Thursday, February 11, 2010

வேங்கையின் மைந்தன், Apocalypto, கீரைக்காரன்

கேட்டது.

என்னுடன் வேலை செய்யும் ஒரு பணியாளர் இந்திய-நேபாள எல்லையைச் சேர்ந்தவர். அவர்களது மொழி மைதிலி எனப்படும் ஒருவகை ஹிந்தி.. போஜ்பூரி போல... ஆனா போஜ்பூரியை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். ஆனா மைதிலி கஷ்டம்.. :( அது இருக்கட்டும்.... கொஞ்சம் கிராமத்து ஆள் மாதிரி.. விவசாயம், ஆடு,மாடு மேய்ப்பது என்று இருந்தவன். பால்ய விவாகம் செய்யும் வழக்கம் உள்ள கிராமங்கள் அவை. அவனுக்கும் சிறு வயதில் திருமணம் வேறு ஆகி இருக்கின்றது.

ஒரு முறை வழக்கம் போல் மாடு மேய்க்கச் சென்று இருக்கின்றான். ஊருக்கு வெளியே காட்டுப்பகுதிகளில் மாடு மேய்த்துக் கொண்டு இருக்கும் போது ஒரு வயலில் நல்ல கீரை(பாலக்) விளைந்து இருந்திருக்கின்றது. பையனுக்கு பார்த்ததும் கை அரிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நைசாக தோட்டத்திற்குள் இறங்கி கீரையை பறிக்க ஆரம்பித்து இருக்கின்றான். திடீரென்று எங்கிருந்தோ ஒரு இளம்பெண் வந்து இவனை வளைத்துக் கொண்டாள். அவள் அந்த தோட்டத்தின் உரிமையாளரின் மகள்.

இவனைப் பிடித்துக் கொண்டு கூச்சல் போட மாடுகளை விட்டு விட்டு ஓட முடியாத சூழலால் அமைதியாக இருந்து விட்டான். அவளது கூச்சலைக் கேட்டு பலரும் ஓடி வர இவன் மரத்தில் கட்டி வைக்கப்பட்டான். அங்கு வந்த உரிமையாளர் இவனைக் குறித்து விசாரிக்க தனது கிராமத்தின் பெயரை சொல்லி இருக்கின்றான். வரிசையாக தெரு, வீடு, அப்பா பெயர் , தன் பெயர் எல்லாம் சொல்ல அந்த தோட்டக்காரர் அவன் பறித்த கீரையுடன் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து அவனை நல்லபடியாக வழி அனுப்பி வைத்தாராம்.. ஏன் என்று யோசிங்க பார்க்கலாம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


படித்தது:

வரலாற்று நாவல்கள் படிப்பதில் எப்பவுமே ஒரு அலாதி இன்பம் இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் படித்தது அகிலன் எழுதிய ‘வேங்கையின் மைந்தன்’.

இது இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றது. பதிவிறக்கி படித்துக் கொள்ளலாம். http://www.scribd.com/document_downloads/24812602?extension=pdf
நன்றி : பிகேபி வலைப்பதிவு

இதுவும் வழக்கமான ஒரு சோழப் புகழ் பாடும் நாவல்தான். பொன்னியின் செல்வனின்(இராஜராஜ சோழன்) மகனான வேங்கையின் மைந்தன்(இராஜேந்திர சோழன்) பற்றியது. பொன்னியின் செல்வனோடு ஒப்பிடும் அளவில் இல்லையென்றாலும், படிக்க சுவாரஸ்யமாகத் தான் இருந்தது. பொன்னியின்செல்வனில் வந்தியதேவன் கதாநாயகன் என்றால் இங்கு இளங்கோவேள் என்ற கொடும்பாளூர் இளவரசன்.

இராஜேந்திரரும் கொஞ்ச வயசானவராக இருக்கின்றார். வழக்கமான தமிழ் ஹீரோ போன்ற அதி புத்திசாலி அரசர்.. அவருக்கு உறுதுணையாக சில அரசியல் வீர வீத்தகர்கள். வந்தியதேவன் இருக்கிறார். ஆங்காங்கே வந்தியதேவன், குந்தவையின் காதல் காட்சிகளை பொன்னியின் செல்வனில் இருந்து மனக்கண்ணில் ரசிக்க முடிகின்றது. திடீர் திருப்பங்கள் இல்லாத ஒரு நாவல். சில நேரங்களில் காலம் செல்லும் வேகத்திற்கு பயணிக்க இயலாமல் போய் விடுகின்றது.

இரண்டு கதாநாயகிகள். ரோகினி என்ற இலங்கைப் பெண், அருள் மொழி என்ற இராஜேந்திரரின் மகள். காதல், வீரம் இரண்டும் தான் வேங்கையின் மைந்தனை இட்டுச் செல்கின்றது. ரோகிணி தோல்வியைத் தழுவும் இலங்கை மன்னரின் மகள். முதலில் இருந்தே ஒரே அழுக்காச்சி காவியம். சில இடங்களில் காதலன் மற்றும் நாட்டுப்பாசத்திற்கு இடையில் கிடந்து உழல்கின்றாள்.

வீர தீர பிரதாபங்களும், அதன் வர்ணனைகளும் சுமார் தான். பாண்டிய நாட்டின் மணி முடியையும், இந்திரனின் ஆரத்தையும் தனி ஒருவனாக சண்டையிட்டு கொண்டு வருகின்றார் கதாநாயகன். கொஞ்சம் பில்டப்புடன் தெலுங்கு சினிமா பார்த்த பாதிப்பு வருகின்றது.

மற்றபடி படிக்க வேண்டிய வரலாற்று நாவல்களில் ஒன்று.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பார்த்தது :

சமீபத்தில் பார்த்த ஒரு படம் அபகலிப்டோ... ஒரு சமூகத்தின் அழிவை கண் முன் கொண்டு வந்த படம். அற்புதமான காட்டுப்பகுதியில் படம் படமாக்கப்பட்டு இருக்கின்றது.கிராபிக்ஸ் உறுத்தல்கள் இல்லாமல் இயற்கையாக இருப்பது போன்ற தோற்றமே படம் முழுவதும்.. தென் அமெரிக்க காட்டுகளுக்குள் நடக்கும் இன மோதல்களின் வழியே தங்களுக்குள் எப்படி அழித்துக் கொண்டனர் என்பதை சிம்பிளாக சொல்லும் படம்.

பொதுவாக ஸபானியர்கள் அமெரிக்க கண்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பழங்குடியினரை அழித்ததாகத் தான் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.. இதில் பல கருத்து வேறுபாடு இருந்தாலும், இப்படம் அப்பழங்குடியினர் தங்களுக்குள் சண்டையிட்டு அழித்துக் கொண்டனர் என்பதை நாசூக்காக சொல்லும் முயற்சியோ என்ற தோற்றம் கூட வந்தது. ஆனாலும் சிறு குழுக்களுக்கு இடையே இது போன்ற மோதல்கள் இருந்ததை ஒத்துக் கொள்ள வேண்டி தான் வரும்.

இப்படத்தில் ஒரு அதி அற்புதமான காட்சி கண்டிப்பாக காண வேண்டியது. கதாநாயகியின் பிரசவக் காட்சி.. ஒரு கிணற்றுக்குள் அவளும், அவளது சிறு மகனும் இருக்க மழை காரணமாக கிணற்றுக்குள் தண்ணீர் நிறைய ஆரம்பிக்கின்றது. அவ்வேளையில் பிரசவ வலியில் அவள் துடிக்க, தண்ணீருக்குள் குழந்தை பிறக்கின்றது. இதை வர்ணிப்பதை விட நேரடியாகப் பார்த்தால் அதை அனுபவிக்கலாம்... இது சாதாரணமாக எல்லாரும் பார்க்க வேண்டிய காட்சி தான்... திட நெஞ்செமெல்லாம் வேண்டாம்.


இதன் 1:50 வினாடிகளில் இருந்து 2:45 வரை பாருங்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கீரைக்காரனுக்கு விடை... அந்த பெண் அவன் சிறு வயதில் திருமணம் முடித்திருந்த பெண். அவர் அவனது மாமனாராம்.. சிறு வயதில் திருமணம் முடிந்து விட்டு மாப்பிள்ளையும், பொண்ணும் அவரவர் வீட்டில் இருப்பார்களாம். பெரியவர்களானதும் இருவரையும் இணைத்து வைப்பார்களாம். இதை அடிக்கடி சொல்லி சக பணியாளர்கள் அவனை கலாய்ப்பார்கள்.

19 comments:

ஆயில்யன் said...

//விவசாயம், ஆடு,மாடு மேய்ப்பது என்று இருந்தவன். பால்ய விவாகம் செய்யும் வழக்கம் உள்ள கிராமங்கள் அவை//

ஹம்ம்ம்ம் வத்தலகுண்டு பக்கம் கூட அப்படியான கிராமங்கள் இருக்குதாம்ல!

சோழமண்டலத்தில அப்படி ஒரு கிராமமே இல்ல :(

தமிழ் பிரியன் said...

ஆமா பாஸ்... பாவம் சோழ மண்டலத்தவர்கள்... பார்ப்பதற்கு கண் குளிர்ச்சியா ஒரு மலை கூட கிடையாதே... ;-))

ஸ்ரீமதி said...

//சோழமண்டலத்தில அப்படி ஒரு கிராமமே இல்ல :(//

Aamaam aamaam... :)))))))))))))

சென்ஷி said...

பேசாம வத்தலகுண்டுல போய் பொறந்திருக்கலாமோ :(

தமிழ் பிரியன் said...

நான் எம்பூட்டு கஷ்டப்பட்டு பதிவெல்லாம் எழுதி இருக்கேன்.. எல்லாம் வந்து கும்மி அடிக்கிறீங்க.. பதிவைப்படிங்க.. இல்லன்னா அழுதுடுவேன்.. :(

ஜீவன் said...

பாருங்கப்பா பொண்ணயும் கட்டி கொடுத்துட்டு மாப்பிள்ளையையும் கட்டி வைச்சுடாங்க..!

சின்ன அம்மிணி said...

வேங்கையின் மைந்தன் சுட்டிக்கு நன்றி

அண்ணாமலையான் said...

படம் நல்ல எடுத்திருப்பாங்க...

நாஸியா said...

நான் அந்த படத்தை இரண்டாம் பாகத்திலிருந்து பார்த்தேன்.. அந்த பிள்ளை ரொம்ப அழகா இருக்கும்..

அதோட எனக்கு நல்லா நினைவிருக்குற காட்சி, ஹீரோ ஒரு தவளைய குச்சியால குத்தி அதோட விஷத்த எடுக்கறது..

அபுஅஃப்ஸர் said...

பாருய்யா எப்படியெல்லாம் சனங்க இருக்காகனு

நல்ல தொகுப்பு

முகிலன் said...

அப்போகாலிப்டோ நன்றாக படமாக்கியிருப்பார் மெல் கிப்சன். கடைசி க் காட்சியில் மனைவி குழந்தைகளுடன் கதாநாயகன் நிம்மதியாக நிமிர்ந்து பார்க்கும்போது ஸ்பானிஷ் கப்பல்கள் வந்து நிற்கும். அதை, இவர்களைக் காப்பாற்ற வந்தவர்கள் போல காட்டியிருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம், இது என்னடா ஆபத்து, இனிமே வருது பாரு என்று சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஜீவன் on February 11, 2010 11:43 AM said...
பாருங்கப்பா பொண்ணயும் கட்டி கொடுத்துட்டு மாப்பிள்ளையையும் கட்டி வைச்சுடாங்க..!//

:)) அதானே..

ராமலக்ஷ்மி said...

//பதிவைப்படிங்க.. இல்லன்னா அழுதுடுவேன்.. :(//

அழுவாதீங்க. படிச்சுட்டேன்:)! கீரைக்காரன் கதை சுவாரஸ்யம். மற்ற பகிர்வுகளும் அருமை.

நட்புடன் ஜமால் said...

கீரைமேட்டர் - ம்ம்ம்

ஜீவன் அண்ணா - ஹா ஹா ஹா

ஆயில்ஸ் - புரியுது புரியுது :P

அந்த வீடியோ பார்த்திங்ஸ் ...

நட்புடன் ஜமால் said...

இந்த படமே பார்த்துட்டேன் முன்பே

இருந்தாலும் உங்கள போல எழுத வரலை - பரவாயில்லை இரசிச்சதை படிச்சி இரசிச்சிக்கிறேன்.

cheena (சீனா) said...

தமிழ்பிரியன்

நல்லாருக்கு கத எல்லாம் - கீரைக் கத முடிவு தெரிஞ்சதுதான் - ஒண்ணும் புதுசுச் இல்ல - நல்லா எழுதி இருக்காங்க

வாழ்க வத்தலக்குண்டாரே

SUFFIX said...

கேட்டத படிக்கும்போது ஏதோ சினிமாவில் பார்த்தது ஞாபகம் வருது (இது மாதிரி ஐ.க்யூ. கேள்விகளை அடிக்கடி போடுங்க).

சி. கருணாகரசு said...

கேட்டதும் ... பார்த்த்தும்...

படித்து பார்த்து வியந்தேன்... மிக சிறப்பு! பாராட்டுக்கள்

SanjaiGandhi™ said...

கிராமத்து மேட்டர் செம சுவாரஸ்யம்ணே.. :))

அண்ணன் ஒலக படமெல்லாம் கரைத்துக் குடிக்கிறிங்க போல. :)

LinkWithin

Related Posts with Thumbnails