”என்னடா முனீர்? எப்படி இருக்க?”
ரொம்ப நாள் கழித்து நண்பனைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடன் ஒன்றாவது முதல் எட்டாம் வகுப்பு வரை படித்தவன் தான் முனீர். பல வருடங்களுக்குப் பிறகு பார்த்தாலோ என்னவோ அவனும் நெகிழ்ச்சியுடன் இருந்தான்.
”நல்லா இருக்கேன்டா! நீ எப்ப துபாயில் இருந்து வந்த?”
“வந்து ஒரு வாரம்தான்டா ஆச்சு! வந்ததில் இருந்து ஒரே அலைச்சல்டா! ஆமா நீ இப்ப என்ன வேலை செய்ற?
“என்னத்தடா சொல்ல... ஒன்பதாம் வகுப்பில் பெயிலானதும் படிப்பையும் விட்டாச்சு.இப்ப ஒரு ஸ்டியோவில் வேலை செய்றேன்.. என்னமோ வாழ்க்கை ஓடுதுடா” சொல்லி முடிப்பதற்குள் அவனது தர்மசங்கடமான நிலை நன்றாக விளங்கியது...
”சரிடா.. கொஞ்சம் அவசர வேலையாய் போறேன்.. அப்புறமா வீட்டுக்கு வர்ரேன்” பதிலுக்கு காத்திருக்காமல் விரைந்தான்....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
நாங்கள் படித்த அந்த காலம் ஒரு வசந்த காலம். நாங்கள் படித்தது ஒரு சிறிய நடுநிலைப்பள்ளி. ஐந்தாம் வகுப்பு வரை, ஒவ்வொரு வகுப்பிற்கும் மொத்தமே நான்கு வகுப்புகள். ஆறு முதல் எட்டு வரை இரண்டு வகுப்புகள் தான்... அதிலும் எட்டாவதில் இரண்டு வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் தான்... மாணவர்களுக்கும். மாணவிகளுக்கும் தனித்தனியாக வருகைப் பதிவேடு இருந்தாலும் ஒன்றாகவே பாடம் நடக்கும். அதுவரை மாணவர்களும், மாணவிகளும் தனித்தனியாக படித்து விட்டு எட்டாவதில் ஒன்றாக படிக்கும் போது பசங்களின் அலட்டல் கரை புரண்டு ஓடும். நானெல்லாம் அப்பொழுதே அப்பாவி. சைட் அடிக்கக் கூடத் தெரியாது. அதனாலோ என்னவோ மாணவிகளின் சப்போர்ட் அதிகம்.. மாணவர்கள் மொத்தமே 18 பேர் தான்... மாணவிகள் 32 பேர் வரை இருந்ததாய் ஞாபகம்.
நானும் முனீரும் ஒன்றாகவே படித்து வந்ததால் அடிக்கடி சண்டைகளும், அதை மீறி ஆழமான நட்பும் இருந்தது. முனீரின் அப்பா வெளிநாட்டில் இருந்தார். அப்போதே அவன் டீசர்ட், ஜீன்ஸ் எல்லாம் அணிவதை ஏக்கத்துடன் பார்த்துக் கொள்வோம்.
இருவரும் நன்றாகவே படிப்போம்... நான் மூன்று ரேங்குக்குள் வந்தால் அவன் 6,7 என்று பிடித்து விடுவான். அது அப்போது தான் எட்டாம் வகுப்பில் சேர்ந்திருந்த நேரம். எட்டாவதில் எங்களது ஆசிரியை முத்துலட்சுமி. பல ஆண்டுகளாக அந்த பள்ளியில் வேலை செய்கிறார். எட்டாவது டீச்சர் என்றால் அந்த ஏரியாவில் அனைவருக்கும் தெரியும்.
எட்டாம் வகுப்பு ஆரம்பமான உடன் டீச்சர் தான் டியூசன் நடத்துவதைக் கூறி விருப்பமுள்ளவர்கள் சேரலாம் என்றார். நமக்கு இந்த டியூசனெல்லாம் படிக்க வீட்டில் டப்பு கிடைக்காது என்பதால் அதைப் பற்றிய கவலையே இல்லை. முனீர் முதல் ஆளாக டியூசனில் சேர்ந்து விட்டான். அவனுடன் இன்னும் சில மாணவர்களும், சில மாணவிகளும் சேர்ந்திருந்தனர்.
அப்போதெல்லாம் மாதத் தேர்வுகள், காலாண்டு, அரையாண்டு, மற்றும் இறுதி ஆண்டுத் தேர்வுகள் இருக்கும். முதல் மாதத் தேர்வுகள் முடிவு வந்தபோது பரபரப்பாக இருந்தது. அனைத்து பாடங்களிலும் முனீருக்கே முதலிடம்... எனக்கு இரண்டாவது ரேங்கே கிடைத்தது. எனக்கு இரண்டாம் இடம் கிடைத்ததில் மகிழ்ச்சிதான் என்றாலும் முனீருக்கு முதலிடம் கிடைத்தில் கொஞ்சம் கோபமும் இருந்தது. அடுத்த தேர்வில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்...அடுத்தடுத்த தேர்வுகளிலும் முனீருக்கு முதல் ரேங்கும் எனக்கு இரண்டாவது ரேங்குமே கிடைத்தது. கல்பனா, ஜெரீனா இருவரும் டீச்சர் முனீருக்கு முதலிலேயே கொஸ்டீன் பேப்பரை தருவதாகக் கூறியது வேறு எனக்கு கோபத்தை அதிகரித்தது. அரையாண்டுத் தேர்வில் மூன்று மதிப்பெண்கள் வித்தியாசத்தில் எனக்கு இரண்டாவது ரேங்க்கே. அதுவும் கணக்குப் பாடத்தில் டிட்டோ(”) போட்டு கணக்கு எழுதியதற்க்கு ஐந்து மார்க் குறைத்திருந்தது வெறுப்பையேத் தந்தது.
ஆண்டு இறுதித் தேர்வுக்கு முன் எங்கள் ஊரில் உள்ள தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ் பாடத்திற்கு மட்டும் சிறப்பு தேர்வு நடக்கும். தமிழ்ச்சங்கத்தினரால் எட்டாம் வகுப்பு பாடத்தில் இருந்து வினாத்தாள் தயாரிக்கப்பட்டு அங்கேயே விடைத்தாளும் திருத்தப்படும். அதில் ஊரில் உள்ள அனைத்து எட்டாம் வகுப்பு மாணவர்களும் பங்கு பெறுவர். எங்கள் பள்ளியில் இருந்தும் அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். அதன் முடிவு வந்தது தான் வித்தியாசமாக இருந்தது. எங்கள் பள்ளியிலேயே சாஜிதா என்ற மாணவிக்கு முதல் மதிப்பெணும், எனக்கு இரண்டாவது மதிப்பெண்ணும் கிடைத்திருந்தது. முனீர் 50க்கும் குறைவான மதிப்பெண்களையே பெற்றான். அப்படியே எட்டாம் வகுப்பு முடிந்து விட மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டோம். முனீரும், நானும் வேறு வேறு வகுப்புகளில் படித்தோம். முனீர் ஒன்பதாம் வகுப்பில் சரிவர மார்க் எடுக்க முடியாமல் பெயிலாகி விட்டான். இப்போது ஸ்டுடியோவில் வேலை செய்கிறான்.... நினைத்துக் கொண்டிருக்கும் போதே கண்ணில் இருந்து கண்ணீர் துளி ஒன்று வெளியேறியதைத் தடுக்க இயலவில்லை.
இது வருத்தப்படாத வாலிபர் சங்க இரண்டாம் ஆண்டு போட்டிக்கு
19 comments:
முதல் முறையாக புனைவாக எழுத முயற்சித்தது. ஒரு ‘மாதிரியாக' வந்துள்ளது. எனவே தவறு இருந்தால் மன்னிக்கவும்.
///நாங்கள் படித்த அந்த காலம் ஒரு வசந்த காலம்.///
நாங்க படிச்சதும் தான்.
///நானெல்லாம் அப்பொழுதே அப்பாவி.///
ஹையோ...ஹையோ....
//நானெல்லாம் அப்பொழுதே அப்பாவி. சைட் அடிக்கக் கூடத் தெரியாது. ///
உங்களுக்காவது அப்பொழுது சைட் அடிக்க தெரியாது எனக்கோ இன்னும் இப்பவும் கூட அந்த வார்த்தைக்கு கட்டுமான தளம் என்றுதான் தெரியும் :)))
///அதுவும் கணக்குப் பாடத்தில் டிட்டோ(”) போட்டு கணக்கு எழுதியதற்க்கு ஐந்து மார்க் குறைத்திருந்தது வெறுப்பையேத் தந்தது.///
அது என்னன்னே தெரியல டிட்டோ போட்டோம்னா கணக்கு வாத்தியாருக்கு கண்ணு மண்ணு தெரியாத கோவம் வந்துடும்.
//கணக்குப் பாடத்தில் டிட்டோ(”) போட்டு கணக்கு எழுதியதற்க்கு ஐந்து மார்க் குறைத்திருந்தது வெறுப்பையேத் தந்தது//
செஞ்சது தப்பு
இது எதுக்கு வெறுப்பு?
(நானெல்லாம் அரையாண்டு தேர்வில் டிட்டோ போட்டு கணக்கு போட்டதற்கு பிரம்படியெல்லாம் வாங்கியிருக்கேனாக்கும்!)
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
முதல் முறையாக கதை மாதிரி....
வாழ்த்துகள் தமிழ் பிரியன்...
Senthil,
Bangalore..
தமிழ் பிரியன் நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
எல்லாருக்குமே அவர்கள் படித்த காலத்தில் இது போன்ற சுவாரஸ்யமான விசயங்கள் இருக்கும்
/
நிஜமா நல்லவன் said...
///நானெல்லாம் அப்பொழுதே அப்பாவி.///
ஹையோ...ஹையோ....
/
ரிப்பீட்டேய்
/
ஆயில்யன். said...
//நானெல்லாம் அப்பொழுதே அப்பாவி. சைட் அடிக்கக் கூடத் தெரியாது. ///
உங்களுக்காவது அப்பொழுது சைட் அடிக்க தெரியாது எனக்கோ இன்னும் இப்பவும் கூட அந்த வார்த்தைக்கு கட்டுமான தளம் என்றுதான் தெரியும் :)))
/
ரிப்பீட்டேேஏஏஏஏஏஏஏஏஏஏஏய்
:)
:(
நீங்க எது எழுதினாலும் அதுல ஒரு தனித்துவம் தெரியுது.
முயற்சிக்கு பாராட்டுக்கள் .
-Anbezhilan
பரவாயில்லை நல்லாத்தான் எழுதுறீங்க
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்
//நானெல்லாம் அப்பொழுதே அப்பாவி. சைட் அடிக்கக் கூடத் தெரியாது.//
அடடா.. நெசமாவே நம்பிட்டோம் மாப்பி.:P
//சைட் அடிக்கக் கூடத் தெரியாது. அதனாலோ என்னவோ மாணவிகளின் சப்போர்ட் அதிகம்..//
அவ்வ்வ்வ்வ் ..என்னா டிரிக்கு? என்னா டிரிக்கு:P
//அதுவும் கணக்குப் பாடத்தில் டிட்டோ(”) போட்டு கணக்கு எழுதியதற்க்கு ஐந்து மார்க் குறைத்திருந்தது வெறுப்பையேத் தந்தது//
//சாஜிதா என்ற மாணவிக்கு முதல் மதிப்பெணும், எனக்கு இரண்டாவது மதிப்பெண்ணும் கிடைத்திருந்தது. முனீர் 50க்கும் குறைவான மதிப்பெண்களையே பெற்றான்.//
இது கற்பனைக் கதைப்போல தெரியலையே. அனுபவ நிகழ்ச்சியோ?
நல்லா வந்திருக்கு,. நிறைய தொடருங்க:)
//ஒவ்வொரு வகுப்பிற்கும் மொத்தமே நான்கு வகுப்புகள். //
ஒவ்வொரு வகுப்பிற்க்கும் நான்கு பாடங்கள்ன்னு சொல்லலாம்ல்ல..:)
Post a Comment