச.கு. மட்டுமே.
எங்கள் சங்கத்தின் முக்கிய அங்கத்தினர்களான மேதகு திரு மதிப்புமிக்க ஆயில்யன், மற்றும் ஹிஸ் ஹைனஸ் தமிழ் பிரியன் இடையே பகைத் தீயை எரிய வைக்கும் முயற்சியில் துபாயில் இருந்து இயங்கும் சில தீவிரவாதக் குழுக்கள் இறங்கி உள்ளன... தலைவர் பதவிக்கு ஏதோ சண்டை நடப்பது போன்ற மாயத் தோற்றத்தை அவை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாதவைகள் இந்தப் பனங்காட்டு நரிகள்... தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தின் நேற்றைய, இன்றைய, நாளையத் தலைவர் ஆயில்யன் தான் என்பதை இங்கு அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
தோஹாவில் இருந்து ஆயில்யன் சென்று விட்டால் அவர் இருந்த அந்த சீட்டை துடைத்து வைத்து, அதில் அவர் பெயரை எழுதி தலைவர் என்று எழுதி வைப்போம்... எங்கள் தலைவரைத் தவிர புதிதாக எவரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மறுக்கும் அஞ்சா நெஞ்சன் இருக்கும் ஊர்க்காரர்கள் நாங்கள்...
குறிப்பாக பதிவுலகிற்கான வளைகுடா அத்தாரிட்டியாக நாங்கள் நினைக்கும் துபாயில் இருந்து இந்த வதந்தி கிளம்பி இருப்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல கிளைகளாக ஒற்றுமையின்றி பிரிந்து கிடத்தும் துபாய் சங்கத்தவர்கள், ஒற்றுமையுடன் செயல்படும் தோ.த.இ.ப.எ.வ.ச.கு. த்தின் வளர்ச்சியின் மீது ஏற்பட்ட பொறைமையின் விளைவே இந்த வதந்தி என்பதைச் சிந்தனையாளவர்கள் அறிவர்..
ஆகவே மக்களே தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தின் மீது பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதையும் உங்கள் அனைவருக்கும் அன்போடு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
32 comments:
டெஸ்ட் கமெண்ட்!
ஓ மினி இட்லி எல்லாம் தருவீங்களா?
நல்ல சங்கமா இருக்கீங்க..அண்ட் அந்த சேரில் பேர் எழுதி வச்சி என்பதும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..
என்ன ஒரு ஒற்றுமை
பட் தலைவர் என்கிற விசயமெல்லாம் வடிவேலு வந்தபிறகு கைப்புள்ளை என்கிற மாதிரியே சவுண்ட் ஆகுது ..:)
மொக்கையினா ...மொக்கை....உலக மொக்கை....[எப்பிடியாவது...கட்சிய ...நடத்துங்கப்பு.]
விரிவான பின்னூட்டம் சில நிமிடங்கள் கழித்து :)
யப்பா.. உங்க சங்கம் பேரை படிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்குது.. போயி ஒரு ஜூஸ் குடிச்சிட்டு வர்றேன்.
அவ்வ்வ்வ்வ்வ்
அடி வாங்குறத்துக்குன்னே என்னைய செட் பண்ணி வைச்சிருக்கீங்களா ராசா!
சுகமா & சந்தோஷமா தின்னு தின்னு வளர்ந்த உடம்புய்யா ஊருல போறவங்க வர்றவங்ககிட்ட எல்லாம் அடி வாங்க என்னால முடியாதேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
//தோஹாவில் இருக்கும் கத்தாரிகளைக் //
அதென்னா கத்தாரி? கட்டாரி அருவா போல இதுவும் ஒரு வகையா?
ஆமாம், தோஹாவில இருக்கவங்கள தோஹாரின்னுதானே சொல்லணும், ஏன் கட்டாரின்னு, சே.., கத்தாரின்னு சொல்றீங்க?
/தோஹாவிற்குள் தனி நாடு கோரிக்கையையும்//
நீங்க தமிழ் இனமேதான்!! நோ டௌட்!!
//நேற்றைய, இன்றைய, நாளையத் தலைவர் ஆயில்யன் தான் //
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்.... இதையே வலியுறுத்திச் சொல்றதைப் பாத்தா, தலைவரை அடிக்க நீங்களே ஆள் ஏற்பாடு பண்ணிக்கிறேன்னு சொல்ற மாதிரி தொனி வருது..
//பதிவுலகிற்கான வளைகுடா அத்தாரிட்டியாக நாங்கள் நினைக்கும் துபாயில்//
அப்படியா, சொல்லவேயில்லை? நீங்களும் அபுதாபியை இருட்டடிப்பு செய்றீங்களே பாஸ்?
//பல கிளைகளாக ஒற்றுமையின்றி பிரிந்து கிடத்தும் துபாய் சங்கத்தவர்கள்//
ஓ.. இப்பப் புரியுது.. அதனாலத்தான் அவங்கள அத்தாரிட்டின்னு சொல்றீங்களோ?
/தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தில் எந்த பிரச்சினையும் இல்லை//
”எங்கப்பன் குதுருக்குள்ள இல்லை”!!
\\\ டெஸ்ட் கமெண்ட்!
March 31, 2010 9:07 AM
Delete
Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...
ஓ மினி இட்லி எல்லாம் தருவீங்களா?
நல்ல சங்கமா இருக்கீங்க..அண்ட் அந்த சேரில் பேர் எழுதி வச்சி என்பதும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..
என்ன ஒரு ஒற்றுமை
பட் தலைவர் என்கிற விசயமெல்லாம் வடிவேலு வந்தபிறகு கைப்புள்ளை என்கிற மாதிரியே சவுண்ட் ஆகுது ..:)\\\
அக்கா, உங்க அப்ரோச் பிடிச்சி இருக்கு... பட் எங்க தலயை கைப்புள்ள ரேஞ்சிக்கு அனுமானிக்க வேண்டாம்... அவர் ரேஞ்ச் தீப்பொறி திருமுகம் மாதிரி.. ;-)
\\\ஜெரி ஈசானந்தன். said...
மொக்கையினா ...மொக்கை....உலக மொக்கை....[எப்பிடியாவது...கட்சிய ...நடத்துங்கப்பு.]\\\
வருகைக்கு நன்றி சாரே! நாங்கள் எல்லாம் மொக்கையிலேயே வூடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தினவங்க... இப்ப எல்லாம் அந்த வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டியதாயிடுச்சி
\\\சென்ஷி said...
விரிவான பின்னூட்டம் சில நிமிடங்கள் கழித்து :)\\\
இந்த பின்னூட்டத்திற்கு பின் இருக்கும் நுண்ணரசியல் புரியுது பாஸ்... ஆள் சேர்த்துட்டு வந்து கூட்டணி போட்டு எல்லாம் எங்க சங்கததைப் பிரிக்க முடியாது.. ;-)
\\\முகிலன் said...
யப்பா.. உங்க சங்கம் பேரை படிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்குது.. போயி ஒரு ஜூஸ் குடிச்சிட்டு வர்றேன்.\\\
சங்கத்துக்கு வாங்க... எலுமிச்சம் பழ சூஸ் தருகிறோம்... ;-)
\\\ஆயில்யன் said...
அவ்வ்வ்வ்வ்வ்
அடி வாங்குறத்துக்குன்னே என்னைய செட் பண்ணி வைச்சிருக்கீங்களா ராசா!
சுகமா & சந்தோஷமா தின்னு தின்னு வளர்ந்த உடம்புய்யா ஊருல போறவங்க வர்றவங்ககிட்ட எல்லாம் அடி வாங்க என்னால முடியாதேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!\\\
பாஸ்... இப்ப தான் நீங்க தலைவராக பரிமளிக்கிறீர்கள்... பதவி வேண்டாம் என்று துச்சமாக தூக்கியெறியும் உங்க குணம் தான் உங்களை சம்மணமிட்டு உட்கார வைத்து இருக்கு.. :-))
\\\ஹுஸைனம்மா said...
//தோஹாவில் இருக்கும் கத்தாரிகளைக் //
அதென்னா கத்தாரி? கட்டாரி அருவா போல இதுவும் ஒரு வகையா?
ஆமாம், தோஹாவில இருக்கவங்கள தோஹாரின்னுதானே சொல்லணும், ஏன் கட்டாரின்னு, சே.., கத்தாரின்னு சொல்றீங்க?\\\\
ஹூசைனம்மா...
கேள்வி கேட்குறது.. ரொம்ப சுலபம்.
பதில் சொல்றது .. ரொம்ப கஷ்டம்... அந்த பிரிண்ட் அவுட் பேப்பருக்கே இன்னும் பதிலைக் காணோம்.. இங்க நீங்க கேள்வி வேற கேக்குறீங்க.. ;-))
\\ ஹுஸைனம்மா said...
/தோஹாவிற்குள் தனி நாடு கோரிக்கையையும்//
நீங்க தமிழ் இனமேதான்!! நோ டௌட்!!\\\
எங்க போனாலும் எங்க இனம் அப்படித் தான்... ஹிஹிஹி.. உரிமையைக் கேட்டு ஜன்நாயகத்தின் வழியில் போராடுவதை விட தனிநாடு கேட்டு தற்கொலை செய்து கொள்வோம்.
\\\ஹுஸைனம்மா said...
//நேற்றைய, இன்றைய, நாளையத் தலைவர் ஆயில்யன் தான் //
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்.... இதையே வலியுறுத்திச் சொல்றதைப் பாத்தா, தலைவரை அடிக்க நீங்களே ஆள் ஏற்பாடு பண்ணிக்கிறேன்னு சொல்ற மாதிரி தொனி வருது..\\\
நோ.. நோ.. நோ... இதெல்லாம் இப்படி பப்ளீக் மேடையில் சொல்லக் கூடாது.. பாருங்க எங்க தலைவர் கண் கலங்குறாரு.. ;-)
\\\ஹுஸைனம்மா said...
//பதிவுலகிற்கான வளைகுடா அத்தாரிட்டியாக நாங்கள் நினைக்கும் துபாயில்//
அப்படியா, சொல்லவேயில்லை? நீங்களும் அபுதாபியை இருட்டடிப்பு செய்றீங்களே பாஸ்?\\\
பாஸ்... எங்களுக்கு துபாய்ன்னா அபிதாபி, சார்சா, பஹிரீன் எல்லாம் சேர்ந்தது தானே.. ;-)))
\\\ஹுஸைனம்மா said...
//பல கிளைகளாக ஒற்றுமையின்றி பிரிந்து கிடத்தும் துபாய் சங்கத்தவர்கள்//
ஓ.. இப்பப் புரியுது.. அதனாலத்தான் அவங்கள அத்தாரிட்டின்னு சொல்றீங்களோ?\\\\
அத்தாரிட்டின்னா ஏதாவது பத்திரத்தை நீட்டினா கையெழுத்துப் போடுவாங்கள்ள... அதான்... ஹிஹிஹிஹி
\\\ஹுஸைனம்மா said...
/தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தில் எந்த பிரச்சினையும் இல்லை//
”எங்கப்பன் குதுருக்குள்ள இல்லை”!!\\\
ஓ... ஏதும் புரிஞ்சுடுச்சோ... ?
தமிழ் பிரியா..
இனியாவது புரியாத மாதிரி எழுதக் கத்துக்கட்டா
சஹாராவுல தான் பெயர்த்து வைக்கனும்.
மாப்பு நாங்களும் தோஹாவில்தான் ஏதாவது பேசினா உடனே தாய்நாட்டுக்கு பேக் பண்ணிறபோறாங்க பாத்து.......
நாட்டாம தீர்ப்பை மாத்து,
தோஹாவில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல மல்லு வேட்டி மலையாளிகளுக்கும் சின்னப்பாண்டி தான் தலைவரு தலைவரு தலைவரு.
/கானா பிரபா on March 31, 2010 6:51 PM said...
நாட்டாம தீர்ப்பை மாத்து,
தோஹாவில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல மல்லு வேட்டி மலையாளிகளுக்கும் சின்னப்பாண்டி தான் தலைவரு தலைவரு தலைவரு.
/
Repeattttttttuuuuuuu
கானா பிரபா said...
நாட்டாம தீர்ப்பை மாத்து,
தோஹாவில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல மல்லு வேட்டி மலையாளிகளுக்கும் சின்னப்பாண்டி தான் தலைவரு தலைவரு தலைவரு.
அய்யய்யோ...அவசரத்துல மலையாளிச்சிகளுக்கும் அப்படீன்னு படிச்சு தொலைச்சுட்டனே....
அட இப்படிக்கூட நடக்குதா??/
உங்கள் கடமையை செவ்வனே ஆற்றியிருக்கிறீர்கள்.!
இப்படியும் பதிவு போடலாமோ தெரியாம போச்சே இவளவு நாட்களாக .
//தோ.த.இ.ப.எ.வ.ச.கு//..சங்கத்து பெயர் ரொம்ப பெரிசா இருக்கு..?
Post a Comment