&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இப்போது படிப்பது LKG. இந்த மாத ஆரம்பத்தில் தான் பள்ளி செல்ல ஆரம்பித்தான். பள்ளி ஆரம்பிக்கும் போதே சொல்லி இருந்தேன்.. அவனுக்கு விருப்பம் இருப்பதை மட்டும் கற்பித்தால் போதும் என்று.. ம்ஹூம்.. நம்ம பேச்சுக்கு ஏதும் மதிப்பு இல்லை அவனது பள்ளி ஆசிரியையிடம்.. அவர்களது பாடத்திட்டம்படி தான் நடக்க வேண்டுமாம்.
@ பூக்களின் பெயர்களை வாசிக்க கற்றுக் கொள்ளச் சொல்லி இருக்கின்றார்கள்.. அதில் சில என்னவென்றே எனக்கும் வீட்டுக்காரம்மாவுக்கும் தெரியவில்லை. இங்கிருந்து இணையத்தில் பார்த்து அவர்களுக்கு விவரிக்க வேண்டி இருந்தது.. அதில் சில மலர்கள்
dahlia
daisy
periwinkle
@ திருக்குறள் இந்த ஆண்டு 25 கற்றுக் கொள்ள வேண்டுமாம்.. நாங்கள் எல்லாம் பெரிய வகுப்புகளிலேயே வருடத்திற்கு 10 குறள் தான் மனப்பாடம் செய்வோம். இது வரை 4 குறள்களை மனப்பாடம் செய்துள்ளான். அகர முதல் எழுத்தெல்லாம், கற்க கசடற, எல்லா விளக்கும் விளக்கல்ல, மலர்மிசை ஏகினான் என்று செல்கின்றது. மலர்மிசை ஏகினான் சொல்வதைக் கேட்கும் போது இனிமையாக இருந்தது.
மலர்மிசை ஏகினாஆஆஆஆஆன்
மாஆஆஆணடி சேர்ந்தார்ர்ர்ர்
நிலமிசை நீஇஇஇடு
வாழ்வார்ர்ர்ர்ர்
@ போன் செய்யும் போது அங்கே சத்தம் என்னவென்றால் 123 எழுதுவதில் தகராறு என்று.. 1,2,3 எழுதுவது சுலபம் தானே என்ற போது.. அது 123 இல்லையாம்.. one, two, three யாம்... இந்த சின்ன வயசில் இவ்ளோ சுமையா.. நாங்கள் எல்லாம் மூன்றாம் வகுப்பில் தான் ABCD படித்தோம்.. ஏனோ மனம் குழம்பி விட்டது. இன்றைய அவசர உலகில் அவனையும் திணிக்கின்றோமோ என்று.. சாவகாசமாக கற்றுக் கொள்ளட்டும் என்று விடலாமா என்று கூட எண்ணம்.. ஆனால் இன்றைய கடின யுகத்தில் பிந்தங்கி விடுவானோ என்ற பயமும்... ஊருக்கு சென்று தான் நிலைமையைப் பார்க்க வேண்டும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மகளுக்கும், மகனுக்கும் சில நேரங்களில் போராட்டம்... இவன் படிக்கும்\எழுதும் போது அவளும் கலந்து கொள்கின்றாள்.. எதற்கு? அவனது புத்தகங்களைக் கிழிக்க... ஆனாலும் அவளிடம் இவன் அடிவாங்குவது தான் அதிகமாம். # தங்கை பாசம்.. ;-)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
போனில் உரையாடலில் வரிசையாக எதை எல்லாம் வாங்கி வர வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான்.
”சாக்லேட்”
“ம் அப்புறம்”
“ஜெல்லி மிட்டாய்”
“ம் அப்புறம்”
வீடியோ கேம்ஸ்”
“ம் அப்புறம்”
“டிவி”
....
இப்படியே தொடர்ந்து கொண்டு இருந்தது.. இறுதியில் “நீங்க நான் சொன்னதை எல்லாம் மறந்துடுவீங்க... அதனால எல்லாத்தையும் எழுதி வச்சுக்கங்க... ”
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
“.. எப்ப வருவீங்க?”
“சீக்கிரமே வந்து விடுவேன்”
“சீக்கிரம்னா எப்ப?”
“இன்னும் மூணு மாசம் தான்... அதுக்கு அப்புறம் ஊரிலேயே உங்க கூட இருப்பேன்”
“நீங்க இப்படித் தான் ரொம்ப நாளா சொல்றீங்க.. வரவே மாட்றீங்க... சீக்கிரம் வாங்கத்தா”
...................................