
ஆண்டு : 2005 அக்டோபர்


இஸ்ரேலைச் சேர்ந்த Aharon Shemoel என்பவரால் விளைவிக்கப்பட்ட இந்த எலுமிச்சம் பழம் 5 கிலோ 265 கிராம் இருந்தது.

உலகத்திலேயே மிகச்சிறிய நாய் இது. இதன் நீளம் மொத்தமே 15.2 செ.மீ தான். இது Paulette Keller என்ற அமெரிக்கருக்குச் சொந்தமானது.

உலகின் நீளம் தங்க மீன் இது தான். Joris Gijsbers என்ற ஆலந்து நாட்டவருக்கு சொந்தமான இந்த மீனின் நீளம் 47.4 செ.மீ.

உலகின் உயரமான நாயான Gibson உடைய உயரம் 107 செ.மீ அதாவது கிட்டத்தட்ட மூன்றரை அடி உயரம் உள்ளது. இது அமெர்க்கர் Sandy Hall க்கு சொந்தமானது.
4 comments:
படங்கள் பகிர்வுக்கு நன்றி..
எங்கே பிடிச்சீங்க...? நல்லா இருக்கு..
//பாச மலர் said...
படங்கள் பகிர்வுக்கு நன்றி..//
//கீழை ராஸா said...
எங்கே பிடிச்சீங்க...? நல்லா இருக்கு..//
பாசமலர், கீழை ராஸா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
கின்னஸ் சாதனைகளின் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் அவை
1970 ல் யாழ்ப்பாணத்தில் ஒரு விவசாயக் கண்காட்சி நடந்தது. அதில் திருநெல்வேலியைச்(ஈழம்) சேர்ந்த விவசாயி ஒருவர் சுமார் 2 1/2 அடி உயரம் 3 அடி விட்டத்துடன் ஒரு பூசணிக்காய்; காட்சிக்கு
வைத்தார். அவருக்கு மிகப் பெரிதாக உற்பத்தி செய்ததற்கான பரிசு கூடக் கொடுத்தார்கள்.
கடைசி நாள் அந்த பூசணிக்காய் கீலம் ,கீலமாக வெட்டி விற்பனை செய்பப்பட்டது. அதன் விதைக்காகப் பலர் வரிசையில் நின்று வாங்கினார்கள். ஒன்றோ இரண்டோ விதை கொடுத்ததாக ஞாபகம்.
அதைப் படம்பிடித்தார்களோ தெரியவில்லை.பிடித்திருந்தாலும் இருக்குமோ தெரியாது. அந்த விவசாயிக்கு
கின்னஸ் சாதனை பற்றித் தெரியுமோ தெரியாது.
இப்படி எத்தனையோ தெரியாமல் போய்விட்டது.
இப்படங்களைப் பார்த்த போது எனக்கு அந்த பூசணிக்காய் நினைவு வந்தது.
Post a Comment