இப்போதெல்லாம் மகன் போனில் நிறைய பேச ஆரம்பித்து விட்டான்.. இப்போது தான் அவன் பேசும் ஸ்லாங் புரிய ஆரம்பித்து இருக்கின்றது. இரட்டைக் குடியுரிமை போல இரட்டை கலாச்சாரம் அவனிடம் இருக்கும் என்று தெரிகின்றது. எங்கள் வீட்டில் மதுரை தமிழ் என்றால், மனைவியின் வீட்டில் நாஞ்சில் தமிழ்.. இவனுக்கு ரெண்டும் கலந்து வருகின்றது. திருமணமான புதிதில் மனைவி பேசும் போது பல வார்த்தைகள் புரியாமல் திண்டாடி இருந்திருக்கின்றேன். இப்போது மகனிடமும் திண்டாட வேண்டி வருகின்றது.. ;-)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இப்போது படிப்பது LKG. இந்த மாத ஆரம்பத்தில் தான் பள்ளி செல்ல ஆரம்பித்தான். பள்ளி ஆரம்பிக்கும் போதே சொல்லி இருந்தேன்.. அவனுக்கு விருப்பம் இருப்பதை மட்டும் கற்பித்தால் போதும் என்று.. ம்ஹூம்.. நம்ம பேச்சுக்கு ஏதும் மதிப்பு இல்லை அவனது பள்ளி ஆசிரியையிடம்.. அவர்களது பாடத்திட்டம்படி தான் நடக்க வேண்டுமாம்.
@ பூக்களின் பெயர்களை வாசிக்க கற்றுக் கொள்ளச் சொல்லி இருக்கின்றார்கள்.. அதில் சில என்னவென்றே எனக்கும் வீட்டுக்காரம்மாவுக்கும் தெரியவில்லை. இங்கிருந்து இணையத்தில் பார்த்து அவர்களுக்கு விவரிக்க வேண்டி இருந்தது.. அதில் சில மலர்கள்
dahlia
daisy
periwinkle
@ திருக்குறள் இந்த ஆண்டு 25 கற்றுக் கொள்ள வேண்டுமாம்.. நாங்கள் எல்லாம் பெரிய வகுப்புகளிலேயே வருடத்திற்கு 10 குறள் தான் மனப்பாடம் செய்வோம். இது வரை 4 குறள்களை மனப்பாடம் செய்துள்ளான். அகர முதல் எழுத்தெல்லாம், கற்க கசடற, எல்லா விளக்கும் விளக்கல்ல, மலர்மிசை ஏகினான் என்று செல்கின்றது. மலர்மிசை ஏகினான் சொல்வதைக் கேட்கும் போது இனிமையாக இருந்தது.
மலர்மிசை ஏகினாஆஆஆஆஆன்
மாஆஆஆணடி சேர்ந்தார்ர்ர்ர்
நிலமிசை நீஇஇஇடு
வாழ்வார்ர்ர்ர்ர்
@ போன் செய்யும் போது அங்கே சத்தம் என்னவென்றால் 123 எழுதுவதில் தகராறு என்று.. 1,2,3 எழுதுவது சுலபம் தானே என்ற போது.. அது 123 இல்லையாம்.. one, two, three யாம்... இந்த சின்ன வயசில் இவ்ளோ சுமையா.. நாங்கள் எல்லாம் மூன்றாம் வகுப்பில் தான் ABCD படித்தோம்.. ஏனோ மனம் குழம்பி விட்டது. இன்றைய அவசர உலகில் அவனையும் திணிக்கின்றோமோ என்று.. சாவகாசமாக கற்றுக் கொள்ளட்டும் என்று விடலாமா என்று கூட எண்ணம்.. ஆனால் இன்றைய கடின யுகத்தில் பிந்தங்கி விடுவானோ என்ற பயமும்... ஊருக்கு சென்று தான் நிலைமையைப் பார்க்க வேண்டும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மகளுக்கும், மகனுக்கும் சில நேரங்களில் போராட்டம்... இவன் படிக்கும்\எழுதும் போது அவளும் கலந்து கொள்கின்றாள்.. எதற்கு? அவனது புத்தகங்களைக் கிழிக்க... ஆனாலும் அவளிடம் இவன் அடிவாங்குவது தான் அதிகமாம். # தங்கை பாசம்.. ;-)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
போனில் உரையாடலில் வரிசையாக எதை எல்லாம் வாங்கி வர வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான்.
”சாக்லேட்”
“ம் அப்புறம்”
“ஜெல்லி மிட்டாய்”
“ம் அப்புறம்”
வீடியோ கேம்ஸ்”
“ம் அப்புறம்”
“டிவி”
....
இப்படியே தொடர்ந்து கொண்டு இருந்தது.. இறுதியில் “நீங்க நான் சொன்னதை எல்லாம் மறந்துடுவீங்க... அதனால எல்லாத்தையும் எழுதி வச்சுக்கங்க... ”
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
“.. எப்ப வருவீங்க?”
“சீக்கிரமே வந்து விடுவேன்”
“சீக்கிரம்னா எப்ப?”
“இன்னும் மூணு மாசம் தான்... அதுக்கு அப்புறம் ஊரிலேயே உங்க கூட இருப்பேன்”
“நீங்க இப்படித் தான் ரொம்ப நாளா சொல்றீங்க.. வரவே மாட்றீங்க... சீக்கிரம் வாங்கத்தா”
...................................
21 comments:
//திருமணமான புதிதில் மனைவி பேசும் போது பல வார்த்தைகள் புரியாமல் திண்டாடி இருந்திருக்கின்றேன்.//
ராசா அதுக்கு பேரு திண்டாட்டம் இல்ல பூரிப்புல வர்ற தடுமாற்றம் அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க ! :)))
//அவனுக்கு விருப்பம் இருப்பதை மட்டும் கற்பித்தால் போதும் என்று.. ம்ஹூம்.. நம்ம பேச்சுக்கு ஏதும் மதிப்பு இல்லை//
யெம்புட்டு நல்ல டாடி/தாடி !
//இன்னும் மூணு மாசம் தான்... அதுக்கு அப்புறம் ஊரிலேயே உங்க கூட இருப்பேன்”//
இன்னும் 3 மாசம்தானா? ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா ஜாலிடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
இப்படிக்கு
ஆயில்யன்
:)))))))))))
அன்பின் தமிழ் பிரியன்
அயலகத்தில் இருந்து கொண்டு இவ்வளவு பாசமாக இடுகை இடுவது நன்று - விரைவினில் தாயகம் திரும்புக ( அல்லது வருக! ). அளவற்ற அருளாளனின் அன்புக்குப் பாத்திரமானவன் ஆங்கிலம் படிப்பதும் - குறள் பேசுவதும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. உடன் பிறந்தவள் செலுத்தும் பாசமுடன் கூடிய உரிமை நன்று. மதுரைத் தமிழும் நாஞ்சில் தமிழும் - கலக்கட்டும் - புதிய தம்ழி உருவாகட்டும். வட்டார வழக்குகள் அழியாதவை. நன்று நன்று
கேட்பவை அனைத்தும் எழுதி வைத்து வாங்கி வர வேண்டும் - சரியா
அடுத்த தடவை பேசும் போது துணைவிக்கும் குழந்தைகளுக்கும் எங்களது அன்பினையும் நல்வாழ்த்துக்ளையும் தெரிவிக்க் வேண்டுகிறேன்.
நல்வாழ்த்துகள் தமிழ் ப்ரியன்
நட்புடன் சீனா
:))
கலக்கல்.. புகைப்படம் அருமை. குழந்தைக்கு திருஷ்டி சுத்திப் போட சொல்லு.. உங்களைப்பத்தி மருமகனுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்குது. அதான் எழுதி வைச்சிக்க சொல்லுறான் போல.. இம்புட்டுதான் கேட்டாரா.. இல்லை நீங்க டைப் அடிக்க சோம்பல்பட்டு எழுதாம விட்டுட்டியா?
//
யெம்புட்டு நல்ல டாடி/தாடி !//
ரொம்ப சுருக்கிட்டே...
நம்ம தாடி எம்புட்டு நல்ல டாடி :)
//நாங்கள் எல்லாம் பெரிய வகுப்புகளிலேயே வருடத்திற்கு 10 குறள் தான் மனப்பாடம் செய்வோம்//
அதெல்லாம மறந்திடுங்க அப்பு, இப்பவெல்லாம் பசங்க எங்கேயோ போய்ட்டு இருக்காஙக, ஆனால் சுமை அதிகம் போல் தான் தெரிகிறது.
//சீக்கிரம் வாங்கத்தா”//
ஆமாம் சீக்கிரம் போங்கத்தா..
nice அண்ணே!
டிவியுமா வாங்கீட்டு வர சொல்றான் பையன்???
ஒரு வேளை எல்.இ.டி டிவியோ????
// நாங்கள் எல்லாம் பெரிய வகுப்புகளிலேயே வருடத்திற்கு..//
//நாங்கள் எல்லாம் மூன்றாம் வகுப்பில் தான்..//
முதல்ல இதை நிறுத்திடுங்க:)! காலம் மாறியே போச்சு.
//மலர்மிசை ஏகினாஆஆஆஆஆன்
மாஆஆஆணடி சேர்ந்தார்ர்ர்ர்
நிலமிசை நீஇஇஇடு
வாழ்வார்ர்ர்ர்ர்..//
ஃபோனில் சொல்லும் போது ரெகார்ட் செய்து யூட்யூபில் தரலாமே?
// # தங்கை பாசம்.. ;-)//
நல்ல பையன்.
பாச இடுகை... கூடிய விரைவில் போங்கத்தா...
//இப்போது மகனிடமும் திண்டாட வேண்டி வருகின்றது..//
பாத்துகிட்டேயிருங்க... சீக்கிரமே அடாப்ட் ஆகிடுவாங்க.. உங்க வீட்டு ஆட்கள்ட்ட உங்க ஸ்லாங்லயும், அம்மாவீட்டு ஆட்கள்ட்ட நாஞ்சில் ஸ்லாங்லயும் பேச ஆரம்பிச்சிடுவாங்க!!
எல்.கே.ஜி.க்கே இண்டர்நெட்ல ப்ராஜக்டா?!!! :-(((
//அவனுக்கு விருப்பம் இருப்பதை மட்டும் கற்பித்தால் போதும் என்று.. ம்ஹூம்..//
அப்படின்னா சொந்தமாத்தான் பள்ளிக்கோடம் தொடங்கணும்!! கொஞ்ச நா மின்னே, மாடு மேய்க்கலாமான்னு யோசிச்சீங்களே, இதுதான் இருக்கதிலேயே லாவமான தொழில்!! (பார்ட்னர்ஷிப் வேணுன்னா சொல்லவும்!!)
//அப்புறம் ஊரிலேயே உங்க கூட இருப்பேன்//
வாழ்த்துகள்!!
//மலர்மிசை ஏகினான் சொல்வதைக் கேட்கும் போது இனிமையாக இருந்தது.//
குழல் இனிது யாழ் இனிது சொல்லிக்கொடுங்க . மறக்காம கேட்டதெல்லாம் ஊருக்கு போகும்போது வாங்கிட்டு போங்க :)
பையன் கலக்குறான்!!!
//மகளுக்கும், மகனுக்கும் சில நேரங்களில் போராட்டம்... இவன் படிக்கும்\எழுதும் போது அவளும் கலந்து கொள்கின்றாள்.. எதற்கு? அவனது புத்தகங்களைக் கிழிக்க... ஆனாலும் அவளிடம் இவன் அடிவாங்குவது தான் அதிகமாம். # தங்கை பாசம்.. ;-)//
உலகப் பொது முறை :))
ஆஹா அருமை.அடிக்கடி அப்டேட்ஸ் போடுங்க.எங்களுக்கும் சுவாரஸ்யமாய் இருக்கும்[மொக்கையைப் படிக்காமலிருக்கலாம்]:))
ராமலஷ்மி சொல்வது போல பழங்கதையும் பயமும் வேண்டாம்.
நாம் எப்போது ரேடியோ டிவி பார்க்கத் தொடங்கினோம்.நாம் இப்போ கத்திக்கிட்ட கணிணியை அவங்க சின்னதுலேயே கத்துக்கிடறாங்க.
"காலத்தோடு ஒட்டி வாழ்"
வாழ்த்துக்கள் தமிழ்பிரியன்
கலக்கல் அப்டேட்.. எல் கே ஜி லயே திருக்குறளா? ஆச்சர்யமா இருக்கு, இந்த அளவுக்கு தமிழுக்கு முக்கியத்துவம் தருவதை நினைத்து..
அவ்வ்வ்.. பாசக்கார பய புள்ளைக இப்டி அழ வைக்குதுகளே..
என்ன சொல்ல தமிழ் பிரியன்.. வார்த்தை வர்ல..
அழுகாச்சியா இருக்கு..
ஆவ்வ்வ்..
இளவரசி பூவாட்டம் இருக்காங்க.. சுத்தி போட சொல்லுங்க..
ஆயில்யன் on June 30, 2010 8:56 AM said...
//திருமணமான புதிதில் மனைவி பேசும் போது பல வார்த்தைகள் புரியாமல் திண்டாடி இருந்திருக்கின்றேன்.//
ராசா அதுக்கு பேரு திண்டாட்டம் இல்ல பூரிப்புல வர்ற தடுமாற்றம் அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க ! :)))
..
//
ஆமாம் அப்படித்தான் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன்
ஆயில்யன் said...
//அவனுக்கு விருப்பம் இருப்பதை மட்டும் கற்பித்தால் போதும் என்று.. ம்ஹூம்.. நம்ம பேச்சுக்கு ஏதும் மதிப்பு இல்லை//
யெம்புட்டு நல்ல டாடி/தாடி !//
தாடிக்குள் ஈரம்
நல்ல சுவையான பதிவு. ரசித்தேன்.
குழந்தைக்ளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு, தந்தையின் பிரிவு மிகவும் பாதிக்கும். சீக்கிரமே வூடு போய் சேருங்க
சின்னக் குட்டி அண்ணனை அடித்து விளையாடுவதை எல்லாம் பார்த்து ரசிக்க வேண்டாமா? இந்தப்பருவம் திரும்பி வராது, தமிழ்பிரியன்!
என் பேரன் தந்தையின் மூணு மாசப் பிரிவைத் தாங்காமல் ஏங்கிவிட்டான். ஊர்திரும்பியதும் நாங்கள் யாரும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. அப்பாவை ரூமுக்குள்இழுத்துக்கொண்டு போய் “வா1 வெளாடலாம்” என்று கதவை இறுக்க சாத்திக் கொள்வான்.
பாவமாயிருக்கும்
Post a Comment