Wednesday, February 3, 2010

முதல் நாள் - பள்ளிக்கூடம்.

நேற்று தான் மகன் முதன்முதலாக பள்ளி சென்றுள்ளான். சில காலம் கழித்து இந்த நாள் அவனுக்கு நினைவில் இருக்குமா இல்லையா என்று தெரியாது. (ஆனால் பள்ளி சென்ற முதல் நாள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. ) இரண்டாவதாக மகள் பிறந்ததால் கன்னியாகுமரியில், அவர்களது அம்மா வீட்டில் இருந்த மனைவி வீடு திரும்பி இருக்கிறாள். இதுவரை ஜாலியாக அங்கு சுத்திக் கொண்டு இருந்த மகனை ஊர் வந்ததும் பள்ளியில் சேர்ப்பது என்று முடிவாகி இருந்தது. (வயது 3 1\2 )இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் மட்டும் வீட்டிற்கு அருகில் இருக்கும் நர்சரியில் PreKG படிக்கட்டும் என ஏற்பாடு. ஜூன் முதல் வேறு பள்ளியில் LKG.

எல்லாரையும் விட எனக்கு தான் கொஞ்சம் பரபரப்பு. அழுகாமல் பள்ளி செல்ல வேண்டுமே என்று.. ஏற்கனவே வேலைப்பளுவின் அழுத்தத்தில் திணறிக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் இந்தியாவில் இருக்கும் இன்னும் கவலைகளும்... ஊரில் இருந்தாலாவது நாமே நேரடியாக பள்ளிக்கு கூட்டிச் செல்லலாம்.

ஆனால் ஏதும் சுவாரஸ்யமாக நடக்கவில்லை. காலையில் சென்று பள்ளியில் விட்டதும் மலங்க மலங்க விழித்துக் கொண்டு இருந்திருக்கின்றான். மதியம் திரும்பவும் அழைத்து வரும் போது மட்டும் லேசான கரைதல். இனி பள்ளி செல்வதில் பிரச்சினை இருக்காது என்று தோன்றுகின்றது. ஏற்கனவே மனைவியின் ஊரில் மதரஸா எனப்படும் இஸ்லாமிய கல்வி அளிக்கும் பள்ளியில் காலை சென்று வருவான். சுமார் 1 மணி நேரம் அங்கு ஆசிரியரின் கட்டுப்பாட்டில் இருந்த பழக்கம் இருப்பதால் பள்ளிக்கூடம் அவனுக்கு ஏதும் பிரச்சினையாக இருக்கவில்லை. இனி பள்ளிக்கூடம் போகனுமா? சாக்லேட் கொடுங்க, செலவுக்கு காசு கொடுங்க போன்ற மிரட்டல்களும், கால் வலிக்குது, காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு போன்ற சால்ஜாப்புகளும் வரும் என நினைக்கிறேன்... இதெல்லாம் நாங்க செஞ்சது தானே..ஹிஹிஹி

கொஞ்சம் ப்ளாஷ்பேக் : நான் முதலில் பள்ளிக்கு சென்ற நாள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. எனது சித்தப்பா தான் என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். ஒண்ணாப்பு படிப்பதற்கு முன்னால் அரை கிளாஸ் படிக்க வேண்டும். அரை கிளாஸூம், ஒண்ணாப்பும் ஒன்றாகத் தான் இருக்கும். ஒரு வகுப்பில் அந்த ஆண்டு அரைகிளாஸ் படித்தவர்கள் அடுத்த வருடம் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள். என்னை அழைத்துச் சென்று எங்க குடும்ப ஆசிரியர்(?) இருக்கும் வகுப்பிற்கு அழைத்துச் சென்றார். அங்கு தான் எங்கள் அத்தை, சித்தப்பா, அக்கா, அண்ணன் எல்லாரும் அரை கிளாஸ், ஒண்ணாப்பு படித்தார்களாம்.

ஒரே அழுகை. செந்தில் சொல்வது போல் அழைத்து வரப்படவில்லை. இழுத்துச் செல்லப்பட்டு இருந்தேன். ஆசிரியை பெயர் ஞானம்மாள். அன்பாக பேசி எல்லா பிள்ளைகளையும் காட்டி “பாரு.. எல்லாரும் அழாமல் இருக்காங்கல்ல” என்று கூறி ஒரு சாக்பீஸூம் கொடுத்தார்.

ஒன்றாம்வகுப்பு படிக்கும் போது 500 க்கு 500 மார்க் வாங்கி முதல் ரேங்க் எடுத்ததும் இன்னும் நினைவில் இருக்கு..ஹிஹிஹி.


லேட்டஸ்ட் அப்டேட் : இன்றைக்கு இரண்டாம் நாள்... காலையில் ஸ்கூல் எல்லாம் போக மாட்டேன் என்று அடம் பிடித்தவனை சென்ஷியின் பதிவைக் காட்டி இந்த மாமாவிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று மிரட்டியதும் ஒழுங்காக பள்ளிக்கூடம் சென்று விட்டான்.... ஹிஹிஹி சும்மா... இன்று லேசான அழுகை மட்டும்.

...,

53 comments:

V.A.S.SANGAR said...

வாழ்கையில் மறக்க முடியாத அனுபவம் . கண்டிப்பாக பலர் மறந்து விட்ட அனுபவம் அது .உங்கள் மகன் பிட்ட்கலத்தில் இப் பதிவை பார்த்தல் சந்தோசப்படுவது உண்மை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\சாக்லேட் கொடுங்க, செலவுக்கு காசு கொடுங்க போன்ற மிரட்டல்களும், கால் வலிக்குது, காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு போன்ற சால்ஜாப்புகளும் வரும் என நினைக்கிறேன்...///

அதெல்லாம் செய்யமாட்டான் பாருங்க.. :)

சந்தனமுல்லை said...

குட்டி பையனுக்கு வாழ்த்துகள். சமத்தாச்சே..அம்மா மாதிரி! :-)

சந்தனமுல்லை said...

/(ஆனால் பள்ளி சென்ற முதல் நாள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. ) /

அவ்வ்வ்வ்...ஏழு வயசுலே ஸ்கூல் போனா யாருக்குத்தான் ஞாபகம் இருக்காது....ஆயில்ஸ்..எங்கேப்பா!! :-)))

S.A. நவாஸுதீன் said...

///நேற்று தான் மகன் முதன்முதலாக பள்ளி சென்றுள்ளான்.///

மாஷா அல்லாஹ்.

ராமலக்ஷ்மி said...

முதல்ல குட்டிப் பையனுக்கு என் வாழ்த்துக்கள்!

//ஆனால் ஏதும் சுவாரஸ்யமாக நடக்கவில்லை. //

என்ன நடந்திருக்கணும்ங்கறீங்க? இத்தனை சமர்த்தா இருந்துட்டு வந்திருக்கான். அது சுவாரஸ்யமா இல்லையா:)?

Mrs.Faizakader said...

பரவாயில்லையே அண்ணனுக்கு பழைய முதல் நாள் பள்ளி நினைவுகள் கூட அப்படியே இருக்கே.
உங்கள் மகனை பள்ளிக்கு அழைத்து செல்லமுடியவில்லையே என்ற வேதனை புரிகிறதே.. சமத்தாக போவான் அதுக்கு ஏன் பயம்காட்டுறிங்க//சென்ஷியின் பதிவைக் காட்டி இந்த மாமாவிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று மிரட்டியதும் ஒழுங்காக பள்ளிக்கூடம் சென்று விட்டான்....// :-)

நிஜமா நல்லவன் said...

/நான் முதலில் பள்ளிக்கு சென்ற நாள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. /

கண்டிப்பா நினைவில் இருந்தே ஆகணும் தல...அதுக்கு அப்புறம் தான் நீங்க பள்ளிக்கு போனதே இல்லையே:))

நிஜமா நல்லவன் said...

குட்டிபையன் உங்களை மாதிரி இல்லாம ரொம்ப சமர்த்து பையனா இருக்கிற மாதிரி தெரியுது!

நிஜமா நல்லவன் said...

குட்டி பையனுக்கு வாழ்த்துகள்!

ஷாகுல் said...

//ஒன்றாம்வகுப்பு படிக்கும் போது 500 க்கு 500 மார்க் வாங்கி முதல் ரேங்க் எடுத்ததும் இன்னும் நினைவில் இருக்கு//

ஒன்னாம் கிளாசில் மட்டுந்தானே....:-)

SUFFIX said...

வாழ்த்துக்கள் நண்பரே!! என்னுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்த்து முதல் நாள், நான் அரை நாள் விடுப்பு எடுத்து அங்கேயே சிறிது நேரம் கூட இருந்தேன், அதில் ஒரு மன‌ நிறைவு. ஆமா யாரு அந்த பூச்சாண்டி, பார்க்கணுமே -:)

☀நான் ஆதவன்☀ said...

க்யூட் :)

//குட்டிபையன் உங்களை மாதிரி இல்லாம ரொம்ப சமர்த்து பையனா இருக்கிற மாதிரி தெரியுது!//

ரிப்பீட்டே!

gulf-tamilan said...

//அவ்வ்வ்வ்...ஏழு வயசுலே ஸ்கூல் போனா யாருக்குத்தான் ஞாபகம் //
:))))

ஜெஸ்வந்தி said...

உங்கள் மகனுக்கு என் வாழ்த்துகள். உங்களுக்கே முதல் நாள் பாடசாலை சென்றது நினைவிருக்கும் போது, அவன் எப்படி மறப்பான் என்று நினைக்கிறீர்கள்?

ஸ்ரீமதி said...

குட்டிப்பையன் அவன் அம்மா மற்றும் அத்தை மாதிரின்னு ரெண்டு வரில சொல்றத விட்டுட்டு என்னதிது வழவழான்னு இவ்ளோ பெரிய பதிவு?ம்ம்?

ஹுஸைனம்மா said...

//ஆனால் ஏதும் சுவாரஸ்யமாக நடக்கவில்லை//

அது அப்படித்தான். சில விஷயங்கள்ல புள்ள என்ன பண்ணுவானோன்னு நாம பதறி நிக்க, அதுங்க சமத்தா இருந்து நம்ம எதிர்பார்ப்பை புஸ்ஸுன்னு ஆக்கிடுவாங்க!!

படத்துல பையனா? ரொம்ப சின்னவனாத் தெரியுதே? பழைய படமா?

அன்புடன் அருணா said...

பள்ளிக்கூட மலரும் நினைவுகளா????மலரட்டும்...மலரட்டும்!

Jaleela said...

முதல் நாள் பள்ளியில் காலடி எடுத்து வைத்த உங்கள் செல்லத்துக்கு வாழ்த்துக்கள்.

எனக்கும் என் பையன் முதல் முதல் கொண்டுபோய் விட்ட ஞாபகம் எல்லாம் வருது..

ஓ நீங்க முதல் நாள் நீங்கள் பள்ளி சென்றதுக்கு பிளாஷ் பேக்கா?

ஆமாம் ஷபி நிச்சயம் அந்த பூச்சாண்டிய பார்த்து விட்டு தான் வந்து இருப்பார்.

Jaleela said...

ஆமாம் ஹுஸைனாம்மா நானும் அப்படிதான் ரொம்ப கதறு வாணோ என்று நினைத்து போனே, பெரியவன் ரொம்ப சமத்து.

சின்னவன் தான் கொஞ்ச்ம கண்ணை பிழிந்து விட்டான்.


ஆனால் அங்கு வந்த குழந்தைகள் அழுது பிரண்ட ஆர்பாட்டம் இருக்கே. ஏதொ ஜெயிலுக்குள்ள போய் தள்ளுவது போல் ஒரு நிகழ்வு

அந்த டீச்சர்கள் எல்லாம் இவர்களை அடக்க 4 கப் ஹார்லிக்ஸ் குடித்தாலும் பத்தாது.

Mrs.Menagasathia said...

பள்ளிக்கு செல்லும் உங்கள் செல்லமகனுக்கு வாழ்த்துக்கள்!! எனக்கும் பழைய ஞாபகங்கள் வந்துடுச்சு...

நாஸியா said...

மாஷா அல்லாஹ் உங்க மகனார் ரொம்ப அழகா இருக்கார்.. புடிச்சு கிள்ளனும் போல இருக்கே...இன்ஷா அல்லாஹ் கல்வியறிவை அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுக்கு அதிகப்படுத்துவானாக.

நானும் பயங்கர சேட்டை பண்ணிருக்கேன்.. அசெம்ப்ளி அப்போ நைசா கேட்டுக்கு நடுவுல இருக்குற கேப் வழியா ஓடிடலாம்னு ஐடியா பண்ணி காது மட்டும் அந்த கேப்புல மாட்டுனது தான் மிச்சம்..

நட்புடன் ஜமால் said...

மாஷா அல்லாஹ்,

--------------------

மிரட்டல் வருதோ இல்லையோ

சால்ஜாப்பு நிச்சியம் வரலாம்

-------------------

யோசித்து பார்க்கின்றேன் - நான் பள்ளி சென்ற நாட்கள் - அழகையெல்லாம் இல்லை - தெரு மூலையில் உள்ள ஐஸ் கம்பெனியில் இரண்டு ஐஸ் வாங்கி சப்பிக்கிட்டே போவேன்(ரிட்டர்ன் 2 வீடு போது) என்பதை இன்னமும் என் அண்ணனோட நண்பர் சொல்லி சிரிப்பார்.

தமிழ் பிரியன் said...

\\\V.A.S.SANGAR said...

வாழ்கையில் மறக்க முடியாத அனுபவம் . கண்டிப்பாக பலர் மறந்து விட்ட அனுபவம் அது .உங்கள் மகன் பிட்ட்கலத்தில் இப் பதிவை பார்த்தல் சந்தோசப்படுவது உண்மை\\\

நன்றி Sangar. அதனால் தான் அவன் பள்ளி சென்ற அடுத்த நாளே இதை பதிவு செய்து விட்டேன்.

தமிழ் பிரியன் said...

\\\முத்துலெட்சுமி/muthuletchumi said...

\சாக்லேட் கொடுங்க, செலவுக்கு காசு கொடுங்க போன்ற மிரட்டல்களும், கால் வலிக்குது, காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு போன்ற சால்ஜாப்புகளும் வரும் என நினைக்கிறேன்...///

அதெல்லாம் செய்யமாட்டான் பாருங்க.. :)\\\

அப்படியா? ம்ம்ம் பார்க்கலாம்.. சபரி என்ன செய்றாருன்னு தெரியல.. ;-))

தமிழ் பிரியன் said...

\\\ சந்தனமுல்லை said...

குட்டி பையனுக்கு வாழ்த்துகள். சமத்தாச்சே..அம்மா மாதிரி! :-)\\\

நன்றி ஆச்சி.. கிர்ர்ர் அப்பா மாதிரி சமத்துன்னு சொல்லனும்.. ஓக்கே?

தமிழ் பிரியன் said...

\\\சந்தனமுல்லை said...

/(ஆனால் பள்ளி சென்ற முதல் நாள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. ) /

அவ்வ்வ்வ்...ஏழு வயசுலே ஸ்கூல் போனா யாருக்குத்தான் ஞாபகம் இருக்காது....ஆயில்ஸ்..எங்கேப்பா!! :-)))\\\\

கிர்ர்ர்ர்ர்.. நாங்க எல்லாம் 4 வயசில் தலையைசுத்தி காதைத் தொட்ட ஆளுங்க தெரியும்ல.. ;-))

தமிழ் பிரியன் said...

\\\S.A. நவாஸுதீன் on February 3, 2010 2:00 PM said...

///நேற்று தான் மகன் முதன்முதலாக பள்ளி சென்றுள்ளான்.///

மாஷா அல்லாஹ். \\\

நன்றி நவாஸ்!

தமிழ் பிரியன் said...

\\\ராமலக்ஷ்மி on February 3, 2010 2:09 PM said...

முதல்ல குட்டிப் பையனுக்கு என் வாழ்த்துக்கள்!

//ஆனால் ஏதும் சுவாரஸ்யமாக நடக்கவில்லை. //

என்ன நடந்திருக்கணும்ங்கறீங்க? இத்தனை சமர்த்தா இருந்துட்டு வந்திருக்கான். அது சுவாரஸ்யமா இல்லையா:)? \\\

நன்றி அக்கா!

என்ன இது கொடுமயா இருக்கு.. அத்தைகள் எல்லாம் அவனுக்கு சப்போர்ட் பண்றாங்க... ஏதாவது சேட்டை செய்யட்டும்... உங்களைத் தான் பிடிப்போம்.. ;-))

தமிழ் பிரியன் said...

\\\\Mrs.Faizakader on February 3, 2010 2:26 PM said...

பரவாயில்லையே அண்ணனுக்கு பழைய முதல் நாள் பள்ளி நினைவுகள் கூட அப்படியே இருக்கே.
உங்கள் மகனை பள்ளிக்கு அழைத்து செல்லமுடியவில்லையே என்ற வேதனை புரிகிறதே.. சமத்தாக போவான் அதுக்கு ஏன் பயம்காட்டுறிங்க//\\\\

என்னையும் சின்ன வயசில் பேய் பூதம்ன்னு சொல்லி பயம் காட்டுவாங்கல்ல... அது மாதிரி தான் இதுவும்.. ;-))

தமிழ் பிரியன் said...

\\\நிஜமா நல்லவன் on February 3, 2010 2:28 PM said...

/நான் முதலில் பள்ளிக்கு சென்ற நாள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. /

கண்டிப்பா நினைவில் இருந்தே ஆகணும் தல...அதுக்கு அப்புறம் தான் நீங்க பள்ளிக்கு போனதே இல்லையே:))\\\

போங்க பாஸ்.. எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கிகிட்டு...;-)

தமிழ் பிரியன் said...

\\\\நிஜமா நல்லவன் on February 3, 2010 2:30 PM said...

குட்டிபையன் உங்களை மாதிரி இல்லாம ரொம்ப சமர்த்து பையனா இருக்கிற மாதிரி தெரியுது! \\\

நீங்களுமா? ..;-)

தமிழ் பிரியன் said...

\\\ஷாகுல் on February 3, 2010 2:34 PM said...

//ஒன்றாம்வகுப்பு படிக்கும் போது 500 க்கு 500 மார்க் வாங்கி முதல் ரேங்க் எடுத்ததும் இன்னும் நினைவில் இருக்கு//

ஒன்னாம் கிளாசில் மட்டுந்தானே....:-)\\\

ஹிஹிஹிஅப்படித்தான் நினைக்கிறேன்.. ;-))

தமிழ் பிரியன் said...

\\\SUFFIX on February 3, 2010 2:36 PM said...

வாழ்த்துக்கள் நண்பரே!! என்னுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்த்து முதல் நாள், நான் அரை நாள் விடுப்பு எடுத்து அங்கேயே சிறிது நேரம் கூட இருந்தேன், அதில் ஒரு மன‌ நிறைவு. ஆமா யாரு அந்த பூச்சாண்டி, பார்க்கணுமே -:)
\\\

நானும் அப்படித் தான் எண்ணி இருந்தேன். ஆனால் அவ்வாய்ப்பு கிடைக்கவில்லை... பூச்சாண்டி பார்த்தாச்சா ?.. ;-)))

தமிழ் பிரியன் said...

\\\☀நான் ஆதவன்☀ on February 3, 2010 2:40 PM said...

க்யூட் :)

//குட்டிபையன் உங்களை மாதிரி இல்லாம ரொம்ப சமர்த்து பையனா இருக்கிற மாதிரி தெரியுது!//

ரிப்பீட்டே!
\\\

ஆதவா? இருடி உனக்கு இருக்கு... ;-)

தமிழ் பிரியன் said...

\\\\gulf-tamilan on February 3, 2010 3:04 PM said...

//அவ்வ்வ்வ்...ஏழு வயசுலே ஸ்கூல் போனா யாருக்குத்தான் ஞாபகம் //
:)))) \\\\

ஜாலியா சொன்னதை நீங்களும் நம்பிட்டீங்க போல இருக்கு.. ஹைய்யோ ஹைய்யோ...

தமிழ் பிரியன் said...

\\\ஜெஸ்வந்தி on February 3, 2010 3:27 PM said...

உங்கள் மகனுக்கு என் வாழ்த்துகள். உங்களுக்கே முதல் நாள் பாடசாலை சென்றது நினைவிருக்கும் போது, அவன் எப்படி மறப்பான் என்று நினைக்கிறீர்கள்? \\\\

நன்றி ஜெஸ்வந்தி அக்கா! மறப்பான் என்று சொல்ல வரவில்லை. நினைவில் இருக்குமா இருக்காதா என்று தான் வினவுகின்றேன். நினைவில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி.

தமிழ் பிரியன் said...

\\\\ஸ்ரீமதி on February 3, 2010 3:34 PM said...

குட்டிப்பையன் அவன் அம்மா மற்றும் அத்தை மாதிரின்னு ரெண்டு வரில சொல்றத விட்டுட்டு என்னதிது வழவழான்னு இவ்ளோ பெரிய பதிவு?ம்ம்? \\\

வந்தாச்சா ? இந்த அத்தை மட்டும் தான் பாக்கி...

அம்மா மாதிரியாவது கொஞ்சம் ஒத்துக்கலாம்.. அத்தை மாதிரி அவன் இல்லையே? நல்லா ஸ்மார்ட்டா இருக்கானே?

தமிழ் பிரியன் said...

\\\ஹுஸைனம்மா on February 3, 2010 6:21 PM said...

//ஆனால் ஏதும் சுவாரஸ்யமாக நடக்கவில்லை//

அது அப்படித்தான். சில விஷயங்கள்ல புள்ள என்ன பண்ணுவானோன்னு நாம பதறி நிக்க, அதுங்க சமத்தா இருந்து நம்ம எதிர்பார்ப்பை புஸ்ஸுன்னு ஆக்கிடுவாங்க!!

படத்துல பையனா? ரொம்ப சின்னவனாத் தெரியுதே? பழைய படமா? \\\

ஆமாம் ஹூசைனம்மா.. பழைய படம் தான். புதிதாக எடுத்த படங்கள் மெமரி கார்டு க்ராஸ் ஆனதில் அழிந்து விட்டன.

தமிழ் பிரியன் said...

\\\\அன்புடன் அருணா on February 3, 2010 6:23 PM said...

பள்ளிக்கூட மலரும் நினைவுகளா????மலரட்டும்...மலரட்டும்\\\

நன்றி டீச்சரோய்!

தமிழ் பிரியன் said...

\\\Jaleela on February 3, 2010 6:26 PM said...

முதல் நாள் பள்ளியில் காலடி எடுத்து வைத்த உங்கள் செல்லத்துக்கு வாழ்த்துக்கள்.

எனக்கும் என் பையன் முதல் முதல் கொண்டுபோய் விட்ட ஞாபகம் எல்லாம் வருது..

ஓ நீங்க முதல் நாள் நீங்கள் பள்ளி சென்றதுக்கு பிளாஷ் பேக்கா?

ஆமாம் ஷபி நிச்சயம் அந்த பூச்சாண்டிய பார்த்து விட்டு தான் வந்து இருப்பார்.\\\

நன்றி Jaleela அக்கா!

தமிழ் பிரியன் said...

\\\
Jaleela said...

ஆமாம் ஹுஸைனாம்மா நானும் அப்படிதான் ரொம்ப கதறு வாணோ என்று நினைத்து போனே, பெரியவன் ரொம்ப சமத்து.

சின்னவன் தான் கொஞ்ச்ம கண்ணை பிழிந்து விட்டான்.


ஆனால் அங்கு வந்த குழந்தைகள் அழுது பிரண்ட ஆர்பாட்டம் இருக்கே. ஏதொ ஜெயிலுக்குள்ள போய் தள்ளுவது போல் ஒரு நிகழ்வு

அந்த டீச்சர்கள் எல்லாம் இவர்களை அடக்க 4 கப் ஹார்லிக்ஸ் குடித்தாலும் பத்தாது.\\\

அதையே ஒரு பதிவாக எழுதுங்களேன்... ;-)

தமிழ் பிரியன் said...

\\\\Mrs.Menagasathia on February 3, 2010 8:08 PM said...

பள்ளிக்கு செல்லும் உங்கள் செல்லமகனுக்கு வாழ்த்துக்கள்!! எனக்கும் பழைய ஞாபகங்கள் வந்துடுச்சு... \\\\

நன்றி Menagasathia. அதை அப்படியே பதிவா எழுதிப் போடுங்களேன்.

தமிழ் பிரியன் said...

\\\\நாஸியா on February 3, 2010 9:02 PM said...

மாஷா அல்லாஹ் உங்க மகனார் ரொம்ப அழகா இருக்கார்.. புடிச்சு கிள்ளனும் போல இருக்கே...இன்ஷா அல்லாஹ் கல்வியறிவை அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுக்கு அதிகப்படுத்துவானாக.

நானும் பயங்கர சேட்டை பண்ணிருக்கேன்.. அசெம்ப்ளி அப்போ நைசா கேட்டுக்கு நடுவுல இருக்குற கேப் வழியா ஓடிடலாம்னு ஐடியா பண்ணி காது மட்டும் அந்த கேப்புல மாட்டுனது தான் மிச்சம்..
\\\\\

வாழ்த்துக்களுக்கு நன்றி நாஸியா அக்கா!

நீங்க உங்க அம்மா பிரியாணி செஞ்சு வச்சு இருக்கும் நினைவில் கேட்டு பூட்டி இருப்பது தெரியாம ஓடி இருக்கீங்க போல இருக்கு... ;-))

தமிழ் பிரியன் said...

\\\\நட்புடன் ஜமால் on February 4, 2010 8:43 AM said...

மாஷா அல்லாஹ்,\\\

நன்றி ஜமால் அண்ணே!

Jaleela said...

முடிந்த போது எழுதுகிறேன்

கும்க்கி said...

500/500ஆஆஆஆஆஆஆ....

தொறந்த வாய மூட பல மணி நேரம் ஆச்சுது...
வீட்டுல படிச்சு பார்த்துட்டு தலையில ஒரு கொட்டு வச்சுட்டு போயிட்டாங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

நாணல் said...

சமத்துக் குழந்தை... :) மொத்தத்துல அப்பா மாதிரியில்லை.. ;)

cheena (சீனா) said...

அன்பின் தமிழ்பிரியன்

மகன் பள்ளி சென்று விட்டான்னாக்கும் - ஏன் கவலை - அம்மா அருகில் இருக்கையில் மகனுக்கு என்ன பிரச்னை - நீங்க ஹாயா வேலையப்பாருங்க - நான்லாம் அப்படித்தான்.

சென்ஷி இடுகையக் காட்டி பயமுறுத்தினீங்களாக்கும் - மாமா கிட்டே ப்டிச்சிக் கொடுத்து ஆடு மேய்க்க அனுப்பிடுவேன்னு சொன்னீங்களாக்கும் - இந்த அப்பாக்களுக்கு இதே வேலையாப் போச்சுப்பா

நீங்க பள்ளி சென்ற கதயும் நல்லாருக்கு - நாங்கல்லாம் ஸ்ட்ரெயிட் ஒண்ணாங்கிளாஸ் - இந்த அரை காலு இதெல்லாம் கிடையாது அப்போ

http://cheenakay.blogspot.com/2007/11/5.html

படியுங்க நான் பள்ளிக்கூடம் போன கூத்த

நல்வாழ்த்துகள் மகனுக்கு - உங்களுக்கும் ( போனாப் போவுது - காசா பணமா என்ன )

தமிழன்-கறுப்பி... said...

சந்தோசம் தல! ஆமா அதுக்குள்ள படிக்கிற பள்ளிக்கூடம் போற வயசு வந்துடிச்சா.(

தமிழன்-கறுப்பி... said...

\\
சந்தனமுல்லை said...
குட்டி பையனுக்கு வாழ்த்துகள். சமத்தாச்சே..அம்மா மாதிரி! :-)
\\

ரிப்பீட்டு :)
(ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ரிப்பீட்டு போட சந்தர்ப்பம் கொடுத்த ஆச்சிக்கு நன்றி)

தமிழன்-கறுப்பி... said...

எவ்வளவு சீக்கிரமா காலம் ஓடுது இல்லை, அதுக்குள்ள மருமகன் பள்ளிக்கு போக ஆரம்பிச்சுட்டான்!

ம்ம்வயசு போயிட்டிருக்கு ;)

SanjaiGandhi™ said...

சோ க்யூட்..கண்ணுபட போகுதய்யா.. :)

LinkWithin

Related Posts with Thumbnails