Monday, June 28, 2010

செம்மொழி மாநாட்டை அடுத்து - கலைஞருக்குக் கடிதம்

தொழில் நகரமான கோவையில் செம்மொழி மாநாடு சிறப்புடன் முடிந்து இருக்கின்றது. சில விஷயங்களில் இது வெற்றி தோல்வி என நிர்ணயித்துக் கூறும் நுட்பம் உள் நுழைய இயலாது... அது போல தான் இந்த மாநாடும்... இது ஒன்றும் பணம் போட்டு பணம் பார்க்கும் திரைப்படம் அல்ல... இது ஒரு சமூகத்தின், தொன்று தொட்டு வந்த சமூகவியலில் கொண்டாட்டம்.. இதன் மூலம் நம்மால் முடிந்த நன்மைகளை அடைந்து கொள்வது மட்டுமே நமக்கான நோக்கம்..

உலகம் தோன்றிய காலம் தொட்டே எது நடந்தாலும் அது நல்லதோ, கெட்டதோ அதை எதிர்க்க ஒரு கும்பல் கிளம்புவது சகஜமே.. கெட்டவைகளை எதிர்க்கும் கும்பல் அதில் கிடைத்த சொரிதலின் இன்பம் காரணமாக நல்லவைகளையும் எதிர்க்கும். சாக்ரடிஸ் முதல் கலிலியோ வரை அவர்கள் வாழ்ந்த சமூகத்தால் ஏளனமாக பார்க்கப்பட்டனர். கிறிஸ்து தன் மக்களாலேயே சிலுவையில் அறையப்பட்டார். முகமது(ஸல்) நபி தன் சொந்த ஊரில் இருந்து சொந்த உறவுகளாலேயே விரட்டப்பட்டார்... இவை போன்றவை எல்லாம் வரலாறு நமக்கு தரும் பாடங்கள்.

செம்மொழி மாநாடு செங்குருதியின் மீது நடாத்தப்பட்ட மாநாடாக அறிவுக் கொழுந்துகள் எழுதும் போது சிரிப்பு தான் வருகின்றது. செங்குருதியின் ஓட்டம் இப்போது தான் நின்றுள்ளது. வெறிச்சோடிப் போய் கிடந்த பாதைகளில் வாகனங்கள் உருள்கின்றன. ஏசி அறையில் ஐரோப்பாவிலும், கனடாவிலும் அமர்ந்து பிஸ்ஸாக்களை மென்று கொண்டே எழுதும் இவர்களுக்கு இனி உசுப்பேத்தி விட ஆள் இல்லாததால் வந்த கோபமாக இருக்கும் போல் இருக்கின்றது.. வாழ்க ஜனநாயகம்

இவர்களுக்கு வால் பிடிக்க என்றே ஒரு காக்கைக் கூட்டம் இருக்கின்றது. தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து வருடங்களுக்கு எந்த திருமணமோ, நல்ல காரியமோ நடக்கக் கூடாது என்று சட்டம் இயற்றினால் கூட “ஏன் ஐந்து ஆண்டு, இன்னும் பத்து ஆண்டுகளுக்கு என்று சட்டத்தை மாற்றுங்கள்” என்று கூட இவர்கள் கூக்குரல் எழுப்புவார்கள்.. ஏனெனில் இவர்கள் தான் பன்னெடுங்காலமாக தமிழையும், தமிழினத்தையும் தங்கள் சிரங்களில் ஏந்தி
வளர்த்தவர்கள். இவர்களுக்கு தமிழினம் செத்துக் கொண்டே இருப்பது தான் பிடிக்குமாம்.





இதோ செம்மொழி மாநாடு முடிந்து விட்டது.. இனி இவர்களின் வாய்க்கு அவல் கிடைக்காமல் திண்டாடுவார்கள்.. கலைஞரைப் பற்றி பேச அல்லது எழுத ‘மேட்டர்’ கிடைக்காமல் திண்டாடுவார்கள். எனவே கலைஞர் அவர்களே... உடனடியாக இவர்களின் வாய்க்கு ஏதாவது கொடுங்கள். அவர்களுக்கு உங்களை திட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.. இல்லையெனில் எதையாவது சுவைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு தகுந்தாற் போல் ஏதாவது செய்யுங்கள்.


புகைப்படங்களுக்கு நன்றி : தினமலர்

14 comments:

வெற்றி said...

இத... இதத்தான் எதிர்பாத்தேன்.

ஆயில்யன் said...

கடமை!

ஹுஸைனம்மா said...

ஒண்ணுமே புரியல!!

உங்களக் கூப்பிடலன்னு கோவமா!!??

:-) (-:

அபி அப்பா said...

மிக அருமையான பதிவு தமிழ்ப்பிரியன்!

Thamiz Priyan said...

அன்பு நண்பர் பெயரிலியோன்,
உங்களது எதிர்மறை ஓட்டு கிடைக்கப் பெற்றோம். மிக்க நன்றி!
அன்புடன்
தமிழ் பிரியன்.

சென்ஷி said...

தமிழ் பிரியன்,

மிக மொக்கையான பதிவாக இருக்கிறது.

Ahamed irshad said...

கெட்டவைகளை எதிர்க்கும் கும்பல் அதில் கிடைத்த சொரிதலின் இன்பம் காரணமாக நல்லவைகளையும் எதிர்க்கும்.///

True...

செல்வன் said...

அருமையான பதிவு.
-செங்குருதியின் ஓட்டம் இப்போது தான் நின்றுள்ளது.-
100% உண்மை, அது தான் நீங்கள் குறிப்பிட்ட அறிவுக் கொழுந்துகளின் கோபத்துக்கு காரணம்.

நட்புடன் ஜமால் said...

- வந்திருக்குமேன்னு நினைச்சி வந்தேன்

கரீட்டு ...

உடன்பிறப்பு said...

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்

Unknown said...

வேலை இருக்கறவனுக்கு ஒரு வேலை, வெட்டிபயலுங்களுக்கு பல வேலை... அடுத்து குறை சொல்ல விஷயமா இல்லே? இதோ பெட்ரோலிய விலை உயர்வு வந்துட்டு...

cheena (சீனா) said...

அன்பின் தமிழ்பிரியன்

ஆதங்கம் புரிகிறது

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

அப்துல்மாலிக் said...

:)))))

Thamira said...

சரியாகச் சொன்னீர்கள் தமிழ். எனக்கு பதிவு மிகப் பிடித்திருந்தது.