Wednesday, May 19, 2010

தாத்தாவின் யூரினும், டாக்டரின் பில்லும் சொல்லும் சேதி


பதிவு எழுதியே ரொம்ப நாள் ஆச்சு.. தமிழில் பதிவு எழுதுவதால் மகிழ்ச்சியா? கஷ்டமா? பதிவு எழுதாமல் இருப்பது மகிழ்ச்சியா? துக்கமா? போன்ற கேள்விகள் எழுந்தாலும் பதிவுகள் எழுதும் போது ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கின்றது.. ( எங்களுக்கு நீ போடுற பிளேடால் கழுத்தில் இரத்தமே வருகின்றது என்ற மைண்ட் வாய்ஸ் இங்க கேக்குது மேன்.. அடக்கி வாசி) எழுதாமல் இருக்கும் போது ஒரு வெறுமை சூழ்ந்து கொள்கின்றது என்னவோ உண்மை. ஒவ்வொரு முறையும் சக பதிவர்களை சந்திக்கும் போதும்\’சாட்’டும் போதும் தினசரி எதாவது ஒரு பதிவு எழுத வேண்டும் என்று பேசிக் கொள்கின்றோம். விழலுக்கு இறைத்த நீர் தான் போல..

சரி விடுங்க.... கடந்த மாதம் IPL, இந்த மாதம் ICC World T20 எல்லாம் நடந்ததால் நல்லா நேரம் போச்சு.... அதனால் எழுத மூடு வரலை.. (இல்லைன்னாலும்... வந்து கிழிச்சுடும்..) இப்ப கலாச்சாரக் காவலர்களுக்கு இந்த போட்டிகள் எல்லாம் முடிந்ததில் பெரும் கவலை.. ஏன்னா இதை எல்லாம் பார்த்து தெண்டமா கெட்டுக் குட்டிச் சுவராய் போய் தமிழ் மக்கள் என்று வாய்ச் சொல்லில் முழம் போடுவதற்கு வாய்ப்பு இன்னும் கொஞ்ச நாள் கழித்து தானே கிடைக்கும். கண்ணைத் துடைச்சுக்கங்க மக்களே.. அடுத்த வருடம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் இந்தியாவில் தான் நடக்கப் போகுது.. இப்ப இருந்தே நிறைய மேட்டர் தேத்தி வச்சுக்கங்க... என்ன.. ஈழத்தை வச்சு நீங்க ஏதும் எழுத்து காமெடி பண்ண முடியாது ஏன்னா அது இப்போதைக்கு சூடான இடுகையா மாறும் கட்டத்தைக் கடந்துருச்சு.

சரி விடுங்க.. நமக்கு எதுக்கு வீண் வம்பு.. பார்வெர்ட் மெயிலில் வந்த ஒரு குட்டிக் கதையைச் சொல்றேன்.. படிச்சிட்டு அப்பீட் ஆகிக்கங்க...

ஒரு 70 வயசு தாத்தாவுக்கு சிறுநீர் கழிப்பதில் சிக்கல்... அடைப்பு மாதிர்ன்னு வச்சுக்கங்க.. மருத்துவரிடம் சென்றால் அவரும் வழக்கம் போல் எல்லா செக்கப்பையும் செய்துட்டு, ஒரு ஆப்ரேஷன் செய்தால் தான் கிளியர் ஆகும்ன்னு சொல்லிட்டார். தாத்தாவும் தான் பட்ட அவதியைக் கருத்தில் வைத்துக் கொண்டு ஆப்ரேஷனுக்கு ஒத்துக்கிட்டார்.. ஆபரேஷனும் வெற்றிகரமா முடிந்தது. டாக்டர் பில்லைக் கொண்டு வந்து நீட்டினார்..

பில்லைப் பார்த்ததும் தாத்தாவின் கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் ஓடுது.. டாக்டர் ரொம்ப நல்ல மாதிரி... அவருக்கு முதலில் ஒன்னும் புரியல.. டாக்டரும் சமாளித்துக் கொண்டு “பரவாயில்லைங்க தாத்தா.. பில் தொகை உங்களால் சமாளிக்க முடியாத மாதிரி இருந்தா... எங்க டிரஸ்ட்டில் பேசி குறைக்க ஏற்பாடு செய்கின்றேன் என்கிறார்... அப்ப தாத்தா “ பில் தொகையைப் பார்த்து நான் கண்ணீர் விடலை.. கடந்த 70 வருடமா என்னைப் படைத்து காத்த இறைவன் நல்ல மாதிரியா சிறுநீர் கழிக்கும் உடலமைப்பைக் கொடுத்து இருந்தான்.. அதுக்காக நான் அவனுக்கு ஏதும் பில் கட்டலை... இப்ப அடைப்பு என்றதும் அது சரி செய்ய இவ்வளவு பெரிய தொகையைக் கட்ட தயாரே இருக்கேனே” அப்படின்னு சொன்னார்.

படம் நன்றி : ப்ளிக்கர் தளம்

24 comments:

Thamiz Priyan said...

அப்பமே சங்கத்துல சொன்னாங்க.. நடுஇராத்திரியில் இடுகை போடாதேன்னு.. கேட்டாத் தானே... ஹிஹிஹி

Thamiz Priyan said...

பின்னூட்டக் கயமைத் தனம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சங்க த்துல இப்படில்லாம் வேற வகுப்பு நடக்கு தா?

அறிவியல் கதையெல்லாம் எழுதி எழுதி எங்க மைண்ட் வாய்ஸெல்லாம் கேக்க ஆரம்பிச்சிடுச்சா ஹய்யோ

Thamiz Priyan said...

\\\முத்துலெட்சுமி/muthuletchumi said...

சங்க த்துல இப்படில்லாம் வேற வகுப்பு நடக்கு தா? \\\\

இது போன்ற தனி மனித தாக்குதல்களை சங்கத்துல பேசி தவிர்க்க ஏற்பாடு செய்வோம்.. எங்க சங்கத்து தலைவர் ஆயில்யன் வரட்டும்.. இதைப் பஞ்சாயத்தில் ஏற்றாமல் விட மாட்டோம்.. ;-))

ஹுஸைனம்மா said...

இரண்டே லைன்ல வந்த மெயிலை டெவலப் பண்ணி ரெண்டு பாராவா ஆக்கிட்டீங்களே!! தெறமதான்!!

//இவ்வளவு பெரிய தொகையைக் கட்ட தாயாரே இருக்கேனே//

ஸ்பெல்லிங் மிஸ்டேக், சரி பண்ணுங்க.

ஹுஸைனம்மா said...

//சக பதிவர்களை சந்திக்கும் போதும்\’சாட்’டும் போதும் தினசரி எதாவது ஒரு பதிவு எழுத வேண்டும் என்று பேசிக் கொள்கின்றோம்//

அதெல்லாம் சும்மா சொல்லுவாங்க. பேசிக்கும்போது, “அவசியம் வீட்டுக்கு வாங்க”ன்னு கூடத்தான் சொல்வாங்க. உடனே போயிடுவோமா என்ன? அதுமாதிரிதான் இதுவும்!!

Thamiz Priyan said...

\\\ஹுஸைனம்மா said...

இரண்டே லைன்ல வந்த மெயிலை டெவலப் பண்ணி ரெண்டு பாராவா ஆக்கிட்டீங்களே!! தெறமதான்!!

//இவ்வளவு பெரிய தொகையைக் கட்ட தாயாரே இருக்கேனே//

ஸ்பெல்லிங் மிஸ்டேக், சரி பண்ணுங்க.\\\

நன்றி ஹூசைனம்மா... எல்லாம் உங்களை மாதிரி பிரபல பதிவர்களின் ஐடியாக்களை பின்பற்றுவது தான்.. :)

Thamiz Priyan said...

\\\ஹுஸைனம்மா said...

//சக பதிவர்களை சந்திக்கும் போதும்\’சாட்’டும் போதும் தினசரி எதாவது ஒரு பதிவு எழுத வேண்டும் என்று பேசிக் கொள்கின்றோம்//

அதெல்லாம் சும்மா சொல்லுவாங்க. பேசிக்கும்போது, “அவசியம் வீட்டுக்கு வாங்க”ன்னு கூடத்தான் சொல்வாங்க. உடனே போயிடுவோமா என்ன? அதுமாதிரிதான் இதுவும்!!\\\

அப்படியெல்லாம் சும்மா விட முடியுமா? கூப்பிட்ட உடனே போய் ஆஜராகி விடுவோம்.. :-) அதனால் தான் யாரும் கூப்பிட மாட்றாங்க... :(

சுசி said...

//\’சாட்’டும் போதும் தினசரி எதாவது ஒரு பதிவு எழுத //

இங்க குற்றம் என்ற சொல் மிஸ் ஆச்சு தமிழ் பிரியன்.. அது குற்றம்சாட்டும்போதும்னு வந்திருக்க வேண்டாமோ..

Thamiz Priyan said...

\\\சுசி said...

//\’சாட்’டும் போதும் தினசரி எதாவது ஒரு பதிவு எழுத //

இங்க குற்றம் என்ற சொல் மிஸ் ஆச்சு தமிழ் பிரியன்.. அது குற்றம்சாட்டும்போதும்னு வந்திருக்க வேண்டாமோ..\\\

ஸ்மைலி ஏதும் நீங்க போடல... அதனால் சீரியஸா விளக்கம்... பொதுவா தமிழில் பிற மொழி சொற்களின் ஆக்கிரமிப்பு இருந்தாலும், வினைத் தொகையில் மட்டும் அந்த விஷயம் நடக்காம இருக்கும்.. அதை முறியடிக்கும் முயற்சி இது.. சாட்டிங் செய்யும் போது என்பதன் சுருக்கமான வினைச் சொல் தான் ’சாட்’டும் போது என்பது... போதுமா விளக்கம்??... :-))

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன் - பேசி அதிக நாட்களாகி விட்டன. நல்ல செய்தி - இறைவனுக்கு பல வகையில் நன்றி செலுத்த வேண்டும் - ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் தமிழ் பிரியன்
நட்புடன் சீனா

நாஸியா said...

அந்த தாத்தா பாருங்க.. கோவத்துல எங்களயெல்லாம் பார்த்து முறைக்கிற மாதிரியே இருக்கு.. ஹ்ம்ம்

Unknown said...

தமன்னாவோட பிரியாணி சாப்புடப் போன ஆளு இப்போ தாத்தாவாகி வந்து நிக்கிறீங்களே! அய்யகோ :)

Ahamed irshad said...

Monks said...
தமன்னாவோட பிரியாணி சாப்புடப் போன ஆளு இப்போ தாத்தாவாகி வந்து நிக்கிறீங்களே! அய்யகோ :)///

ரிப்பீபீபீபீபீபீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Ahamed irshad said...

//எங்களுக்கு நீ போடுற பிளேடால் கழுத்தில் இரத்தமே வருகின்றது என்ற மைண்ட் வாய்ஸ் இங்க கேக்குது மேன்.. அடக்கி வாசி///

எதையுமே தெளிவா புரிஞ்சிக்குறதுல உங்களை அடிச்சிக்க இந்திய துனைக கண்டத்துலேயே ஆளே இல்லீங்க..

Ahamed irshad said...

//சரி விடுங்க.. நமக்கு எதுக்கு வீண் வம்பு.. பார்வெர்ட் மெயிலில் வந்த ஒரு குட்டிக் கதையைச் சொல்றேன்.. படிச்சிட்டு அப்பீட் ஆகிக்கங்க.///

அப்ப இது சொந்த சரக்கு இல்லையா... அதெல்லாம் இல்லை உடனே சொந்தமா யோசிச்சி? ஒரு பதிவ போடுங்க..

எங்களுக்கும்தான் எல்லா ரக மெயிலும் வருது..

சுசி said...

தமிழ் பிரியன்.. ஒண்ணே ஒண்ணு உங்க கிட்ட கேக்கறேன்.. ஒரு ஸ்மைலி போடாதது இவ்ளோஓஓஓஓஓ..










..ஓஓஓஓ பெரிய குற்றமாப்பா..
நல்லாருங்க..

இனிமே ஸ்மைலிதான் சொல்ட்டேன்..

:)

:)

:)

:)

:)

:)

:)

:)

Iyappan Krishnan said...

:| :) :)) :) :| :( :(( :(:|

Thamiz Priyan said...

@ monks.. மிக்க நன்றி! என்ன செய்ய இப்பவாவது தமன்னாவை முகப்பில் இருந்து தூக்க மனசு வந்துட்டேன்னு சந்தோசப்படுங்க.

Thamiz Priyan said...

@ சீனா சார், மிக்க நன்றி!

Thamiz Priyan said...

@ நாஸியா அக்கா, .. தாத்தா உபயம் ப்ளிக்கர்.. நல்லா பயந்துட்டீங்களா?... (உங்ககிட்ட எங்க மச்சான் பயப்படுறதுல ஒரு சதவீதம் பயந்தாலும் போதுமே.. ஹிஹிஹி)

Thamiz Priyan said...

@ இர்ஷாத்.. நன்றி பாஸ்!

Thamiz Priyan said...

@ நன்றி சென்ஷி சாரே!

Thamiz Priyan said...

@ சுசி, ராமலக்ஷ்மி, ஜீவ்ஸ்.. ஸ்மைலிகளுக்கு மிக்க நன்றி!