Tuesday, August 11, 2009

பாரி ஒரு நிஜமான வள்ளலா? பா.கே.ப

கேட்டது:

இரண்டு நண்பர்களின் விவாதத்தைக் கேட்க நேர்ந்தது. விவாதம் WI-FI எனப்படும் கம்பி இல்லாத இணைய தொடர்பு பற்றியது. இங்கு WI-FI தொழில்நுட்பம் பெருமளவு பயன்படுத்தப் படுகின்றது. இப்போது கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான DSL மோடம்களில் ஒயர்லெஸ் வசதியும் இணைந்தே இருக்கின்றது.

WI-FI மூலம் பெரிய ஹோட்டல்களில், ஷாப்பிங் மால்களில், விமான நிலையங்களில் இலவசமாக இணைய இணைப்பு வழங்குவது அதிகரித்து வருகின்றது. அதே நேரம் ஒயர்லெஸ் வசதியுள்ள மோடம்களை வாங்கி பயன்படுத்தும் சாமானியர்களில் இணைய வசதியும் வெளியே கசிகின்றது. இதன் அலைநீளம் அவர்களை சுற்றி சில மீட்டர்கள் தூரம் வரை செல்கின்றது. இதை தடை செய்வது பற்றி விவரம் குறைவானவர்களில் இணைய வசதியை அவரது வீட்டைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

விவாதம் பெரிய அளவில் WI-FI வசதியை அளிப்பதைப் பயன்படுத்துவதைப் பற்றி அல்ல. தனது சுய பயன்பாட்டுக்கு மற்றவர்கள் வைத்து இருக்கும் இணையத்தை அவருக்குத் தெரியாமல் பயன்படுத்துவது குறித்து தான். ஒருவர் “இலவசமாக நம்மைத் தேடி காற்றில் வருகின்றதைத் தான் பயன்படுத்துகின்றோம். ஊரில் கசியும் கேபிள் டீவி சிக்னலை பயன்படுத்திக் கொள்வது போல் தான். இதில் தவறேதுமில்லை” என்கின்றார்.

மற்றவர் “இது சரியாகாது. அவர்களது இணைய இணைப்பிற்கு அவர் பணம் செலுத்துகின்றார். அவரது இணைய பயன்பாட்டு அளவில் கணிசமானதை நீங்கள் பயன்படுத்திக் கொள்கின்றீர்கள். நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அவரது இணைய இணைப்பின் வேகமும் பாதிக்கபடும்.” என்று விவாதம் செய்தார்.

இரண்டாமவர் சொல்லும் கருத்தோடு நான் ஒத்துப் போனேன். மற்றவர்களில் இணைய Bandwith ஐ அவருக்கு தெரியாமல் பயன்படுத்துவது, வீடு திறந்திருக்கின்றது என்பதற்காக அதனுள் நுழைந்து திருடுவது போன்றது.

படித்தது….

சீரியஸா அதை யோசிச்சுக்கிட்டே இருங்க… நான் உங்களை ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்கின்றேன். வினாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் என்னோடு கற்பனைக் குதிரையில் பிரயாணித்து பின்னோக்கி வாருங்கள். (நன்றி:கல்கி) நாம் இப்போது ஒரு மலையடிவாரத்தில் இருக்கின்றோம். மலை தெரிகின்றதா? கரடு முரடான மலை. அங்காங்கே தேனடைகள் தெரிகின்றதா? நாம் இருக்கும் இடம் பறம்பு மலை என்று சொல்லப்படும் பிரான்மலை. மேலே தெரிகின்றதே அந்த கோட்டையில் தான் பாரி என்று சொல்லப்படும் கடையேழு வள்ளல்களில் ஒருவர் இருக்கின்றார்.

மலையேறி அவரைப் பார்க்க முடியாது நம்மால.. எப்படியும் 7, 8 மி.மீ தூரம் நடக்கனும். அதெல்லாம் கவைக்கு உதவாது... இருங்க.. ஏதோ சத்தம் கேட்கிறதே.. என்னது? அட ஆமா.. குதிரைகளின் கனைத்தல்களும், யானைகளின் கேட்கின்றனவா? பாரியின் இந்த பறம்பு மலையை மூவேந்தர்களும் முற்றுகை இட்டு இருக்கின்றார்கள். அவர்களுக்குள் ஏதோ ஒரு பகை. பாரியை முற்றுகை இட்டு, எந்த உணவுப் பொருளும் மேலே செல்ல விடாமல் அக் குறிஞ்சி நில மக்களை பட்டினியால் அடக்க நினைக்கின்றனர்.

சரி.. மலையைப் பார்த்தது போதும். வாங்க நிகழ்காலத்திற்கு செல்லலாம். நம்ம கணிணியை திறந்து இணையத்திற்குள் தேடலாம். இது பற்றி.. நம்ம கூடல் குமரன் ஐயாவோட உடுக்கை இழந்தவன் கை என்ற பாரியின் கதையைப் படிக்கலாம். இது புறநானூற்றின் ஒளியில் எழுதப்பட்டுள்ளது. அதில் கபிலர் இதைப் பற்றி என்ன சொல்றாருன்னா…

அளிதோ தானே பாரியது பறம்பே
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே


இன்னா சொல்ல வருகிறார்ன்னா.. நீங்க மூவேந்தரும் என்ன செஞ்சாலும் இந்த மலையில் இருந்து அவர்களை கீழே வர வைக்க முடியாது. அதே போல் நீங்களும் இந்த மலை மேல ஏறிப் போய் போரிடவும் முடியாது. மலை முற்றுகை பட்டினிக்கும் வழி வகுக்காது. ஏன்னா இந்த மலையில் உழவர்களால் உழாமலேயே கிடைக்கக் கூடிய நான்கு உணவுப் பொருள் சுலபமா கிடைக்குது. 1. சிறிய இலையை உடைய மூங்கில் மரத்தில் வளர்க்கப்படும் நெல் 2. பலாப் பழங்கள் 3. வள்ளிக் கிழங்கு 4. தேன்.

இத்தோட முடிச்சிக்கலாம்… இப்ப என்ன பிரச்சினைன்னா வேற சில மேற்கோள்களில் முற்றுகையின் போது கபிலர் பழக்கப்படுத்த கிளிகளைப் பயன்படுத்தி விவசாய நிலங்களில் இருந்து தானியங்களை கொய்து வரச் செய்து, உணவு உண்டாதாக வருது. நிறைய இடங்களில் இது மாதிரி படித்து இருக்கேன். கபிலரே தெளிவாக சொல்லி இருக்கிறார். இந்த நான்கு வகை உணவுகளை வைத்து வாழ்கிறோம் என்று..

பாரி அள்ளி அள்ளித் தரும் வள்ளல். அவன் தனது கோட்டை மக்களுக்கு கிளிகள் திருடி வரும் உணவை எப்படி வழங்கி இருப்பான்? லாஜிக் உதைக்குதே… கபிலர் சொன்னது சரின்னா… இந்த கிளி மேட்டரு தப்பு. கிளி மேட்டரும் சரின்னா பாரி செய்தது ஏமாற்று வேலை அல்லது திருட்டுத்தனம். (கிளி மேட்டருக்கு தரவு இருந்தா கொடுங்க மக்களே)

கிளிகள் திருடி வருவது பாரியின் ஆளுகைக்கு உட்பட்ட நிலம்ன்னு யாரும் ஜால்ஜாப்பு சொல்ல முடியாது. ஏன்ன அது பற்றி கபிலர் இப்படிச் சொல்கிறார்.

கடந்தடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினர் செலினே"


அவனது ஆளுகையில் இருந்த 300 ஊர்களையும் ஏற்கனவே பரிசிலர்களுக்கு பாரி தானமாக வழங்கி விட்டான். மிச்சம் இருப்பது இந்த மலையும், நானும், பாரியும் தான் என்கிறார் கபிலர்.

கிளி மேட்டர் பலர் மேற்கோள் காட்ட படித்து இருக்கிறேன். இணையத்தில் தேடியதில் கிடைத்ததில் எடுத்துக்காட்டு இரண்டு.

http://www.nilacharal.com/tamil/research/tamil_literature_233.asp


http://www.dinamalar.com/siruvarmalar/smrjuly_0407/minithodar.asp


இது குறித்து தெரிந்தவர்கள் விளக்குங்கள்...

பார்த்தது:

லக்! (Luck)செம லக்குங்க.. உலகத்தில் சிலருக்கு தான் அதிர்ஷ்டக் காத்து எப்பவுமே அடிக்கும். அப்படிப்பட்ட சிலரை தேர்ந்தெடுத்து மோத விடுவது தான் படம். சும்மா ஜெட் வேகத்தில் போகுது. வழக்கம் போல நம்ம சஞ்சூ பாபா கலக்கி இருக்கார். சிக்ஸ் பேக், செவன் பேக் எல்லாம் காட்டல.. ஆனா கலக்குறார். சும்மா குர்தா, பைஜாமா, கோட் போட்டுக்கிட்டு நடந்து வருவதைக் காண கண் கோடி வேண்டும்.



இம்ரான் கானுக்கு பதிலா வேற யாருக்கு அந்த கதாபாத்திரத்தைக் கொடுத்து இருக்கலாம். சொதப்பிட்டார். ஸ்ருதி ஹாசன். நம்ம கமல் பொண்ணு. முக சாயலைத் தவிர வேற ஒன்னும் கமலிடம் இருந்து வரவில்லை. முக்கியமா நடிப்பு.

ஸ்ருதி நீச்சல் குளத்தில் இருந்து வரும் போதும், இன்னும் சில காட்சிகளிலும் பார்க்கும் போது ஏனோ பரிதாப உணர்ச்சி தான் வந்தது. வேற ஏதும் தோணலை.

லக்கியின் விமர்சனத்தையும் படிக்கலாம்.

29 comments:

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/வினாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் என்னோடு கற்பனைக் குதிரையில் பிரயாணித்து என்னோடு வாருங்கள். (நன்றி:கல்கி) நாம் இப்போது ஒரு மலையடிவாரத்தில் இருக்கின்றோம். மலை தெரிகின்றதா? கரடு முரடான மலை. அங்காங்கே தேனடைகள் தெரிகின்றதா?/


தல இதுக்கு மேல உங்க கூட வரமுடியாது.....நான் தேன் எடுக்க போறேன்:)

நிஜமா நல்லவன் said...

/வினாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் என்னோடு கற்பனைக் குதிரையில் பிரயாணித்து என்னோடு வாருங்கள்/

முன்னோக்கியா இல்ல பின்னோக்கியான்னு சொல்லவே இல்லையே...பாரிய பார்க்க பின்னோக்கி தானே போகணும்:))))

நிஜமா நல்லவன் said...

/மலையேறி அவரைப் பார்க்க முடியாது நம்மால.. எப்படியும் 7, 8 மி.மீ தூரம் நடக்கனும். /

போறதே கற்பனை குதிரைல...அப்புறம் ஏன் தல நடக்க உடுறீங்க....அப்படியே போகவேண்டியது தானே???

Thamiz Priyan said...

தல... எப்படியோ மொக்கை ஆளுங்க தான் படிக்கப் போறோம்... இலக்கியம் பேசறவங்க எப்படியும் இங்க வர மாட்டாங்க... அதனால இப்படி எல்லாம் யோசிக்காதீங்க... :-))

நிஜமா நல்லவன் said...

/பாரியை முற்றுகை இட்டு, எந்த உணவுப் பொருளும் மேலே செல்ல விடாமல் அக் குறிஞ்சி நில மக்களை பட்டினியால் அடக்க நினைக்கின்றனர்.

சரி.. மலையைப் பார்த்தது போதும். வாங்க நிகழ்காலத்திற்கு செல்லலாம்/

தல மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு...அந்த மக்கள் எல்லாம் என்ன ஆனாங்க....எதுவும் சொல்லாம நிகழ் காலத்துக்கு வாங்கடான்னு சொன்னா என்ன அர்த்தம்? யாரும் ஏதும் கேக்க மாட்டாங்கன்ற மமதையா? விடமாட்டேன் உங்களை....ஒழுங்கா பதிலா சொல்லுங்க...சும்மா இருந்த எங்களை குதிரை கற்பனைன்னு சொல்லிட்டு இப்படி நட்டாத்தில் விடுறீங்களே:(

நிஜமா நல்லவன் said...

/கபிலர் சொன்னது சரின்னா… இந்த கிளி மேட்டரு தப்பு. கிளி மேட்டரும் சரின்னா பாரி செய்தது ஏமாற்று வேலை அல்லது திருட்டுத்தனம்./

ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்...இலக்கியம் படிச்சா அனுபவிக்கனும்யா...இப்படி எல்லாம் யோசிச்சா உங்களுக்கு தலைக்கு மேல நடந்தது தான் எல்லோருக்கும் நடக்கும்....நான் வரல இந்த விளையாட்டுக்கு:)))

யாத்ரீகன் said...

இப்படி இணைப்பை கடவுச்சொல் குடுத்து பாதுகாக்கலைனா, யார் வேண்டுமானாலும் அதில் நுழைந்து என்ன வேணாலும் பண்ணீட்டு போகலாம் .. கடைசியில் IP வச்சு தொடர்ந்து வந்த அந்த இணைப்பின் உரிமையாளர்தான் மாட்டுவார்.. இந்தியாவில் நடந்த சில குண்டு வெடிப்புகளில் சில இடங்களில் இப்படி இணையத்தை பயன்படுத்தி மிரட்டல் எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பிய சதிச்செயல்களும் நடந்துள்ளது ..

நிஜமா நல்லவன் said...

கிளியை வச்சி எவ்ளோ பேருக்கு நெல்லு கொண்டு வந்து சோறு போட முடியும்....இப்ப வீட்டில் சோறு போடலைன்னா நாங்கல்லாம் காற்றை சுவாசிச்சே வாழ்ந்திடுவோம்னு சவால் விடுறதில்லையா....அதுமாதிரி சும்மனாச்சுக்கும் கபிலர் சொல்லி இருப்பாரு...அதுக்காக்காக நீங்க எப்படி பாரிய குற்றம் சொல்ல துணியலாம்?

நட்புடன் ஜமால் said...

WI-FI மேட்டர் ரொம்ப யோசிக்க வைக்குது.

நிஜமா நல்லவன் said...

/ஸ்ருதி நீச்சல் குளத்தில் இருந்து வரும் போதும், இன்னும் சில காட்சிகளிலும் பார்க்கும் போது ஏனோ பரிதாப உணர்ச்சி தான் வந்தது. வேற ஏதும் தோணலை./


வேற ஏதாவது தோணுதான்னு நாங்க யாராவது கேட்டோமா???ஏன் தல நீங்களே வந்து வலைல விழுறீங்க:)))))

ஆயில்யன் said...

//மற்றவர் “இது சரியாகாது. அவர்களது இணைய இணைப்பிற்கு அவர் பணம் செலுத்துகின்றார். அவரது இணைய பயன்பாட்டு அளவில் கணிசமானதை நீங்கள் பயன்படுத்திக் கொள்கின்றீர்கள். நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அவரது இணைய இணைப்பின் வேகமும் பாதிக்கபடும்.” என்று விவாதம் செய்தார்///

உண்மை !

நானெல்லாம் செக்யூர் பண்ணிக்கிட்டு நான் மட்டும் தான் யூஸ் பண்றேனாக்கும் :)

கானா பிரபா said...

சுய பயன்பாட்டுக்கு மற்றவர்கள் வைத்து இருக்கும் இணையத்தை அவருக்குத் தெரியாமல் பயன்படுத்துவது குறித்து தான். //

Wi Fi இணைப்பில் மற்றவர் சுருட்டாமல் இருக்க வீட்டில் இருக்கும் வயர்லெஸ் இணைப்பில் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாக்கலாம்.

பாரி மேட்டர் கலக்கல்.
லக் - சுருதிக்கு பேட் லக் போல

வால்பையன் said...

வரலாறு என்பது புனைவால் புனையப்பட்ட புனைவு!

அல்லது மிகைப்படுத்தப்பட்ட உண்மை!

ராமலக்ஷ்மி said...

WIFI பற்றி சொல்லியிருப்பது உண்மை. இது குறிப்பாக அப்பார்ட்மெண்ட்களில் சர்வசாதாரணமாய் செய்து வந்தார்கள் ஆரம்பத்தில். எங்கள் இணைப்புத் தவறாகப் பயன்படுத்தப் பட்டு மிகப் பெரிய தொகைக்கு பில் வந்தது. பி.எஸ்.என்.எல் புரிதலுடன் சிறுதொகை வசூலித்து உடனடியாக செக்கியூர்ட் இணைப்புக்கு அன்றே ஏற்பாடும் செய்து தந்தார்கள்.

wifi பற்றியல்ல, bsnl பிரச்சனையை தீர்த்தவிதம் பற்றி முன்பே உங்கள் பதிவொன்றில் விரிவாகப் பின்னூட்டமிட்டிருந்தேன். சிரமப்பட்டு எந்தப் பதிவென கண்டும் பிடித்ததால் ஒரு முறை பார்க்கவும்:)!
http://majinnah.blogspot.com/2008/08/vs.html

Anonymous said...

//மற்றவர்களில் இணைய Bandwith ஐ அவருக்கு தெரியாமல் பயன்படுத்துவது, வீடு திறந்திருக்கின்றது //

பாஸ்வேர்ட் குடுத்டு செக்யூர்டா இப்பல்லேம் இருக்கே.
பாரி கதை அருமை.

சுசி said...

கேட்டது:
நல்ல விஷயம்.
படித்தது:
எனக்கு இன்னைக்கும் பசங்களுக்கு ஒரு கதை மாட்டிக்கிச்சு. இதெல்லாம் படிக்க எப்டீங்க உங்களுக்கு நேரம் கிடைக்குது?
பார்த்தது:
இந்த ஸ்ருதிப் பொண்ணு இப்டியா உங்கள ஏமாத்துவா?

Unknown said...

நண்பா, இந்த WiFi மேட்டர் - பொதுவாக இணைய இணைப்பு கொடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து மோடம் வாங்கும்போது அவர்களே கடவுச்சொல் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால், கணினி அறிவு சரிவர இல்லாமல் தானாக மோடம் வாங்கி வைத்துக்கொள்பவர்களுக்கு தான் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இது எவ்வளவு பெரிய பிரச்சனையில் கொண்டு போய் விடும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. உதாரணமாக, ஒருவர் கடவுச்சொல் இல்லாத மோடம் உபயோகிக்க - அவர் வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு வேறு யாரோ ஒருவர் கூட இவரது இணைய தொடர்பை உபயோகிக்க முடியும். அப்படி உபயோகிப்பவர் ஒரு தீவிரவாதியாக இருந்து, அவர் அரசுக்கு எதாவது மின்னஞ்சல் அனுப்பி இருந்தால் - முதலில் விசாரணையில் மாட்டுவது நம்மாளாக தான் இருப்பார்.

விவாதத்தில் நான் முதலாமவர் கட்சி - நான் உங்க அளவுக்கு நல்லவனெல்லாம் இல்லைங்க :-). எனக்கென்று சொந்தமாய் ஓர் இணையத்தொடர்பு வச்சிருக்கேன். அது வேலை செய்யாதப்போ இப்படி காற்றில் கிடைப்பதை உபயோகிச்சுப்பேன்.

Unknown said...

பின்னூட்டங்களை படிக்காம பின்னூட்டம் போட்டா இப்படி தான் - நான் வழவழ கொழகொழன்னு சொன்ன மேட்டரை நச்சுன்னு நாலே வரில நம்ம யாத்ரீகன் சொல்லிட்டாரு

தமிழன்-கறுப்பி... said...

எழுதணும்னு உக்காருங்க தல..

தமிழன்-கறுப்பி... said...

ஆமா யானை பிளிறும் என்பதை மறந்து போயிருந்தேன்.

;)

தமிழன்-கறுப்பி... said...

அப்புறம் சுருதி படம் போடாம சுருதி பற்றி பதிவெழுதியதற்கு கண்டனம்.

:))

பீர் | Peer said...

பாரி வள்ளலா இல்லையா தெரியாது, ஆனா நீங்க வள்ளல்ன்னு தெரியும்.

பதி said...

Wi Fi இணைப்பை பாதுகாக்க கடவுச் சொல் பயபடுத்தலாம். அது வேறு பல சிக்கல்களிலிருந்தும் நம்மைக் காக்கும்...

பாரி விசயம் உண்மையிலேயே யோசிக்க வைத்தது. யாரவது விசயம் தெரிஞ்சவங்க விளக்கினால் தெரிந்து கொள்ளலாம்.

Unknown said...

ஸ்ருதி நீச்சல் குளத்தில் இருந்து வரும் போதும், இன்னும் சில காட்சிகளிலும் பார்க்கும் போது ஏனோ பரிதாப உணர்ச்சி தான் வந்தது. வேற ஏதும் தோணலை./

enakku vaera உணர்ச்சி than. enna panurathu.

Thamira said...

கே : என்ன கொடுமை தமிழ் இது.! (டெக்னலஜிக்கு)
ப : என்ன கொடுமை தமிழ் இது.! (கிளிக்கு)
பா : என்ன கொடுமை தமிழ் இது.! (ஸ்ருதிக்கு)

Sanjai Gandhi said...

hmmmmmm

மங்களூர் சிவா said...

/
ஆதிமூலகிருஷ்ணன் said...

கே : என்ன கொடுமை தமிழ் இது.! (டெக்னலஜிக்கு)
ப : என்ன கொடுமை தமிழ் இது.! (கிளிக்கு)
பா : என்ன கொடுமை தமிழ் இது.! (ஸ்ருதிக்கு)
/

ஒரு கொடுமையான ரிப்பீட்டு போட்டுக்கிறேன்
:)

arul said...

/ஒயர்லெஸ் வசதியுள்ள மோடம்களை வாங்கி பயன்படுத்தும் சாமானியர்களில் இணைய வசதியும் வெளியே கசிகின்றது. இதன் அலைநீளம் அவர்களை சுற்றி சில மீட்டர்கள் தூரம் வரை செல்கின்றது. இதை தடை செய்வது பற்றி விவரம் குறைவானவர்களில் இணைய வசதியை அவரது வீட்டைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்./

ippathan ippadi oru visayam irukkirathe theriuthu