Tuesday, February 12, 2008

வீடியோ : கோவில் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகள் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி


கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில், கோவில் ஆக்கிரமிப்பை அகற்றிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கார் ஏற்றிக் கொல்ல முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கோவில் தர்மகர்த்தாவின் குடும்பம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே வேர்கிளம்பி உடையார் விளை என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த நாராயணசாமி கோவிலை அகற்ற கடந்த 6ம் தேதி தேசிய நெடுஞ்சாலை துறை தக்கலை இஞ்சினியர்கள் மற்றும் அதிகாரிகள் உடையார்விளை பகுதிக்கு சென்றனர். ஜேபிசி இயந்திரம் மூலம் கோயிலை இடித்தனர்.

அப்போது மிக வேகமாக அங்கு வந்த கார் அதிகாரிகள் மீது மோதியது. இதில் நெடுஞ்சாலைத் துறை என்ஜீனியர்கள் அந்தோணி சேவியர், சுந்தரம் மற்றும் போலீஸகாரர் எட்வின் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.


போலீசார் நடத்திய விசாரணையில் கோயில் நிர்வாகி அர்ஜூனன் மற்றும் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் சிலர்தான் கோயிலை இடித்த ஆத்திரத்தில் அதிகாரிகளை கொல்ல முயன்றது தெரிய வந்தது.

இந்நிலையில் உதவி கோட்ட செயற்பொறியாளர் அந்தோணி சேவியரை காரை ஏற்றி கொல்ல முயன்ற பகீர் காட்சிகள் அடங்கிய சிடியை கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் நேற்று வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஆக்கிரமிப்பு அகற்றுவதை வீடியோவில் பதிவு செய்துள்ளோம். அதில் காரை ஏற்றி கொல்ல முயன்ற காட்சி தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த சிடியை சென்னையில் உள்ள எங்கள் மாநில சங்கம் மூலம் தலைமை பொறியாளருக்கு கொடுக்க உள்ளோம் என்றார்.

அர்ஜூனின் குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(வீடியோ 26 நொடிகள்)

11 comments:

Thamiz Priyan said...

சோதனை மறுமொழி :)

யாழ் Yazh said...

?????
nermaiyaga kadamaiyai seyalpadupavargalukku thaguntha paathukaapu alippathu arasin kadamai.
kutravaligal udanadiyaga thandikkapadavendum.

Yogi said...

naanum paarthEn seythikaLil !!! payangkaram !!

mirukathnamaakana seyal !! :(

முஸ்லிம் said...

அடப் பாவிங்களா :(

இலவசக்கொத்தனார் said...

நேற்று செய்திகளில் பார்த்த பொழுது ஒரு நிமிடம் திகைத்து நின்றுவிட்டேன். எப்படியாவது அந்த காரின் நம்பர் மூலம் இதனைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து உயர்ந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும்.

யாத்ரீகன் said...

telugu pada cienma maathiri iruku..

should watch how Media, Government & Court reacts to this incident which has happened so explicitly in public before everyone and has a proof video..

Thamiz Priyan said...

// Yazh said... nermaiyaga kadamaiyai seyalpadupavargalukku thaguntha paathukaapu alippathu arasin kadamai.
kutravaligal udanadiyaga thandikkapadavendum.//

yazh வருகைக்கு நன்றி.
பார்ப்போம். அரசு இயந்திரம் எவ்வளவு விரைவாக செயல்படுகிறது என்று.

Thamiz Priyan said...

//பொன்வண்டு said...naanum paarthEn seythikaLil !!! payangkaram !!
mirukathnamaakana seyal !! :(//
கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய செயல்.

Thamiz Priyan said...

//முஸ்லிம் said...அடப் பாவிங்களா :(//
வருகைக்கு நன்றி. என்ன செய்வது இதெல்லாம் இன்று சகஜமாகி விட்டதே?

Thamiz Priyan said...

//இலவசக்கொத்தனார் said...நேற்று செய்திகளில் பார்த்த பொழுது ஒரு நிமிடம் திகைத்து நின்றுவிட்டேன். எப்படியாவது அந்த காரின் நம்பர் மூலம் இதனைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து உயர்ந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும்.//
கண்டிப்பாக தண்டனைகளும், தனி மனித ஒழுக்கங்களுமே இவர்களைத் திருத்த வேண்டும். வருகைக்கு நன்றி!

Thamiz Priyan said...

//யாத்திரீகன் said..telugu pada cienma maathiri iruku..

should watch how Media, Government & Court reacts to this incident which has happened so explicitly in public before everyone and has a proof video..//
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வக்கீல் என்பதால் அவருக்கு ஆதரவாக வக்கீல்கள் குதித்துள்ளனர். இந்த வீடியோ காட்சி கூட கிராபிக்ஸ் என்று கூறி வழக்கை உடைக்கப் போகிறார்களாம்.
வருகைக்கு நன்றி யாத்ரீகன்.