தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் பாளையங்கோட்டை மாணவி ராம் அம்பிகை மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு 496 பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்துள்ளார்.
ராம் அம்பிகை புனித இக்னேஷியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவியாவார்.
2வது இடத்தை 2 மாணவர்களும், 2 மாணவிகளும் ஆக மொத்தம் 4 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 494.
493 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தை மொத்தம் 8 பேர் பிடித்துள்ளனர்.
2ம் இடம் பெற்றவர்கள்:
எம். ஜோசப் ஸ்டாலின் - புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, வீரவநல்லூர்.
எஸ். ஜகீமா - சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை.
பி. மருதப்பாண்டியன் - டி ஹன்ஸ்ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.
எஸ். சுவேதா - புனித ரஃபேல்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாந்தோம் சென்னை.
3-ம் இடம் பிடித்தவர்கள்:
என்.ராமஸ்வாதிகா - புனித இக்னேஷியஸ் பள்ளி, பாளையங்கோட்டை.
ஜி.கே. உமாப்ரியா - சவுராஷ்டிரா பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மதுரை.
கே. இந்து - செயின்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம்.
எஸ். செல்வராஜ் - ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி, புலியூர், கரூர்.
ஜி. காயத்ரி - அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி.
எம். ரஃபியா பேகம் - அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாமரங்கோட்டை, பட்டுக்கோட்டை.எம். திருமால் - ஏ.கே.டி நினைவுப் உயர்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி.
வி. எம்லின் மெர்சி - செயின்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெற்ற எஸ்எஸ்எல்சி, மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை மொத்தம் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.
எஸ்எஸ்எல்சி தேர்வில் மொத்த தேர்ச்சி சதவீதம் 80.9 என்றும், இவர்களில் மாணவர்கள் 77.8 சதவீதம் என்றும், மாணவிகள் தேர்ச்சி 83.9 சதவீதம் என்றும் தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறினார்.
கணிதப் பாடத்தில் மொத்தம் 11,605 பேரும், அறிவியல் பாடத்தில் 1,591 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார். சமூக அறிவியல் பாடத்தில் மொத்தம் 272 பேர் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.
வழக்கம்போல் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தி : MSN
28 comments:
வாசகர்கள் இன்று என்ன செய்தியை எதிர்பார்ப்பார்கள் என்பதையறிந்து பத்தாம் வகுப்பு ரிசல்ட் தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளீர்கள். நானும் ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் உங்களை பாராட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தங்களது சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
/
சினிமா நிருபர் said...
வாசகர்கள் இன்று என்ன செய்தியை எதிர்பார்ப்பார்கள் என்பதையறிந்து பத்தாம் வகுப்பு ரிசல்ட் தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளீர்கள். நானும் ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் உங்களை பாராட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தங்களது சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
/
இருந்தபோதும் ஏன் கமெண்ட்டுகள் ஏன் தேறவில்லை என தெரியவில்லை நீங்கள் ஏன் என்னைப்போல படம் போட்டு கவுஜை எழுத முயற்சிக்க கூடாது!?!?
நானும் புனித இஞ்ஞாசியர் பள்ளியின்(பழைய) மாணவி என்பதில் மிக பெருமை அடைகிறேன்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் பள்ளி முதலிடம் வாங்கியதில் இன்னும் மகிழ்ச்சி!
செய்தியை விரைவாக வெளியிட்டமைக்கு வாழ்த்துகள்
புனித இக்னேஷியஸ் பள்ளி மாணவி
முதலிடத்தில் வந்திருப்பது பற்றி பெருமகிழ்ச்சி! அப்பள்ளியின் பழைய மாணவி என்ற முறையில். நான் அப்போது கணக்கில் 100/100 வாங்கினேனாக்கும்!!!
தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்ட் நம் பாளை!
அங்கு புனித இஞ்ஞாசியார் எமது பள்ளி!
பள்ளிக்குக் கிடைத்த பெருமையால் அதில்
கற்ற அனைவருக்கும் அளவிலா ஆனந்தம்!
வெற்றி கண்ட அனைவருக்கும்-குறிப்பாக
ராம் அம்பிகைக்கும் ராமஸ்வாதிகாவுக்கும்
ராமலக்ஷ்மியின் வாழ்த்துகள்-அங்கு
பயின்ற பழைய மாணவியர் சார்பிலும்
வலை உலகோர் சார்பிலும்!
தக்க சமயத்தில் தகவல் தந்த தமிழ்பிரியனுக்கு நன்றிகள் பல!
வெற்றியாளர் அனைவருக்கும் வாழ்த்துகள்!:)
குறிப்பாக, ராம் அம்பிகைக்கு. :))
நானானிக்கும் (சற்றுத்) தாமதமான வாழ்த்துகள்.:) நான் உங்கள விட 2 மார்க் கம்மி :-|
என்ன பொன் வண்டு, "பந்தியிலே பக்கத்து இலைக்குப் பாயாசம்" கேட்கிற மாதிரி நானானிக்கு வாழ்த்துச் சொல்லும் சாக்கில் உங்கள் மார்க்கையும் சைக்கிள் கேப்பில் நுழைத்து விட்டீர்களே! இருவருக்கும் வாழ்த்துக்கள்(என் மார்க் சொல்ல மாட்டேன்)!
ம.சிவா தம்பி, தமிழ் பிரியன் தங்கக் கம்பி, மாட்டி விடப் பாக்காதீங்க வம்பில்!
(ஆகா! அம்மா பேருன்னு சொன்னாலும் சொன்னோம்,
கிளம்பிட்டாங்கய்யா...ங்றீங்களா;-))!
கோகிலவாணி, நானானி, ராமலக்ஷ்மி-இன்னும் எத்தனை மாணவியரை இங்கு சந்திக்க வைத்துப் புண்ணியம் சேர்க்கப் போறீங்க ப்ரியன்?
///சினிமா நிருபர் said...
வாசகர்கள் இன்று என்ன செய்தியை எதிர்பார்ப்பார்கள் என்பதையறிந்து பத்தாம் வகுப்பு ரிசல்ட் தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளீர்கள். நானும் ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் உங்களை பாராட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தங்களது சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். ///
வாங்க நிருபரே! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
///மங்களூர் சிவா said...இருந்தபோதும் ஏன் கமெண்ட்டுகள் ஏன் தேறவில்லை என தெரியவில்லை நீங்கள் ஏன் என்னைப்போல படம் போட்டு கவுஜை எழுத முயற்சிக்க கூடாது!?!?///
அண்ணே! பாத்தீகல்ல... ஊர்க்காரவுக பின்னூட்டத்தை போட்டு தாக்கிப்புட்டாகல்ல... தமிழ் பிரியனா கொக்கா...... ;))
///கோகிலவாணி கார்த்திகேயன் said...
நானும் புனித இஞ்ஞாசியர் பள்ளியின்(பழைய) மாணவி என்பதில் மிக பெருமை அடைகிறேன்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் பள்ளி முதலிடம் வாங்கியதில் இன்னும் மகிழ்ச்சி! ///
அக்கா! முதல் இடமும் . மூன்றாம் இடமும் உங்க ஸ்கூல் தான். இன்னும் காலரைத் தூக்கி விட்டுக்குங்க... (ஓ.... காலர் கிடையாதுன்னா தலை நிமிர்ந்து பெருமையா நடங்கக்கா!)
//வேளராசி said...
செய்தியை விரைவாக வெளியிட்டமைக்கு வாழ்த்துகள் ///
நன்றி வேளராசி!... :)
///நானானி said...
புனித இக்னேஷியஸ் பள்ளி மாணவி
முதலிடத்தில் வந்திருப்பது பற்றி பெருமகிழ்ச்சி! அப்பள்ளியின் பழைய மாணவி என்ற முறையில். நான் அப்போது கணக்கில் 100/100 வாங்கினேனாக்கும்!!! ////
உண்மையாவாம்மா! பெருமை இருக்கும்மா! இனி மேலும் தழைக்க வாழ்த்துகிறேன்.
///ராமலக்ஷ்மி said...
தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்ட் நம் பாளை!
அங்கு புனித இஞ்ஞாசியார் எமது பள்ளி!
பள்ளிக்குக் கிடைத்த பெருமையால் அதில்
கற்ற அனைவருக்கும் அளவிலா ஆனந்தம்!
வெற்றி கண்ட அனைவருக்கும்-குறிப்பாக
ராம் அம்பிகைக்கும் ராமஸ்வாதிகாவுக்கும்
ராமலக்ஷ்மியின் வாழ்த்துகள்-அங்கு
பயின்ற பழைய மாணவியர் சார்பிலும்
வலை உலகோர் சார்பிலும்!
தக்க சமயத்தில் தகவல் தந்த தமிழ்பிரியனுக்கு நன்றிகள் பல///
நாங்கள் +2 படிக்கும் காலத்தில் (சமீபத்தில் தான் 1996 )பாளையங்கோட்டை கல்விக்கான கோட்டை என கேள்விப்பட்டுள்ளோம். அது மீண்டும் நிருபணமாகி உள்ளது.
///NewBee said...
வெற்றியாளர் அனைவருக்கும் வாழ்த்துகள்!:)
குறிப்பாக, ராம் அம்பிகைக்கு. :))
நானானிக்கும் (சற்றுத்) தாமதமான வாழ்த்துகள்.:) நான் உங்கள விட 2 மார்க் கம்மி :-| ///
வாங்க புது தேனீ! 98 மார்க் வாங்கினீங்களா? வெல்டன்... நான் வாங்கியது ரொம்ப கம்மிங்க அதனால சொல்ல முடியாது ;)))
///ராமலக்ஷ்மி said...
கோகிலவாணி, நானானி, ராமலக்ஷ்மி-இன்னும் எத்தனை மாணவியரை இங்கு சந்திக்க வைத்துப் புண்ணியம் சேர்க்கப் போறீங்க ப்ரியன்? ///
எல்லாம் ஒரே ஸ்கூலா? இனி கும்மிக்கு சொல்லவே வாண்டாம்.......;)))
///ராமலக்ஷ்மி said...
கோகிலவாணி, நானானி, ராமலக்ஷ்மி-இன்னும் எத்தனை மாணவியரை இங்கு சந்திக்க வைத்துப் புண்ணியம் சேர்க்கப் போறீங்க ப்ரியன்? ///
அக்கா ராம்லட்சுமி அக்கா! புண்ணியமெல்லாம் வேண்டாம். லண்டனில் வரும் போது ஒரு விசா கொண்டு வாங்க போதும்.... ;))
//அக்கா ராம்லட்சுமி அக்கா! புண்ணியமெல்லாம் வேண்டாம். லண்டனில் வரும் போது ஒரு விசா கொண்டு வாங்க போதும்.... ;))//
புரியலையே தம்பி! லண்டனுக்கும் எனக்கும் என்னா சம்பந்தம்? தற்சமயம் பெங்களூரில் அல்லவா வாசம்?!
///ராமலக்ஷ்மி said...
புரியலையே தம்பி! லண்டனுக்கும் எனக்கும் என்னா சம்பந்தம்? தற்சமயம் பெங்களூரில் அல்லவா வாசம்?!///
சாரிக்கா! கொஞ்சம் ஏமாந்திட்டேன்னு நினைக்கிறேன்.....அவ்வ்வ்வ்வ்
//United Kingdom West Sussex Crawley///
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
//நிஜமா நல்லவன் said...
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
//
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
வெற்றி பெறாதவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் :))
44-வருடங்களுக்கு முன் வாங்கிய
100/100-க்கு இப்போது வாழ்த்தா..?
ஓ....புல்லரிக்குது! புதுவண்டு! தமிழ்பிரியன்!!
மிக மிக தாமதமான வாழ்த்துக்கு
உடனடியா நன்றி சொல்கிறேன்.
98 மார்க் வாங்கிய புதுவண்டுக்கும் என்
வாழ்த்துக்கள்! தாமதமா அல்லது உடனடியா தெரியவில்லை!
'மேலும்மேலும் தளைக்க' என்றும் வாழ்த்தியிருக்கிறார்..புதுவண்டு. இனி எங்கே தளைக்க? அறுவடையெல்லாம் முடிந்த வயலாயிருக்கு. இப்போது தளைத்தது, துளிர்விட்டது எல்லாம் பதிவு போட ஆரம்பித்ததும்தான். இதில்தான் என்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன். ரிசார்ஜ் செய்துகொண்டுமிருக்கிறேன். மிக நீண்ட
பின்னோட்டமாகிவிட்டது. சா..ரி!!
இனிய வாழ்த்துகள் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற இரு மாணவரர்களுக்கும், மற்ற எல்லோருக்கும். (மாணவர்- மாணவன்/ மாணவி இரண்டையும் குறிக்கும் என்ற பொருளில்)
தமிழ்ப்ரியனுக்கு நன்றி
நானானி, ராமலஷ்மி,கோகிலவாணி, நானும் புனித இஞ்ஞாசியார் பள்ளி மாணவிங்க (10,11,12 ) அங்கதான் படிச்சேன்.
அட! வாங்க..!
யூ டூ மாதங்கி? ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு!!
வெற்றி பெற்ற எல்லோருக்கும் பாராட்டுக்கள் இன்னும் நிறைய வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்..
இன்னுமொன்று இந்த தேர்வில வெற்றி பெறாம போனவங்க நீங்க நினைச்சளவு புள்ளி கிடைக்கலைன்னு இருக்கிறவங்க தேர்வாகாம விட்டவங்க எல்லோரும் எதைப்பற்றியும் கவலைப்படாம உங்களுக்கான அடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்க...இது உங்களுக்கான இன்னொரு வாய்ப்பு என்று எடுத்துக்குங்க, நிறைய முயற்சி செய்யுங்க...
வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்...
தமிழ் பிரியன் சரியான நேரத்திலான பதிவு....
நம்ம ஊரிலயும் பொண்ணுங்கதான் நல்லா படிக்குதுங்கப்பா... பசங்கல்லாம் விட்டுக்குடுத்துடறாங்க....:)
Post a Comment